Followers

Wednesday, October 31, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2


ஒரு காலத்தில்  வடக்கு மத்திய நேபாலத்தின் ராஜ்ஜிய பகுதியாக இருந்த முஸ்டங் இன்று அகழ்வாராய்சியாளர்களுக்கு பல மர்மங்களை உள்ளடக்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது.

காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கின் ஊடாக அவர்களின் பயணம் தொடர்கிறது.மலைப்பகுதியை நெருங்க நெருங்க ஏராளமான வான் குகைகள் (Sky Gaves) தென்படுகின்றன இந்த பகுதியில், பசியால் வறுந்தி செல்பவனுக்கு பலகாரங்கள் கிடைத்தது போல இது அவர்களுக்களின் அறிவு பசிக்கு (அகழ்வாராய்சி மூளைக்கு) பல தீனிகளை தரப் போகிற ஆவலில் அந்த மணற் பாங்கான பாதையில் பயணம் மேற்கொள்கிறார்கள்

பல ஆசிய ஆறுகளின் துவக்கமாக இருக்கும் திபெத்திய பகுதியில் ஆறுகள் நிலங்களை பல கூறுகளாக அறுத்து போட்டிருக்கின்றன.1990-ன் மத்தியில் கூலெளன் (Cologne -மேற்கு ஜெர்மனி) பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்சி மேற்கொண்ட போது குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல டசன் சடலங்கள் கண்டறிந்தார்கள் எலும்புக்கூடுகளாக.

சடலங்கள் எல்லாம் மர கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தன. அவைகளுக்கு  தாமிர (செப்பு)  நகைகளும் நீள் வடிவ வண்ண கண்ணாடி வடிவ  பாசிகளும் அணிவிக்கப்படிருந்தன. செராமிக் பொருள்களும் கிடைத்தன.
இவைகள் எல்லாம் உள்ளூர் தயாரிப்புகள் அல்ல.  இந்த பொருட்கள் முஸ்டங்கின் செழிப்பை பற்றி, வாணிக மையமாக திகழ்ந்திருந்த வரலாற்றை பறைசாற்றுகின்றன .

பீட் ஏதென்ஸ் முதன் முதலில் இந்த குகைகளைப் பற்றி அறிந்து கொண்டது 1981 ல் எவரெஸ்டிற்கு டிரக்கிங் வந்த போது, ரொம்ப பிடித்து போய் அதன் பிறகு 7 முறைகள் சென்று வந்துள்ளார். அப்போதே " மிகச்சிறந்த ஆய்வுகளம் இதுதான்"  என முடிவு செய்து விட்டேன் என்று சிலாகிக்கிறார்.


"மேத் ஸீகல் பழைய கையெழுத்து பிரதிகளை ஆய்வு செய்கிறார்"பல அறைகளை கொண்ட வசிப்பிட குகையில் - டேட் ஹீசர்   "இதில் இருந்த பொருட்கள் கொல்லையடிக்கப் பட்டிருக்கலாம் என்கிறார்"

அப்படி ஒரு தேடலில் கண்டுபிடித்தது தான் 26 அடி நீளமுள்ள சுவர் சித்திரங்கள். அதில் 42 யோகிகள் படங்கள் பெளத்த வரலாற்றை சித்தரிப்பவையாக இருக்கலாம். 600 ஆண்டுகளுக்கு முன் பழமையானவை.  மேலும் 8000 பக்கங்கள் கொண்ட கையெழுத்து புத்தகங்கள். அனைத்தும் தியான சம்பந்தமான, தத்துவ விசாரணைகள்."புத்தர்"

"சித்தார்தா கவுதமா (புத்தர்) (623 BCE) ல் பிறந்த இடம் லும்பினி இது நேபாலில் உள்ளது" 

இந்த ஓவியங்களை பார்த்தால்  அஜந்தா-எல்லோரா குகை ஓவியங்கள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

(அஜந்தா எல்லோரா ஓவியங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம் : இனிய ஓவியா )  http://eniyaoviya.blogspot.com/2012/05/blog-post.html

இந்த குகைகளில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திறனாய்வு செய்தால் குகைகளில் முதலில் வசித்தவர்கள் யார் ? இம் மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? எவற்றை நம்பினார்கள் ? போன்ற மறைந்திருக்கும் பல மர்மங்கள் துலங்கும் என்கிறார்கள் இக்குழுவினர்.

சில குகைகள் வெற்று குகைகளாக இருந்தன. சில வாழ்விடங்களாகவும், குளிரடுப்புகளோடு வசிக்குமிடங்களாகவும் இருந்தன. தானியக்கிடங்குகளாகவும் இருந்திருக்கலாம். புத்தர் காலத்திற்கு முற்பட்டவையாகவும் இருக்கின்றன. திருடர்கள் கொள்ளையடிக்காமல் இருக்க பழம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம். முக்கியமாக முன்னோர்களின் எழும்புகளை பாதுகாத்து வந்துள்ளனர். இப்படி
ஆலெண்டர்ஃபெர் சில குகைகளை பற்றி ஒரு முடிவுக்கு  வருகிறார்.

திபெத்தியர் முன்னோர்களின் எலும்புகளை புனிதமாக கருதுகின்றனர்.

ஸாம்ட்ஜோங்க் (samdzong) என்ற சிறு கிராமப்பகுதியிலும் ( இது திபெத்தின் தெற்கில் சீன எல்லை பகுதியில் உள்ளது) நிறைய குகைகள் காணப்பட்டன. 2010 ல் அலெண்டர்ஃபரும், ஏதென்சும் ஆய்வு மேற்கொண்ட பொழுது மயான குகைகளை கண்டனர். 2011ல் இவைகளை மீண்டும் ஆய்வு செய்தார்கள்.  குகைகளின் உட் சுவர்களில் மெழுகு பூச்சப்பட்டது போல் இருந்தன வெளிச்சத்தில் ஒவ்வொரு நிறங்களில் எதிரொளித்தது சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறங்களில்.

குகைகள் குழாய் வடிவில் செங்குத்தான சரிவான பாதைகள் பல இணைத்திருந்தன. இந்த பாதைகள் மிக ஆபத்தானவையாக இருந்ததாக குறிப்பிடுகிறார். (முற்பகுதியில்  குறிப்பிட்ட விபத்து ஏற்படுத்திய இடங்கள் )

இவர்கள் ஆராய்ந்த சில குகைகள் நிலச்சரிவினால் அழிந்துள்ளன.
துண்டான குகை பகுதிகளே நுழைவாயிலாக நமக்கு வெளியே தெரிகின்றன (முதல் பகுதியில் உள்ள படங்களை பார்க்கவும்)  அப்படியானால் முழு குகை பகுதியின் நுழைவாயில் மேலே சமதளப்பகுதியின் கீழாக குழாய்வடிவ பாதை கீழ் நோக்கி குகைகளுக்கு செல்கிறது. அடுத்தடுத்த குகைகளை இணைந்திருந்தன என்று கண்டுபிடித்தனர்.


"முன்பிருந்த குகை(Tomp 5) தோற்றங்கள் கிராபிக்ஸ் படங்கள் விளக்குகின்றன"

மேலும் இந்த படங்களில் இருந்து குகையின் அமைவிடங்கள் மற்றும் பல வித தோற்றங்களை புரிந்து கொள்ளமுடியும்.

சில குகைகள் பல தளங்கள் கொண்டவை. குடியிருப்புகளாகவும், பெளத்த சமய பயிற்றுவிக்கும் மண்டபங்களாகவும் இருந்திருக்கலாம்.


அவர்களின் ஈம சடங்கு முறை, மயான குகைகள் (tomp 5)அவற்றில் கிடைத்த எழும்புக்கூடு, மம்மீஸ் மற்றும் பல சுவாரசியமான விவரங்கள் படங்களுடன் அடுத்த இறுதிப் பகுதியில் ; 

Download As PDF

Monday, October 29, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )


மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் முஷ்டங் பகுதியில் நிறைய உள்ளன.மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் [Mustang ]மலைபாங்கான பகுதி (காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கு) தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்ட குகைகளினுள் நுழைவது எப்படி ? என்பது புலப்படவில்லை. உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. " ஒரு கிளிப் ஹாங்கர்"  போலத்தான் இந்த குகைகளை ஆய்வு செய்யவேண்டும்.தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. ( சுமார் 8 முதல் 9 மாடி உயரம்). பெரும்பான்மையானவை 3000 ஆண்டுகள் பழமையானவை ( பெளத்தமதம் பரவுவதற்கு முன்பிருந்தவை)

சுக்ர சாகர் ஸ்ரேஷ்தா (Nepal's archaeologist)  எனும் அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய 10000 குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது.


இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ?
எதற்காக யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது.


இந்த குகைகளை பீட் எதென்ஸ் (தொல்பொருள் ஆய்வாளர்) என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது, இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் டிரெக்கிங் மேற்கொண்டார்.  2011 ல் எட்டாவது முறையாக இப்பகுதியில் ஆய்வு செய்தார்.

மார்க் அலெண்டெர்ஃபெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்). இவர்களோடு ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும்  (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் உடனிருந்தனர்.சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் சுருசுருப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பல அரசர்கள் ஆண்ட பகுதி.
முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்தமத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. இந்த வணிகத்திற்கு உப்பு ஏற்றி சென்ற வண்டி தடங்களே சாட்சி.  17 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது காரணம் குறைந்த விலையுள்ள உப்பு இந்தியாவில் கிடைக்க ஆரம்பித்ததே என்று சொல்கிறார்கள்.

சாம்ட்ஜோங்க் எனும் பகுதியிலும் நிறைய குகைகள் காணப்படுகின்றன.

நேபால் (நே என்றால் புனித , பால் என்றால் குகைகள்)

ஒரு காலத்தில் செழிப்பான பகுதியாயிருந்த இந்த பகுதியில்;
அறிய சிலைகளும், ஓவியங்களும் நிறைந்த கோவில்கள் சிதைவுக்குள்ளாகின.  ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது.


சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக (மிதமான வெப்பம்) இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


மர்ம நிகழ்வுகள் :

ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு ஆய்வு தடை பட்டது (2010)

லிங்கன் எல்ஸ் ( விடியோ கிராஃபர்) தலை ஹெல்மெட் எடுத்த சமயத்தில் கற்கள் பொறிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார்.

இன்னொருவர், ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராஃபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார்.


"இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு.  அவர்   மந்திர உச்சாடனங்களுடன் ஹோம பூசை செய்து எங்களை அடுத்தடுத்த ஆய்வு மேற்கொள்ள அனுமதித்தார் " நினைவு கூர்கிறார் ஏதென்ஸ்.

அந்த குகைகளில் அப்படி என்ன இருந்தன ? ஆய்வின் விவரங்கள் அடுத்த பகுதியில் படங்களுடன்...

Download As PDF

Friday, October 19, 2012

விழிப்புணர்வு கண்காட்சி - உயிர்நிழல்சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் "உயிர் நிழல் 2012" (9 வது) எனும் காணுயிர் புகைப்படக்கண்காட்சி மற்றும் குறும்பட நிகழ்வு [சோலைகாடுகளைப் பாதுகாப்போம் -இயக்குநர் சேகர் தத்தாரி]  நடைபெற்றது(5 அக் -14 அக் 2012) அவற்றில் இருந்து நாம் பெற்ற சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்.

நம் காட்டையும் காட்டுயிர்களையும் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தது.

உலகின் பாரம்பரிய இடங்களில் நன்றாக அறியப்பட்டுள்ள நமது மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மிக அரிய நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் சிறப்பை அறிவுறுத்தி அவற்றின் பாதுகாப்பில் மக்களை பங்கேற்க வைப்பது இதன் சிறப்பு.

காடுகளை காப்பாற்றுவதன் மூலமே நம் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் நீர் நிலைகளையும் உயிர்ச் சூழலையும் பாது காக்க முடியும் என்பதை அறிவுறுத்தியது.இக் கண்காட்சியில் கவனத்தை ஈர்த்த தகவல் ஒன்று:

அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள், வனசீரழிவு என்ற ஆபத்தை நமக்கு அறிவிப்பவை. செந்தலை வாத்தும் (Pink headed Duck) அப்படித்தான். கங்கைச் சமவெளியில் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த பறவை இது"

1935 ல் கடைசியாக இது தென்பட்டிருக்கிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மெல்ல மெல்ல இவை அழிந்து வருவதை அறிந்திருந்தார்கள்.  1896 ல் கொல்கட்டாவின் பறவைச் சந்தையில் இவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தனவாம். அறுபது ஆண்டுகள் கழித்து இவற்றைப் பிடிகவும் கொல்லவும் தடை விதிப்பதற்கு முன்பாகவே முழுவதுமாக இவை அழிந்து விட்டிருந்தன.

புல்வெளிகள், சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டதால் நீர் வாழ் பறவைகள் இம் மண்ணில் இருந்து மறைந்து விட்டன. (இந்த நிலை வேறெதற்கும் வர விடக்கூடாது...)

*********************************************************************
இயற்கை பாதுகாப்பு குறித்த பொன்மொழிகள் இவை :

இயற்கை முழு விதிகளையும் புரிந்து கொள்ளாமல் நாகரீக மனிதன் தன்னை உலகின் தலைவனாக கருதிக் கொள்கிறான்.  ஆனால் உண்மையில் அவன் இயற்கையின் குழந்தை   - டாம்டேல்

இந்த உலகம் மூதாதையரிடமிருந்து பெறப்பட்டதல்ல, வருங்கால சந்ததியினரிடம் இருந்து கடனாக பெற்றது  - ஆடுபன்.

********************************************************************
உலகில் மொத்தம் 54 இருவாச்சி (Hornbills)  இனங்கள் உள்ளன. (அழைப்பிதழில் உள்ள பறவை)  இந்திய துணைகண்டத்தில் 9 இனங்கள் வாழ்கின்றன. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 4 வகையான இருவாச்சிகள் வசிக்கின்றன. மலபார் சாம்பல் இருவாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்பவை. 


செம்பகம், பட்சி, சாம்பல் தலை வானம்பாடி(ashy-crowned sparrow -lark), தேன்சிட்டு, தையல்சிட்டு, வெள்ளை கண்ணி,சீல்காரப்பூங்குருவி(Malabar whistling thrush), குடுமிப்பருந்து(Changeable Hawk-eagle), ராசாளிப்பருந்து(Bonelli's eagle),செம்பருந்து, தவளைவாயன்,கரண்டிவாயன், மீன் கொத்தி,வண்ண நாரை, ஆல்காட்டி(Northern Lapwing),கொசு உண்ணான்...

(இன்னும் ஏகப்பட்ட பறவைகள், விலங்குகளின் புகைப்படங்கள், எல்லாம் தமிழ் பெயர்களுடன் இருந்தது சிறப்பு)

சில புகைப்படங்கள் :
புல்வெளிகளின் பயன் என்ன ?

மேற்கு தொடர்ச்சிமலையில் 1200 மீட்டருக்கு மேலுயற்ந்த இன்றும் மனிதர்களால் காயப்படுத்தப்படாத எல்லா சிகரங்களின் உச்சியிலும் வெறும் புல்வெளிதான் இருக்கும் அவை அற்ப புற்களல்ல மழை உச்சியில் பெய்யும் மழையை இந்த புற்கள் பின்னி பிணைந்த வேர்கால்கள் அப்படியே ஒரு ஸ்பாஞ்சு போல தேக்கி வைக்கின்றன. ஒரு மழை பெய்தால் அதை குறைந்தது ஒரு மாதத்திற்கு திவளையாக்கி புல்வெளிகள் வெளியிடுகின்றன. மாதம் மும்மாரி பொழிந்தால் அதை மூன்று நான்கு மாதங்கள் வரை தேக்கி வைத்திடும்  ஆற்றல் புல் வெளிக்கு உண்டு.

"குரங்குகளுக்கு பிரட் ,பிஸ்கெட் எல்லாம் அதுங்களோட உணவு இல்லை இவற்றை அவற்றிற்கு கொடுக்ககூடாது என்பதையும் அறிவுறுத்தி இருந்தார்கள்."

ஒரு பறவையின் புகைப்படம் எடுக்க பல மணிநேரம் செலவிட வேண்டியிருக்கும்.

இக் கண்காட்சியில் குழந்தைகளின் குதூகலத்தை பெரியவர்களிடமும் காண முடிந்தது.

இந்த கண்காட்சிக்கு பங்களித்த சுற்றுசூழல் ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள்,பாசமிகு நண்பர்கள்,ஆசிரியர்கள்,  மாணவ,மாணவியர்கள், இலக்கிய எழுத்தாளர்கள்,வனகாப்பாளர்கள் ...இன்னும் இன்னும் என பட்டியல் நீளுகிறது. ஒருங்கிணைத்த "ஓசை" யின் - இயற்கைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

மேலும் பல தகவல்கள் இந்த வலைபூவிலும் இருக்கு படிக்க வேண்டுகிறேன்.

Download As PDF

Monday, October 15, 2012

பாடும் பறவைகள் [Song birds]

பாடும் பறவைகளை பறவைகளில் சிறப்பு தன்மை உடைய பறவைகள் எனலாம். 4500 இனங்கள் உண்டு. இந்த லிஸ்டில் காகம், நைட்டிங்கேல், அண்டங்காக்கை பொதுவானவை.
சில பாடும் பறவைகள் :
காகம், ஃபிஞ்சஸ்(Finches), லார்குகள், மோக்கிங்(mocking), நைட்டிங்கேல் (nightingales),அண்டங்காக்கை(Ravens), சிட்டுகுருவி(Robins), த்ரஸ்ஷஸ்(thrushes), தூக்கனாங்குருவி(weaver bird), வாப்ளர் (Warblers)


பாடும் பறவைகளின் சிறப்பு அவற்றின் தொண்டையில் இருக்கும் குரல்வளை (Syringers) அமைப்பு. இவைதான் இவற்றிற்கு சப்தமெழுப்ப உதவுகிறது.  வுட் த்ரஸ் என்று சொல்லப்படும் பறவையின் குரல்வளை அமைப்பு பிரமாதமானது ஒரே சமயத்தில் இரண்டு விதமான பாடல்களைப் பாடும்.( டூ இன் ஒன் !)

பறவைகளின் மூளையில் இந்த பாடல்களை கிரகிக்க ஒரு சிறப்பு பகுதி உண்டு. இது ஒரு பாடலை கற்றுக்கொள்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்கிறது.

பறவைகள் ஏன் பாட வேண்டும் ?


பெரும்பான்மையான ஆண் பறவைகள் சப்தமிட்டுப் பாடும் இது பெண் பறவைகளை ஈர்ப்பதற்குத்தான் (விசிலடிச்சான் குஞ்சுகள் ! )
நன்றாக பாடும் ஆண் பறவையே பெண் பறவைக்கு பிடிக்கும்.

பறவைக் குஞ்சுகள் பாடுவதற்கு தந்தைதாய் பறவைகளைப் பார்த்தே கற்றுக்கொள்கின்றன.

சாதாரணமாக நீங்கள் பார்க்கும் பறவைகளில் 10 க்கு 8 பாடும் பறவை.

பாடும் பறவைகளின் ஆயுள் 5 வருடங்களே. பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக முட்டையிட்டு குஞ்சு பொறித்துவிடும். பாடும் பறவைகளின் முட்டை பத்து நாட்களில் குஞ்சு எட்டிப்பார்க்கும்.
பாடாத பறவை அல்பட்ராஸ் (Albatross) குஞ்சு பொறிக்க 80 நாட்கள் ஆகிறது.
வுட் த்ரஸ் (wood thrush)  மெலடியாகப் பாடும் புல்லாங்குழல் இசைப்பதைப் போல. அதன் பாடலை கேளுங்கள்..

ஸ்டார்லிங்ஸ் விநோதமான பறவை மற்ற பறவைகளின் குரல்களை காப்பியடித்து அப்படியே பாடும் திறமை கொண்டது.

இந்த காணொலியில் பழக்கப்படுத்தப்பட்ட பறவை கேட்கும் குரல்கள் சப்தங்களை ஒலித்துக் காட்டுகிறது. நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.Download As PDF

Saturday, October 13, 2012

காத்திருப்பு...சுகமானதா ?காத்திருத்தல் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்றுத்தருகிறது ;அனுபவங்களை தருகிறது.

காத்திருப்பதை பலரும் வெறுக்கின்றனர் ஏன்?. இதற்கு முக்கியமான காரணம் இது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. சலிப்பைத் தருகிறது. காத்திருத்தல் நேர விரயம் ; இப்படி பல காரணங்களை அடுக்குகிறார்கள் காத்திருந்தவர்கள்.

காத்திருத்தலை காலை எழுந்ததிலிருந்து தினமும் பல சமயங்களில் அனுபவிக்கிறோம்.

பஸ்-சுக்காக, ரயிலுக்காக,விமானத்திற்காக,டாக்டரிடம், ஏன் டாய்லெட்டிற்காகக் கூட காத்திருக்க வேண்டி இருக்கிறது. இண்டர்வியுவில் காத்திருத்தலே முக்கிய அவதானிப்பு.

இரண்டு நிமிட காத்திருத்தலை தவிர்த்ததினால் வாழ்க்கையின் பெரும் இழப்புகளை சந்தித்தவர்கள் உண்டு.  பல மணிநேர காத்திருத்தலினால் சாதித்தவர்களும் உண்டு.

சில நொடிகள் கூட காத்திருக்காமல் கம்யூட்டர் முன் பல "ஷிட்" போடுபவர்கள் உண்டு.

அதே போல சில நொடிகள் சிக்னலுக்கு காத்திருக்காமல் விபத்து எனும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது  சார்ஜென்டிடம் சிக்குபவர்களை தினம் தினம் பார்க்கலாம்.


எங்கேயும் "Q" தான். மொபைல் போனில் " யூ ஆர் இன் க்யூ" என்றாலே தரையை உதைப்பார்கள் ஒரு சிலர்.

ஜப்பானில் சுனாமி வந்தபோது வரிசையில் காத்திருந்து பொட்டலம் வாங்கி சென்றதை செய்தியாக போட்டார்கள் ஏன் நம்மவர்களுக்கு அதிசயமே "அப்படி ஒரு ஒழுங்கு, பொருமை "


எந்த காரியத்திலும் நாம் முதலில் நெகட்டிவாக சிந்திப்பதே காத்திருத்தல் கசக்க காரணம் என்று சொல்லலாம்.

என்ன சொல்றீங்க காத்திருத்தல் இனிக்குமா ? ஏன் இல்லை இதை தனது வருங்கால துணைக்காக காத்திருபவனிடமோ ;ளிடமோ கேளுங்கள் அந்த தவிப்பு அதன் பின் கிடைக்கும் சந்தோசத்தை அடுக்கடுக்காக சொல்லுவார்கள்.

குழந்தையின் பிறப்பிற்காக காத்திருக்கும் தாயின் சந்தோசம் பிரசவித்த பின் எல்லையற்றதாகிறது.  அது அவளுக்கு காத்திருத்தல் கற்றுக்கொடுத்த அனுபவம்.

ஓவியன்,இசைஞானி,கலைஞன்,கவிஞன்,விஞ்ஞானி,மாணவன்..நீங்கள், நானும் விரும்பும் மனப்பூர்வமான ரிசல்ட் வரும் வரை தான் உருவாக்கும் நிகழ்விற்காக காத்திருக் கிறான் ( ; காத்திருக்கிறோம்)

அப்படியானால் காத்திருத்தல் சுகமானது பின் ஏன் பல மன அலைக்கழிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது? .  அவரவர் மன பக்குவ நிலையை பொருத்ததே. வாழ்க்கையின் எக்ஸ்பீரியன்ஸே அந்த பக்குவத்தை நமக்கு அளிக்கிறது.  அந்த கஷ்ட சமயங்களில் இதுவும் கடந்து போம் என்றோ..?  இதுவும் நல்லதற்கே என்ற பாசிடிவ் எண்ணங்களை கைக்கொள்ள வேண்டும். எதையும் ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே...

சமீபத்தில் காத்திருத்தல் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அந்த அரை மணி நேரத்தை எப்படி போக்குவது ? என்ற எண்ணம் என் மனதில் சும்மா எதையும் சிந்திக்காமல் வேடிக்கை பார்பது கூட நம் மனதில் பல தாக்கங்களை அனுபவங்களை ஏற்படுத்துகிறதோ ?

இன்னும் நேரம் இருக்கிறதே என்று மிக மெதுவாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் டக் கென்று வண்டியை நிறுத்தத் தோன்றியது.

அது ஒரு பூங்கா நுழைவாயிலின்  முன் இருபுறமும் பெரிய  மரங்கள் அம்மரங்களில் பல வெளவாள்கள் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன இது கூட காத்திருப்பு தான் இரவில் தானே அவற்றிற்கு வேலை.

பள்ளிக்குழந்தைகள்  நுழைவு சீட்டுகளை வாங்கக் காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு வெயிலும் காத்திருத்தலும் ஒரு பொருட்டே அல்ல.

ஏனெனில் குதூகலமும்  ஆர்வமும் அவர்கள் மனதில். அக்குழந்தைகளின் குதூகலத்தை பார்க்கும் நாமும் அக்குழந்தைகளாக மாறிவிட ஏங்குகிறோம்.

பென்சன் வாங்கும் வயதானவர்கள் அந்த வெயிலிலும் ஓய்வில்லாமல் ஏதேதோ அரசு பாரம்களை எழுதிக்கொண்டும்,விவாதித்து கொண்டும் இருக்கின்றனர். ஏன் அவர்கள் ஓய்வெடுப்பதில்லை...

ரெப் வேலை செய்யும் இளைஞர்கள் போனின் அடுத்த காலுக்காக, உத்தரவுக்காக வெறுமனே அரட்டை அடித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காத்திருப்பு அவர்களுக்கு வேலை கொடுக்கிறது.

கார்ப்ரேசனில் ரோட்டை கூட்டி வேலை செய்யும் பெண்கள் மரநிழலில் ஓய்வெடுத்தபடி அடுத்த வேலைக்காக காத்திருக்கிறார்கள்.


ஒரு மொபைல் ஏடிஎம் வாகனம் கடந்து சென்றது. (டெக்னாலஜியில் எவ்வளவு முன்னேற்றம்)

சும்மா இருப்பதே சுகம் என சோம்பேறிகளும் ப்ளாட்பார ஓரங்களில் தூங்குகிறார்கள்.


ஒரு பைக்கின் முன் டூம் -விண்ட்ஷீல்ட் கண்ணாடியில் ஆங்கில வாசகத்தை செகுவேராவின் படத்தோடு எழுதி வைத்திருந்தான்.

 " ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால் 
அவருக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமெடுக்காதே 
அவருக்கு வாழ்க்கை 
அவற்றை தாண்டிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது."

இப்படி பல காட்சிகள் விரிந்தன. இந்த காத்திருத்தலும்
இதை எழுதவும் என்னை தூண்டியது.
நமக்கு பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கிறது காத்திருத்தல்...,

(ஒரு கவிதை )


விருட்சத்திற்காக... விதையும்;

மலர்வதற்காக..மொட்டும்,

தென்றலுக்காக...கொடியும்;

தூரலுக்காக... துளிரும்;

விடியலுக்காக... இரவும்

தாயிற்காக.. குஞ்சும்;

எசமானருக்காக.. நாயும்;

விரல் மீட்டலுக்காக.. வீணையும்;
.....காத்திருக்கிறது.

காத்திருப்பாயா ?...
எனக்காக...நீDownload As PDF

Friday, October 12, 2012

திமிங்கிலங்கள் [ whales ]


திமிங்கிலங்கள் [whales ] ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள். இது உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு. இவற்றில் 80 ரகங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அல்லது மோபி டிக் Sperm whale -Moby dick

மிகப் பெரிய மூளையும், அதிக பற்களையும் கொண்டது.   இது 20.5 மீட்டர் நீளம் வளரக் கூடியது. மூன்று கிலோ மீட்டர்களுக்கு ஒரு டைவ்.  கடலின் அதிக ஆழத்தில் வசிக்கும் விலங்கு(7000 அடி).  அதிக சப்தம் எழுப்பும். I U C N ( International Union for Conservation of Nature )ஆல் ஆபத்தான மிருகம் என வகை படுத்தப்பட்டுள்ளது.


Pilot whale பைலட் திமிங்கிலம் / [killer whale]


இதன் நடவடிக்கை சட்டென பார்ப்பதற்கு டால்பின் போல தோற்றம் தரும்.
டால்பின் இனத்தோடு சம்பந்தப்பட்டது. கப்பல்களை தொடர்ந்து நட்பு முறையில் பழக்ககூடியது. 15நிமிட அதி வேக நீச்சலில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஸ்கிவிட் களை தின்பதற்கு பாயும். அதே வேகத்தில் மூச்செடுக்க கடல் மட்டத்திற்கு மேல் வரும்.
வயதான பெண் திமிங்கிலங்களுக்கு இதுதான் வழிகாட்டி.

பறங்கி தலை திமிங்கிலங்கள் [melon headed whale]

இவற்றிற்கும் பைலட் திமிங்கிலங்களுக்கும் தொடர்பு உண்டு. கடலில் பரவலானது. அவ்வளவு சுலபமாக பார்க்ககூடியது அல்ல ஏனெனில் கடலின் ஆழத்தில் வசிக்ககூடியது. அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும்  இதை பறங்கி தலை திமிங்கலம் என்கின்றனர். குடும்பமாக வசிக்ககூடியது. இதன் கூட்டத்தின் எண்ணிக்கை ஏறக்குறைய 100.

Bow head whale -Baleen

படகுதலை திமிங்கிலம். 200 ஆண்டு காலம் உயிர் வாழக்கூடியது நீண்ட பெரிய வாயை கொண்டது. 136 டன் எடை கொண்டது. நீலத்திமிங்கிலத்திற்கு அடுத்தபடியாக பேசப்படுவது. ஆர்டிக் கடற்பகுதியில் வசிப்பவை. உணவுகளை பற்களில் வடிகட்டி விழுங்கும் இந்த பற்கள் அமைப்பை ஆங்கிலத்தில் பேலென் என்கிறார்கள்.

Fin whale -Baleen

மீன் துடுப்பு திமிங்கிலம் 27 மீ நீளம் வளரக்கூடியது போலார் கடற்பகுதி மற்றும் பெரும்பாலான கடல் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது அருகிவரும் கடல் விலங்கு. 85 - 95 வருடங்கள் உயிர் வாழும். இதில் சிலவகை 140 ஆண்டுகள் வாழும்.


திமிங்கிலங்களுக்கும் மீன் இனத்திற்கும் சம்பந்தம் கிடையாது. மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள் இவை வெப்பரத்தப் பிராணிகள். மீன்களுக்கு செதில்கள் உண்டு. இவற்றிற்கு கிடையாது.  இவற்றிற்கு நுறையீரல் உண்டு. குட்டி போட்டு பாலூட்டுபவை.

ஒலியை கிரகிக்கும்(எக்கோ லோகேசன்) சிறப்பான உணர் உறுப்புகள் உண்டு இவற்றை கொண்டு கடலின் ஆழம் திசை இவற்றை கணிக்கிறது. புத்திசாலிகள். வடதுருவப்பகுதியில் வசிப்பவை குளிர் காலங்களில் நிலநடுக்கோட்டு பிரதேசங்களுக்கு இடம் பெயர்கின்றன. இதன் உடலமைப்பு கடும் குளிரையும் தாங்கக் கூடியது.

தூக்கத்தில் பாதி மூளை விழித்திருக்கும். இது ஆட்டோமேடிக்காக கடலின் மேல் தளத்திற்கு மூச்செடுக்க வந்து செல்ல உணர்ந்தும்.

நீலத்திமிங்கிலம் 30 மீட்டர் நீளம்(சரசரியாக 100 அடி) உடைய உலகின் பெரிய விலங்கு இதன் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.

நீலத்திமிங்கிலத்தின் இதயம் 600 கிலோகிராம் இருக்கும் இதன் இதயம்  நிமிடத்திற்கு பத்து தடவை மட்டுமே துடிக்கும் என்பது ஆச்சர்யமானது.

பிறக்கும் போதே குட்டி நீலத்திமிங்கிலம் 3 டன் எடையுடன் 9 மீட்டர் நீளம் இருக்குமாம். தினமும் 200 லிட்டர் தாய்பால் குடித்து நாளொன்றுக்கு 90 கிலோ சதை போடும். நீலதிமிங்கிலதிற்கு ஒரு நாள் இயக்கத்திற்கு, 1.5 மில்லியன் கலோரி சக்தி தேவைப்படுகிறது (மனிதர்களுக்கு 2500 கலோரி ! )


ஆண் ஹம்பேக் திமிங்கிலங்கள் பாடக்கூடியது. நீண்ட நேரம் சப்தமிட்டு பாடும்.  இதன் ஃபிரிகுவன்சி  20 முதல் 9000 ஹெட்ஸ் கொண்டது. அதாவது பியானோவின் மீச்சிறு நாதம்  போலவும் வெளிப்படுத்தும்.
190 decibels சப்தம் பல ஆயிரம் மைல்களுக்கு கேட்கும். ஒன்றுகொன்று ஒலி சமிங்சைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக (மைக்ரேசன்) 20,000 முதல் 30,000 கடல் மைல்கள் பயணிக்கும். நீலத்திமிங்கிலங்கள் உலகையே வலம் வந்து விடுகின்றன.

உலக திமிங்கில பாதுகாப்பு அமைப்பு 1986 முதல் திமிங்கிலங்களை கொல்வது தடைசெய்தது. ஆனாலும் தொடர்ந்து இவை வேட்டையாடப்படுகின்றன. அண்டார்டிக் பகுதியில் 1963 சர்வேயின் படி 2,50,000 இருந்தன இன்று சில ஆயிரம் மட்டுமே உள்ளன. 17 - 18 ஆம் நூற்றாண்டுகளில் இதன் கொழுப்பு எண்ணையில் விளக்கு எரித்தார்கள்.

உணவுக்காகவும் கொழுப்பு எண்ணெய், எழும்புகளுக்காகவும் வேட்டையாடப் படுகிறது. இவற்றின் அடுத்த எதிரி மனிதனால் கொட்டப்படும் அணு கழிவுகள், கடல் மாசு(எண்ணை கழிவுகள்), சுற்று சூழல் பாதிப்புகள் இவை இவற்றின் அழிவுக்கு காரணம்.

சில கடற்கரைக்கு ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வதன் காரணம் தெரிய வில்லை.

மேலும் சில வகைகள் : fin whale, sei whale, humpback whale, Bryde’s whale, and minke whale.
கில்லர் திமிங்கில முத்தம்

திமிங்கிலம் குறித்து சில கேள்விகள் :

ப்ளப்பர் [blubber] என்பது என்ன ?

திமிங்கிலத்தின் உடலின் மேல் தோல் மற்றும் உடலின் சதைப்பகுதிக்கும் இடைப்பட்ட  கொளுப்பு பகுதியே ஆங்கிலத்தில் ப்ளப்பர் என்கிறார்கள்.  இதன் உடலை வெப்பமாக வைத்துக் கொள்ளவும் நீரில் மிதக்கவும் உதவுகிறது.

திமிங்கிலங்கள் குடும்பமாக வசிக்குமா ?

பொரும்பான்மையான இனங்கள் குடும்பமாகவே வசிக்கின்றன. கூட்டங்கூட்டமாக வசிக்கும் இவற்றை ஆங்கிலத்தில் போட்ஸ் [pods] என்று சொல்கிறார்கள். இனப்பெருக்கத்திற்காக இடம் விட்டு இடம் பெயர்கின்றன [மைக்ரேசன்]

மீனின் வாலிற்கும் திமிங்கில துடுப்பிற்கும் (Flukes) வித்தியாசம் உண்டா ?

வடிவத்தைப்பார்த்தால் ஒன்று போலவே தோன்றும். மீன் முன்னே நீந்தி செல்ல வால் பகுதியை இடது வலதாக அசைக்கும். திமிங்கிலங்கள் மேலும் கீழுமாக அசைக்கும்.

(Blow holes) ஊது துளைகள் எதற்கு ?

திமிங்கிலத்தின் தலைபகுதியில் உள்ள ஊது துளைகள் திமிங்கிலங்கள் சுவாசிக்கும் உறுப்பு. நீர் மட்டத்தின் மேல் பகுதிக்கு வரும் திமிங்கிலன்கள் காற்றை ஊதி உறிஞ்சும் போது நீருற்று கிளம்பும். இதை அடையாலம் கண்டே வேட்டை ஆடுகிறார்கள். 
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)