Followers

Saturday, August 25, 2012

பிரபஞ்சம் அறிவோம் : எண்ணியலும் விண்ணியலும்


[ மு.கு : இந்த பதிவில் பலவிதமான சிந்தனை ஓட்டமிருக்கும் நீங்கள் எதை கையில் எடுக்க வில்லை என்றாலும் பொருமையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ]

அவசரமான உலகம் இது.  "எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு சீக்கிரம் சொல்லுங்க" என்று வீட்டு பாஸோ, நண்பனோ, ஏன் அலுவலக பாஸோ உங்களிடம் சொல்லியிருக்கலாம்.  அவங்க கிட்ட நீங்க ஏன் 1089 வேலை இருக்காதோ என்று சொல்ல வில்லை என்றாலும் மனதில் நினைத்திருக்கலாம்.  இந்த 1089 ஒரு மந்திர எண் அல்லது ஸ்பெஷல் நம்பர் எப்படி ?

ஒரு மூன்று டிஜிட் எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். மூன்றும் வெவ்வேறு எண்ணாக இருக்கவேண்டும். அதை அப்படியே திருப்பி போட்டு கழிக்கவும் கிடைத்த எண்ணை மறுபடியும் திருப்பி போட்டு கூட்டவும். விடை என்ன ?

விளக்கம் : 
நான் நினைத்த எண் 301 திருப்பி போட்டால் 103 இப்போது 301 - 103 = 198
198 திருப்பி எழுதினால் 891 இந்த இரண்டையும் கூட்ட 198+891 = 1089

இன்னும்,  1089 ல் 10 மற்றும் 89 இடையில் 9 போட்டு கொள்ளுங்கள் 10989
இதை 9 ஆல் பெருக்க கிடைப்பது 98901 அதாவது முதல் நம்பரின் திருப்புதல். இது போல 109999989 ஐ 9 ஆல் பெருக்கினாலும் விடை அந்த நம்பரின் திருப்புதல் கிடைக்கும்.

மேலே சொன்ன 1089க்கும் விண்ணியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் 108 என்ற எண்ணிற்கும் விண்ணியலுக்கும் ஏன் வேத கால சாத்திரங்களுக்கும், ஜோதிடத்திற்கும், சமய ஆகம விதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

[ பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது  இது ஆம்புலன்ஸ் நம்பர் தானே ? ]

விண்ணியலை விஞ்ஞான கலைகளின் ராணி [ Quien of sciences ] என்று ஏன் சொல்லுகிறோம் ?இது பல துறைகளின் கூட்டு, வானியல், வான சாஸ்திரம், புவியியல், புள்ளியியல், தாவரவியல்,உயிரியல், பெளதிகம், ரசாயணம், கணிதவியல்,கட்டிடக்கலை.. இன்னும் பல அறிவியற் துறைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

மேலே சொன்ன பல இயல்களிலும் கணிதவியல் இல்லை என்றால் விண்ணியல் இல்லை என்றே சொல்லலாம்.

விண்ணியல் பற்றி சொல்லும் போது எதுக்கு எண்ணியல் என்று நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் சம்பந்தம் உண்டு. பழங்காலத்தில் இருந்த விண்ணியலை எகிப்தியர், கிரேக்கர்கள்,பாபிலோனியர்,இந்தியர், சீனர் பலரும் இந்த துறையில் ஈடு பட்டிருக்கின்றனர், என்றாலும்  இந்திய வான சாஸ்திரத்தின் அணுகுமுறை மற்றும் ஆராய்சி வேறுப்பட்டது என்று சொல்லலாம்.

ஒரு மனிதனின் இரத்த மூலக்கூறுகளில் நட்சத்திர அணுக்கள் பரவியுள்ளது.  குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்பு அல்லது சுவாசத்தை எந்த நொடியில் தொடங்குகிறது எந்த இடத்தில் என்பதை அடிப்படையாக கொண்டே குழந்தையின் ஜோதிடம் கணிக்கப் படுகிறது.

இந்திய ஜோதிடம் கணக்கீட்டு அட்டவணைகளால் உருவாக்கப்பட்ட அடித்தளம்.

நண்பர்களில் ஒருவனை திட்டுவதற்கு " அவன் சுத்த பஞ்சாங்கம்டா " என்பார்கள் அப்படிப்பட்டவன் ஒரு ஒழுங்கில் சென்று கொண்டிருப்பவன் என்பது பொருள்.

பஞ்சாங்கத்தில் ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் (இது பழையது) இதிலுள்ள பல பிழைகள் நீக்கி உருவாக்கப்பட்டது திரு கணித பஞ்சாங்கம்.  பஞ்சாங்கங்கள் 18 விதமான சித்தாங்கங்களை உள்ளடக்கியுள்ளது. பஞ்ச அங்கங்கள் கொண்டது. ஐந்து அங்ககள் 1. தி.தி. 2.வாரம் 3. நட்சத்திரம். 4.யோகம். 5. கரணம்.

திதிகள் சூரியன் சந்திரன் இவற்றிடையேயான தொலைவுகள் மற்றும் கோணங்கள் தான் அடிப்படை.

1 நாழிகை - 60 வினாழிகை,  2-2/1 வினாழிகை - 1 நிமிடம், 2-1/2 நாழிகை-1 மணி, 60 நாழிகை - 1 நாள் 

108 என்ற எண்ணின் சிறப்புகள் : 

"அஷ்டோத்ர சதா நாமவளி" என்பவை இந்து கடவுளர்களின் ஸ்தோத்திரங்களின் பெயர்கள் 108.


முனிவர்களும் ஞானிகளும் தங்கள் உள்ளுணர்வின் மூலமே பல தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யமானது.

நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்) இருக்கின்றன

துணை உணர்வு மற்றும் எண்ணங்கள் ஒவ்வொரு மனித உடலின் சிக்கலான கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. "குண்டலினி" என்பதன் அடிப்படை. இந்த மர்ம நாடி 9 முக்கிய உடல் பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

ஹிந்து இதிகாசங்களில் திருப்பாற்கடல் இது "மில்கி வே" தான் இதன் ஒருபுரம் 54 தேவர்களும் மறுபுறம் 54 அசுரர்களும் ஒரு பெரிய பாம்பிணை கயிராகவும் மேரு மலையை மத்தாகவும் கொண்டு அமுதம் பெற வேண்டி கடைந்ததாக சொல்லப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஒப்புமைப்படுத்த விளக்கப்பட்டது. இரண்டு 54 ன் கூட்டு தொகை 108.

108 திவ்விய தேசங்கள் மகா விஷ்ணுவிற்கு உள்ளது.

உத்திராட்ச மற்றும் துளசி மணி மாலை, கிருத்துவர்களின் புனிதஜெப மாலை இவைகளில் மணிகளின் எண்ணிக்கை 108.

உபநிஷ்த்துகள் 108. புத்தர் கோயில்களில் கற்பகிரஹகத்திற்கு செல்ல 108 படிகளை கடக்க வேண்டும். புத்த விகாரங்களில் 108 சிறிய புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டிற்கு 108 முறை மணிகளை ஒலிக்கிறார்கள்.

இஸ்லாத்தில் 108 என்பது கடவுளை குறிக்கும்.

இந்திய கலாச்சாரத்தில் 108 நாட்டிய வகைகள் உண்டு.

108 உணர்சிகளில் 36 உணர்ச்சிகள் நிகழ்காலத்திலும், 36 உணர்ச்சிகள் கடந்த காலத்திலும், 36 உணர்ச்சிகள் எதிர் காலத்திலும் இருக்கிறதாம்.

ஜோதிடத்தில் நிலவுக்கு வெள்ளி ஒப்பீடு செய்யப்படுகிறது இதன் அணு நிறை 108.

நிலவின் சுற்றுப் பாதையில் 27 நட்சத்திர மண்டலங்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நிலவு பூமியை ஒரு சுற்று முடிக்க 27 - 1/3 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு நட்சத்திர தொகுப்பில் சஞ்சரிக்கும்.

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் என்றால் 27 நட்சத்திரத்திற்கு மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் என வகைப்படுத்தப்பட்டது இந்திய ஜோதிடம்.

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = நிலவின் விட்டம் போல் 108 மடங்கு.
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = பூமியின் விட்டம் போல் 108 மடங்கு

சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தில் 108 மடங்கு.

[சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள வரையறுக்கப்பட்ட தொலைவு 
149,597,870,691 kms இதை சூரியனின் விட்டத்தால் அதாவது   1,392,000 Kms ஆல் வகுத்தால் கிடைப்பது  107.46973469181034482758620689654.  ]


இது போல் பல கிரகங்கள், நட்சத்திரங்கள் உடுமண்டலங்கள், அனைத்தும் இந்த கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது இதை நான் சொல்ல வில்லை "கார்ல் சகன்" என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார்.

ஒரு நாளுக்கு மனிதனின் சுவாசங்களின் எண்ணிக்கை 21600 இதில் 10800 சூரிய சக்தி, 10800 நிலவின் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. தியானமுறையில் ப்ரணாயாமம் கற்பிக்கப்படுகிறது இதில் மூச்சு காற்றை 108 சுவாசங்கள் என்பது ஒரு நாளுக்கு தான். [10800 divided by 100 ]


வானவில்லின் நிறம் ஏழு, சித்தாந்த வேதங்களில் ஏழு உலகம் சொல்லப்படுகிறது இந்த ஏழு உலகத்தையும் ஏழு பரிமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  முப்பரிமாணம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். சரி அந்த ஏழு உலகங்கள் பூமியையும் சேர்த்து, புவர், சொர்க்க, மகர், மனோ, புத்தி, ஆனந்த லோகம்.

ஏழின் மகத்துவத்தை திருமூலரின் பல பாடல்களில் எழுதிவைத்துள்ளார். ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாக காணலாம்.

நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே

[இங்கு விண் அறிவாளர் யார் என்றால் விஞ்ஞானிகள் ]


Download As PDF

Friday, August 24, 2012

ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க


தலைப்பை படித்ததும் எந்த புத்தகத்தை என கேட்கலாம். புத்தகத்தின் பெயரே அது தான் எழுதியவர் "நீயா நானா -கோபிநாத்"  இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2008 ல் வெளியிடப்பட்டது பதினாறு பதிப்புகளைத் தாண்டி 2 லட்சம் பிரதிகளை நோக்கி விற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் 2009 ல் மட்டும் 6 பதிப்புகள், 2011ல் 5 பதிப்புகள்.

[ சமீபத்தில் கோவையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் இந்த புத்தகம் கண்ணில் பட்டது ஆஹா .சைகாலஜிகலா தூண்டில் போடுறாங்களே என யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்காரம்மாவிடமிருந்து "வாங்குங்க" பின்னாலிருந்து ஆர்டர் வர அதுக்கு அப்பீலேது...வாங்கிவிட்டேன். ]புத்தகம் எதைப் பற்றி சொல்லுகிறது மனித மனங்கள் தினம் மாறிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கை நம் அணுகு முறை எப்படி இருக்கவேண்டும்.

என்ன வாழ்க்கை என சலித்து போனவர்களும் படிக்கலாம். எப்படி வாழ்க்கையை எதிர் கொள்வது என்பவரும் படிக்கலாம்.

பதினைந்து அத்தியாயங்களில் தலைப்பே கிடையாது தலைப்பிற்கு பதில் மேற்கோள்கள் தான்.

அவரை பிடிப்பவர்களும் ஏன் பிடிக்காதவர்களும் இதை வாசிக்கலாம் என்பதே இதன் சிறப்பு.  நம்மோடு ஒரு நண்பர் பேசுவது போன்ற மொழிநடையில் வாழ்க்கையின் எதார்த்தங்களை நம் சிந்தனையில் தூண்டிலிடுகிறது. இப்புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை தருகிறேன்.

"சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால் யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது"

"சிரிப்பு வந்தால் சிரியுங்கள் நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம்.  கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்"

"தோல்வி உங்களைத் துரத்தட்டும் பரவாயில்லை ஆனால் தோல்வியை துரத்திக் கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்."

"உங்களுக்கென்று தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை, வம்படியாய் எந்த சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு விட்டு எல்லோரும் போய் விடுவார்கள்"

"யார் யாருக்கோ வெளிப்படுத்துகிற அன்பு உங்களை சந்தோஷப்படுத்தும் என்றால் நீங்கள் அன்பாயிருப்பதும் நம்மிடம் அடுத்தவர் அன்புடன் நடந்து கொள்வதும் எவ்வளவு அலாதியான விஷயம்."

"உங்கள் பிள்ளைக்கு தெரியாமல் வெளிப்படுத்த அன்பு ஒன்றும் மோசமான விஷயமில்லையே"

"எல்லோரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து "

"ஏதாவது பண்ணனும் பாஸ்...ஒரு சினிமா பாட்டுல வர்ற மாதிரி..."

======================================================
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
புத்தகத்தின் பக்கங்கள் : 112 விலை : ரூ. 70-

Download As PDF

Tuesday, August 21, 2012

விண்வெளி துணுக்குகள்


நாசா, அரிசோனா பாலைவனத்தின் ஒரு பகுதியை ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்திவருகிறது.  புதிய கண்டுபிடிப்பு கருவிகள் மற்றும் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி விண்வெளிக்கு அனுப்பபடும் வீரர்களுக்கு  இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இங்கு நிலவும் தட்பவெப்பநிலை, மணற்புயல் போன்றவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நமது கேலக்ஸியின் மையத்தில் இருக்கும் வாயு மேகக்கூட்டத்திலிருந்து ஒரு பீஸை எடுத்து அதிலிருந்து இந்த உலக மக்களுக்கு ஆளுக்கொரு கப் வைன் தயாரித்துக் கொடுக்கலாம்.[ முடியும் ஆனா முடியாது..! ]  இந்த வாயுவிற்கு கேஸியல் ஆல்கஹால் என்ற நாமகரணம் சூட்டபட்டுள்ளது. 

நம் உடலில் நட்சத்திரங்களின் அணு துகள்கள் கலந்திருக்கின்றன. [ இந்திய அஸ்ட்ராலஜிஸ்ட் கணிப்புகள் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டதே..]

ஒலிம்பஸ் மான்ஸ் [ Olympus Mons ] என்பது செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை இதன் உயரம் அதன் தரைக்கு மேலே 27 கிலோமீட்டர்கள் கொண்டது.

பூமியின் நேரத்துடன் ஒப்பிடும்போது நெப்டியூனின் ஒருநாள் என்பது 16 மணிநேரம் ஆனால் நெப்டியூனின் ஆண்டு என்பது 165 பூமி ஆண்டுகள் அதனால் அங்கு சராசரியாக 75000 நாட்கள் வருடத்திற்கு.

பூமியில் உங்களின் எடை 45 கிலோ கிராம் என்றால் செவ்வாய் கிரகத்தில் உங்கள் எடை 17 கி.கி ஏன்னென்றால் அங்குள்ள் ஈர்ப்பு விசை அப்படி [ அப்ப அங்க டயட் தேவையில்லை ]

நம் சூரிய குடும்பத்தின் இறுதியில் சுற்றி வரும் குட்டி கோள்  சேதனா [Sedna ] இதை ஒரு கிரகமாகவும் மதிக்க முடியாது ப்ளானெடாய்ட் என்கிறார்கள். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 10,500 ஆண்டுகள் ஆகிறது. தொலைவில் இருந்தாலும் இதில் பனிகட்டிகள் இல்லை. அதன் படம் கிழே ;சூரிய புயல் அதிக காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது இதன் காஸ்மிக் கதிர்கள் பூமியின் வாயுமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக நைட்ரஜனை கார்பன் -14 ஆக மாற்றும் இதனால் தாவரங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும், ரேடியோ அலை தொடர்புகளும் பாதிப்படையும் இதனால் மனிதனின் மூளை நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும்.

பூமியும் நிலாவும் ஒரே வேகத்தில் சுற்றுவதால் நமக்கு நிலா ஒரே முகத்தையே காட்டிக்கொண்டிருகிறது [நிலவே முகம் காட்டு... என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறதா ?] அதன் இனொரு முகம் இதோ

 முன்னாடி...


பின்னாடி
Download As PDF

Monday, August 20, 2012

பிரபஞ்சம் அறிவோம் : கருந்துளைகள் [Black Holes]இந்த பிரபஞ்சத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள், உடுமண்டலங்கள் [Galaxies] 5 சதவீதம் மட்டுமே மீதமுள்ளவற்றில் அறியப்படாத இருள்பொருட்கள் [Dark Matters] 23 %, மாபெரும் இருள் சக்தி [Dark Energy] 72 %  என்பதை நினைவில் கொள்வோம்.

காஸ்மாலஜியை பொருத்தவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் பெரும்பாலும் இதுதான் இறுதியானது என உறுதியாக கூறப்படுவதில்லை அப்படி தெரிவிக்கப்படுபவைகளில் பிற்காலத்தில் முழுக்க மறுக்கப்பட்டவைகளும் உண்டு.

கண்களுக்கு தெரிந்தவைகளே மாற்றம் பெரும்போது தெரியாதவைகள்  [in-visible] பற்றிய தியரிகள் உருவாக்குவது எவ்வளவு சிரமமானது அதில் விசித்திரமான ஒன்றுதான் கருந்துளை.

ஐந்து சூரிய நிறைக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் அதிக விசையுடன், அதிக வெப்பபத்துடன், அதிக பிரகாசத்துடன், அதி பயங்கர சப்தத்துடனும் தன்னைத் தானே எறித்துக் கொண்டு முடிவில் முடிவற்ற ஒரு சுருக்கத்திற்கு சென்றுவிடும் இதை சூப்பர் நோவா என்கிறோம். 

இந்த சூப்பர் நோவா பின்னாலில் நியூட்ரான் நட்சத்திரமாகவோவொ அல்லது கருந்துளையாகவோ உருமாறுகிறது

கருந்துளைகளை பற்றி  புரிந்து கொள்ள நமக்கு கொஞ்சம் கற்பனா சக்தி அவசியம். அந்த தியரிகளை படிக்க நமக்கு தலைசுற்றுவதை தவிர்க்க முடியாது.  எனவே அந்த தியரிகளுக்குள் விரிவான ஆராய்ச்சியில் புகுந்து சலிப்பேற்படுத்துவதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

ஒரு பொருளின் நிறை அதிகரிக்க அதிகரிக்க அதன் ஈர்ப்பு விசை அதிகரிக்கும். அப்படியானால் ஈர்ப்பு விசை என்பது ஒருநிறையை பொருத்தது சரியா ?

இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன் டென்னிஸ் பந்து அளவுள்ள காந்த பந்து, ஒரு புட்பால் அளவுள்ள காந்த பந்து இதில் அதிக ஈர்ப்பு உடையது அளவில் பெரியதே.

பூமியின் ஈர்ப்பு விசை அதன் மேல்பரப்பில் உள்ளதை விட அதன் மையம் நோக்கி செல்ல செல்ல அதிகமாக இருக்கும்.

ஒரு கல்லை நம் தலைக்கு மேலாக வானத்தில் வீசி எறிந்தால் உடனே கீழே விழும், இன்னும் அதிக வேகமாக வீசினால் [மண்டை உடஞ்சிடும்..?! ] கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும் அப்படி ஒரு கல்லை மிக வேகமாக அதாவது விநாடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால் [சும்மா கற்பனை..] அது கீழே வராது அப்படியே விண்வெளியில் போய்விடும். இதை தப்பும் வேகம் [Escape Velocity] என்கிறோம். இதையே நிலவில் 2.4 கி.மீ / விநாடி வீசினால் போதும்.

இந்த வேகமானது அந்த பொருளின் மையத்தில் மிக அதிகமாகவும் மையத்தை விட்டு விலக விலக குறைவாகவும் இருக்கும். பூமியின் மேற்பரப்பை விட மையத்தில் நிறை ஈர்ப்பு விசை மிக அதிகம் அதன் தப்பிக்கும் வேகமும் அதிகம்.

இப்போது அதிக நிறையுள்ள பொருளை மிக மிக சுருக்கி சிறிதாக்கினால் அதன் தப்பும்வேகம் அதிகமாக இருக்கும்.

தப்பிக்கும்வேகம் எப்போது ஒளியின் வேகத்தை விட அதிகமாக தேவைப்படுகிறதோ அப்போது அந்த பொருள் கருந்துளையாக மாற்றம் பெரும்.  அந்த இடத்தில் இருந்து டார்ச் லைட்டை அடித்தால் உடனே அதேவேகத்தில் திருப்பி விடப்படும். அதாவது உள்ளிருந்து எதுவும் விளிம்பு எல்லைக்கு வெளியே போகாது. அதே சமயத்தில் விளிம்பின் எல்லையை தொடும் பொருளை உள்ளுக்குள் மையத்தை நோக்கி ஈர்த்துவிடும்.

சூரியனின் விட்டம் 7 லட்சம் கிலோமீட்டர்கள் அதே சூரியன் 3 கி.மீ விட்டத்துக்குள் சுருக்கினால் அது கருந்துளையாக மாறிவிடும்.

சூரியனைப்போல் 10 மடங்கு அதிக நிறையுள்ள கருந்துளையின் நிறை 10ன் மடங்கில் 31 கிலோ கிராம். [10 ^ 31 கி.கி]

நமது பால்வழி [Milky way] மண்டலத்தில இருக்கும் கருந்துளையை 1930ல் கண்டறிந்தனர்.  கருந்துளை இருப்பதே தெரியாதே எப்படி கண்டுபிடித்தார்கள் ? நட்சத்திரங்களை ஈர்க்கும் போது பிரதிபளிக்கும் ஒளி பிம்பத்தை வைத்து கணிக்கப்பட்டிருக்கலாம். கருந்துளையி உறிஞ்சப்படும் எதுவாயினும் ஒளி உட்பட சுவாஹா தான்.

கருந்துளை ஒளியையும் உறிஞ்சக்கூடியதுன்னு 1960ல்  ஆங்கிலேயர் ரோஜர் பெரோஸ் கண்டுபிடிதார்.

மிக அதிக நிறையுள்ள நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த நிலையில் கருந்துளையாக மாறும்.

அதிக தொலைவில் இருக்கும் கருந்துளை 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் நிறை சூரியனின் நிறையை விட 3 பில்லியன் மடங்கு அதிகம்.

வானியலார் கணிப்புப்படி இந்த பிரபஞ்சம் கருந்துளைகளால் நிரம்பியுள்ளது. மிகப்பெரிதாக கருதப்படும் கருந்துளை சூரியனின் நிறையை விட பல பில்லியன் மடங்குகள் பெரியது. இது அநேகமாக கேலக்ஸிகளின் மையத்தில் இருக்கலாம்.  [ நம்பிக்கை தான் வாழ்க்கை..]

இந்த கருந்துளைகள் உருவான போது நடந்தது என்ன ? மர்மமே.

கருந்துளைபற்றிய தியரிகளில் குறிப்பிடத்தக்கவைகள்:

நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், ஐன்ஸ்டீன் பொது சார்பியல் கொள்கை [தியரி ஆப் ரிலேட்டிவிட்டி], பிரிட்டிஸ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாகிங் அவர்களின் குவாண்டம் மெக்கானிக்ஸ் [ ஹாகின் ரேடியேஸன் பற்றியது]

இது தான் கருந்துளையின் கிராபிக்ஸ் படம் [ ஒரிஜினல் இல்லையான்னு கேட்காதீங்க ]


===========================================================

கருந்துளைகளில் இருந்து நாதம் [ஒலி - music / sound ] வெளிப்படுமா ?
300 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ள பெர்ஸியஸ் கேலக்ஸியில் கண்டறியப்பட்ட கருந்துளையில் இருந்து சப்தங்கள் 2 பில்லியன் ஆண்டுகளாக வெளிப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த ஒலி குறிப்புகள் X - Ray வடிவத்திலேயே பெறப்பட்டது அதனால் அந்த சப்தத்தை கேட்க இயலாது.

Download As PDF

Friday, August 17, 2012

டினாசோர்ஸ் பறவை எப்படி இருக்கும் ?சைனாவின் லியோனின் புரோவின்சியில் 130 மிலியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டினாசோர்ஸ் பறவையின் [ சினோசெளரோப்டைரிக்ஸ்] படிமம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இருந்த பறவைகளில் 30 வகை பிரித்தறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன பறவயின் பிரம்மாண்ட படிமத்திலிருந்து [ஃபாசில்] நிற பிக்மெண்டுகளை ஆராய்ந்து, அதன் உருவ அமைப்பு மற்றும் வண்ணங்கள் தீர்மானிக்கப்பட்டு உருவகப்படுத்தியுள்ளார்கள்.

கீழே உள்ளது டினாசோர்ஸ் பறவையின் எழும்புக்கூடு படிமம் [ Fossil ]

Download As PDF

Thursday, August 16, 2012

ஹெஸ்[HESS] எனும் டெலஸ்கோப் - ஏன் எதற்கு ?உலகின் பெரிய டெலஸ்கோப்  ஜுலை'2012 ன் கடைசி வாரத்தில், நமீபியாவில் நிறுவப்பட்டு செயல் பட ஆரம்பித்துள்ளது. இந்த டெலஸ்கோபின் பெயர் HESS II [ஹெஸ் II - High Energy Stereoscopic System ] இதன் டிஷ் அளவு இரண்டு டென்னிஸ் கோர்ட்டுகளின் அளவு என்றால் இதன் உருவத்தை ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஹெஸ் இரண்டு எனும்போதே ஹெஸ் ஒன்று இருக்கனுமே ஆமாம் இந்த வகை தொலைநோக்கிகள் 1994ல் இருந்து ஆய்வில் உள்ளது. ஹெஸ் I  - 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இது நான்கு உள்ளது.

இந்த தொலைநோக்கி எதற்கு?

சக்தி வாய்ந்த காமா கதிர்களால் ஏற்படும் சூழ்நிலை தகவமைப்பை ஆய்வு செய்கிறது.  இதன் அல்ட்ரா வேக புகைப்படங்கள் காமா கதிர்கள் ஊடுருவும் சக்தி மற்றும் திசையை தெரிவிக்கும்.

இந்த தகவலை பிரான்ஸ் தேசிய நியூக்ளியர் நுண்துகள் இயற்பியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

கருந்துளைகள், சூப்பர் நோவா, மற்றும் புல்சர்கள்(நியூட்ரான் ஸ்டார்)  இவைகளில் இருந்து வெளிவரும் காஸ்மிக் காமா கதிர்களை ஹெஸ் ஆராயும் என்று விளக்கமளிக்கிறார்கள் வானியற்பியல் விஞ்ஞானிகள் .

====================================================================

ஐந்து சூரிய நிறைக்கு மேற்ப்பட்ட நட்சத்திரங்கள் அதிக விசையுடன், அதிக வெப்பபத்துடன், அதிக பிரகாசத்துடன், அதி பயங்கர சப்தத்துடனும் தன்னைத் தானே எறித்துக் கொண்டு முடிவில் முடிவற்ற ஒரு சுருக்கத்திற்கு சென்றுவிடும் இதை சூப்பர் நோவா என்கிறோம். 

இந்த சூப்பர் நோவா பின்னாலில் நியூட்ரான் நட்சத்திரமாகவொ அல்லது கருந்துளையாகவோ உருமாறுகிறது [ கருந்துளை பற்றி தனி பதிவே போடலாம் ? ]

Download As PDF

Tuesday, August 14, 2012

பிரபஞ்சம் அறிவோம் : கேலக்ஸிகள் பற்றிய சில தகவல்கள்


அகண்ட விண்வெளியில் அநேக நட்சத்திரங்களின் தொகுப்பே கேலக்ஸிகள் என அழைக்கப்படுகின்றன.

அநேக நட்சத்திரங்கள் என்பதை உத்தேசமாக மில்லியன் நட்சத்திரங்களில் இருந்து டிரில்லியன் நட்சத்திரங்கள் வரை கொண்ட தொகுப்பு என கருத்தில் கொள்ளுங்கள்.

நமது கேலக்ஸியின் [உடுமண்டலம்] பெயர் ஆங்கிலத்தில் மில்கிவே தமிழில் பால்வீதி அல்லது ஆகாய கங்கை.

நம் கேலக்ஸியின் விஸ்தீரணம் சில ஆயிரங்களில் இருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம். இவற்றின் நிறை பல டிரில்லியன் சூரிய குடும்பங்களின் நிறையின் அளவு என்று கொள்ளலாம்.

நம் பக்கத்துவீட்டுக்காரரின் செல்லப் பெயர் M31  [ ஆண்டிரமெடா ] இதனுடைய விட்டம் 2 அல்லது 3 மில்லியன் ஒளியாண்டுகள். இவருக்கும் நமக்கும் உள்ள தொலைவு பல மில்லியன் ஒளியாண்டுகள் இருக்கும்.
இந்த டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யவில்லை என்றால் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகிடும். திரு.சாலமன் பாப்பையா பாணியில் சொன்னால் " நம்ம கேலக்ஸியையே இன்னும் சரியா விளங்கிக்க முடியலயா..."

கேலக்ஸியின் வடிவத்தை பொருத்து சுருக்கமா நான்கு வகையா பிரிக்கலாம்.  [இங்கு சுருக்கமா என்று சொல்லுவதன் காரணம் அந்த ஒவ்வொரு வகையிலும் பல கூறுகள் இருக்கு ]

1. சுருள்வடிவம் [ spiral Galaxies ]
2. லெண்டிகுலர் [ Lenticular Galaxies ]
3. நீள்வடிவம் [Elliptical Galaxies ]
4. ஒழுங்கற்ற வடிவம் [ Irregular Galaxies ]

இந்த ஒழுங்கற்ற வடிவத்தில் பல ஆயிரக்கணக்காண கற்பனைக்கெட்டாத உருவங்கள் உண்டு.


  • சுருள்வடிவம் பக்கத்தில் இருக்கும் கேலக்ஸியின் ஈர்ப்பால் இந்த வடிவம் பெருகிறது.
  • லெண்டிகுலர் இதுவும் சுருள்வடிவமே ஆனால் அதன் மையம் எரிபொருள்தீர்ந்து வேகமிழந்த நிலையில் இருக்கும்.
  • நீள்வடிவம் இது தன்னைத்தானே சுற்றாது ஆனால் இதிலுல்ல அண்ட சராசரங்கள் ( கோள்கள், நட்சத்திரங்கள்) சுற்றும்.
  • ஒழுங்கற்ற வடிவம் பல வடிவங்கள் கொண்டு விநோத சித்திரங்கள் போல் இருக்கும்.


இரு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதும், இணைவதும் உண்டு.


மேலே உள்ளது ஸ்பைரல் கேலக்ஸி


மேலே :   இது ஒரு நீள்வடிவ கேலக்ஸிமேலே :   இது ஒரு  லெண்டிகுலர்  கேலக்ஸிமேலே : எமிசன் ரிஃப்ளெக்சன் கேலக்ஸி


மேலே : ஸ்டார் ப்ர்ஸ்ட் கேலக்ஸி


மேலே : இணைந்த இரு கேலக்ஸிகள்இதுதான் நம்ம மில்கிவே சூரியன் குறிக்கப்பட்டிருக்கு கவனிக்கவும்


==================================================================
பால்வெளியில் [மில்கிவே] 400 பில்லியன் நட்சத்திரங்களும், இந்த யுனிவர்ஸில் 125 பில்லியன் கேலக்ஸிகளும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு உண்டு.

==================================================================Download As PDF

Monday, August 13, 2012

பிரபஞ்சம் அறிவோம் : நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்
பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெரு வெடிப்பின் [BIG BANG ] மூலம் ஏற்பட்டது என்று அறிவியல் பூர்வமாக கணித்துள்ளார்கள். இதற்கு ஒரு பெரிய தியரியே உண்டு.

இந்த பெரு வெடிப்பினால் வெளியான ஒளியை காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புலம் [ cosmic microwave background - CMB ] என குறிப்பிடுகிறார்கள் அந்த ஒளி தோற்றத்தை தொலைநோக்கியால் இன்றும் நாம் காண முடியும்.

இதற்கென 1990ல் காஸ்மிக் பேக்ரவுண்ட் எக்ஸ்புளோரர் என்ற செயற்கை கோள் ஏவப்பட்டது.  இது அளித்த தகவலின் படி CMB அகிலம் முழுவதும் சமச்சீராக நீக்கமர பரவியுள்ளது நிரூபிக்கப்பட்டது.

இந்த பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவை நட்சத்திரங்கள். நமது சூரியன் இந்த நட்சத்திரங்களில் ஒன்று. இது மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதே என்ன ஒப்பீடு ஒரு நட்சத்திரதின் பிரகாசம், பொருண்மை(மாஸ்), ஈர்ப்புத்தன்மை, அது சுற்றி வரும் நட்சத்திரகூட்டம் இவைகளை வைத்து தரம் பிரிப்பார்கள்.

ஒரு நட்சத்திரமானது ஒன்றுமில்லாத நிலையில் இருந்து, அண்ட வெளியுள்ள வாயுக்கள் மற்றும் தூசு அயனிகளுடன் மின்னூட்டம் பெற்று ஒன்றுடன் ஒன்று மோதல் மற்றும் அணு பிளவு நடந்து பெருக்கமுற்று ஒரு மாபெரும் சக்தியாக உருப்பெற்று பெரும் சூறாவளியாக சுழன்று பிறப்பெடுக்க 10000 முதல் 10 இலட்சம் ஆண்டுகள் ஆகும்.

நட்சத்திரம் உருவாக மூலம் ஈர்ப்பு சக்தியும் அழுத்தமும் அவசியம்.

100 ஒளி ஆண்டு தூரமுடைய விட்டத்தை எடுத்துக்கொண்டால் அதில் சாராசரியாக 5 லட்சம் நட்சத்திரங்கள் இருக்கும்.

சரி ஒளியாண்டு என்பது என்ன ?

இதற்கு நாம் சூரியனில் இருந்து ஆரம்பிக்கலாம்.  சூரியனுடைய ஒளிகீற்றானது பூமியை அடைய சுமார் எட்டு நிமிடங்கள் ஆகிறது. அப்படியானால் இந்த நொடியில் நாம் பார்த்த சூரியனின் பிம்பம் இப்போது இருந்தது அல்ல 8 நிமிடத்திற்கு முன்பு இருந்தது என்ற முடிவிற்கு வரலாம்.

உதாரணமாக ஒரு நட்சத்திரம் 5 ஒளியாண்டு தொலைவில் உள்ளது எனும்போது அது 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தோற்றம் எனப் பொருள் கொள்ளலாம் இன்று அதன் தோற்றம் என்பது 5ஆண்டுகள் கழித்தே நாம் காணமுடியும் [ விளங்கிடும்..?]

ஆனா சுமாரா ஒரு நட்சத்திரம் 5 ஒளியாண்டு தொலைவில் எல்லாம் இல்லை. 5 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும்.

நம்ம கிட்ட இருக்கிற தொலைநோக்கியில் 14.3 பில்லியன் ஒளியாண்டு வரைக்குமான காட்சியை தான் பார்க்கமுடியும் அதுக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை ஒரு விண்வெளி அளவு [Austronomical Unit ] 1AU என்ற அலகால் குறிப்பிடுகிறார்கள். இந்த தூரத்தில் இருக்கும் ஒரு கிரகம் நம் பூமியை போன்று தகவமைவுடன் இருக்கும் என்ற யூகமும் உண்டு. இது போல பூமியை போன்றே 156 இருக்குன்னு கலிபோர்னியா கோள் ஆராய்சியில் கணக்கெடுத்திருக்காங்க.

நட்சத்திரங்கள் பற்றிய ஒரு பதிவு :

நட்சத்திர குள்ளர்கள் பற்றிய விண்வெளி ஆய்வு


===========================================================

பூமி சுற்றும் வேகம் என்ன ?

நம்பூமி மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.
===========================================================

Download As PDF

Saturday, August 11, 2012

செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்ஆகஸ்ட் 6ல் செவ்வாயில் தரை இறங்கிய நாசாவின் செல்லகுட்டி "கியூரியாசிட்டி ரோவர்" ஏலியன்ஸ் குறித்தும் ஆராய தரையிரங்கியுள்ளது. இதற்கான செலவு கிட்டத்தட்ட 2.5 மிலியன் டாலர்கள்.  இதை உருவாக்கிய ஆய்வகம் MSL [Mars Science Laboratory ] என அழைக்கப்படுகிறது. இது இதற்கு முன் இவ்வளவு பெரிய சிரத்தை எடுத்து கொண்டிருக்காது. MSL விஞ்ஞானிகளால் துள்ளியமாக கணித்து செயல் படுத்தப்பட்ட "அந்த ஏழு டெரர் நிமிடங்கள்" மிகுந்த சுவாரஸ்யம் மிக்க தருனங்கள்.

"கியூரியாசிட்டி ரோவர்"  தரை இறங்கியது [ 06 ஆகஸ்ட் 2012 ] 
பற்றிய விரிவான பட விளக்கங்களுடன் நண்பர் அருண் அவர்களின் அவில்மடலில் காணலாம். [லிங்க் http://www.aalunga.in/2012/08/curiosity-rover-mars-mission.html ]

க்யூரியாசிட்டியி வேதியல் லேப், எக்ஸ்ரே ஸ்கேனர், லேசர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மண்சத்து மூலக்கூறுகளை மற்றும் அக்காலம் இக்காலம் குறித்த ஆய்வு பணி செய்யப் போகிறது.

இந்த வெற்றி இன்று நேற்று செய்யப்பட்ட ஆய்வின் முயற்சி அல்ல கடந்த 50 ஆண்டுகாலப் போராட்டம்.

செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட நாடுகள் USSR, RUSSIA, NAZA, JAPAN, ESA, CHINA


1962 முதல் செவ்வாய் ஆய்வுகோள் ஸ்புட்னிக் 24 [USSR]
1971 மார்ஸ் 2 ஆர்பிட்டர்
1975 வைகிங் 1 மற்றும் 2
2003 மார்ஸ் எக்ஸ்பிரஸ் [ESA]
2003 மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்
2011 க்யூரியாசிடி ரோவர்

வல்லரசாக தம்மை இனம் காட்ட முயற்சிக்கும் நாடுகள் பலவும் செவ்வாய் ஆய்வில் இன்னும் பல திட்டங்களில் ஈடு படப்போகிறது.

[ESA] ஐரோபிய ஸ்பேஸ் ஏஜென்சி 2016 ல் ஒரு செவ்வாய் சுற்றுவட்ட கோளையும்  2018 தரை உளவியும் [ரோவர் ]அனுப்ப திட்டம் வைத்துள்ளது.

ரஷ்யன் பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ESA உடன் இணைந்து 2018 ல் கியூரியாசிட்டிபோல " EXOMARS " எனும் ஒரு ரோவரை இறக்க திட்டமிட்டுள்ளது.  இது செவ்வாய் தரையினுள் துளையிட்டு  படிமங்களை சேகரிக்கும் இதைகொண்டு 3 பில்லியன் வருடங்களுக்கு முந்தய கதையை தோண்டப் போகிறார்கள்.


இந்தியன் ஸ்பேஸ் ஏஜென்சியிடமும் ஒரு திட்டம் உண்டு 2013ல் செவ்வாய்ச்சுற்றி [ஆர்பிட்டரை] அனுப்பும் திட்டம் தான் அது.

சீனா ரஷ்யா இதேபோல் திட்டங்களை வைத்துள்ளது.

ரஷ்யா இதுவரை " MARSJINX "  16 ஸ்பேஸ் கிராப்டுகளை செவ்வாய் திட்டத்திற்காக தொலைத்திருக்கிறது.

"போபோஸ் கிராண்ட் மிசன் " எனும் திட்டம் ரஷ்யாவால் சென்ற ஆண்டு நவம்பரில் அனுப்ப திட்டமிடப்பட்டு ராக்கெட் கோலாரினால் தோல்வி அடைந்தது.

சைனாவின் யிங்ஹோ-1 [ Yinghuo-1] ரஷ்யாவின் ஸ்பேஸ்கிராப்டின் மூலமாக அனுப்பட்ட திட்டமும் தோல்வியடைந்தது. சைனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை 2016 ல்.

நாசாவின் மனிதர்களை செவ்வாயை சுற்றி வரும் திட்டமும் உண்டு. இதற்கென MAVEN  எனும் ஆர்பிட்டர் 2013 ல் அனுப்பபோகிறது. அதற்கு முன் LEMUR எனும் ஆய்வுக்கோள் அனுப்பி சூழ்நிலை தகவமைப்பை ஆராயும். அதே போல "போபோஸ்" செவ்வாய் நிலவையும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.

SMALER என்பது தேர்ந்தெடுத்த செவ்வாய் சைட்டுகளில் இருந்து சாம்பில் எடுத்து வரும் முயற்சி.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பு திட்டம் அதிக செலவு பிடிக்கும் திட்டம். தற்போதைய டெக்னாலஜியில் முன்னேற்றம் கண்டு இது 2023 இல் நிறைவேற்றப்படும்.

இதற்கிடையில் கலிபோர்னியாவில் ஒரு தனியார் அமைப்பும்    வருங்காலத்தில் அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்குள்ளாக மனிதனை அங்கே இறக்கும் திட்டம் [" SPACEX " ] வைத்திருக்கிறது இதை உறுதியாக செயற்படுத்தப்போகிறோம்  என்கிறார் நிறுவனர் எலோன் முஸ்க்.

====================================================================

செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள் :


செவ்வாய் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது இதில் குடியேறும் வாய்ப்பு அதிகம்.  பூமியை விட சிறியது.  தன்னைத்தானே சுற்ற 24.6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனுடைய ஒரு ஆண்டு என்பது  687 நாட்கள் அதாவது இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் நாட்கள்.  இதன் வெப்பநிலை -25 டிகிரி சென்டிகிரேட்.  மெலிதான காற்று மண்டலம் உண்டு. செவ்வாய் ரோமானியர்களின் போர் கடவுள்.

இதனுடைய துணைக்கோள்கள் , அதுதான் நிலவுகள் இரண்டு உண்டு. ஒன்றன் பெயர் தைமோஸ் [ரோமானிய பெயர் அர்த்தம் பயம்] மற்றது போபோஸ் [ரோமனில் அவசரம்]  இரண்டும் எதிர் எதிர் திசையில் சுற்றுபவை.

போபோஸ் நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்கிறார்கள் அதாவது வேறு கேலக்ஸியை சேர்ந்தது. செவ்வாயினால் ஈர்க்கப்பட்டு அதை சுற்றி வருவதாக நம்பப்படுகிறது.  செவ்வாயிற்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் வெரும் 5800 கிலோமீட்டர்களே.  நம் நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள்.

நம் நிலவிற்கும் இந்த நிலவிற்கும் [போபோஸ்] உள்ள வேற்றுமை நம்நிலவு சிறிது சிறிதாக பூமியை விட்டு விலகுகிறது;  இது சிறிது சிறிதாக செவ்வாயை நோக்கி செல்கிறது. அதாவது போபோஸ் 100 மிலியன் ஆண்டுகளில் அதனுடன் மோதி சிதறிவிடும்.

நம் நிலா 4 செ.மீ தூரம் விலகி செல்கிறது பல கோடி ஆண்டுகளில் பூமியை விட்டு விலகி சென்றுவிடும்.  [ இருந்துட்டு போகட்டுங்க 2012 முடியரதுக்குள்ளேயே உலகம் அழிஞ்சி போயிடுங்க ....என்று சிலர் சொல்லிக்கிறாங்க...நம்பாதீங்க.]

செவ்வாயில் ஸ்பிரிட் ரோவர் எனும் ரோபோ 2004 லேயே தரையிரங்கி உள்ளது. தண்ணீர் ஆய்வில் இறங்கியது. இது பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. விஞ்ஞானிகள், இது தரை இறங்கியதை "ஆறு நிமிட அற்புதம்" என்று சொன்னார்கள்.


Download As PDF

Monday, August 6, 2012

[பென்குவின்கள்] தந்தைபறவையின் தனி திறமை
பென்குவின்கள் பறக்க இயலா பறவை இனம், தெரிந்ததுதான்.  இவைகளில்  உலகத்தில் 17 விதமான வகைகள் உண்டு பெரும்பாலும் அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கூட்டமாக வாழும். நீருக்கடியில் இதன் நீச்சல் வேகம் மணிக்கு 24 கி.மீ இதன் துடுப்பு போன்ற கால்களும் றெக்கையும் வேகமாக நீந்த உதவுகிறது.

ராஜ வகை [ Emperor ]  பென்குவின் பெயருக்கு ஏற்றார் போல் பிரமாதமான உடல் அமைப்பு கொண்டது. பெரிய தலை மற்றும் நீளமான அலகு கொண்டது.  3.7 அடி உயரமும் 41 கிலோ எடையும் கொண்டது.  சிறிய வகை 16 இன்சுகள் தான் இதன் எடை ஒரு கிலோ மட்டுமே.


குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணம் பென்குவின்கள் தான்.  தாய் பறவை ஒரே ஒரு முட்டையை  தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்று விடும்.     அது கொடுத்த முட்டையை குஞ்சு பொறிக்கும் வரை அதை பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும் தந்தை பறவை.  பசியாயினும் பொறுமை  காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும் வரையிலும்.   குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பெரும்பாலும் குஞ்சை வளர்க்கும் பொறுப்பும் அதற்கு உண்டு.

இவற்றின் உணவு மீன்கள், ஸ்கிவிட் எனும் கடல் உயிரி. உணவை லாவகமாக தூக்கி போட்டு பிடித்து சாப்பிடும்.

அண்டார்டிகா உறைபனியில் எப்படி வாழ்கிறது?. இதன் உடல் அமைப்பு அதற்கு தகுந்தார்போல் திடமான கொழுப்பு உடல் கொண்டவை. மேலும் அடர்த்தியான ரோமமும் இதை கடும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது. வால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாது காக்கிறது.
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)