Followers

Saturday, August 31, 2013

வலைபதிவர்கள் திருவிழா நேரடி காட்சி

சென்னையில்
இன்று 1.9.2013. நடைபெறும் வலைப்பதிவர்கள் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு காலை 9 a.m

Download As PDF

Thursday, August 29, 2013

அழிந்துபோன டைனோசர், பனிக்கால யானை மறு உருவாக்கம் சாத்தியமா?


விஞ்ஞானிகள் சிலர் தீவிரமாக யோசிக்கிறார்கள் அழிந்து போன மிருகங்களை திரும்ப கொண்டுவர முடியுமா ? அப்படி அந்த மிருகங்களை திரும்ப உருவாக்கப்பட்டால் அதனால் என்ன பயன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜுராசிக் பார்க் ஆங்கில திரைப்படம் மைக்கேல் க்ரிக்டன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.  இதில் அழிந்து போன டைனஸோர் மிருகங்களை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்குவதாக கதை.

ஆனால் அந்த கதைப்படி (அந்த டெக்னாலஜி) மேஜிக்கெல்லாம் செய்து மிருகங்களை உருவாக்குவது என்பது நடவாத காரியம்.  இருந்தாலும் மிருகங்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

சைபீரியாவின் வடகிழக்கு மூலைப் பகுதியில் உள்ளது ப்ளைஸ்டோசீன் பார்க் (Pleistocene Park) அழிந்து போன தாவர உன்னிகளான காட்டெருமை, கலைமான், இனங்களை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சடைமுடி யானையை உருவாக்குவது பெரும் சவால்.  பனிப்பாறை பகுதியில் உறைந்து கிடைத்த படிமத்தின் ஜீன் (DNA) கொண்டு திரும்ப அந்த யானையை உருவாக்க முடியுமா?

"பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டுவரும்  சடைமுடி யானை"

லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்த பேராசிரியர் அட்ரியன் லெஸ்டர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த விலங்கை திரும்ப உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

டி.என்.ஏ நுண்தொடர்பிழை உடைந்து போயிருக்கும் ஒருவேலை, அந்த விடுபட்ட பகுதியை இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த கோடிங்கை கண்டுபிடிக்க ஆசிய யானைகள் உதவுமா?

ஒருவேலை ஜீராஸிக் பார்க் கதையில் வருவது போல தவளையின் டிஎன் ஏ இந்த இணைப்பு இடைவெளியை நிரப்புமா? டோலி ஆட்டின் குளோனிங் சிஸ்டத்தை போல (SCNT = somatic cell nuclear transfer) ஆசிய யானையின் கருமுட்டையில் வலு ஊட்டப் பெற்ற மமூத் யானையின் நியூக்ளியஸ் பதிவிடுதல் சாத்தியமா? இதில் பல உள்குத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் லெஸ்டர்.


"மறு உருவாக்க லிஸ்டில் உள்ள வட அமெரிக்க தூது புறா"

"1936ல் அழிந்துபோன டாஸ்மேனியன் புலி"


"பாதுகாக்கப்பட்டு வரும் கடைசி வெள்ளை காண்டாக்கள்"சமீபத்தில் (1936 ? ) அழிந்து போன தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி மறு உருவாக்கம் சாத்தியமென்கிறார்கள்.

நியூசவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா) பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்(palaeontology research குரூப்) இது சாத்தியமென்கிறார். 1990 லிருந்து இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இப்படி விலங்கு மறு உருவாக்க ஆய்வு நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.


பையோ பேங்க்

சாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப  கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.கோவை ஆவி உடன் சேர்ந்து பதிவர்விழாவில் கலந்து கொள்ள கோநேஜீ டிராவல்ஸில்


Download As PDF

Tuesday, August 27, 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ் - நகைசுவைகள்


முகநூலில் நான் ரசித்த நகைசுவைகள்டாக்டர் கணவன் உடம்பை பரிசோதித்துவிட்டு " இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் அதற்குள் உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிடுங்கள்"

மாலை 5 PM : கண்ணீர் மல்க மனைவியிடம் செய்தியை பகிர்ந்தான் அவன் . துடித்தாள் அவள் ...

எனக்கு உன் கையால ரவா தோசையும் வெங்காய சட்னியும் குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி ......

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு உன் கையால மீன் குழம்பு வச்சு குடும்மா இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும் பால்ல உன் கையால பாதாம் அரைச்சு கொஞ்சமா சர்க்கரை போட்டு குடு - இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ..

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான் ...

அவள் : பேசாம படுங்க - காலைல எழுந்த உடன் எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு , சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பணும் ,அய்யர் ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல booking பண்ணணும் , உங்களுக்கு எழுந்திருக்கற வேலை கூட இல்ல ?

thanks to Ramesh Guru
========================================================================

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?
என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..! 

************

உங்க மனைவி பார்க்குற புடவைகள் மேலே 1,2,3 -னு
நம்பர் ஸ்டிக்கர் ஏன் ஒட்ட சொல்றீங்க?
-
நூறு புடவை வரைக்கும் பார்த்துட்டு, நான் பார்த்த
39 -வது புடவைக்கு பில் போடுங்கன்னு சொல்லுவா…அதான்!

************

இந்த பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு
எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்…?
-
இவருக்கு ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர்
சொல்லிட்டுப் போனது உங்க காதுல விழலையா…?

************

நீதிபதி :
இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை
சொல்லியிருந்தேனே..?
கைதி :
குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை
போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..! 
************

டாக்டர், உங்க பீஸை என்னால ஜீரணிக்க முடியலை..!
-
கவலைப்படாதீங்க, அதை ஜீரணிக்க தனியா ஒரு மாத்திரை
தர்றேன் சாப்பிடுங்க…!
************
என்னய்யா இது..சாப்பாட்டு ஐட்டத்தோட பேரையெல்லாம் எழுதி அந்த
ஆள் மனு குடுக்கறான்..?

தலைவரே…அது மனு இல்லை..’மெனு’..!
************
தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துல இருக்கார்னு
எப்படி சொல்றே?

பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து
விட்டுட்டு அது பொங்கி வழியறதைப் பார்த்து
‘சியர்ஸ்’னு கத்திட்டாரே..!
************

மாணவன்: சார் வயிறு வலிக்குது சார்…
-
ஆசிரியர்: வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான்
வலிக்கும்…
-
மாணவன்: அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு
சொன்னீங்களே!
************
பால்’ பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதுடான்னா…
கால் பக்கத்துக்கு எழுதியிருக்கியே…?
-
இது சுண்டக் காய்ச்சின பால் சார்..!
************
ஆசிரியர்: மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்…

மாணவர்: ஏன் சார்? இந்தியான்ற பேர் நல்லா இல்லையா?என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-

ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!


தலைவரே…உங்க மேலே ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு மக்கள்
பேசிக்கிறாங்க…!

'கறை நல்லது’னு ஏன் இன்னும் அவங்களுக்குப் புரியலை…!?

thanks to  Venkatesan Subramanian
************

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ­ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.

பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்., 

ஷேக் சொன்னார் ”எனக்கு­ இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"

இந்தியன் கேட்டான். ”எனக்கு­ 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார். 
அடுத்தது”… 
”இந்தப் பாகிஸ்தான்காரரை­ என் முதுகில் கட்டுங்கள்!” 

இது எப்புடி இருக்கு... ??

thanks to Ramesh Guru
========================================================================

ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!

thanks to AR Raja

========================================================================

இம்சை அரசனும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் 
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..

thanks to Kamal Kamalkvl
------------------

above picture : tks to Suresh Krishanan


Download As PDF

Monday, August 26, 2013

கொசுக்களை இயற்கையாக ஒழிக்கும் முறை - தம்பி தங்க கம்பி!


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;


நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.


பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.

source of news : dinamalar dtd. 26.8.13
Download As PDF

Saturday, August 24, 2013

நாசாவின் எதிர்கால திட்டமும்; மனிதனும்

2030 வரைக்குமான நாசாவின் செயல் திட்டம்

நாசா தனது ஐம்பத்து ஐந்தாவது ஆண்டை கொண்டாடி வருகிறது. (துவக்கம் : ஜுலை28,1958) மனிதனை நிலவுக்கு அனுப்பியது தொடங்கி செங்கிரகத்திற்கு உலவியை (மார்ஸ் ரோவர்) அனுப்பியதோடு இன்னும் பல எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறது.

லேடி (LADEE ) Lunar Atmosphere and Dust  Environment Explorer 

வரும் செப்டம்பர் 2013 ல் நிலவுக்கு லேடி ஆய்வகத்தை( அன்னிய பொருள் துருவி) அனுப்ப இருக்கிறது இது நிலவை 160 நாட்கள் சுற்றி  நிலவின் காற்றுமண்டலம் மற்றும் தூசுமண்டல சுற்றுசூழலை ஆய்வு செய்யப் போகிறது.

மாவென் (MAVEN) Mars Atmosphere and Volatile Evolution Mission

இந்த ஆண்டிற்குள்ளாக (2013) செவ்வாய் வளிமண்டலம் மற்றும் அயன மண்டலத்தை ஆய்வு  செய்யும் திட்டம். மேலும் செவ்வாயில் சூரியப் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வது. இத்திட்டதின் நோக்கம்.

Magnetospheric Multiscale Mission (2014) 

புவி காந்தப்புல ஆய்வு :   2014கில் நான்கு விண்கலங்களை  பூமியின் சுற்றுவட்டத்தில் நிலைநிறுத்தி பூமி மற்றும் சூரியன் இவற்றிற்கு இடையே யான காந்தப்புல செயல்பாட்டை ஆய்வு செய்வது.

New Horizons (2015)

2006 ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வரும் 2015 ஜீலை மாதத்தில் புளுட்டோ மற்றும் அதன் பனிகட்டி துணைக்கோளை நெருங்கி தகவல்களை அளிக்கும்.  புளூட்டோ பூமியில் இருந்து 3 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Juno ( 2016)

நொடிக்கு 19 மைல் வேகத்தில் பறக்கும் ஜூனோ பெரிய கிரகமான வியாழன் வரலாற்றை தூசி தட்டப் போகிறது. இது நடக்க இருப்பது வரும் 2016ம் ஆண்டில்.

இன்சைட் Insight (2016) 

பெரிய துளையிடும் கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தை தோண்டி செய்யப்படும் ஆய்வு வரும் 2016 ல்.

TESS (2017) Transiting Exoplanet Survey Satellite

டெஸ் எனும் சாட்டிலைட் மூலம் பூமியை ஒத்த கிரகங்கங்களின் புள்ளி விவரங்களை இன்னும் தெளிவாக அறிவதற்காகவும்,  உடுமண்டல நட்சத்திரங்களை பற்றி மேலும் பல தகவல்களை சேகரிக்கும் திட்டம்.

சூரிய தீர்க்கசோதனை Solar Probe Plus (2018)

சூரிய தகவமைப்பு ஆய்வுப்பணி.  இது 2018 ல் செயல் பாட்டிற்கு வர இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி James Webb Telescope (2018)

பால்வெளி மண்டலத்தை மற்றும் கோள்கள் உருவாக காரணமாக இருந்த பெருவெடிப்பு நிகழ்வு பற்றிய மேம்படுத்தப்பட்ட ஆய்வு இது. ஜேம்ஸ் வெப்  தொலைநோக்கி மூலமாக  வரும் 2018ல்.

OSIRIS -Rex (2018) Origins Spectral Interpretation Resource Identification Security Regolith Explorer

பெரும் விண்கற்பாறைகளை (சிறுகோள் )ஆய்வு செய்யும் பணி.  1900 அடி நீளமான  அஸ்ட்ராய்டை (1999 RQ36) நெருங்கி இயந்திர கைகள் கொண்டு அதில் இருந்து கனிமங்களை எடுத்துகொண்டு வருவது. இது நடக்க இருப்பது 2018ல் தொடங்கி 2023 குள்.

MARS Rover (2020)

2020 ல் செவ்வாய்க்கு ஒரு உலவியை அனுப்பி அங்கிருந்து கனிம மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு செய்வது. இது மனிதனை செவ்வாய்க்கு அனுப்பப்படுவதற்கான முன்னோட்டமாகவும் இருக்கும்.

Manned Mission to an Asteroid (2025)

அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்த ஒரு திட்டம், பெரும் விண்கற்பாறைக்கு மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்வது. இதை 2021ற்குள்ளாக செயற்படுத்த நாசா திட்டம் வைத்துள்ளது.  இது பல சவால்களை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரும் 2020ல் ஆரம்பித்து 2030 திற்குள்ளாக மனிதனை செவ்வாயில் குடியமர்த்துவது. இந்த கனவு திட்டத்தை அமெரிக்க நிச்சயமாக செயல்படுத்தும் என ஓபாமா உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதினாறு ஆண்டுகளுக்குள்ளாக இதெல்லாம்...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதெல்லாம் சாத்தியமா?

Download As PDF

Sunday, August 18, 2013

சிங்கம்புலியும் - புலிசிங்கமும்

மனிதன் புதிது புதிதாக ஒவ்வொன்றையும் உருவாக்க ஆசைப்படுபவன்.

சிங்கம்புலி (Liger) , புலிசிங்கம் (Tigon) இவை இரண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டு உருவாக்கபட்ட உயிரினங்கள். அதாவது இவை காட்டில் இருக்கிறதோ இல்லையோ வனவிலங்கு பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் இருக்கிறது.


ஆண்சிங்கம் பெண்புலியுடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் சிங்கம்புலி(Liger).

ஆண்புலி பெண்சிங்கத்துடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் புலிசிங்கம் (Tigon).

இந்த லைகர் மற்றும் டைகன் இரண்டுமே சிங்கம்,புலி இவற்றின் குணாதிசயங்களை கொண்டிருக்கின்றன.  உதாரணமாக லைகர்கள் நீச்சலடிக்க ஆசைப்படுபவை.  இவைகள் இரண்டையும் பார்த்தால் வித்தியாசப்படுத்து கொஞ்சம் யோசிக்கனும் உடலில் புள்ளிகள் மற்றும் வரிகள் காணப்படுகிறது. லைகர்கள் தம் பெற்றோரை விட இரண்டு மடங்கு பெரிதாக வளர்கிறது.

இவற்றை திபெத்திய புத்த பிக்குகள் (லாமாக்கள்) வளர்த்தால் சைவமாக மாற வாய்ப்பு உண்டு !.இந்த படத்தில், தாய்லாந்து காஞ்சனபூரி புலி கோவிலில்.. புத்த பிக்குகள் வளர்த்தும் புலிகள்.தற்போது உலகிலேயே பெரிய லைகர் 500 கிலோகிராம் எடையுடன் 10 அடி நீளத்துடன் இருக்கிறது.

இவற்றிற்கு மரபியல் சம்பந்தமான(Dwarfism,gigantism) உடற்குறைகள் அதாவது தாறுமாறான உடல் உறுப்பு பெருக்கம் அல்லது வளர்ச்சி  இருப்பதாக சொல்லப்படுகிறது, கண்காணித்து வருகிறார்கள். அதோடு கூட வாழ்நாள் அவற்றின் பெற்றோரை போல் இருக்காது.  இதற்கு இன்னும் மரபியல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

Download As PDF

தமிழ் சினிமாவை நம்பாதீங்க - வைரமுத்து அதிரடி

கோவை தமிழ் மன்ற துவக்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதில் இருந்து சில...

ஒவ்வொருவரும் தமிழ் மீது காதல் கொள்ளுங்கள். விஞ்ஞான கல்வியுடன், வாழ்க்கையை நெறிப்படுத்தும் தமிழை கற்றுக்கொள்ளுங்கள்.  வாழ்க்கை முடிவில் நாம் விட்டுச் செல்வது, புகழ் தான்.  வாழும் காலத்தில் நல்லதை செய்யவேண்டும். கவிதை திறன் உங்களது முழுத்திறமைகளை வெளிப்படுத்தும் கருவி.  சொல்லை மட்டும் அல்ல அதிலுல்ல பொருளையும் கண்டுபிடித்து வாழ்க்கைக்கு பயன் படுத்துங்கள். உலகை புரிந்து வாழ வேண்டும்.  தமிழை புரிந்து பேசி பொருளை கண்டுபிடியுங்கள்.  குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை சூட்டுங்கள். விடாது உழைத்து வெற்றியடையுங்கள்; அப்படிப் பெறும் வெற்றிக்கு உரிய மரியாதையை கொடுங்கள்.  உழைப்பின்றி வெற்றி கிடையாது.

வாழ்க்கை என்பது, இன்பம், துன்பம், வறுமையை கொண்டது. அனைத்து காலங்களையும், நிலைகளையும், நிகழ்வுகளையும் சமமாகப் பாருங்கள்.  நாம் கற்கும் கல்வி, நமது சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.  தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது.

அச்சம் தவிர்த்து உண்மையை பேசுங்கள்.  உண்மையுடன் செயல்படுங்கள்.  இந்நாடு உங்களை நம்பி உள்ளது. சினிமா வாழ்க்கை கற்பனையானது. தமிழ் சினிமாவை நம்பாதீர்கள். அதில் காதலின் ஒரு பகுதி மட்டுமே காண்பிக்கப் படுகிறது.

சமூக வாழ்க்கையை காண்பிப்பதில்லை. காதல் என்பது கண்ணில் தோன்றி, உள்ளத்தில் முடியும் ஒரு புரிதல்.  தியாகம் இன்றி, வாழ்க்கை கிடையாது.  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். ஒரு நல்ல ஆசிரியர், தனது மாணவனின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.

குழந்தைகளிடம் பண்பு, பரிவு, இரக்கம், காட்டுங்கள்.  தினமும் புத்தகம் படியுங்கள். புத்தகங்கள் பல நல்ல பண்புகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன.

நல்ல வாசிப்பு என்பது நம்மை தூங்க விடாது.  தூங்குவதற்கு புத்தகம் தேவையில்லை.  வாழ்க்கையை உயர்த்தவே புத்தகங்கள்.  இளம் வயதை பக்குவமாக கையாள வேண்டும்.  சொற்களை சரியாக பயன்படுத்துங்கள். சரியான சொற்கள், பண்பாடு நமக்கு மிகவும் அவசியம்.  வாழ்க்கைக்கு தேவையான இங்கிதம், பண்பாடு ஆகியவற்றை தமிழ் இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கின்றன.

எந்த நோக்கமும் இன்பத்தை சார்ந்தது.  உண்மையான இன்பம், அறத்தால் வருவது. சத்தியத்தால் கிடைப்பது.  நேர்மையான வாழ்க்கையால் வருவது. தவறான வழியில் கிடைக்கும் இன்பம், நிலைத்து நிற்பதில்லை, பெண்களை மதியுங்கள். சமாக கருதி வாய்ப்பு கொடுங்கள்.

source of  news : dinamalar dtd.18.8.2013
Download As PDF

Friday, August 16, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு - பகுதி 2)


இந்தியாவின் மையப்பகுதியான விந்திய மலைப்பகுதிகளில் (போபால் தென்கிழக்கே) பிம்பெட்கா குகைப் பகுதிகளில் தொன்மையான பாறை சித்திரங்கள்  காணப்படுகின்றன.


 (V.S. Wakankar ) வாகன்கர்  என்பவர்  1957 ல் இச்சித்திரங்களை பற்றிய ஆய்வுகள் வெளியிட்டு இருக்கிறார்.  2003 ல் இந்த பகுதி இந்திய மரபுரிமை பகுதியாக யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டது ( the World Heritage List of UNESCO)
பலதரப்பட்ட வடிவங்கள் உள்ள இந்த பாறைசித்திரங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. யானை, குதிரை மேல் இருந்து போர் புரிவது,போர் காட்சி, முகமூடி அணிந்த மனிதர்களின் வேட்டை, நீண்ட கொம்புகளை கொண்ட மாடு, மான்கள், நாட்டியம் ஆடுபவர்கள் போன்ற சித்திரங்கள் காணப்படுகின்றன.


நூற்றுக்கணக்கான சித்திரங்கள் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல அவற்றின் மீது சூப்பர் இம்போஸ் என சொல்லபடும் சித்திரத்தின் மேல் சித்திர ஓவிய புதுபிப்பும் செய்யப்பட்டு இருக்கிறது.


காலத்தின் முற்பட்ட, மிக மிகப் பழமையான சித்திரங்களும் இருப்பதாக சுமார் 1,50,000 ஆண்டுகள்(   ஆப்பிரிக்காவில் இருந்து வெளிப்பட்ட நாகரீக மனிதனின் காலம் Acheulian) தெரிவித்திருந்தார் விஷ்ணு வாகன்கர்(1972).
சம்பல் பள்ளத்தாக்கு, பந்த்பூரா-காந்திசாகர் பகுதியிலும் (வட போபால், மத்தியபிரதேசம்) குகை சித்திரங்கள் உள்ளன.


முப்பரிமாண முதலை (ஆஸ்திரேலிய x-ray style)  

இப்பகுதிகளில் 1990 களில் இருந்து, Rock Art Society of India (RASI) மற்றும்  IFRAO (International Federation of Rock Art Organizations இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு : இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) part 1


Download As PDF

Wednesday, August 14, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு)

கரபாத் மலைசிகரங்களில் (போபால், மத்தியபிரதேசம்) காணப்படும் செம்புக்காலத்தை சேர்ந்த இந்த ஓவியங்கள் ஐரோப்பிய செம்புக்காலத்தில் கிடைத்த ஓவியங்களுக்கும் முந்தியது. இந்த ஓவியங்கள் சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் காணக்கிடைக்கின்றன.

சித்திரங்களில் காணப்படும் (Chalcolithic ) செம்புக்காலத்தில் இருந்திருக்கக்கூடிய காண்டா மற்றும் சிவப்பு யானை விலங்குகள் அழிந்து போய்விட்டன.(சிவப்பு யானை உண்மையா தெரியவில்லை ?)


பிரான்ஸை சேர்ந்த முற்கால வரலாற்றை ஆய்வு செய்பவர்  (Dr. Jean Clottes)  ஜேன் க்ளாட்ஸ் மற்றும் இவரோடு இந்த கலப்பணி செய்பவர் இந்தியாவை சேர்ந்த மீனாக்ஷி துபே (Dr. Meenakshi Dubey ) இவர்களின் குழு இந்திய மலைப்பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு பல தகவல்கள் திரட்டியுள்ளனர்.

மலை முகடுகளின் சரிவான உள்வாங்கிய பாறைகளில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.    அந்த கால கட்டத்தில் இருந்திருக்ககூடிய சிவப்பு யானை மற்றும் காண்டா மிருகங்கள் அழிந்து போன மிருகங்கள் எனத் தெரிவிக்கிறார். 

போபாலுக்கு அருகில் உள்ள ஷாம்லா மலைப்பகுதியில் உள்ள மனித சமூக பூங்கா ( ethnographic park) இங்கு இந்திய பழங்குடிகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கிறது. 

ஒரிஷா பழங்குடிகள் சவுரர்கள் (Sauras) தங்கள் மூதாதையரின் பிக்டோகிராபிக்ஸ் எனப்படும் சித்திரங்களை தம் வீடுகளில் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறார்கள்.  இந்த சுவர் சித்திரங்களை உற்று நோக்கினால் அந்த கால கிராமத்து சூழல், நாட்டியமாடும் பழங்குடிகள், வளர்ப்பு பிராணிகள்,குரங்குகள், குதிரைகள், விவசாயம், காட்டு விலங்குகள்,பறவைகள்... இப்படி பல தகவல்கள்  அறியலாம்.


  
வீடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் "இட்டல் அல்லது இடிடல்" எனும்  இந்த வகை சித்திரங்களை வரைகிறார்கள். சிவப்பு மற்றும் வெள்ளையில் உள்ள இவை தம் வீட்டை பில்லி சூனியங்களில் இருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.  இவற்றின் மூலமாக கொடும் நோய்களில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் தூய ஆன்மாக்கள் தம்மை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.

கொடும் நோய்களிடம் இருந்தும் நல்ல விளைச்சல் கிடைக்கவும் வீட்டின் முன் ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

இந்தியாவில் இது போன்று பழமையான விஷயங்கள் தம்மை ஈர்பதாகவும், பாரம்பரியம் தொடரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சொல்கிறார் ஜேன்.


இன்னும் சில தகவல்கள் மற்றும் படங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...

தொடர்புடைய பகுதி :

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) -பகுதி 2
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)