Followers

Friday, March 30, 2012

அறிவியல் துணுக்குகள் (பகுதி 3) மற்றும் வௌவாள்கள் பற்றி அறிக...             மனித இரத்த வகைகள் A,B, AB, மற்றும் O நமக்கு தெரிந்தது தான். பூனைகளுக்கும் இதே போல் தான் உள்ளது. ஆனால் பசுவிற்கு ஆச்சர்யமூட்டும் பதில் 800 வகைகள் ! !             பெரும்பாலான நோய்கள் வைரஸால் ஏற்படுகிறது. அதுவும் பொதுப்படையான ஒரு வைரஸ் குரூப் ரினொ வைரஸ உலகம் முழுக்க பரவி உள்ளது.  இதில் குறைந்தது 180 வகை உண்டு. இந்த வைரஸால் பாதிக்காத மனிதன் குறைவு. குறைந்தது சளித்தொல்லையால் பாதிக்கப்படுகிறான். இதன் வாலாட்டம் செல்லாத இடம் அண்டார்டிகா உறை பனிப்பகுதி.

              பழக்கடைகளில் சுற்றி பறக்கும் ஈக்களின் முழு வாழ்நாள் ஒரு வாரம் அதற்குள் அது 500 முட்டைகளை ஒரே நேரத்தில் போட்டு தன் இனத்தை பெருக்கிவிட்டு போய் விடுகிறது.

             நீயின்றி நான் இல்லை நானின்றி நீ இல்லை !!  யார் அந்த நீ ?


மைட்டோகாண்ரியா "செல்களின் பவர் ஹவுஸ்" என அழைக்கப்படுகிறது. மனிதனின் கண்துடிப்பு, இதயத்துடிப்பு ஏன்? மனிதனின் அத்துணை இயக்கத்திற்கும் (ஸ்டாமினா) - சக்திக்கு சக்தி கொடுப்பதுதான் இதன் வேலை.

கிரேக்க மொழியில் இதன் அர்த்தம் எலாஸ்டிக் நூல் தொகுப்பு. இது தன்னுடனே mDNA என்ற ஸ்பெசல் டி.என்.ஏ வை வைத்தள்ளது.  1963ல் கார்ல்பென்ட் (carl Bend) இதை கண்டறிந்து பெயர் சூட்டினார். மைக்ரோ பயாலஜிஸ்ட் என தன்னை முதல் முதலில் அழைத்துக்கொண்டவரும் அவர்தான்.

    வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் !!!  பயந்தானா? வியந்தானா ?!!
          பாலூட்டிகளான வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் அதை பற்றி பல்வேறு கதைகள், திரைப்படங்கள், கார்டூன் திரைப்படங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தோ கற்பனையாக வோ பல பரிமாணங்களை கொடுத்திருக்கிறார்கள். பேட் மேன், பேட் உமென் என பல கார்டூன்கள். டிராகுலா (ரத்தக்காட்டேரி) என்றவகையில் பல திரைப்படங்கள் இதைபற்றி எழுத இன்னும் பல பக்கங்கள் ஆகும்.

           உலகத்தில் வௌவாள்கள் 1240 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு தொகுப்பாக பிரித்துள்ளார்கள் மைக்ரோ பேட்ஸ், மெகா பேட்ஸ்.   உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்து இருவகையாக பிரிக்கப்படுகிறது, 30 சதவீதம் பழந்திண்ணிகள் (வெஜிடேரியன்) 70 சதவீதம் பூச்சியுண்ணிகள்  (நான்வெஜிடேரியன்).  அவற்றில் சில இனங்கள் மீன்,தவளைகளை பிடித்து உண்பவை, சில ரத்தகாட்டேரிகள் ( வேம்பயர்ஸ்)  அல்லது இரத்தம் உறிஞ்சிகள் என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

          "கிட்டி" என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  றெக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள். தங்க கீரிடம் சூட்டிய - பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் றெக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.

            இந்த இனமானது இயோசீன் காலத்திலிருந்து அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத் தக்கது.

             இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்பின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

             அரிய வகை பழந்திண்ணி வெளவாள்கள் சாதாரணமாக கோவை மாநகரின் மையப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காணமுடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாக கூட்டமாக பறந்து திரிகிறது. குறிப்பாக நேரு ஸ்டேடியம் காந்தி பூங்காவில் இருக்கிறது. பழந்திண்ணி கொட்டை போடாத இடம் ஆர்டிக், அண்டார்டி பகுதி மட்டும் தான்.

            வௌவாள்கள் மீவொலிகளை (ULTRA SONIC) ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது. எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது மயிரிழையோ இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.

             அவை கண்பார்வை அற்றவை அல்ல ஆனால் சற்று மந்த பார்வை உடையவை. அதற்கு பதிலாக மீவொலிகளை எதிரொலிகளாக கிரகித்து இமேஜை தத்ரூபமாக அதன் மூளையினால் உணர முடியும்.  பறவைகளிடையே போட்டியினைத் தவிர்க்கவே அவை இரவில் உணவு தேடுகின்றன.  அதன் பயணம் சில சமயம் 800 கிலோ மீட்டர்களுக்கு தொடர்கிறது. சில வகை அல்ட்ரா வயலட் ஒளி சிதறல்களை உணரும் சக்தி படைத்தவை. கூட்டங்கள் வெவ்வேரானாலும் இவை சப்தங்களிலே உரையாடல் நிகழ்த்துகின்றன.

            இவை பூச்சி இனங்களை கட்டுப்படுந்தும் மாபெரும் காரணியாக திகழ்கிறது. உதாரணமாக ஆயிரம் வௌவாள்கள் கொண்ட ஒரு கூட்டமானது வருடத்தில் நான்கு டண் பூச்சிகளை சுவாகா செய்து விடுகிறது.

            இருட்டு மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வசிக்க விரும்புகிறது. இருந்தாலும் எல்லா வகைகளுக்கும் குகைப்பகுதிகள் தேவை இல்லை. பாழடைந்த  கட்டிங்கள்,  கோயில் மாடங்கள், பெரிய மரங்கள் இதன் வசிப்பிடங்கள்.

           பெரிய குகைகளில் வாழும் இவற்றின் கூட்டத்தின் மொத்த உறுப்பினர்கள் கிட்ட தட்ட ஒரு மில்லியன்.  இதன் பிறப்பு விகிதம் குறைவு தான்.  தாய் வௌவாள்கள் குட்டியை ஆறு அல்லது எட்டு வாரங்கள் நன்றாக பறந்து இறையைபிடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்.

          மழைக்காலங்களில் இவை வெளியில் பறப்பதில்லை அந்த சமயங்களில் இதன் மீவொலி எதிரொலிப்பதில் இவைகள் கிரகிப்பதில் பிரச்சிணை உண்டு என்பதால்.

        பலவகை பெயர்கள் : -  படிக்கும் போது இறுதியில் வௌவாள் என கூட்டிப்படிக்கவும்.


             கத்திமுனை வால், தனிமுனை வால், புகை கக்கும், உரிஞ்சியுண்ணும், புனல்காது, அகண்டறெக்கை, பேய்முக, எலிமுக,நியூஜிலாந்து -குட்டைவால், புல்டாக்(மீன்பிடிப்பவை), இலைமூக்கு, பொய்முக ரத்தக்காட்டேரி, கண்குலி முக, லாட முக, நீர்யானைமுக,கிட்டி பன்றிமுக, அந்திமாலை, இருட்டுமுக, இன்னும்பல..(இத்தனை ஆங்கில படங்களுக்கு கதை கொடுத்த ஜீவன்கள்)

            டெக்சாஸ், ஓக்லகோமா,(மெக்சிகன் நீளவால் வௌவாள்), வர்ஜினியா (பெரியகாதுடைய வௌவாள்) போன்ற அமெரிக்க மாகாணங்கள் வௌவாள்களை சின்னமாக கொண்டுள்ளன.

          (வௌவாள் புராணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். துணுக்கு எழுதப்போய் இதன் இறக்கை போல் நீண்டு கட்டுரையாகிவிட்டது )
Download As PDF

Saturday, March 24, 2012

சில அறிவியல் துணுக்குகள் (பகுதி 2)


கல்ஃப் வெப்ப நீரோட்டம்.

கடைகண் ஓட்டத்தை கண்டாலும் பெண்னின் மனவோட்டத்தை யாரறிவர்.
           
            ட்லாண்டிக் கடலின் உள்ளே செல்லும் ஒரு நீரோட்டம் தான் கல்ஃப் நீரோட்டம். இந்த நீரோட்டம் ஒரு வெப்ப நீரோட்டம். அது தான் ப்ளோரிடா முதல் வட யுரோப்பா வரையுமான தட்ப வெப்ப சுழ்நிலையையும் நிர்ணயிக்கிறது.  ப்ளோரிடா கடற்பகுதியில் தொடங்கி ப்ளோரிடா மற்றும் க்யூபா கடல் கணவாய் வழியாக பயணித்து செல்கிறது என ஆராய்ச்சி செய்தவர் அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ப்ராங்கிளின். இன்று வரை இது போன்ற நீரோட்டங்கள் குறித்த ஆராய்ச்சி மர்மமாக நீண்டு கொண்டே செல்கிறது.

            நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அதன் ஓட்டமானது எப்படி இருக்கும் என்றால் நீங்கள் புவியியலில் படித்த பெரிய ஆறுகள் மிசிசிபி, நைல், காங்கோ, அமோசான், வோல்கா, யாங்ட்ச் போன்றவற்றின் ஒட்டு மொத்த கூட்டணியாக ஓடிக்கொண்டிருக்கும் என்பது தான் அதன் பிரம்மாண்டம்.

           ( சரி கவிதைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ங்கரீங்களா?  அது தாங்க இந்த மாதிரியான கண்ணுக்கு தெரியாத எதையுமே கண்டு பிடிக்கும் விஞ்ஞானிகளால முடியாத ஒன்னு தான் பெண்ணின் மனசு )

            மூங்கில் இனத்தில் சில வகையினை ஆராய்ந்தார்கள். அவற்றில் சில வகை மூன்றடி வளர்ந்தது.  இதில் என்ன ? ஆச்சர்யம் என்கிறீர்களா ?  அந்த மூன்றடி வளர்ச்சி என்பது ஒரு நாளுக்கு.


இருவகையான கதிர்கள் (ray) இன்ஃப்ராரெட்(IR), அல்ட்ரா வயலெட் (UV)


             IR ஐ அதாவது முன்சிகப்பு (InfraRed) கண்டறிந்தவர் பெரெடரிக்ஹர்சல் (Frederic Herschel).  2000 ஆண்டுகள் கடந்த பின் புதிய கோள் - யூரேனசை கண்டுபிடித்தவர் இவர் தான்.

             IR ஆனது திருட்டை தடுக்கும் அலாரம், தீ தடுப்பு கருவி, போலீஸ் பயன்படுத்தும் தேடுபொறி களில் மற்றும் விளம்பர தொல்லை வரும்போது சேனல்கள் தாவி செல்ல பயன் படுத்தும் ரிமோட்- ல் பயன்படுத்த படுகிறது.

             அல்ட்ரவயலட் (UV) கண்டறிந்தவர் ஜோகன் ரிட்டர் (Johann Ritter) இவரும் ஹர்சலை பின்பற்றி கண்டுபித்த கண்டுபிடிப்பு இது.  இவர் ஆராய்ந்தது கெமிக்கல் துறையில்.   இன்றைய புகைப் படகலைக்கு முன்னோடி இவர் தான். இந்த UV ஆனது சோலார் பற்றிய அராய்ச்சி மற்றும் சூரிய சக்தியாக்கம்,
மைக்ரோ வோவண்கள், எக்ஸ் -கதிர் கள் மேலும் காமாகதிர் பற்றிய ஆய்வு இவற்றில் பயனாகிறது.

மேலும் ஒரு செய்தி IR  - UV கண்டுபிடித்த இருவரும் ஜெர்மானியர்கள்.

அனஸ்தீசியா எனும் மயக்கவியல் மருத்துவம்


               அறுவை சிகிச்சையின் போது வலியில்லாம இருக்க பல வகையான மருந்துகளை உபயோகிச்சாங்க.  சீனர்கள் உபயோகிச்ச டெக்னிக் அக்கு பஞ்சர் (உடம்புல சிறிய ஊசிகளை குத்தி வைப்பது). ஆதிகால ரோமன் மற்றும் எகிப்தியர்கள் மந்த்ரேக் எனும் மந்த்ரகோரா செடி வேர். ரொம்ப காலத்துக்கு இது தான் ஐரோப்பிய மருத்துவர்களின் வர பிரசாதமா இருந்தது.

            அப்புரம் கோக்கோ தலைய கடிச்சு சாப்பிடச் சொன்னாங்க. கோக்கோ திரவத்தை புண்ணின் மேல தடவுனாங்க.

           ராணி விக்டோரியா தனது 7ஆவது குழந்தை வலி இல்லாம பிறக்கனும்னு சிம்சனைக் கூப்பிட்டு கேட்டுகிட்டாங்க. அவர் குலோரோ பார்ம் உபயோகிச்சார் (1838).

           ஜார்ஜியா மருத்துவர் கிராஃப்போர்ட் ஈதர் உபயோகப்படுத்தினார் (1842). இத சரியா உபயோகிக்கம அபரேசன் பாதில நோயாளி எந்திரிச்சு கத்தினாங்க.

             ஆங்கில விஞ்ஞானி ஹம்ப்ரி டேவி 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இவைகளின் கலவையான நைட்ரஸ் ஆக்சைட் கண்டுபிடிச்சார். இது தான் சிரிப்பூட்டும் வாயு. இத கண்டுபிடிக்கறதுக்குள்ள அதோட பாதிப்புல பல தடவை மயக்கம் போட்டு விழுந்துட்டாரு.


 பேச்சடக்கி இருந்தாலும் இருக்கலாம் மூச்சடக்கி இருப்பது கடினம் தான். 

             மனிதனுக்கு பயோலெஜிக்கல் இறப்பு என்பது ஆக்ஸிஜன் இல்லாமல் மூன்று நிமிடங்கள் இருந்தால் இறப்பு நிச்சயம். ப்ரீ ஸ்டைல் நீச்சல் வீரர் ஒருவர் பிப்பின் பெராஸ் இவர் ஒரு உலக வெற்றியாளர்.   இவர் நீரினுள் மூச்சடக்கி புரிந்த சாதனை நேரம் 8 நிமிடம் 58 நொடிகள்.

Download As PDF

Wednesday, March 21, 2012

பழங்கால தமிழர்களின் பெருவழிப்பாதை - கொங்கு மண்டலத்தின் வரலாற்று சான்று. (highway of kongu culture / tamil historical evidence of commerce activity)

கொங்கு தலைநகரான கோவையிலுள்ள பேரூர், வெள்ளலூர் பகுதிகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இங்குள்ள கோவில்களே சான்று.
சர்வதேச தொடர்பில் இருந்த தமிழர் வரலாற்றில், கொங்கு மண்ணுக்கும் இடம் உண்டு. இதற்கு ராசகேசரி பெருவழி கல்வெட்டு முக்கிய சான்று.

கொங்குநாட்டின் வரலாற்றை உறுதி செய்வதில் பெருவழியும் ஒன்று. முக்காலத்தில் பெருவழி என்பது இக்கால நெடுஞ்சாலையைப் போன்றது. ராசகேசரி பெருவழி, அசுர மலைப் பெருவழி, சோழமாதேவி பெருவழி, வீரநாராயண பெருவழி, அதியமான் பெருவழி என 20 வழித்தடங்கள் வரை கொங்கு நாட்டில் இருந்துள்ளன.

இதில் சோழநாடு, சேர நாட்டை இணைப்பதில் ராசகேசரி பெருவழி முதன்மையானது. இது கரூரில் தொடங்கி சூலூர், வெள்ளலூர், பேரூர் வழியாக ராச கேசரி பெருவழி பாலக்காடு வரை சென்றிருக்கிறது. இந்த வழியானது பேரூரில் இருந்து சுண்டக்காமுத்தூர் அடுத்துள்ள தர்மலிங்க மலைக்கு மேற்கிலும், அய்யாசாமி மலைக்கு கிழக்கிலும் கடந்துள்ளது. அதாவது திமிலிமலை சொரி மலை இடையிலான பச்சை பள்ளத்தின் வழியாக சுண்டக்காமுத்தூர் - எட்டிமடையை இணைத்தது.பச்சை பள்ளத்தில், நீர் கணுவாய்' (சுனை) என்ற இடத்தில், அரிய கல்வெட்டு உள்ளது. வட்டெழுத்துத்தில் வடிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு வரை மக்கள் தொடர்பு இருந்துள்ளது. தற்போது வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த காடாக மாறியதால் கல்வெட்டின் அழிவை வெளியுலகம் அறியாமல் இருக்கிறது.மழை வெயில் என இயற்கை அழிவை சந்தித்து கல்வெட்டின் எழுத்துக்கள் உருவத்தை இழந்து விட்டன. மேலும் ஒருபகுதி உடைந்துள்ளது.

கோவையில் அழியும் நிலையில் உள்ள 1100 ஆண்டு பழமையான அரிய இக்கல்வெட்டை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


பேரூர் தமிழ் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சென்னியப்பன் அவர்கள் தமது குறிப்புகளில் இருந்து ஆதாரங்களுடன் விளக்கம்.

சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை பாடல் வரியில் "உல்குடைப் பெருவழி" என்று பெருவழி குறிப்பிடப்படுகிறது. வணிகம், மக்கள் போக்குவரத்து படையெடுப்பு ஆகியவற்றுக்கு பெருவழி பயன்பட்டது.

ஆதித்த சோழன் காலத்தில் 30 அடி அகலமுடைய ராசகேசரி பெருவழி (கி.பி..871 - 907) செப்பனிடப்பட்டுள்ளது. இவ்வழியாக, கிரேக்கர்களூம், ரோமானியரும் வந்து வணிகம் செய்திருப்பர்.
இன்றளவும் பேரூரில் பழங்கால நாணயங்கள் கிடைத்து வருகின்றன. கல்வெட்டு, வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்தால் எழுதப் பட்டது. தொல்பொருள் அதிகாரி மற்றும் மாணவர்களுடன் சென்று 35 ஆண்டுகளுக்கு முன் பார்த்துள்ளேன்.

"திரு நிழலும் மன்னுயிரும் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள்
மேலோங்கி பெருநிழல் போல்
வாழிய கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு"


என்று அந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருந்தது.

வெண்பாவால் அமைக்கப்பட்ட பாடல் இது. இதன் மூலம் மன்னருடன் அறிஞர், புலவர் போன்றோர் இருந்ததற்கான சான்று கிடைக்கிறது. ஒரு வழிக் கென்று கல்வெட்டு இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. கல்வெட்டு சிதிலமடையாமல் பாது காப்பது அரசின் கடமை.

(நன்றி தினமலர் - 19 மார்ச் 2012) Download As PDF

Monday, March 19, 2012

சில அறிவியல் துணுக்குகள்

பாப்பாய் (popeye) கார்டூன் எல்லோரும் பார்த்திருப்போம். அதில் பாப்பாயி வெரும் கீரைக்கட்டை சாப்பிட்டதும் மலையளவு சக்தி பீரிட்டு எதிரியை பட்டையை கிளப்புவார். இதே போல விஞ்ஞானிகளூம் கீரைக்கட்டில் இருந்து மின்சாரம் எடுக்க ஆராய்ச்சி செஞ்சாங்க. என்ன இந்த மின்சாரம் அளவில் மிகக் குறைவாக இருப்பது தான் ஒரு மைனஸ் பாய்ண்ட். அது சரி எப்படி கீரைக்கட்டில் இருந்து மின்சாரம் எடுக்கமுடியும் ?. கீரையில் இருந்து வேதிப் கூறுகளை பிரித்தெடுத்து அதை ஒரு சோலார் செல்லில் பொருத்தும் போது வினையூக்கியாக செயல்பட்டு ஒளியில் இருந்து மின்சக்தி கிடைக்கும்.
ஜெனரல் செர்மென் என அழைக்கப்படும் மரம் தான் உலகிலேயே மிகப்பெரிய வாழும் மரம். ஜெயண்ட் சீக்குயோவா மரவகையைச் சார்ந்தது. இது கலிபோர்னியா நேசனல் பார்க்கில் உள்ளது. இதன் உயரம் 274.9 அடி, குறுக்களவு 36 அடி 5 இன்சுகள் கொண்டது. இதிலிருந்து 5 பில்லியன் தீப்பெட்டிகளை செய்யமுடியுமாம். ( அப்படீன்னா ஆளுக்கொரு பெட்டி கிடைக்கும்)
ஏறக்குறைய ஒரு மிலியன் பூமிகளை தன்னுள் அடக்கக்கூடியது சூரியனின் அளவு. சூரியனின் குறுக்குவிட்டம் 1.4 மிலியன் கிலோ மீட்டர்கள், இது ஏறக்குறைய 109 மடங்கு பூமியின் குறுக்களவை விட பெரியது. ஒவ்வோர் செகண்டும் 4.5 பவுண்ட் சூரியனின் கதிர்கள் பூமியின் மீது மோதுகிறது.
மூளையின் எடையளவு மூன்று பவுண்டுகள் இதனுள் 100 மில்லியன் செல்கள் ஒன்றுக் கொன்று 500 டிரில்லியன் தொடர்புகளை ஏற்ப்படுத்தும். விசேலியஸ் இதை தனிதனி நியூரான்களாக பார்த்து ஆராய்ச்சி செய்தது பிரமிக்கத்தக்க விசயம்.
ஆப்பிள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சிகப்பு கலர் பழம். அப்புறம், நியூட்டன். யுனிவர்செலின் ஈர்ப்புத்தன்மை பற்றிய ஆராய்சியை ஆப்பிள் மரத்தின் மேல இருந்து நிலத்தில் விழுவதை பார்த்து கண்டு பிடிச்சார். எல்லாம் தெரிஞ்சது தான் சரி விசயத்துக்கு வர்ரேன், அந்த ஆப்பிள் ஒரு பெரிய சைஸ் பச்சை கலர்ங்க !
நமக்கு தெரிஞ்சு, பாஸில் (படிமம்) ங்கரது பெரிய டினாசரசின் எழும்புக்கூடு படிமம் தான். 2003ல் வட தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பாஸில்(fasils) ஆனது ஒரு பெரிய தாடையுடன் கூடிய பல்வரிசை கிடைத்தது. இதோட எடை அளவு 1500 பவுண்டுகள் (700 கி.கி) கொண்டது, எட்டு மில்லியன் வருசத்துக்கு முந்தியது.
நுண்ணுயிரியலில், 1999 ல் அறிவியல் ஆராய்சியாளர்கள் கண்டு பிடித்த பாக்டீரியம் தான் பெரிசா வளரக்கூடியது அதாவது இந்த வாக்கியத்தை முடிகரதுக்குள்ள 0.75 mm பெரிசா வளர்ந்திருக்கும். இதோட வளர்ச்சிய அளவெடுத்தம்னா, ஒரு சிறிய பிறந்த சுண்டெலி பெரிய சைஸ் நீலத்திமிங்களமா வளர்ந்தா எப்படி இருக்குமோ ? அது போல இருக்கும்.
அறிவியலில் செல் உயிரியலில் மட்டும் தான் கூட்டுப் பெருக்கம் என்பதன் பொருள் "ஒரே அம்சங்களுடன் பிளவு படுவது".
Download As PDF

Saturday, March 17, 2012

ஏன்,எதற்கு, எப்படி? (பகுதி 2)

தலையா ? பூவா ? டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது ?கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது.

அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள்.

டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?

ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமானது எப்படி ?


1564 - வரை பிரான்சில் புதுவருட கொண்டாட்டமானது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை நடந்தது. அதன் பிறகு அதாவது கிரிகோரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு அந்த கொண்டாட்டமானது ஜனவரி 1 க்கு மாற்றப்பட்டது. இந்த புது வருட கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய வேடமாக கோமாளி கட்டாயம் இருப்பார். பழக்கத்தை விடாமல் கொஞ்ச காலம் ஏப்ரல் 1 ல் புதுவருடம் கொண்டாடினர் இந்த பபூனோடு. எனவே இந்த தேதி முட்டாள்களின் தினமானது.

[ இதே போக்கில் நம் நாட்டிலும் அது தான் ...தமிழ் புத்தாண்டை இதே போல் ஒரு தினமாக மாற்றும் முயற்சியும் நடப்பது ... சுவாரசியமானது தான் !! ]

கருப்பு கண்ணாடி அணியும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?தொப்பியும் கருப்பு கண்ணடியும் அணிந்த தலைவர், கருப்பு கண்ணாடி மட்டும் அணிந்தவர்.
ஏன்? ஒரு எழுத்தாளரின் சின்னமும் தொப்பியும், கண்ணாடியும் தான் (தமிழ்வாணன்)
இப்படி கண்ணாடி அணியும் பாரம்பரியம் தொடர்கிறது.

13ம் நூற்றாண்டில் சீனர்கள் கருப்பு கண்ணாடியை கண்டுபிடித்தார்கள். இதை அப்போது நீதிபதிகள் மட்டும் பயன்படுத்தினர். அவர் இதை அணிந்திருக்கும்போது அவரின் கண் பார்வை எங்கு செல்கிறது அவரின் கவனம் என்ன என்பதை பிறர் அறியாமல் தவிர்க்க இது பயன்படுத்தப்பட்டது.

ஆரம்பகாலங்களில் எஸ்கிமோக்கல் இரண்டு கண்ணாடிகளை கண்களின் மீது கட்டிக்கொண்டார்கள் வெய்யிலில் இருந்து பாதுகாக்க அல்ல பனி பொழிவில் இருந்து கண்களை பாதுகாக்க.

தற்கால குளிர் கண்ணாடிகள் 1932-ல், அமெரிக்கர்களால் போர் விமான ஓட்டிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் இது அமோகமாக பயன்படுத்தப்படுவது தெரிந்தது தான். ஹீரோ தனியாக கருப்பு கண்ணாடி போட்டு வந்து கலக்கினால், வில்லன்கள் கூட்டமாக போட்டு மிரட்டுகிறார்கள். Download As PDF

Tuesday, March 13, 2012

புது வீட்டிற்கு வந்த விருந்தாளி ! (கதையாக்கம் : கலாகுமரன்)    மாலை சூரியன் சுட்டெரிக்கும் தன் கோபக் கனல்களை சுருட்டிக் கொண்டிருந்தான் பால் வெள்ளை முகங்காட்டிச்சிறித்த நிலவின் அந்த அந்தி மாலைப்பொழுதில் ஓய்வாக பால்கனியில் அமர்ந்திருந்தேன்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்விற்கு என் மனைவியும் மகளும் சென்றிருந்தார்கள்.

எதிரில் இருந்த அந்த சிறிய மரத்தில் இரு குருவிகள் கீச் கீச் என மாறி மாறி கூப்பிட்டுக் கொண்டிருந்தது, என் நினைவுகளை பின்னோக்கி தூண்டியது.

ஊரின் சந்தடிகள் சற்று குறைந்த தூரத்தில், பல வித மரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும், கரும்பு தோட்டங்களும் சூழ்ந்த ஒரு ரம்யமான சுழலில் ஆரம்பிக்கும் நிலத்தில் பலவித சிரமங்களுக்கிடையே என் தந்தை ஒரு சிறு இடத்தை வாங்கி போட்டார்.

அவர் மறைவுக்கு பின், அவரில்லாமல் அவரின் ஆசையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நானும் பலவித கஷ்டங்களின் இடையே ஏதோ ஒரு உந்துதலில் நமக்கும் ஒரு இனிமையான சொந்த இல்லம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் வீடு கட்ட ஆரம்பித்த அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் மின்னி மறைந்தது.

இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் இருக்கும். கட்டிய இந்த புது வீட்டிற்கு ஒரு வாரத்தில் வாடகை வீட்டை காலி செய்து சந்தோசத்துடன் குடி புகுந்திருந்தோம்.

என் மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும் அவளை ஒத்த வயதுடைய மனைவியின் அக்காளின் ஒரு சிறுமியும், மூன்று வயது குறைந்த மற்றொரு குழந்தையும் ஆக மூன்று பேரும் அந்த மாலை நேரத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பா..., அப்பா சீக்கிறம் வாங்கப்பா.. என்ற மகளின் குறல் கேட்டது.

என்ன ஏதோ பிரச்சனையா? ... என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தேன்.

மூவரும் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அருகில் சென்று பார்த்தால் ஒரு சிறு குருவி நிற்காமல் அமர்ந்திருந்தது கீச்... கீச் என கத்திய படி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.

அந்த குருவி பார்பதற்கு மிக அழகாக இருந்தது சிறிய குஞ்சு போல் தெரிந்தது. அதன் உச்சந்தலை முதல் வால் வரை கரு நீலமாகவும், கழுத்துப்பகுதியில் இருந்து உடல் முழுவதும் இள மஞ்சள் வண்ணமுமாக அந்தி மாலைப் பொழுதின் சூரிய ஒளியில் அதன் உடல் மின்னியது.

அந்த குருவிக்கு ஒரு காலில் எப்படியோ அடி பட்டிருக்கும் போல இருந்தது. அதனால் சரிவர நிற்க முடியவில்லை. சற்று நடுங்கியபடி, அது எங்களைப் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. அதற்கு எங்களை கண்டு எவ்வித அச்சமும் இல்லை. அடிபட்ட தால் தான் அந்த நடுக்கம்.

என் மகள் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி குருவியின் அருகில் வைத்தேன். சுற்றும் முற்றும் பார்த்து கீச்... கீச்... என கத்தியது.

குழந்தைகளை சற்று விலகி இருக்கச் செய்தேன். மெதுவாக அது தண்ணீர் குடித்ததை பார்த்து குதூகளித்தார்கள்.

சற்று நேரத்தில் சூரியன் தன் கிரணங்களை ஒழித்து வைத்துக் கொண்டான்.
இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து.

சிறுமிகள் மூவரும் அப்பா, அப்பா ப்ளீஸ் பா.. இதை நாமளே வளர்க்கலாம்...என கெஞ்சினர். குருவி இப்போது எங்கும் செல்ல முடியாத நிலைமை. நம்மை நாடி அடைக்கலம் வந்துள்ளது. என்ன… இருந்தாலும் காலையில் பார்க்கலாம்...சரி என்று அதை மெதுவாக கையில் பிடித்தேன். எவ்வித எதிர்ப்பும் அது காட்டவில்லை.

ஒரு சிறிய மரப் பெட்டி வீட்டில் இருந்தது அதன் ஒரு பக்கம் நடுவில் உடைந்திருந்தது. பெட்டியை தலைகீழாக கவிழ்க்க சொன்னேன். இப்போது அது பார்க்க ஒரு கதவு இல்லாத வீடு போல் இருந்தது. சிற் சில இடங்களில் பெட்டி உடைந்திருந்ததால் காற்றோட்ட வசதி இருந்தது.


ஹாலின் ஒரு ஓரத்தில் பெட்டியை வைத்து அதனுள் பாதுகாப்பாக குருவியை வைத்தேன் அது ஒரு புறமாக தவ்வி ஒடுங்கிக்கொண்டது. ஒரு கைப்பிடி அரிசியை அதன் அருகில் வைத்தேன். அதை கண்டு கொள்ளவில்லை. நீர் நிறைந்த கிண்ணத்தை சற்று தள்ளி வைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று சிறு புத்தகத்தை வாயில் போன்ற பகுதியில் வைத்து மறைத்தேன்.

இரவில் சாப்பிடும் போது மனைவி கேட்டாள் " இத வளர்க்க போறீங்களா? ..

“இல்லை...” என தலை அசைத்தேன்.

குழந்தைகள் விட வில்லை. " இல்ல நாம இத வளர்க்களாம்ப்பா...

அவர்களுக்கு தெளிவு படுத்தினேன். இதை வளர்க்க கூண்டு வேண்டும். அதில்லாம ஒரு குருவியை மட்டும் தனியா வளர்க்க மாட்டாங்க... சுதந்திரமா பறந்து திரியர அத கூண்டிலடைத்து வளர்ப்பது பாவம் இல்லையா..

ஏதேதோ பேசிப்பின் உறங்கச் சென்று விட்டோம்.

இரவின் சில நேரங்களில் அது கீச்..கீச்.. என கத்துவதும் சிறிது அமைதியாவதுமாக இருந்தது.

மீண்டும் காலையின் அதன் கீச் கீச் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. சிறிது நேரத்தில் குழந்தைகளும் விழித்துக் கொண்டனர்.

குருவியை கையில் மெதுவாக எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றோம். அப்பொழுது தான் கவனித்தேன் அதையொத்த மற்றொரு குருவி ஒன்று கீரீச்.. கீரீச்... என கத்திய படி சுற்றி சுற்றி பறந்தது. அந்த குருவி இதன் துணையாக இருக்கவேண்டும். ஆணா? பெண்ணா? தெரியாது.
இதை குஞ்சு குருவி என ஆரம்பத்தில் நினைத்தேனே. இதன் வளர்ச்சியே அவ்வளவுதான் என புரிந்து கொண்டேன்.

மெதுவாக தரையில் விட்டேன். அது இப்போது சற்று சுதாரித்து நின்றது.

இதை பறக்க ஊக்குவிப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிச் சுற்றி இதன் இணை கீரீச்...கீரீச்.. என கத்தியபடி பறந்தது.

நான் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த குருவியும் பறந்து தாழ்வான மரத்தின் கிளையில் சுதாரித்து அமர்ந்தது.

அது அங்கிருந்தே கீச்...கீச்.. என எங்களைப் பார்த்து கத்தியது. அது நன்றி சொல்வது போல இருந்தது.

இதற்கிடையில் புதரில் தவ்வி தவ்வி பறந்தது. அதனுடன் பாதுகாப்பாக இணைக்குருவியும் வழி நடத்திச் சென்றது. அதற்கு முழுவதும் குணமாக இன்னும் சில தினங்கள் ஆகும்.

ஒரு வித பரவச உணர்வு எனக்குள் ஏற்பட்டது. குழந்தைகள் குதூகளித்தனர் " போயிருச்சு....போயிருச்சு...என சப்பதமிட்டனர்.

அந்த சிறிய பறவைக்கு இவ்வளவு மன தைரியத்தை கொடுப்பது எது? தனது இனத்தை எப்படி பாது காக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை தேர்த்திக் கொள்ளும் பக்குவம். போராடி வாழ வேண்டும் என்ற உந்துதல். இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

இயந்திரத்தனமான இந்த உலகத்தில் சுயநலம் மிகுந்தவன் மனிதன் தான். எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொள்ளாமல் இருக்கிறான்.

*********************************************************************************
இக்கதையை அதீதம் தளத்தில் வெளியிட்டு சிறப்பித்த திரு.L K அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Download As PDF

Saturday, March 10, 2012

[காஃபி வித் கலாகுமரன் ] - காஃபி சுவையானது அதன் பின்னனி சுவாரசியமானது தெரியுமா?


காஃபி, கோஃபி, குளப்பி,காபி ... என எப்படி அழைக்கப்பட்டாலும் அதன் சுவையும் மணமும் மனிதனை ஈர்க்கிறது.

ஒரு பக்கம் நட்சத்திர அண்ணன் சன்ரைஸ் குடிங்க, நட்சத்திர தம்பி ப்ரு குடிங்கங்கிறார், காபி வித் அனுன்னு ஒரு பக்கம் அத விளம்பரப்படுத்திட்டே இருக்காங்க. சரி விசயத்துக்கு வருவோம்.

1542 ம் ஆண்டு வாக்கில் வைன் குடிப்பது தடை செய்யப்பட்டது எங்கு ?அரேபியாவில்.

வழிவழியாக கூறப்படும் ஒரு சம்பவம், ஆடுகளை வழி நடத்தி செல்லும் ஒரு அறிவார்ந்த அரேபியர் ஒரு விசயத்தை கவனித்தார். அதாவது செம்மறி ஆடுகள் புதர்களில் இருந்த பெரி போன்ற சில பழங்களை திண்ற பின் சுறு சுறுப்பாக இருந்தன.

அட பக்கிங்களா..?! என்று அந்த பழங்களை எடுத்து சுவைத்துப் பார்த்தார். ஆச்சர்யம் அடைந்தார் அவரும் சுறு சுறுப்பாகி இந்த குணம், மணம் நிறைந்த காஃபியை வெளி உலகத்திற்கு அற்பணித்தார்.

[...அப்ப இத மனுசங்க கண்டு பிடிக்கலையா ..? ]

இது கண்டறிந்த சுற்றுபுரப்பகுதி காஃபா (kaffa) அபிசினியாவின் ஒரு பகுதி.
இந்த இடத்திலிருந்து இந்த சுவையான பாணம் தயாராகி வந்தது.
பின்னர் மறுவி காஃபி என்று அழைக்கப்பட்டது.

இப்ப பாருங்க காஃபி டே ங்கராங்க, காஃபே கிளப்புங்கராங்க, வித விதமா யேசிச்சி கோல்ட், ஹாட், மைல்டு, ஸ்டிராங்கு, பில்டர், இன்ஸ்டன் காஃபி - னு பல வெரைட்டிங்க. கம்யூட்டர் காஃபேன்னு பேர் வைச்சு பிரெளசிங், சாட் பண்ணிட்டே காஃபி குடிக்கலாம்.

ஆண்களின் சட்டைப் பொத்தான்கள் (Buttons) வலது புறமாகவும், பெண்களின் சட்டைப்பொத்தான்கள் இடது புறமாகவும் தைப்பதேன் ?.

அழங்கார பொத்தான்கள் கி.மு 2000 ல் வழக்கத்தில் இருந்தது. ஆனால் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஆண்கள் தாங்களாகவே சுலபமாக போட்டுக்கொள்ளும் வகையில் மேல் சட்டையின் வலது புறம் பொத்தான்கள் வைக்கப்பட்டது
[பெரும்பாலும் வலது கைப்பழக்கம் உடையவர்கள் போலும்].

ஆனால் மேல் தட்டு அம்மணிகள் மட்டுமே மேல் சட்டை அணியும் நாகரீகம் இருந்தது. அவர்களுக்கு உடை அணிவிக்கும் பணிபெண்களுக்கு சுலபமாக இருக்க பொத்தான்கள் மேல் சட்டையின் இடது புறம் வைக்கப்பட்டது.

அது அப்படியே வழக்கமாகிடுச்சு.

[..சரி தான் நல்ல கண்டுபிடிப்பு.. ! ]

சூழ்நிலை சிரிப்பு ஒன்று


மின்சாரம் நின்று போயிருந்த இரவு நேரம் கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருந்தனர்.
பேட்டரி FM ரேடியோவில் சற்று தொலைவில் " இந்த சென்னை மாநகரிலே.... என்று கவுண்டமணியின் திரைவசனம் கேட்டுக்கொண்டிருந்தது.

நின்று போயிருந்த மின்சாரம் வந்தது.

மனைவி : என்னங்க வாட்சை வச்சுகிட்டு என்ன பன்னறீங்க .

கணவன் : கொஞ்சம் இரு, என்னோட வாட்சு அஞ்சு நிமிசம் ஸ்லோ சரியான டைம் செட் பன்னிட்டு இருக்கேன்.

ரயில்,பஸ்,விமானம் சரியான நேரத்திற்கு வருதோ இல்லையோ இந்த மின்சாரம் மட்டும் சரியான நேரத்திற்கு வருது, போகுது. Download As PDF

Friday, March 9, 2012

ஏன்,எதற்கு, எப்படி?

கணவன்கள் தங்கள் மனைவியை குறிப்பிடும் போது "சிறந்த துணை" ஆங்கிலத்தில் " Better Half " என அழைக்கிறார்கள் இந்த அடைமொழி தோன்றிய விதம் ?

இந்த சொற்றொடர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அரேபிய பூர்வகுடிகளிடையே ஒருவனுக்கு தூக்கு தண்டனை அறிவிகப்பட்டது. அவனுடைய மனைவி கூட்டத்தின் தலைவனிடம் முறையிடுகிறாள் " தனக்கும் அவனுக்கும் மணமாகி விட்டதால் இருவரும் தனி தனி கிடையாது ஓன்றே அதனால் அவனுக்குரிய சுக துக்கங்கள் தனக்கும் பங்கு உண்டு என்றும் தன்னையும் தண்டனைக்குள்ளாக்குமாறு மண்றாடினாள்" தலைவன் தலையை பீய்த்து கொண்டு யோசித்தான். குற்ற மற்ற இவளுக்கும் தண்டனை தர முடியாது என்று அவனுக்கு தண்டனை அவன் மனைவியோடு வாழ்வதே என தீர்பளித்தான். இப்படித்தான் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க தங்களோட மனைவியை " பெட்டர் காஃவ் " என அழைக்கத் தொடங்கினர்.

மெக்சிகன்கள் அமெரிக்கர்களை குறிக்கும் வார்த்தையான " கிரிங்கோஸ்" அடைமொழி எப்படி ஏற்பட்டது ?

19ம் நூற்றாண்டில் மெக்சிகன் -அமெரிக்கன் போர் முடிவடைந்த போது உள்ளூர் வாசிகள் அவர்களைக் குறிப்பிட Green grow the Lilacs என்று சங்கேதமாக பாடல்களில் பாடினர். இந்த வாக்கியம் green grow என சுருங்கி பின் Gringo என மறுவியது.

அப்போது அமெரிக்க படைவீரர்கள் அணிந்த சீருடையின் நிறம் பச்சை. ஸ்பானிய மொழியில் இந்த வார்த்தையின் பொருள் நம்மூர் பாசையில் சொல்வது போல "வெள்ளக்காரனுங்க".

ஒருவரை பாராட்டிப் பேசும்போது "இவன் வாயில் வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்" (born with a silver spoon in his mouth) என்று சொல்வது வழக்கம். இந்த வழக்கம் எப்படி ஏற்ப்பட்டது?

செல்வம் சேர்க்கும் அவசியமற்ற பிறப்பால் செல்வசீமான் என்று அர்த்தம். அக்காலத்தில் சிசுக்களுக்கு முதலில் பெயர் சூட்டி ஞான ஸ்நானம் செய்து ஆசீர்வதிக்கப்படும் போது அவர்கள் ஸ்பூனை உபயேகித்தார்கள் இது வசதிக்கு தகுந்தார்ப் போல் வெள்ளியாகவோ அல்லது தகரமாகவோ இருக்கும். இந்த நடைமுறை நாளடைவில் இவ் அடை மொழி பெற்றது.

(சிலபேர் அமாங்க நமக்கு ஸ்பூனே இல்லீங்க ! )

மோனாலிசா யார் இந்த புன்னகை இளவரசி ?

மோனாலிசா ஓவியர்கள் புகழும் ஓவியம், இதை தீட்டிய ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) இந்த ஓவியத்திற்கு அவர் சூட்டிய பெயர் லா கியாகொன்டா (La Giaconda) இது ஒரு மரப்பலகையின் மீது தீட்டப்பட்டது. பிளாரெண்டைன் வியாபாரியின் மனைவி தான் இந்த லிசா கெரார்டினி (Lisa Gherardini).

இந்த ஓவியத்தை எக்ஸ்ரே (x-ray) எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முடிவில் கண்டுபிடித்த ஒரு முடிவு மூன்று வெவ்வேறு விதமான வடிவமைப்பின் (poses) இறுதியில் இப்போது நாம் காணும் வசீகர புன்னகை இளவரசி உருவம் கிடைத்துள்ளது.

சரி ஏன் புருவம் வரையாமல் விட்டுவிட்டார்? இதற்கான பதில் அக்கால கட்டத்தில் பெண்கள் புருவத்தை மழித்துக்கொள்வது நாகரீகமாக இருந்தது.

Download As PDF

Wednesday, March 7, 2012

எண்ண அலைகளும் ஆழ்மன ஈடுபாடும்.

ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அது வெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை. அந்த விருப்பமானது நிறைவேற்ற முயற்சி தேவை. சரி முயற்சி செய்கிறோம் எப்போது சாத்தியப்படும்.

" விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்தியமாகிறது."

மின் அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.

கிருஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிதகோரஸ் என்ற கணித மேதை,  உலகில் நாம் காணும் அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொன்னார். இந்த உண்மையை அணு விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.

அணைத்து பொருள்களும் அலை வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.

எனவே வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும். ஆழ் மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக இருக்கிறது.

ஆழ்மனதை பெரிய மகான்களும் தலைவர்களும் மட்டும் தான் பயன் படுத்த முடியும் என எண்ண வேண்டாம் ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

நீண்ட நெடுங்காலமாக மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மழையை வரவழைக்க மேகராகக்குறிஞ்சி என்ற ராகத்தை வாசிப்பது பண்டைய தமிழகத்தின் ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது.

கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியை நம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

தனிமனிதனானாலும் சமூக மானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நனைபெறத் தொடங்குகின்றன.

மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணத்தை உருவாக்கி கொள்கிறபோது அந்த வேலை கிடைப்பதற்கான வழிவகைகள் தானாக தென்படும் அதற்காக மனதில் நினைத்தால் வேலை கிடைத்துவிடும் என பொருள் இல்லை.

எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   அதற்காண தீர்வு வழிமுறைகள் உங்களுக்கு தென்படும் அந்த வேலையை பெறுவதற்கான ஆற்றலை ஆழ்மனம் உங்களுக்கு கொடுக்கும்.

இதற்கு அடிப்படைத் தேவை 'image creation' தான் நீங்கள் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஈடுபடும் காரியங்கள் வெற்றி கண்டிருப்பதை நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு அணுகுகின்ற காரியங்கள் தோற்றுப் போய் இருப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.

உள்ளபடியே மனப்பூர்வமாக அந்த காரியத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று நீங்கள் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்பது தான் முக்கியம்.

குறிப்பு : இந்த இடுகைக்கு என்ன இமேஜ் வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது என் மகள் வரைந்து கொடுத்த ஓவியம் கிடைத்தது.

Download As PDF

Monday, March 5, 2012

ஹைகூ கவிதை பற்றி கவிகோ அப்துல் ரகுமான் எழுதிய கவியோடை

Untitled Document

உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது " ஹைகூ" தான். அது சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம். வடிவத்தை பார்த்தால் வாமணன் மாதிரி ஆனால்;  தாரை வார்த்தாலோ விசுக்கென்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபமெடுத்து மூவுலகையும் அளந்து விடும். திரிவிக்கிரமன் மாதிரி ஹைகூ' க்கும் மூன்றடிதான்.

ஹைகூ வைப் படிப்பதற்கு முன் ஒரு வார்த்தை ; கவிதையின் மூன்று அடிகளையும் ஒரே மூச்சில் விழுங்கி விடாதீர்கள். முதல் இரண்டடிகளை மெதுவாகப் படித்து நிறுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தான் மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும்.

இப்போது படியுங்கள்

உதிர்ந்து வீழ்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறது ...

ஓ! வண்ணத்துப்பூச்சி!

( கவிஞர் - மோரிடாகே)

அழகிய பொருட்கள் நிலையற்றவை;கணத்தில் மின்னி மறையக் கூடியவை ஆனால் அழகு என்ற தத்துவம் நிரந்தரமானது இந்த ஸென் புத்தமத தத்துவத்தையும் இந்த ஹைகூ கலைப்பொட்டலம் கட்டி நம் கையில் கொடுத்து விடுகிறது.

எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருப்பது கவிதையின் வேலை இல்லை கட்டுரையின் வேலை. ஒருகாட்சியை காட்டுவதோடு ஹைகூவின் வேலை முடிந்து விடும் அதில் உள்ள அர்த்தங்களை தோண்டி இறைத்துக் கொள்வது வாசகன் பொறுப்பு. இந்த வகையில் வாசகனும் கவிதையில் ஒரு கூட்டு படைப்பாளி.

எளிய உயிரினங்களையும் நேசித்து இணக்கமாக வாழ்வது ஜப்பானியரின் பண்பாடு.

யாராவது எனக்கு நீர் கொடுங்களேன்
என் கிணற்றைப் பிடித்துக் கொண்டது ...
பூத்த இளங்கொடி

<<கவிஞர் .சியோனியோ>>

இந்த அழகிய கிண்ணத்தில்
பூக்களை அடுக்கிவைப்போம்
அரிசி தான் இல்லையே!

<<கவிஞர். பாஷோ>>

என் வீடு எரிந்து போனதால்
நன்றாக பார்க்க முடிகிறது
உதிக்கும் நிலாவை

<< கவிஞர். மாஷாஹிடே >>

இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி தேடுகிறது...
செத்த மரத்தை !

<< ஜோசோ>>

நாற்று நடும் பெண்கள்
எங்கும் சேறு...
அவர்கள் பாட்டைத் தவிர

<<ரைஸான்>>

மெதுவாக என் தோளைப் பற்றிய
இறந்த நண்பனின் கை போல்...
இந்த இலையுதிர் கால வெயில் 

<<குசடா ஓ>>

ஆலய மணி மீது
ஓய்ந்து உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி 

<< பூசன்>>

சிறை பிடித்த விரல்களில்
தீபம் ஏற்றியது
மின் மினி

<< தைகி>>

ஒவ்வொரு ஹைகூவும் ஒரு மின் மினிதான்.

நன்றி : கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் "இன்றிரவு பகலில்" எனும் விமர்சன கவிதை  புத்தகம்.

Download As PDF

கின்னஸ் சாதனை புரிந்த புதுவை இளைஞர்

"சாதனை புரிய முதலில் எங்காவது தொடங்கு என்பார்கள் இந்த இளைஞர் பென்சில் முனையில் இருந்து தொடங்கி உள்ளார். எந்த ஒரு சாதனையும் எளிதாக கிடைப்பதில்லை கடினமான முயற்சி தான் வெற்றியை கொடுக்கிறது. இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவரைப்பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்."
கின்னஸ் சாதனை படைத்த புதுவை அண்ணாமலையின் படத்தை இளைஞர் மலரில் (தேதி : 3.3.2012 ) அட்டையில் வெளியிட்டு பாராட்டியுள்ளது " தினத்தந்தி"

பேச்சு, மூச்செல்லாம் ஓவியம்...ஓவியம் என்றிருக்கிறார் அண்ணாமலை. அந்த அதீத மோகம்தான் இந்தக் கல்லூரி மாணவரை ' கின்னஸ் சாதனை' என்ற சிகரம் ஏற வைத்திருகிறது.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. விஸ்காம் (காட்சித் தொடர்பியல்) முதலாமாண்டு பயிலும் அண்ணாமலையை அண்மையில் சந்தித்தோம். தூரிகை போலவே ஒல்லியாக இருந்த அந்த இளங்கலைஞர் பேசினார்...

சின்னவயதில் சுவற்றில் கரி கொண்டு கிறுக்குவதில் தொடங்கியது எனது கலை ஆர்வம். படிப்பையும் தான்டி எனது ஓவிய விருப்பம் இருந்தது. எனவே வீட்டில் இருந்து படித்தால் சரிவராது என்று புதுவையில் உள்ள ஆச்சாரியா சிக்‌ஷா மந்திர் பள்ளிக்கு எனது பெற்றோர் அனுப்பினர். அப்போது பிறர் குறைசொல்லாத அளவுக்குப் படித்த நான், ஓவிய ஆர்வத்தையும் விட்டு விடவில்லை.

முதல் வெற்றி : 6ம் வகுப்பில் படிக்கும் போது பிரபல தொலைக்காட்சி ஒன்று மாநில அளவில் நடத்திய காந்தியடிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. பெற்றோர் உள்ளிட்ட பிறரும் எனது ஓவிய ஆர்வத்தை அங்கீகரித்தது அப்போதுதான்.

ஆசிரியர் வழிகாட்டுதல் : 8ம் வகுப்பில் படிக்கும் போது ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் எனது ஓவிய தாகத்தை ஊக்குவிப்பவராகவும், வழிகாட்டியாகவும் வந்து அமைந்தார். பள்ளி நேரம் முடிந்ததும் அவரிடம் சென்று முனைப்போடு கற்றுக்கொண்டேன். எனது ஆர்வத்தை செதுக்கி சீர்திருத்தி தொழில் நுட்ப ரீதியாக மேம்படுதியவர்கள் அவரைத்தவிர செந்தில்குமரன், அச்சுதன், செல்வகுமார் போன்ற ஓவிய ஆசிரியர்கள்.

கவனிக்க வைத்த வெற்றிகள் : 10ம் வகுப்பில் புதுவை அரசு சார்பில் நடத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்போம்' என்ற கருத்தின் அடிப்படையிலான போஸ்டர் உருவாக்கும் போட்டியில் புதுவை அளவில் முதலிடத்தையும், மண்டல அளவில் இரண்டாம் இடமும் பெற்றது.

கின்னஸ் போட்டியில் முயற்சி மற்றும் வெற்றி : ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர் (நிர்வாக இயக்குநர் அரவிந்த், முதல்வர். மணி விஜயராகவன்) சார்பில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்குரிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நீளமான கார்டூன் தொடர் என்ற பிரிவில் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது.

இச்சாதனைக்கான நிபந்தனைகள் 40 மீட்டர் தாளில் 4 நாட்களுக்குள் வரைந்து முடிக்க வேண்டும். இருகையில் அமர்ந்த படியே வரைய வேண்டும். அப்படி இப்படி அசையக்கூடாது பிறருடன் பேசக்கூடாது, வேகம், நேர்த்தியுடன், ஸ்ட்ரோக் மாறக் கூடாது, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள்.

அனைவரது பாராட்டு மற்றும் உபச்சாரம் என்னை பெருமையில் மிதக்க வைத்தாலும் பொறுப்புச் சுமையும் உணர்ந்தேன். எனக்கு ஒருமாத கால விடுப்பு கொடுத்தார்கள் அப்போது உணவுக் கட்டுப்பாடு, கார்ட்டூன் பயிற்சி, பிசியோதெரபி என சவாலுக்குத் தயார்படுத்திக் கொண்டேன்.

குறிப்பிட்ட நாளன்று காலை 5 மணிக்கு சாதனைப்பயணம் தொடங்கியது.
பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்களும் திரண்டு நின்று வாழ்த்த தொடர்ச்சியான தாளில் கார்ட்டூன் கதைகளை பென்சில் கொண்டு தீட்டினேன். டுவிங்கிள் ஸ்டார் என்ற தலைப்பில் 10 கதைகளை தொடராக வரைந்தேன். ஒவ்வொரு கதையும் முடிவில் ஒரு நீதியைக் கொண்டிருக்கும். சும்மா கிறுக்கித்தள்ளவோ, நிறைய இடம் விடவொ முடியாது. ஸ்ட்ரோக் ஓரே மாதிரியாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட வி.ஐ.பி கள் வந்து வாழ்த்தினர். முன்னால் கின்னஸ் சாதனையாளர் பிரதீப்குமார் கின்னஸ் நிறுவனம் சார்பில் பார்வையாளராக வந்திருந்தார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டேன். பழச்சாறு மட்டும் அருந்தினேன்.

நேரம் செல்ல செல்ல கைவிரல்கள், மூட்டு, தோள்பட்டை எல்லாம் வலி பின்னியெடுக்க அரம்பித்தது. இருந்தாலும் எந்திர வேகத்தில், ஆனால் தரம் குறையாமல் வரைந்து கொண்டிருந்தேன்.

இரவு 11 மணி வரை வரைந்த நான், மறுநாள் 4 மணிக்கு எழுந்து பென்சில் பிடித்தேன். நேரம் செல்ல செல்ல என்னால் தாக்குப்பிடிக்க ரொம்ப கடினமாக இருந்தது. ஏ.சி அரங்கம் என்பதால் ஜலதோசமும் அவஸ்தைப்படுத்தியது. எனவே முயற்சியை முடித்துக்கொள்ளும்படி அனைவரும் கூற நான் முற்றும் போட்டேன்.

கின்னஸின் வரையறையையும் தாண்டி ஒன்றரை நாளில் 163. 17 மீட்டர் தூரத்திற்கு கார்ட்டூன் தீட்டிவிட்டேன். கின்னஸ் சான்றிதழைப் பெற்ற போது நான் பட்ட கஷ்டம் வலி எல்லாம் பறந்து விட்டது.

அடுத்த இலக்கு : விஸ்காம் படிப்பை முடித்து விட்டு திரைப்பட கலை இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன். எனக்கு பிடித்த திரைப்பட கலை இயக்குநர் சாபு சிரில்.

எந்த விதமான ஓவியங்கள் பிடிக்கும் : கார்ட்டூன் தவிர காரிகேச்சர், உருவப்படங்கள் வரைதல், ரியலிச பாணி ஓவியங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் எனக்கு இஷ்டமானவை. தடகளத்தில் மாநில அளவில் பல வெற்றிகளை பெற்றிருக்கிறேன்.

குடும்பம் குறித்து : நாவண்ணன் தனியார் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர். அம்மா விஜயலட்சுமி, தங்கை ராதிகா.

ஓவியம் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்ய முடியாது. ஓவியமே என்னை உலகுக்கு காட்டியது.

  • " மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம் "

Download As PDF

Friday, March 2, 2012

கவிதையில் ஒரு ஓவியம்ஒரு ஓவியன் ஓவியம் வரைய கற்று கொடுக்கலாம் ஆனால் ஒரு கவிஞனாயிருந்தால் ஓவியம் வரைவது எப்படி என்று கவியாலே காவியம் வரைவான். ப்ரெவர்ட்டின் கவிதைகளில் புகழ் பெற்ற ஒன்று " ஒரு பறவையின் சித்திரத்தை வரைவதற்கு' என்ற கவிதை.

இதோ அந்த கவிதை

முதலில் ஒரு கூண்டை வரை
திறந்த கதவோடு
பிறகு இந்தப் பறவைக்கு
ஏதாவது இனிமையாக
ஏதாவது எளிமையாக
ஏதாவது உபயோகமாக
வரை...

பிறகு திரைச் சீலையை
ஒரு தோட்டத்தில்
அல்லது ஒரு காட்டில்
ஒரு மரத்திற்கு எதிரில் வை
மரத்திற்கு பின்னால்
ஒளிந்து கொள்
பேசாமல்
அசையாமல்...

சில சமையங்களில் பறவை
சீக்கிரமே வந்து விடும்
சில சமயங்களில் அது முடிவெடுக்கப்
பல ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்
சோர்வடைந்து விடாதே
காத்திரு
தேவையானால்
நெடுங்காலம் காத்திரு

பறவை விரைந்து வருவதோ
மெல்ல வருவதோ
படத்தின் வெற்றியைப்
பொறுத்ததல்ல

பறவை வரும் போது
அப்படி வந்தால்
ஆழ்ந்த மெளனத்தோடு இரு

அது உள்ளே நுழைந்ததும்
தூரிகையால்
கதவை மெல்ல மூடு

பிறகு ஒவ்வொன்றாக
எல்லா கம்பிகளையும்
வர்ணத்தால் அழி
பறவையின் எந்த இறகிலும்
பட்டுவிடாத படி ... ஜாக்கிரதையாக

பிறகு மரத்தின் சித்திரத்தை வரை
பறவைக்காக
மிக அழகான கிளைகளாகத்
தேர்ந்தெடுத்து...
பச்சை இலைகள்
காற்றின் புதுமை
சூரியப் புழுதி
கோடை வெப்பத்தில்
பூச்சிகளின் ஒலி
இவைகளையும் வரை

பிறகு பறவை பாடுவதற்குத்
தீர்மானிக்கும் வரை காத்திரு
பறவை பாடவில்லை என்றால்
கெட்ட குறிதான்
சித்திரம் மோசமானது
என்பதற்கான குறி

அது பாடினால்
நல்ல குறி
நீ கையெழுத்து இடலாம்
என்பதற்கான குறி

எனவே
பறவையின் இறகுகளில் ஒன்றை
மிக மெதுவாகப் பிடுங்கு
சித்திரத்தின் ஒரு இலையில்
உன் பெயரை எழுது.

சுதந்திரமான ஆன்மப் பறவையை அடைத்து வைப்பதற்குத்தான் இந்த உலகில் எத்தனை வகைக் கூண்டுகள்! அதைப் பிடிப்பதும் அவ்வளவு சுலபமா? அதை ஏமாற்ற அழகான கிளைகளைக் காட்டலாம் ஓவியத்தில்தான். ஆனால் புத்தம் புதிய காற்றை, ஒளியை பூச்சிகளின் ஒலியை எப்படி வரைய முடியும்?

எல்லையற்ற வானத்தில் இச்சைப்படி பறந்து திரியும் சுதந்திரம், காற்றுக் கடலில் கவலையற்று நீந்தும் பரவசம், உயரத்தின் உல்லசமான கர்வம் இவைகளை அல்லவா? பறவையிடம் பாட்டாகப் பொங்கி வழிகின்றன! இவைகளை இழந்து விட்டால் பாட்டு ஏது? அப்படியே பாடினாலும் அந்தப்
பாட்டுக்குச் சிறகு இருக்குமா?

பாடும் 'பறவைகளை ஏமாற்றிப் பிடித்து வைக்க முயலும் புத்திசாலிகளையும், அவர்கள் சூழ்ச்சியில் சில நேரங்களில் ஏமாறிச் சிக்கிக் கொள்ளும் அசட்டுப் பறவைகளையும் ப்ரெவர்ட் எவ்வளவு அழகாகக் கேலி செய்கிறார்.

<<குறிப்பு : உண்மையான உலகத்தின் பிரதிநிதியாக 1930 களில் பிரான்ஸில் உரத்த குரல் எழுப்பியவர் ப்ரெவர்ட் (Prevert) >>

நன்றி : கவிகோ அப்துல் ரகுமான் அவர்களின் "இன்றிரவு பகலில்" எனும் விமர்சன கவிதை புத்தகம்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)