Followers

Showing posts with label அனுபவம். பயணம். Show all posts
Showing posts with label அனுபவம். பயணம். Show all posts

Thursday, December 4, 2014

ஸ்பேஸ் டூரிசம் [ விண்வெளி சுற்றுலா ]"மனித மனம் பேராசைகளால் நிறைந்தது அதுவே பலவற்றை சமைக்கவும்* காரணமானது. "      [ சமைக்க = உருவாக்க ]

ஸ்பேஸ் டூரிசம் எனும் கவன ஈர்ப்பு 2004 லில் இருந்து பெரிதாக பேசப்பட்ட ஒன்று. கடந்த பத்தாண்டுகளாக வணிக நோக்கோடு பல தனியார் நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டன. 

ஸ்பேஸ் ஷிப் 2 [ வெர்ஜின் காலெக்டிக் /  Virgin Galactic ] எனும் திட்டம். இதில் ஆறு பயணிகள் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செலுத்த தக்கதாக இருக்கும் என விளம்பரப் படுத்தப் பட்டது. ஆனால் சர் ரிச்சர்ட் ப்ரான்சன் ( Sir Richard Branson )தலைமையிலான அந்த திட்டம் இன்னம் முடிவற்ற நிலையில் இருப்பதாக சொல்லப் படுகிறது. 

 
XCOR Aerospace எனும் நிறுவனமும் ராக்கெட் இஞ்சின் பொருத்தப்பட்ட லினக்ஸ் ஸ்பேஸ் கிராப்ட்  (Lynx spacecraft ) எனும் விமானத்தை போலான ஊர்த்தியில் ஜனங்களை கூட்டி செல்வதாக திட்டம் தாயாரித்தது, அதோடு இல்லாமல் டிக்கெட் களை கூட விற்றதாம்.

தற்போது வேர்ல்ட் வியூ என்டர்ப்ரைசஸ் [ World View Enterprises ] எனும் நிறுவனமும் ஹீலியம் காஸ் பலூன்களை பயன் படுத்தி வானில் புவி ஈர்ப்பு எல்லையில் நிலைநிறுத்த தக்கபடியான ஒரு வாகனத்தை உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதிலும் நான்கு பயணிகள் மற்றும் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செல்லலாம்.  இதற்கு தலைக்கு சுமார் 75000 டாலர்கள் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்தின் படி பூமியின் மேலாக கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர்களில் இந்த வாகனம் சுழலுமாம்.

இந்த கேப்சூல் சுமார் 4 டன் எடைகொண்டது. டாய்லெட் உட்பட பார் மற்றும் சகல வசதியுடன் கூடியதாகவும் நவீன தொடர்பு கருவிகளுடன் இருக்கும். விண்வெளி சுற்றுலா பயண நேரம் சுமார் 5 அல்லது ஆறு மணிகள். இதில் பயணிக்க பிரத்தியோக பயிற்சி தேவை இல்லையாம்.  

பூமியின் மேலாக சுமார் 2 மணி நேரங்கள் சுற்றிவிட்டு பாராசூட் (பாராவிங்) இறங்குவது போல வாகனத்தோடு சேர்த்து இறக்கி விடுவார்கள்.

சாதாரணமாக போயிங் 747  பூமிக்கு மேலாக 10 முதல் 13 கிலோமீட்டர்களில் பறக்கவல்லது என்பதை கவனத்தில் கொள்க. அது பறக்கும் வான் காற்று வெளி தான் ”ட்ரோபோஸ்பியர்”

சோதனை முன்னோட்டமாக ஜூலை 2014 ல்  ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் ”ட்ரோபோஸ்பியர்” வான் எல்லை பகுதியில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு (iPhone, GoPro camera, GPS tracker and flight computer) சோதிக்கப்பட்டுள்ளது.   இது  தரையில் இருந்து வானில் 28 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இந்த பலூனில் வாயுவின் அழுத்ததை தேவையான அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கும் படியான கருவி அமைக்கப்பட்டு இருந்தது.

 
வாயு மண்டலத்தின் பல கட்டங்களும் அதில் இயங்கும் வாகனங்களும் படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.


இதெல்லாம் அடுத்த இரண்டாண்டுகளில் ( 2016 ல்) சாத்தியப்பட்டு விடும் என்கிறார்கள்.

What’s certain is that when passengers  finally fly, they’ll be transported by  balloons that are big – very big. At sea level, 1m3 of helium can lift 1kg. By the time you’ve added the weight of the  balloon itself to the weight of a 4,000kg capsule, you’re already talking about a  weight of 6,000kg. To lift that would  require at least 6,000m3 of helium, and probably more. The balloon would need to be 22m in diameter. Bloon’s Annelie  Schoenmaker says its capsule will be  lighter, at around 2,000kg, though this would still require an enormous balloon.

the president of the Commercial Spaceflight Federation,  Astronaut Michael Lopez-Alegria, is confident. “It won’t be long before tourists are heading into space,” he says

Download As PDF

Sunday, July 20, 2014

வெளிநாட்டில் வேட்டி அனுபவம் : கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பர்ய உடை மடுமல்ல தன் மான பிரச்சனையாக சட்ட சபை வரை விவாத பிரச்சனையானது வேட்டி. தொடர்ந்து கிளப்புகள் அனுமதி மறுப்பது முதல்வரின் கண்டனத்திற்கு உள்ளானது.


வெளிநாட்டில் வேட்டி கட்டி சென்ற கவிஞர் கண்ணதாசனின் அந்தக் கால சுவரஸ்ய பயண அனுபவத்தை , படித்ததில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன் சின்ன நகைச்சுவை காட்சிகள்.....

‪#‎தலீவரின்_மனைவி‬

ஏனுங்க சபைக்கு போறதா சொன்னீங்கன்னுதான் நாலஞ்சு வேட்டி எடுத்து வெட்சிருக்கேன்...மறக்காம எடுத்திட்டு போங்க. அப்புரம் துண்டக் கானோம் துணியக் கானோமினுட்டு கூவாதீக


‪#‎தலைவனும்_தொண்டனும்

தலைவரே ....உங்க வேட்டி??

அதா இப்ப முக்கியம் சண்டைல காணாம போறது சகஜம்பா...


#அரசியல் வாதி கணவனிடம்...மனைவி

"ஏனுங்க எங்கேங்க உங்க வேட்டி ?"

"அடியேய்..எத வேனா கேளு...வேட்டிய மட்டும் கேட்காத...ஓடுகாலி...ஓடுகாலி"

"வேட்டிஇல்லாம வந்திருக்கீங்களே எங்கேன்னு கேட்டா ஓடுகாலின்றீங்களா? நா அம்மா வூட்டுக்கு போறேன்"

"அய்யய்யோ...கிழிஞ்சது, அவங்க கிட்ட கேட்கப்போறியா? "

"கிழிஞ்சிடுச்சா முன்னமேயே சொல்றதுக்கென்ன"கவிஞர் கண்ணதாசனின் வெளிநாட்டு பயண அனுபவம், முக்கியமாக வேட்டி அனுபவம் அதில் இருப்பதால் இந்த கட்டுரையை இங்கு பகிர்கிறேன். அந்தக் கால காட்டத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறார், கவிஞர்.

சந்தித்தேன் சிந்தித்தேன்....கவிஞர் கண்ணதாசன் நூலில் இருந்து....ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நானும், மன்னை அம்பிகாபதியும், மெல்லிசை மன்னர் தம்பி விஸ்வநாதனும், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ யும் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களில் மன்னை அம்பிகாபதி மட்டும் வேட்டி கட்டி, மேலே ஜிப்பா போட்டிருந்தார். அந்த வேட்டி காபூல் நகரத்துச் சிறுவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அவர்கள் கூட்டமாகக் கூடி அந்த வேட்டியை இழுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அம்பிகாபதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள்தானடா கோமாளிகள்” என்று அவர்களைத் தமிழில் திட்டினார்.

காபூலில் கேலியாகத் தெரிந்த வேட்டி, சோவியத் யூனியனில் துருக்மினிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் பெரும் மரியாதைக்குரியதாயிருந்தது.

சின்னச் சின்னப் பெண்களெல்லாம் கூட அம்பிகாபதியின் கையைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

நல்ல வேளையாக நானும் வேட்டி கொண்டு போயிருந்தேன்.

துருக்மினிஸ்தானில் சீசன், அசல் பெங்களூர் மாதிரியே இருக்கும். மாஸ்கோவைப் போல் அங்கே பனி பெய்வதில்லை. லேசான வெய்யிலும், குளிர் காற்றும் இருக்கும். ஆகவே, நானும் வேட்டி கட்டிக் கொண்டு போட்டோவுக்கு நிற்க ஆரம்பித்தேன்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழகப் பிரிவுக்கு நான் துணைத் தலைவர். சோவியத் அழைப்பின் பேரில் நாங்கள் சென்றிருந்தோம்.

அஷ்காபாத்தில் நாங்கள் போய் இறங்கிய போது, காலை எட்டு மணி. விமானத்தின் கதவு திறக்கப் பட்டதும், வாத்தியங்கள் முழங்கின. படப் பிடிப்புக் காமிராக்கள் சுழன்றன. மாநில மந்திரிகளெல்லாம் வந்திருந்தார்கள்.

”அண்ணே! யாரோ மிகப் பிரபலமான ஒருவர் இந்த விமானத்தில் வந்திருப்பார் போலிருக்கிறது” என்ற படியே விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார் தம்பி விஸ்வநாதன்.

”நான் தான் அது! “ என்றார் அம்பிகாபதி.

அவர் சொன்னதிலும் தவறில்லை. வந்திருந்தவர்கள் எங்கள் கழுத்தில் மாலைகளைப் போட்டார்கள்.

லெனின் கிராடில் ‘செம்பியன்’ என்ற தமிழறிவு மிக்க ரஷ்யர் எங்கள் துணைக்கு வந்தார்.

லெனின் கிராடைச் சுற்றிப் பார்த்த போது அங்கேயும் அம்பிகாபதிக்குத் தான் சிறப்பான வரவேற்பிருந்தது.

இந்த வேட்டியையும் சட்டையையும் ரஷ்யர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஆனால் மாஸ்கோவில் நிலமை வேறு. அங்கே அடுப்பையே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் குளிர். அங்கேயும் அம்பிகாபதி வேட்டி சட்டையோடுதான் காட்சியளித்தார்.

எனக்கு எங்கேயுமே இருப்புக் கொள்ளாது. அற்புதமான சர்க்கஸ். அதிலிருந்து பாதியிலே ஹோட்டலுக்குப் போக விரும்பினேன். தெ.பொ.மீ க்கு ரொம்ப வருத்தம். கூட வந்த பெண்மணி, “கார் வரத் தாமதமாகும்” என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

அம்பிகாபதியின் வேட்டியையும், சட்டையையும் பார்த்து மாஸ்கோ ஜனங்களெல்லாம் பரிதாபப் பட்டார்கள். துணைக்கு வந்த அம்மையார் தன் கோட்டுக்குள்ளேயே அம்பிகாபதியையும் திணித்துக் கொண்டு, பனி தாக்காதபடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

இருப்பினும், எனக்கும் அம்பிகாபதிக்கும் அதனால் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. காரணம் நாங்கள் பூட்ஸ் போடவில்லை.

நான் எந்த நாட்டிலும் எந்தப் பெண்ணைக் கண்டாலும் முத்தமிடுவேன். அம்பிகாபதி அதற்குத் தூபமிடுவார். ஒரு கூட்டுப் பண்ணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது தெ.பொ.மீ க்கு கெட்ட கோபம் வந்துவிட்டது.

துருக்மினிஸ்தானில் ‘மாரே’ என்று ஓர் அற்புதமான ஊர். அங்கே அம்பிகாபதியோடு படம் பிடிக்க ஏக கிராக்கி. அந்த ஊரிலுள்ள எல்லோருமே கலைஞர்கள்.

தம்பி விஸ்வநாதனைப் பாடச் சொல்லிவிட்டு. நாங்கள் படத்துக்குப் ”போஸ்” கொடுத்தோம்.

எந்த ஊருக்குப் போனாலும் தெ.பொ.மீ யோடு அம்பிகாபதியைத் தங்க வைத்து விடுவோம். தெ.போ.மீ மிகவும் கண்டிப்பானவர். அம்பிகாபதி அவருக்குக் கட்டுப் பட்டு அவர் கூட இருப்பார். நானும் விஸ்வநாதனும் அறையில் பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவோம்.

1967 கடைசியில் சோவியத் யூனியன் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பினோம். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்த அம்பிகாபதி, சோவியத் விஜயம் முடிந்து திரும்பியதும் இந்தியக் கம்யூட்னிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். இப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பிகாபதி என்னைச் சந்திக்க வந்தார்.
நேற்று (10-1-80) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் சிங்கப்பூர் மலேஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சோவியத் யூனியனில் எந்த வரவேற்பிலும் அவர் பெயரை “அம்பிகாபதி” என்று உச்சரிப்பதில்லை. ‘அம்பிகபோதி’ என்றழைப்பார்கள்.

விஸ்வநாதனை “விஷ்வகாந்த்” என்பார்கள்.

தெ.பொ.மீ யை ரெக்டார். நான் கொண்ணதாசன்.

அதோ அந்த துருக்மினிஸ்தானில், கோரகும் கால்வாயில் நானும், தம்பி விஸ்வநாதனும், அம்பிகாபதியும் பிறரும் படகு சவாரி செய்த காலங்கள்.....

* * * * * * * * * * * * * * * * *

Download As PDF

Saturday, December 21, 2013

கடலுக்கு அடியில் ஒரு மியூசியம்!


கடலுக்கடியில் ஒரு மியூசியம் செயல்படுகிறது.  இது தனியரின் பராமரிப்பில் உள்ளது. இந்த மியூசியம் மெக்ஸிகோவின் கேன்கம் (Cancum) பகுதியில் கடல் ஓர அடித்தளத்தில் நீருக்கடியில் அமைக்கப் பட்டு உள்ளது. 150 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 460 ஆள் உயர சிலைகள்


இங்கிலாந்தை சேர்ந்த  ஓவியக் கலைஞர் ஜெஸான் (Jason de Caires taylor) அவருடைய குழுவினர், நேசனல் பார்க் தலைவர் ஒருவர், நாடிகல் அஸோசியேசன் தலைவர்  இவர்கள் எல்லாம் குழுக்களாக சேர்ந்து இந்த மியூசியத்தை உருவாக்கினார்கள்.  2009 ல் ஆரம்பித்தார்கள் அப்போது புயலினால் சேதம் அடைந்து விட்டது அதன்பிறகு சரிசெய்து இருக்கிறார்கள்.

சிலைகள் PH-Neutral marine காண்கிரீட்டாலும், ஒருவகை களிமண் சேர்ந்த கலவையாளும் உருவாக்கப் படுகின்றன.

டூரிஸ்டுகள் பிரத்தியோக கண்டாடி கூண்டு அமைக்கப்பட்ட படகுகளிலும்,  ஸ்கூபா நீச்சல் காரர்கள் அருகில் இருந்தும் பார்க்கலாம்.
இவைகளை எதற்காக கடலின் அடித்தளத்தில் அமைக்க வேண்டும்.

1. இது ஒரு கலை அம்சம்.

2. கடலடி உயிரினங்கள், கடற்பாசி (coral reef) காப்பகமாகவும், இயற்கையோடு இயைந்த ஒரு சுற்று சூழல் திட்டம்(Environment concept ).

ஒவ்வொரு மனித உருவமும் மாடல்களை கொண்டு மோல்ட் செய்யப்பட்டு வடிவமைக்கப் பட்டவை. உள்ளூர் பிரபலங்களும் இதில் அடங்குவர்.

                                                 பொருளாதாரம் போச்சே (பேங்கர்)


                கண்காட்சியை அழகு படுத்தும் ஏஞ்சல் மீன்கள்


பல துளைகளோடு அமைக்கப்பட்ட மீனவரின் சிலையில் நெருப்பு போல வளர்ந்திருக்கும் பாசிகள்.

Download As PDF

Tuesday, October 1, 2013

புதுவையில் பரதேசிக்கு ஒரு சிலைகடந்த வாரத்திற்கு முந்திய வாரத்தின்  இறுதி நாள் புதுவையில் கழிந்தது., மாலை நேரம், வெப்பத்தை தனிக்க கடலை நோக்கி, கரையினுள் இறங்கிய நண்பர்கள் அலைகளுடன் மோதி விளையாடிக்கொண்டிருந்தனர்.

வெளிநாட்டுகாரிகள் அவர்களின் தேசிய உடையில் ஜோடியாய்.., இந்த ஊரின் தட்ப வெப்ப நிலையையும் ஜனங்களின் ரசனையையும் ரசித்தபடியும்;  நண்பன் சொன்னான் இந்த பீச்சை விடவும் இன்னொரு பீச்சு (ஸாண்ட்)இருப்பதாகவும் அங்கே வெளிநாட்டினர் வரவு அதிகமென்றான்.  சமயம் கிடைக்கும்போது கோவை ஆவி, ஜீவா மற்றும் நண்பர்களுடன் வரலாம் என்று உள் மனசு ஆறுதல் சொன்னது.

சற்று தூரத்தில் அலைகளின் ஓசையையும் மீறி ஒரு பாடல் காற்றில் மிதந்து வந்தது.. மத்தவங்க நடந்து போனா, வீதி வெறும் வீதி..
நீ தெருவில் நடந்து போனா, எனக்கு சேதி தலைப்பு சேதி... ஊதா கலரு ரிப்பன்...


எதிரில் இருந்த ஒரு சிலையை எல்லோரும் கடந்து போனார்கள், அந்த சிலை காக்கைகளுக்கு கக்கா போகும் இடமாகவும் பொருக்கி தின்பதற்கு வசதியான இடமாகவும் அதற்கு இருக்கவேனும்.

அந்த சிலை ஜோசப் ஃப்ரன்சுவா தூப்ளே (Joseph François Dupleix ) என்று அதில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு செப்புகிறது.  யார் இந்த தூப்ளே ?..., மேலே பறந்து கொண்டிருந்த பட்ஷி இவரின் கதையை சொல்லியது என்று சொன்னால் நம்ப வா போறீங்க.

தூப்ளே பிரான்ஸில் ஒரு பெரும் செல்வந்தரின் மகனாக பிறந்தவர்(1697). இந்தியா, அமெரிக்காவிற்கு பல கடல் பயணங்கள்  செய்த,  இவரின் 24 ஆவது வயதில் (1721) ஈஸ்ட் இண்டியா கம்பெனி இவரை கவுன்சிலின் சுப்பீரியர் ஆகவும் ஆளுமை படுத்திய இடங்களை, பொருட்களை மேற்பார்வை செய்யவும் இவரை அனுப்பியது.  அடுத்த இருபது வருடத்தில் கவர்னர் ஜென்ரல் அந்தஸ்து பெற்றார் அதோட சைனாவினுடனான வாணிபத்தை பெருக்கினார்.
அதோட இவரின் சொத்துக்களை பெருக்குவதிலும் கவனத்தோட இருந்தார். இந்த கம்பெனியில் இறந்து போன ஆபீசரின் மனைவியை (ஜீன் ஆல்பர்) கண்ணாலம் கட்டிக்கிட்டாரு. அவுங்க இங்க இருந்த சிற்றரசர்களோட நட்புறவு கொள்ள உதவியா இருந்தாங்க. இங்கிருக்கிற மக்களை வைச்சே ஒரு சிப்பாய் படையை உருவாக்கினார்.  மைசூரின் ஹைதர் அலியையும் வளச்சி போட்டார்.

பெர்ட்ரண்ட் பான்சுவா என்பவர் தலைமையில் படை திரட்டி(மதராஸ் சண்டை) பிரிட்டிஸ் காரங்களை எதிர்தார். இவருக்கும் தூப்ளேவுக்கும் ஆகாது.  அவரு சொன்ன மாதிரி (கோட்டையை மட்டும் வச்சுகிட்டு ஏரியாவை திருப்பி கொடுப்பது ) கேட்காம ஜார்ஜ் கோட்டையை தரைமட்டமாக்கும் முயற்சி செஞ்சாரு. ஆர்காடு நவாப்பினால இது தடுத்து நிறுத்தப்பட்டது.  இவரு கைது செஞ்ச இங்கிலீஸ் ஆபீசர்களில் ஒருத்தர் தான் ராபர்ட் கிளைவ். வேசம் போட்டு தப்பி ஓடிய அவரு பிரஞ்சு துரோகத்தை புட்டு புட்டு வெச்சாரு.
1754 வரைக்கும் கோட்டையை பிடிக்கவும் இடத்தை பிடிக்கவும் பல போர்கள் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்தது.  ஆனா தூப்ளே சமாதான விரும்பின்னு சொல்றாங்க.கம்பெனியோட (ஈஸ்ட் இண்டியா ) முன்னேற்றத்துக்கு தன்னோட சொத்துக்களை விற்றவரை பின்னாளில் அதே கம்பெனி கப்பலேற்றியது(1754). சொத்துக்களோடு சம்சாரத்தையும் இழந்த (இறப்பு) இவரு  வறுமையில் வாடினார். அரசு இவரை ஆதரிக்கவும் இல்லை கவனிக்கவும் இல்லை.  தனது 66 வயதில் (1763 ) பாரிஸில் சந்தடியே இல்லாம செத்துப் போய்ட்டார்.

தலைப்புக்கு வந்திட்டேன் இதுதான் பரதேசிக்கு வைக்கப்பட்ட சிலை.


Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)