Followers

Showing posts with label அமானுஷ்யம். Show all posts
Showing posts with label அமானுஷ்யம். Show all posts

Wednesday, February 12, 2014

டாவின்சி ஓவியத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம் !

15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் "தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)" திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

 கட்டிடக்கலை "ப்ரஸ்பெக்டிவ் " என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது.  இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)


1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது.  பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது.

யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி "தி லாஸ்ட் சப்பர்" பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது (as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.)


The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy







  • மூன்று வாயில்கள் எதற்கு  ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம்.  யேசுவை  சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.



  • மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது.  முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.

  • யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.


(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.


  • ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
  •  Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.


  • இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம். 


                                              கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் 
(In greek mythology the stars of Pleiades represented the seven sisters)
மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது.

  • யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம்.
  • சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும்.


  • கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம்.  இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.


“Philosophy [nature] is written in that great book which ever is before our eyes — I mean the universe — but we cannot understand it if we do not first learn the language and grasp the symbols in which it is written. The book is written in mathematical language, and the symbols are triangles, circles and other geometrical figures, without whose help it is impossible to comprehend a single word of it; without which one wanders in vain through a dark labyrinth.”  — Galileo Galilei

The entire Universe (including our solar system, as well as atoms, DNA and life-forms) reveals the secrets of balance, rhythm, proportion and unity in diversity, the fractal  interconnection of parts with each other and the whole. This harmony is expressed by some “key” numbers: Fibonacci Series, Phi, Pi and “e”.

The creation myths of many traditions describe the universe as the work of a Divine Architect who uses “sacred geometry” to unfold the dimensions of a beautiful cosmos, wisely designing every aspect of it, and governing by just proportions evidenced in the geometric shapes and processes of nature.

நன்றி _ கலாகுமரன்

Download As PDF

Tuesday, February 11, 2014

உருவங்களை நிஜத்தில் மறைய வைப்பது சாத்தியமா?

ஹாரி பாட்டர், ப்ரிடேட்டர் {potter , predator} போன்ற படங்களில், சயன்ஸ்பிக்ஸன் படங்களிலும், இரும்புக்கை மாயாவி போன்ற கார்டூன் கதைகளிலும் உருவங்களை மறைய வைப்பது அல்லது மறைந்து போவது என்பது இல்லாமல் இருந்தால் அது ஆச்சர்யம்.



உண்மையில் மேஜிக் போல நிஜத்திலும் நிகழ்த்துவது சாத்தியமா ? இன்னும் இல்லை ஆனால் அந்த மாதிரியான நிகழ்வை சாத்தியப் படுத்த அருகில் சென்று  கொண்டிருக்கிறார்கள்  என்று சொல்லலாம்.

இதற்கான திறப்பான் தான் மெட்டா மெட்டீரியல் (Metamaterial).   இது ஒருவகையான இயற்கையில் இல்லாத உருவாக்கப்பட்ட சிந்தடிக் பொருள். ஒளி இதனை சுற்றி சிதறச் செய்யும் தன்மையானது.  அதனால் அந்த பொருளை காணாது மறையச் செய்யலாம்.


டார்சின் முன்னால் வைக்கப்பட்ட துண்டினை(துணி) ஒளி ஊடுருவி கடந்து செல்வதாக உருவகப்படுத்திக்கொள்ளுங்கள் மெல்லிய இழையை ஒளி ஊடுருவாமல் அந்த இழைகளுக்கு இடைப்பட்ட துவாரத்தின் வழியாக செல்லும் அல்லவா.  அந்த இழையில் ஒரு நுண் துவாரம் செய்தால் ஒளியானது அதனுள் செல்ல முடியாமல் விலகி செல்லும் இல்லையா ?. அப்படி ஒளியானது விலகி செல்லும் போது அந்த பொருள் கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.



மிக மிகச்சிறிய தட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி இருக்கும் இந்த மெட்டா மெட்டீரியல்.


“Such a lens would offer superior resolution over conventional technology, capturing details much smaller than one wavelength of light to vastly improve imaging for materials or biomedical applications,” says Costas Soukoulis, a physicist at Iowa State University. “A metamaterial superlens could give researchers the power to see inside a human cell or observe DNA.”

ஒரு தட்டி வடிவத்தில் உருவாக்கப்பட்ட தனிமங்களுக்கு இடையே செல்லும் ஒளியின் அலை நீளத்தை விட குறைவான இடைவெளியில் ஒளி வளைந்து செல்லுகிறது. போட்டான்கள் சல்லடை போன்ற நுண்பொறியில் சிக்கி கொள்கின்றன அவை அந்த நுண்துளையில் நுழைய முடிவதில்லை அதற்கு பதிலாக அவை அந்த பொருளை புனல் வடிவில் சுற்றி செல்கிறது.

இந்த டெக்னிகல் இன்னும் ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது. மெட்டா மெட்டீரியல் எனும் இத்தனிமம் ஆனது லைட் ரேடியேசனை ஒரு குறிப்பிட்ட வேவ் லெந்தில், குறித்த அலைவரிசை நிறங்களில் மட்டுமே பரிட்சிக்கப் பட்டது. டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியை (ஆஸ்டின்) சேர்ந்த ஆராய்சியாளர்களின் அடுத்த கட்ட ஆய்வு " இந்த தனிமத்தில் ஒரு போர்வை அல்லது கோட் செய்வது " அப்படி உருவாக்கப்பட்டு வெற்றியடைந்தால், திரைப்படங்களில் காட்டப்படும் கிராபிக்ஸ்கள் உண்மையில் உண்மையாகும்.





"The voltage generated by this photodiode when it is illuminated with light can be used to change the resonance of the metamaterial structure," explains Shadrivov. "This means that we can control the refractive properties of the structure at will and bend the microwave light beams passing through the material in whichever direction we like."




Labels: மெட்டாமெட்டீரியல்,metamaterial

Download As PDF

Thursday, April 4, 2013

விடைதெரியா மர்மங்கள் (புனித உடற்போர்வை,கல்தட்டு,ராட்சஷனின் படிமம்)

நேபாள கல் தட்டு

வேற்றுகிரக வாசிகள்,பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம். (ஏலியன்ஸ் இருக்குதா? இல்லையா? சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்... அது வேறு)

மாயன்கள் காலத்தில்(இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம். நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது. 12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது. இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?) சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன.



அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா?  மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்..  இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது.

ராட்சஷனின் படிமம் Fossilized giant

டிசம்பர் 1895ல் பிரிட்டிஷ் ஸ்டேண்டேர்ட் சஞ்சிகையில் (the British Strand magazine) ஒரு செய்தி வெளியாகி இருந்தது. 12 அடி உயரமுள்ள ஒரு இராட்சஷ மனித உருவத்தின் படிமம் அயர்லாந்தில் கண்டறியப்பட்டது என்பதுதான் செய்தி. அந்த உருவத்தின் உயரம் 12 அடி இரண்டு அங்குலம், மார்பின் சுற்று ஆறு அடி ஆறு அங்குலம், கைகளின் நீளம் நான்கடி ஆறு அங்குலம், வலது காலில் ஆறு விரல்கள் (பைபிளில் சொல்லப்படும் ராட்சசனோ ? என்ற விளக்கம் அளிக்கபபட்டது..விடைதெரியா மர்மம்)

புனித உடற்போர்வை (Shroud of Turin)

யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.  பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் 3000 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.

செக்கோந்தோ பீயா என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நெகட்டிவ் மூலமாகவே முதன் முதலில் உருவம் தெளிவாக தெரிந்தது (1898) உலகிற்கு அறியக்கிடைத்தது. இரத்தம் உறைந்த பகுதிகள் கைகள் சிலுவையில் அறையப்பட்டதற்கான தடயம் உள்ளது. இப்புனித துணி நெருப்பில் இருந்து எரிவதிலிருந்தும் தப்பியதாகவும் அறிகிறோம். கருப்பு வெள்ளை ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது.

கிருஸ்துவின் உருவம் எப்படி இந்த துணியில் மெல்லியதாக தெரிகிறது என்பது ஆச்சர்யமானது. இந்த ஆய்வு மதத்தவரை புண்படுத்தும் என்பதாலோ? அல்லது பரிசோதனை பிரியோசனம் இல்லை என்பதாலோ விடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஆகக்கூடி இது குறித்த சர்ச்சைக்கு முடிவு கிட்டவில்லை. புலப்படா மர்மங்களில் இதுவும் ஒன்று. Download As PDF

Wednesday, November 28, 2012

தோன்றி மறைந்த அமானுஷ்ய உருவம் !

( Belmez faces) பெல்மீஸ் முகங்கள்



இந்த புகைப்படத்தில் உள்ள முகத்தை பார்த்தால் ஒரு சாதாரண புகைப்படமாக வோ அல்லது அவுட் போகஸ் வரைபடமாகவோ தெரிகிறது.

இதனுடைய வரலாற்றை தோண்டி எடுத்துப்பார்த்தால் அமானுஷ்ய விவகாரங்கள் கிளம்புகின்றன.

மரியா பெரைரா (Maria Pereira) என்ற பெண்மணி ஸ்பெயினில் பெல்மீஸ் (Spanish - Belmez de la moraleda) எனும் கிராமத்தில் வாழ்ந்தவர். இவருடைய வீட்டின் சமையல் அறை சிமெண்ட் தளத்தில் திடுமென வியக்கத்தக்க அமானுஷ்ய முகங்கள் தோன்றி மறைந்தன இது நடந்தது 23 ஆகஸ்ட் 1971.

இது பார்பதற்கு வரையப்பட்ட போர்ட்ராய்ட் ஓவியம் போல் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அதிசயத்தை பார்தததாக தகவல்.  ஆறு நாட்கள் கழித்து இந்த தளத்தை இடித்து விட்டு புதிய சிமெண்ட் தரை போடப்பட்டது.

ஆனால்...ஒருவாரம் கழித்து திரும்பவும் வேறு முகம் தெரிய ஆரம்பித்தது. இந்த முகம் பல வாரங்கள் தெரிந்தது அது மட்டுமல்ல இதன் முக தோற்றங்கள் மாறின. பொருக்க முடியாமல் திரும்ப இந்த தளம் தோண்டப்பட்டது இன்னும் ஆழமாக... அப்போது நிலத்தின் அடியில் மனித எழும்புகள் கிடைத்தன.  அப்போது தான் தெரிந்தது அந்த வீடு மட்டும் அல்ல அந்த தெருவே ஒரு காலத்தில் மயானமாக இருந்தது தெரிய வந்தது.

அதன்பின், புதிய தரைத்தளத்தில் பலமுகங்கள் இருப்பதாக பேராசிரியர் குழு ஒன்று வந்து ஆராய்சி செய்தது ஆனால் யரோ வரைந்ததற்கான எந்த தடையமும் கிடைக்கவில்ல இவர்கள் ஆராய்சியில் ஒருமுகம் அல்ல 18 வித முகங்கள் தரையில் தென்பட்டதாக கூறப்படுகிறது. (இன்னும் சில புகைப்படங்கள்)


இது குறித்து மேற்கொண்டு பல வித ஆராய்சிகள் செய்யப்பட்டன விடை பூஜ்ஜியம்.  ஆனால் ஒன்றுமட்டும் சொல்லப்படுகிறது மரியா பெரைரா ஒரு சைக்கோ (psychic) அவர்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்றும் ஒருசாரர் நம்பினர்.  அவர் 2004 ல் தனது 85 ஆவது வயதில் இறந்துவிட்டார்.

இந்த முகங்கள் 35 வருடங்கள் தென்பட்டு இருக்கிறது, அவர் மறைவு வரை ! என்பது இன்னும் ஆச்சர்யமான அமானுஷ்ய தகவல்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)