Followers

Showing posts with label பறவை. Show all posts
Showing posts with label பறவை. Show all posts

Sunday, February 4, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 2

#பறவைகள் #பலவிதம் Part 2
##############

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.
Download As PDF

Tuesday, January 30, 2018

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.


Download As PDF

Monday, August 6, 2012

[பென்குவின்கள்] தந்தைபறவையின் தனி திறமை




பென்குவின்கள் பறக்க இயலா பறவை இனம், தெரிந்ததுதான்.  இவைகளில்  உலகத்தில் 17 விதமான வகைகள் உண்டு பெரும்பாலும் அண்டார்டிகா பனி பிரதேசத்தில் கூட்டமாக வாழும். நீருக்கடியில் இதன் நீச்சல் வேகம் மணிக்கு 24 கி.மீ இதன் துடுப்பு போன்ற கால்களும் றெக்கையும் வேகமாக நீந்த உதவுகிறது.

ராஜ வகை [ Emperor ]  பென்குவின் பெயருக்கு ஏற்றார் போல் பிரமாதமான உடல் அமைப்பு கொண்டது. பெரிய தலை மற்றும் நீளமான அலகு கொண்டது.  3.7 அடி உயரமும் 41 கிலோ எடையும் கொண்டது.  சிறிய வகை 16 இன்சுகள் தான் இதன் எடை ஒரு கிலோ மட்டுமே.


குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணம் பென்குவின்கள் தான்.  தாய் பறவை ஒரே ஒரு முட்டையை  தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்று விடும்.     அது கொடுத்த முட்டையை குஞ்சு பொறிக்கும் வரை அதை பத்திரமாக பாது காப்பது மற்றும் மிதமான சூட்டிற்கு தன் கால்களுக்கு இடையே அடைகாக்கும் பவுச் பகுதியில் வைத்துக் கொண்டிருக்கும் தந்தை பறவை.  பசியாயினும் பொறுமை  காக்கும், தாய் பறவை ஏதேனும் உணவு கொண்டுவரும் வரையிலும்.   குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பெரும்பாலும் குஞ்சை வளர்க்கும் பொறுப்பும் அதற்கு உண்டு.

இவற்றின் உணவு மீன்கள், ஸ்கிவிட் எனும் கடல் உயிரி. உணவை லாவகமாக தூக்கி போட்டு பிடித்து சாப்பிடும்.

அண்டார்டிகா உறைபனியில் எப்படி வாழ்கிறது?. இதன் உடல் அமைப்பு அதற்கு தகுந்தார்போல் திடமான கொழுப்பு உடல் கொண்டவை. மேலும் அடர்த்தியான ரோமமும் இதை கடும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது. வால் பகுதியில் ஒரு சிறப்பு உறுப்பில் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது இது உடல் நீரால் நனையாமல் வாட்டர் புரூப் போல பாது காக்கிறது.
Download As PDF

Thursday, July 12, 2012

அபூர்வ பறவை ககபு [KaKapo ]




ககபு [KaKapo ] எனும் பறவையின் வாழ்விடம் நியூசிலாந்து.
ககபு வால்  பறக்க இயலாது. இதன் அதிக எடை.  மற்றும் தகவமைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் இவை பறக்கும் தன்மையை இழந்தன.   இவை கிளி இனம்.  ஆந்தையை போன்ற அலகுகள் கொண்டது. இதன் வழுவான கால்களால் அடர்ந்த காட்டில் நடந்தே இறை தேடுகிறது,  இரவில் மட்டுமே. கால்களை கொண்டே உயரமான மரங்களிலும்  இவை ஏறுகின்றன. 

 200 வருடங்களுக்கு முன் பரவலாக இருந்த இவை மனிதர்களாலும், மற்ற விலங்குகளாலும் அழிக்கப்பட்டுவிட்டன.  எஞ்சிய 50 பறவைகளை 1995 ல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிக எடைகொண்ட பெண் பறவை இடும் முட்டையில் இருந்து ஆண் குஞ்சுகளே பொறிக்கும். மேலும் வருடத்திற்கு ஒரிரு முட்டைகளை மட்டுமே இடும்.

இவற்றின் இனப்பெருக்கத்திற்காக இவைகளை ஆஸ்கர், கோட்பீஸ்  போன்ற சிறு தீவுகளில் காட்டில் விடப்பட்டன.  இவற்றில் ரோடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டன.  பறவை ஆர்வளர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவில் இவற்றை கண்காணித்தனர். இவற்றின் குஞ்சுகளுக்கு எலெக்ட்ரிக் போர்வை, போதுமான ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டன இவை அனைத்தும் இரை தேட சென்ற தாய் பறவை திரும்புவதற்குள்ளாக.

18 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது ஆதாவது மூன்று மடங்கு.

பறவை ஆர்வலர்கள் செய்த சேவை பாராட்டத்தக்கது.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (4) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (22) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (4) பறவை மனிதன் (1) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)