Followers

Showing posts with label ஏன் எதற்கு எப்படி. Show all posts
Showing posts with label ஏன் எதற்கு எப்படி. Show all posts

Saturday, March 17, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 5

பறவைகளின் முட்டை ஏன் ஒரே மாதிரி இல்லை?

பெரும்பாழும் "வெள்ளை லகான் கோழிகள்" செயற்கை கருவூட்டல் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன  இவற்றின் முட்டைகள் (ஓவல்) நீள் வட்ட வடிவில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கின்றன.  மனிதன் உண்பதற்காகவே வளர்க்கப் படும் பறவை இது.   இதே போலவே மற்ற பறவைகளின் முட்டை இருக்குமா? என்றால் இல்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான முட்டைகளை இடுகின்றன.

இங்கு இன்னொன்றை சொல்லி விடுகிறேன் ஆரம்ப காலங்களில் செயற்கை கருவூட்டல் செய்வது முட்டைகளை சாப்பிடுவதற்காக அல்ல. சண்டை கோழிகளை உருவாக்குவதற்காக மட்டுமே இருந்தது.

சின்ன பறவை சிறியது பெரிய பறவை பெரியதாக முட்டை இடும். அதிலென்ன என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு நிறம் அவைகள் உண்ணும் உணவை பொருத்து அவற்றிற்கு நிறங்கள் அமைந்திருக்கலாம். அது அதனது ஜீனை பொறுத்தது என்று எளிதில் சொல்லி விடலாம்.
மலை சிகரங்களின் பொந்துகளில்  வசிக்கும் பறவைகளின் முட்டை எளிதில் உருண்டு போகாதபடி சமச்சீர் எடையோடு இருக்கின்றன.
வேட்டை திறன் பெற்ற  கழுகுகள் , பெரிய ஆந்தைகள் (Brown hawk-owls) முட்டைகள் உருண்டை வடிவம்.நீண்ட தொலைவு பறக்கும் பறவைகளின் முட்டைகள் வடி வத்திற்கும் பறக்காத (கிவி, ஆஸ்ட் ரிச்) பறைகளின் முட்டைகளும் பெருமளவு வித்தியாசப் படுகின்றன.  அதே போல குஞ்சு பொரிக்கும் காலமும் வித்தியாசப் படுகின்றன.


குயில் தன் முட்டையை காக்கை கூட்டில் வைத்து தந்திரமாக அடை காத்து விடுகிறது.

பறவைகள் முட்டையை ஒரே போக்கில் வைத்து அடை காப்பது இல்லை ஒரு நாளில் 2 - 3 முறைகள் முட்டைகளை உருட்டி அடை காக்கின்றன.
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.

Download As PDF

பறவைகள் பலவிதம் - பகுதி 4

உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.

இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.

காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை.  முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின்  சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன்.  இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.

கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.

ஒரு வரலாறும்  உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.

சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று  அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார்.  அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.

பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால்  உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன.  பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை  அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும்.  அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.


இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது.  இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை.  சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை. 
Download As PDF

Friday, April 28, 2017

நெகிழியை அழிக்க புது வழி... சாத்தியமா?


எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட உலகமிது...நெகிழிகளை  "Better Pollutants "[சிறந்த சீர்கேடி] என்று சொல்லுவார்கள். உலக நாடுகளில் பல, தர கட்டுப்பாட்டுகள் விதித்து தடை விதித்திருக்கின்றன.  இந்தியாவை பொருத்த வரை ஏட்டு சுரைக்காய்...டண் கனக்கில் பெரு மலையாக குவியும் இந்த (பிளாஸ்டிக்) பாலிதீன் குப்பைகளை ஒழிப்பது என்பது பெரும் சவால் மட்டுமல்ல இதுவரையில் அளவும் குறைந்த பாடில்லை. இன்றைக்கு தண்ணிர் தட்டு பாடு தலை விரித்தாடுகிறது...மழை இல்லை அதனால் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். தண்ணீரை நிலத்தில் சேர்வதை தடுக்கும் பெரிய காரணி இந்த பாலிதீன் குப்பைகள். மனிதன் கண்டுபிடிப்பில் மோசமானது இது என்றால் மிகை இல்லை.

பாலிதீன் குப்பை கழிவுகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதில் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதை உபயோகித்து சாலை போட்டு கூட பார்த்து விட்டார்கள். எல்லாம் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்.

விசயத்திற்கு வருவோம் ஜப்பானிய விஞ்ஞானிகள் நொதிக்கும் பேக்டீரியாவை வைத்து சுத்தமாக அழிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.(சாப்பாட்டை கெட்டுப் போகச் செய்கிறதே ) வேக்ஸ் வார்ம் என்று சொல்லுகிற மெழுகு புழுக்கள் வைத்து அழிக்க முடியுமா? என்று பார்த்தார்கள்...வெற்றி இல்லை.

இந்த நிலையில் ஒரு சம்பவம்...பெட்ரோச்சினி என்ற பெண்மணி ஸ்பெயினில் தேனிக்கள் வளர்ப்பு ஆய்வகத்தில் பணி புரிந்து வருகிறார். தேன் கூட்டை சுத்தப் படுத்தும் போது அதில் இருந்த வேக்ஸ் வார்ம் (மெழுகு கம்பளிப் பூச்சி) யை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கடித்து ஓட்டை செய்து விட்டு தப்பி போயிருந்தது. இந்த புழுவை தேனீக்கள் எதற்கு கூட்டில் வைத்திருக்கின்றன என்று பார்த்தால் சேதார மாகும் தேவை இல்லாத மெழுகுகளை இந்த புழுக்கள் உண்டு சுத்தம் செய்து விடுகின்றன. (தேன் பூச்சிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? ! )

இந்த வகை புழுக்களை Greater Wax Moth என்று சொல்லுகிறார்கள் மேலே சொன்ன ஜப்பான் காரர்கள் ஆய்வு செய்தது வேறு வகை என்று அறிக.
இந்த வகை மெழுகு புழுக்களை வைத்து பாலித்தீனை ஒழித்து விடலாமே...நிற்க அவை சும்மா கடித்து விட்டதா என்றால் இல்லை சாப்பிட்டு விட்டன...அவை சிறு சிறு அழிக்க முடியாத துகள் எச்சங்களா (மைக்ரோப்ஸ்) என்பதையே கவனிக்க வேண்டும். இந்த புழுக்களை பொறுத்த வரை பாலித்தீன்களை சாப்பிட்டு ஜீரணம் செய்து விட்டன. பிறகென்ன அதிக அளவில் இந்த புழுக்களை வளர்த்து விட்டால் போச்சு அப்படியும் செய்யலாம் ஆனால் இயற்கை சூழலை அளவோடுதான் கையாள வேண்டும்.

இப்போதைய முக்கிய விடயம் அதன் வயிற்றில் செறிக்கும் அந்த என்ஸைம்...அதை உருவாக்கி விட்டாலே பாலித்தீன்களை கரைத்து மண்ணில் மக்கச் செய்து விடலாம். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடக்கட்டும் என்று நம்புவோம்....

நன்றி

(கலாகுமரன்)

Download As PDF

Thursday, April 27, 2017

ஒளி உமிழ் காளான்கள் !நீங்கள் "அவதார் " திரைப்படத்தில் மனதை வசீகரிக்கும் ஒரு காட்சி யை பார்த்திருக்கலாம் "ஒளி உமிழ் தாவரங்கள்,  பூக்கள் , பூச்சிகள் என வர்ண ஜாலம் மிக்க காட்சி அது.

இருட்டில் மின் மினி பூச்சிகள் ஒளிரும் அழகே தனி தான்.   அதைப் போலவே காளான்களும் ஒளியை உமிழ் கின்றன.  இந்த வகை காளான்களை ஆங்கிலத்தில் Neonothopanus gardneri (நியோனொதொபெனஸ் ) என்ற தாவர வகைப் பாட்டியலில் குறிப்பிடப் படுகின்றன.  எளிதாக இவற்றை  "பயோலூமினன்ட்ஸ் " (உயிரியஒளிஉமிழிகள் ) என்று சொல்லலாம்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஜியார்ஜ் கார்டனர்  என்பவர் பிரேசில் நாட்டில் ஒரு மாலை பொழுதில் இவைகளை மின் மினிப் பூச்சிகள் பெரிதாக இருக்கு என பார்த்த போது அவைகள் காளான்கள் எனக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனார்.  பகலில் இவை பார்பதற்கு மரக் காளான்களை போல இருக்கும்.சமீபத்தில் இவைகள் ஏன் பச்சை ஒளியை உமிழ்கின்றன என்பதற்கான காரணத்தை கண்டறிந்தார்கள். காலான்கள் ஸ்பேர்ம் என்று சொல்லக் கூடிய நுண் விதைகள் மூலமாக பரவக் கூடியவை.  இரவில் அந்துப் பூச்சி போல மற்ற பூச்சி இனங்களை இவைகள் கவர்கின்றன. அவற்றின் முலமாக்க நுண் விதைகளை பரவச் செய்கின்றன.

இந்த பச்சையஒளிஉமிழிகள் சுமார் 70 வகைகள் இருக்கின்றனவாம்.
சரி எப்படி இவைகள் ஒளியை உமிழ்கின்றன? (oxyluciferins)(ஆக்ஸிலுஸிஃபர்ன்ஸ் எனும் ஒருவகை என்சைம் இதற்கு காரணம். காற்றில் (ஆக்ஸிஜனோடு) வேதி வினைபுரிந்து ஒளிர் நிறங்களை வெளிப் படுத்துகின்றன. லேசான ஒளியில் இவைகள் ஒளிர் கின்றன. (பார்க்க படம்)சில வகைகள் : Panellus stipticus, Panellus pusillus,Armillaria mellea,Armillaria gallica,Mycena chlorophos,Mycena luxaeterna

(thanks to Science Advances )

Download As PDF

Thursday, April 20, 2017

தாய்ப்பால் வியாபாரச் சந்தை
"எதுவும் வணிகம்"  இப்படியான உலகத்தில் வாழ்கிறோம் இதில் தாய்ப் பால் விற்பனை என்பது இல்லாமலா இருக்கும்.

 தனக்கு பிறக்காத இன்னொரு குழந்தைக்கு தாய் பால் புகட்டுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் பால் சுரப்பில் பிரச்சனையோ அல்லது நோய்வாய் பட்டிருக்கும் சமயத்தில், பசும்பாலை குடிக்கும் பக்குவம் இல்லாத சிசுவிற்கு பால் புகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா ?

கைக்குழந்தை வைத்து இருக்கும் பெண்கள் இன்னொரு தாயான பெண்னை பால் புகட்ட சொல்லி வேண்டுவது உண்டு. இதெல்லாம் இலைமறை காய்மறை சங்கதிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எங்கே அழகு குறைந்து போய் விடுமோவென....குழந்தைக்கு பால் புகட்ட மறுக்கும் பெண்களும்  இருக்கத்தானே செய்கிறார்கள்.  சிசுவிற்கு தாய் பால் புகட்ட வேண்டிய அவசியத்தையும் விளம்பரப் படுத்த வேண்டி இருக்கும் காலமிது.

சரி தலைப்பு செய்திக்கு வருவோம்... ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட இப்போது தாய்பால் விற்பனை என்பது ஜனரஞ்சகமான ஒன்று.  இந்தியாவில் இது இன்னும் பரவலாக்கப்பட வில்லை. சாதி என்ற ஒன்று இந்தியாவில் இருக்கும் வரை அதெல்லாம் மாறப் போவதில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

தாய்பால் விற்பனைக்காக பல தளங்கள் இருக்கின்றன அதில் வால்மார்ட் சக்கை போடு போட்டது என்கிறார்கள்.
ஒன்லி தி ப்ரெஸ்ட்  onlythebreast  எனும் தளம் தாய்பால் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கிறது. இதில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வாங்குவதானலும் விற்பதானாலும். (தளத்திற்கு செல்ல லிங்கின் மேல் சொடுக்கவும் ). எய்ட்ஸ் போன்ற நோய்கள் இல்லாதவரிடம் இருந்தே தாய்பால் பெறப்படுகிறது.

தாய்பால் குழந்தைக்காக வேண்டும் என்பது மட்டுமல்லா ஆண்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்ற விவரமும் இந்த தளத்தில் இருக்கு ஆண்களுக்கு எதற்கு என்றால் இம்யூனல் பிரச்சனை உள்ளவர்கள், அ.து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், விளையாட்டில் (? !) (sports) போன்விட்டா பூஸ்ட் மாதிரி சக்தி ஏற்றி கொள்ளவும் வாங்கி குடிக்கிறார்கள்.  அவுன்ஸ் இவ்வளவு என்று விலை வைத்து விற்கப்படுகிறது அதிலும் கால அளவிட்டிற்கு தகுந்த படி யெல்லாம் இருக்கிறது. ஆனால் முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இத்தகைய விற்பனை  பயில்வானாக மாற ஆசைப் படுபவர்களுக்கு அல்ல. "தாய் பால் குழந்தைகளுக்கானது "


தாய்பால் தரத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா, கனடா இங்கெல்லாம் The Human Milk Banking Association of North America (HMBANA) (எச்எம்பானா )என்ற  அமைப்பு (1985 லிருந்து) செயல்படுகிறது. சந்தை வியாபரம் அற்ற தனியார் அமைப்புகள் கூட இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு பால் இன தம்பதிகள் (கய்) கைக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் இப்படியான ஆன்லைன் சேவையை வரவேற்கிறார்கள்.  தங்களுக்கு பால் கொடுக்கும் கொடுப்பிணை இருந்தால் இத்தகைய வங்கிகளில் சேவை செய்ய ஏக்கமாயிருக்கிறது என்கிறார்கள் ....என்கிறது ஒரு செய்தி குறிப்பு.

தாய் பால் வியாபாரமா? என்பவர்களுக்கு  ஆம் கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பண தேவையில் இருக்கும் பெண்கள் அனேகம் பேர். மாதத்திற்கு சாராசரியாக 20 / 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பவர்களும் உண்டு.
இதெல்லாம் தேவையா தவறான போக்கு என்ற விவாதமும் இல்லாமல் இல்லை. எந்த ஒரு விளைவிற்கும் எதிர் வினை உண்டு என்று நியூட்டனே சொல்லி யிருக்கிறார் (டாட்)
Download As PDF

Saturday, August 1, 2015

வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு


வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு
இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரும்பாத, எத்தகைய தொழில் நுட்பத்தையும் மேம்பட்ட நாகரீகத்தை நெருங்க விடாத காட்டுவாசி மக்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமானது செய்திதான்.

வங்காள விரிகுடாவில் 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார்த் தீவுக்கூட்டங்களில் ஒன்று தான் "வடக்கு செண்டினல் தீவு " [North Sentinel Island]. இது மியான்மர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் உள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டு கடற்பகுதியில் இருக்கும் இத்தீவோடு சேர்ந்த்து இன்னும் சில தீவுகளுக்கு யாரும் செல்லக்கூடாத பகுதி என்ற தடை போடப்பட்டுள்ளது.

செண்டினல் தீவு வாசிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவில் அந்நியரை அனுமதிப்பதில்லை. மீறிச் செல்பவர்களை அவர்கள் விட்டு வைப்பதும் இல்லை அதாவது அந்த தீவில் நுழைபவர்களுக்கு அது " ஒருவழி பாதை" மட்டுமே திரும்பி வர முடியாது.

அப்படியானால் இதுவரை அத்தீவில் யாரும் நுழைய முயற்சிக்கவில்லையா ? அப்படி சொல்ல முடியாது பத்திரிக்கையாளர்கள், மீனவர்கள், அரசாங்க அதிகாரிகள்,மனித இனத்தைப் பற்றி ஆராய்சிசெய்பவர்கள் (anthropologists )..இப்படி அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் பதில் சொல்ல முடியாது மரணிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்திருக்கு.


சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க காட்டுவாசிகளுக்கும் இவர்களுக்கும் பாரம்பர்ய தொடர்பு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது இவர்கள் 50 முதல் 400 பேர்கள் வரை இருக்கலாம் என்ற புள்ளி விவரம் சரியா எனத் தெரியவில்லை. 28 சதுரமைல்கள் கொண்ட இத்தீவினை முழுக்க முழுக்க காடுகள் சூழ்ந்து உள்ளது கடற் திட்டுகளும் பாசிவகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இம்மக்கள் விவசாயம் ஏது செய்வதில்லையாம் இயற்கை சார்ந்ததே (வேட்டையாடுவது மீன்பிடிப்பது, காட்டில் விளையும் பழங்கள், தாவரங்கள் இவர்கள் உணவு )

1880 ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் [British colonial administrator ] என்பவர் தலைமையில் படை பலத்துடன் இத்தீவில் நுழைந்து இருக்கிறார்கள் ஆனால்  இக் காட்டு வாசிகளை இவர்களால் பார்க்க முடிய வில்லை ஓரிரு நாட்களில் வயதான தம்பதி மற்றும் குழந்தைகளை போர்ட் ப்ளேயருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தம்பதியர் நோய் கண்டு இறந்து விட்டதால் அந்த குழந்தைகளை திரும்ப அத் தீவில் பரிசுப்பொருட்களோடு விட்டிருக்கிறார்கள்...அவர்கள் காட்டில் ஓடி ஒழிந்து விட்டனர். அதன் பிறகு யாரையும் காணாமல் போர்ட்மேன் குழு திரும்பி விட்டனராம்.
1967ல் இந்திய ஆய்வுக்குழு இத்தீவிற்கு சென்று தீவு வாசிகளை நெருங்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர்.

அடுத்து 1970ல் சென்ற குழுவினரும் விற்களால் துறத்தி அடிக்கப் பட்டனர். 1974 ல் ஒரு டாக்குமென்றி படக் குழுவினரின் டைரக்டருக்கு பரிசாக தொடையில் அம்பு புக அலறி அடித்து ஓடி வந்துவிட்டனர்.

இந்திய அரசின் ஒத்துழைப்புடன், எண்பது மற்றும் தொண்னூறுகளில் டி.என்.பண்டிட் ஆய்வு குழுவினர் இரண்டொரு தடவை சென்று சின்ன சின்ன வீட்டு உபயோகப் பொருட்களை உபகரணங்களை இத் தீவில் வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனாலும் அவர்களை அருகில் சந்திக்கவில்லையாம்.
 அதன் பிறகும் இதுவரையிலும் இத்தீவு வாசிகள் வெளியாட்களை தம் பக்கத்தில் அண்ட விடவில்லை.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் இத்தீவு வாசிகள் பலர் மாண்டிருக்களாம் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி செய்யப் போன ஹெலிக்காப்டரையும் விரட்டினார்கள்...எந்த உதவியும் உபத்திரவமும் வேண்டாம் என
உறுதிகாட்டினார்கள்..உலகில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை பார்ப்பதில் இருந்து அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும் !!
Download As PDF

Saturday, June 27, 2015

லேடி பக்கை அடிமையாக்கும் குளவிநமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் லேடி பக்கை அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

நீண்டகாலமாக விஞ்ஞானிகளுக்கு பிடி படாத மர்மம் ஏன் இந்த லேடி பக் குகள் குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது லேடிபக்கை ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது.  பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.குளவி லேடி பக் கின் உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும்.  லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்.

=================================

Download As PDF

Thursday, May 7, 2015

சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கும் ஜப்பானியர்கள்...உணவே மருந்து எனச் சொல்கிறோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்களிலும் நஞ்சு இருக்கிறதே.

கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதை தின்றவன் ?  என்று கேட்பார்கள்.


இப்போதெல்லாம் காளான்கள் பெரும்பாளானவர்கள் விரும்பி சாப்பிடும் பண்டம் ஆகிவிட்டது. காளான்கள் உடலுக்கு நல்லது தான்.

காட்டுக்காளான்கள் எனச் சொல்லப்படுகின்ற மரணத்தொப்பி (Death Cap),
அழிக்கும் தேவதைகள் ( Destroying Angels), கொடிய வலைநிழம்பி (Deadly Webcap ) இவை எல்லாம் நச்சுக்காளான்கள்.மேற்கு ஆப்பிரிக்க, ஜமைக்காவிலே  அக்கி (அத்தி அல்ல) எனற பழம் இருக்கிறது. இது நச்சுடையது ஆனால் அதுவே நன்கு பழுத்து (சிவப்பு) வெடித்த பின்னால் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் சதைப்பகுதியை மட்டும் கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல சுவை உடையதாம்.
மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட்டால், இந்த பழத்தில் இருக்கும் நஞ்சு ஹைப்போகிளைசின் (hypoglycin)பாதிப்பால் வாந்தி பின் ஹோமா நிலைக்குப் போய் பின் இறந்து போய்விடவும் வாய்ப்பு உண்டாம். இன்னொரு
சுவையான  ( ? ! )தகவல் அக்கி ஜமைக்காவின் தேசியப் பழம்.

மனிதர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள். ஆமாம் பாம்புகளை சாப்பிடுவார்கள் தெரிந்தது தானே என்கிறீர்களா..?

பலாபழத்தில் முள் இருப்பதற்காக சாப்பிடாமல் விடுகிறோமா.. ஆனால் ஜப்பான் நாட்டில் கொடிய விசமுள்ள மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள்.  ஃபூகு  ( fugu ) எனும் மீன் கொடிய விசம் உடையது. சயனைடைக் காட்டிலும் 1200 மடங்கு விசத்தன்மை இதன் உடலில் இருக்கு.  இந்த விசம் ட்ரொடோடோக்சின் [  tetrodotoxin ]. ஒரு மீனின் விசம் 30 நபர்களை கொன்று விடும். ஃபூகு விலை அதிகமானாலும் சுவைக்காக உயிரை பணயம் வைத்து சாப்பிடுகிறார்கள்...ஜப்பானியர்.அதெப்படி விச மீனை சாப்பிட முடியும் ? அந்த மீனின் சில பல (eyes, intestines, ovaries and liver) உறுப்புகளைத் தவிர்த்து மற்ற பாகங்கள் விசம் இல்லாதவை. அந்த பாகங்களை  பக்குவமாக எடுத்து மெலிதாக வெட்டி பல தடவை தண்ணீரில் கழுவி பின் சமைக்கிறார்கள்.  இதை எல்லோராலும் சமைத்து விட முடியாது அதற்கென்று 3 வருட படிப்பை முடித்து லைசென்ஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.  அரசின் அனுமதி பெற்ற நிறுவனமே உணவை தயாரிக்க முடியும். விசமுடைய பாகங்களை எரித்து விடுகிறார்கள்.  ஃபூகு மீனில் 40 வகைகள் இருக்கிறதாம்..ஜப்பானியர்கள் வருடத்தில் 10000 டண் மீன்களை தின்று தீர்க்கிறார்கள்.சமைப்பதற்காக வெட்டி பக்குவப் படுத்தும் ஃபூகு ... விருப்பம் இருப்பவர்கள் இந்த காணொலியை பார்க்கலாம்.
Rhubarb எனப்படும் வரியாத்து கிழங்கு இதில் தண்டுப் பகுதியை சாப்பிடலாம் இலையை ஒதுக்கி விடவேண்டும்.

tuna, mackerel, bluefish , mahi-mahi இந்த மீன்களையும் ஃபூகு லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

 டியூனா எனும் மீனை கர்பினிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிற்க வேண்டுமாம். இந்த மீனில் hypoglycin ஹைபோக்ளைசின் நச்சு இருக்கிறது.  இதில் உள்ள மெர்குரி அளவு நரம்பு சம்பந்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.

Download As PDF

Friday, January 23, 2015

வற்றிப்போன கடல் !

1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்...


சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு )
1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது
மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

image in 1989

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்.

Images 2000 and 2014 (Naza)

As of June 1, 2010, 500,000 cubic meters of gas had been extracted from the region at a depth of 3 km

Label : Aral sea, ஏரல் கடல், ஆரல் கடல்,

Download As PDF

Thursday, June 12, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?

பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.


நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின்  சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம்.   அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.


சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு  வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.


ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.


ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்...(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )

சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க...ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா,  சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது
இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.

நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.

தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.  (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)

வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின்  கை தானா  அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.

நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.

நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!)   நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம்
ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான்  மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.

மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )

உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)

நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை  இழுத்து விடுவது இல்லை.  அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.

இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை  ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண்  சலிவா உற்பத்தியாகுதாம்.


பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர  206 ஆக
குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே
மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.


* * * * * * * * * * * * * * *
Download As PDF

Thursday, May 29, 2014

(எங்கே ஏன் எப்படி ?) ஒரு காகிதத்தை எத்துனை மடிப்புகள் மடிக்கலாம் ?


வெறும் கண்ணால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் பார்க்க முடியும் ?மேகக் கூட்டம் இல்லா நிலையில் விண்மீன் கூட்டம் அல்லது விண்மீன் திரள் நம் பார்வைக்கு எட்டுமா என்றால் எட்டுகிறது ஆனால் சற்று கூர்ந்த கவனிப்பு தேவைப்படும். சரி அப்படியானால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் கவனிக்க (அ) அவதானிக்க முடியும் என்றால் நம் சூரிய மண்டலம் இருக்கும் கேலக்ஸி அதாவது பால்வெளி மண்டலம் மற்றும் 3 கேலக்ஸிகளை பார்க்கமுடியும். அதிலும் சிக்கல் என்னவென்றால் 2 கேலக்ஸிகள் வட கோளார்த்தப் பகுதியிலும், 2 தென் கோளார்த்த பகுதியிலும் தெரியும்.

வட கோளார்த்தப் பகுதியில் பால்வெளி மண்டலமும்(Milky Way ), ஆன்ரோமெடா Andromeda (M31), தெரியும்  தென் கோளார்த்தப் பகுதியில் மெகா லித்திக் க்ளவுடுகள் சின்னதும், பெரிதும்( Magellanic Clouds.) தெரியும்.

M33 ( in Triangulum), M81 (in Ursa Major) மற்றும் M83 (in Hydra) இவைகள் தெரியும் என்கிறார்கள் ஆனால் இவை தெரியுமெ என நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் எந்த ஒரு கேலக்ஸியும் வெறும் கண்ணால் முழுமையாக தெரியாது. (பார்க்கவும் முடியாது !)

ஒரு கேலக்ஸியை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க இயலும். இந்த பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் இருப்பதாக ஒரு கணக்கீடு உண்டு. ஒவ்வொரு கேலக்ஸியும் 10 முதல் 100 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

வெறும் கண்ணால் எத்தனை நட்சத்திரங்கள் பார்க்க முடியும் என்றால், 10000 ஆயிரம் என்கிறார்கள் அதுவும் தவறு  2,873 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்கமுடியும் (நீங்க வேனா எண்ணிப் பார்த்துக்கோங்க....அவ்..)

**GALAXY - விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்

நிலவில் இருந்து பார்க்கும் போது பூமியில் மனிதனால் கட்டப்பட்ட சீன மதில் சுவர் தெரியுமாமே ?


வானத்தில் இருந்து பார்த்தால் அதாவது சுமார் 100 கி.மீ தூரத்தில் இருந்து பூமியின் கட்டிடங்கள் தெரியும் அதற்குமேல் உயரே சென்றால் தெரிய வாய்ப்பு இல்லை.  நிலா பூமியில் இருந்து 4,00,000 கி.மீ தொலைவில் இருக்கு. அங்கிருந்து நிச்சயமாக சீன மதில் சுவர் தெரிய வாய்ப்பே இல்லை தானே.

கண்ணாடியை சீனர்கள் கண்டுபிடிச்சாங்களா ?


கண்ணாடி போன்ற பீங்கான் பொருள் ஹான்   வம்சத்து காலத்தில் சீனாவில் இருந்து இருக்கு அதாவது இந்த ஆண்டுகளில்...(206 BC–AD 220) ஆனா அதுக்கு முன்னாடியே 1350 BC ல் எகிப்தில் கண்ணாடி பொருட்கள்,கண்கவரும் வண்ண கண்ணாடி அணிகலன்கள்  இருந்து இருக்கு.


நமது சூரிய குடும்பத்தின் உயரமான மலைச்சிகரம் எந்த கோளில் உள்ளது?


"ஒலம்பஸ் மான்ஸ் " என்று செல்லமாக அழைக்கப்படும் ஒலம்பஸ் எரிமலை சிகரம் செவ்வாய் கிரகத்தில் இருக்கு. இதன் உயரம் சுமார் 22 கிலோ மீட்டர்கள், சுற்றளவு சுமார் 624 கி.மீ கள், எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர்கள் அதை விட மூன்று மடங்கு உயரம் உள்ளது.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிமலை சீற்றம் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

அறை வெப்பத்திலேயே உருகிவிடும் உலோகம் இருக்கிறதா ?

                                                                                 "Gallium"

பாதரசம் (mercury) காலியம்(மென் தங்கம்) ( gallium ), சீசியம்( caesium), மற்றும் ப்ரான்சியம் ( francium) இந்த உலோகங்களை சொல்லலாம். கேலியம் மைக்ரோ சிப்புகளிலும், டிவிடி ப்ளேயர்களிலும், லேசர் லைட் எந்திரத்திலும் பயன் படுத்தப் படுகிறது.

சீசியம் அணு கடிகாரத்தில் உபயோகிக்கப் படுகிறது. சீசியம் என்றாலே ”ஆகாயநீலம்” அதே போல அந்த நிறத்தை வெளிப்படுத்தும். தண்ணீருடன் எதிர் வினை (explodes)புரியக்க்கூடியது.

ப்ரான்சியம் ரேடியோ கதிர் தன்மை கொண்ட இயற்கையில் கிடைக்கும்  தனிம வரிசையில் கடைசியில் கண்டுபிடிக்கப் பட்டது.

மழைபெய்யும் போது மண்வாசனையை நாம் நுகர்கிறோம் அதுபோல நிலவின் புழுதி வாசம் எப்படி இருக்கும் ?

நிலவின் புழுதி வெடி மருந்து (Gun powder) வாசனை அடிக்கிறதாம்.

பூமியை ஒரே ஒரு துணைக்கோள் தான் அதாவது நிலா தான் சுற்றிவருகிறதா ?

பூமியின் துணைக்கோள் நிலா தான் ஆனால் அதே போல 7 அஸ்ட்ராய்டுகளும் பூமியோடு சேர்ந்து சுற்றி வருகிறதாம். (the snappily named Cruithne ,2000 PH5, 2000 WN10, 2002 AA29, 2003 YN107 and 2004 GU9) கார் பந்தயத்தில் வெவ்வேறு டிராக்கில் ஒரே வேகத்தில் நீள் வட்டமாக சுற்றும் கார்களைப் போல.  ஆனால் எவ்வளவு பெரிய அஸ்ட்ராய்டாக இருந்தாலும் அதை கோள் என சொல்வது இல்லை.

நம் சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருக்கா இல்லையா?

எட்டு என்று தான் சொல்ல வேண்டும். 2006 ஆகஸ்டில் கூடிய அஸ்ட்ரானாமிகல் கூட்டமைப்பு இதைத்தான் உறுதி செய்தது.

காற்றில் கலந்துள்ள முக்கிய மூலங்கள் எவை எவை ?

ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன், நைட்ரஜன் இந்த நான்கில் மிக முக்கியமானது நைட்ரஜன் தான். 78  சதவீதம் பூமியில் நிறைந்துள்ளது.  21 சதவீதத்திற்கும் குறைவானது ஆக்ஸிஜன். 300 ல் ஒரு சதவீதம் கார்பன் டை ஆக்ஸைட். இந்த பூமி உருவாகும் போது எரிமலை வெடிப்புகளில் அதிக அளவில் வெளியானது நைட்ரஜன்.  ஹைட்ரஜன் ஹீலியம் இவைகளை காட்டிலும் ஹெவியானது. புவியின் காற்று மண்டலத்தில் விரவி தங்கி விட்டது என்று சொல்லப்படுகிறது.  76 கிலோ (கி) உள்ள மனிதனில் சுமார் 1 கிலோ (கி) நைட்ரஜன் இருக்கும் (தனிம வடிவில்). வானம் நீலநிறமாக தோற்றம் தருவதற்கும் நைட்ரஜன் ஒரு காரணம்.


கையால் ஒரு காகிதத்தை ஒன்றன் மேல் ஒன்றாக திரும்ப திரும்ப எவ்வளவு தடவை மடிக்க முடியும்?

பல பேர் இதை சோதித்தும் பார்த்து இருக்கலாம் A4 அளவு காகிதத்தை எடுத்து மடித்து பின் மடித்து பின் மடித்து இப்படியே செய்தால் 5 முறைக்கு மேல் அதை மடிக்க முடியாத கனம் ஆகிவிடும். (ஒவ்வொரு முறை மடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும்)

டிசம்பர் 2001 ல் அமெரிக்க பள்ளி மாணவி ( Britney
Gallivan ) இதற்கான சூத்திரம் (பார்முலா ) ஒன்றை கண்டுபிடித்தார்.

 
W is the Width of the paper, L is the Length , t is the thickness, and n is the number of folds.

The first equation describes folding a piece of paper in half in
one direction and then the other, alternately; the second one describes folding it in one direction only

இதில் முதல் பார்முலா காகிதத்தை முதலில் பாதியாக மடிக்கிறோம் பின், பின் மடிக்கும் போது திசையை மாற்றி மாற்றி மடித்தால் ;

இரண்டாவது பார்முலா காகிதத்தை ஒரே மாதிரியாக மடித்தால் ;

பிரிட்டனி இதற்காக இரண்டு விதமான காகிதங்களை பயன் பயன்படுத்தினார் 1. மிக மெல்லிய தங்க  தகடு (சதுர வடிவம்)
2. 4000 அடி நீளமான டாய்லட் பேப்பர்

தங்க காகிதத்தை ஒன்று விட்டு ஒன்று திசையில் (in alternate directions) ;
டாய்லட் பேப்பரை ஒரே திசையில் (நீளவாக்கில்) மடித்து காட்டினார். இந்த முறையில் 12 மடிப்புகளை மடித்துக் காட்டினார்.

ஆனால் இதே மாதிரி சாதாரண A4 அளவு பேப்பரை மடிக்க முடியவில்லை. (அதிகபட்சம் 5 மடிப்புகளையே மடிக்க முடியும்)

10 அடி நீள முள்ள மெல்லிய பேப்பரை எந்த கருவியையும் பயன் படுத்தாமல் அதிக பட்சம் ஒன்றன் மேல் ஒன்றாக 8 மடிப்புகளை மடிக்க முடியும்.

Download As PDF

Monday, April 28, 2014

எங்கே, ஏன், எப்படி ?


எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?

நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo  sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம்.  சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை  வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்,  ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.


இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.

*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment

புதிர் 

ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?

எப்படி  ? பதில் பதிவின் இறுதியில்.


பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?

1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.

சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது.  அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.   அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.


அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ? பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.

இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது.  அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது.  ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ?  இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.


விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில்  PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.  ( ??)

கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.

க்யூப் வடிவதர்பூசணி  எப்படி விளையுது ?சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி

2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.

எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.
Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு


Download As PDF

Thursday, January 2, 2014

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

வெகு ஜனங்கள் நின்று போய்விடும் நகரும் படிகட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏறுவதற்கு தடுமாறுவதை பார்க்கிறோம்.

அதே போல புதிதாக அதில் ஏறுவதற்கு பெண்கள் உள்ளூர பயப் படவும் செய்கிறார்கள். (முக்கியமாக சேலை அணிந்திருப்பவர்கள்). குழந்தைகள் இதை பழகிக் கொண்டால் அதில் போய் வருவதையே கொண்டாட்டமாக உணர்கிறார்கள்.

நாலஞ்சு தடவை அதில் ஏறி இறங்கி பழகி விட்டால் மூளை அதன் இயக்கத்தை அனுமானித்து விடுகிறது பதிவும் செய்து வைக்கிறது.

சரி ஓடிக் கொண்டு இருக்கும் எஸ்கலேட்டர் நின்றிருக்கிறது அதில் மேலே ஏற முயற்சிக்கிறீர்கள் தடுமாற்றம் ஏற்படுகிறது ஏன்?

காதுக்குள் இருக்கும் நுண்ணிய நரம்பு முடிச்சு எதிர் பாராத உடல் தகவமைப்பை மூளைக்கு உணர்த்தும் வேலையை செய்கிறது.  நின்றிருக்கும் எஸ்கலேட்டர் என்பதை அதில் ஏறி முடிக்கும் வரை பல தடவைகள் மூளை சூழ்நிலையை கால்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.  (ஸ்டீல் படிகள், வடிவமைப்பு இப்படி). இதன் காரணமாகவே சாதாரணமாக படிகளில் ஏறுவதற்கும் நகரும் படியில் ஏறிச் செல்வதற்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதை உள்ளுணர்வு தடுமாற்றம் (ஆங்கிலத்தில் "Broken escalator phenomenon" ) என்று சொல்லலாம்.

இங்கிலாந்து இம்பீரியல் காலேஜில் 2004ல் இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் (ஓட ஓட நிறுத்தி) சுமார் 20 யோசனைகளுக்குப் பிறகே சாதாரணமாக மூளை இது இயங்காத "படி" நிற்காமல் நடக்கலாம் என்பதை உணர்த்துவதாக அறியப்பட்டது.

இந்த தடுமாற்றம் யாவருக்கும் பொதுவானதே.Download As PDF

Friday, November 8, 2013

புதிர் படம் Mysterious writing


Serge Raynaud de la Ferrière (18 January 1916 – 27 December 1962) செர்ஜி ரைநாட் பெரைரே என்பவர்  பிரெஞ்சு தத்துவவாதி.  இவர் 43 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். யுனிவர்ஸல் கிரேட் ப்ராதர்குட் (Universal Great Brotherhood ) என்ற அமைப்பை 1948 ல் வெனினிசுலாவில் நிறுவி இருக்கிறார்.  அதில் அறிவியல், கலை, சமயம், (யோகா) சம்பந்தமான போதனைகளை செய்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று The Psychological Proposals.

இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றில் கீழ் காணும் படத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.  இதை இவர் இந்தியா திபெத் பயணத்தின் போது ஒரு யோகியிடம்  இந்த படத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் Triangle of Light என குறிப்பிடப் பட்டு இருக்கிறது.
புதிரான இந்த படத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களுக்கு புரிகிறாதா ? என பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

 
Download As PDF

Saturday, October 26, 2013

மூளைக்கு வேலை புதிரின் விடை இந்த பதிவில்


இந்த புதிரில் உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா ? என்பதே கேள்வி.

இந்த காணொளியை பாருங்கள்அதாவது ஒன்றுடன் ஒன்று அச்சில் இணைக்கப்பட்ட மூன்று தொடர் பல் சக்கரங்களில் முதல் சக்கரம் வலப் பக்கம் சுழன்றால் மூன்றாவது சக்கரம் வலது பக்கம் திரும்பும்.   முதல் சக்கரம் இடது பக்கம் திரும்பினால் இணைப்பில் உள்ள மூன்றாவது சக்கரம் இடப்பக்கம் திரும்பும்.
இந்த படத்தில் மொத்தம் 17 பல் சக்கரங்கள் இருக்கு (அதாவது ஒன்றைப் படை) முதல் பல் சக்கரம் இடது புரம் திருப்பப்படுகிறது  இறுதியில் இருக்கும் சக்கரம் இடது புரம் தான் திரும்ப வேண்டும்.

 


ஆனால் இந்த தொடர் இணைப்பின் நடு நடுவில் நாடாவால் (belt ) இணைக்கப்பட்டு உள்ளது அதனால் உறுதியாக மேல் சொன்னது போல் முடிவை சொல்ல முடியாது.  இந்த பெல்ட் தான் இந்த புதிரின் டிவிஸ்ட்.   இடையில் இரண்டு டிவிஸ்ட்டான பெல்டுகள் இருக்கே அதனால சக்கரம் சுத்தாம நிக்குமா ? என்றால்  நிற்காது. வேகம் வேணா குறையும்.

இரண்டு சக்கரங்கள் பெல்டால் இணைக்கப்பட்டால் முதல் சக்கரம் வலதுபுரம் சுற்றினால் இரண்டாவது அப்படியே தான் சுற்றும்.

ஆனால் பெல்ட் டிவிஸ்டாகி இருந்தால் முதல் சக்கரம் வலது புரம் என்றால் இரண்டாவது இடது புரம் சுற்றும்.

(வைஸ்வெர்சா  இடதுன்னா வலது)

இந்த விளக்கப் படம் புதிரை விடுவிக்கிறது.

புதிருக்கான விடை :  இரண்டு (2)

கலந்து கொண்டவர்களில்
55 % பேர்  ஒன்றை தொடும் என்றும்
36 %  பேர் இரண்டை தொடும் என்றும்
4%  பேர் சக்கரம் சுற்றாது என்றும் பதில் அளித்திருந்தார்கள்.

புதிரை விடுவிக்க கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கீழே உள்ள படத்தில் ஒரு எலி கலாட்டா செய்கிறது.  அந்த எலி எங்கே ? என்று கண்டுபிடியுங்கள்.


கீழே உள்ள படத்தில் ஒரு  " C "  ஒளிந்திருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா ?
Download As PDF

Wednesday, October 23, 2013

ஐ-பேட் மேஜிக் டிரிக் என்ன?


அந்த கால இந்தியாவில் நடுத் தெருவில் செய்து காட்டப்படும் ஒரு மேஜிக் வெளி நாட்டினரே அதிசயத்தது.  கயிறு பாம்பாட்டி வாசிக்கும் மகுடிக்கு தகுந்த படி நட்டமாக கம்பு போலே எழும்பி நிற்குமாம், சிறுவன் ஒருவன் அதமேல் ஏறி நிற்பானாம். நான் இந்த மாயாஜாலத்தை பார்த்தது இல்லை (இந்த மேஜிக் புகைப்படம் கீழே)   காலம் மாறும் போது டெக்னாலஜியும் வளர்கிறது அது போல மேஜிக்கின் வளர்ச்சியும் அதற்கு தகுந்தார் போல் மாற்றம் பெறுகிறது.


யு-டியூபில் வெளிவந்திருக்கும் இந்த ஐ-பேட் மேஜிகை பலரும் பார்த்து வியந்து இருக்கலாம்.

இந்த ஐபேட் மேஜிக்கிற்கு மூன்று முக்கிய அம்சங்கள் வேண்டி இருக்கும்

1. டைமிங் சென்ஸ் - நொடிக்கு தகுந்தாற்போல நுணுக்கமான அசைவுகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

2. ஏற்கனவே திட்ட மிட்டு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், அதை புரிந்து செயல்படுவது மிக மிக அவசியம்.

3. வீடியோவில் சம்பந்தப்பட்ட மேஜிக் டிரிக் பொருட்கள்.


இந்த ஐபேட் மேஜிக் அவர் செய்வதற்கு கண்டிப்பாக தீவிர பயிற்சி செய்திருப்பார். இவர் திறமையான மேஜிக் நிபுணர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த விளக்கமெல்லாம் நான் இங்கே சொல்ல காரணம் எதையும் நம்பாமல் கொஞ்சம் யோசித்து பார்க்கவேண்டும் ஏமாற்றுகாரர்கள் நிறைந்த உலகம் இது என்பதை சொல்வதற்கே.  இந்த மேஜிக் நிபுணரை தரம் தாழ்த்துவது எம் நோக்கமல்ல.


முதலில் மூன்றரை நிமிசம் ஓடக்கூடிய இந்த விடியோவைப் பாருங்கள். பிறகு என் விளக்கத்தை படியுங்கள்.


தயாராக வைக்கப்பட்டிருக்கும் இந்த நவீன மேஜிக் பெட்டியின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்கிறார். உட்கார்வதற்கு முன் சேரில் முன்னமேயே வைக்கப்பட்ட ஐபேடை கையில் எடுக்கிறார். இந்த ஐபேட் பின்னாடி, முன்னாடியே போட்டோ ஒட்டி வைச்சிருக்கார். லாகவமாக அதை கையில் எடுத்து ஐபேடை ஆன் செய்கிறார்.

ஐந்து வரிசை கொண்ட ஐகான்கள் நிறந்திருக்கும் படி ஐபேடில் செட் செய்து வைத்திருக்கும் படங்களை டச் மூலமாக அவற்றை நகர்த்திக் காட்டி டக் கென பின்னாடி இருக்கும் படத்தை வெளியே எடுக்கிறார் (கவனிக்க ஐபேட் முன்னாடி இருந்து இல்லை பின்னாடி இருந்து)
போட்டோவை மேஜிக் பாக்ஸில் வைத்த கையோடு அங்கிருந்த நூலோடு இணைந்த பிளாஸ்டிக் மணியை எடுத்து கையினுள் மறைத்து வைத்துக்கொள்கிறார். பேசிக்கொண்டே விடியோவை ஆன் செய்கிறார். நம் கவனம் முழுவது அவர் பேசுவதில் தான் இருக்கும்.  மிகச்சரியாக தொங்கும் மணியை எடுக்க கையை ஐபேடினுள் விடுவது போல் பாவனை செய்கிறார். நூலில் இருக்கும் பசையை அழுத்தி ஒட்டிய படியே வெளியே இழுத்து அது ஐபேடிகுள் இருந்து எடுப்பது போல பாவனை செய்கிறார். (சில நொடிகளில் நடக்கும் செயல் என்பதால் இது கண்டிப்பாக நம்மால் அவர் செய்வது என்ன என்பது தெரியாது)

பிளாஸ்டிக் மணியை மேஜிக் பாக்சில் போட்டு தயாராக அங்கு இருக்கும் சின்ன போட்டோவை உள்ளங்கைக்குள் மறைத்து எடுத்துக் கொள்கிறார்.

அடுத்து ஒரு இமேஜை கிளிக் செய்து அந்த இமேஜை விரல்களால் சுருக்கி டக் கென்று உள்ளங்கைக்குள் மறைத்து வைத்திருந்த போட்டவை ஐபேட் மேலிருந்து எடுப்பதாக காட்டுகிறார்.

அடுத்து ஒரு ஃப்ளாஸ் (flash image - sleeping mode of sun ) இமேஜை கிளிக் செய்கிறார் அதில் நகரும் சூரியனை சுட்டுவிரலால் நகர்த்துவது போல் செய்து காலை மதியம் மாலை இரவு என்று நான்கு எஃபக்ட்டும் விரலால் நகர்த்தும் சூரியன் தான் என்பதை நம் மூளையில் பதிய வைக்கிறார். (கில்லாடி)

அடுத்து வரும் இந்த மேஜிக் (டென்னிஸ் பால்) மிகத்திறம்பட இம்மி பிசகாமல் செய்யப் பட வேண்டிய அபூர்வமானது.

வலது கையால் டென்னிஸ் பந்தை எடுத்துக் கொள்கிறார் அதை லாவகமாக ஐபேடை வைத்து மறைத்தபடியே ஐபேடின் பின்னால் அழுத்தி பிடித்து கொள்கிறார். டென்னிஸ் பந்து இருக்கும் வீடியோ இமேஜை பெரிது படுத்து வதுபோல் செய்கை செய்து ஐபேடின் பின்னால் நழுவ விடும் பந்தை இடது கையில் பிடித்து வைத்து கொள்கிறார் (இப்போது கையை அவரால் விரிக்க முடியாது)அதன் பின் ஐபேடிற்குள் எடுப்பது போல் உள்ளங்கையில் வைத்திருக்கும் பந்தை காட்டுகிறார். அதன் பின் ஐபேடினுள் வைத்து அமிழ்த்துவது போல் பாவனை செய்கிறார். ஆனால் உண்மையில் அவர் இடது கையிலேயே இருக்கிறது.  ஐபேடின் பின்னால் இரண்டு கைகளின் நடு விரல்களை பயன் படுத்தி பிடித்தபடியே நகர்த்தி வலது கையில் வைத்து ஐபேடை திரும்பி காட்டி பின் நெஞ்சோடு சேர்த்தணைத்து பின் கீழாக நழுவவிட்டு அசத்துகிறார்.

அடுத்த வீடியோ ஓடுகிறது ஓரப்பகுதியில் வாயால் ஊதுவது போல் செய்கிறார் வீடியோவில் வரும் நீயூஸ் ரீடரின் தலைமுடி பறக்கிறது.


அடுத்து நேரடி ஸ்கைபை போல சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சி.

உள்பகுதி ரூமில் இருக்கும் நபர் ஸ்டாரவை உயர்த்திப் பிடிக்க அதை இவர் ஐபேட் உள்ளிருந்து எடுப்பது போலவும். அந்த நபர் கையில் வைத்திருக்கும் குளிர் பானத்தை இவர் உறிஞ்சி குடிப்பது போலவும் அமைக்கப்பட்டது.

இதற்கு இவர் ஸ்டாராவை வலது கையில் மறைத்து பிடித்து வைத்து செய்து விடுகிறார். ஸ்டாராவை தூக்கி போட்டுவிடுகிறார்.

அடுத்து செம்மையான ஒரு மேஜிக் பாலை வீடியோவில் தெரியும் நபரின் தலை மேல் ஊற்றுவது.

மேஜிக் பெட்டியில் இருந்து பால் நிரம்பிய கண்ணாடி டம்ளரை எடுத்து ஐபேடில் உள்ளிருக்கும் நபரின் தலைமேல் பாலை ஊற்றுகிறார் பால் எங்கும் வெளியே சிந்துவது இல்லை.

இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒன்றினுள் ஒன்று அமிழ்த்தி வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர் (பளாஸ்டிக்காகவும் இருக்கலாம்) இரண்டு டம்ளர்களின் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் கொஞ்சூண்டு பால் நமக்கு முக்கால் கிளாஸ் இருப்பது போல தோற்றம் தருகிறது. மேல் பகுதி மூடியுடன் இருக்கும்.  உள்ளிருக்கும் கண்ணாடி கிளாசை மேலாக தூக்கினால் பால் கீழே போய் விடும். கவனித்து பார்த்தால் காட்சியின் இறுதியில் டம்ளரில் கொஞ்சூண்டு பால் மீதம் இருக்கும்.

நீங்கள் செய்ய முடியுமா? என்று என்னை கேட்டால் என்னால் நிச்சயமாக செய்ய முடியாது என்றுதான் சொல்லுவேன். மேஜிக் செய்வதற்கு தனித்திறமை வேண்டும். நாம் சொல்லுவது எளிது.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)