Followers

Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts

Friday, April 28, 2017

நெகிழியை அழிக்க புது வழி... சாத்தியமா?


எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட உலகமிது...நெகிழிகளை  "Better Pollutants "[சிறந்த சீர்கேடி] என்று சொல்லுவார்கள். உலக நாடுகளில் பல, தர கட்டுப்பாட்டுகள் விதித்து தடை விதித்திருக்கின்றன.  இந்தியாவை பொருத்த வரை ஏட்டு சுரைக்காய்...டண் கனக்கில் பெரு மலையாக குவியும் இந்த (பிளாஸ்டிக்) பாலிதீன் குப்பைகளை ஒழிப்பது என்பது பெரும் சவால் மட்டுமல்ல இதுவரையில் அளவும் குறைந்த பாடில்லை. இன்றைக்கு தண்ணிர் தட்டு பாடு தலை விரித்தாடுகிறது...மழை இல்லை அதனால் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். தண்ணீரை நிலத்தில் சேர்வதை தடுக்கும் பெரிய காரணி இந்த பாலிதீன் குப்பைகள். மனிதன் கண்டுபிடிப்பில் மோசமானது இது என்றால் மிகை இல்லை.

பாலிதீன் குப்பை கழிவுகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதில் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதை உபயோகித்து சாலை போட்டு கூட பார்த்து விட்டார்கள். எல்லாம் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்.

விசயத்திற்கு வருவோம் ஜப்பானிய விஞ்ஞானிகள் நொதிக்கும் பேக்டீரியாவை வைத்து சுத்தமாக அழிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.(சாப்பாட்டை கெட்டுப் போகச் செய்கிறதே ) வேக்ஸ் வார்ம் என்று சொல்லுகிற மெழுகு புழுக்கள் வைத்து அழிக்க முடியுமா? என்று பார்த்தார்கள்...வெற்றி இல்லை.

இந்த நிலையில் ஒரு சம்பவம்...பெட்ரோச்சினி என்ற பெண்மணி ஸ்பெயினில் தேனிக்கள் வளர்ப்பு ஆய்வகத்தில் பணி புரிந்து வருகிறார். தேன் கூட்டை சுத்தப் படுத்தும் போது அதில் இருந்த வேக்ஸ் வார்ம் (மெழுகு கம்பளிப் பூச்சி) யை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கடித்து ஓட்டை செய்து விட்டு தப்பி போயிருந்தது. இந்த புழுவை தேனீக்கள் எதற்கு கூட்டில் வைத்திருக்கின்றன என்று பார்த்தால் சேதார மாகும் தேவை இல்லாத மெழுகுகளை இந்த புழுக்கள் உண்டு சுத்தம் செய்து விடுகின்றன. (தேன் பூச்சிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? ! )

இந்த வகை புழுக்களை Greater Wax Moth என்று சொல்லுகிறார்கள் மேலே சொன்ன ஜப்பான் காரர்கள் ஆய்வு செய்தது வேறு வகை என்று அறிக.
இந்த வகை மெழுகு புழுக்களை வைத்து பாலித்தீனை ஒழித்து விடலாமே...நிற்க அவை சும்மா கடித்து விட்டதா என்றால் இல்லை சாப்பிட்டு விட்டன...அவை சிறு சிறு அழிக்க முடியாத துகள் எச்சங்களா (மைக்ரோப்ஸ்) என்பதையே கவனிக்க வேண்டும். இந்த புழுக்களை பொறுத்த வரை பாலித்தீன்களை சாப்பிட்டு ஜீரணம் செய்து விட்டன. பிறகென்ன அதிக அளவில் இந்த புழுக்களை வளர்த்து விட்டால் போச்சு அப்படியும் செய்யலாம் ஆனால் இயற்கை சூழலை அளவோடுதான் கையாள வேண்டும்.

இப்போதைய முக்கிய விடயம் அதன் வயிற்றில் செறிக்கும் அந்த என்ஸைம்...அதை உருவாக்கி விட்டாலே பாலித்தீன்களை கரைத்து மண்ணில் மக்கச் செய்து விடலாம். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடக்கட்டும் என்று நம்புவோம்....

நன்றி

(கலாகுமரன்)

Download As PDF

Saturday, August 1, 2015

வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு


வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு
இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரும்பாத, எத்தகைய தொழில் நுட்பத்தையும் மேம்பட்ட நாகரீகத்தை நெருங்க விடாத காட்டுவாசி மக்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமானது செய்திதான்.

வங்காள விரிகுடாவில் 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார்த் தீவுக்கூட்டங்களில் ஒன்று தான் "வடக்கு செண்டினல் தீவு " [North Sentinel Island]. இது மியான்மர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் உள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டு கடற்பகுதியில் இருக்கும் இத்தீவோடு சேர்ந்த்து இன்னும் சில தீவுகளுக்கு யாரும் செல்லக்கூடாத பகுதி என்ற தடை போடப்பட்டுள்ளது.

செண்டினல் தீவு வாசிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவில் அந்நியரை அனுமதிப்பதில்லை. மீறிச் செல்பவர்களை அவர்கள் விட்டு வைப்பதும் இல்லை அதாவது அந்த தீவில் நுழைபவர்களுக்கு அது " ஒருவழி பாதை" மட்டுமே திரும்பி வர முடியாது.

அப்படியானால் இதுவரை அத்தீவில் யாரும் நுழைய முயற்சிக்கவில்லையா ? அப்படி சொல்ல முடியாது பத்திரிக்கையாளர்கள், மீனவர்கள், அரசாங்க அதிகாரிகள்,மனித இனத்தைப் பற்றி ஆராய்சிசெய்பவர்கள் (anthropologists )..இப்படி அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் பதில் சொல்ல முடியாது மரணிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்திருக்கு.


சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க காட்டுவாசிகளுக்கும் இவர்களுக்கும் பாரம்பர்ய தொடர்பு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது இவர்கள் 50 முதல் 400 பேர்கள் வரை இருக்கலாம் என்ற புள்ளி விவரம் சரியா எனத் தெரியவில்லை. 28 சதுரமைல்கள் கொண்ட இத்தீவினை முழுக்க முழுக்க காடுகள் சூழ்ந்து உள்ளது கடற் திட்டுகளும் பாசிவகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இம்மக்கள் விவசாயம் ஏது செய்வதில்லையாம் இயற்கை சார்ந்ததே (வேட்டையாடுவது மீன்பிடிப்பது, காட்டில் விளையும் பழங்கள், தாவரங்கள் இவர்கள் உணவு )

1880 ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் [British colonial administrator ] என்பவர் தலைமையில் படை பலத்துடன் இத்தீவில் நுழைந்து இருக்கிறார்கள் ஆனால்  இக் காட்டு வாசிகளை இவர்களால் பார்க்க முடிய வில்லை ஓரிரு நாட்களில் வயதான தம்பதி மற்றும் குழந்தைகளை போர்ட் ப்ளேயருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தம்பதியர் நோய் கண்டு இறந்து விட்டதால் அந்த குழந்தைகளை திரும்ப அத் தீவில் பரிசுப்பொருட்களோடு விட்டிருக்கிறார்கள்...அவர்கள் காட்டில் ஓடி ஒழிந்து விட்டனர். அதன் பிறகு யாரையும் காணாமல் போர்ட்மேன் குழு திரும்பி விட்டனராம்.
1967ல் இந்திய ஆய்வுக்குழு இத்தீவிற்கு சென்று தீவு வாசிகளை நெருங்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர்.

அடுத்து 1970ல் சென்ற குழுவினரும் விற்களால் துறத்தி அடிக்கப் பட்டனர். 1974 ல் ஒரு டாக்குமென்றி படக் குழுவினரின் டைரக்டருக்கு பரிசாக தொடையில் அம்பு புக அலறி அடித்து ஓடி வந்துவிட்டனர்.

இந்திய அரசின் ஒத்துழைப்புடன், எண்பது மற்றும் தொண்னூறுகளில் டி.என்.பண்டிட் ஆய்வு குழுவினர் இரண்டொரு தடவை சென்று சின்ன சின்ன வீட்டு உபயோகப் பொருட்களை உபகரணங்களை இத் தீவில் வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனாலும் அவர்களை அருகில் சந்திக்கவில்லையாம்.
 அதன் பிறகும் இதுவரையிலும் இத்தீவு வாசிகள் வெளியாட்களை தம் பக்கத்தில் அண்ட விடவில்லை.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் இத்தீவு வாசிகள் பலர் மாண்டிருக்களாம் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி செய்யப் போன ஹெலிக்காப்டரையும் விரட்டினார்கள்...எந்த உதவியும் உபத்திரவமும் வேண்டாம் என
உறுதிகாட்டினார்கள்..உலகில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை பார்ப்பதில் இருந்து அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும் !!
Download As PDF

Tuesday, May 13, 2014

வொயுனிச் புத்தக மர்மம்"வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்"


வொயுனிச்  ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக  இருந்தது (இருந்து வருகிறது !)

பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம்.  (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) .   2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"வொயுனிச் கையெழுத்து புத்தகம்" என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.

இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம்.  தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.  மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது.  வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் "அவரால்" தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.


இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?


நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei's compound microscope in 1625 (Galileo had called it the "occhiolino" or "little eye").

நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.

                                                                   " inside book view "                         "constellation of Taurus - ஏழு நட்சத்திர கூட்டம்  Pleiades cluster"

முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.

"க்ளிப்" என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( "குழு குறியிடு") என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக  Centaurea என்ற மலர் " kantairon " என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி - செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]

                                                   Centaurea என்ற மலர் ( kantairon)இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு. ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.


இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.

இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில்  பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked  !! )

மேலும் சில தகவல்கள்


புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான் 

காலம் 1214 - 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.

1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.

1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர்  வில்ஃப்ரெட் வொயுனிச்  கைக்கு வந்தது.

அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.

1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்)  பிரதி உருவாக்கப்பட்டது

2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார்.
Download As PDF

Wednesday, January 8, 2014

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

"ஙப் போல் வளை என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?"  என்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவை வாசிக்க கேட்டு கொள்கிறேன்.


ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.


பண்டைய தமிழ் எழுத்து "ங" வும் பல்லவர் காலத்து 
கொடியையும் விளக்கும் படம்


இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை
Download As PDF

Friday, October 11, 2013

நானூறு மில்லியன் வருட பழமையான இயந்திரம்


கடந்த ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான்.

ரஷ்யாவின் விலாடிவாஸ்டோவில் (vladivostok) அலுமினியத்தாலான 400 வருட பழமையான இயந்திர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

கம்ஷட்கா பெனின்சூலாவின் ஒதுக்குப்புரமான பகுதியில் அதாவது 150 மைல்கள் தொலைவில் உள்ள டைகில் எனும் கிராமத்தில் புதைபொருள் ஆராய்சியாளர்களுக்கு (செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த) புதை படிமம் ஒன்று கிடைத்தது. இது பற்றி யுரி குளோப்(Yuri Golubev)  என்பவர் இது ஒருவகையான கியர் மெசின் போல் இருப்பதாக தெரிவித்தார். இந்த இயந்திர படிமம் (fossil) 400 மில்லியன் வருட பழமையானது.

இந்த இயந்திர படிமத்தின் படமும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி படிமம் பிரான்ஸில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Ancient machine gears embedded in rock

செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தில் யுரி குளோப் என்ற பேராசிரியர் இல்லை.

உண்மையில் இந்த படிமமானது பிரெஞ்சு மியூசியத்தில் வைக்கப்பட்டிக்கு, இதன் காணொளி 2007 ல் வெளிப்பட்டதாக தெரிகிறது.

பின் ஏன் ரஷ்யாவில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது ?

டூரிஸ விளம்பரத்திற்காக ரஷ்யாவில் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்த காணொளியில் வெளியிடப்பட்ட தவறான தகவல் மெசின் படிமம் என்பது. ரஷ்ய செய்தி வெளிப்பட்டபோது இது குறித்து விஞ்ஞானிகள் நிலைத்தகவல் எதையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருப்பின் அவ்வாறு விஞ்ஞானிகள் மெளனியாக இருக்க வாய்ப்பில்லை.

Weekly World News  எனும் செய்தி தளமும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.


சரி உண்மை என்னவாக இருக்கும் ?

முதலில் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயந்திரம் என்பதே ஒரு முரண்.

கிரிநாய்ட் அல்லது கடல் லில்லி என அழைக்கப்படும் கடல் உயிரினத்தின் படிமமாக (crinoids steam fossils) இது இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இது கடலடியில் 6000 மீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு உயிரினம்) இதனுடைய படிமமே பார்பதற்கு கியர்கள் உள்ள இயந்திரம் போல் தோற்றம் தருகிறது.Labels : ஏன் எதற்கு எப்படி, crinoids,crinoids steam fossils,கடல் லில்லி,

Download As PDF

Thursday, August 29, 2013

அழிந்துபோன டைனோசர், பனிக்கால யானை மறு உருவாக்கம் சாத்தியமா?


விஞ்ஞானிகள் சிலர் தீவிரமாக யோசிக்கிறார்கள் அழிந்து போன மிருகங்களை திரும்ப கொண்டுவர முடியுமா ? அப்படி அந்த மிருகங்களை திரும்ப உருவாக்கப்பட்டால் அதனால் என்ன பயன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜுராசிக் பார்க் ஆங்கில திரைப்படம் மைக்கேல் க்ரிக்டன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.  இதில் அழிந்து போன டைனஸோர் மிருகங்களை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்குவதாக கதை.

ஆனால் அந்த கதைப்படி (அந்த டெக்னாலஜி) மேஜிக்கெல்லாம் செய்து மிருகங்களை உருவாக்குவது என்பது நடவாத காரியம்.  இருந்தாலும் மிருகங்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

சைபீரியாவின் வடகிழக்கு மூலைப் பகுதியில் உள்ளது ப்ளைஸ்டோசீன் பார்க் (Pleistocene Park) அழிந்து போன தாவர உன்னிகளான காட்டெருமை, கலைமான், இனங்களை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சடைமுடி யானையை உருவாக்குவது பெரும் சவால்.  பனிப்பாறை பகுதியில் உறைந்து கிடைத்த படிமத்தின் ஜீன் (DNA) கொண்டு திரும்ப அந்த யானையை உருவாக்க முடியுமா?

"பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டுவரும்  சடைமுடி யானை"

லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்த பேராசிரியர் அட்ரியன் லெஸ்டர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த விலங்கை திரும்ப உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

டி.என்.ஏ நுண்தொடர்பிழை உடைந்து போயிருக்கும் ஒருவேலை, அந்த விடுபட்ட பகுதியை இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த கோடிங்கை கண்டுபிடிக்க ஆசிய யானைகள் உதவுமா?

ஒருவேலை ஜீராஸிக் பார்க் கதையில் வருவது போல தவளையின் டிஎன் ஏ இந்த இணைப்பு இடைவெளியை நிரப்புமா? டோலி ஆட்டின் குளோனிங் சிஸ்டத்தை போல (SCNT = somatic cell nuclear transfer) ஆசிய யானையின் கருமுட்டையில் வலு ஊட்டப் பெற்ற மமூத் யானையின் நியூக்ளியஸ் பதிவிடுதல் சாத்தியமா? இதில் பல உள்குத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் லெஸ்டர்.


"மறு உருவாக்க லிஸ்டில் உள்ள வட அமெரிக்க தூது புறா"

"1936ல் அழிந்துபோன டாஸ்மேனியன் புலி"


"பாதுகாக்கப்பட்டு வரும் கடைசி வெள்ளை காண்டாக்கள்"சமீபத்தில் (1936 ? ) அழிந்து போன தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி மறு உருவாக்கம் சாத்தியமென்கிறார்கள்.

நியூசவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா) பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்(palaeontology research குரூப்) இது சாத்தியமென்கிறார். 1990 லிருந்து இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இப்படி விலங்கு மறு உருவாக்க ஆய்வு நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.


பையோ பேங்க்

சாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப  கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.கோவை ஆவி உடன் சேர்ந்து பதிவர்விழாவில் கலந்து கொள்ள கோநேஜீ டிராவல்ஸில்


Download As PDF

Monday, August 26, 2013

கொசுக்களை இயற்கையாக ஒழிக்கும் முறை - தம்பி தங்க கம்பி!


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;


நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.


பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.

source of news : dinamalar dtd. 26.8.13
Download As PDF

Monday, March 11, 2013

எதிர்காலத்தில் குளோனிங் குழந்தை உருவாக்கம் சாத்தியமா?


மனித குளோனிங் குழந்தை இன்னும் 50 ஆண்டு காலத்திற்குள் பிறக்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் சர் ஜான் கர்டன் (Sir John Gurdon).

உடலின் ஒவ்வொரு செல்லும் மரபு அணுக்களை கொண்டு இருக்கும் என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். அதை தொடர்ந்து (1958 ) தவளையின் குடல் செல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ வை பிரிதொரு தவளையின் கருமுட்டையில் வைத்து அந்த தவளையின் குலோனிங்கை  உருவாக்கி காட்டினார். அப்போதைய கால கட்டத்தில் இது மறுக்கப்பட்ட உண்மையாக இருந்தது.


(1996 ) Prof.வில்மத் (Wilmut)டாலி எனும் செம்மறி ஆட்டை குளோனிங் செய்து காட்டினார். இதை தொடர்ந்து Prof.யமனகா (Yamanaka) மனிதனின் முதிர் செல்லை ஸ்டெம் செல்லாக “ரீ புரோக்ராம்” செய்து மருத்துவத்தில் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தினார் (2006) (adult cells can be "reprogrammed" into stem cells for use in medicine. )

ஒரு நோயாளியின் பழுதடைந்த டிஸ்யூ செல்லுக்கு மாற்றாக இன்னொருவரின் தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லினை கொண்டு  உருவாக்கப்பட்ட டிஸ்யூ வை கொண்டு அந்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க முடியும்.

2012 ல் யமணகாவுடன் இணைந்து இவருக்கு (Physiology or Medicine ) நோபல்
பரிசு வழங்கப்பட்டது.


இவரின் 15 ஆவது வயதில் இவருக்கு வழங்கப்பட்ட ரிப்போர்ட் கார்டை சட்டம் போட்டு வைத்திருக்கிறார் 79 வயதான  சர் ஜான் கர்டன். அந்த சர்டிபிகேட்டில் அறிவியலில் இவருக்கு போதிய கவனம் இல்லை என்று குறிபிடப்பட்டிருக்கிறது (தெளிவா சொல்லனும்னா ”too stupit”). அந்த சர்டிபிகேட் உங்கள் பார்வைக்காக.


பள்ளியின் அறிவியல் ரிப்போர்ட் கார்டுடன் ஜான் கர்டன் at Gurdon Institute in Cambridge  

இவரின் அனுமானம்... இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் குளோனிங் உயிரினங்கள் மற்றும் குளோனிங் மனிதன் உருவாக்கப்படலாம்.


ஆனால்...நடைமுறை படுத்துதலில் பல சிக்கல்கள் உள்ளது எதிக்ஸ், சட்டசிக்கல்கள், மனித உரிமை இப்படி.. எதிர்காலம் தான் இதற்கு விடையளிக்கும்...

Download As PDF

Saturday, November 3, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - இறுதிப் பகுதி

 முதலிரண்டு பகுதிகள்

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2


உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் :

சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி)  இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர்.  இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.


பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுரம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுரம் காய்ந்து போன மரம். ( " வாழ்க்கையை சிம்பாலிக்காக உணர்த்துகிறதோ ! )இந்த உடலுக்கு சொந்தக்காரன் உயர்ந்த அந்தஸ்தில்  இருந்திருக்க வேண்டும். கழுத்தில் பதக்கம் போன்று வெண்கலத்திலான கண்ணாடி தொங்கவிடப்பட்டிருந்தது. முகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்திலான முக மூடி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகமூடி நீளமான நாசி மற்றும் சிகப்பு நிறக்கண்கள் வரையப்பட்டிருந்தன. உதடுகள் கீழ் நோக்கி ஒரு சோக எக்ஸ்பிரசனில் இருந்தது. முகமூடியின் நெற்றிப்பகுதியில் வண்ண நீள் கண்ணாடி பாசி மணி மாலையால் சோடிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 1300 அல்லது  1800 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடலாக இருக்கலாம். (வருடங்கள் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை)


பத்து வயது ஆண்குழந்தையின் எலும்புக்கூடும் அருகில் கிடந்தது. அந்தகாலத்தில் பலியிடப் பட்டிருக்கலாம் என்பது ஏதென்சின் அனுமானம் அதன் நிலையை (பொஸிசன்) வைத்து இதை ஊகிக்கிறார் ; உறுதிப்படுத்தப் படவில்லை.

இன்னும் அந்த அறையில் இரும்பிலான குறுவாள்கள், ஒரு மண் தட்டில் பார்லி மாவு, ஒரு காலத்தில் பார்லி பீர் நிறப்பட்டிருந்த தாமிர பாத்திரம், சிறு பாத்திரம் மற்றும் அதை வைக்கும் இரும்பிலான சிறு முக்காலி (tripod), வட்ட கைப்பிடியுடன் கூடிய மரத்தாலான கோப்பைகள், எறுமை மாட்டு கொம்புகள், குதிரை மற்றும் ஆட்டின் தலை மண்டை ஓடுகள் கிடந்தன.  இந்த குதிரை அவனது குதிரையாக இருந்திருக்க வேண்டும்.


ஏதென்ஸ் உண்பதை, தண்ணீர் குடிப்பதை கூட மறந்து இந்த ஆய்வில் ஒன்றி ஈடுபட்டது பாராட்டத்தக்கது.

ஆகாச புதைத்தல் (Sky burial)  :

இதேபோல் மயான குகைகள் சிலவற்றில் அநேக வெட்டப்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.   ( மனித எலும்பு துண்டுகள் 3 முதல் 8 நூற்றாண்டு காலத்தவையாக இருக்கலாம் என்பது அனுமானம்  )


இறந்த சடலங்களில் இருந்து சதைகள் நீக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.  மீதமான எலும்புகள் மற்றும் சதைப்பாகங்கள் வல்லூறுக்கு இறையாக்கப் பட்டிருக்க வேண்டும்.
இது முஸ்டங் பகுதி மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.

76 சதவீதம் இம்மாதிரியான எலும்புகள் கிடைத்துள்ளன

இது கண்டிப்பக கேனிபுலிசம் [ Cannibalism - தன் இன ஊன் உண்ணுதல்  ] ஆக இருக்காது.

இந்த " திபெத்திய ஆகாச புதைத்தல் வழக்கம் "
புத்த மதம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.

முஸ்டங் மம்மிகள் :

இவை எகிப்திய மம்மிகளை ஞாபகப்படுத்துகின்றதா ?

முஸ்டங்கில் மெப்ராக் என்ற இடத்தில் 1995 ல் ஜெர்மன் மற்றும் நேபால் அகழ்வாராய்சியாளர்கள் ஒரு குகையில், ஒரு குழந்தை மற்றும் பெண்ணின் கால் பகுதி மட்டும் மம்மி யாக (பதப்படுத்தி பாது காக்கப்பட்ட உடலங்கள்) கிடைத்திருக்கிறது.


இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும்.   மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள்  கிடைத்தன.  மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன.

"குழந்தை மம்மி"

சுமார் 2000 வருடங்கள் பழமையான உடலங்கள் இவை.  இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.

தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவைகளின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம்.  இவைகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக அதாவது பாகிஸ்தான், இந்தியா,  மற்றும் சில ஈரான் தேசத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.

இவைகள் இம் மக்கள் அந்த தேசங்களுடனான வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை ; இம்மக்களின் செல்வ செழிப்பை பிரதிபளிக்கின்றன.


இந்த கடினமான பணியில் ஈடுபட்ட பெண் நுண் ஆய்வாளர் (Bio archaeologist) ஜேக்குலின் இங் கிடைத்த எலும்புகளை, சதைப்பகுதிகளை ரகம் வாரியாக பிரித்து ஆராய்கிறார்.


சில குடும்பங்கள் இன்றும் இங்கு குகைகள் வசித்து வருகின்றனர்.

எவை எல்லாம் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் சாண்ட்ஜோங் கிராமத்து தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  தன் சொந்த பணத்தை சிறு மியூசியம் அமைக்க கொடுத்து உதவியுள்ளார் ஏதென்ஸ் என்பது குறிப்பிடதக்கது.

தங்கள் மூதாதையரின் சிறப்பு மிக்க வாழ்க்கையை நினைத்து பிரம்மிப்போடு பெருமையும் கொள்கின்றனர் இம்மக்கள்.

இப்பகுதி மக்கள் இக்குழுவினரை மிக்க மரியாதையோடு நடத்தினர். அவர்களை பெருமையாக நினைவு கொள்கின்றனர்.


கிடைத்த மரத்துண்டுகள்,  துண்டு துணிகள், பற்களின் துகள்கள்
வண்ணங்கள் (எந்த தாவரங்களில் இருந்து தாயாரிக்கப்பட்டன போன்ற வேதியல் ஆய்வுகள்) பல இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பற்கள், சில எலும்புகள் DNA ஆய்வுக்காக ஒக்லஹாமா பல்கலை கழகத்திற்கும் (University of oklahoma), உலோகங்கள் லண்டன் பல்கலைகழகத்திற்கும் (university of London) கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் முடிவுகள் பல உண்மைகளை வரலாறுகளை அறிவிக்கப்போகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.Thanks for Mustang people ; archaeology team members : athans, mark Aldenderfer (university of california), Jacqueline Eng - western michigan University, Mohan singh Lama - Nepal's archaeology department  and  National Geography
=====================================================================

"இந்த தொடர் பதிவிற்கு ஆர்வத்துடன் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்திய உள்ளங்களுக்கும், தொடர் வாசகர்களான  சைலன்ட் ரீடர்ஸ்களுக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத் தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்."

- கலாகுமரன்
=====================================================================
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (25) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)