Followers

Showing posts with label துணுக்குகள். Show all posts
Showing posts with label துணுக்குகள். Show all posts

Wednesday, July 2, 2014

ஓரிரு வரி துணுக்குகள் !

 • உலகம் முழுக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் 40 சதவீதம் நேரடியாக பைப்பில் பிடித்து விற்கப்படுகிறது ” ஒரு பகீர் தகவல் ” • அண்டார்டிக் கடல்களால் சூழப்பட்ட ஒரு கண்டம், அது போல ஆர்டிக் கண்டங்களால் சூழப்பட்டது. • பென்சில் என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் இருந்து உருவானது. அந்த மொழியில் பென்சில் என்பதற்கு ‘small penis’ என்று அர்த்தமாம். • ஒரு டீஸ்பூனில் 2000 கேரட் விதைகளை வைக்கலாம். • எலிசபெத் டைலர் 79 வயசு வரை வாழ்ந்த அவிங்க வாழ்நாளில் ஒரு முட்டையை அவிக்க கத்துக்கல  (மெய்யாலுமா !) • ஸ்பெயின் நாட்டின் தேசிய கீதத்தில் பாடல் வரிகள் இல்லை (பெப்ர..பெப்ப்ர...பே) • தாவரங்களில் அசைவம் உண்டு தெரிந்ததுதான்...பாம்புகளில் சைவம் உண்டா ?...பச்...இல்ல. • ஆட்டு மந்தைகளை மேய்க்க நாய்களை பழக்கப் படுத்துவது போல ஆஸ்ட்ரிச்சையும் பழக்கலாம். • எகிப்தில் உள்ளதை விட சூடானில் அதிக பிரமிிடுகள் இருக்காம்.  மம்மிகள் என்றால் எகிப்து ஞாபகத்திற்கு வருகிறது ஆனால் உலகின் பல இடங்களில் மம்மிகள் உண்டு. • பேங்க் ஆப் இங்கிலாந்தில் உட்சபட்ச மதிப்பு நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரு மில்லியன் (ஜியண்ட்ஸ்) 100 மில்லியன் (டைட்டன்ஸ்). • மலேயா பாசையில் தண்ணீரை ”ஏர்” (Air) ன்னு சொல்றாங்க.

 • ”War and Peace" புத்தகத்தை லியோடால்ஸ்டாய் சொல்ல சொல்ல மனைவி எழுதினாராம். • புது பேனா வாங்கரவங்கல்ல 97 சதவீதம் பேரு அவங்க திருநாமத்தை எழுதறாங்கலாம். (நீங்க ?  நான் “ # " இந்த குறியீட்டை அல்லது கட்டம் வரைகிறேன் ஏன்னு தெரியல ) • ”East of Eden” என்ற நாவலை எழுதியவர் John Steinbeck இதில சுவாரஸ்யம் என்னன்னா அந்த நாவலை 300 பென்சில்களை சீவி சீவி எழுதி இருக்காா்்Download As PDF

Thursday, June 12, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?

பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.


நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின்  சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம்.   அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.


சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு  வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.


ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.


ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்...(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )

சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க...ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா,  சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது
இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.

நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.

தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.  (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)

வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின்  கை தானா  அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.

நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.

நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!)   நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம்
ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான்  மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.

மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )

உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)

நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை  இழுத்து விடுவது இல்லை.  அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.

இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை  ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண்  சலிவா உற்பத்தியாகுதாம்.


பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர  206 ஆக
குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே
மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.


* * * * * * * * * * * * * * *
Download As PDF

Sunday, May 4, 2014

பல்சுவை குட்டி தகவல்கள் !ஆரோக்கியமான மனிதன் தன் வாழ்நாள் முழுதும் நடக்கும் தூரம் இந்த உலகை மூன்று சுற்று சுற்றுவதற்கு சமம். அதே போல அவன் இதயம் பம்ப் செய்யும் ரத்தம் மூன்று தொட்டிகளை நிறைக்கும் அளவிற்கு இருக்கும்.

லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைய 15 வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் 1519 ல் மரணம் அடையும் முன்பு அந்த ஓவியத்தை இன்னும் முடிக்கவில்லை என்று சொன்னாராம். மனிதனின் முதுகெலும்பு அப்படி வளைஞ்சு இருக்குன்னு ஸ்கெட்ஸ் போட்டவரும் அவர் தான்.இந்த உலகில் எவ்வளவு வைரங்கள் இருக்கும் ? உலகின் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் வைரம் கொடுக்கும் அளவுக்கு.

ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகிக்கப்படும் பெயர்சொல் (Noun) "time"

ஹெராயினையும் (போதைமருந்து), அஸ்பிரினையும் கண்டுபிடித்தவர் ஒருவரே அதே ஆண்டில் [Felix Hoffman, 1897]

மனித மூளை ஒரு நொடியில் 11 million bits தகவல்களை சேமிக்கும் ஆற்றல் கொண்டது ஆனால் அதில் 40 மட்டுமே ஒரு நொடியில் வெளிப்படுத்த முடியும்.

மனிதனின் பார்வைத்திறன் கும் இருட்டில் ஐம்பது மைல் தொலைவில் ஒரு தீக்குச்சி எரியும் வெளிச்சத்தை அவனால் பார்க்க முடியும்.

ஒரு உருளைகிழங்கு வேக ஆகும் நேரத்தை அடிப்படையாக கொண்டது தான் இன்கா இன மக்களின் நேர அலகு. ( ஆஸ்டிரிச் முட்டை வேக வெச்சு பார்க்கல !! )

1748 மற்றும் 1772 ஆண்டுவாக்கில் உருளை கிழங்கு வைத்து இருப்பதே தண்டனைக்குரியது. எங்கு ? பிரான்ஸில்.

”காலம்” என்பதற்கு சரியான அறிவியல் நிரூபனம் இதுவரை இல்லை என்றே கருதலாம்.

கடலில் இருந்து எவ்வளவு உப்பு எடுக்கலாம்.? மொத்த கடல்களில் இருந்தும் உப்பு எடுப்பதாக கற்பனை (!) செய்தால், அதை அப்படியே நிலப்பரப்பில் 500 அடி உயரத்துக்கு கொட்டி வைக்கலாம்.


ஸ்க்ரு கண்டுபிடிப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பே ஸ்க்ரூ டிரைவர் [screwdriver] கண்டுபிடித்து விட்டார்கள். அப்போது இது ஆணி பிடுங்குவதற்கு மட்டுமே பயன் பட்டது.

ஒரு விந்தணுவில் 37.5 MB அளவு கொண்ட (DNA) மரபு கூறு தகவல்கள் பதியப்பட்டு இருக்கிறதாம். (ஹி..ஹி...இதிலிருந்து தானே டெரர் பிட்டுகள் உருவாகிறார்கள் )

அந்த கால கிரேக்கவார்தை “இடியட்” என்பதன் அர்த்தம் ”” “அவன் அரசியல் வாதி  அல்ல”

மனித கண்களால் 10 மில்லியன் கலர் ஷேடுகளை அறிந்து கொள்ள முடியும்.

பாபி (Bobby Leach) என்பவர் நயாகராவில் மேல் இருந்து உருட்டி விடப்பட்ட பேரலில் இருந்து கூட உயிர் பிழைத்தார் ஆனால் ஆரஞ்சு தோல் வழுக்கி விழுந்து இறந்து போனார்.

1 முதல் 10 க்குள் மிதமின்றி வகுபடும் மிகச்சிறிய எண் 2520.


நோமோ போபியா (Nomophobia) என்பது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏற்படும் பயம். (The fear of being out of mobile phone contact)


சூரியன் கேளக்சியில் ஒரு சுற்று முடிக்க 220 மில்லியன் ஆண்டுகள் ஆகிறதாம் அதில் 20 மடங்கு தூரம் இதுவரை பயணம் செய்து இருக்கிறதாம்.


ஹங்கேரி பாசையில் மகன், மகள் என குறிப்பிட வார்த்தை இல்லியாம் ஆனால் சகோதரி, சகோதரன் எனபதை குறிப்பிட பல வார்த்தைகள் இருக்காம் (ஆனா ”ப்ரதர்” இதுக்கு புது அர்த்தம் கண்டுபிடிச்சவன் தமிழனாத்தான் இருப்பான் ரீ கால்... ராஜா ராணி)

மனித உடலில் 100 ட்ரில்லியன் செல்கள் இருக்காம். ஒவ்வொன்றும் ஊசி முனையின் 10000 ல் ஒரு பங்கு அளவு. ஆனால் அதில் இருக்கும் DNA தகவல்களை பிரிண்ட் போட்டால் அந்த புத்தகம் 10,00 600 பக்கங்களை கொண்டிருக்கும்.

மனித எச்சிலில் ஒபிஆர்பைன் (opiorphin) எனப்படும் வலி நிவாரணி மருந்து இருக்காம். இது மோர்பைன் எனும் மருந்தை விட 6 மடங்கு வழுவானது.

ப்ளாடிபஸ் முட்டை போட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் உயிரினம்.

இவ்வுலகில் 6,900 மொழிகள் அழியாமல் இருப்பதாக சொல்லப் பட்டாலும், அதில் உலகின் மொத்த பகுதி ஜனங்கள் உபயோகிப்பது அவற்றில் 20ஐ தான்.

2 சதவீத பெண்கள் மட்டுமே தாங்கள் அழகு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.


ஆய்வுக்காக ஐன்ஸ்டீன் இறப்புக்கு பின் அவரது மூளை 240 பாகங்கள் ஆக்கப் பட்டு குடுவைகளில் பாதுகாக்கப்பட்டது. மொத்தமும் “Costa Cider” என பெயர் கொடுக்கப்பட்டு 20 வருடங்கள் வைத்திருந்தார்கள்.

ஹோண்டா, டயோட்டா இந்த பெயர்கள் ஜப்பானிய மொழியில் நெல் விளைவிக்கப்படும் நிலத்தின் பெயர்கள்.

”கவ் பாக்ஸ்” க்கும் பசுவிற்கும் சம்பந்தம் இருக்கு ஆனால் ”சிக்கன்பாக்ஸ்” க்கும் சிக்கனுக்கும் சம்பந்தம் இல்லை.ஒரு பென்சிலை கொண்டு 45000 வார்த்தைகளை எழுதலாம். 35 மைல் நீளத்திற்கு ஒரே கோடாக போடலாம்.

காளான்களுக்கும் மனிதர்களுக்கும் சம்பந்தம் (closely related)இருக்கு ஆனால் செடி,கொடி,மரங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.

Download As PDF

Monday, April 28, 2014

எங்கே, ஏன், எப்படி ?


எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?

நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo  sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம்.  சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை  வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்,  ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.


இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.

*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment

புதிர் 

ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?

எப்படி  ? பதில் பதிவின் இறுதியில்.


பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?

1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.

சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது.  அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.   அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.


அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ? பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.

இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது.  அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது.  ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ?  இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.


விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில்  PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.  ( ??)

கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.

க்யூப் வடிவதர்பூசணி  எப்படி விளையுது ?சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி

2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.

எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.
Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு


Download As PDF

Friday, March 28, 2014

வால் செத்துப் போச்சி !!

சந்தர்பங்களும் வாய்ப்புகளும் வாழைப் பழம் போல் வருவதில்லை....

அவைகள் பலா பழம் போலவே வருகின்றன.
ஆம்.... வாழை பழம் வேண்டுமென்கிற போது சுலபமாக உறித்து தின்று விடலாம்.  பலா பழத்தை சுவைக்க முட்களை நீக்கி பிசு பிசுப்பைத் தாண்டி சுளைகளை எடுக்க மெனக்கெட வேண்டும்.கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தனக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்று கவிஞர் வாலி குறிப்பிட்டார்

அந்த பாடல் வரிகள் ...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....


""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும் 
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""

ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...

மயக்கமா தயக்கமா....


#படித்து_ரசித்தது

வால் செத்துப் போச்சி !!

இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை அவன் வாலைப் பற்றித்தான் கவலை. வாலி வானுலகம் போயிருந்தாலும் அவன் வால் மண்ணுலகில் வைக்கப் பட்டு இருந்தால் என்ன செய்வது ?? அந்த வால் வந்து தன்னை துன்புறுத்துமோ என்ற பயம்.

வாலி மீளாது போயினும் அவன் வால் மீண்டுவிட்டால் என்ன செய்வது என்று அச்சப் படுகிறான். அச்சத்தை தீர்த்து வைக்கிறான் அனுமன்.

அஞ்சலை அரக்க ! பார்விட்டந்தர மடைந்தானறே

வெஞ்சின வாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே !!

{{ கம்பராமாயணம்}}


தானிக்கி தீனி!!

{பரமார்த குரு கதை}

ஒரு சமயம் குருவும் சீடர்களும் வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். செமையான வெயில், வழியில் தென்பட்ட ஒரு விடுதிக்கு சென்றனர். விடுதியாளரிடம் சற்று இளைப்பாறி செல்வதாக கேட்டு இடம் பிடித்தார்கள். அந்த விடுதிக்கு பணக்காரர் ஒருவர் குடும்பத் தோடு வந்தார். அவர் விடுதியாளரிடம் பணத்தை பற்றி கவலை படாமல் அறுசுவை உணவு செய்து தரும் படி கேட்டார். உணவின் மணம் மூக்கை துளைத்தது. குருவிற்கும் சீடர்களுக்கும் பசி வயிற்றை கிள்ள கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்று மூட்டைகளை பிரித்து உண்ணத் தொடங்கினர். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் மணத்தை உறிஞ்சி யவாறே கட்டுச் சோற்றை காலி செய்தனர்.

சட்டென்று வந்த விடுதியாளர் அவர்களின் செயலை கவனித்துவிட்டார். அவர்களிடம் சமையல் மணத்தை நுகர்ந்தவாரே அவர்கள் சாப்பிட்டதால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.

காசு தர மறுத்த குரு சீஷ்ய கோடிகளை பஞ்சாயத்தில் நிறுத்தினார். நடந்த தை கேட்ட நாட்டாமை விடுதியாளர் சொல்வது சரிதானென்றும் அதனால் குரு அவருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார். குரு மற்றும் சீடர்கள் தீர்ப் பை கேட்டு நொந்தனர்.

அதோடு நில்லாமல் நாட்டாமை வேலைக் காரனை கூப்பிட்டு பண முடிப்பை எடுத்து வர செய்தார். விடுதியாளரை அழைத்து காசு நிறைந்த முடிப்பை மேலும் கீழு ஆட்டிக் காட்டி என்ன இது ? எனக் கேட்டார்.

" காசு, துட்டு, பணம், பணம்...என சந்தோசமாக கூறினார் "

பணத்தின் ஓசையை கேட்டீர்கள் அல்லவா அது நீங்கள் காசை வாங்கி கொண்டதற்கு சமம்.

தானிக்கி தீனி சரியா போச்சு " இதுதான் தீர்ப்பு என்றார்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


// மேரி க்யூரி //

போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.

சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் "அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல..."

பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.

ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.

அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.

அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.  
Download As PDF

Monday, November 12, 2012

துணுக்குகள் !


அனைவருக்கும் "தீப ஒளி"  திருநாள் வாழ்த்துக்கள் !

மத்தாப்பு குச்சிகள் எறியும் போது பல நிறங்களில் சுடர்விடும். குறிப்பாக பச்சை நிறத்தில் ஒளிர எந்த வெப்ப உலோக உப்பு அதில் பயன் படுத்தப்படுகிறது ?  க்ளு இவற்றில் ஒன்று: (அ) :சோடியம் நைட்ரேட், (ஆ) : பொட்டாசியம் க்ளோரைடு, (இ) : பேரியம் குளோரைடு

விடை இறுதியில்.


இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் என்ன?

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம்
அதன் கண்களின் பின்புற உட் பகுதிகளில் "டேப்டம் லுசிடம்" என்று சொல்லப்படுகிற விளித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது. ஒளியானது கண்களின் ரெட்டினா எனப்படும் விளித்திரையின் மேல் பட்டு கண்களின் உட் சென்று டேப்டம் லுசிட படலத்தின் மேல் விழும் போது பிரதிபளிக்கின்றன. இந்த ஒளிரும் படலம் இரவில் குறைந்த ஒளியிலும் அதற்கு உருவங்கள் தெளிவாக தெரிய பயன் படுகிறது.


வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில் ஒளிர்வது எப்படி?


வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன. இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது அவற்றின் மீது வெயில் படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன. நம் கையால் இறகை தொட்டும் போது கைகளில் இந்த துகள்களை ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகிவிடும்.

வெடிகுண்டைக் கண்டறியும் மோப்பத்தேனீ க்கள் ( super sensitive Sniffer Bees)

மோப்ப நாய் கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன மோப்பத்தேனீ ?

தேனீக்கள் நாட்டியம் நமக்கு தெரிந்ததுதான் [ தெரியாதவர்கள் இதை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம் ] தேன் கிடைக்குமிடம் எவ்வளவு தொலைவில் உள்ளது ? தேன் எவ்வளவு உள்ளது இப்படி பல சிக்னல்களை தெரிவிக்க நாட்டியம் ஆடும்.  இதோடு கூட அவற்றின் மனசில்... ! பதிய வைத்த மேப் என்று சொல்லுவோமே அது போல இவைகள் இட அமைவை பதிய வைத்துள்ளன.  நம்மில் சிலருக்கு மூனு தெரு தள்ளி இருக்கும் கடையை கூட ஞாபகம் வெச்சுக்க முடியாது இல்லீங்களா ?.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அட்வான்ஸ்டு டிபென்ஸ் ரிசர்ஸ் ஏஜென்சி களுக்கு தேனீக்களின் திறமை தெரிந்து போய் அவர்கள் இதனுடைய மோப்ப திறனை ஆராய்ந்தார்கள். இறுதியில் இதற்கென ஒரு கையடக்க கருவியை  தயார் செய்தாங்க இது எப்பிடி இருக்கும்னா ( முழு படம் கிடைக்கல ) ஆஸ்துமா நோயாளிகள் பயன் படுத்துவது போன்ற இன்ஹாலர்.  டிசைன்... ரேஸில் ஒரு கேட் இருக்குமே அது மாதிரின்னு கற்பனை செய்துக்கலாம்.இந்த கருவியினுள் 32 தேனீக்களை அடைக்க முடியும்.  டிரிக்கர் மெக்கானிசம் இதுல இருக்கு அவ்வளவுதான்.

இந்த கருவி முன்னால தேனீக்கள் முன்னாடி மோப்பம் பிடிக்க வேண்டிய பொருள்களை அதாவது ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிபொருள் ( TNT பவுடர் ) இருந்தாலோ, போதை வஸ்துகளான கோகைன்,ஹெராயின் அப்புரம் செம்டெக்ஸ் இருந்தா உடனே அவைகள் டிரிக்கரை கிளிக் செய்கின்றன. அதாவது மோப்ப நாய் செய்யும் வேலையை இந்த தேனீக்கள் செய்கின்றன. 

எனக்கு ஒரு சந்தேகம் திறமையானவங்க இதுக்கு பயிற்சி அளித்த மனிதர்களா ? அல்லது தேனீக்களா ? 


கொசுறு  தகவல்கள் : 

2002 வரை ஒடிசாவில் போலீஸ் துறையில் புறாக்கள் இருந்ததா ஒரு தகவல்.  

புறாக்கள் தூதுவர்களாக 3000 ஆண்டுகள் இருந்தன. 

1850 ல் பால் ராய்ட்டர் செய்தி நிறுவனம் புறாக்களை வைத்து நடத்தப்பட்டது.

1941 ல் நேச நாடுகள் தகவல் பரிமாற்றத்திற்கு புறாவைப் பயன்படுத்தினர்.


US மற்றும் ரஷ்ய கடற்படையில் பயிற்சி பெற்ற டால்பின்கள் பணிபுரிகின்றன.

டர்கி வல்லூறுகள் (turkey vulture) பைப்லைன்களில் கேஸ் கசிவை கண்டறிகின்றன. இதனுடனை நாசி அமைப்பு இப்படிப்பட்ட தகவமைப்பை கொண்டிருக்கிறது. 


சில பென்குவின் வகைகள் :


ஸ்நேர்ஸ் நியூசிலாந்தின் குட்டிதீவு. இங்கு வாழும் சிறியவகை ஸ்நேர்ஸ் பென்குவின்கள் 31000 இருப்பதாக கணக்கெடுப்பு சொல்லுகிறது. இத் தீவு மனிதர்கள் தரை இறங்க தடை செய்யப்பட்ட பகுதி. (கடலில் போட்டில் மிதந்த படியே எடுக்கப்பட்ட படம் மேலே)


துணை அண்டார்டிக் பகுதியில் மெக்குலர் தீவில் வசிக்கும் ராயல் பென்குவின்கள் வகை சிறு கற் குகைகளில் தங்கள் கூட்டை அமைத்து வசிக்கின்றன. வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டுமே இந்த தீவில் இருக்கும் ( பிக்னிக் ! )  ஹிரோ ஹீரோயின் மாதிரி ஸ்டைலான தலைய கவனிச்சீங்களா ?சிறியவகை ஜூவினில் வெள்ளை துடுப்பு ( juvenile white flippered penquin)  பென்குவின்கள் என்பவை  நியூசிலாந்தின் வடக்கு குட்டிதீவில் அதாவது காண்டெர்பரி பகுதியில்  4000 உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு. 

விஷ அம்பு தவளைகள் அல்லது நச்சு தவளையை (Poison arrow frog / Poison dart frog) உண்ணும் பாம்புகள் உண்டா ? இந்த தவளையின் சிறப்பு என்ன ? 


மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் விஷ-அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. (ஆங்கிலப்படம் அபோகலிப்ட்தோ படம் பார்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ) மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக்காலத்தில் இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும்.  இந்த நிறம் எதிராளியை உண்ணவா? சாக வா? என்பதற்கான ஒரு எச்சரிக்கை அடையாளம்.  மேல் தோலில் உள்ள விஷம்  20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது (அடேங்கப்பா !).  நச்சு, இது உண்ணும் கரையான்கள்,எறும்பு, பூச்சிகளில் இருந்து பெறுகிறது.

இதை உண்ணும் பாம்பு - லியோஃபிஸ் எபைன்ஃபைலஸ்
Liophis epinephelus ( வல்லவனுக்கு வல்லவன் ! )
சில  புகைப்படங்கள் : 

வியட்நாமிலுள்ள மட்டந்தட்டு மூக்கு குரங்கு [ Snub nosed Monkey ]


முதல் கேள்விக்கான பதில்  (இ) : பேரியம் குளோரைடு
Download As PDF

Wednesday, July 18, 2012

துணுக்குகள்..


குளிர் காலங்களை விட வெயில் காலங்களிலேயே நம் தலைமுடி வேகமாக வளர்கிறது. அதனால் தான் சம்மர்ல சம்மர் கட்டிங்கிற்கு மவுசு..!


பெரியவங்கள காட்டிலும் குழந்தைகள் கண் சிமிட்டுவது குறைவு. அதுவும் குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திற்கு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சிமிட்டல்களே போடுகிறது.   இன்னொன்னு கவனிச்சிருக்கீங்களா உங்க கண்சிமிட்டல பார்த்து அப்பவே கண்ணடிக்க பழகிருதுங்க இந்த காலத்து சுட்டீஸ்.


மண்டை எழும்பு 22 எழும்புகளின் கூட்டு.


ஜப்பானியப் பெண்கள் சாராசரியாக 80 வயசு வரைக்கும் வாழ்கிறார்கள். [ கொடுத்து வைத்த கணவன்கள்..]


மூளையில் உள்ள செல்கள் திரும்ப உருவாவது இல்லை இந்த செல்கள் செத்து போனா போனது தான்  [ ... இரு..க்கும் ஆனா இருக்காது...]


வாசனை நமது நாக்கிற்கு சுவையை உணர்த்துகிறது. சளி பிடித்திருக்கும் போது டேஸ்ட் பிடிப்பதில்லை...இதுவும் ஒரு காரணம்.


போரன்சிக் (தடயவியல்) வல்லுனர்கள் ஒரு முடியை மட்டும் வைத்துக்கொண்டு அது இருந்த இடம் ஆணா, பெண்ணா, என்ன வயது உடல் நிலை எப்படி இருந்தது,  அவன் உடலில் பாய்சன் இருந்ததா இப்படி பல விசயங்கள புட்டு புட்டு வைப்பார்கள். [ முடி போனா ... அப்படி சுலபமா எடுத்துக்கமாட்டாங்க.]
வாந்தி வருவதற்கு முன் அதிக உமிழ்நீர் வாயில் சுரப்பது வயிற்றிலிருந்து வெளிவரும் அதிக ஆசிட் நம் பல்லை பாதிக்க கூடாதுன்னுதான்.


ஒன்று போலவே இருக்கும் டிவின்ஸ் பலபேருக்கு DNA ஒன்று போலவே இருக்கும் ஆனா கைரேகை வேர வேர தான்.


கவனிச்சு பாருங்க உங்க நடுவிரல் நகம் மட்டும் மத்த விரல்களின் நகத்தைவிட வேகமா வளரும்.


கோலா கரடிகளின் காலடித் தடமும் மனிதனது காலடி தடமும் அநேக சமயங்களில் ஒன்று போலவே இருக்கும்.


85 சதவீத மனிதர்களாலே தங்கள் நாக்குகளை குழல் போல மடிக்க முடியும் மீதி 15 சதவீதம் பேருக்கு ஊ..கூம்.


Download As PDF

Tuesday, July 10, 2012

துணுக்குகள்...


என்சிலடஸ் [Enceladus] என்பது சனி கோளினுடைய ஒரு நிலா (துணைக்கோள்) இதில் ஐஸ் எரிமலை உண்டு எரிமலை குளம்பு [லாவா] தண்ணீராக தெறிக்கிறது

ஒரு நாளில் பூமி 2.4 மிலியன் கிலோமீட்டர் பயணிக்கிறது,  சூரியனை சுற்றி.

யுனிவர்ஸின் அளவு மிகப்பெரியது கற்பனைக்காக ஒரு பெட்டியாக [பெட்டியின் நீளம் 32 கி.மீ.]  கற்பனை செய்யுங்கள் அனைத்தும் அதனுள் இருக்கும் ஒரு சிறு மண்துகள்கள்.

ஜீபிடரில் 1நாள் என்பது பூமியின் 10 மணி நேரத்திற்கு சமம்.


விண்வெளியில் இருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னலுக்கு "WoW" என்று பெயர் 1977 ல் விவரிக்க முடியாத சிக்னல் ஆதாரம் கிடைத்தது. அதன் பிறகு இதுவரை இல்லை.


தென் ஆப்பிரிக்காவின் [Quiver Tree] குய்வா மரம் தனது கிளைகளை இலை உதிர்ப்பது போல உதிர்த்துக் கொள்கிறது [ புத்திசாலியான மரம் ]


பொலீவியாவில் ஒரு மூலிகை தாவரம் உள்ளது இது பூ பூக்க 80 முதல் 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.உலகத்தில் அதிக விஷமுள்ள தாவரம் [ Castor Bean ] கேஸ்டர் பீன் 70 மைக்ரோ கிராம் ஒரு மனிதனை கொள்ளக் கூடியது.  இது ராட்டில் [பாலைவன ] பாம்பைவிட 12000 மடங்கு அதிக விஷம் உள்ளது.


ரெட்வுட் மரம் வெளிப்புரத்தில் எரிவதில்லை. அதன் உள்பகுதி மட்டுமே எரியும் தன்மை கொண்டது.


வீனஸ் ப்ளைடிராப் என அழைக்கப்படும் பூச்சியுண்ணும் தாவரம் அரை மணியில் ஈ யை (அ) பூச்சியை கொல்கிறது  அதை 7 நாட்களில் ஜீரணம் செய்து ஸ்வாகா பன்னுகிறது.

சில பைன் மர வேர்கள் 48 கி.மீ நீண்டு செல்லக்கூடியது.

இசையை கேட்டு சில தாவரங்கள் விரைவில் வளர்கிறது இதற்கு ஆராய்சியாளர்கள் சிறந்த உதாரணமாக  ' Bat out of Hell "  என்ற இசையை குறிப்பிடுகிறார்கள் பாடிய பாடகர் மெட்லாஃப் [ Meatloaf ]


Download As PDF

Saturday, June 16, 2012

துணுக்குகள் பிளஸ் துணுக்குகள்...
கி.பி 6 ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளிலும் பல பிரபலங்கள் பிறந்து வாழ்ந்தார்கள்.   சீனாவில் லாவோட்சே, கன்பூஷியஸ் ; 
இந்தியாவில் மகாவீரர், புத்தர்; 
யூதர்களில் ஜெர்மையா, எசக்சியல் ; 
பாபிலோனில் நேபுசாத்நேட்சர் ; 
ஈரானில் சைரஸ் ; கிரீஸ் தேல்ஸ், பிதகோரஸ் ; இப்படி பல பெரியவர்கள் தோன்றிய நூற்றாண்டு அது.

புத்தரின் போதனைகள் அவரது மறைவிற்கு பின் 200 வருடங்களுக்கு பிறகே ஆவணப்படுத்தப்பட்டன.  இவை " மாகதி " எனும் மொழியில் இருந்தது. இந்த மொழியே பின்னர் " பாலி " மொழி எனப்பட்டது.  பாலி என்றால் பாதுகாக்கும் எனப் பொருள்.  அதனாலே புத்தரின் மத நூல்கள் பாலி எனவே அழைக்கப் பட்டது.

இப்போது அந்த மொழி பிரயோகத்திலேயே புத்த சமய கிரியைகள் தொடர்கிறது.   இம் மதத்தவர் கோயில்கள் சைத்தியம் எனப் பெயர்.  புத்த பிக்குகள் வசிக்கும் இடம் விகாரங்கள் . அப்போது காஞ்சியை போன்று கட்டிடங்களாக சிலவே இருந்தன. பெரும்பாலும் குகைக் கோயில்கள் அஜந்தா எல்லோரா போன்று [ ஏழாம் அறிவு திரைப்படத்தில் புத்த மதம் மற்றும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பு சிறப்பாக காண்பிக்கப்பட்டதை உங்கள் ஞாபகத்தில் ரிவைண்ட் செய்து கொள்ளலாம் ..! ]

பிதகோரஸ், பிளாட்டோ இவர்கள் இந்திய ஞானிகளின் உபதேசங்களை கிரகித்து தங்கள் தத்துவங்களை எழுதினார்கள்.  நமது தத்துவங்களே... கிரேக்க தத்துவமானது. இதற்கு வரலாற்று சான்றுகளை மேற்கோல் காட்டப்படுகிறது.தேவநகரி என்ற எழுத்து வடிவம் இந்திய லிபியான பிராமி எழுத்தின் திருந்திய வடிவம்.  இந்த பிராமி முதலில் சமஸ்கிருதத்திற்கும் பின்னர் ப்ராகிருத மொழிக்கும் பொதுவான எழுத்து வடிவமாக இருந்தது.  ஒலி வடிவங்கள் சுத்தமாக பிரதிபளிக்ககூடியது.  கி.மு 5 ஆம் நூற்றாண்டில் நல்ல வளர்ச்சி கொண்டிருந்தது.  அசோகர் கல்வெட்டுகள் ' பிராமி எழுத்துக்கள் தான்.

பைபிள் என்ற வார்த்தை கிரேக்க சொல்லான "பிப்லாஸ்" என்ற வார்த்தையில் இருந்து உதித்தது.  பைபிள் ஒரு தனி நூல் அல்ல 64 புத்தகங்களின் தொகுப்பு. கிறித்துவின் காலத்திற்கு முற்பட்டது பழைய ஏற்பாடு இது எபிரேபிய மொழியில் எழுதப்பட்டது. கிறித்துவின் காலத்திற்கு பின் ஏற்பட்டது புதிய ஏற்பாடு இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

பகோடா [ இங்கு மொறு மொறு தின்பண்டம் அல்ல ] கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வெளியிட்ட நாணயம். மேற்கு கரைப்பகுதிக்கு போர்துக்கீசியர் வந்த போது பகவதா என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தது அவர்கள் வாயில் வெளிப்பட்ட வார்த்தை பகோடா... இதில் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது.
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)