Followers

Showing posts with label tamil history. Show all posts
Showing posts with label tamil history. Show all posts

Sunday, June 9, 2013

கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளைத் தேடி ( பகுதி 6)

கொங்குமண்டலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் கோவை, பேரூர் பகுதியில் முன்பு கிடைத்திருக்கின்றன. ஈமச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கது முதுமக்கள் தாழி இறந்தவர்களை இந்த தாழியினுள் வைத்து புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. (முதுமக்கள் தாழிகள் தொல்லியல் துறை வசம் உள்ளது)

இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டுள்ளனர். இப்படி உடன் கட்டை ஏறும் பழக்கம் கொங்கு பகுதியில் இருந்து இருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
அவர் வம்ச வழி வந்தவர்கள் இதற்கு அடையாளமாக கல்வெட்டுக்கள் அமைத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வந்துள்ளனர்.

சமீபத்தில் உடுமலையில் கிடைத்த கல்வெட்டு இதை உறுதி செய்கிறது. இது பற்றிய தினமணி நாளிதழில் (ஜூன் 7 2013 ) வந்த செய்தியை இங்கு பகிர்கின்றேன்.

“தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகள், ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு”

உடுமலை அருகே தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகளும் பெருங்கற்படை ஈமச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியைக் கடந்து சம்பக்காட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவு நடந்து சென்றால் வரும் மலைவாழ் கிராமம் தளிஞ்சி. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த ஊரில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை கல்வெட்டு ஆராய்சியாளர் து.சுந்தரம் தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின் படி தளிஞ்சியில் ஆய்வு செய்தார். அவர் தெரிவித்த தகவல்கள்.

தளிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவில் ஓரிடத்தில் கல் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இரண்டு துண்டாக உடைந்த கல்வெட்டு வரிகளுடன் கூடிய பலகைப் பாறைக்கல் இருந்தது. 2 நந்தி சிலைகளும், ஒரு நாகர் சிற்பமும், நந்தியின் தலைப்பகுதிச் சிற்பமும் குவியலாகக் கிடந்தது. பெண் தெய்வ சிற்பம் மூன்றாக உடைந்து கிடந்தது. பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மற்றும் உடல் பகுதி கிடந்தது.  நந்தி சிலை கிடந்ததால் இங்கு சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புண்டு.





படங்கள் உடுமலை அருகே தளிஞ்சியில் காணப்படும் கல்வெட்டுகள்

இக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், தென் கொங்கு பகுதியை ஆட்சி செய்த வீர கேரள அரசனான வீர நாராயணன் அதிசய சோழன் காலத்துடையது என்பது தெரிய வந்தது.

பழங்காலத்தில் வட கொங்கு, தென் கொங்கு ஆகிய இரு பகுதிகளாக இருந்தது.  இவர்கள் சுயாட்சி பெற்று சோழர்களுக்கு கீழ்படிந்தவர்களாக ஆண்டனர்.  இடைக்காலச் சேரர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினர் என்ற கருத்தும் உண்டு.

தென் கொங்கு பகுதியில் வீரகேரளர்கள் கி.பி. 945 முதல் கி.பி 1200 ஆம்ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளனர்.  வீரகேரள அரசர்களில் முதன்மையான அரசன் வீரகேரளன் வீரநாராயணன். இவரது மகனே தளிஞ்சி கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரநாராயணன் அதிசய சோழன்.  இவர் கி.பி 990 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1021 ஆண்டு வரை 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

 இதிலிருந்து இக்கல்வெட்டின் காலம் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது.  ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளிலும் வீரகேரள அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில், நெல் கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு குழலூதும் சிலை, திருமால்சிலை ஆகியவை கிடைத்துள்ளன.

கிருஷ்ணன் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி சில சிற்பங்கள் அடங்கிய பலகைக் கற்கள் உள்ளன. இறந்து போன வீரர்களின் மனைவியர் தங்கள் உயிரைத் தீயிட்டு மாய்த்துக்கொண்டதைக் குறிக்கும் நினைவுக்கற்கள் இவை. மற்றொரு சிற்பம், வீரர் ஒருவருக்காக எடுக்கப்பட்ட நடுகல். இங்குள்ள கொண்டம்மா கோயில் அருகில் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னம் காணப்பட்டது.  இக்காலத்தைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து, அந்த இடத்தில் நினைவுச் சின்னங்கள் அமைத்து முன்னோர்கள் வழிபட்டனர்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளிஞ்சியில் மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளது இக்கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.  இப்பகுதியில் தொல்லியல் துறையினர் மேலும் ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் தெரியவரும்.

**************

கோவை பகுதியை ஆண்ட கொங்கு அரசர்கள் மற்றும் வரலாறு குறித்து  சில தகவல்களை சுவடுகளைத்தேடி எனும் தலைப்பில் முன்பு பதிவிட்டிருந்தேன்.

பதிவுகளுக்கு செல்ல சொடுக்கவும் -  சுவடுகளைத் தேடி ( பகுதி 5)
Download As PDF

Wednesday, May 30, 2012

சுவடுகளைத் தேடி ( பகுதி 5)



வரலாற்று சுவடுகள் |  பேரூர் கல்வெட்டுகள் | கொங்கு வரலாறு 


பேரூர் மற்றும் பட்டீஸ்வரர் கோவிலின் சிறப்பு கொங்கு வரலாறு பற்றியும் கல்வெட்டுகளின் ஆதரங்களின் மூலம் அறியலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கில் தெப்பக்குளத்தில் இருந்து அரசம்பலவானர் சன்னிதிக்கு செல்லும் ஒரு சந்து தடத்தில் இடிந்த பாழடைந்த கோவில் 2010ல் புதுபிக்கப் பட்டது. இது அழகிய சிற்றம்பலம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அடிபாகத்தில் எட்டு கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஐந்து மட்டுமே பூர்த்தியானவை.

இந்த கல்வெட்டுகளில் தானம் கொடுக்கப்பட்ட விவரங்கள் காணப்படுகிறது. இதில் குறிப்புனரப்பட்ட வார்த்தைகள் ராஜாத்தி மலசெம்பியன், கீழானடிவதி, திருவானை வாய்க்கால்,கண்ணாற்று சிவ பாத சேகர சதுர்வேதி மங்ககலத்துசபை, வீரகேரள விலாடகுல மாணிக்கவதி,அதிராஜராஜவாய்க்கால் முதலிய எல்லை பெயர்களும்.
வீரசமக்கர்கள்,அம்மணங்கார்,சேனாதிபதிகள், கடமை, எல்லை, அகவை, முதலிய பெயர்களும் காணப்படுகின்றன.

விக்கிரம சோழன் : 

இவன் கொங்குநாட்டை ஆண்டவன். சோழநாட்டு விக்கிரமன் அல்ல. இவனைப்பற்றி கொங்கு நாட்டில் 68 கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பேரூரில் இவனது 12 முதல் 27 ஆண்டுகள் வரையிலுமான ஆட்சியையும், வெள்ளலூரில் மூன்று ஆண்டு முதல் 18 ஆண்டு வரையிலும் சாசனங்கள் கிடைத்துள்ளன. இவனுடைய கல்வெட்டுகளில் பேரூர் பட்டீஸ்வரருக்கு அக்காலத்தில் திருவான் பட்டியுடையார் என்ற பெயர் வழங்கி வந்ததாக தெரிய வருகிறது.

வீரசோழன் :

இவனைப்பற்றிய ஒரே ஒரு சாசனம் பேரூரில் உள்ளது. இரு கொங்கும் ஆண்டவன், கலிமூர்க்கம்மன் என்ற பட்ட பெயர்களும் உண்டு. இவன் தான் உடுமலைப் பேட்டை தாலுக்கா, சங்கிராம நல்லூர் வீரசோளீசுரமுடையார் ஆலயம் கட்டியவன்.

வீரராஜேந்திர சோழன் : 

இவனைப்பற்றி 141 சாசனங்கள் கிடைத்துள்ளது. இவனது காலத்தில் ஆனையச்சு, சீயக்கி என்ற நாணயங்கள் வழங்கி வந்தன. இவன் காலத்து பேரூர் சாசனத்தில், பாண்டிய நாட்டு ஒரு வியாபாரி பாம்புணிக்கிழவன் அப்பன் என்பார், பேரூர் திருவான் பட்டியுடையாருக்கு சந்திர தீபம் இரண்டு தானம் செய்ததும், அதற்கு வேண்டிய பொருள் கோவிலில் சேர்த்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீரராஜேந்திரன் : 

இவரது பட்டப் பெயர் : கோனேரின்மை கொண்டான் இப்பெயரில் 55 கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.  அவைகளில் பேரூரில் மட்டும் மூன்று கிடைத்துள்ளது. இவன் காலத்து பேரூர் சாசனத்தில் ராஜதுரோகிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, கோவில் களுக்கு கொடுக்கப்பட்டது.  திரிபுவனசிங்கதேவன் என்பான் ராஜ துரோகி ஆனதால் அவனது சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றி, பேரூர் திருவான்ப்ட்டியுடையாருக்கு ராஜராஜசந்தி என்ற விழாவுக்காக உச்சி சந்து அமுதுக்காக அந்த ராஜதுரோகியின் புத்தூர், கோளூர், குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள பேரூர் நாட்டு விளைநிலங்களை எல்லாம் மார்கழி மாதம் 4ம் நாள் கொடுத்ததாக விபரங்கள் உள்ளன.

வரலாற்று சுவடுகள் தொடர்கிறது ...


பிற பகுதிகள் :


சுவடுகளைத் தேடி

சுவடுகளைத் தேடி(பகுதி 2)

சுவடுகளைத் தேடி(பகுதி 3)

சுவடுகளைத் தேடி(பகுதி 4)


Download As PDF

Friday, May 4, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 4)


                           << சுவடுகளை தேடி பகுதி(3) படிக்க இங்கு சொடுக்கவும்>>

பேரூர் கோவில் பற்றிய குறிப்புகளை பெரிய புராணத்தில் ஆயர்கோன் கலிகாமர்), பேரூர் புராணம், மும்மணிக்கோவை பாடல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் (A.D) ராஜசிம்மவர்மன் என அழைக்கப்பட்ட நரசிங்க போதரன்யா -II பல்லவ ஆட்சியின் போது இக்கோயில் சீரமைக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் களிடையேயான உறவு திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிகான் பேரூர் விஜயக்குறிப்புகளில் அறியலாம். மேலும் "தீவட்டி சலாம் " எனும் மாலை பூசை அவர்களின் பெயரால் செய்யப்படுவதை எடுத்துக்காட்டாக காண முடிகிறது.

திருவாதிரை, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். இன்றும் கேரளத்தினர் ஒவ்வொரு ஆண்டும் "மகாலய அமாவாசைக்கு " வந்து நொய்யலில் முன்னோர்க்கு வழிபட்டு செல்கின்றனர்.

பேரூர் கோவிலை சிறப்பித்து பாடல்கள் எழுதிய சான்றோர் :

அவிநாசிக் கவிராயர் (திங்களூர் நொண்டி நாடகம்), கந்தசாமி சுவாமிகள்(பேரூர் கோவை மற்றும் ராமானந்த சுவாமி பிள்ளைத்தமிழ்), சிற்றம்பல கவிராயர் (பாசுரம் (Hymn) பேரூர் மற்றும் அவிநாசி கோவில்கள்), பெரும்புலவர் நடேச கவுண்டர்(மயில் விடு தூது), 12ஆம் நூற்றாண்டிணன் குணவீர பண்டிதர் (கலந்தை  -கிணத்துகடவு அருகில் உள்ள ஊர்) தமிழ் இலக்கணம் மற்றும் நேமிநாதம், நந்தி மாலை) குறிப்பிடத்தக்கவர்கள்.

பேரூர் கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.









யானையுரி போர்த்த மூர்த்தி :

ஒரு யானையை பிளந்து அதன் தலை மேல் ஒற்றை காலில் நிற்பது போன்றதோற்றம். நேர்த்தியான நீள்வட்ட வடிவம் யாணையின் நான்கு கால்கள் வெளி தெரிகிறது. நான்கு ஜோடி கைகளின் அபிநயம் நான்குவிதமான தேற்றப் பொழிவு. . விரல்களின் நக அமைப்பு, அணிந்துள்ள அணிகலன்களின் துள்ளியம் நம்மை வியக்க வைக்கிறது.













ஆறுமுகப்பெருமான் :

தமிழ் கடவுள் முருகன் மயில் வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள நிலை.மயிலின் வாயில் பாம்பு. மயில் இறகின் தெளிவு.  ஒரே வடிவமைப்பிளான அறு முகங்கள், ஆறு சோடி கைகள். ஒவ்வொரு கையும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.













ஊர்த்துதாண்டவர் :

பார்ப்பவர்களை ஒருகணம் ஸ்தம்பிக்க செய்யும் தாண்டவம் புரியும் நிலை. ஒவ்வொரு கையையும் மறைத்து பார்பதாக கற்பனை செய்தால் நேரிலே நடனம் புரியும் அற்புதத்தை உணரலாம். எட்டு திசைக்கு எட்டு சோடி கைகளின் அபினயம்.














நர்த்தன கணபதி :

எலி வாகனத்தின் மீது நடம்புரியும் தோற்றம்.


















பிச்சாடனார் :

நளினமான அழகிய தேற்றப் பொழிவு.















அக்னி வீரபத்ரர் :

கோபத்துடன் வாலேந்தி நிற்கும் தோற்றம்.














அகோர வீரபத்ரர் :

சூலாயுத்தால் முயலகனை குத்துவது போன்ற தேற்றம். தீயதை (தீவினை) அழிப்பதை நினைவு படுத்துகிறது.














ஆலங்காட்டு காளி :

சிலையின் இடப்புறம் நின்று நோக்கினால புன்முருவலும்.  வலப்புறம் நின்று நோக்கினால் ருத்ரமும் ஒருங்கே கொண்டு விளங்கும் காளி.









குறிப்பு :  இச்சிலைகளை நேரில் நீங்கள் பார்த்தால் முன்புரம் கம்பி வலை போட்டிருப்பார்கள்.  படத்தில் வலை இல்லா தோற்றம்.

Download As PDF

Wednesday, April 25, 2012

அணுவும் தொல் தமிழனும் ! [ Atom Vs tamizhan ]


          பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம்   லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.

          தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .

          கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு  இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே
                                          - திருமந்திரம் 2008 [ திருமூலர் ] 

இதன் சுருக்கமான பொருள் "நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்"

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்  
திருவாசகம் - திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

         இதன் சுருக்கமான பொருள் " அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே"


திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.  18 சித்தர்களில் முதன்மையானவர்.  திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த  அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். 


சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்
மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  பாண்டிநாட்டின் அமைச்சராகவும் இருந்தார். 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை, திருவாசகம்,திருக்கோவை இவரால் எழுதப்பட்டவை. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.

அணுவை பற்றிய தகவல்கள் : )

         உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும்.புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)

புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.

2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.

கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை
1808 ல் வெளியிட்டார்.

பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக  கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.

140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.

22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை.

அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.

ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து "என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு" எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.


Download As PDF

Friday, April 20, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 3)

                                                                 <<முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்>>

கோயில் கட்டிடக்கலைக்கு பல்வேறு அம்சங்கள் அல்லது நுணுக்கங்கள் தேவைப்படும்.  கட்டிட சாஸ்திரங்கள் அடுத்து கலை நுணுக்கம் இவை இரண்டும் அடிப்படை எனலாம்.  சிலை மற்றும் கற்தூண்கள் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் கல்வகை மற்றும் கற்பாறையின் ஸ்திரதன்மை முக்கியமானது.

ஓவியம் மற்றும் நாட்டிய முத்திரைகள், பாவம், நளினம், கணக்கீடு, கற்பனை திறன், நுணுக்கம், முக்கியமாக பொருமை, கலையின் மேலான பக்தி இவையெல்லாம் இல்லாமல் ஒரு கற்சிலை உயிர்ப்பு தன்மை பெருவதில்லை.

சிதம்பரம் கோவில் சிலைகள், தூண் அமைப்பு, இடவமைப்பு, தத்துவங்கள், இப்படி பல ஒப்புமைகளை உடையதாக பேரூர் கோயில் திகழ்கிறது அதனாலே இது "மேலை சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் அக்கோவிலின் நிர்மானித்தவரும் அக்குழுவும் இங்கும் பணிசெய்திருப்பது தான்.

கனகசபை மண்டபம் :

நடராஜரும், சிவகாமசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த கனகசபை மண்டபத்திற்கு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு.

பேரூர் கோவிலின் கனகசபை மண்டபம் கி.பி. 1625 முதல் 1659 வரை தொடர்ந்து 34 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்ப்பட்டது. அதாவது சுமார் 382 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.

இந்த கனகசபை மண்டபம் 36 தத்துவங்களை உணர்த்தும் வகையில் 36 தூண்களை கொண்டது. மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.  இவை பல்வேறு கதைகளை சொல்கிறது.

சபை மண்டபத்தின் மேற் கூரையின் மையத்தில் நான்கு கற் சங்கிலிகள் மற்றும் அதன் உள்வட்டத்தில் தாமரை வடிவம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.  இந்த கற் சங்கிலியில் பல ஆண்டுகளுக்கு முன் ஊஞ்சல் கட்டி விக்கிரக  வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்தது.   அப்படி ஊஞ்சல் ஆட்டப்படும் போது கூரையின் தாமரை வடிவ கற்சிலையின் நடு மொட்டு கரகரவென சுழழும் என கேள்விப்பட்டுள்ளேன். அதனாலெயே இது "சுழழும் தாமரை" என அழைக்கப்படுகிறது.  கற்சங்கிலி ஒரு கண்ணி உடைந்த பிற்பாடு இப்பூசை வழிபாடு வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.  (இச்சிற்பங்களின் படங்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)

கற்தூண் சிற்பங்களில் ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரம் ஒன்று அறியக் கிடைக்கிறது.



"முன்னங்கால்கள் இரண்டை தூக்கி கொண்டுள்ள மூர்க்கமான குதிரையின் மீது ஒரு வீரன். குதிரை தூக்கிய கால்களின் கீழே சிறுத்தையுடன் போரிடும் மற்றொரு வீரன். அவ்வீரன் ஒருகையில் கேடயம் மறுகையில் இருக்கும் வால் சிறுத்தையின் உடலில் புகுந்து மறுபுறம் வெளிப்படும் அதன் முனை"

இன்னொரு சிறப்பு மேற்சொன்ன தோற்றம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அச்சு அசலாக எதிர் எதிரெ இடது வலது நிலைகளுடன் பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுகிறது.

மேற்சொன்ன கற்தூண் சிற்பங்கள் நான்கில் ஒன்று உடைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. அதாவது அந்த தூணின் குதிரையின் இருகால்கள் மற்றும் குதிரைவீரனின் இரு கால்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. மேற்சொன்ன மற்ற எவையும் இல்லை.

இது பற்றிய காலங்காலமாக ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டு வருகிறது.

ஒரு இளைஞன் தம் தகப்பனாரை தேடி நெடுந்தூரத்திலிருந்து பேரூர் வருகிறான். சிறு குழந்தையாக இருக்கும் போதே இங்கு சிற்பம் செய்ய வந்த தன் தகப்பனை பார்பதற்காக இங்கு தேடி வருகிறான்.

அப்போது இக்கோயிலின் கனகசபை மண்டபம் முக்கால் பாகம் முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

சிற்பக்கலை தெரிந்த அவன் இங்கேயே பணி செய்து சிற்பியான தமது தந்தையை தேட முடிவு செய்கிறான்.  பல நாட்கள் சென்ற நிலையில் மேற்சொன்ன கற்றூணை காண்கிறான்.  அந்த தூணில் ஒச்சம் இருப்பதாக கூறுகிறான்.   அதாவது நன்கு ஆராயாமல் சிலை வடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தூணில் நீரோட்டம் மற்றும் மிகச்சிறு தவளை போன்ற தேரை கல்லினுள் இருப்பதாக அருதியிட்டு கூறுகிறான். (கல்லினுள் தேரை என்பது மாம்பழத்தினுள் வண்டு எப்படியோ அது போல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்)


இது போன்று ஒச்சம் உள்ள கற்கலில் சிலை வடிக்க கூடாது என்பது மரபு. பிற்காலத்தில் இந்த தூண் பழுதடையும் அல்லது சுவாமி சந்நிதியில் கல்லினுள் உயிர் உள்ள சிலை இருக்ககூடாது.

இந்த சர்சையின் இறுதியில் இந்த கல் தூண் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து தேரை இருப்பது நிரூபிக்கப்பட்டது.   அந்த இளைஞன் தேடிவந்த தந்தை வேறு யாருமல்ல அழகாத்திரி நாயக்கர் என்று சொல்கிறார்கள்.  இந்த இளைஞன் பிரதி உபகாரமாக தன் கையால் செய்து கொடுத்த சந்தன மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க பெரிய ஜன்னல் இன்றும் கலை நயத்தை பறைசாற்றுகிறது.

                                                               <<சுவடுகளைத் தேடி ...தொடர்கிறது >>
Download As PDF

Saturday, April 14, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 2)



இதற்குமுன்னர் பிறவா பனை எனும் அதிசய மரத்தை பற்றி எழுதி இருந்தேன்.

             இன்னொரு மரம் "பிறவா புளி" எனும் புளிய மரம் பேரூர் பேருந்து நிறுத்ததின் அருகில் உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்த இம்மரத்தின் புளியங்கொட்டையை எங்கு விதைத்தாலும் முளைப்பதில்லை.  இது குறித்து ஆராயும் போது சில உண்மைகள் பிடி பட்டன. அதாவது இந்த புளியம் பழமானது பழுத்த நிலையில் புளியங்கொட்டை முற்றி நிலத்தில் விதைத்தால் முளைக்கும் ஆனால் இந்நிலைக்கு வரும் சூழ்நிலையில் விதையில் துளை ஏற்பட்டு பட்டுபோய் விடுகிறது.  ஆனால் எது எப்படியோ மக்களிடம் ஒரு நம்பிக்கையை மட்டும் ஆணித்தரமாக விதைக்கிறது அது

"இவ்விடம் பிறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்பதை உணர்த்துகிறது "

           முற்பிறவி, மறுபிறவி இந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல போவதில்லை. நம்புவதும் நம்பாமையும் அவரவர் கருத்து சுதந்திரம் அதில் பிறர் கருத்துகளை திணிப்பது அல்லது தலையிடுவது சரியல்ல என்பது எனது கருத்து.


           அடுத்து கொங்கு மண்டலத்தின் நாகரீகம், பண்பாடு,கலாச்சாரம்  நொய்யலாறு தொடங்கி முடியும் இடம் வரை கரையோர கிராமங்களில் வேறூன்றி ஒரேமாதிரியாக காணப்படுகிறது.  நொய்யல் குறித்த எனது கவிதை ;

நுரைதெறித்து மனங்குளிர வருவாய் குதித்தோடி 
சப்தமென்ன சந்தமென்ன இசைப்பாய் செந்தமிழே ! 
கருவாகி கதிர்தழைக்க உருவானாய் தமிழ்மகளே - தமிழர் 
வீரமென்ன வெற்றியென்ன? கதைப்பாய் முத்தமிழே !

(கவிதை எழுதுவதில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை சொற்பிழை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்)

   
          காஞ்சிமாநதியான நொய்யலின் பிறப்பிடம் மேற்கு மலைத்தொடரின் வெள்ளியங்கிரி மலை. இங்கு பெரியார், சேயார் எனும் சிற்றாறுகள் நொய்யலுடன் சாடிவயலில் துணை சேர்கின்றன.

         பெரியார் சிறுவாணி மலையிலிருந்து கோவைக்குற்றால அருவியாக விழுகிறது.

         நொய்யல் 160 கிலோமீட்டர்கள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்ந்து கொடுமுடி (ஈரோடு) அருகில் காவிரியுடன் கலக்கிறது இவ்விடம் நொய்யல் கிராமம் (கரூர்) என அழைக்கப்படுகிறது.

         கரை புரண்டோடும் நொய்யல் வழியில் 23 அணைக்கட்டுகள், 23 கால்வாய்களின் வழி பாசணத்திற்கு செல்கிறது.  100 சதுரகிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட 31 குளங்களை நிரப்புகிறது எண்ணற்ற ஓடைகள் இதனுடன் சேர்கிறது. 20,000 ஏக்கர் நிலங்களை பசுமையாக்குகிறது.  30,000 ஏக்கர்கள் பாசனவசதி பெருகின்றன. இந்நதி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழிபாய்ந்து செழிப்பாக்குகிறது.

         இவ்வாற்றின் மொத்த பரப்பு 3500 சதுர கிலோ மீட்டர்கள்.

        வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையில் இருந்து இந்நதிக்கு நீர் சேகரமாகிறது. கோயமுத்தூரின் நீர் மட்டம் நடுநிலையுடன் இருக்க இங்குள்ள குளங்களே நீர் ஆதாரம் என்பது மிகையல்ல.

        சாளுக்கிய சோழவம்சம் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் அனேக கால்வாய்களை வெட்டி குளங்களை அமைத்து நீர் வளம் பெருக்கினார்கள்.  வெள்ளம் பெருக்கெடுத்து சொல்லும் போது சுற்றியுள்ள கிராமங்களுக்கு எவ்வித சேதரமும் ஏற்படுத்தாமல் இந்த கால்வாய்களின் மூலம் ஏரி குளங்களை நிறப்ப சமயோசித ஏற்ப்பாட்டினை வழிவந்த கொங்கு மன்னர்கள் திறம்பட செய்திருந்தார்கள். குளங்களங்களின் கொள்ளலவும் மீறும் போது வாய்கால்களின் மூலம் திரும்ப நொய்யலுக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கொங்கு வரலாற்றின் சுருக்கம் அறிவோமா ?

         தமிழகத்தின் மேற்கு பாகம் கொங்குநாடு என அழைக்கப்படுகிறது. சேரர்களின் பிரதான பகுதி கொங்குநாடு. இதன் தலை நகராக கரூர் விளங்கியது.

அதன் பிறகு வந்த கொங்கு வம்சத்தினரின் தலைநகர் தாராபுரம் (பழங்கால பெயர் தர்க்கபுரி மற்றும் விஜயஸ்கந்தபுரம்) அதன்பின் சோழர்களின் வம்சாவழியினர் கட்டுப்பாட்டில் வந்தது (ஐந்து அரசர்கள் வீரசோழா முதல் ராஜராஜன் வரை கொங்குதேச ராஜாக்கள் என குறிப்பிடப்படுகிறது)

அதன்பின், ஹொய்சால வம்சத்தினரின் துணைகொண்டு பாளையக்காரர்கள் சோழர்களை தோற்கடித்தனர். சில காலம் விஜயநகரம்,மைசூர் ராஜ்ஜியங்களின் கீழும், தீரன் சின்னமலையின் கீழும் கொங்கு ஆளப்பட்டது.  இறுதியில் ( 1805 ) பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியக் கம்பெனியுடன் இணைக்கப்பட்டது.

       கிரேக்கர்கள் மற்றும் ரோமானியருடனான வணிகத்தொடர்பு இருந்ததற்காண நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (இது குறித்த மற்றொரு பதிவு)


      சிற்பக்கலையின் சிறப்புடன் திகழும் பேரூர் கோயிலின் சிறப்புகளை அடுத்து காண்போம்.
                               
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)