Followers

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, January 23, 2014

"கைம்மா" ன்னா யானையா ?

ஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள்  'அடாப்டட் ' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி  சிறப்புகளை கொண்டிருப்பது ஆய்வுக்கு உரியது.

ஒரு உதாரணம், யானை என்ற வார்த்தைக்கு பல பெயர்களையும் அர்த்தங்களையும் கொண்டிருக்கிறது தமிழ் மொழி.  அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறபிக்கப்பட்டு சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும்,  இலக்கியங்களிலும் பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்.  இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்.

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

(tks to sureshbabusuperphotos )




இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்
மாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்
பக டென்றேன் உழம் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.


 { - அந்தகக் கவி வீரராகவ முதலியார்- }

அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து,
'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

இந்த பாடலில் இரு பொருள் தருபவை

களபம் -யானை;சந்தனம்:
மாதங்கம் -யானை; மா(பெறிய)தங்கம்
பம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை - கரும்பு
பகடு -யானை;எருமைக் கடா
கம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும்
யானை)-
கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா        
களி செய்ய உதவும்.
கைம்மா (தும்பிக்கையுடைய யானை)

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.

(tks to முகநூல் நண்பர் Madras memes)

Labels : தமிழ், யானையின் பெயர்கள், கட்டுரை, அனுபவம், தமிழன்



Download As PDF

Wednesday, January 8, 2014

ஙப் போல வருமா ? வியக்கத்தக்க ஆய்வு

"ஙப் போல் வளை என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?"  என்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவை வாசிக்க கேட்டு கொள்கிறேன்.


ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார்.

ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே
நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகர்இல் சேவடியே புகல் ஆகுமே.

(சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்)

இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் ” ங “ என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு.  பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு “ஙகர வெல் கொடியானொடு” என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) 

இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர்.  (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை.

தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார்.   அவருக்கு ஒரு பொறி தட்டியது.   இன்றைக்கு நாம் எழுதும் “ங” என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது  அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும்.  அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது.  மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி ”இடபக் கொடி” ஒரு இடபத்தின் உருவத்தை அவுட் லைன் போட்டு பார்த்தால் ”ங” என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.  இடபத்தை பார்த்த அப்பர் பெருமான் இந்த எழுத்தோடு இடபத்தை பொருத்தி தமது பாடலில் ”ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே” என சமயோசிதமாக பயன் படுத்தியுள்ளார். அப்பரின் கலை ஈடுபாடு வியக்க வைக்கிறது.


பண்டைய தமிழ் எழுத்து "ங" வும் பல்லவர் காலத்து 
கொடியையும் விளக்கும் படம்






இந்த தகவல் கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழாவில் "தேவாரமும் சிற்பங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் தெரிவிக்கப் பட்டது. ஐயாவை அந்த விழாவில் சந்தித்து இரண்டொரு வார்த்தை அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்த ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி.

Labels : தமிழ், தமிழாய்வு, குடவாயில், ஙப் போல் வளை
Download As PDF

Tuesday, November 5, 2013

ஆங்கில எழுத்து தமிழ் எழுத்தில் இருந்தே உருவாக்கப்பட்டதா ?

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்ற தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை (4.நவ 2013) சர்ச்சையை ஏற்படுத்தியது பொதுவில் இந்த கேள்வியே தேவை இல்லை என்பது ஒரு சாரரின் வாதமாக இருக்கிறது.

தங்கிலீசிலே எழுத குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் தமிழின் எழுத்துக்களின் ஒலி குறிப்பையே அறியாமல் போய் விடுவர். தமிழ் தமிழா தான் இருக்கவேன்டும் இங்கிலீசு இங்கிலீசாகத் தான் இருக்க வேண்டும்.  இந்த கருத்தையே மற்ற மொழி காரர்களின் சொல்லியிருந்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையே வேறு.  தமிழன் தான் எதை சொன்னாலும் தலையாட்டி விடுவான் கைதட்டி ரசிப்பான் என்ற எண்ணத்தையே இது பிரதிபளிக்கிறது.

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

 இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும்.ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும். - ஜெயமோகன், எழுத்தாளர்//
இந்த கருத்திற்கு பதிலை நாம் எங்கும் தேட வேண்டாம்
சொல் –மொழி – வரலாறு ஆய்வாளர் ம.சோ.விக்டர்  அவர்களின்  ஆய்வு கட்டுரை தமிழ் எழுத்துகள் - இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும், என கருதுகிறேன்.

அந்த கட்டுரை கீழே,  அதற்கு முன் அவர் இந்த கட்டுரையில் கோடிட்டு காட்டும் முக்கிய விசயம் என்னவென்றால்  உலக மொழிகளின் மூலம் தமிழ் தான் என்பதை எழுத்து ஆய்வின் மூலம் நமக்கு விளக்குகிறார்.   தமிழ் எழுத்து வடிவம்  சிந்து வெளி குறியீட்டு எழுத்திலிருந்து தமிழ் பின் மேற்குலக மொழிகளிலில் (அதாவது பொனீசியம், எபிரேயம்,கிரேக்கம், இலத்தின், பிறகு ஆங்கில எழுத்தாக உருமாற்றம் ) எப்படி உருமாற்றம் பெற்றிருக்கும் என்பது அதே தமிழ் எழுத்து வடிவம் சமஸ்கிருத்தில் உருமாற்றம் பெற்றிருக்கும் என்பதையும் விளக்கமாக இக் கட்டுரையில் குறிப்பிட்டி இருக்கிறார்.






எழுத்துகள், எண்ணங்களின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்யப் பயன்படுபவை. எழுத்துகள் எந்த ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டதன்று. இயற்கையாகவே தோன்றிய மாந்தனின் சிந்தனை, குறியீடுகளாக வெளிப்பட்டன. அவ்வப்போது அக்குறியீடுகள் மாற்றம் செய்யப்பட்டன அல்லது செப்பம் செய்யப்பட்டன. உலகில் முதலில் தோன்றிய மொழிக்கே முதன்முதலான குறியீடுகளும் எழுத்துகளும் இருந்திருக்க வேண்டும். மொழியை ஓரினம் பேசி, அம்மொழிக்கு வேறோர் இனம் எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்க இயலாது. உலகில் முதலில், இயற்கையாகத் தோன்றிய மொழி தமிழே என்பதால், தமிழ்மொழியில்தான் முதல் எழுத்து வடிவங்கள் தோன்றின என்பது இயல்பாகச் சிந்திக்கக் கூடியதே.

சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பல்வேறு ஆய்வுகள், பல்வேறு காலங்களைக் குறிப்பிட்டாலும், அதன் காலம் புதுப்புது ஆய்வுகளால் மேலும் மேலும் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் பாகித்தானிய ஆய்வுக்குழு (2009) சிந்துவெளியில் ஒரு புதிய நகரை அகழ்வாய்வு செய்தது. அக்குழு சிந்துவெளி நாகரிகம், கி.மு. 9500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவித்தது.1 இடைக்கால இத்தாலி நாட்டில் அறியப்பட்ட வழவழப் பான கண்ணாடி போன்றே, அந்நகரில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முறையான ஆய்வுகள், சிந்துவெளிக் காலத்தை, கி.மு.12000 ஆண்டுகள் என மெய்ப்பிக்கும். ஏனெனில் பனி உருகல் காலத்தின் இறுதிப்பகுதியே, சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம் எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

சிந்துவெளியில் காணப்பட்டவை, குறியீடுகளா அல்லது சொற்களா என்ற கருத்து மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழ் அறிஞர்களான ஐராவதமும், மதிவாணனும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இருவரிடையே சில முரண்பாடுகள் உள்ளனவென்றாலும், மதிவாணனின் ஆய்வுகள், மற்றவர்களைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன என்பது என்னுடைய கருத்து. ஐராவதம் கூறும் பல செய்திகள் சரியான, நிலையான முடிவுகளைத் தராமலேயே உள்ளன. எழுத்துகளைப் பற்றி ஐராவதம் கூறும் செய்திகள் மயக்கத்தைத் தோற்றுவிப்பன.

ஆரியம் வேறு சமற்கிருதம் வேறு

எகிப்திய, மெசபத்தோமிய, இத்திய, சுமேரிய எழுத்துகளைப் படித்துப் பொருள்கூறப் பலரும் முயன்றுள்ளனர். இவ்வாறான முயற்சிகளில் முழுவெற்றி கிடைக்கவில்லையாயினும், ஓரளவுக்கு அவ்வெழுத்துகள் தரும் சொற்களின் பொருளோடு ஆய்வாளர்கள் நெருங்கியிருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். மேற்கண்ட மொழிகளில் காணப்பட்ட குறியீடுகளில் ஒரு பொதுமைத் தன்மையிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கே அறியப்பட்ட தொன்மைக் காலக் குறியீடுகள் தமிழோடு தொடர்புடையன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக, இத்திய (Hittite) மொழியின் பல நூறு சொற்கள், சமற்கிருதத்தில் காணப்படுவதாகவும், குறிப்பாக இரிக்கு வேதத்தில் உள்ளனவென்றும் எசு.ஆர். இராவ் என்ற ஆய்வாளர் கருத்துரைத்தார்.2 இத்தியம், சமற்கிருதம் ஆகிய மொழிச் சொற்கள், சிந்துவெளியிலும் காணப்படுவதால், சிந்துவெளி நாகரிக மக்கள் ஆரியரே என்று அவர் முடிவு செய்தார். இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் பேசிய மொழி எதுவென்பதில் குழப்பங்கள் இருந்தாலும், அனதோலிய இத்திய மொழியோடு, ஆரியம் தொடர்பு கொண்டுள்ளதைத் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக ஆரியம், சமற்கிருதம், வடமொழி என்பதெல்லாம் சமற்கிருதத்தையே குறிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில் அவை வெவ்வேறு மொழிகளைக் குறிக்கும் சொற்களாகும்.

இத்தியர்கள் பேசிய அனதோலியப் பகுதி மொழியிலேயே தமிழ்ச் சொற்கள் இருந்தன என்பதைத் தற்காலத்து ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்பதால், இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியரின் மொழியிலேயும் தமிழின் தாக்கங்கள் இருந்தன எனலாம். சமற்கிருதம் என்பது பிற்காலத்தில் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான மொழி. கமுக்கமான அல்லது மறைபொருளான செய்திகளைப் பதிவு செய்வதற்கு அறிஞர்கள் உருவாக்கிய மொழியே சமற்கிருதமாகும் (Scribal Language).3 இவ்வாறான கமுக்க மொழி பாபிலோனிலும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு வடக்கே பேசப்பட்ட தமிழின் கிளை மொழிகள், வட மொழிகள் எனப்பட்டன. ஆரியருக்கும் சமற்கிருதத்துக்கும் தொடக்கத்தில் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. அரப்பா நாகரிகம் முடிவுற்றபோது, அரசியலில் குழப்பமான சூழல்கள் நிலவி, நிலையான ஆட்சிகள் இல்லாமற் போயின.

உண்மைக்குப் புறம்பானது

அறிஞர்களின் மொழியான சமற்கிருதத்தை இந்திய மொழியியலாளரே உருவாக்கினர். சமணர்களும் அடுத்துப் புத்தச் சமயத்தினரும் பயன்படுத்திய சமற்கிருதம், பின்னர் இருவராலும் கைவிடப்பட்ட நிலையில் கி.மு. 500 ஆண்டுகளில்தான் ஆரியர்கள் அம்மொழியைக் கையிலெடுத்தனர். அடுத்து வருகை தந்த கிரேக்க மொழியின் பல சொற்களைச் சமற்கிருதத்தில் கலந்து அதனைப் புதுக்கினர்.4 இதனால் ஒரு சொல்லின் மூலம் கிரேக்கத்தில் உள்ளதா அல்லது சமற்கிருதத்தில் உள்ளதா என்ற குழப்பம் கூட அறிஞர்களுக்கு ஏற்பட்டது. குறி என்ற தமிழ்ச் சொல்லே, க்ரு (kru) அல்லது க்ரி (kri) எனத் திரிந்து கிரித் (krit) என்றானது. செம்மை என்ற தமிழ்ச்சொல், செம்-சம் எனத் திரிந்தது. குறியென்பது எழுத்தை மட்டுமல்லாது மொழியையும் குறிக்கும். எனவே, சமசுகிரித் (Samskrit) என்ற சொல், செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்றவாறு, தமிழ்த் திரிபுச் சொல்லாக அமைந்தது. அறிஞர்கள் சமற்கிருதச் சொற்களைத் தமிழ் எழுத்துகளாலேயே (பிராமி) பதிவு செய்திருந்தனர். சமற்கிருதத்துக்கெனத் தனி எழுத்து வடிவம் கி.பி.200 ஆண்டுகளுக்குப் பிறகே அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிலையில், சமற்கிருத எழுத்துகளிலிருந்தே தமிழ் எழுத்துகள் தோன்றின என்பது நகைப்பிற்கிடமானது. சமணர்களே அல்லது புத்தச் சமயத்தினரே தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்தனர் என்றவாறு சொல்லப்படுவதும் உண்மைக்குப் புறம்பானது.

சமணமும் புத்தமும் தமிழரின் பகுத்தறிவுக் கொள்கை வழி எழுந்த சமயங்களாகும். தொடக்கத்தில் அவை சமயங்களாக அறியப்படாமல், நெறிகளாகவே கருதப்பட்டன. பாலி மொழியும் வடதமிழ் மொழியின் ஒரு கிளை மொழியே. சமணர்களும் புத்தர்களும், எந்தவொரு எழுத்து முறையையும் உருவாக்கியதாக அவர்களே கூறவில்லை. தமிழ் எழுத்துகளின் நடைமுறை, குமரிக் கண்டத்திலிருந்தே சிந்துப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிந்துப் பகுதி மக்கள், தங்கள் முன்னோர் பயன்படுத்திய எழுத்துமுறை யையே பின்பற்றினர் என்பதால், சிந்துவெளியின் ஒரு புதிய எழுத்துமுறையைக் கண்டுபிடித்தனர் எனக் கூற இயலாது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1800 ஆண்டுகளில் நிறைவுற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.5 அக்கால அளவில் சிந்துவெளி எழுத்துமுறை பரவலாக அறியப்படா மலும், பொதுமக்களும் படித்து அறிந்துகொள்ளும் வகை யில் அமையாமலும் இருந்ததையுணர்ந்த தமிழ் அறிஞர்கள், பொது மக்களும் பயன்படுத்தக் கூடிய புதிய தோர் எழுத்து முறையை அறிமுகம் செய்தனர். ஆரியர்கள் புதிய எழுத்து முறையை அறிமுகம் செய்தனர் என்ற செய்தி எங்கும் காணப் படவில்லை. தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்து முறையைத் தங்களுடையது போல் காட்டிக் கொள்ள, பிராமி என்ற பெயரைப் பிற்காலத்தில் ஆரியர்கள் சூட்டி, அம்முறையைப் பிரம்மாவே தங்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கூறிக்கொண்டனர். பழைய சிந்துவெளி எழுத்து முறையும், புதிய முறையும் சில நூற்றாண்டுகள் வரை இணைத்தே எழுதப் பட்டுப் பிற்காலத்தில் பழைய முறை கைவிடப்பட்டது.

பொணீசியர் - தமிழர்

மேற்கே பொணீசியர் என்ற மரபினர், இந்தியாவுடன் கி.மு.2000 ஆண்டுகளிலேயே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பொணீசியர் என்ற சொல், கிரேக்கர்கள் சூட்டியதாகும். உண்மையில் அவர்கள் எபிரேய மொழி பேசிய (யூத) மக்களே. இம்மக்களின் முன்னோர் பற்றிய செய்திகள், அவர்களைச் சிந்துவெளி மக்களோடு தொடர்பு படுத்துகின்றன. பொணீசியர்கள் தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்த செய்தி, எபிரேய வாய்மரபுச் செய்திகளாக அறியப்படுகின்றன. (பணி என்ற வணிகம் குறித்த தமிழ்ச் சொல்லே, பொணி, பொணீசியர் எனத் திரிந்தது என்க) மோசே என்ற எபிரேய இனத் தலைவன், புதிய சமயம் கண்ட போது, அதில் இணையாமல் தங்களது பழைய வழி பாட்டு முறைகளையே (தமிழர் வழிபாடுகள்) தொடர்ந்து, எபிரேய ரிடமிருந்து பிரிந்து நின்றவர்களே பொணீசியர்கள் என்க.
இனத்தின் அடிப்படையிலும், வணிகக் கரணியங்களாலும், இந்தியத் தமிழரோடு தொடர்பு கொண்டிருந்த பொணீசியர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எழுத்துமுறைகளை அறிந்திருந்தனர். தங்களது வணிகத்துக்கு இம்முறை பெரிதும் பயன்படும் என நம்பிய பொணீ சியர்கள், தங்களுடைய பகுதியிலும் இம்முறையை அறிமுகம் செய்ய எண்ணினர். புதிய முறையில் அறியப் பட்டிருந்த 30 எழுத்துகளையும் எடுத்துக் கொண்டு, அவற்றை 22 ஆகக் குறைத்தனர். விடுபட்ட எட்டு எழுத்துகளின் ஒலிகளை அந்த 22 எழுத்துகளில் சிலவற்றிற்குப் புள்ளி யிட்டுச் சரிசெய்து கொண்டனர். இதன்படி பொணீசியப் புதிய எழுத்துவடிவம் 22 எழுத்துகளையும், 30 ஒலிகளையும் கொண்டிருந்தது.6

இப்புதிய முறையைப் பொணீசியர்களே கண்டுபிடித்ததாகக் கிரேக்கர்கள் கருதி, அப்புதிய முறைக்குப் பொணீசிய கிரம்மாத்தா (Phoenicia grammata) என்ற பெயரையும் சூட்டினர். இப்புதிய முறை, பொணீசியர்களின் வணிக முறைக்கு எளிமையாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. காட்மசு (Cadmus) என்ற பொணீசிய வணிகனே இப்புதிய முறையைக் கிரேக்கத்தில் அறிமுகம் செய்தான் என்று ஏரடோட்டசு (Heredotus) என்ற கிரேக்க வரலாற்றாய்வாளர் கூறுகிறார்.7 நடுத்தரைக் கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் எல்லாம் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது.

எபிரேயரும் இப்புதிய முறையை ஏற்றுக் கொண்டு, எபிரேய இலக்கியங்களை இப்புதிய எழுத்துமுறையில் பதிவு செய்தனர்.8 தற்போதும் கிடைக்கப்பெறும் யூத சமய நூலான தோரா (Torah) இப்புதிய முறையில் எழுதப்பட்ட நூலே ஆகும். சுருக்கமாகக் கூறினால், நடுத்தரையையட்டிய எல்லா நாடுகளும், பொணீசியரின் புதிய எழுத்து முறையை ஏற்றுக் கொண்டன எனலாம் (கி.மு. 1500-1300).

தமிழ் எழுத்தே மூலம்

தற்கால மொழியியல் ஆய்வாளர்கள், பொணீசியர்கள் புதிய எழுத்துமுறையைக் கண்டு பிடிக்கவேயில்லை யென்றும், அது கிழக்கே அறியப்பட்ட எழுத்துமுறை யென்றும், அதனைப் பொணீசியர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றியமைத்துக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர். பொணீசியர்கள் வணிகர்களே என்பதும், மொழியையும் மொழிக்கான எழுத்து களையும் கண்டுபிடித்து அறிமுகம் செய்யும் அளவிற்கு அவர்கள் மொழியியலாளர்கள் இல்லை என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்து முறை (தமிழி) பொணீசியர்களால் மேற்கே அறிமுகம் செய்யப்பட்டதால், பொணீசிய முறையைப் பின்பற்றியே கிரேக்கம், இலத்தீன் மொழிகளின் வழியே, இன்றைய ஐரோப்பிய மொழிகளும் தங்களுக்கான எழுத்து முறையை வகுத்துக் கொண்டன. தமிழ் வடிவமே இன்றைய மேலை நாடுகளின் எழுத்துகளின் மூலம் என்பதை இறுதியில் உள்ள வரைபடத்தின் வாயிலாக அறியவும்.

உண்மைகள் கடந்த காலங்களில் எவ்வாறு மறைக்கப் பட்டன என்பதைப் பொணீசியர்களின் வரலாறு தெளிவு படுத்துகின்றது. எழுத்து முறைகளின் வேர்கள் குமரிக் கண்டத்தையே தொட்டு நிற்கின்றன. இந்நிலையில், இந்திய ஆய்வாளர்கள், தங்கள் மனம் போன போக்கில் வரலாற்றைத் திசை திருப்பி விட்டனர். புதிய எழுத்து முறை கி.மு. 1500 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டபோது, ஆரியர்கள் இந்தியாவில் இருந்தனரா என்பது கூட ஐயத்திற்கிடமானது.

அசோகன் கல்வெட்டு பற்றிப் பல்வேறு தவறான தகவல்களை, தமிழகத்தின் ஆய்வாளர்களே அளித்து வருகின்றனர். அசோகன் காலத்தில்தான் முதன்முதலாக எழுத்துகள் அறிமுகமாயின என்பதால், அவ்வெழுத்துகளைக் கண்டுபிடித்தவன் பெயர் தெரியாததால், அதனை அசோகன் பிராமி என்றனர். உண்மையில் அசோகனுக்குப் பலநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அசோகனின் எழுத்து வடிவம் பயன்பாட்டிலிருந்தது. அக்காலத்தில் எவரும் பாறைகளிலும் தூண்களிலும் பொறித்து வைக்க வில்லை. அசோகன் காலத்தில்தான் அவை வெளிப்பட்டன எனலாம்.

தமிழ் எழுத்தின் நீட்சியே

கி.மு. 850ஆம் ஆண்டில், இசுராயெல் நாட்டின் மோவாப் (Moab) என்ற பகுதியை ஆண்டிருந்த மன்னன் மேச (Mesha - மேழம் என்ற தமிழ்ச் சொல்லே) என்பவன் வெளியிட்டிருந்த ஆணைகள், பாப்பிரசு தாள்களில் வெளி யிடப்பட்டன.9 அத்தாள்களில் காணப்படும் எழுத்துகள், அசோகனின் கல்வெட்டு எழுத்துகளைப் போன்றே காணப் படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அசோகனின் எழுத்துகள், அவன் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இசுராயெல் நாட்டில் அறியப்பட்டிருந்தது எப்படி? இசுராயெல் நாட்டின் எழுத்துகளையே அசோகன் இந்தியாவில் பின்பற்றினானா?

இவற்றிற்கெல்லாம் விடை யாதெனில் கி.மு.1500 ஆண்டுகளில் வட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்மொழிக்கான எழுத்து வடிவங்களை, பொணீசியர் மேலை நாடுகளில் அறிமுகம் செய்தபோது, எபிரேய மொழியும் அவ்வெழுத்து வடிவங்களை ஏற்றுக் கொண்டது என்பதே. உண்மையில் மேச மன்னனும், அசோகனும் பயன் படுத்தியது தமிழின் புதிய எழுத்துமுறைகளையே என்க. தமிழின் புதிய வடிவம், வட இந்தியாவிலிருந்த பல்வேறு மொழிகளிலும் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டன. ஏறக்குறைய 18 மொழிகளில் சிற்சில மாற்றங்களுடன் தமிழின் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டது. சமற்கிருதம் உள்ளிட்ட இன்றைய இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் யாவும், தமிழ் முறையின் நீட்சிகளே எனலாம். அத்துடன் தமிழ் எழுத்துமுறையே இன்றைய ஐரோப்பிய மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வளர்ந்துள்ளன.

தமிழறிஞர்கள் உருவாக்கித் தந்த எழுத்துமுறை, சிந்துவெளித் தமிழ் எழுத்துகளின் அடுத்த கட்ட வளர்ச்சி யாகும். இதனைப் பிராமி என்று பிற்காலத்தில் ஆரியர்கள் பெயரிட்டுக் கொண்டனர். பிரம்மா என்ற சொல்லே, பெரும் ஆன் - பெருமான் - பெம்மான் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகும். பிரம்மா, பிரசாபதி, பிராமணாசுபதி, பிரகசுபதி, பிரமணா போன்ற சொற்கள் அனைத்தும் தமிழ் மூலத் திரிபுகளே. பிர எனத் தொடங்கும் சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டுச் சொல், பெரும் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. பெரும் அமணன் என்பது, பெரியவன் பெருந்துறவி என்ற பொருளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும் பெரும்அமணன், பிராமணன் ஆனான்.

உலக மொழிகளுக்கு மூலம்

தமிழ் மொழிக்கான எழுத்து வடிவங்களைச் சமணர்களே அளித்தார்கள் என்பதும், புத்தர்களே கொடுத்தார்கள் என்பதும், சமண புத்தர்களுக்கு அசோகனே அளித்தான் என்பதும், சமற்கிருத எழுத்து வடிவத்தினின்றே தமிழ் வடிவம் பிறந்தது என்பதும், கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லையென்பதும், வரலாற்றைத் திசை திருப்பும் பொய்ச் செய்திகளாகும். கி.மு.300க்கு முன்னதாகத் தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்திருக்க வில்லை என்றால், தொல்காப்பியம் எந்த எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டது? தொல்காப்பியரின் காலம் கி.மு. 700 என ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழுக்கு எழுத்து வடிவம் சமற்கிருதத்துக்கு முன்பே இருந்தது என்ற உண்மையை மறைக்கத் தொல்காப்பியக் காலத்தைச் சிலர் கி.பி. 500 என்றும் கூறினர்.


கி.மு. 10000 ஆண்டுகளில், உலகில் எம்மொழியும் எழுத்துவடிவத்தைப் பெற்றிருக்காத நிலையில், தமிழ் மொழி அதனைப் பெற்றிருந்தது என்பதை, இன்றைய ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.10 இன்றைய நமது ஆய்வு இலக்கு, கி.மு.2000 ஆண்டுகளில், குமரிக் கண்டத்தில் அறியப்பட்டிருந்த எழுத்து வடிவத்தை நோக்கி மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், கி.மு. 300 ஆண்டுகளில் தான் தமிழுக்கு எழுத்துவடிவம் தோன்றியது எனக்கூற எவ்வாறு துணிச்சல் வந்தது? தமிழைப் பற்றிக் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட உண்மைச் செய்திகள் ஒவ் வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் கி.மு. 6000 ஆண்டுகளில் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதை அண்மைக் காலத்து ஆய்வுகளும் மெய்ப்பித்துள்ளன.

உலக மொழிகளுக்கெல்லாம் சொல் வளங்களை வாரி வழங்கிய தமிழ்மொழி, எக்காலத்தும் எவரிடமிருந்தும் எவற்றையுமே கடனாகப் பெற்றதில்லை என்ற உண்மையை இங்குள்ள தமிழறிஞர்களில் சிலரும் புரிந்து கொள்வார் களாக. இன்றைய ஆய்வுகள், “தமிழ் இந்திய மொழிகளுக்குத் தாயாகவும், உலக மொழிகளுக்கு மூலமாகவும் உள்ளது’’ என்பதை உறுதி செய்கின்றன.

மேற்கோள்கள்:
1. சிந்துவெளியின் காலம்: An archacological site dating back(5500+3500) years believed to be older than Mohenjo-daro has been found in sindh province.  A team of 22 archacologists found semi-precious stones and precious tones and utensils made of clay, copper and other metals during an excavation in Laxhian Jo Daro in Sukkar District.  “At present we can say that it is older than Mohenjo-daro,” Ghulam Mustafa shar, the director of the Lakhian To Daro project said.  Shar said, the remains of a “faience” or tin glazed pottery factory had been found at the site. It is believed to be of the era of Italian mirror factories that date back to 9000 years. The discovery of more such items establish the site as 9000 years old, like remains found at Jericho in Palestine, Shar said. (PT1) - The Times of India, 18.1.2009, P.6.
2.  Hittite words in Rig-Veda and Indus Language: Lothal and Indus Civilization, S.R. Rao, P. 139, 1962.
3.  Scribal Language: The Scribal Language used by the professional scribe appears both Egypt and Mesopotamia in the earliest periods in whichwriting was used. - Dictionary of the Bible, P. 779.
4.  Sanskrit has developed more than Greek and German and anyother Aryan language - A Sanskrit - English Dictionary, P. XV.
5.  புதிய தமிழ் எழுத்துமுறை: பொணீசியர்களின் சான்றுகளைக் காட்டி ஆய்வாளர்கள் கூறும் செய்தி.
6.  Phoenician Script: There is some question as to whether the Phoenicians actually invented the alphabet themselves or adapted from an oriental source. In any case the idea was revolutionary - Facts about Lebanon, P. 13.
7.  Heredotus, the 5th century B.C. Greek historian and the father of history wrote that the alphabet was introduced into Greece by Cadmus and his followers. The Greeks did not, according to Hereclotus, Call the new letters alphabet but “Phoinikia grammata” - the phoenician letters. - Ibid, P. 14.
8.  The Hebrew alphabet as exhibited in Torah was identical with the Phoenician alphabet. - Dictionary of the Bible, P. 23.
9.  Mesha: Meesa (Hebrew), a king of Moab (II kings, 3:4 -Bible) If Indian Pandits will consult that most interesting standard work, they will there find a table exhibiting the most ancient of known phoenician letters side by side with the kuidred symbols used in the Moabite inscriptions of king Mesha - which, as before intimated, is known to be as old as about 850 B.C. - while in parallel columns, and in a series of other excellent tables, are given the corresponding phonographic symbols from the numerous inscription of king Asoka scaltened everywhere throughout central and Northern India - A sanskrit English Dictionary, P. XXV.
10. .சோ. விக்டர், சிந்துவெளி நாகரிகம், 2009.



(கட்டுரை: முதன்மொழி - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)