Followers

Showing posts with label திபெத்திய குகைகள். Show all posts
Showing posts with label திபெத்திய குகைகள். Show all posts

Saturday, November 3, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - இறுதிப் பகுதி

 முதலிரண்டு பகுதிகள்

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2


உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் :

சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி)  இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர்.  இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.


பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுரம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுரம் காய்ந்து போன மரம். ( " வாழ்க்கையை சிம்பாலிக்காக உணர்த்துகிறதோ ! )



இந்த உடலுக்கு சொந்தக்காரன் உயர்ந்த அந்தஸ்தில்  இருந்திருக்க வேண்டும். கழுத்தில் பதக்கம் போன்று வெண்கலத்திலான கண்ணாடி தொங்கவிடப்பட்டிருந்தது. முகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்திலான முக மூடி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகமூடி நீளமான நாசி மற்றும் சிகப்பு நிறக்கண்கள் வரையப்பட்டிருந்தன. உதடுகள் கீழ் நோக்கி ஒரு சோக எக்ஸ்பிரசனில் இருந்தது. முகமூடியின் நெற்றிப்பகுதியில் வண்ண நீள் கண்ணாடி பாசி மணி மாலையால் சோடிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 1300 அல்லது  1800 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடலாக இருக்கலாம். (வருடங்கள் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை)


பத்து வயது ஆண்குழந்தையின் எலும்புக்கூடும் அருகில் கிடந்தது. அந்தகாலத்தில் பலியிடப் பட்டிருக்கலாம் என்பது ஏதென்சின் அனுமானம் அதன் நிலையை (பொஸிசன்) வைத்து இதை ஊகிக்கிறார் ; உறுதிப்படுத்தப் படவில்லை.

இன்னும் அந்த அறையில் இரும்பிலான குறுவாள்கள், ஒரு மண் தட்டில் பார்லி மாவு, ஒரு காலத்தில் பார்லி பீர் நிறப்பட்டிருந்த தாமிர பாத்திரம், சிறு பாத்திரம் மற்றும் அதை வைக்கும் இரும்பிலான சிறு முக்காலி (tripod), வட்ட கைப்பிடியுடன் கூடிய மரத்தாலான கோப்பைகள், எறுமை மாட்டு கொம்புகள், குதிரை மற்றும் ஆட்டின் தலை மண்டை ஓடுகள் கிடந்தன.  இந்த குதிரை அவனது குதிரையாக இருந்திருக்க வேண்டும்.


ஏதென்ஸ் உண்பதை, தண்ணீர் குடிப்பதை கூட மறந்து இந்த ஆய்வில் ஒன்றி ஈடுபட்டது பாராட்டத்தக்கது.

ஆகாச புதைத்தல் (Sky burial)  :

இதேபோல் மயான குகைகள் சிலவற்றில் அநேக வெட்டப்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.   ( மனித எலும்பு துண்டுகள் 3 முதல் 8 நூற்றாண்டு காலத்தவையாக இருக்கலாம் என்பது அனுமானம்  )


இறந்த சடலங்களில் இருந்து சதைகள் நீக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.  மீதமான எலும்புகள் மற்றும் சதைப்பாகங்கள் வல்லூறுக்கு இறையாக்கப் பட்டிருக்க வேண்டும்.
இது முஸ்டங் பகுதி மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.

76 சதவீதம் இம்மாதிரியான எலும்புகள் கிடைத்துள்ளன

இது கண்டிப்பக கேனிபுலிசம் [ Cannibalism - தன் இன ஊன் உண்ணுதல்  ] ஆக இருக்காது.

இந்த " திபெத்திய ஆகாச புதைத்தல் வழக்கம் "
புத்த மதம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.

முஸ்டங் மம்மிகள் :

இவை எகிப்திய மம்மிகளை ஞாபகப்படுத்துகின்றதா ?

முஸ்டங்கில் மெப்ராக் என்ற இடத்தில் 1995 ல் ஜெர்மன் மற்றும் நேபால் அகழ்வாராய்சியாளர்கள் ஒரு குகையில், ஒரு குழந்தை மற்றும் பெண்ணின் கால் பகுதி மட்டும் மம்மி யாக (பதப்படுத்தி பாது காக்கப்பட்ட உடலங்கள்) கிடைத்திருக்கிறது.


இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும்.   மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள்  கிடைத்தன.  மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன.

"குழந்தை மம்மி"

சுமார் 2000 வருடங்கள் பழமையான உடலங்கள் இவை.  இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.

தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவைகளின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம்.  இவைகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக அதாவது பாகிஸ்தான், இந்தியா,  மற்றும் சில ஈரான் தேசத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.

இவைகள் இம் மக்கள் அந்த தேசங்களுடனான வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை ; இம்மக்களின் செல்வ செழிப்பை பிரதிபளிக்கின்றன.


இந்த கடினமான பணியில் ஈடுபட்ட பெண் நுண் ஆய்வாளர் (Bio archaeologist) ஜேக்குலின் இங் கிடைத்த எலும்புகளை, சதைப்பகுதிகளை ரகம் வாரியாக பிரித்து ஆராய்கிறார்.


சில குடும்பங்கள் இன்றும் இங்கு குகைகள் வசித்து வருகின்றனர்.

எவை எல்லாம் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் சாண்ட்ஜோங் கிராமத்து தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  தன் சொந்த பணத்தை சிறு மியூசியம் அமைக்க கொடுத்து உதவியுள்ளார் ஏதென்ஸ் என்பது குறிப்பிடதக்கது.

தங்கள் மூதாதையரின் சிறப்பு மிக்க வாழ்க்கையை நினைத்து பிரம்மிப்போடு பெருமையும் கொள்கின்றனர் இம்மக்கள்.

இப்பகுதி மக்கள் இக்குழுவினரை மிக்க மரியாதையோடு நடத்தினர். அவர்களை பெருமையாக நினைவு கொள்கின்றனர்.


கிடைத்த மரத்துண்டுகள்,  துண்டு துணிகள், பற்களின் துகள்கள்
வண்ணங்கள் (எந்த தாவரங்களில் இருந்து தாயாரிக்கப்பட்டன போன்ற வேதியல் ஆய்வுகள்) பல இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பற்கள், சில எலும்புகள் DNA ஆய்வுக்காக ஒக்லஹாமா பல்கலை கழகத்திற்கும் (University of oklahoma), உலோகங்கள் லண்டன் பல்கலைகழகத்திற்கும் (university of London) கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் முடிவுகள் பல உண்மைகளை வரலாறுகளை அறிவிக்கப்போகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.



Thanks for Mustang people ; archaeology team members : athans, mark Aldenderfer (university of california), Jacqueline Eng - western michigan University, Mohan singh Lama - Nepal's archaeology department  and  National Geography
=====================================================================

"இந்த தொடர் பதிவிற்கு ஆர்வத்துடன் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்திய உள்ளங்களுக்கும், தொடர் வாசகர்களான  சைலன்ட் ரீடர்ஸ்களுக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத் தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்."

- கலாகுமரன்
=====================================================================
Download As PDF

Wednesday, October 31, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2


ஒரு காலத்தில்  வடக்கு மத்திய நேபாலத்தின் ராஜ்ஜிய பகுதியாக இருந்த முஸ்டங் இன்று அகழ்வாராய்சியாளர்களுக்கு பல மர்மங்களை உள்ளடக்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது.

காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கின் ஊடாக அவர்களின் பயணம் தொடர்கிறது.



மலைப்பகுதியை நெருங்க நெருங்க ஏராளமான வான் குகைகள் (Sky Gaves) தென்படுகின்றன இந்த பகுதியில், பசியால் வறுந்தி செல்பவனுக்கு பலகாரங்கள் கிடைத்தது போல இது அவர்களுக்களின் அறிவு பசிக்கு (அகழ்வாராய்சி மூளைக்கு) பல தீனிகளை தரப் போகிற ஆவலில் அந்த மணற் பாங்கான பாதையில் பயணம் மேற்கொள்கிறார்கள்

பல ஆசிய ஆறுகளின் துவக்கமாக இருக்கும் திபெத்திய பகுதியில் ஆறுகள் நிலங்களை பல கூறுகளாக அறுத்து போட்டிருக்கின்றன.



1990-ன் மத்தியில் கூலெளன் (Cologne -மேற்கு ஜெர்மனி) பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்சி மேற்கொண்ட போது குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல டசன் சடலங்கள் கண்டறிந்தார்கள் எலும்புக்கூடுகளாக.

சடலங்கள் எல்லாம் மர கட்டில்களில் கிடத்தப்பட்டிருந்தன. அவைகளுக்கு  தாமிர (செப்பு)  நகைகளும் நீள் வடிவ வண்ண கண்ணாடி வடிவ  பாசிகளும் அணிவிக்கப்படிருந்தன. செராமிக் பொருள்களும் கிடைத்தன.
இவைகள் எல்லாம் உள்ளூர் தயாரிப்புகள் அல்ல.  இந்த பொருட்கள் முஸ்டங்கின் செழிப்பை பற்றி, வாணிக மையமாக திகழ்ந்திருந்த வரலாற்றை பறைசாற்றுகின்றன .

பீட் ஏதென்ஸ் முதன் முதலில் இந்த குகைகளைப் பற்றி அறிந்து கொண்டது 1981 ல் எவரெஸ்டிற்கு டிரக்கிங் வந்த போது, ரொம்ப பிடித்து போய் அதன் பிறகு 7 முறைகள் சென்று வந்துள்ளார். அப்போதே " மிகச்சிறந்த ஆய்வுகளம் இதுதான்"  என முடிவு செய்து விட்டேன் என்று சிலாகிக்கிறார்.


"மேத் ஸீகல் பழைய கையெழுத்து பிரதிகளை ஆய்வு செய்கிறார்"



பல அறைகளை கொண்ட வசிப்பிட குகையில் - டேட் ஹீசர்   "இதில் இருந்த பொருட்கள் கொல்லையடிக்கப் பட்டிருக்கலாம் என்கிறார்"

அப்படி ஒரு தேடலில் கண்டுபிடித்தது தான் 26 அடி நீளமுள்ள சுவர் சித்திரங்கள். அதில் 42 யோகிகள் படங்கள் பெளத்த வரலாற்றை சித்தரிப்பவையாக இருக்கலாம். 600 ஆண்டுகளுக்கு முன் பழமையானவை.  மேலும் 8000 பக்கங்கள் கொண்ட கையெழுத்து புத்தகங்கள். அனைத்தும் தியான சம்பந்தமான, தத்துவ விசாரணைகள்.



"புத்தர்"

"சித்தார்தா கவுதமா (புத்தர்) (623 BCE) ல் பிறந்த இடம் லும்பினி இது நேபாலில் உள்ளது" 

இந்த ஓவியங்களை பார்த்தால்  அஜந்தா-எல்லோரா குகை ஓவியங்கள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

(அஜந்தா எல்லோரா ஓவியங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம் : இனிய ஓவியா )  http://eniyaoviya.blogspot.com/2012/05/blog-post.html

இந்த குகைகளில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திறனாய்வு செய்தால் குகைகளில் முதலில் வசித்தவர்கள் யார் ? இம் மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? எவற்றை நம்பினார்கள் ? போன்ற மறைந்திருக்கும் பல மர்மங்கள் துலங்கும் என்கிறார்கள் இக்குழுவினர்.

சில குகைகள் வெற்று குகைகளாக இருந்தன. சில வாழ்விடங்களாகவும், குளிரடுப்புகளோடு வசிக்குமிடங்களாகவும் இருந்தன. தானியக்கிடங்குகளாகவும் இருந்திருக்கலாம். புத்தர் காலத்திற்கு முற்பட்டவையாகவும் இருக்கின்றன. திருடர்கள் கொள்ளையடிக்காமல் இருக்க பழம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம். முக்கியமாக முன்னோர்களின் எழும்புகளை பாதுகாத்து வந்துள்ளனர். இப்படி
ஆலெண்டர்ஃபெர் சில குகைகளை பற்றி ஒரு முடிவுக்கு  வருகிறார்.

திபெத்தியர் முன்னோர்களின் எலும்புகளை புனிதமாக கருதுகின்றனர்.

ஸாம்ட்ஜோங்க் (samdzong) என்ற சிறு கிராமப்பகுதியிலும் ( இது திபெத்தின் தெற்கில் சீன எல்லை பகுதியில் உள்ளது) நிறைய குகைகள் காணப்பட்டன. 2010 ல் அலெண்டர்ஃபரும், ஏதென்சும் ஆய்வு மேற்கொண்ட பொழுது மயான குகைகளை கண்டனர். 2011ல் இவைகளை மீண்டும் ஆய்வு செய்தார்கள்.  குகைகளின் உட் சுவர்களில் மெழுகு பூச்சப்பட்டது போல் இருந்தன வெளிச்சத்தில் ஒவ்வொரு நிறங்களில் எதிரொளித்தது சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறங்களில்.

குகைகள் குழாய் வடிவில் செங்குத்தான சரிவான பாதைகள் பல இணைத்திருந்தன. இந்த பாதைகள் மிக ஆபத்தானவையாக இருந்ததாக குறிப்பிடுகிறார். (முற்பகுதியில்  குறிப்பிட்ட விபத்து ஏற்படுத்திய இடங்கள் )

இவர்கள் ஆராய்ந்த சில குகைகள் நிலச்சரிவினால் அழிந்துள்ளன.
துண்டான குகை பகுதிகளே நுழைவாயிலாக நமக்கு வெளியே தெரிகின்றன (முதல் பகுதியில் உள்ள படங்களை பார்க்கவும்)  அப்படியானால் முழு குகை பகுதியின் நுழைவாயில் மேலே சமதளப்பகுதியின் கீழாக குழாய்வடிவ பாதை கீழ் நோக்கி குகைகளுக்கு செல்கிறது. அடுத்தடுத்த குகைகளை இணைந்திருந்தன என்று கண்டுபிடித்தனர்.


"முன்பிருந்த குகை(Tomp 5) தோற்றங்கள் கிராபிக்ஸ் படங்கள் விளக்குகின்றன"

மேலும் இந்த படங்களில் இருந்து குகையின் அமைவிடங்கள் மற்றும் பல வித தோற்றங்களை புரிந்து கொள்ளமுடியும்.

சில குகைகள் பல தளங்கள் கொண்டவை. குடியிருப்புகளாகவும், பெளத்த சமய பயிற்றுவிக்கும் மண்டபங்களாகவும் இருந்திருக்கலாம்.


அவர்களின் ஈம சடங்கு முறை, மயான குகைகள் (tomp 5)அவற்றில் கிடைத்த எழும்புக்கூடு, மம்மீஸ் மற்றும் பல சுவாரசியமான விவரங்கள் படங்களுடன் அடுத்த இறுதிப் பகுதியில் ; 

Download As PDF

Monday, October 29, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )


மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் முஷ்டங் பகுதியில் நிறைய உள்ளன.



மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் [Mustang ]மலைபாங்கான பகுதி (காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கு) தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்ட குகைகளினுள் நுழைவது எப்படி ? என்பது புலப்படவில்லை. உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. " ஒரு கிளிப் ஹாங்கர்"  போலத்தான் இந்த குகைகளை ஆய்வு செய்யவேண்டும்.



தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. ( சுமார் 8 முதல் 9 மாடி உயரம்). பெரும்பான்மையானவை 3000 ஆண்டுகள் பழமையானவை ( பெளத்தமதம் பரவுவதற்கு முன்பிருந்தவை)

சுக்ர சாகர் ஸ்ரேஷ்தா (Nepal's archaeologist)  எனும் அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய 10000 குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது.


இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ?
எதற்காக யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது.


இந்த குகைகளை பீட் எதென்ஸ் (தொல்பொருள் ஆய்வாளர்) என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது, இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் டிரெக்கிங் மேற்கொண்டார்.  2011 ல் எட்டாவது முறையாக இப்பகுதியில் ஆய்வு செய்தார்.

மார்க் அலெண்டெர்ஃபெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்). இவர்களோடு ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும்  (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் உடனிருந்தனர்.



சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் சுருசுருப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பல அரசர்கள் ஆண்ட பகுதி.
முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்தமத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. இந்த வணிகத்திற்கு உப்பு ஏற்றி சென்ற வண்டி தடங்களே சாட்சி.  17 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது காரணம் குறைந்த விலையுள்ள உப்பு இந்தியாவில் கிடைக்க ஆரம்பித்ததே என்று சொல்கிறார்கள்.

சாம்ட்ஜோங்க் எனும் பகுதியிலும் நிறைய குகைகள் காணப்படுகின்றன.

நேபால் (நே என்றால் புனித , பால் என்றால் குகைகள்)

ஒரு காலத்தில் செழிப்பான பகுதியாயிருந்த இந்த பகுதியில்;
அறிய சிலைகளும், ஓவியங்களும் நிறைந்த கோவில்கள் சிதைவுக்குள்ளாகின.  ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது.


சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக (மிதமான வெப்பம்) இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


மர்ம நிகழ்வுகள் :

ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு ஆய்வு தடை பட்டது (2010)

லிங்கன் எல்ஸ் ( விடியோ கிராஃபர்) தலை ஹெல்மெட் எடுத்த சமயத்தில் கற்கள் பொறிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார்.

இன்னொருவர், ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராஃபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார்.


"இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு.  அவர்   மந்திர உச்சாடனங்களுடன் ஹோம பூசை செய்து எங்களை அடுத்தடுத்த ஆய்வு மேற்கொள்ள அனுமதித்தார் " நினைவு கூர்கிறார் ஏதென்ஸ்.

அந்த குகைகளில் அப்படி என்ன இருந்தன ? ஆய்வின் விவரங்கள் அடுத்த பகுதியில் படங்களுடன்...

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)