Followers

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, April 20, 2017

தாய்ப்பால் வியாபாரச் சந்தை
"எதுவும் வணிகம்"  இப்படியான உலகத்தில் வாழ்கிறோம் இதில் தாய்ப் பால் விற்பனை என்பது இல்லாமலா இருக்கும்.

 தனக்கு பிறக்காத இன்னொரு குழந்தைக்கு தாய் பால் புகட்டுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் பால் சுரப்பில் பிரச்சனையோ அல்லது நோய்வாய் பட்டிருக்கும் சமயத்தில், பசும்பாலை குடிக்கும் பக்குவம் இல்லாத சிசுவிற்கு பால் புகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா ?

கைக்குழந்தை வைத்து இருக்கும் பெண்கள் இன்னொரு தாயான பெண்னை பால் புகட்ட சொல்லி வேண்டுவது உண்டு. இதெல்லாம் இலைமறை காய்மறை சங்கதிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எங்கே அழகு குறைந்து போய் விடுமோவென....குழந்தைக்கு பால் புகட்ட மறுக்கும் பெண்களும்  இருக்கத்தானே செய்கிறார்கள்.  சிசுவிற்கு தாய் பால் புகட்ட வேண்டிய அவசியத்தையும் விளம்பரப் படுத்த வேண்டி இருக்கும் காலமிது.

சரி தலைப்பு செய்திக்கு வருவோம்... ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட இப்போது தாய்பால் விற்பனை என்பது ஜனரஞ்சகமான ஒன்று.  இந்தியாவில் இது இன்னும் பரவலாக்கப்பட வில்லை. சாதி என்ற ஒன்று இந்தியாவில் இருக்கும் வரை அதெல்லாம் மாறப் போவதில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

தாய்பால் விற்பனைக்காக பல தளங்கள் இருக்கின்றன அதில் வால்மார்ட் சக்கை போடு போட்டது என்கிறார்கள்.
ஒன்லி தி ப்ரெஸ்ட்  onlythebreast  எனும் தளம் தாய்பால் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கிறது. இதில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வாங்குவதானலும் விற்பதானாலும். (தளத்திற்கு செல்ல லிங்கின் மேல் சொடுக்கவும் ). எய்ட்ஸ் போன்ற நோய்கள் இல்லாதவரிடம் இருந்தே தாய்பால் பெறப்படுகிறது.

தாய்பால் குழந்தைக்காக வேண்டும் என்பது மட்டுமல்லா ஆண்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்ற விவரமும் இந்த தளத்தில் இருக்கு ஆண்களுக்கு எதற்கு என்றால் இம்யூனல் பிரச்சனை உள்ளவர்கள், அ.து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், விளையாட்டில் (? !) (sports) போன்விட்டா பூஸ்ட் மாதிரி சக்தி ஏற்றி கொள்ளவும் வாங்கி குடிக்கிறார்கள்.  அவுன்ஸ் இவ்வளவு என்று விலை வைத்து விற்கப்படுகிறது அதிலும் கால அளவிட்டிற்கு தகுந்த படி யெல்லாம் இருக்கிறது. ஆனால் முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இத்தகைய விற்பனை  பயில்வானாக மாற ஆசைப் படுபவர்களுக்கு அல்ல. "தாய் பால் குழந்தைகளுக்கானது "


தாய்பால் தரத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா, கனடா இங்கெல்லாம் The Human Milk Banking Association of North America (HMBANA) (எச்எம்பானா )என்ற  அமைப்பு (1985 லிருந்து) செயல்படுகிறது. சந்தை வியாபரம் அற்ற தனியார் அமைப்புகள் கூட இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு பால் இன தம்பதிகள் (கய்) கைக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் இப்படியான ஆன்லைன் சேவையை வரவேற்கிறார்கள்.  தங்களுக்கு பால் கொடுக்கும் கொடுப்பிணை இருந்தால் இத்தகைய வங்கிகளில் சேவை செய்ய ஏக்கமாயிருக்கிறது என்கிறார்கள் ....என்கிறது ஒரு செய்தி குறிப்பு.

தாய் பால் வியாபாரமா? என்பவர்களுக்கு  ஆம் கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பண தேவையில் இருக்கும் பெண்கள் அனேகம் பேர். மாதத்திற்கு சாராசரியாக 20 / 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பவர்களும் உண்டு.
இதெல்லாம் தேவையா தவறான போக்கு என்ற விவாதமும் இல்லாமல் இல்லை. எந்த ஒரு விளைவிற்கும் எதிர் வினை உண்டு என்று நியூட்டனே சொல்லி யிருக்கிறார் (டாட்)
Download As PDF

Saturday, February 21, 2015

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்
கர்பிணிகள் உடலில் செல் பறிமாற்றம் பற்றி இந்த பதிவு.

இதுபற்றி இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன 1. கருவுற்ற பெண் வயிற்றில் வளரும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் (குருத்தணுக்கள்) தாய்க்கு கடத்தப்படுகின்றனவா? 2. அதன் மூலம் பழுதடைந்த செல்கள் தாயிடம் புதுபிக்கப் படுகின்றனவா?

Can a pregnant woman get stem cells from her
baby? And can they repair damage in her body?

தாய் கருவுற்று இருக்கும் போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ப்ளஸென்ட்டா (placenta) வழியாக செல்கள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன.  ஒரு ஆய்வின் படி 80 சதவீத தாய்மார்கள் செல்லுக்கு "Y " குரோமோசோம்கள் ஆண் குழந்தையிடம் இருந்து கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் அவை தாயின் இரத்த செல்களில் கலக்கின்றன.  உடம்பில் இயற்கையாக இருக்கும் இம்யூனல் சிஸ்டத்தின்படி தற்காப்பு நடவடிக்கையாக சில மணி நேரங்களில் அவை அழிக்கப் படுகின்றன.  

ஆனால் முழுமையாக அழிக்கப்படாத திசுக்கள் தாயின் உடலில் ஒரு பகுதி திசுவாக தங்கிவிடுகின்றன.

அதே போல குழந்தையின் உடம்பிலும் தாயிடம் இருந்து கடத்தப்படும் செல்கள் திசுக்களாக குழந்தையின் உடம்பில் தங்கிவிடுகின்றன.  தாயிடம் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட செல்கள் குழந்தையின் உடலில் அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் குழந்தையின் உடலில் குடிபுகுந்து விடுகிறது. அதாவது மரபணுகள் விதைக்கப்படுகின்றன.
 இந்த சுழற்சியை உற்று நோக்கினால் பரம்பரை பரம்பரையாக இந்த செல் கடத்தல் நடத்தப்படுகிறது.  எலிகளிடத்திலும் ஏன் மனிதர்களிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் தாயின் லிவர், கிட்னி, மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் குழந்தையிடம் இருந்து கடத்தப்பட்ட மரபணு செல்கள் காணப்படுகின்றன. அந்த புதிய செல்கள் தாயின் உடம்புச் செல்களை போலவே வளர்கின்றன.


இன்னொன்றை சிந்தித்துப்பார்த்தால் மனித உடலில் பல பரம்பரை செல்கள் இருக்கும் போல தெரியுதே. (humans involve cells from several generations)
இத்தகைய செல் பறிமாற்றத்தால் தாய்க்கு இம்யூனல் சிஸ்டம் பாதிப்பு ஏற்படுகிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட ஆய்வில், ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களில் 20 ல் 12 பேருக்கு செல் பறிமாற்றத்தின் காரணமாக தைராய்ட் சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபனமாகியுள்ளது. (குழந்தை பேற்றுக்கு பின் குண்டாகிப் போவதற்கு இதுதான் காரணமோ )

Download As PDF

Tuesday, January 20, 2015

எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபாயாடிக்ஸ் [antibiotics]ஆண்டிபயாடிக் மருந்துகள் சாதாரணமாக பரிந்துரைக்கப்படும் மருந்து. இது உடனடியாக நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் 50% தேவை இல்லாத ஆண்டிபயாடிக் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.

மக்கள் பொதுவாக பாக்டீரியா, வைரஸ் குறித்த வித்தியாசங்களை தெரிந்து கொள்வதும் இல்லை விருப்பப் படுவதும் இல்லை.

வேகமான நம் வாழ்க்கையில் ஏற்படும் உடல் பிரட்சணை அதாவது காய்ச்சல்
என்றாலே சிலர் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை சாப்பிடும் வழக்கத்தில் இருக்கிறோம்.

இந்த மாத்திரை நமக்கு தற்காலிகமாக நோயில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்தோ அடிக்கடி நாம் இந்த மாத்திரையை உட்க்கொள்வதால் உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ப்ராய்லர் கோழிகளுக்கு கூட நோய் எதிர்ப்பிற்காக இல்லை அவை குண்டாவதற்காக (risk of obesity) இவை குறிப்பிட்ட அளவில் தீவணத்துடன் சேர்த்து கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்., அப்படியானால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் மனிதனுக்கும் ஓபிசிடி என்று சொல்லப் படுகிற உடற்பருமன் ஏற்படும் வாய்ப்பும் உண்டே.ஆன்டிபயாடிக்குகள் நம் உடலில் உள்ள பயன் தரும் பாக்டீரியாக்களையும் கொல்கிறது.

இந்த பயன் தரும் பாக்டீரியாவனது நம் உடலின் குடல் வாலில் இருக்கிறது.
நம் உடலின் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கிறது.

சிறுவர், சிறுமியருக்கு அந்த வயதில் இருந்தே இந்த மருந்தை உட்கொள்வது கண்டிப்பாக அவர்களின் இன்சுலின் சுரப்பை பாதிப்படைய செயவதாக சொல்கிறார்கள்.   !! இது முதல் கட்ட சக்கரை நோய்.

H. pylori  பைலோரி என்று ஒருவகை பாக்டீரியா ஆஸ்துமாவில் இருந்து நம்மை பாதுகாப்பது.

தொடர்ந்து வழக்கமாக நாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட் கொள்ளும் போது நம் உடலின் இயற்கையான நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு.

அடுத்து வரும் தகவல் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தலாம் இது பி.பிசியில் வெளியான தகவல்.  இருப்பினும் ஆன்டிபயாடிக்கை பற்றி தெரிந்து கொள்ள அந்த தகவலை கீழே தருகிறேன்.மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புறுக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.

மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது

இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.
மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும்.

எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.

சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

Download As PDF

Wednesday, August 27, 2014

வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ?சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (the World Health Organization  WHO)  அம்மை சாம்பிள்களை(மாதிரிகள்) ஒழித்து விடுங்கள்  ( ”to destroy the smallpox virus once and for all” ) என்ற அறிவிப்பை சப்தமில்லாமல் தெரிவித்தது.

மனிதர்களுக்கு நோய் வருகிறது அந்த நோய் கிருமிகளை ஆய்வு மையங்களில் எதுக்கு பாதுகாத்து வைக்கனும் ? அதற்கு உலக நாடுகள் சொல்லும் காரணம் திரும்ப அது வேறு வடிவில் தாக்கினால் அவற்றை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு அது அவசியம் என்பது.  இது வெளிப்படையாக சொல்லப் படும் கருத்து தான்.  ஆனால் உண்மையில் வைரஸ் கிருமிகளின் மாதிரிகளை பாதுகாத்து வைத்துக்கொள்வது ஒவ்வோர் நாடும் எதிரி நாட்டின் மேல் ஏவுவதற்குதான் என்பது மறைக்கப்பட்ட உண்மை.

வெள்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்படும் சமீபத்திய உயிர் கொள்ளி நோய் “எபோலா” திட்டமிட்டு பரப்பப்பட்டு இருக்கலாம் யார் கண்டது ?

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள் சர்வ சாதாரணமாக ஊடுருவி இருப்பதுவும் அத்தகைய ஒரு சதிகளில் ஒன்றுதான்.

80" களில் முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சின்னம்மைமாதிரிகளை இதுவரை ஒழிக்காததுவும் எதிரி நாடு நம்நாட்டின் மேல் பிரயோகித்தால் என்ன செய்வது? இப்பிடியான வலுவான காரணங்களும் உண்டு.  உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா (அப்போதைய) இதே காரணத்திற்காகத்தான் அந்த மாதிரிகளை அழிக்காமல் வைத்து இருந்தன.  அப்படியானால் அந்த நாடுகள் மட்டும் தான் மாதிரிகளை வைத்து இருந்தனவா என்றால் அதுவும் இல்லை பெரும் பாலான நாடுகள் அம்மாதிரியான வைரஸ் மாதிரிகளை சேமித்து வைத்து இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் பலப் பல வைரஸ் மாதிரிகள் ஏதோவொரு காரணங்களுக்காக வைக்கப் பட்டிருக்கும்.  அதிகாரப்பூர்வமான ரெக்கார்டுகள் என்பது கண்கட்டு வித்தைதான்.


விஞ்ஞானிகள் சொல்வது ஒரு மனிதனின் டி.என்.ஏ மரபியல் கூறுகளை (GENETIC SEQUENCE) அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது [epigenetics !].  அதன் கட்டமைவுகள் மேம்பட்டு கொண்டே செல்கிறது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டேட்டாவும் அதில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? என்று யோசித்தோமால அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  உதாரணமாக எகிப்திய மம்மிகளின் உடல் திசுக்களில் இன்னமும் சின்னம்மை கிருமிகள் இருக்கின்றன என ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது. வைரஸ்கள் எவ்வளவு ஆண்டுகாலம் உயிர்ப்புத் தன்மையோடு இருக்கும் என்பதுவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயமாக இருக்கிறது. 

"smallpox"

ஒரு நோய் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் எந்த நோயும் முற்றாக ஒழிக்கப்படவில்லை அந்த கிருமிகள் ஏதோ ஒருவடிவில் ”மோன” நிலையில் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு சுழற்சி திரும்ப திரும்ப வருவது போல அவை மீண்டு எழுவதும் தவிற்க இயலாதது.

இன்னொன்றையும் நாம் கவனித்தில் கொண்டால் எவ்வளவுக்கெவ்வளவு நாம் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு ஏதோ ஒரு வடிவத்தில் வைரஸ்கள் தம்மை உருமாற்றிக்கொள்கிறதோ ? ( ! ) என்பதும் சிந்திக்கவேண்டிய விசயம்.
A sophisticated laboratory could resurrect smallpox right now. And at some point in the near future, anyone could. And if that is the case, then what would destroying the samples in these two labs in the US and Russia really accomplish? We might be able to destroy smallpox next year, but we won't be able to destroy it forever.
Download As PDF

Saturday, June 14, 2014

டிசைனர் குழந்தைகள் !!"டிசைனர் குழந்தை " (Designer Baby) இந்த பதம் விஞ்ஞானிகளால் சொல்லபடவில்லை மாறாக பத்திரிக்கையாளர்களால் சொல்லப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தம் உடலைப் பற்றிய குறை இருக்கிறது...உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன், நம்ம கண்னு மட்டும் ஏன் ப்ளூவா இல்ல, இப்படி சொல்லிட்டே போலாம்.  அதெல்லாம் நாம நிர்ணயிக்க முடியாதப்பா... என்பதே பெரும்பாலவர்களின் பதிலாக இருக்கும்.

40 வயசுக்கு மேல இல்ல இல்ல பிறந்த குழந்தையே சக்கர வியாதியோட பிறக்குதே, டாக்டரின்  முதல் கேள்வியே  உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்பதாக இருக்கும் இது ஒரு வியாதியே இல்லை என்றாலும் நம் உடம்பில் குறைபாடு ஏற்பட உணவு பழக்கம் தவிர்த்து
பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்கிறது. இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதன் படி குழந்தை உருவாக்களில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
நமக்கு பிடிச்ச காரை எப்படி தேரிந்தெடுக்கிறோமே அதுமாதிரி , எதிர்காலத்தில் நம் குழந்தை இப்படி பர்ஸ்னாலிட்டியாக,  இன்னின்ன பரம்பரை நோய் தாக்காத, நம்மமாதிரி ! (ஙே) அறிவு ஜீவியா பிறக்கனும் என்பதை தீர்மானிக்கலாமாம்.அது படி வெளிப்படையாக தெரியாத தகவல்கள் (Genome kid) மரபியல் நிர்ணயக் குழந்தைகள் ஏற்கனவே பிறந்தாச்சு என்பதுதான்.
ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் 2003 ல் முழுமையாகியது. அதன்படி எந்த எந்த கூறு இன்னின்ன செயல்களை நிர்ணயம் செய்கிறது என்பதை வரையறுத்து இருக்காங்க. மேலும்  இத்தோட முடிஞ்சது என்று இல்லாமல் அந்த ஆய்வு தொடர்கிறது.  2010 ல் இந்த் ஜீன் மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஊமையாகவோ, குள்ளர்களாகவோ, காதுகேட்காது, இருப்பவனின் குழந்தை பரம்பரை பரம்பரையாக அப்படியே பிறக்கனுமா என்ற அவர்களின் மனவருத்தம் போராட்ட அளவில் ஏற்பட இங்கிலாந்து அரசு இதற்கென சட்ட திருத்தங்களை செய்தது. (முழு விவரம் தெரியல)

 ஆங்கிலத்தில் InVitro Fertilisation (IVF) என்று சொல்றாங்க டெஸ்ட் டியூப் பேபி கேள்வி படுறோம் அந்த ப்ராசஸ்ல மரபணுவை திருத்தங்கள் செய்து விதைக்கிறார்கள். Pre-implantation Genetic Diagnosis (PGD) என்று இன்னொரு டெக்னாலஜியும் இருக்கு (selected embryos are implanted back into the mother's womb.)

இதில ஆபத்து என்னென்னா எல்லோரும் ஆண் குழந்தையே வேணும்னா என்ன செய்யறது.

டிசைனர் பேபி என்றால் என்ன  விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கு படித்து கொள்ளுங்கள்.

What is a designer baby?

Advanced reproductive technologies allow parents and doctors to screen embryos for genetic disorders and select healthy embryos.

In-vitro fertilisation or IVF

The fear is that in the future we may be able to use genetic technologies to modify embryos and choose desirable or cosmetic characteristics. Designer babies is a term used by journalists to describe this frightening scenario. It is not a term used by scientists.

Advanced reproductive techniques involve using InVitro Fertilisation or IVF to fertilise eggs with sperm in 'test-tubes' outside the mother's body in a laboratory. These techniques allow doctors and parents to reduce the chance that a child will be born with a genetic disorder. At the moment it is only legally possible to carry out two types of advanced reproductive technologies on humans. The first involves choosing the type of sperm that will fertilise an egg: this is used to determine the sex and the genes of the baby. The second technique screens embryos for a genetic disease: only selected embryos are implanted back into the mother's womb. This is called Pre-implantation Genetic Diagnosis (PGD).

Recently scientists have made rapid advances in our knowledge of the human genome and in our ability to modify and change genes. In the future we may be able to "cure" geneticy diseases in embryos by replacing faulty sections of DNA with healthy DNA. This is called germ line therapy and is carried out on an egg, sperm or a tiny fertilised embryo. Such therapy has successfully been done on animal embryos but at present it is illegal to do this in humans.

However, it is legal to modify the faulty genes in the cells of a grown child or an adult to cure diseases like cystic fibrosis - this is called body cell gene therapy.

Download As PDF

Thursday, June 12, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?

பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.


நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின்  சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம்.   அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.


சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு  வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.


ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.


ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்...(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )

சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க...ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா,  சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது
இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.

நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.

தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.  (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)

வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின்  கை தானா  அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.

நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.

நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!)   நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம்
ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான்  மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.

மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )

உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)

நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை  இழுத்து விடுவது இல்லை.  அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.

இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை  ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண்  சலிவா உற்பத்தியாகுதாம்.


பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர  206 ஆக
குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே
மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.


* * * * * * * * * * * * * * *
Download As PDF

Monday, June 2, 2014

படுக்கைஅறை விளக்கு வெளிச்சத்தினால் உடல் எடை அதிகரிக்குமா ?படுக்கை அறையில் சில பேருக்கு இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் தான் தூக்கம் வரும், பலருக்கு சிறிதளவு வெளிச்சம் கொடுக்கும் விளக்காவது எரிய வேண்டும்.  சிற்சிலருக்கு மட்டும் வெளிச்சமே தேவை இல்லை. நிம்மதியான உறக்கத்திற்கு அறையின் விளக்கு வெளிச்சம் அதிகமாக இருப்பது பாதிப்பு என்று சொல்கிறார்கள்.  அது தூக்கத்திற்கு இடைஞ்சல் மட்டும் என்று இல்லாமல் "ஓபிசிடி" எனப்படும் உடல் பருமனை அதிகரிப்பது குறிப்பாக பெண்களுக்கு என்பது கண்டிப்பாக ஆய்வுக்கு உட்பட வேண்டிய விசயம் தானே.

அதுபற்றிய ஆய்வினை சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொண்டார்கள், 16 வயதிற்கு மேற்பட்ட பலதரப்பட்ட வயதில் உள்ள 1 லட்சம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டாது.  அவர்களின் உணவு பழக்க வழக்கம், உடல் எடை, இடுப்பு அளவு அதிகரிப்பு, படுக்கை விளக்கு எரிவது குறித்த கேள்விகள் தொடுக்கப்பட்டன, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வந்தார்கள் ?

ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்றால் படுக்கை அறை வெளிச்சமாக இருப்பதோ, அல்லது இருட்டாக இருப்பதோ பெண்களின் உடல் எடை அல்லது ஓபிசிடி (obesity) பாதிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே அது.

ஆனால் பொதுவில் மனிதர்களுக்கு உறக்கத்திற்கு வெளிச்சத்தினால் பாதிப்பு உண்டு. அதாவது "நம் உடல் கடிகாரம் " பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.

உடல் கடிகாரம் ( Body Clock )என்பது எல்லோருக்கும் இயற்கை கொடுத்து இருக்கும் வரம். குறிப்பிட்ட நேரத்தில் விளிப்பு ஏற்படும்.  ஒரு நாள் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது மாதிரியே அவர்கள் எழுந்திருப்பார்கள்.  இது சின்ன வயசில் இருந்தே சிலருக்கு அமைந்து இருக்கும்.  அவர்களுக்கு அலாரத்தின் தேவையே இருப்பதில்லை. நம் உடலில் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோன் இந்த இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதுவுமே நமது பழக்க வழக்கம் தான் தீர்மானிக்கிறது.

                                                               * * * * * * *
 தொடர்புடைய பதிவுகள் :

தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்? 

தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும்

தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்

Download As PDF

Monday, May 26, 2014

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா?


"நெக்டெர்னல் லெகோப்தாலமஸ் " [ Nocturnal lagophthalmos ] என்று மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும்.   ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான்.  குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடிய படியே தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம்.  பெரியவர்களுக்கு எனும் போது தோல் நோய் பிரச்சனை அல்லது முகத்தில் ஏதேனும் சர்ஜரி செய்திருந்தால் இந்த பிரச்சனை இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை (அலர்ச்சி/அயர்ச்சி) ஏற்படுத்தும்.  தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும்.  அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.

அடுத்த கேள்வி ஒரு கண்னை மட்டும் திறந்தபடி தூங்க முடியுமா ?
இயல்பின் மனிதனுக்கு இதுவும் முடியாத காரியந்தான். பறவைகள், விலங்குகள் அந்த மாதிரி தூங்குவது உண்டு.  பெரும்பான்மையான விலங்குகள் ஒரு கண்ணை மூடி தூங்கு கின்றன.  அப்போது அவைகளுக்கு ஒரு பக்க  மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு.

மீன்களுக்கு இமைகளே இல்லை பிரச்சனை இல்லை.  டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கி கொண்டே பறக்கும்.Download As PDF

Friday, April 11, 2014

சக்கரை கலந்த இறைச்சியினால் மறதி ஏற்படுமா ?

மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள்  குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய உணவுகள்,  குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

Tks to bbc news

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'

பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?

இதற்கான பதில் இறுதியில்...

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை

தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...

" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "

"ஏன் "

" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"

" நடிப்பு தானப்பா"

" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும்.  வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.

3 வருடங்களுக்கு பிறகு....."என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது

"அட டே"

என்ன நொ டே டே...

அவ என்ன பார்த்து குரைக்கிறா...(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL) 

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.  அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

விடுகதைக்கான பதில்  "காளான்"

விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.Download As PDF

Wednesday, February 5, 2014

விவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா?

மருத்துவத்துறையில் ஏழு மருத்துவ தியரிகள் உண்மையான என்பது குறித்து மிகுந்த விவாதங்களுக்கு உரியதாக இருந்தன.


1. காற்றின் மாசு (Air Pollution) நுரையீரல் புற்றுநோய்க்கு காரணம்.

1939 முதல் மருத்துவ விஞ்ஞானிகள் நிறையப்பேர் இது பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தார்கள். காற்றின் மாசு பாதிப்பு என்பது பல படித்தான காரணிகளை கொண்டது.21 வருடங்கள் கழித்து அதை ஒத்துக்கொண்டனர்.

2. பாக்டீரியா அல்சர் பாதிப்புக்கு காரணம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்கர்கள் ராஃபின் வாரெண் மற்றும் பேரி மார்ஸல் இவர்கள் கூற்றுப்படி "ஹெலிகோபாக்டர் ஃபைலோரி" எனும் பாக்டீரியா அல்சர் பாதிப்பிற்கு காரணம் என சொன்னார்கள்(1982).  இதற்கு மன அழுத்தமும் உணவு முறை பழக்கங்களும் காரணம் எனச் சொல்லப்பட்டு வந்தது.  1990 ல்தான் அமெரிக்கன் இன்ஸ்டிடியுட் அப் ஹெல்த் இதைஉறுதிப்படுத்தியது.

3. ஆஸ்பிரின் மருந்து ஹார்ட் அட்டாக் ஆபத்தை குறைக்கிறது.

லாரன்ஸ் க்ரேவன், இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தமது முதல் ஆய்வரிக்கையில் ஆஸ்பிரின் இருதயம் சம்பந்தமான ரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக 1950 ல் தெரிவித்தார்.  அதன் பின் 40 ஆண்டுகள் கழித்துதான் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆஸ்ப்ரின் மருந்து ஒருவருக்கு இருதய நோய்களில் பாதுகாப்பளிக்கிறது.

4.  எக்ஸ்-ரே உடலுக்கு கெடுதி

1911 ல் நடத்தப் பட்ட ஆய்வில் அதிக எக்ஸ்ரேக்கல் லுக்கிமியா மற்றும் இதர கேன்சர் நோய்களுக்கு காரணம் என்றார்கள். 1956 ல் தான் அமெரிக்கன் சயன்ஸ் அகாடமி தந்த ரிப்போர் படி இஷ்டத்துக்கு எக்ஸ்-ரே எடுக்க கூடாது என அறிவுருத்தப்பட்டது.

5. மாங்கனீஸ் மனித மூளைக்கு கெடுதி

மாங்கனீஸின் அதிக அளவு அதிகரிப்பு பார்கின்ஸன் நோய்களுக்கு காரணம். நியாபக மறதி mental disordersமற்றும் மூளை அயர்ச்சி , tremors, தூக்க மயக்கம்(lethargy) அதோடு கூட மூளைச் சாவிற்கும் காரணம்.

6. கிட்டப் பார்வை (Myopia is a sign of intelligence)க்கும் அறிவு முதிர்ச்சிக்கும் சம்பந்தம்

ஹாங்காங் பல்கலைகழக முடிவுப் படி ஒருவரின் கிட்டப் பார்வைக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் மரபணு பரிமாற்றம் காரணம்.

7. அதிக வெயில் நாட்கள் வயலென்ஸ் க்கு ஒரு காரணம்.

இஸ்ரேலை சேர்ந்த பென் கூரியன் யுனிவர்சிட்டியின் ஆராய்சியாளர்கள் கூற்றுப்படி,  வெயில் காலங்களில் உடலில் செரோடோனின் அளவு மாற்றம் ஏற்படுவதாக சொன்னார்கள்.  அந்த கால கட்டங்களில் 2  - 3 மடங்கு அதிகமாக குற்றங்கள் அதிகரிக்கிறது.

by Kalakumaran

Download As PDF

Monday, February 3, 2014

போலியோவை ஒழித்துக்கட்டிய ஜோனஸ் ஸாக்நியூயார்க் யுனிவர்சிட்டியில் மருத்துவப் படிப்பை முடித்த ஜோனஸ் ஸாக் மவுண்ட் ஸெனாய் ஆஸ்பத்திரியில் உழியராக பணியை ஆரம்பித்தார். (1939)
அதன் பின் பீட்ஸ்பர்க் யுனிவர்சிட்டியிலே வைரஸ் ஆய்வகத்தில் இன்ப்ளூயன்ஸ் தடுப்பு மருந்து பணியில் டாக்டர் தாமஸ் பிரான்ஸில் தலைமையில் பணியாற்றினார். இந்த ஆய்வு முக்கியமாக யூ.எஸ் ஆர்மிக்காக பணிக்கப் பட்டது.(1947)

முக்கியமாக மேற்படி ஆய்வின் அனுபவமே போலியோ (இளம்பிள்ளை வாதம்) விற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவிகரமாக இருந்தது என்று சொல்லலாம். அமெரிக்காவில் யூத இனத்தில் பிறந்து பின்னாளில் உலகம் போற்றும் மருத்துவராக விளங்கியவர்.

தடுப்பு மருந்து (வாக்ஸின்) என்பதாவது நோய் தாக்கும் கிருமி செயல்படாத நிலையில் வைக்கப்பட்டு தடையத்தை விட்டு வைப்பது (டம்மி பீஸ்) இந்த செயல் படாத கிருமியை ரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் வீரு கொண்டு தாக்குதல் நடத்தி தம்மை பலப்படுத்தி கொள்கின்றன. அதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப் படுதல் என்று சொல்லலாம்.

In developing the influenza vaccine, he had observed that protection could be established using noninfectious, inactivated (killed) viruses.

ஜோனஸ் இப்படிப்பட்ட ஆராய்சியில் ஈடு படுவது அறிந்த பாஸில் ‘ஓ’கூனூர் (தலைவர்,National Foundation for Infantile Paralysis ) பொருளாதார உதவிகளையும் அவருக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

போலியோ வைரஸ்களை டெஸ்ட் ட்யூபில்(Using formaldehyde) கவனமுடன் வளர்த்தெடுப்பது என்பதே பெரிய சவாலாக இருந்தது. அதோடு கூட அவற்றை செயல்படா நிலையில் வைத்திருக்க வேண்டும் இதில் தவறு ஏற்படுமாயின் மருந்து செலுத்தப்படுபவருக்கு எதிர் வினையாக போலியோ தாக்கக் கூடும்.
தடுப்பு மருந்து ஊசி மூலமாக முதலில் குரங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்யப் பட்டது. அதன் பின்னே, D.T.வாட்ஸன் இன்ஸ்டிடியூட் மையத்தில் இருந்த முடமாகி இருந்த குழந்தைகளுக்கு கொடுத்து சோதனை செய்யப் பட்டது.

இதன் அடுத்த கட்டமாக சமூகப் சேவை மனப்பான்மையில் உள்ளவர்களுக்கும், அவருக்கும் அவருடைய லாபரட்ரியில் பணிசெய்பவர்களுக்கும் அவரின் மனைவிக்கும், அவரின் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப் பட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்தே, ஆறில் இருந்து ஒன்பது வயதுக்குள்ளான அமெரிக்க தேசத்தின் குழந்தைகளுக்கு (ஒரு மில்லியன்) 1954 ல் பெரிய அளவிலான தடுப்பு மருந்து சேவை ஆரம்பமாகியது. April 12, 1955 ல் இம்மருந்து தரமானது பாதுகாப்பானது என்று உலகத்திற்கு பிரகரணப்படுத்தப் பட்டது.

1962ல் யு.எஸ் -ல் பாதிக்கப்பட்ட 45000 பேர் இரண்டாண்டுகளில் வெறும் 900 ஆக குறைக்கப் பட்டது.


ஸாக், தான் கண்டறிந்த மருந்திற்கு காப்புரிமை செய்யவில்லை அதே போல கண்டுபிடிப்பிற்காக பணத்தையும் பெறவில்லை. அவரின் உள்ளத்தில் இந்த உலகத்தில் இருந்து இந்த நோயை முற்றாக ஒழித்து கட்டவேண்டும் என்றா மாபெரும் நோக்கம் மட்டுமே இருந்தது.

Salk's dream was to create an independent research center where a community of scholars interested in different aspects of biology – the study of life – could come together to follow their curiosity.

ஓராண்டிற்கும் மேலாக ரிசர்ச் செண்டருக்காக தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருந்தார் ,ஸாக். சாண்டியாகோ மேயர் சார்லஸ் டெயில் (போலியோ தாக்குதலில் தப்பித்தவர்) லா ஜோலாவில் 27 ஏக்கர் நிலத்தை காட்டி ஆராய்ச்சி மையட்திற்கு பற்பல உதவிகள் செய்தார். இந்த ஆராய்சி மையத்தில் மருந்து தயாரிப்பு மட்டுமல்ல இது குறித்த தொழில் வித்தகர்களும் உருவானார்கள். (Completed in 1967)


1991 ல் முழுமைபெற்ற இன்ஸ்டிடியூசன் (Jonas Salk Institute for Biological Studies) உலகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பிடித்தது.  இந்த ஆய்வகத்தில் போலியோ மருந்தை தவிரவும், கேன்ஸர் எய்ட்ஸ், போன்றவற்றிற்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டது.

இவர் எழுதிய பல ஆராய்சி கட்டுரைகளும் புத்தகங்களும் மனித குலத்திற்கு பயனளித்து வருகிறது. இவரின் இன்ஸ்டிடியூட்
அல்ஜீமர்,பார்கின்ஸன்,சக்கரை வியாதிகளுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.

A memorial at the Institute with a statement from Salk captures his vision: "Hope lies in dreams, in imagination and in the courage of those who dare to make dreams into reality."

அவர் எழுதிய புத்தகங்கள் : 
 Man Unfolding (1972), The Survival of the Wisest (1973), World Population and Human Values: A New Reality (1981), and Anatomy of Reality (1983).

டாக்டர் ஸாக்கின் இறுதி காலங்களில்  (AIDS) எய்ட்ஸிர்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார்.   தமது எண்பதாவது வயதில் மறைந்தார் (23.ஜுன்.1995).

உலகம் முழுவதும் பல நாடுகள்,பல அமைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

1975-ல் இந்தியா அவருக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

வாழ்க நீ எம்மான் !!


தொடர்புடைய பதிவு :

போலியோ அற்ற நாடு மைல் கல்லை எட்டிய இந்தியா


labels : Jonas salk, ஜோனஸ் ஸாக் , போலியோ,

Download As PDF

Tuesday, January 14, 2014

போலியோ அற்ற நாடு மைல் கல்லை எட்டிய இந்தியா

போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது
(13 ஜனவரி, 2014 )

இந்தியாவில் ஒழிக்கப்படும் இரண்டாவது கொடும் நோய் போலியோ
கடந்த மூன்றாண்டுகளில் ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இன்று எட்டியிருக்கிறது.
இந்திய அரசின் இந்த அறிவிப்பு இன்று வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.
இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது.
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.
இந்த காலகட்டங்களில் பொதுமக்களுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதன் மூலமே இந்தச் சாதனை எட்டப்பட்டிருக்கிறது .
இது பெரும்பாலும் இந்தியாவின் பொதுச்சுகாதாரத் துறையில் பெரும் வெற்றியாகக் கருதப்படலாம்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், சுமார் 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 209 மிலியன் வீடுகளுக்கு சென்று, சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.
"பிரம்மாண்டமான மைல் கல்"
இந்தியாவில் போலியோ ஒழிப்பை ஒரு " பிரம்மாண்டமான மைல் கல்" என்று வர்ணித்த ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்தியப் பிரிவின் , போலியோ தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கான தலைவி, நிக்கோல் டாய்ட்ச், இனி புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்றார்.
ஆனால் வாய்வழியாகக் கொடுக்கும் சொட்டு மருந்துகள் மட்டிலுமே தரப்பட்ட இந்தியாவில் , போலியோ ஒழிக்கப்பட்டிருந்தாலும், அபூர்வமாக இந்த நோய் மீண்டும் தலைதூக்காதிருக்க வேண்டுமானால், ஊசிவழியாகவும் இந்த மருந்து தரப்படவேண்டும் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் பொதுச்சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ

கடந்த ஆண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் , போலியோ அதிகமாகப் பரவியிருக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கியது.
இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்படுகிறது.
போலியோ என்ற இந்தக் கொடிய நோய் தாக்கிய ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மரணம் ஏற்படலாம், அல்லது முழுமையாக அவயங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படலாம்.
பழங்காலங்களிலிருந்து சமூகங்களைப் பீடித்த இந்த நோய், 1980களில் கூட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டது. அப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் போலியோ நோயால் தாக்கப்பட்டனர்.

' பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய பொது வசதிகள் இல்லை'
இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்

நன்றி ; பி.பி.சி. செய்திகள்

ஜோனஸ் ஸாக் போலியோ தடுப்பூசி மருந்திற்கு பேடன்ட் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அவரின் பதில் "சூரியனை நீங்கள் பேடன்ட் செய்வீர்களா ? "

Download As PDF

Wednesday, December 4, 2013

உதவி மருத்துவனாகும் தேனீக்கள் !

நம்முடைய மோப்ப சக்தியை விட 100 மடங்கு நுகரும் சக்தி கொண்டவை தேனீக்கள். சில மைல்கள் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பூவின் வாசனையை அறிந்து கொள்ளும் திறமை பெற்றவை தேனீக்கள்.


நாய்களின் மோப்ப சக்தியை வெடிகுண்டுகளை, போதை மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறோம் ஆதே போல கூர்மையான மோப்ப சக்தி கொண்ட தேனீக்களையும் நாம் பழக்கி பயன்படுத்தலாமா என்ற சிந்தனையின் விளைவு தான் தேனீ பயோசென்ஸார் ["Bee Sensor" or "biosensor"] போர்துகீஸ் டிசைனர்  சுஸானா ஸோரெஸ் (”Susana Soares”)  இதை வடிவமைத்தவர். இப்போது தேனீக்களும் மருத்துவர்களின் உதவியாளராக இருக்கின்றன.


 சுஸானா ஸோரெஸ் தற்போது லண்டன் சவுத்பேங்க் யுனிவர்சிட்டியில் முதுநிலை பேராசிரியர் ஆக இருக்கிறார்.

ஸோரெஸ் இதற்கென பிரத்யோகமாக கண்ணாடி குடுவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதனுள் அடுக்கடுக்கான கோளங்கள் உள்ளன. ஊது துளை வழியாக செலுத்தப்படும் காற்றை நுகரும் தேனீக்கள் நெருங்கி வருவதையும் அல்லது விலகி ஓடுவதையும் வைத்து அளவீடுகள் நிர்ணயிக்கப் படுகின்றன. நுகரும் தேனீக்களுக்கு தண்ணீர் கலந்த சுவீட்டுகள் கொடுத்து ஊக்குவிக்கப் படுகின்றன. சோதனையின் பிற்பாடு அவை வளர்ப்பு தேன் கூடுகளுக்கு விடுவிக்கப் படுகின்றன.
படம் : மோப்ப தேனீக்களை கண்டுபிடிக்கவும், பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படும் பொறி

                                  (source of  images and info : Susana Soares web site)

மனிதனை பாதிக்கும் காசநோய் (tuberculosis), நுரையீரல் (lungs),தோல் (skin), கணைய புற்றுநோய்( pancreatic cancer ),மலேரியா, டெங்கு, சக்கரை  (diabetes) நோய் களை பழக்கப்பட்ட தேனீக்கள் இனம் கண்டறிகின்றன.

நோய்களை கண்டுபிப்பதற்காக மட்டுமே இவற்றை நான் உருவாக்க வில்லை, மனிதன் இயற்கையோடு இயைந்து இருக்கவேண்டிய அவசியத்தை, நம்மால் உணரமுடியாத இது போன்ற சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதுமே எனது நோக்கம் என மேலும் தெரிவிக்கிறார் ஸோரெஸ்.

இது சோதனையின் முதல் கட்டம் மட்டுமே மேம்பட்ட கருவியை இனிமேல் தான் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்கிறார்.

சில மாதங்களுக்கு முன் மோப்ப தேனீக்கள் பற்றிய தகவலை ஒரு பதிவில் எழுதி இருந்தேன் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

நன்றி,
கலாகுமரன்.
Download As PDF

Thursday, September 12, 2013

இரத்த நாளத்தினுள் நுட்ப எந்திரங்கள்


கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்)

”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள்  உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல்.

நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots)


நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும்  நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள்
உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள்.


விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டும் என்று டிசைன் செய்துவிட்டார்கள், ஒரு மருத்துவ டூல் பாக்ஸ் போன்ற இதை மேட்டார் மற்றும் உலவிக்கருவிகள் இணைத்து இன்னும் மேம்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இதை வைத்து எப்படி  சிகிச்சை செய்வார்கள் ?

இரண்டு மில்லியன் நானோ ரோபோட்டுகள் மருந்துகளோடு சேர்க்கப்பட்டு ஊசி மூலமாக இரத்த நாளங்களில் ஏற்றப்படும்.  இவற்றின் செயல்பாடு மற்றும் கட்டுப்பாடுகள் கணினி மூலமாக கண்காணிக்கப்படும்.  இந்த நானோபாட்கள் கட்டளைக்கு தகுந்த வாறு ஒவ்வொரு வேலையை செய்யும். உதாரணமாக சிலதுகள் ரத்தக் குழாயில் அடைந்து இருக்கும் கொழுப்பு அடைப்புகளை நீக்கும், சிலதுகள் அந்த கொழுப்பு துகள்களை சேகரிக்கும், இன்னும் சிலதுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்தை செலுத்தும், சிலது திசுக்களை ஒட்டும், இது போல பல பணிகளை இவை செய்யும் திறன் பெற்றவை.  வேலை முடிந்ததும் இவை செயல் இழக்கச் செய்ய முடியும். இறுதியில் உடலை விட்டு வெளியேற்றப்படும். சுமார் அரை மணியில் கச்சிதமாக சர்ஜரி முடிந்துவிடும்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இவை செலுத்தப்பட்டு பக்கத்து திசுக்களுக்கு பாதிப்பிலாமல் கேன்ஸர் நுண்கிருமிகளை மட்டும் அழிக்கும் திறன் பெற்றவையாக இருக்கும், இந்த நுண் ரோபோக்கள்.

 நானோ என்பது கிரேக்க வார்த்தையில் இருந்து பிறந்தது, ஒரு நானோ என்பதன் அளவீடு “பில்லியனில் ஒரு பங்கு”  ஒரு நானோ மீட்டர் nanometre (nm)  என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ அப்ஜெக்ட் 100nm வரை அளவிடக்கூடியது. அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது

புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.
ஒரு தலை முடியின் குறுக்கு வெட்டு 90000 nm கொண்டது. 
ஒரு செல்லின் குறுக்களவு 25000 nm.  டி என் ஏ மூலக்கூறின் குறுக்களவு 2 nm.


பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் சரிசெய்வது எப்படி என்பது டாக்டர்களின் கனவு ப்ராஜெக்ட்.  தொடர்ந்த ஆய்வுகள் இதை மெய்பிக்க போகிறது. கலிபோர்னிய மருத்துவ ஆய்வு பல்கலைகழகத்தை சேர்ந்த பால் ரோத்மௌண்ட் 2006 இல்  டி.என்.ஏ வை மடக்கி காட்டினார். இந்த அடிப்படையே நானோரோபோட் களை கட்டமைக்க காரணமாக இருந்த ஒரு தியரி எனலாம்.

நானோ டெக் வல்லுனர்களின் சவாலான பணி இந்த நானோபாட்களை உடலின் உள்ளே இயங்கச்செய்வது.  2010 ல் கலிபோர்னியா யுனிவர்சிட்டியை சேர்ந்த லியான்ஃபான் சாங் மற்றும் ஜோஸ்ப் வாங் ஆகியோரின் முயற்சியால் நானோபாட்களை ஹைட்ரோஜன் பெராக்ஸைட் (H2O2) இதன் எரிபொருளாக பயன் படுத்தியது தான் இதன் இயக்கமுறை தொடக்கம்.

இதன் இயங்கு வேகம் செகண்டுக்கு 2 mm என்றால் இவ்ளோதானா என்றே தோன்றும்,  ஆனால் இதனுடைய அளவை கருத்தில் கொண்டு பார்த்தோமானால்  ஒரு கார் மணிக்கு 600 கிலோமீட்டர் போனால் எப்படி இருக்கும் அந்த வேகம்.

நானோ ரோபோட்டுகள் உருவ அமைப்பு மூன்று கால்களை கொண்ட சிலந்தி போன்றது இதன் அளவு 2 nm.  இது டிஎன் ஏ வடிவமைப்பை ஏற்றி செய்யப்பட்டது. மிலன் ஸ்டொஜனொவிக்  என்பவர் (கொலம்பியா யுனிவர்சிட்டி - நியூயார்க்) இதை 2012 ல் செயல்படுத்தி காட்டினார்.

2011 ல் இந்திய விஞ்ஞானிகள் (indian institute of science) கண்டுபிடித்த ஒரு செய்முறை  இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் அழுத்தமானது அதிக மாக இருக்கும் நானோ வயர் பொருத்தப்படும் போது இவை அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்த்து செல்லும் என்பது (மேக்னடிக் தத்துவம் போல) இந்த டெக்னாலஜி இதன் உருவாக்கத்தில் பெரிதும் பயனளிக்கும் ஒரு ஆக்கம்.
எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் நானோ தொழில் நுட்பம் இன்னும் பல மகத்தான சாதனைகளை செய்ய இருக்கிறது.


தொடர்புடைய பதிவுகள் :

கொலைகார வைரஸ்கள்..அழிக்க வருகிறது ட்ரகோ [DRACO] 

கேன்சர் சிகிச்சைக்கு நானோ டெக்னாலஜி..

Download As PDF

Monday, June 17, 2013

எதிர்கால உலகை காக்கப்போகும் காளான் படை

சாதாரணமாக சூப் மற்றும் துரித உணவு வகைகளில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும்,காளான்கள் "எதிர்கால உலகை காக்கப்போகும் காளான் படை" இது உளரல் இல்லை.. எதிர்காலத்தில் காளான் பல விதங்களில் பயன்பாடு மிக்க ஒரு தாவரமாக உருமாற்றம் பெறப்போகிறது.

பூஞ்சைகள் (பூஞ்சானங்கள்) இந்த பூமியில் பில்லியன் (1ஒன்றுக்கு அடுத்து 9 பூஜ்ஜியங்கள்) ஆண்டுகளாக காலனி ஆதிக்கம் செய்து வருகின்றன.இதில் ஈஸ்ட் மற்றும் பாசிகள், காளான்களை உருவாக்கும் மேக்ரோ பூஞ்சைகளும் அடக்கம். இதன் பங்களிப்பு அழுகியவற்றை மக்கச்செய்வது. அதுமட்டுமல்ல மைசீலியா எனும் நுண்ணிய இழைகளில் இருந்து கசியும் என்சைம்களாலும், அமிலங்களாலும் பாறைகளில் உள்ள சத்துக்களானது; மிக நுண்ணிய சிதைவுற்று அதிலிருந்து சத்துக்கள் பிரிக்கப்பட்டு மண்ணில் கலக்கின்றன.  நிலத்தின் உயிர்ச்சத்துக்கள் பூஞ்சைகளாலேயே உருவாக்கப்படுகின்றன.

காளான்கள் ஒட்டுண்ணிகள் அல்லது சாறுண்ணிகள் என்ற வகையின் கீழ் வகைபடுத்தப்படுகிறது.

அக்காலத்தில் ”அமெடு” (amadou) என்பது  முதல் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பூஞ்சை காலான் இதைகொண்டு வெட்டுக்காயங்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். (ஹிப்போகிராட்ஸ் (hippocrates காலம் கி.மு 450) குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது ).

ஒரு காலானின் மைசீலியம் எனும் மிக நுண்ணிய வேர் இழைகளை எலக்ட்ரான் உருப்பெருக்கி மூலமாக காணும்போது அவை மனித மூளைசெல்களை ஒத்து இருப்பவை போல தோற்றம் தருகின்றன. (காண்க படம்)

மைசீலியம் சுற்றுப்புறத்தில் இருக்கும் சத்துக்களுக்கு தக்கவாறு தமது வளர்ச்சியை, மற்றும் குண நலன்களில் மாற்றத்தை ஏற்படுத்திக் வளர்கிறது. இந்த செய்கை ஆங்கிலத்தில் ”செல்லுலார் இண்டெலிஜெண்ட்” என குறிப்பிடப்படுகிறது.

மைகோரிஜல் (mycorrhizal) எனும் பூஞ்சை வகையானது தாவர வேர்களில் வளர்ந்து தங்களுக்கு தேவையான சக்கரைசத்தை பெற்று நிலத்தில் இருந்து நைட்ரஜன் மற்றும் நீர்சத்து உப்புக்களையும் வேர்களுக்கு அளிக்கின்றன.

Pioppino mushrooms (agrocybe agegerita)

சக்கரை நோய் மற்றும் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு பியோபினோ காலான்களில் மருந்து தயாரித்து கொடுக்கப்பட்டதில் பயனளித்திருக்கிறது.

ஈஸ்டுகள் (yeasts) ஒற்றை செல் (யுனிசெல்லுலார்) உடையவை.  கண்ணுக்கு தெரியாத ஸ்போர்ஸ் (விதைகள்) மூலமாக சாதகமான ஈரப்பதமும் வெப்பமும் கிடைக்கும்போது பூஞ்சைகள் அல்லது பூஞ்சானங்கள் மைசீலியா எனும் மிக நுண்ணிய வேர் இழைகள் தரையில் ஊடுருவி படர்ந்து வளர்கின்றன.  

ஈஸ்டுகள் இல்லை என்றால் தயிர்,ரொட்டி, வெண்னை,கேக்குகள் பியர்,வைன் ஏன் தோசை,இட்லி கூட இல்லை தான்.

மைசீலியா(mycelia) மற்றும் ஸ்போர்கள் (spores) மண் மற்றும் பாறைகளில் இருந்து உயிர் சத்துக்கள் வெளிவரவும் உயிர்ச்சூழல் நிலவவும் முக்கிய காரணிகள். (மைசீலியத்தில் இருந்து கசியும் என்சைம்கள் மற்றும் அமிலங்கள் இதை செய்கிறது)

1929  அலெக்ஸாண்டர் பிளமிங் எதிர்பாராமல் கண்டுபிடித்த மருந்து பென்ஸிலின் பூஞ்சையில் இருந்துதான்.

காளான்களால் எப்படி உலகை காப்பாற்ற உதவ முடியும்?

அமெரிக்காவைச்சேர்ந்த(சேலம்) பால் ஸ்டமெட் (Paul Stamet) என்பவர் ஒரு பூஞ்சை ஆராய்சியாளர் (mycologist )  காலான் மற்றும் பூஞ்சைகள் குறித்த ஆராய்சி மேற்கொண்டு மைசீலியம் ரன்னிங் (mycelium Running) எனும் புத்தகத்தை 2005 ல் வெளியிட்டு உள்ளார். இந்த புத்தகம் உலகை காப்பாற்றுவதில் காலான்களின் பங்கு என்ன என்பதை பற்றி விரிவான தகவல்களை தருகிறது. (இன்னொரு புத்தகம் mushroom cultivator)

வாஸிங்டனில் பண்ணை (20 ஏக்கர்) அமைத்து கடல் கடந்து காளான்கள் வியாபாரம் செய்து வருகிறார் அது மட்டுமல்ல மைக்ரோ டெக்னாலஜிஸ்டுகளை கொண்டு காளான்கள் பற்றி விரிவான பல ஆராய்சிகளும் செய்து வருகிறார்.

அதில் முக்கியமான ஒன்று அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்ட நிலங்களைக்கூட காளான் மற்றும் பூஞ்சைகளால் கதிர்வீச்சின் தாக்கத்தை முற்றிலும் குறைக்க முடியும்; நீக்க முடியும் என்கிறார். ஜப்பானில் இது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு தீங்கு இல்லாத பூச்சி கொல்லியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்,ஸ்டமெட். சில வகை பூஞ்சானங்கள் ஸ்போர்கள் மூலமாக பூச்சிகளை அழிக்கிறது. (இது ஒருவகையான எதிர்ப்பு சக்தி) அப்படிப்பட்ட பூஞ்சானம் ஒன்று மெடரிஜியம் அனிசோபைல் (metarhizium anisopliae). இந்த பூஞ்சானங்களை அரிசியில் வளரவிட்டு ஆய்வு செய்தார். இது எறும்புகள் மற்றும் கரையான்களை கொல்கிறது.

பெட்ரோலியம் உண்ணும் காளான்கள்:


"வைட் ராட்” எனும் வெண் பூஞ்சை காளான்கள் (Pleurotus chrysoporium) பெட்ரோலியக் கழிவுகளில் உள்ள சிக்கலான ஹைட்ரோ கார்பன்களை நியூட்ரியஸ் கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றுகிறது. இந்த வகை காளான்களை கொண்டு எண்ணெய் நில மாசுக்களை குறைத்து பின் நீக்கமுடியும்.

கழிவு நீர் காளான்கள்:

மைசிலியல் கழிவுநீர் (mycelial wasterwater) சோதனையில் ஸ்ட்ரோபரியா (stropharia) எனும் காளான் வகை பரிசோதிக்கப்பட்டதில் இதை வளர்ப்பதால் சுற்றுப்புற சுகாதாரத்தை  பாதுகாக்கவும் பாக்டீரியல் கட்டுப்பாட்டை செயல்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.


மைகோரெஸ்டோரேஸன் வளர்ப்பு கூடத்தில் வளர்க்கப்படும் ”சிங்க தாடி”  காளான்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு (உண்மையில் இது நோய் அல்ல !) மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் (antioxidants) தாயாரிக்க காளான்கள் பயன்படுகின்றன சில உதாரணங்கள்
மருந்து - காளான் வகை

கேனோமைசின் (ganomycin) - ரெய்ஷி
காம்பஸ்ரிடின் (campestrin)  - மெடோ
கால்வாஷின் (calvacin)           - ஜெயண்ட்

பறவை காய்சல் (H5N1 - bird flu), பன்றி காய்சல்களுக்கு(H1N1 - swine flu) காளான்களில் இருந்து மருந்து தயாரிக்கலாம்.

83 வயதான ஸ்டமெடின் தாய்,  மார்பு புற்று நோயால் தாக்கப்பட்டார்( stage IV) வழக்கமான மருந்துகளுடன் துருக்கி டெயில் காலானில் செய்யப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதில் குணமடைந்தார் என்பது வியப்பான விசயம். இந்த மருந்து வணிக பயன்பாட்டிற்கு வந்தால் அனேகம் பேர் பயன் அடைவார்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட புக்குஷிமாவில் ரோடியோ ஆக்டிவ் ஐசோடோபுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மைகோரிஜல் பூஞ்சையை வளர்த்துதல் பயனளிக்கும் என்கிறார்கள். (nuclear forest recovery Zone ) நியூக்ளியர் காடு மீட்பு எனும் இந்த திட்டம் கடந்த ஆண்டுமுதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

எதிர்கால காளான் /பூஞ்சை வளர்ப்பு மற்றும் ஆய்வுகள் விரிவடையும் துறைகள்:


Environmental cleanup    பெட்ரோ கெமிகலால் பாதிக்கப்பட்ட ரேடியேஷன் பாதிப்பு அடைந்த நிலம் மற்றும் நீர்

Waste water filtration  சாயம் மற்றும் மருத்துவ கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் மாசை நீக்குதல்.

Pesticides உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் பாதிப்படைந்த நில மாசு நீக்கம்.

Medicines மருத்துவ ஆராய்சி நோய் எதிர்ப்பு மருந்துகள், சிமோதெரப்பி, வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.

Forestry காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் காளான்கள் மூலமாக நில மேம்பாடு பின் துரித மரவளர்பு

Agriculture கெமிக்கல் மருந்துகளை ஒழித்து மைகோர்ஜியல் பூஞ்சைகள் மூலமாக நிலமேம்பாடு மற்றும் புஞ்சை காளான் இயற்கை உரம்.

Biofuel காளான்களை கொண்டு பயோ எரிபொருள்

விண்வெளி பயணத்தில், விண்வெளி ஆய்வு கூட சோதனை, ரேடியேஷனை தாங்கும் பூஞ்சைகள், மண் வளப்படுத்த இப்படி பயன் படுத்தப்பட இருக்கிறது.

காளான் (mushroom)ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் புது வார்த்தைகள்:
mycorestoration, mycofiltration,mycoremediation, mycoforestry, mycopesticides Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)