Followers

Showing posts with label Life Sciences. Show all posts
Showing posts with label Life Sciences. Show all posts

Monday, July 2, 2018

தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?

தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?

அறிவியல் ஆய்வாளர்கள் ,விஞ்ஞானிகள்   சிலர் விநோதமான ஆராய்சிகளை செய்து பார்பார்கள். மூளை இயக்கம்  சம்பந்தமானவை கொஞ்சம் ஆழமானவைகள். 

சமீபத்தில் பெங்களுரு டாக்டர்கள் வங்க தேசி ஒருவருக்கு( Taskin Ali A 31 )மூளை நரம்பு சிகிச்சை செய்தார்கள். நோயாளி அப்போது சுய நினைவுடன் கிதார் இசைக்க வேண்டி இருந்தது. மண்டை ஓட்டை திறந்து வைத்து அசைவற்று போயிருந்த விரல் இயக்கத்தை சரி செய்தார்கள்.  நவீன டெக்னாலஜியில் இது சாத்தியமாகி இருக்கிறது.

இப்படிப் பட்ட மனித முளை சிகிச்சை களுக்கு உயிரினங்களை முதற்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள்.. தெரிந்ததுதான்.

குளிர் ரத்த பிராணியான முதலை இசை கேட்டால் அதன் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன? இந்த கேள்வியை முன்வைத்து ஓர் ஆய்வை செய்தார்கள். எங்கு? ஜெர்மனில் போஃகும் யுனிவர்சிட்டியில் [Biopsychology at Ruhr-Universität Bochum (RUB)] டாக்டர் ஃபெளிக்ஸ் தலைமையில்.

பங்சனல்  MRI ஸ்கானிங் தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி பல கட்டங்களில் வித விதமான சங்கீத (இசை )கோர்வைகளை அவை கேட்டால் அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தார்கள்.

முதலைகளுக்கு 200 மிலியன் ஆண்டு கால வாழ்வியல் வரலாறு (?!) கொண்டவை. இவைகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமான மூதாதைகள்,முன்னோடிகள் . டினோஸர்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பியல்பு இவைகளுக்கு உண்டு.



சங்கீதங்களை கேட்கும் விலங்குகள், பறவைகள் அவற்றிடையே ஏற்படும் மாற்றங்கள் பத்தி ஏற்கனவே ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக கோபத்தில் இருக்கும் முதலை கருணை ததும்பும் இசையை கேட்டால் சாந்தமாகியும், குத்து இசைக்கு குதூகலமாக்கவும், சோக சங்கீதத்திற்கு சோகமாகவும் தம்மை வெளிப்படுத்தின.

மேலும் இது முதல் கட்ட ஆய்வு என்றும் மேலும் பல கட்ட சோதனைகளை செய்யவேண்டுமாம். உலகின் வெவ்வேறு இடங்களில் வாழும் முதலைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

தேனீக்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியுமா?


தேனீக்களை ஆய்வுக்கு உட்படுத்துவது அவற்றின் நடவடிக்கைகளை பதிவு செய்வதெல்லாம் சவாலான விடயங்கள்.  எண்கள் எண்ணிக்கை அவைகளுக்கு தெரியுமா? எப்படி ஆய்வு செய்வது?

பெரிய கூண்டுகளுக்குள் தொடர்சியான பயிற்சிகளுக்கு அவைகளை உட் படுத்துகிறார்கள்.  எண்களை கண்டு கொள்ளும் பயிற்சியில் சரியாக செய்தால் பாராட்டாக தேன் கொடுப்பார்கள். இப்படியான பல கட்ட சோதனைகளில் பூஜ்ஜியம் (Zero) அவைகளால் இனங்கான முடியுமா? இரண்டு என்றால் 2 பொருட்கள், 5 என்றால் ஐந்து என்ற எண்ணிக்கைகளை அவைகள் கண்டு கொண்டன.  2ஐ விட 5 பெரிதா என்பதையும் அவைகள் அடையாளம் காட்டின. அப்படியாயின் ஐந்தை விட ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியம் சிறியது மற்ற எண்களை விட ஒன்றுமே இல்லாத அது சிறியது என்பதை சுட்டி காட்டின.  ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?



இன்னொன்று அதை விட ஆச்சர்யமான தகவல் மனித குழந்தை எண்களை கற்றுக் கொள்வதை விட (கால கணக்கு) தக்குணூண்டு மூளை கொண்ட இவைகள் சீக்கிரமே கற்று தம் திறமையை நிரூபித்தன.  



#### #### #####
Download As PDF

Tuesday, January 30, 2018

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.


Download As PDF

Thursday, April 27, 2017

ஒளி உமிழ் காளான்கள் !



நீங்கள் "அவதார் " திரைப்படத்தில் மனதை வசீகரிக்கும் ஒரு காட்சி யை பார்த்திருக்கலாம் "ஒளி உமிழ் தாவரங்கள்,  பூக்கள் , பூச்சிகள் என வர்ண ஜாலம் மிக்க காட்சி அது.

இருட்டில் மின் மினி பூச்சிகள் ஒளிரும் அழகே தனி தான்.   அதைப் போலவே காளான்களும் ஒளியை உமிழ் கின்றன.  இந்த வகை காளான்களை ஆங்கிலத்தில் Neonothopanus gardneri (நியோனொதொபெனஸ் ) என்ற தாவர வகைப் பாட்டியலில் குறிப்பிடப் படுகின்றன.  எளிதாக இவற்றை  "பயோலூமினன்ட்ஸ் " (உயிரியஒளிஉமிழிகள் ) என்று சொல்லலாம்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஜியார்ஜ் கார்டனர்  என்பவர் பிரேசில் நாட்டில் ஒரு மாலை பொழுதில் இவைகளை மின் மினிப் பூச்சிகள் பெரிதாக இருக்கு என பார்த்த போது அவைகள் காளான்கள் எனக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனார்.  பகலில் இவை பார்பதற்கு மரக் காளான்களை போல இருக்கும்.



சமீபத்தில் இவைகள் ஏன் பச்சை ஒளியை உமிழ்கின்றன என்பதற்கான காரணத்தை கண்டறிந்தார்கள். காலான்கள் ஸ்பேர்ம் என்று சொல்லக் கூடிய நுண் விதைகள் மூலமாக பரவக் கூடியவை.  இரவில் அந்துப் பூச்சி போல மற்ற பூச்சி இனங்களை இவைகள் கவர்கின்றன. அவற்றின் முலமாக்க நுண் விதைகளை பரவச் செய்கின்றன.

இந்த பச்சையஒளிஉமிழிகள் சுமார் 70 வகைகள் இருக்கின்றனவாம்.
சரி எப்படி இவைகள் ஒளியை உமிழ்கின்றன? (oxyluciferins)(ஆக்ஸிலுஸிஃபர்ன்ஸ் எனும் ஒருவகை என்சைம் இதற்கு காரணம். காற்றில் (ஆக்ஸிஜனோடு) வேதி வினைபுரிந்து ஒளிர் நிறங்களை வெளிப் படுத்துகின்றன. லேசான ஒளியில் இவைகள் ஒளிர் கின்றன. (பார்க்க படம்)



சில வகைகள் : Panellus stipticus, Panellus pusillus,Armillaria mellea,Armillaria gallica,Mycena chlorophos,Mycena luxaeterna

(thanks to Science Advances )

Download As PDF

Saturday, June 27, 2015

லேடி பக்கை அடிமையாக்கும் குளவி



நமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் லேடி பக்கை அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

நீண்டகாலமாக விஞ்ஞானிகளுக்கு பிடி படாத மர்மம் ஏன் இந்த லேடி பக் குகள் குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது லேடிபக்கை ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது.  பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.



குளவி லேடி பக் கின் உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும்.  லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்.

=================================

Download As PDF

Thursday, December 4, 2014

ஸ்பேஸ் டூரிசம் [ விண்வெளி சுற்றுலா ]



"மனித மனம் பேராசைகளால் நிறைந்தது அதுவே பலவற்றை சமைக்கவும்* காரணமானது. "      [ சமைக்க = உருவாக்க ]

ஸ்பேஸ் டூரிசம் எனும் கவன ஈர்ப்பு 2004 லில் இருந்து பெரிதாக பேசப்பட்ட ஒன்று. கடந்த பத்தாண்டுகளாக வணிக நோக்கோடு பல தனியார் நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டன. 

ஸ்பேஸ் ஷிப் 2 [ வெர்ஜின் காலெக்டிக் /  Virgin Galactic ] எனும் திட்டம். இதில் ஆறு பயணிகள் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செலுத்த தக்கதாக இருக்கும் என விளம்பரப் படுத்தப் பட்டது. ஆனால் சர் ரிச்சர்ட் ப்ரான்சன் ( Sir Richard Branson )தலைமையிலான அந்த திட்டம் இன்னம் முடிவற்ற நிலையில் இருப்பதாக சொல்லப் படுகிறது. 

 
XCOR Aerospace எனும் நிறுவனமும் ராக்கெட் இஞ்சின் பொருத்தப்பட்ட லினக்ஸ் ஸ்பேஸ் கிராப்ட்  (Lynx spacecraft ) எனும் விமானத்தை போலான ஊர்த்தியில் ஜனங்களை கூட்டி செல்வதாக திட்டம் தாயாரித்தது, அதோடு இல்லாமல் டிக்கெட் களை கூட விற்றதாம்.

தற்போது வேர்ல்ட் வியூ என்டர்ப்ரைசஸ் [ World View Enterprises ] எனும் நிறுவனமும் ஹீலியம் காஸ் பலூன்களை பயன் படுத்தி வானில் புவி ஈர்ப்பு எல்லையில் நிலைநிறுத்த தக்கபடியான ஒரு வாகனத்தை உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதிலும் நான்கு பயணிகள் மற்றும் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செல்லலாம்.  இதற்கு தலைக்கு சுமார் 75000 டாலர்கள் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்தின் படி பூமியின் மேலாக கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர்களில் இந்த வாகனம் சுழலுமாம்.

இந்த கேப்சூல் சுமார் 4 டன் எடைகொண்டது. டாய்லெட் உட்பட பார் மற்றும் சகல வசதியுடன் கூடியதாகவும் நவீன தொடர்பு கருவிகளுடன் இருக்கும். விண்வெளி சுற்றுலா பயண நேரம் சுமார் 5 அல்லது ஆறு மணிகள். இதில் பயணிக்க பிரத்தியோக பயிற்சி தேவை இல்லையாம்.  

பூமியின் மேலாக சுமார் 2 மணி நேரங்கள் சுற்றிவிட்டு பாராசூட் (பாராவிங்) இறங்குவது போல வாகனத்தோடு சேர்த்து இறக்கி விடுவார்கள்.

சாதாரணமாக போயிங் 747  பூமிக்கு மேலாக 10 முதல் 13 கிலோமீட்டர்களில் பறக்கவல்லது என்பதை கவனத்தில் கொள்க. அது பறக்கும் வான் காற்று வெளி தான் ”ட்ரோபோஸ்பியர்”

சோதனை முன்னோட்டமாக ஜூலை 2014 ல்  ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் ”ட்ரோபோஸ்பியர்” வான் எல்லை பகுதியில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு (iPhone, GoPro camera, GPS tracker and flight computer) சோதிக்கப்பட்டுள்ளது.   இது  தரையில் இருந்து வானில் 28 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இந்த பலூனில் வாயுவின் அழுத்ததை தேவையான அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கும் படியான கருவி அமைக்கப்பட்டு இருந்தது.

 
வாயு மண்டலத்தின் பல கட்டங்களும் அதில் இயங்கும் வாகனங்களும் படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.


இதெல்லாம் அடுத்த இரண்டாண்டுகளில் ( 2016 ல்) சாத்தியப்பட்டு விடும் என்கிறார்கள்.

What’s certain is that when passengers  finally fly, they’ll be transported by  balloons that are big – very big. At sea level, 1m3 of helium can lift 1kg. By the time you’ve added the weight of the  balloon itself to the weight of a 4,000kg capsule, you’re already talking about a  weight of 6,000kg. To lift that would  require at least 6,000m3 of helium, and probably more. The balloon would need to be 22m in diameter. Bloon’s Annelie  Schoenmaker says its capsule will be  lighter, at around 2,000kg, though this would still require an enormous balloon.

the president of the Commercial Spaceflight Federation,  Astronaut Michael Lopez-Alegria, is confident. “It won’t be long before tourists are heading into space,” he says

Download As PDF

Wednesday, July 2, 2014

பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?



அப்ப பத்து 12 வயசிருக்கும் வானத்தில் வட்டமா டார்ச் ஒளி சீரான
வேகத்தில சுத்திட்டு இருக்கும் என்ன விட பெரிய பசங்களுக்கு அது
என்னன்னு தெரிஞ்சிருந்தது. நாங்க இருக்கும் பகுதி நகரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர்ங்கரதால அந்த வட்ட டார்ச் ஒளி அமாவாசை இருட்டில் பளிச்சுன்னு தெரியும். ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ், ரஷ்யன் சர்கஸ் இப்பிடி பல சர்கஸ் கம்பெனிகள் அப்ப பிரபலமா இருந்தது. அவங்க கூடாரத்தில் இருந்து ஒளிவட்ட சமிங்சை தான் அது.

கயித்து கட்டில் போட்டு வாசலில் படுத்துப்போம். சிறுவர்களான எங்களுக்கு அது ரொம்ப சுவாரஸ்யமான அனுபமா இருந்துச்சு. வானத்தின் நட்சத்திர சிமிட்டல்களை ரசிச்சுகிட்டே பல கதைகள் பேசி மகிழ்வது ஏகாந்த அனுபவம் இப்போதைய சிறுவர் சிறுமிகளுக்கு இல்லாம போச்சு.

சர்கஸ் காரங்களும் அந்த ”சர்ச் லைட்டை” இப்ப அடிக்கராங்களான்னு தெரியல... அப்ப இருந்த வீதி விளக்கு வெளிச்சங்கள் முன்ன மாதிரி மஞ்சளா மினுக்கு மினுக்குன்னு இல்லாம பளீர்ன்னு இருப்பதால சர்ச் லைட் தோத்துப் போச்சானும் தெரியல...

அவங்களோட பெரும்பான்மையான இரவு வாழ்க்கை வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) செய்வதிலும் மீதி டி.வி பெட்டியும் எடுத்துகிச்சு. என் வீட்டுக்கு உறவு குழந்தைகள் வந்து தங்கினால் அவங்களுக்கு மொட்ட மாடி அனுபவத்த கொடுகிறேன். நிலாச்சோறு சாப்பிடுவது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவங்களுக்கும் பல சிந்தனை ஓட்டங்களை ஏற்படுத்தும் அட்வெஞ்சர்னு சொல்லலாம்.

சரி கேள்விக்கு செல்வோம்...பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?

நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும். என்ன அந்த செலவு “அஸ்ட்ரானாமிகளா” இருக்கும் அம்புடுதான்.





Download As PDF

Wednesday, December 4, 2013

உதவி மருத்துவனாகும் தேனீக்கள் !

நம்முடைய மோப்ப சக்தியை விட 100 மடங்கு நுகரும் சக்தி கொண்டவை தேனீக்கள். சில மைல்கள் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பூவின் வாசனையை அறிந்து கொள்ளும் திறமை பெற்றவை தேனீக்கள்.


நாய்களின் மோப்ப சக்தியை வெடிகுண்டுகளை, போதை மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறோம் ஆதே போல கூர்மையான மோப்ப சக்தி கொண்ட தேனீக்களையும் நாம் பழக்கி பயன்படுத்தலாமா என்ற சிந்தனையின் விளைவு தான் தேனீ பயோசென்ஸார் ["Bee Sensor" or "biosensor"] போர்துகீஸ் டிசைனர்  சுஸானா ஸோரெஸ் (”Susana Soares”)  இதை வடிவமைத்தவர். இப்போது தேனீக்களும் மருத்துவர்களின் உதவியாளராக இருக்கின்றன.


 சுஸானா ஸோரெஸ் தற்போது லண்டன் சவுத்பேங்க் யுனிவர்சிட்டியில் முதுநிலை பேராசிரியர் ஆக இருக்கிறார்.

ஸோரெஸ் இதற்கென பிரத்யோகமாக கண்ணாடி குடுவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதனுள் அடுக்கடுக்கான கோளங்கள் உள்ளன. ஊது துளை வழியாக செலுத்தப்படும் காற்றை நுகரும் தேனீக்கள் நெருங்கி வருவதையும் அல்லது விலகி ஓடுவதையும் வைத்து அளவீடுகள் நிர்ணயிக்கப் படுகின்றன. நுகரும் தேனீக்களுக்கு தண்ணீர் கலந்த சுவீட்டுகள் கொடுத்து ஊக்குவிக்கப் படுகின்றன. சோதனையின் பிற்பாடு அவை வளர்ப்பு தேன் கூடுகளுக்கு விடுவிக்கப் படுகின்றன.




படம் : மோப்ப தேனீக்களை கண்டுபிடிக்கவும், பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படும் பொறி

                                  (source of  images and info : Susana Soares web site)

மனிதனை பாதிக்கும் காசநோய் (tuberculosis), நுரையீரல் (lungs),தோல் (skin), கணைய புற்றுநோய்( pancreatic cancer ),மலேரியா, டெங்கு, சக்கரை  (diabetes) நோய் களை பழக்கப்பட்ட தேனீக்கள் இனம் கண்டறிகின்றன.

நோய்களை கண்டுபிப்பதற்காக மட்டுமே இவற்றை நான் உருவாக்க வில்லை, மனிதன் இயற்கையோடு இயைந்து இருக்கவேண்டிய அவசியத்தை, நம்மால் உணரமுடியாத இது போன்ற சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதுமே எனது நோக்கம் என மேலும் தெரிவிக்கிறார் ஸோரெஸ்.

இது சோதனையின் முதல் கட்டம் மட்டுமே மேம்பட்ட கருவியை இனிமேல் தான் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்கிறார்.

சில மாதங்களுக்கு முன் மோப்ப தேனீக்கள் பற்றிய தகவலை ஒரு பதிவில் எழுதி இருந்தேன் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

நன்றி,
கலாகுமரன்.
Download As PDF

Monday, August 26, 2013

கொசுக்களை இயற்கையாக ஒழிக்கும் முறை - தம்பி தங்க கம்பி!


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;


நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.


பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.

source of news : dinamalar dtd. 26.8.13
Download As PDF

Friday, August 16, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு - பகுதி 2)


இந்தியாவின் மையப்பகுதியான விந்திய மலைப்பகுதிகளில் (போபால் தென்கிழக்கே) பிம்பெட்கா குகைப் பகுதிகளில் தொன்மையான பாறை சித்திரங்கள்  காணப்படுகின்றன.


 (V.S. Wakankar ) வாகன்கர்  என்பவர்  1957 ல் இச்சித்திரங்களை பற்றிய ஆய்வுகள் வெளியிட்டு இருக்கிறார்.  2003 ல் இந்த பகுதி இந்திய மரபுரிமை பகுதியாக யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டது ( the World Heritage List of UNESCO)




பலதரப்பட்ட வடிவங்கள் உள்ள இந்த பாறைசித்திரங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. யானை, குதிரை மேல் இருந்து போர் புரிவது,போர் காட்சி, முகமூடி அணிந்த மனிதர்களின் வேட்டை, நீண்ட கொம்புகளை கொண்ட மாடு, மான்கள், நாட்டியம் ஆடுபவர்கள் போன்ற சித்திரங்கள் காணப்படுகின்றன.


நூற்றுக்கணக்கான சித்திரங்கள் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல அவற்றின் மீது சூப்பர் இம்போஸ் என சொல்லபடும் சித்திரத்தின் மேல் சித்திர ஓவிய புதுபிப்பும் செய்யப்பட்டு இருக்கிறது.


காலத்தின் முற்பட்ட, மிக மிகப் பழமையான சித்திரங்களும் இருப்பதாக சுமார் 1,50,000 ஆண்டுகள்(   ஆப்பிரிக்காவில் இருந்து வெளிப்பட்ட நாகரீக மனிதனின் காலம் Acheulian) தெரிவித்திருந்தார் விஷ்ணு வாகன்கர்(1972).
சம்பல் பள்ளத்தாக்கு, பந்த்பூரா-காந்திசாகர் பகுதியிலும் (வட போபால், மத்தியபிரதேசம்) குகை சித்திரங்கள் உள்ளன.


முப்பரிமாண முதலை (ஆஸ்திரேலிய x-ray style)  





இப்பகுதிகளில் 1990 களில் இருந்து, Rock Art Society of India (RASI) மற்றும்  IFRAO (International Federation of Rock Art Organizations இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு : இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) part 1


Download As PDF

Wednesday, August 14, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு)

கரபாத் மலைசிகரங்களில் (போபால், மத்தியபிரதேசம்) காணப்படும் செம்புக்காலத்தை சேர்ந்த இந்த ஓவியங்கள் ஐரோப்பிய செம்புக்காலத்தில் கிடைத்த ஓவியங்களுக்கும் முந்தியது. இந்த ஓவியங்கள் சிகப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் காணக்கிடைக்கின்றன.





சித்திரங்களில் காணப்படும் (Chalcolithic ) செம்புக்காலத்தில் இருந்திருக்கக்கூடிய காண்டா மற்றும் சிவப்பு யானை விலங்குகள் அழிந்து போய்விட்டன.(சிவப்பு யானை உண்மையா தெரியவில்லை ?)










பிரான்ஸை சேர்ந்த முற்கால வரலாற்றை ஆய்வு செய்பவர்  (Dr. Jean Clottes)  ஜேன் க்ளாட்ஸ் மற்றும் இவரோடு இந்த கலப்பணி செய்பவர் இந்தியாவை சேர்ந்த மீனாக்ஷி துபே (Dr. Meenakshi Dubey ) இவர்களின் குழு இந்திய மலைப்பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு பல தகவல்கள் திரட்டியுள்ளனர்.

மலை முகடுகளின் சரிவான உள்வாங்கிய பாறைகளில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.    அந்த கால கட்டத்தில் இருந்திருக்ககூடிய சிவப்பு யானை மற்றும் காண்டா மிருகங்கள் அழிந்து போன மிருகங்கள் எனத் தெரிவிக்கிறார். 





போபாலுக்கு அருகில் உள்ள ஷாம்லா மலைப்பகுதியில் உள்ள மனித சமூக பூங்கா ( ethnographic park) இங்கு இந்திய பழங்குடிகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கிறது. 

ஒரிஷா பழங்குடிகள் சவுரர்கள் (Sauras) தங்கள் மூதாதையரின் பிக்டோகிராபிக்ஸ் எனப்படும் சித்திரங்களை தம் வீடுகளில் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறார்கள்.  இந்த சுவர் சித்திரங்களை உற்று நோக்கினால் அந்த கால கிராமத்து சூழல், நாட்டியமாடும் பழங்குடிகள், வளர்ப்பு பிராணிகள்,குரங்குகள், குதிரைகள், விவசாயம், காட்டு விலங்குகள்,பறவைகள்... இப்படி பல தகவல்கள்  அறியலாம்.


  




வீடுகளின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்களில் "இட்டல் அல்லது இடிடல்" எனும்  இந்த வகை சித்திரங்களை வரைகிறார்கள். சிவப்பு மற்றும் வெள்ளையில் உள்ள இவை தம் வீட்டை பில்லி சூனியங்களில் இருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.  இவற்றின் மூலமாக கொடும் நோய்களில் இருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் தூய ஆன்மாக்கள் தம்மை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.

கொடும் நோய்களிடம் இருந்தும் நல்ல விளைச்சல் கிடைக்கவும் வீட்டின் முன் ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

இந்தியாவில் இது போன்று பழமையான விஷயங்கள் தம்மை ஈர்பதாகவும், பாரம்பரியம் தொடரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சொல்கிறார் ஜேன்.


இன்னும் சில தகவல்கள் மற்றும் படங்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...

தொடர்புடைய பகுதி :

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) -பகுதி 2
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)