Followers

Saturday, December 31, 2011

இனியவை -இரண்டு (பிறந்தநாள் பாடல் பிறந்த விதம்)


பிறந்தநாள் பாடல் எழுதியவர்கள் மில்ட்ரெட்(Mildred J. Hill) மற்றும் பாடி ஹில்(Patty Smith Hill) சகோதரிகள் (ஆண்டு 1893). இந்த பாடலின் துவக்க வரிகள் "Good Morning Dear Children" என தொடங்கும் படி தான் இருந்தது புத்தக வெளியீட்டாளர் அதை "Happy Birthday" என திருத்தி வெளியிட்டார் (ஆண்டு 1924).

அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும் "Happy Birthday" பாடலைப் பாடினர். பிராட்வே மியுசிகல்ஸ் நிறுவனம் இப்பாடலை பாடி பதிவு செய்தது அதை எதிர்த்து ஹில் குடும்பத்தை சேர்ந்த ஜெசிகா வழக்கு தொடர்ந்து வென்றார்(ஆண்டு 1934) . அதன் பின் வர்த்தகத்திற்காக வெளியிட பட்ட பாடல் ஒவ்வொன்றிற்கும், அக்குடும்பத்திற்கு தொடர் சன்மானம் (Royalty) கிடைத்து வந்தது.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே பலருக்கு முழுமையாக தெறியும்.

Happy birthday பாடலை கேட்க இங்கே   தரவிறக்கம்  செய்து கொள்ளுங்கள்.

அந்த முழுபாடல் என்ன என அறிய அவலா ?
Lyrics of the Songs

‘Good Morning to All’ lyrics
Good morning to you,
Good morning to you,
Good morning, dear children,
Good morning to all.

‘Happy Birthday to You’ lyrics
Happy Birthday to you,
Happy Birthday to you,
Happy Birthday dear (name)
Happy Birthday to you.

This traditional version of the song generally known is actually the chorus to the original. The first verse goes like this...

So today is your birthday
That's what I've been told
What a wonderful birthday
Now you're one more year old
On your cake there'll be candles
All lighted, it's true
While the whole world is singing
Happy Birthday to you ....
(Happy Birthday chorus)

Some add another phrase to the end, sung to the same tune:

How old are you now,
How old are you now,
How old are you (name),
How old are you now.

And another version:

From old friends and true,
From good friends and new,
May good luck go with you,
And happiness too.

Many alternate versions exist, most commonly sung as a joke, for example:

Happy Birthday to you,
You live/belong in a /Zoo>oo,
You look like a monkey
And you smell like one, too.
Other versions of the above:

Happy Birthday to you,
I went to the zoo,
I saw a big monkey,
And I thought it was you.
Happy Birthday to you
You live/belong in a zoo,
You look like a goat
And you chew like one, too
Download As PDF

Tuesday, December 27, 2011

இனியவை - ஒன்று

இனியவை - ஒன்று
மெல்லென மிதந்து வரும் எலுமிச்சையின் வாசனை நமது மனநிலையை ஒருமுகப்படுத்துகிறது. இதை ஒரு ஆராய்சிக்காக சிட்ரெஸ் வாசனை திரவம் உபயோகப்படுத்த பட்ட காரை ஆண், பெண் இருபாலரையும் தனி
தனியாக ஓட்டசெய்து சோதனை செய்தார்கள். முன் எப்போதையும் விட எந்த பிரச்சினையும் இன்றி வாகனத்தை நல்ல முறையில் ஓட்டினர்.

ஒரு காலத்தில் உப்பு ஒரு மதிப்புமிக்க பொருளாக இருந்தது. ரோமில் போர் வீரர்களுக்கு சம்பளமாக உப்பு அளிக்கப்பட்டது. salt -ல் இருந்துதான் salary என்ற வார்த்தை ஏற்பட்டதோ?

காபி (coffee ) முதன் முதலில் மருந்து கடைகளில் விற்கபட்டது அப்போது இது "அரேபியன் வைன் " என அழைக்கபட்டது.

ஜப்பானில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வாழை மரப்பட்டையில் உடை தைத்து அணிந்து கொண்டிருந்தார்கள்.

நமக்கு எப்படி இடது வலது கை பழக்கமோ அது போல யானைகளுக்கும் இடது வலது தந்தங்களை உபயோகிக்கும் பழக்கம் உள்ளது. Download As PDF

Monday, December 26, 2011

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!


நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)

ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( ...நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)

தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.

குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்

(....அதான் எங்களுக்கு தெரியுமெ ....புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )

அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும். (...யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்...)

மூன்றுவார கருவிலிருந்தே இதயம் இயங்க ஆரம்பித்து விடும். உங்களது இதயம் ஒரு ஆண்டில் 30 மில்லியன் தடவைகள் துடிக்கிறது.

புருவமுடி 10 வாரங்களில் விழுந்து விடுகிறது. உங்கள் தலையில் உள்ள ஒரு முடி ஐந்து ஆண்டுகள் விழாமல் இருக்கும் ( ...ஆண்களில் சிலர் தலையை தடவி ...கதை உடாதபா !!)

உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

மனிதன் ஏதும் சாப்பிடாமல் ஒருமாதம் வாழலாம் ஆனால் ஒரு வாரம் மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும். ( ...உண்ணாவிரதம் இருப்பவர்கள் கவனிக்க..!)

நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

கொஞ்சம் இருங்கள் ... ஒரே ஒரு தகவல்.

அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது. Download As PDF

Friday, December 23, 2011

விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வினோதங்கள் பல

விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வினோதங்கள் பல
TELEPATHY - ஒருவர் நினைப்பதை தொலைவில் இருக்கும் இன்னொருவர் அப்படியே கண்டு சொல்வது.

CLAIRVAYANCE - பிற விசயங்களை அறிவுக்கு அப்பால் அறிந்து சொல்லுவது.

PSYCHO KINESIS - மனோசக்தியால் பொருள்களை நகர செய்வது.

PRE COGNITION - பின்னால் நடக்கபோவதை அறிந்து சொல்லுவது

BIO FEED BACK மனகட்டுபாடின் மூலம் தானே இயங்கும் உறுப்புக்களை
மனித கட்டுபாட்டுக்குள் இயங்க செய்வது.


இது போன்ற அமானுஷ்யங்களை மனோ தத்துவ பேராசிரியர் ஜே .பி. ரைன் சில பல ஆதர பூர்வமான
சோதனைகள் மூலம் உண்மை என நிரூபித்தார்.

குறிப்பு : இது குறித்த மேலதிக தகவல்களை பிறகு எழுதுகிறேன். Download As PDF

Tuesday, December 20, 2011

இலவசமாக இங்கே கிடைகின்றன!
இலவசமாக இங்கே கிடைகின்றன!

அதிகாலை சூரியனின் உதயம், சில்லென்று வீசும் குளிர்காற்று 
வண்ண சிறகுகளை பட படத்து உங்களை கடந்து செல்லும்
வண்ணத்துபூச்சி நம் அனைவரையும் அரவணைக்க
தயாராக இருக்கிறது.

மலர்ந்து மனம் வீசும் அழகிய பூக்கள்
மரங்களின் மேலிருந்து உதிர்ந்து விழும் பூக்களும், இலைகளும்
உங்களை பார்த்து கண் சிமிட்டி புன்னகை செய்யும்.

குளுமையான நிலவொளியில் நடந்து சென்று சித்திரமாக தெரியும் வானவீதி,
குழந்தைகளின் மழலை பேச்சும், குதுகல சிரிப்பும்.

இளம்பெண்களின் சிரிப்பை போன்று சப்தமிட்டு பாறைகளினூடே தெரித்து
செல்லும் ஆற்று நீரின் அழகு. 

ஹோ  என்ற பரவசத்துடன் தெரித்து விழும் அருவி.

வானத்தில் படபடத்து கூச்சலிட்டு   பறந்து செல்லும் பறவை கூட்டம்.

திரும்ப திரும்ப நுரைபொங்கி கால்களை நனைத்து செல்லும் கடல் அலைகள்.

இவை எல்லாம் இலவசமாக கிடைக்கும் இன்பம். 
நமக்கு தேவை அவற்றை அனுபவிக்கும் மனது.
Download As PDF

அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இதோ இவர்கள் என்ன நினைத்தார்கள்.  

மனித வாழ்க்கை பகுத்தறிவை விட அதிர்ஷ்டத்தாலேயே ஆளப்படுகிறது.

-  ஹுயூம்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும் ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது அவன் காதில் வி்ழுவதே இல்லை.

- மார்க் டுவெய்ண்.

 அதிர்ஷ்டங்களை உண்டாக்கி கொள்வது நாம் ஆனால் அதை விதி என்று சொல்கிறோம்.    -  ஆல்ராய்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பை தொடர்ந்தே செல்லும். - கோல்ட்ஸ்மித்

அதிர்ஷ்ட சக்கரம் எப்போதும் சுற்றிக்கொண்டுள்ளது மேலே உள்ளது கீழே 
கீழே உள்ளது மேலே - கன்ஃபூஷியஸ்

 அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றி விடுகிறதா?   இல்லை,  அவர்களை வெளிப்படுத்துகிறது. - ரிக்கோபோனி

அதிர்ஷ்டம் மெலிந்தவர்களை தண்டிக்கும் தடி தைரியமானவர்க்கு ஊன்றுகோல் - லோவெல்

அதிர்ஷ்டத்தை நம்பாதே ஒழுக்கத்தை நம்பு - பப்ளியஸ் சிரஸ்

வெளிநாட்டினர் சொன்னார்கள் சரி நம்மவர் ! 

இதோ நம்மூர் செந்நாப்போதார்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.  (குறள் 594)


Download As PDF

Friday, December 16, 2011

வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருளை (பணம்) சம்பாதிக்க வழி என்ன?

சுவாமி விவேகானந்தரின் ஒரு அறிய புகைப்படம் ( A Rare photo of Swamy Vivekananda )                           
வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருளை (பணம்) 
சம்பாதிக்க வழி என்ன?

பின்வரும் வரிகளை சற்று பொருமையாக படிக்கவும்.

கருவிகள் உன் கையில் தான் இருக்கின்றன. நீயோ, கண்ணைக் கட்டிக்கொண்டு,   "நான் குருடன், எனக்கு ஒன்றும் தெரியவில்லை, "  என்கிறாய். கண்ணை கட்டியிருக்கும் துணிகளைக் கிழித்தெறி;   நடுப்பகல் சூரியன் தன் கதிர்களால் உலகம் முற்றிலும் ஓளி பரப்புவதைக் காண்பாய்.   பிற நாட்டுக்குப் போக பொருள் கிடைக்க வில்லை எனில் கப்பலில் கூலி வேலை செய்தாவது போய்ச்சேர்.  ' இந்தியாவில் நெசவு செய்யப்பட்ட துணி, மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்கள், என்னும் இத்தகைய நம் நாட்டுப் பொருள்களைக் கொண்டு சென்று ஐரோப்பிய அமெரிக்க வீதிகளில் விற்பாயாக. வெளிநாட்டு வர்த்தக நிலையங்களிலே இந்திய பொருள்கள் இப்பொழுதும் எவ்வளவு நன்கு மதிக்கப் படுகின்றன என்பதை நீ காண்பாய். நிறைய பேர் அவ்வாறு வியாபாரம் செய்து பெரும் பணம் சம்பாதிப்பதை நான் கண்டேன்.
  
அடுத்த கேள்வி

நான் என்ன தொழில் செய்வேன் ?  பணம் எங்கிருந்து வரும்?
 
என்ன வீண் கதை பேசுகிறாய் ?  உன்னுள் ஒரு அபாரமான சக்தி இருக்கிறது. " நான் ஒன்றும் இல்லாதவன்,  நான் ஒன்றும் இல்லாதவன் " என நினைத்ததினால் நீ வலுவிலந்து போய் விட்டாய்.   ஏன் நீ மாத்திரமா ! இந்த ஜாதி முற்றுமே அப்படி ஆகிவிட்டது.  ஒரு முறை உலகத்தைச் சுற்றிப்பார்;  மற்ற ஜாதியாருடைய நாடி நரம்புகளிலே எவ்வளவு உறுதி இருக்கிறது என்பதை நீ காண்பாய்.  நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கல்வி கற்ற பின்பும் பிறருடைய வாயிலண்டை போய் " எங்களுக்கு வேலை கொடுங்கள் ! " என்று அழுது ஓலமிடுகின்றீர்கள்; மற்றவர்களுடைய காலினால் மிதிபட்டு பிறகு அடிமை பூண்டிருக்கிறீர்கள்.  நீங்களும் மனிதரா ! ஒரு குண்டூசித் தலை அளவுக்கு இருக்கும் மதிப்பு கூட உங்களுக்கு இல்லை. நீர் வளமிக்க செழிப்பான நாட்டில் உண்ணுதற்கு உணவும் உடுப்பதற்கு உடையும் இல்லாமல் வருந்துகிறீர்கள்.    இந்நாடு பிற நாட்டிலே நாகரீகம் பரவுவதற்கு காரணமாயிருந்தது.   உங்களுடைய நாட்டிலே உண்டாகிற பொருள்களைக் கொண்டு பிற நாட்டார் நிறைந்த பயனைப் பெருகிறார்கள்.    நீங்கள் பொதி சுமக்கிர கழுதைகளைப் போல் அவர்களுடைய சுமையைத் தாங்கிச் செல்லுகிறீர்கள்.  இந்தியாவில் இயற்கையாய் விளைகின்ற பொருள்களை அயல் நாட்டார் இறக்குமதி செய்து, தங்களுடைய புத்திக் கூர்மையால் அவற்றைப் பயன்படுத்திப் பெருமை அடைகின்றார்கள்.  நீங்களோ, உங்களுடைய புத்தியை அறையில் பூட்டி வைத்துவிட்டு, முன்னோர் வைத்துப் போன பொருளைப் பிறருக்கு கொடுத்துவிட்டு உணவுக்கு வருந்தி அலைந்து திரிகின்றீர்கள்.

மேற்கண்ட கேள்விக்குகளுக்கு பதில் அளித்தவர் சுவாமி விவேகானந்தர்
இடம் : பேலூரில் ஒரு திருமடம்  காலம் : 1898

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கருத்தில் உறைந்திருக்கும் உண்மையை உணருங்கள்.

இது ஒரு விதை அதை நாம் மரமாக வளர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதே என் கருத்து.

நன்றி : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் 
புத்தகம் வெளியிட்ட ஆண்டு : 1972


 

Download As PDF

Thursday, December 8, 2011

103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் !

இந்த ஓவியத்தின் தலைப்பு " Discussing the divine comedy with dante" ஓவியர்களின் பெயர்கள் " தாய் டுடு, லி டைஷி மற்றும் ஜியங்(Dai Dudu, Li Tiezi and Zhang)" வரையப்பட்ட ஆண்டு 2006  இந்த ஓவியத்தில் அரசியல் மற்றும் கலையியல் துறையில்  ஈடுபட்ட 103 புகழ் பெற்ற பிரபலங்கள் உள்ளார்கள்.Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)