Followers

Showing posts with label கண்காட்சி. Show all posts
Showing posts with label கண்காட்சி. Show all posts

Wednesday, October 9, 2013

மூட நம்பிக்கைகளும் மூடிய மனசும்..

சமூகத்தில் மூட நம்பிக்கை வேரூன்றி போய்விட்ட ஒன்று.  ஒரு சிலேடைக்காகவும் யாரோவால் கிளப்பி விடப்பட்ட எண்ணங்கள் இட்டு கட்டப்பட்டு மூட நம்பிக்கையாக வடிவு எடுக்கிறது.  சினிமா , டி.வி  சக்திவாய்ந்த உடகங்கள் இவைகளில் கதைக்காக கற்பனையாக சொல்லப் படுபவை உண்மை என நம்பிவிடும் மக்களும் இருக்கிறார்கள்.  (உ.ம் : நீயா )

தற்போது கோவையில் நடைபெற்று வரும் 10 வது கானுயிர் புகைப்பட கண்காட்சி " உயிர் நிழல் 2013" .   இதில் விலங்குகள், உயிரினங்கள் மீதான தவறான மூட நம்பிக்கைகள் ஏன் தவறானவை என்பதற்கு சுருக்கமான விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.  அவற்றை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..

நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான்.  இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.

பாம்புகள் பால் குடிக்கும்..

பாலூட்டிகள் மட்டுமே பால் குடிக்கும்.  பாம்புகள் ஊர்வன வகையை சேர்ந்தவை.  பாலூட்டவோ குடிக்கவோ தெரியாது அதற்கு.

மகுடி ஒலி  கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..


பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.

பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..


அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை.  பெண்ணுடன் இணைசேரும் உரிமைக்கான ஆடவர்களின் சண்டை அது.

நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணை சேரும்..

சேராது இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.  நாகம் நாகத்துடனும் சாரை சாரையுடனும் தான் இணை சேரும்.

பாம்பு பழிவாங்கும்..

அந்த அளவுக்கு நினைவாற்றல் கிடையாது அதற்கு.  அடிபடும் போது சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளை  நுகர்ந்தவாறே இன்னொரு பாம்பு வருவதைப் பழிவாங்க வருவதாக நினைக்கின்றனர்.  மேலும் பாம்புகளில் நிரந்தர இணை என்பதே கிடையாது.

வயது முதிர்ந்த பாம்பு மாணிக்கத்தைத் தலையில் வைத்திருக்கும்..myth

மாணிக்கம் என்பது மண்ணில் புதைந்து கிடக்கும் அரியவகைக் கல் ஆகும். இதை மெருகேற்றி விலைமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். குட்டியோ, முதிர்ந்ததோ மாணிக்கம் தரும் பாம்புகள் இல்லை.

பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தும்..

தற்காத்துக் கொள்ளப் பாம்புகள் கொத்தும். அப்போது கண், மூக்கு, காது, கால், கை, எனத் தேடிக்கொண்டிருக்காது.

இருதலை, ஐந்துதலை, பத்துதலைப் பாம்புகள் உண்டு..

மரபணுக் கோளாரு காரணமாக மனிதர்கள், ஆடு, கோழிகளைப் போல் அரிதாகச் சில இருதலைகள் கொண்ட பாம்புகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் இருதலை, பல தலை கொண்ட பாம்பு வகைகள் இல்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது..

கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்றவைதான் ஒரு வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

விசப் பாம்பு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும்..
ஆதாரம் இல்லை.

நரி முகத்தில் விழிப்பது நல்லது. நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது.

கிராமங்களில் சாதாரணமாக தென்பட்ட நரிகளை தற்போது காண முடிவதில்லை.  அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது.  மேலும் நாய் இனத்தை சேர்ந்ததால் நரிக்கும் கொம்பு கிடையாது.

நரி ஊளையிடுவது கெட்ட சகுணம்..

தனது இருப்பை அறிவிப்பதற்கான தொடர்பு மொழியே ஊழையிடுதல் ஆகும். இது மனிதர்களுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடும்...

உணவு தேட இனச்சேர்க்கைக்கு எனத் தனது எல்லைக்குள் நடந்து கொண்டேயிருப்பது பூனை.  மனிதர்களின் நல்ல காரியங்கள், சடங்குகள் பற்றி அதற்குத் தெரியாது.

யானை முடி செல்வத்தை தரக்கூடியது..

கழுதை, குங்கு, பன்றி போன்ற விலங்குகளின் முடியில் என்ன இருக்கிறதோ அதுதான் யானை முடியிலும் இருக்கிறது.  யானையின் வாலிலுள்ள முடியை அதிர்ஷ்டம் தரும் என்று அகற்றி விடுவதால், அதனை துன்புறுத்தும் கொசு, ஈக்களை விரட்டத் தூரிகை போன்ற வால் இல்லாமல் சிரமப் படுகிறது என்பதே கவலைக்குரியதாகும்.

தொடர்புடைய பதிவு : சகுணங்களும் மூட பழக்கவழக்கங்களும் !
Download As PDF

Tuesday, October 8, 2013

நகரத்திற்குள் ஒரு காட்டுப் பயணம் - உயிர் நிழல் 2013

"இந்திய நாகரீகத்தின் வேர் காடுகள் தான்.  கூட்டங்களில் இருந்து விலகியிருந்த மரங்களுடன் ஆறுகளுடன், ஏரிகளுடன் ஒன்றாய்க் கலந்து இருந்த மனிதர்களிடமிருந்துதான் இந்தியாவின் தலை சிறந்த கருத்துக்கள் வந்துள்ளன.  காடுகளின் அமைதி மனிதனின் அறிவாற்றல் பெருக உதவி புரிந்துள்ளது  " - இரவிந்திரநாத் தாகூர்.

shola எனும் ஆங்கில மொழி வார்த்தையின் மூலம் தமிழ்.  தமிழில் வழங்கப்படும் சோலையின் திரிபு தான் அது. பூஞ்சோலை, மாஞ்சோலை, பசுஞ்சோலை... இந்த பாட்டையும் கேட்டு மெய் மறந்திருப்பீங்க..
மாஞ்சோலை கிளிதானோ, மான் தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூ தானோ
நடைதேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ...

(பாடல் முத்துலிங்கம் : படம்: கிழக்கே போகும் ரயில்)

பீடபூமி பகுதியில் சோலைகள் நீர் மற்றும் தாவர இனங்களை பாதுகாக்கும் களம் எனச் சொல்லலாம்.


10 வது கானுயிர் புகைப்பட கண்காட்சி " உயிர் நிழல் 2013" நகரத்திற்குள் ஒரு காட்டுப் பயணம். அக்டோபர் 4 முதல் அக்டோபர் 16 வரை. இடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை.கண்காட்சியின் நோக்கம் :
நம் காட்டையும் காட்டுயிர்களையும் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளிப்பது.

வரிக்குதிரை, நீர் யானை, ஒட்டகச் சிவிங்கி போன்ற வெளிநாட்டு விலங்கினங்களை தெரிந்து வைத்திருக்கும் நம் இளைய தலைமுறைக்கு நம் காட்டில் வாழும் உயிரினங்களைப் பற்றி அறிய வைப்பது.


உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறியப் பட்டுள்ள நமது மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மிக அரிய நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் சிறப்பை அறிவுறுத்தி அவற்றின் பாதுகாப்பில் மக்களை பங்கேற்க வைப்பது.


காடுகளைக் காப்பாற்றுவதன் மூலமே நம் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் நீர் நிலைகளையும், உயிர்ச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்பதை அறிவுறுத்துவது.


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே தொடரும் மோதல்களைத் தவிர்த்து விலங்கினங்களோடு இணைந்து வாழும் மன நினலையை உருவாக்குவது.


இந்த கண்காட்சியின் இறுதிக் கட்டத்தில் வருபவர்களுக்கு சாருஹாசன் குரலில் (?) நாகரஹோலே - ஒரு காட்டின் கதை எனும் அருமையான டாக்குமென்றி காத்திருக்கும் தவறவிடாதீர்கள்.


இந்தியாவிலேயே அதிக வகையான பூக்கும் தாவரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன (5640). இந்தியாவிலேயே மொத்தம் 17622 வகை பூக்கும் தாவரங்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த பூ பூக்கும் தாவரங்களின் பட்டியளில் அருகி வருபவை (ரெட் லிஸ்ட்) 230 ஆகும்.

தமிழ் நாட்டில் ஒரு டசன் பறவை சரணாலங்கள் உள்ளன.  ராமநாதபுரத்தில் உள்ள மேல் செல்வனூர் - கீழ் செல்வனூர் லிஸ்டில் இறுதியாக (1998) இடம் பிடித்தது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஒதுக்கம் ( conservation reserve)  தஞ்சை திருவிடைமருதூரில் உள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு புலிகள் சரணாலயங்கள் : கள்ளக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம்.

ஒரு அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் மொத்தமுள்ள 165 நன்னீர் மீன் வகைகளில் 126 அழியும் தருவாயில் உள்ளது.  

அதே போல 76 நீர் நில வாழ்விகளில் 56 அழியும் தருவாயில் உள்ளது.
பறவை இனங்களில் 32 வகைகள் தேடப்பட்டு வருகிறது.(மொத்தம் உள்ளவைகள் :456)

கடைசியாக சேர்க்கப்பட்ட சரணாலயம் : காவேரி (தர்மபுரி - கிருஷ்ணகிரி)
கொடைக்கானல் (திண்டுக்கல்)

பூமி
தன்னை ஒரு பூங்காவாய் ஒப்படைத்தது
நீயேன் அதை
மயானமாய் மாற்றுகிறாய்?
இயற்கை போற்று
ஐம்பூதங்களை ஆராதி
கோயில்கள் போதும்
மரங்களை தொழு
நெடுஞ்சான் கிடையாய்
நீரைக் கும்பிடு !
ஐம்பூதங்களை
அறிவால் வணங்கு  ( வைரமுத்துவின் வரிகள்..)


காடுகளை அழித்து
மழை கவிழ்த்து விட்டோம்
மேகங்களும் உலர்ந்து வற்றின
யாரும் சொல்லித் தராத
மழைப்பாட்டு
இப்போதுள்ள குட்டிகளுக்கு இல்லை
திசை சொல்லித் தந்த
மழைப் பூச்சியின்
சுவடில்லை   ( தேன்மொழி)


 “நமக்கு ஒர் உயிரனம் எப்படிப் பயன்படும் என்பதைப் பார்க்கவே கூடாது. ஒவ்வொன்றுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு ” என்று 1982 ல் வெளியிடப்பட்ட உலக இயற்கைச் சாசனம் தெளிவுபடுத்துகிறது.

ஒரு வளமான காட்டை அங்குள்ள பறவைகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.  ஒரு செழுமையான காட்டில் பறவையினங்கள் அதிகமாக இருக்கும்.

ஒரு காட்டில் பிணந்தின்னி கழுகுகள் (vultures) அதிகமாக காணப்பட்டால் உயிர் சுழற்சியின் உச்சத்தில் உள்ளது என அர்த்தம் கொள்ளலாம். அவற்றை வளமையான காட்டின் குறியீடு என்கின்றனர்.

மழைக்காடு என்று சொன்னால் அங்கு இருவாச்சிப் பறவைகள் இருக்கும் (hornbills) மலை முழங்கான் என இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
தற்போது இவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. காலம் கனியும் என எதிர்பார்ப்போம்.  மரப்பொந்து கூட்டில் குஞ்சு பொறித்து குறிப்பிட்ட பருவம் வரை தாய் பறவை அவற்றை விட்டுப் பிரிவதில்லை.  அந்த காலம் வரை ஆண்பறவைதான் இரண்டிற்கும் உணவு தேடி கொடுக்கிறது.


பறவைகளிடமும் விலங்குகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் எவ்வளவோ உண்டு.

சில பறவைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு :


Great pied Hornbill = பெரிய கருப்பு வெள்ளை இருவாச்சி


Malabar Trogon = தீக்காக்கை


Indian Roller = பனங்காடை

Spotted Owlet = புள்ளி ஆந்தைBrown wood owl = பழுப்பு காட்டு ஆந்தை

Greater Coucal = செம்பகம்


Eurasian  Collared Dove = கள்ளிப்புறாSmall Blue Kingfisher = சிரால் மீன் கொத்தி
Little stint = கொசு உள்ளான்


Crested Hawk Eagle =  குடுமிப் பருந்து
Little Egret = சின்னக் கொக்கு
Great Flamingo = பெரிய பூநாரை
Knob Bill Duck = செண்டுவாத்து
Cotton teal = குள்ளத் தாரா

நண்பர் ஓசை "காளிதாஸன்" உடன் நான்

(பி.கு : இது போன்ற பலப் பல தகவல்கள் இந்த கண்காட்சியில் அறிய கிடைக்கிறது )
Download As PDF

Friday, October 19, 2012

விழிப்புணர்வு கண்காட்சி - உயிர்நிழல்சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் "உயிர் நிழல் 2012" (9 வது) எனும் காணுயிர் புகைப்படக்கண்காட்சி மற்றும் குறும்பட நிகழ்வு [சோலைகாடுகளைப் பாதுகாப்போம் -இயக்குநர் சேகர் தத்தாரி]  நடைபெற்றது(5 அக் -14 அக் 2012) அவற்றில் இருந்து நாம் பெற்ற சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்.

நம் காட்டையும் காட்டுயிர்களையும் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தது.

உலகின் பாரம்பரிய இடங்களில் நன்றாக அறியப்பட்டுள்ள நமது மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் மிக அரிய நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகியவற்றின் சிறப்பை அறிவுறுத்தி அவற்றின் பாதுகாப்பில் மக்களை பங்கேற்க வைப்பது இதன் சிறப்பு.

காடுகளை காப்பாற்றுவதன் மூலமே நம் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் நீர் நிலைகளையும் உயிர்ச் சூழலையும் பாது காக்க முடியும் என்பதை அறிவுறுத்தியது.இக் கண்காட்சியில் கவனத்தை ஈர்த்த தகவல் ஒன்று:

அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள், வனசீரழிவு என்ற ஆபத்தை நமக்கு அறிவிப்பவை. செந்தலை வாத்தும் (Pink headed Duck) அப்படித்தான். கங்கைச் சமவெளியில் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த பறவை இது"

1935 ல் கடைசியாக இது தென்பட்டிருக்கிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மெல்ல மெல்ல இவை அழிந்து வருவதை அறிந்திருந்தார்கள்.  1896 ல் கொல்கட்டாவின் பறவைச் சந்தையில் இவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தனவாம். அறுபது ஆண்டுகள் கழித்து இவற்றைப் பிடிகவும் கொல்லவும் தடை விதிப்பதற்கு முன்பாகவே முழுவதுமாக இவை அழிந்து விட்டிருந்தன.

புல்வெளிகள், சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டதால் நீர் வாழ் பறவைகள் இம் மண்ணில் இருந்து மறைந்து விட்டன. (இந்த நிலை வேறெதற்கும் வர விடக்கூடாது...)

*********************************************************************
இயற்கை பாதுகாப்பு குறித்த பொன்மொழிகள் இவை :

இயற்கை முழு விதிகளையும் புரிந்து கொள்ளாமல் நாகரீக மனிதன் தன்னை உலகின் தலைவனாக கருதிக் கொள்கிறான்.  ஆனால் உண்மையில் அவன் இயற்கையின் குழந்தை   - டாம்டேல்

இந்த உலகம் மூதாதையரிடமிருந்து பெறப்பட்டதல்ல, வருங்கால சந்ததியினரிடம் இருந்து கடனாக பெற்றது  - ஆடுபன்.

********************************************************************
உலகில் மொத்தம் 54 இருவாச்சி (Hornbills)  இனங்கள் உள்ளன. (அழைப்பிதழில் உள்ள பறவை)  இந்திய துணைகண்டத்தில் 9 இனங்கள் வாழ்கின்றன. இதில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 4 வகையான இருவாச்சிகள் வசிக்கின்றன. மலபார் சாம்பல் இருவாச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்பவை. 


செம்பகம், பட்சி, சாம்பல் தலை வானம்பாடி(ashy-crowned sparrow -lark), தேன்சிட்டு, தையல்சிட்டு, வெள்ளை கண்ணி,சீல்காரப்பூங்குருவி(Malabar whistling thrush), குடுமிப்பருந்து(Changeable Hawk-eagle), ராசாளிப்பருந்து(Bonelli's eagle),செம்பருந்து, தவளைவாயன்,கரண்டிவாயன், மீன் கொத்தி,வண்ண நாரை, ஆல்காட்டி(Northern Lapwing),கொசு உண்ணான்...

(இன்னும் ஏகப்பட்ட பறவைகள், விலங்குகளின் புகைப்படங்கள், எல்லாம் தமிழ் பெயர்களுடன் இருந்தது சிறப்பு)

சில புகைப்படங்கள் :
புல்வெளிகளின் பயன் என்ன ?

மேற்கு தொடர்ச்சிமலையில் 1200 மீட்டருக்கு மேலுயற்ந்த இன்றும் மனிதர்களால் காயப்படுத்தப்படாத எல்லா சிகரங்களின் உச்சியிலும் வெறும் புல்வெளிதான் இருக்கும் அவை அற்ப புற்களல்ல மழை உச்சியில் பெய்யும் மழையை இந்த புற்கள் பின்னி பிணைந்த வேர்கால்கள் அப்படியே ஒரு ஸ்பாஞ்சு போல தேக்கி வைக்கின்றன. ஒரு மழை பெய்தால் அதை குறைந்தது ஒரு மாதத்திற்கு திவளையாக்கி புல்வெளிகள் வெளியிடுகின்றன. மாதம் மும்மாரி பொழிந்தால் அதை மூன்று நான்கு மாதங்கள் வரை தேக்கி வைத்திடும்  ஆற்றல் புல் வெளிக்கு உண்டு.

"குரங்குகளுக்கு பிரட் ,பிஸ்கெட் எல்லாம் அதுங்களோட உணவு இல்லை இவற்றை அவற்றிற்கு கொடுக்ககூடாது என்பதையும் அறிவுறுத்தி இருந்தார்கள்."

ஒரு பறவையின் புகைப்படம் எடுக்க பல மணிநேரம் செலவிட வேண்டியிருக்கும்.

இக் கண்காட்சியில் குழந்தைகளின் குதூகலத்தை பெரியவர்களிடமும் காண முடிந்தது.

இந்த கண்காட்சிக்கு பங்களித்த சுற்றுசூழல் ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள்,பாசமிகு நண்பர்கள்,ஆசிரியர்கள்,  மாணவ,மாணவியர்கள், இலக்கிய எழுத்தாளர்கள்,வனகாப்பாளர்கள் ...இன்னும் இன்னும் என பட்டியல் நீளுகிறது. ஒருங்கிணைத்த "ஓசை" யின் - இயற்கைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

மேலும் பல தகவல்கள் இந்த வலைபூவிலும் இருக்கு படிக்க வேண்டுகிறேன்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)