Followers

Wednesday, May 30, 2012

சில ஜோக்ஸ் : படித்தவை
ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான்

என்னாப்பா என்ன பிரச்சனை ?

கையில அடிபட்டிச்சு.

சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார்.

இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம்.

என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க.

இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது  எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன்.

(..மாத்தி யோசி.. ?! )
@@@@@@@@@@@@@@

நண்பரிடம் :
என் மனைவிக்கு கண்ணில தூசு பட்டுச்சு ஒரே ப்ராப்ளம் டாக்டர்கிட்ட 100 ரூபா
கொடுக்கவேண்டியதா போச்சு.

நண்பர் :

இது பரவாயில்லங்க என் வைப்புக்கு புடவை கண்ல பட்டிடுச்சு 1200 ரூபா அழவேண்டியதா போச்சு.


(வைப் இத படிக்க மாட்டாங்கற தைரியம் தான்.)

@@@@@@@@@@@@@@

டாக்டர் நடுத்தர வயதுடையவர் ஒருவருக்கு பகலில் ஒருமணி நேரம் சவாரி செய்தால் போதும் 90 நாளில் தொப்பை கரைந்து விடும் அதற்கு எங்கேயும் போக வேண்டாம் அவரிடமே ஒரு குதிரை இருப்பதாகவும் ஒரு மணிக்கு 100 ரூபாய்தான் பீஸ் கொடுத்தால் போதும் என்றார்.

பேஷன்ட் யோசிப்பதாக சொல்லி சென்று விட்டார். சில நாட்கள் சென்றது.

ஒரு நாள் இருட்டான இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தவர் தமது குதிரையை அந்த பேஷன்ட் ஓட்டிக் கொண்டுருப்பதை கண்டார்.

என்ன இந்த நேரத்தில் சவாரி செய்யரீங்க ?

இருட்டில் பேஷன்டிற்கு டாக்டரை அடையாளம் தெரியவில்லை.

இதோட ஓனர் ஒரு மாங்கா மடையன் பகல்ல ஓட்டரதுக்கு 100 ரூபாய் கேட்பான் அதான் ராத்திரி ரவுண்டு போரேன்.

சரி ராத்திரிக்கு எவ்வளவு ரேட் ?

பக்கத்தில வாங்க, இப்ப அவன் இருக்கமாட்டான் ஹி ஹி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒருவர் புதிதாக கார் வாங்கியிருந்தார்.

நண்பரிடம், சவுண்ட் கேட்டீங்களா என்னோட புதூ கார் ?

என்ன மாடல் ?

சரியா தெரியல  Z -ல ஸ்டார்ட் ஆகும்.

நான் கேள்வி பட்டவரைக்கும் பெட்ரோல்ல தான் ஸ்டார்ட் ஆகும் அது எப்படி  Z -ல.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாக்டர் என் ஹஸ்பன்ட கொஞ்சம் செக் பண்ணனும்

ஏன் என்ன பிரச்சனை ?

ரொம்ப நேரமா நா பேசினாலும் என்ன சொன்ன ன்னு என்னைய திருப்பி கேட்கிறார் ?

சரி விடுங்க, காட் அவருக்கு கொடுத்த கிப்ட். எல்லாருக்கும் கிடைக்குமா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வடநாட்டு கிப்ட் கடையில் பின்வரும் வாசகம் எழுதிருந்தது

உங்களுக்கு இங்கிலீஸ் தெரியலேன்னு கவலைப்பாடதீங்க நாங்க புரோக்கன் இங்கிலீஸ் பேசுவோம். 

[Never mind your English. We speak good broken English ]

இதேமாதிரி ஒரு பேக்கரியில்

இங்கு தரமான ஸ்நேக்ஸ் கிடைக்கும். (ஸ்நாக்ஸ் ஆ ஸ்நேக்ஸா ?)

@@@@@@@@@@@@@@@@@@@

கஸ்டமர் : உங்க ஹோட்டல்ல நல்ல வசதி இருக்கா ?

முதலாளி : நிச்சயமா சார். உங்க வீடு மாதிரி நீங்க பீல் பண்ணலாம் ?

கஸ்டமர் : அட கஷ்டகாலமே ! இங்கேயும் அதே பிரச்சனையா ? இதுக்கு நா வீட்லேயே தங்கிடறது நல்லது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பேங்க் மேனேஜரிடம் ஒருவர் :

என்னோட செக் பணம் இல்லைன்னு திரும்ப வந்திருச்சுன்னாங்க ஏன் உங்க பேங்கில பணம் இல்லீங்களா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீண்ட நாள் கழித்து சந்தித்துக் கொண்ட இரு பெண்கள்

ஹாயி உன்ன பாத்தா அடையாளமே தெரியல..

ஆமா உன் முகத்தை பார்த்தா அடையாளமே தெரியல. ஆனா எனக்கு இந்த கிளிப் பச்ச கலர் புடவை நல்லா ஞாபகம் இருக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டிரைவர் : சாரி சார் பெட்ரோல் போட மரந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாது.

ஓனர் : சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே வீட்டுக்கு விடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது என்ன ப்ளாக்ல பழைய ஜோக்கா போட்டிருக்கீங்க

ஒன்னுமில்ல உங்க ஞாபக சக்தி எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ண தான்.
ஹி. ஹி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Download As PDF

சுவடுகளைத் தேடி ( பகுதி 5)வரலாற்று சுவடுகள் |  பேரூர் கல்வெட்டுகள் | கொங்கு வரலாறு 


பேரூர் மற்றும் பட்டீஸ்வரர் கோவிலின் சிறப்பு கொங்கு வரலாறு பற்றியும் கல்வெட்டுகளின் ஆதரங்களின் மூலம் அறியலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கில் தெப்பக்குளத்தில் இருந்து அரசம்பலவானர் சன்னிதிக்கு செல்லும் ஒரு சந்து தடத்தில் இடிந்த பாழடைந்த கோவில் 2010ல் புதுபிக்கப் பட்டது. இது அழகிய சிற்றம்பலம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அடிபாகத்தில் எட்டு கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஐந்து மட்டுமே பூர்த்தியானவை.

இந்த கல்வெட்டுகளில் தானம் கொடுக்கப்பட்ட விவரங்கள் காணப்படுகிறது. இதில் குறிப்புனரப்பட்ட வார்த்தைகள் ராஜாத்தி மலசெம்பியன், கீழானடிவதி, திருவானை வாய்க்கால்,கண்ணாற்று சிவ பாத சேகர சதுர்வேதி மங்ககலத்துசபை, வீரகேரள விலாடகுல மாணிக்கவதி,அதிராஜராஜவாய்க்கால் முதலிய எல்லை பெயர்களும்.
வீரசமக்கர்கள்,அம்மணங்கார்,சேனாதிபதிகள், கடமை, எல்லை, அகவை, முதலிய பெயர்களும் காணப்படுகின்றன.

விக்கிரம சோழன் : 

இவன் கொங்குநாட்டை ஆண்டவன். சோழநாட்டு விக்கிரமன் அல்ல. இவனைப்பற்றி கொங்கு நாட்டில் 68 கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பேரூரில் இவனது 12 முதல் 27 ஆண்டுகள் வரையிலுமான ஆட்சியையும், வெள்ளலூரில் மூன்று ஆண்டு முதல் 18 ஆண்டு வரையிலும் சாசனங்கள் கிடைத்துள்ளன. இவனுடைய கல்வெட்டுகளில் பேரூர் பட்டீஸ்வரருக்கு அக்காலத்தில் திருவான் பட்டியுடையார் என்ற பெயர் வழங்கி வந்ததாக தெரிய வருகிறது.

வீரசோழன் :

இவனைப்பற்றிய ஒரே ஒரு சாசனம் பேரூரில் உள்ளது. இரு கொங்கும் ஆண்டவன், கலிமூர்க்கம்மன் என்ற பட்ட பெயர்களும் உண்டு. இவன் தான் உடுமலைப் பேட்டை தாலுக்கா, சங்கிராம நல்லூர் வீரசோளீசுரமுடையார் ஆலயம் கட்டியவன்.

வீரராஜேந்திர சோழன் : 

இவனைப்பற்றி 141 சாசனங்கள் கிடைத்துள்ளது. இவனது காலத்தில் ஆனையச்சு, சீயக்கி என்ற நாணயங்கள் வழங்கி வந்தன. இவன் காலத்து பேரூர் சாசனத்தில், பாண்டிய நாட்டு ஒரு வியாபாரி பாம்புணிக்கிழவன் அப்பன் என்பார், பேரூர் திருவான் பட்டியுடையாருக்கு சந்திர தீபம் இரண்டு தானம் செய்ததும், அதற்கு வேண்டிய பொருள் கோவிலில் சேர்த்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீரராஜேந்திரன் : 

இவரது பட்டப் பெயர் : கோனேரின்மை கொண்டான் இப்பெயரில் 55 கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.  அவைகளில் பேரூரில் மட்டும் மூன்று கிடைத்துள்ளது. இவன் காலத்து பேரூர் சாசனத்தில் ராஜதுரோகிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, கோவில் களுக்கு கொடுக்கப்பட்டது.  திரிபுவனசிங்கதேவன் என்பான் ராஜ துரோகி ஆனதால் அவனது சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றி, பேரூர் திருவான்ப்ட்டியுடையாருக்கு ராஜராஜசந்தி என்ற விழாவுக்காக உச்சி சந்து அமுதுக்காக அந்த ராஜதுரோகியின் புத்தூர், கோளூர், குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள பேரூர் நாட்டு விளைநிலங்களை எல்லாம் மார்கழி மாதம் 4ம் நாள் கொடுத்ததாக விபரங்கள் உள்ளன.

வரலாற்று சுவடுகள் தொடர்கிறது ...


பிற பகுதிகள் :


சுவடுகளைத் தேடி

சுவடுகளைத் தேடி(பகுதி 2)

சுவடுகளைத் தேடி(பகுதி 3)

சுவடுகளைத் தேடி(பகுதி 4)


Download As PDF

Friday, May 25, 2012

பெர்முடா முக்கோணம் ஒரு தொடரும் மர்மம்


The Bermuda Triangle - Facts and Myths


அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடா இவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [" சாத்தானின் முக்கோணம்" ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.

இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.

எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் "நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்" உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.

அனேக பத்திரிக்கையாளர்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் 500 ஆண்டுகளாக இதன் மர்மம் பற்றி கதை கதையாக எழுதியுள்ளார்கள். புத்தகங்கள் எழுதப்படுட்டுள்ளன. 1950 முதல் 1975 குள்ளாக மட்டும் சிறிதும் பெரிதுமாய் 428 கப்பல்கள் மாயமாய் மறைந்துள்ளன.

பல்வேறுவிதமான அனுமானங்களும் ஆராய்சிகளும் விடை தெரியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றில் சில ;

கடலினுள் மூழ்கிப்போன அட்லாண்டிஸ்

ஆர்கியாலஜிஸ்ட் (Edgar Cayce  )எட்கர் கெயிஸ் [1968] கடலில் மூழ்கி அழிந்துபோன அட்லாண்டிஸ் நிலப்பரப்பின் மலை முகடு பெரிய சுவர் போல பைமினிக்கு அருகில் அதாவது பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் இருப்பதாக கண்டுபிடித்தார்.  பாகாமாஸில் மேலும் பல தடயங்கள் அழிந்து போன அட்லாண்டிஸ் நகரத்தை பற்றி கூறுகிறது.  அட்லாண்டிஸ் நகரத்தில் இருந்தவர்கள் மேலான அறிவு மிக்கவர்கள் அவர்களிடம் சக்தி மிக்க கிரிஸ்டல் இருந்ததாகவும், இன்னும் இவை தான் சக்தி அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே ஏரியா 51 எனும் இபபகுதிக்குள் நுழையும் எவையும் (விமானம், கப்பல்கள்) எவ்வித சுவடும் இன்றி மறைந்து விடுவதாக நம்பப்பட்டது.


இப்பகுதி ஏலியன்ஸ் வந்து போகும் தள மாக செயல்படுவதாகவும் இங்கு எப்போதும் கண்ணுக்கு தெரியாத அதிக டிராபிக் இருப்பதாகவும் இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 கப்பல்களும் 20 விமானங்களும் காணாமல் போன தாகவும் 1000 பேர் கடந்த 500 ஆண்டுகளில் தொலைந்து போனதாகவும் U.S. நேவி மற்றும் கடலொர பாதுகாப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நீல நிற பெருஞ் சுழற்குழிகள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் ராப்மெக்கெரிகர், புரூஸ்கெனான் இதையே எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் (electronic Fog) என சொல்கின்றனர்.

1945ல ஃப்லைட் 19 எனும் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் இருக்கும் போது இப்பகுதியில் காணாமல் போய்விட்டது அதில் 19 பேர்கள் இருந்ததாகவும் இதை தேடி சென்ற 14 பேர் அடங்கிய குழு 5 டார்பிடோக்களும் அதே பாணியில் மறைந்து விட்டதாகவும் ஒரு ரிக்கார்டு இருக்கிறது. மேலும் இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்கு வேற்று கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கும் என்ற கற்பனையும் உலவுகிறது.

இப்பெரிய பரப்பில் நீர்மேல் பகுதிகளிலும் வானப்பகுதிகளிலும் மீத்தேன் வாயுக்கள் அடர்த்தி அதிகமா இருப்பதால் நீர் பரப்பை மிக லேசாக்கி இதனுள் செல்லும் கப்பல்களை மூழ்கடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது இதற்கான ஆதாரமும் இன்றி இக்கூற்றும் மறுக்கப்படுகிறது.

இப்பகுதியில் திசைமானிகள் ஒழுங்காண திசை காட்டுவதில்லை. சில இடங்களில் கர கரவென சுழழுவதாக கூறுகிறார்கள். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து பார்க்கப்ட்டதில்,  காந்த புல மாறுதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  பூமியில் இரண்டு இடங்களில் மட்டுமே காந்த புல மாற்றம் உள்ளது ஒன்று சரியான பூமியின் வடக்கு பகுதி மற்றொன்று காந்தபுல வடக்கு நேர் கோட்டுப்பகுதி. இந்த இடங்களில் மட்டுமே திசைகாட்டி [காம்பஸ்] தவறுகிறது. சக்திவாய்ந்த எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடலினுள் மெக்சிகோவில் தொடங்கும் கல்ப்நீரோட்டம் புளோரிடா கணவாயினூடாக வட அட்லாண்டிக் வரை செல்கிறது. இதன் அகலம் 40 முதல் 50 மைல் தொலைவு பரந்துபட்டது.  மேலும் இதன் வேகம் மிக அதிகம். தட்ப வெப்பநிலை மாற்றம் நிகழ்த்துவது இந்த வெப்ப நீரோட்டம்.
பெர்முடா முக்கோணப்பகுதியில் 28000 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் சுழல், 80 அடி உயரே எழும்பும் பிரம்மாண்ட அலைகள் இப்பகுதியினுள் நடப்பவகைகளை மறைக்கின்றன. சாட்டிலைட் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்துகிறது.

இப்பகுதியில் நிலையற்ற காலநிலைமாற்றம் நிலவுகிறது. கரீபியன் அட்லாண்டிக் கூம்பு புயல் எப்போது வேண்டுமானலும் சுற்றி சுழன்று வரும்.

மனித தவறுகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

எது எப்படியோ உலகத்தின் விடை தெரியாத மர்ம பகுதி இது. காலம் தான் பதிலளிக்க வேண்டும்.

இப்பகுதியில் மாயமானவைகளின் லிஸ்ட்
{பெரிய பட்டியலில் இருந்து சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறேன் அடைப்புகுறிக்குள் காணாமற்போன ஆண்டு }

282 டன் எடைகொண்ட மேரிசெலஸ்டி எனும் கப்பல் [1872]

USS சைக்ளோப்ஸ் 309 பயணிகளுடன் மாயமானது [ 1918 மார்ச் 4]

ராய் ஃப்கு மரு ஜப்பானியக்கப்பல் [1921]

டக்ளஸ் PC 3 மியாமி நோக்கி சென்றது இதில் 32 பேர் இருந்தனர். [1948 டிசம்பர் 28 ]

அமெரிக்க பிரிடிஸ் ஏற்வேஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம்[1948], மற்றும் ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் நோக்கி சென்ற விமானம் [1949]

SS மரைன் சல்பர் குயின் எண்ணெய் கப்பல் புளோரிடா வழியாக சென்றது இதில் 39 பேர் இருந்தனர் [1963 பிப்ரவரி 4]


Download As PDF

Thursday, May 24, 2012

குட்டி துணுக்குகள் !

இறந்த மனித உடலின் மூளையில் சிறு சிறு எலக்ட்ரிக்கல் சப்ளை கெமிக்கல் ரியாக்சன் ஆல் ஏற்படும் இது 37 மணி நேரங்களுக்கு நீடிக்கும்.

சாதிக்காய் (Nutmeg) மருந்தாக பயன் படுகிறது அதுவே உடலில் உட்செலுத்தப்பட்டால் விசம் (Poison).

நம் உடலில் சக்தி வாய்ந்த தசை நாக்குதான் !. [அரசியல் வாதிகளின் முதலீடு..!]

300 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை நீங்கள் படிப்பதாக கொண்டால் உங்கள் கண்கள் முக்கால் கிலோமீட்டருக்கு பயணம் செய்திருப்பதாக கருதலாம்.

பாம்பு மட்டுமே சட்டை உரிப்பதில்லை மனிதனும் தான் அவனின் தோல் லேயர்கள் 27 நாட்களுக்கு ஒருதடவை புதுப்பிக்கப் படுகிறது. அது போல் மொத்தமாக அல்ல சிறு சிறு பகுதிகளாக.

நமது உடல் குடல் பகுதியில் ஆசிட் உள்ளது தெரியும் அதே ஆசிடில் ஒரு ஆணியை போட்டுவைத்தால் கரைந்துவிடும்.

உலகில் நூற்றில் சில பேருக்கு மட்டுமே H H வகை ரத்தம்[பாம்பே ப்ளட் குரூப்]
உள்ளது. இந்த ரத்தம் உள்ளவர்களுக்கு எந்த ரத்த வகையும் சேராது. அதனால் ஆபரேசன் செய்வதற்கு முன் அவர்களின் ரத்தமே பாதுகாக்கப்படுகிறது.

சங்கை காதில் வைத்தால் சத்தம் சங்கிலிருந்து வருவதாக நினைக்கிறோம். ஆனால் காதில் பாயும் ரத்த ஓட்டத்தின் ஓசை தான் அது !.

2007 ஆம் ஆண்டுவரை குடல் வாலினால் எந்த பயனும் இல்லை என்றே கருதப்பட்டது.  உடல் நிலை சரியில்லாத போது அழிந்து விடும் நல்ல பாக்டீரியாக்கள் திரும்ப உருவாக உதவுகிறது.

கால் பாதத்தில் வெள்ளைப் பூண்டை தேய்த்தால் சிறிது நேரத்தில்  நம் சுவாசத்தில் இதன் வாசனையை உணர முடியும். சாறு தோலினுள் ஊடுருவி ரத்தத்தில் கலப்பதே காரணம்.

அலர்ஜியால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் வாய்விட்டு சிரித்தால் காய்ச்சல் குறைந்து விடும். [வாய்விட்டு சிரித்தா நோய்விட்டு போகும்...! ]

அநேக கனவுகள் 2 முதல் 3 செகண்டுகள் மட்டுமே நடக்கும். ஒரு ராத்திரியில் 7 கனவுகள் கூட வருவதாக சொல்கிறார்கள். அணைத்தும் ஞாபகம் இருப்பதில்லை.

சுயிங்கம் மென்று கொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் கண்ணீர் வருவதில்லை. [ சில சமயங்களில் விலை ஏறும் போது கண்ணீர் வருவது ? அது வேறு..!! ]

Download As PDF

Monday, May 21, 2012

நட்சத்திர குள்ளர்கள் பற்றிய விண்வெளி ஆய்வு


நட்சத்திரங்களை சாதாரண டெலஸ்கோபில் பார்க்க முடியும். எறிந்து போன நட்சத்திரங்களை நட்சத்திர குள்ளர்கள் அல்லது ஊதா குள்ளர்கள்[ Brown Drawfs ] என குறிப்பிடுகிறார்கள்.

இந்த குள்ளர்கள் நமது சோலார் சிஸ்டத்தின் அருகில் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள்.  இவைகள் ஒளிரும் தன்மை குறைவாக இருப்பதால் சாதாரண டெலஸ்கோபில் பிடிபடவில்லை.  நாசாவின் [ NASA ] வைஸ் [WISE - Wide field Infrared Survey Explorer ] தொலை நோக்கி மூலமே பார்க்கப் பட்டிருக்கிறது.  பின்னர் ஸ்பிட்சர், ஹப்பில் இவைகளால் உறுதிப் படுத்தப் பட்டது.   இவை எதனுடைய கட்டுப் பாட்டிலும் அதாவது ஈர்ப்பில் இல்லை. இதனுடைய குறைந்த எடை ஒரு காரணம்.

நட்சத்திர குள்ளர்கள் 9 முதல் 40 ஒளி ஆண்டு தொலைவில் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள்.

நட்சத்திர குள்ளர்கள் இதுவரை 100 கண்டறியப்பட்டுள்ளன.
சூரியனுடைய மேல் பகுதியில் வெப்பம் 9940 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள்.

நட்சத்திர குள்ளர்கள் மூன்று வகையாக பிரித்துள்ளார்கள்.
அவற்றில் 6 மிகக்குறைந்த வெப்பநிலையில் இருப்பதாக அதாவது 80 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள் இவை Y- Drawfs முதல் வகை.  இரண்டாவது வகை L - Drawfs  அதிக வெப்பம் 2600 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள்.  மூன்றாவது வகை L - Drawfs  வெப்பம் 1700 டிகிரி ஃபாரன்ஹீட்டுகள்.

இந்த குள்ளர்களின் ஆராய்ச்சி இன்னும் பல அண்டத்தின் ரகசியங்களை விளங்ககிட உதவும்.
நட்சத்திரம் குள்ளனாக உருமாற்றம் எப்படி ?,
குறிப்பாக இவைகளை ஒத்த பிரம்மாண்ட கோள்களின் ஒப்புமை.
ஈர்ப்பு தன்மை இப்படி பல கேள்விகளுடன் ஆராய்சி தொடர்கிறது...

Download As PDF

Friday, May 18, 2012

தத்துபித்துவங்கள் !!மு.கு : புரியலேனா ரெண்டு தடவை படிக்கலாம் ஏன்னு ? யாரும் கேட்கப்போறதில்ல.  படிச்சதும் மறந்திடுங்க ஏன்னா ? சிந்திக்கரது கஷ்டம்.


பெண்கள் எதிர்காலம் பற்றி கவலைப் படுகிறார்கள் கணவன் அமையும் வரை.
ஆண்கள் எதிர்காலம் பற்றி கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை.

வாழ்கையில் வெற்றி பெற்றவன் அதிகம் சம்பாதிக்க மனைவி செலவழிப்பாள்.
வாழ்கையில் வெற்றி பெற்றவள் அப்படி ஒரு மனிதனை கண்டுபிடிப்பதே.

ஆணுடன் மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் காதல் அதிகம் அவனை பற்றி புரிதல் இருக்கவேண்டும்.

பெண்ணுடன் மகிழ்ச்சியாக் இருக்க அதிக காதல் அவளை பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது.

பெண்கள் ஆணை திருமணம் செய்யும் போது அவன் மாறிவிடுவான் என நினைக்கிறாள் ... அவன் மாறுவதில்லை.

ஆண்கள் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என
நினைக்கிறான் .... அவள் மாறிவிடுகிறாள்.

கல்யாணமான ஆண்கள் செஞ்ச தப்ப மறந்திடனும்... ஏன்னா ஒரே விசயத்தை ரெண்டு பேர் ஞாபகம் வெச்சுக்க தேவையில்லை.

எந்த ஆர்கியூமென்ட்லயும் மனைவி சொல்லறது தான் கடைசி வார்த்தையா இருக்கும்.

எந்த ஆர்கியூமென்ட்லயும் கணவன் சொன்னது தான் முதல் வார்த்தையா இருக்கும்.

ஆண்கள் செலவழிப்பாங்க ரெண்டு ரூவா ஒரு ரூபா மதிப்புள்ள பொருளுக்கு.

பெண்கள் செலவழிப்பாங்க ஒரு ரூவா ரெண்டு ரூபா மதிப்புள்ள பொருள் வேண்டாங்கரதுக்காக.

பி.கு : படிச்சதும் என்ன தேடாதீங்க ஏன்னா? நா பக்கத்தில இல்ல.
இன்னொரு விசயம் மேல இருக்கரத எல்லாம் நா சிந்திக்கவே இல்ல.

Download As PDF

Tuesday, May 15, 2012

சகுணங்களும் மூட பழக்கவழக்கங்களும் !


குதிரையின் லாடம் ஆங்கிலத்தில் Horse shoe ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னம் எனச் சொல்லப்படுகிறது எப்போதிருந்து ? எப்படி ?

சில மூட பழக்க வழக்கத்தின் வடிவங்களில் இதுவும் ஒன்று. செயின்ட். டண்ஸ்டன் ஒரு கொல்லனாக இருந்த சமயத்தில் சாத்தான் ஒன்று அவரிடம் அதன் விலங்கு காலுக்கு ஏற்ற காலனி செய்ய சொல்லியது. வலியின்றி இதை செய்து தருவதாகவும் ஆனால் எந்த கதவின் மேல் லாடம் பொருத்தப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டினுள் நுழைய கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டாராம் இது மத்திய கால கட்டத்தில் நடந்ததாக நம்பப்படுகிறது.

அதனால் சாத்தான் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு கவசமாக அக்காலங்களில் கதவு சட்டங்களின் மேல் லாடம் அடித்து வைத்திருப்பார்கள்.  பயம் காரணமாகவும் மூடப்பழக்கம் ஏற்படும்.

பழங்காலத்து வீடுகளை நீங்கள் பார்க்கும் போது இது (லாடம்) உள்ளாதாவென்று பாருங்கள்.

உப்பு கொட்டுவது கெட்ட சகுணம் என்று சொல்கிறார்கள். இந்த சகுனம் உப்பு கண்டு பிடிக்கப் பட்டதிலிருந்தே இருக்கலாம். உண்மையில் உப்பு ஒரு அரிதான விலைமதிக்கப்பட்ட பொருள்களில் ஒன்று.  உப்பில்லா பண்டம் குப்பையிலே பழமொழியும் இருக்கு.   உப்ப கால்ல மிதிப்பது தலையில போடுவது கூடாது. தீ மிதி குண்டங்களில் இறுதியில் உப்பு போடுவதை,  தேர் மேல உப்பு பழம் வீசறத பார்த்திருப்பீங்க. புது வீட்டிற்கு முதலில் குடி போரவங்க வைத்து வணங்குவதில் முக்கியமானது உப்பு,மஞ்சள்,அரிசி[பால் காய்சுதல்].  கல்யாண சடங்காக உப்பு மஞ்சள் வாங்குவது.  உப்ப பொருத்தவரை எல்ல மதங்களிலும் அதுக்கு தனிமரியாதை இருக்கு.

டாவின்சியின் கடைசி விருந்து (Last supper) என்ற புகழ் பெற்ற ஓவியம் அதில் ஜுடாஸ் இருக்கர பக்கமா உப்பு கொட்டிருப்பது போல சிம்பாலிக்க வரைந்துள்ளார். இதில் உப்பு கொட்டிருக்கிர திசையை கவனிக்கவும். அதில நல்லவங்க வலது புறமும் கெட்டவங்க இடது புறமும் இருப்பது போல வரைந்துள்ளார்.

ஏணியின் கீழே நுழைந்து செல்வது கூடாது அப்படின்னு ஒரு மூடநம்பிக்கை கிருத்துவர்களிடையே இருக்கு.  ஒரு சுவற்றின் மேல சாத்தி வைக்கப்பட்ட ஏணிய கவனிச்சீங்கனா சுவரு ஏணி கீழ இருக்கர தரை மூன்றும் சேர்ந்தா ஒரு முக்கோணம் கிடைக்கும். முக்கோண பகுதியின் உள்ளே செல்லும் பாதை "விதியின் வழி" சாத்தானின் பாதை அப்படின்னு நம்பப்படுது. அந்த காலத்தில் உயிரை எடுக்கும் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை சாத்தி வைக்கப்பட்ட ஏணியின் கீழாக போகச் சொன்னாங்க.

எகிப்தியர்கள் முக்கோண பிரமிட் கட்டியதற்கு அதனுள்ள சக்தி வைப்ரேசனை அடைத்து வைக்க முடியும்ங்கர முக்கிய காரணம் இருந்திருக்கலாம்.

கடல் பகுதியில் பெர்முடா ட்ரையாங்கில் ஒரு மோசமான உதாரணம் இந்த ஏரியா உள்ள போன எதுவுமே விமானமாகட்டும், கப்பலாகட்டும் எதுவும் திரும்ப வரல மாயமா போயிடுச்சு. இந்த பகுதியில் இருந்த ஆதீத கதிர் வீச்சு அவற்றை மாயமாக்கிடுச்சு அப்படின்னு சொல்லராங்க ஆனா நிரூபிக்கப்படல.
[இதை பற்றி தனியாக பிறகு எழுதலாம் என்றிருக்கிறேன்.]

நம்பர் பதிமூன்று மோசமான எண்ணா கருதப்படுது. அதுவும் வெள்ளிக்கிழமை 13 மிக மோசமான தினமாம்.  வெள்ளி கிழமையில் நடந்த கடைசி விருந்தில் கலந்துகிட்டவங்க 13 பேர். நிறைய ஹோட்டல்களில் 13 நம்பர் அறை இருக்காது. வீட்டிற்கு யாரும் இந்த நம்பரை வைப்பதில்லை அப்படி இருந்தா அது பேய் வீடு. ஆனா இந்த 13 வைத்தே பல படங்களை எடுத்து பல கோடி சம்பாதிச்சவங்களும் இருக்காங்க. அந்த படத்தோட பூஜை 13 ஆம் தேதியா இருக்காதுன்னு நினைக்கிறேன்.

இறந்தவரின் சடலத்தின் முன் பொரி வீசி செல்வது. ஆவிகளுக்கு பிரியமானாதாம். இருட்டிய பிறகு தைப்பது கூடாது எப்ப மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்.  வெள்ளி அன்று நகம், முடி வெட்டக்கூடாது. குழந்தைகளை தாண்டிச் செல்லகூடாது.  தூங்குபவரை தாண்டிச் செல்லக்கூடாது.

இந்த மாதிரி நம்முன்னோர்கள் சில சடங்கு சம்பிரதாயங்கள நடைமுறைப்படுத்திருப்பாங்க. சிலவிசயங்கள அவை மூட பழக்கமா இருந்தாலும் சில பொருள்களுக்கு நம் முன்னோர் கொடுத்திருக்கும் மரியாதையை நம கொடுக்கரதுல எந்த தப்பும் இல்லைங்கரது என்னுடைய கருத்து.

பாலத்தின் மேல ரயில் போகும் போது அதன் கீழே கடந்து போகக்கூடாது. போகும் போது பூனை குறுக்கால கடந்து போனா, ஒத்தை பார்பனரை பார்பது கெட்டது. காரியம் ஊத்திக்கும்.கூட்டமா பார்ப்பது நல்லது. வெளியில் போகயில விதவையை பார்ப்பது கூடாது. கல் தடுக்கினா தண்ணி குடிச்சிட்டு போகனும். கழுதையை பார்த்தால் நல்லது.செவ்வாய், வெள்ளி காசு கொடுத்தா தங்காது. இந்த மாதிரியான மூட பழக்க வழக்கங்கல நம்பிக்கை வைக்கிறது சுத்த பேத்தல் வேஸ்ட்ங்கரது என்னோட கருத்து.

மதசம்பந்தமான மூட பழக்க வழக்கம் முதன்மையான இடத்தில் உள்ளது.  இன்னும் ஏகப்பட மூடப்பழக்கவழக்கம் இருக்கு ஒரு டிக்சனரியே போடலாம்.  டெக்னாலஜி வர வர இதோட பரிமாணம் அதிகமாகுது வெப்பசைட் போட்டு பரப்பரதும் உண்டு.  அணி அணியாய் உயிரை மாய்ச்சுகிட்டவங்க இருக்காங்க.

மூட பழக்க வழக்கம் ஊருக்கு ஊரு. நாட்டிற்கு நாடு வேறுபடுது.

கால ஓட்டத்தின் காரணம சில மூட பழக்க வழக்கம் காணாம போச்சு. அதே சமயம் புதுசு புதுசா கிளம்பரதும் உண்டு. அரசமரத்தடி விநாயகர் பால் குடிக்கிறார் இது மாதிரி. செய்யரத எல்லாம் செஞ்சிட்டு எதை தின்னா பித்தம் தெளியும்கர கதைதான்.

ஒருத்தரின் தனிப்பட்ட நம்பிக்கை வேற மூடநம்பிக்கைங்கரது வேறு.   தனிப்பட்ட நபரின் நம்பிக்கை ஏன் என்னன்னு தெரியாமா எல்லோரும் பாலோ செய்யும் போதுதான் மூடநம்பிக்கையா மாறுது.
சில பல மூட பழக்க வழக்கங்கள காரண காரியம் தெரியாம நாம கடைபிடிப்பது தேவையில்லாதது.

படிச்சவங்க பலரும் இதுமாதிரியான மூட பழக்கவழக்கங்கள விடாம இருக்கிறாங்க. பல பெரியார் வந்தாலும் தீராத வியாதி இது.

Download As PDF

Monday, May 7, 2012

அலெக்ஸாண்டிரியாவின் அழிந்து போன நூலகம் (கலைப்பொக்கிசம்)

பழையதும் : புதியதும் 

அலெக்ஸாண்டிரியா எனும் மிகப்பழமையான நகரம் 'அலெக்சாண்டர் தி கிரேட் "ஆல் நிர்மானிக்கப்பட்ட பல்கலைக் கழகமாக விளங்கிய ஒரு நகரம்.

இங்கிருந்த நூலகத்தில் படிக்கவும், அங்கு நடக்கும் பல சொற்பொழிவுகளை கேட்கவும் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணாக்கர்கள் 900 ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தனர்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பாரோகளின் கலங்கரை விளக்கம், பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய நூலகம் மற்றும் கருத்தரங்கு கூடம் இங்கிருந்தது.

உலகத்தின் ஒட்டுமொத்த காலாச்சார குவியலாக அலெக்ஸாண்டிரியா திகழ வேண்டும் என்பது வழிவழி வந்த ஆட்சியாளர்களின் விருப்பமாக இருந்தது. இது ஒரு துறைமுக நகரமாக இருந்ததால் வகை வகையான புத்தகங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். மொத்தம் ஐந்து இலட்சம் (5,00,000) புத்தகங்கள் இருந்ததாக அறியப்படுகிறது.

எறக்குறைய 385 A.D வாக்கில் இங்கு ஒரு சமயப் போராட்டம் வெடித்தது. கிருத்தவ பிஷப் தியோபிலியஸ் சராபிஸ் கோயில்கள் மற்றும் இந்நூலத்தின் பெரும் பகுதிகளை அழித்தார்.  சராபிஸ் என்பது கிரேக்க ரோமானியர்களின் பொதுவான கடவுள். அதன் பின் இந்நகரம் அப்படியே இருக்கவில்லை வளர்ந்தது. ஆனால் துரதிருஷ்டம் விடவில்லை.

A.D 642 ல் அரேபியப் படையெடுப்பால் அது மீண்டும் முழுக்க அழிக்கப்பட்டது. அத்தோடு இந்த பழமையான அறிவுகளஞ்சியம் ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டுவிட்டது.


மலைக்கவைக்கும் நவீன அலெக்ஸான்டிரியா நூலகம்( எகிப்து):

ஆனால் மனிதனின் முயற்சி மகத்தானது. மீண்டும் புதிதாக மெடிட்டேரியன் கடலை நோக்கிய நிலையில் பிரம்மாண்டமான நவீன நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மிலியன் புத்தகங்கள் உள்ளது. ஆண்டுக்கு 1.5 மிலியன் பார்வையாளர்கள் வருகிறார்கள். இன்னும் வியப்பான விசயம் அதில் செயல்படும் பலவிதமான சர்வீஸ்கள். இது நூலகம் மட்டுமல்ல மேலும் என்னென்ன இந்த கட்டிடத்தில் செயல்படுகிறது பட்டியல் இதோ:


[கிரானைட்டாலான சுற்று சுவரின் ஒரு பகுதி 150 விதமான எழுத்துருக்கள் உள்ளது. தமிழ் எழுத்தும் உள்ளது காண்க]

1. வளைத்தள தகவல் மையம்
2. ஆறு வகையான நூலகத் தொகுப்பு
[1.Arts, multimedia and audio-visual materials,
2.the visually impaired,
3.children,
4.the young,
5.microforms, and
6.rare books and special collections]


3. நான்கு வகையான மியூசியம்
[ 1.Antiquities,
2.Manuscripts,
3.Sadat and
4.the History of Science ]
4. பிளானட்டோரியம்


5. குழந்தைகளுக்கு அறிவியல் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள (EXploratorium)


6. ஒன்பது திரையரங்குகள்


7. விஸ்டா என அழைக்கப்படும் 3 D விசுவல் எபக்ட் அரங்கம்


8. எட்டு வகையான ஆராய்சி மையங்கள்


9. 15 வகையான நிரந்தர கண்காட்சிகள்


10. 4 ஆர்ட் கேலரிகள்


11. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமரக்கூடிய காண்ப்ரன்சிங் ஹால்.

(பி.கு : நாம் நீண்ட பெருமூச்சை மட்டுமே விடமுடியும். இங்கே ஒரே ஒரு நூலகம் கட்டிவைத்துவிட்டு மருத்துவமனையா ? நூலகமா ? என சண்டை போடுகிறார்கள். "ஒன்னுமே புரியல உலகத்திலே... ")
Download As PDF

Saturday, May 5, 2012

துணுக்குகள்

                                                                                               அந்தமான் நண்டுகள் !

பிரேட்ஸ் ஆப் கரீபியன் ஆங்கில திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு காட்சியில் பெரிய கப்பலை நண்டுகள் கடலுக்குள் இழுத்துச் சென்று சேர்க்கும். இது கொஞ்சம் ஓவர் கற்பனையாக இருந்தாலும் ஒரு உண்மை உள்ளது. அந்தமான் தீவுகளில் ஒரு வகை நண்டு் இருபது கிலோ எடையை சுமக்கிறது. 30 கிலோ எடையை இழுக்கிறது.
(வாரே..வா...இருங்க ஒரு போன் "ஆன் லைனில் கிடைக்குமா சூப் வைக்கனும் கேட்டுச் சொல்லுங்க")

                                                                      ஹிப்னாடிசம் :
ஹிப்னாடிசம் மூலம் ஒருவரை வசியப்படுத்தி அவரின் ஆழ்நிலை மனதில் உள்ளவற்றை அவர் வாயால் கூறக் கேட்கலாம் ஆனால் மனோவசியத்தால் ஒருவரை கொலை செய்ய தூண்ட முடியாது.
                                                                                                            கலிலியோ :
தொலைநோக்கியை கண்டுபிடித்து வான வெளியின் இரகசியங்களை உலகறியச் செய்தவர் கலிலியோ தனது இறுதி காலத்தில் (1637) பார்வையற்றவரானார் தன் நண்பருக்கு அனுப்பிய கடிதத்தில் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

"எனது பார்வை இனி திரும்பாது.அண்டத்தையும், வானத்தையும் அதிலுள்ள அழகை மக்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் பார்வை இழந்த படியால் சுருங்கி அடக்க மாகிப் போய் விட்டது. இயற்கையின் சித்தம் அதுவாயின் எனக்கு மகிழ்ச்சி தான்"

                                                            பழமை விநாயகர் :

ஆரம்ப காலங்களில் விநாயகர் உருவமானது இப்போதுள்ளது போல் தொப்பை இல்லாமல் இருந்தார்.
எப்படி இது போல் தான்.

                                                                         பசலி ஆண்டு :

தமிழில் பசலி ஆண்டு நடைமுறையில் உள்ளது. வட்டார வருவாய் துறையில் இந்த ஆண்டைத் தான் பின் பற்றுகிறார்கள். இது ஷாஜஹான் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. சரியாகச் சொன்னால் 1636 லிருந்து வழக்கத்தில் உள்ளது. பசலிக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்கும் தொடர்பு உள்ளது. பசலி ஆரம்பிக்கப் பட்டபோது ஹிஜிரா ஆண்டு 1046 எனவே பசலியும் இதே ஆண்டிலிருநது தொடங்கப் பட்டது என்கிறார்கள் இருந்தாலும் ஹிஜ்ரி 12 ஆண்டுகள் அதிகம்.

ஆங்கில ஆண்டில் 591 ஐ கழித்துவிட்டால் பசலி ஆண்டு கிடைக்கும்.

2012 ஆங்கில ஆண்டிற்கு பசலி ஆண்டு 1421

தமிழ் கல்வெட்டுகளில் மற்றும் ஓலைச்சுவடிகளில் சொல்லப்படும் யுகங்களின் வருஷங்கள்

கிருதாயுகம் - 17,28,000 திரேதாயுகம் - 12,96,000 துவாபரயுகம் - 8,64,000 கலியுகம் - 4,32,000    (தலை சுத்துதா ? ஹேட்ஸ் ஆப் முன்னோர் .)

                                                                                                                  இம்மியளவு :

கணவன் மனைவி இடையே சிலசமயம் அன்பு செலுத்துவது குறித்து சர்சை ஏற்படும். முக்கால் வாசி கணவன்கள் வசமாக மாட்டிக் கொள்வர். மனைவி இடித்து கூறும் கேள்வி கடுகளவாவது என்மேல் அன்பு வைத்திருக்கிறீர்களா? என்பதாக இருக்கும். இது பரவாயில்லை சிலர் இம்மி அளவுக்கு கம்பேர் செய்வார்கள்.  இம்மி அளவு எனபது ? 10,75,200 ல் ஒரு பங்கு தான்.                                                                                                                        அறுவையர் :
அந்தாளு செம அறுவைப்பா.. விடாமல் பேசுபவரை குறிக்க இப்படி சொல்லுகிறோம். ஆனால் 'அறுவை ' என்பதன் பொருள் 'ஆடை ' எப்படி?

தறிகள் மூலம் ஆடைக்கள் உருவாக்கப்படும் அந்த ஆடையை அறுத்து எடுப்பதை அறுவை என்றும் அந்த வேலை செய்பவரை அறுவையர் எனறும் சொல் வழக்கு இருந்தது. நெசவாளர்கள் அதிகம் வாழும் வீதிக்கு அறுவையர் தெரு எனவும் அழைத்தனர். (...ரொம்ப அறுத்திட்டேனோ? )

Download As PDF

Friday, May 4, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 4)


                           << சுவடுகளை தேடி பகுதி(3) படிக்க இங்கு சொடுக்கவும்>>

பேரூர் கோவில் பற்றிய குறிப்புகளை பெரிய புராணத்தில் ஆயர்கோன் கலிகாமர்), பேரூர் புராணம், மும்மணிக்கோவை பாடல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் (A.D) ராஜசிம்மவர்மன் என அழைக்கப்பட்ட நரசிங்க போதரன்யா -II பல்லவ ஆட்சியின் போது இக்கோயில் சீரமைக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் களிடையேயான உறவு திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிகான் பேரூர் விஜயக்குறிப்புகளில் அறியலாம். மேலும் "தீவட்டி சலாம் " எனும் மாலை பூசை அவர்களின் பெயரால் செய்யப்படுவதை எடுத்துக்காட்டாக காண முடிகிறது.

திருவாதிரை, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். இன்றும் கேரளத்தினர் ஒவ்வொரு ஆண்டும் "மகாலய அமாவாசைக்கு " வந்து நொய்யலில் முன்னோர்க்கு வழிபட்டு செல்கின்றனர்.

பேரூர் கோவிலை சிறப்பித்து பாடல்கள் எழுதிய சான்றோர் :

அவிநாசிக் கவிராயர் (திங்களூர் நொண்டி நாடகம்), கந்தசாமி சுவாமிகள்(பேரூர் கோவை மற்றும் ராமானந்த சுவாமி பிள்ளைத்தமிழ்), சிற்றம்பல கவிராயர் (பாசுரம் (Hymn) பேரூர் மற்றும் அவிநாசி கோவில்கள்), பெரும்புலவர் நடேச கவுண்டர்(மயில் விடு தூது), 12ஆம் நூற்றாண்டிணன் குணவீர பண்டிதர் (கலந்தை  -கிணத்துகடவு அருகில் உள்ள ஊர்) தமிழ் இலக்கணம் மற்றும் நேமிநாதம், நந்தி மாலை) குறிப்பிடத்தக்கவர்கள்.

பேரூர் கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யானையுரி போர்த்த மூர்த்தி :

ஒரு யானையை பிளந்து அதன் தலை மேல் ஒற்றை காலில் நிற்பது போன்றதோற்றம். நேர்த்தியான நீள்வட்ட வடிவம் யாணையின் நான்கு கால்கள் வெளி தெரிகிறது. நான்கு ஜோடி கைகளின் அபிநயம் நான்குவிதமான தேற்றப் பொழிவு. . விரல்களின் நக அமைப்பு, அணிந்துள்ள அணிகலன்களின் துள்ளியம் நம்மை வியக்க வைக்கிறது.

ஆறுமுகப்பெருமான் :

தமிழ் கடவுள் முருகன் மயில் வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள நிலை.மயிலின் வாயில் பாம்பு. மயில் இறகின் தெளிவு.  ஒரே வடிவமைப்பிளான அறு முகங்கள், ஆறு சோடி கைகள். ஒவ்வொரு கையும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.

ஊர்த்துதாண்டவர் :

பார்ப்பவர்களை ஒருகணம் ஸ்தம்பிக்க செய்யும் தாண்டவம் புரியும் நிலை. ஒவ்வொரு கையையும் மறைத்து பார்பதாக கற்பனை செய்தால் நேரிலே நடனம் புரியும் அற்புதத்தை உணரலாம். எட்டு திசைக்கு எட்டு சோடி கைகளின் அபினயம்.


நர்த்தன கணபதி :

எலி வாகனத்தின் மீது நடம்புரியும் தோற்றம்.


பிச்சாடனார் :

நளினமான அழகிய தேற்றப் பொழிவு.அக்னி வீரபத்ரர் :

கோபத்துடன் வாலேந்தி நிற்கும் தோற்றம்.


அகோர வீரபத்ரர் :

சூலாயுத்தால் முயலகனை குத்துவது போன்ற தேற்றம். தீயதை (தீவினை) அழிப்பதை நினைவு படுத்துகிறது.


ஆலங்காட்டு காளி :

சிலையின் இடப்புறம் நின்று நோக்கினால புன்முருவலும்.  வலப்புறம் நின்று நோக்கினால் ருத்ரமும் ஒருங்கே கொண்டு விளங்கும் காளி.

குறிப்பு :  இச்சிலைகளை நேரில் நீங்கள் பார்த்தால் முன்புரம் கம்பி வலை போட்டிருப்பார்கள்.  படத்தில் வலை இல்லா தோற்றம்.

Download As PDF

Thursday, May 3, 2012

ரஷ்யாவின் ராயல் பெல் ! பற்றிய சுவாரசிய தகவல்கள்.


மணிகள் மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த தொண்மையான இசைக்கருவி.  இந்தியாவின் பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.

சைனாவில்( கி.மு) 5ம் நூற்றாண்டு,எகிப்தில் கி.மு 2ம் நூற்றாண்டு,இத்தாலியில் கி.மு 4ம் நூற்றாண்டு என்கிறார்கள்.  கி.மு 4 ஆம் நூற்றாண்டின் கற்சிலைகளில் இருந்து அலெக்சாண்டர் போர் ரதத்தின் (charioteers)  குதிரையின் கழுத்தில் தொங்கும் மணிகளை பார்க்கலாம். இப்படி மணி ஒவ்வொரு மதத்திலும் உபயோகிக்கும் ஒரு புனிதமான, பாரம்பரிய இசைக்கருவி என்று சொல்லலாம்.

இங்கு ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் மணி பற்றிய தகவல் :
மாஸ்கோ கிரெம்லின் சதுக்கத்தில் உள்ளது உலகின் மிகப்பெரிய வெங்கலத்தால் (Bronze) ஆன காண்டா மணி. இதை ஆங்கிலத்தில் ராயல் பெல் எனவும் ரஷ்யனில் ஜார் கொலொகூல் (Tsar-Kolokol )      என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த மணி உடைந்த நிலையில் இது உருவாக்கப் பட்ட ஒரு பெரிய மேடைமேல் உள்ளது உடைந்த துண்டுடன்.

நெப்போலியன் போனபார்ட் இந்த மணியை வெற்றியின் சின்னமாக (1812) பிரான்சிற்கு கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும் அதிக எடை காரணமாக முடிவை கைவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

மணியடித்தால் மரணம் !

'மணியடிச்சா சோறு' இது கோவை வட்டார வழக்குச் சொல் (பஞ்சாலைகள் தொழிற்சாலைகள் அதிக அளவில் சுரு சுருப்பாக இருந்த காலத்தில் இது பிரபலம்) இது என்ன 'மரணம்' மேலே படியுங்கள்.

இதன் பிளாஸ்பேக்..." இது உடைந்த மணி பற்றிய டுபாக்கூர் கதை."

ஒருசமயம் இளவரசன் ஐவான் கிரெம்ளின் கோட்டைக்கு வருகை புரிந்தான்.வருகையை சிறப்பிக்க இந்த மணியை அடித்துப் பேரொலி எழுப்பச் செய்தார் மதகுரு.சத்ததில் பீதியாகி மயங்கி விழுந்துவிட்டான். செய்தி அரசனின் காதுக்கு எட்டியது கடுங்கோபம் கொண்ட அவர் மதகுருவின் தலையை துண்டிக்க செய்தார். அதோடுகூட இந்த மணியை உடைக்கச் சொன்னார்.
கொடுங்கோண்மையின் சாட்சியாக உடைந்த மணி உள்ளது.


சரி இந்த மணியின் வரலாறை பார்போம்.

ராயல் பெல்லை நிறுவியவர் (1735) ராணி அன்னா ஈவானோவ்னா. வடிவமைப்பாளர் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகேயில். 202 டன் எடையும் 20அடி குறுக்குவிட்டம்,உயரம் 22அடி தடிமன் 24 இஞ்சுகள். ஐரோப்பிய வடிவமைப்பு (பரோக் -   baroque) கொண்ட வெங்கலத்தாலான இதன் மீது வார்பு முறையில் பதிக்கப்பட்ட புனிதர்கள், தேவதைகள், அழகிய கொடி வடிவம் கொண்டு அழகாக உள்ளது.

1737ல் ஏற்பட்ட க்ரெம்லினில் பரவிய தீவிபத்தில் 24 பெரிய ராட்சச சட்டங்களில் தெங்கவிடப்பட்டிருந்த இந்த மணி பற்றி எறிந்தது.  இதை பாதுகாக்க ஊற்றிய குளிர்ந்த நீரினால் இதன் ஒரு பகுதி உடைந்தது.உடைந்த பகுதி மட்டும் 11500 கிலோ எடை கொண்டது.

கீழே கிடந்த மணி 1836 ல் பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுனர் அகஸ்டி (செயின் பீட்டர்ஸ்பர்க் உள்ள ஐசக் கதீட்ரல் சர்ச்சை கட்டியவர்) என்பவரால் பெரிய மேடை மீது நிறுத்தி வைக்கப்பட்டது.

அக்காலத்தில் மாஸ்கோவில் 4000 சர்ச்சுகள் இருந்ததாகவும் ஒவ்வொரு சர்சிலும் குறைந்தது 10 பெரிய மணிகள் இருந்ததாகவும் இதற்காகவே வார்பட பட்டரைகள் பல இருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. ஒரே மணியில் பலவித ஒலி எழுப்பும் இசை வல்லுனர்கள் இருந்தார்கள். மாஸ்கோ முழுதும் சர்சுகளில் ஒரே மணி சப்தம் தான்.   பிரம்மாண்ட மணிகள் ஆபத்துகள் ஏற்படும் போதோ அல்லது விசேசங்களின் போதே ஒலி எழுப்பபட்டன.

மேற்சொன்ன ராயல் பெல்லிற்கு முன்பே 4 பெரிய மணிகள் இருந்தது.

(1.)  35 மெட்ரிக் டன் எடை கொண்ட போரிஸ் கெடுனோவ் காலத்தை சேர்ந்தது(1599) வடிவமைப்பாளர் ஆன்ரெ சோகோவ். 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உடைந்து விட்டது.

(2.)  அதெ உடைந்த பாகங்களை வைத்து 1654 ல் உருவாக்கப்பட மணி 128 மெட்ரிக் எடை கொண்டது ( இரண்டாம் ஜார் கோலெகூல்) இதை 25 பேர் அடித்து ஒலி எழுப்பினர். 8 மைலுக்கு சத்தம் கேட்கும்.

(3) 160 டன் எடை கொண்ட டோர்மிசன் பெல் 10 ஆண்டுகள் இருந்தது. மணி ஒலிக்கும் போது சிறிய நிலநடுக்க அதிர்வு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

(4) அடுத்து ஐவான் தி கிரேட் உருவாக்கிய மணி 45 ஆண்டுகள் ஒலித்தது.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)