Followers

Showing posts with label water. Show all posts
Showing posts with label water. Show all posts

Friday, February 21, 2014

உப்புநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்


க்ராபைன் (கிராபைட் அல்ல) உப்பு தண்ணீரை குடிநீராக மாற்றும் தன்மையுடையது.

"Graphene makes salt  water drinkable "

பல வருட சோதனைகளுக்குப் பின் யு எஸ் மாஸாசூஸெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (M I T ) ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த செலவில் உப்பு தண்ணீரை குடிநீராக மாற்ற ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்த ரகசியம் என்னவெனில் சூப்பர் மெட்டீரியல் என அழைக்கப் பெறும் “க்ராபைன் [Graphene] இத் தனிமத்தில் உள்ள கார்பன் மூலக்கூறுகள் (அணுக்கள்) தட்டி போன்ற அமைவு கொண்டது, அது மட்டுமல்ல இரும்பை விடவும் இது ஆயிரம் மடங்கு வலிமையானது.  இந்த மீச்சிறு தட்டி  1 நானோமீட்டர் அளவினாது.  உப்பு தண்ணீர் இதன் மீது வேகமாக பீச்சி அடிக்கும் போது மீச்சிறு நீர் மூலக்கூறுகள் உடைபட்டு சோடியம் மற்றும் க்ளோரின் அயன்களாக பிரிதலில் உப்பானது விடுபடுகிறது.


இக் கண்டு பிடிப்பு தொழில் வல்லுனர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கான செயல் நுட்பமுடைய க்ராபைன் தண்ணீர் பில்டரை கண்டுபிடிக்கும் முயற்சியும் ஜரூராக நடக்கிறது. கூடிய விரைவில் சந்தைக்கு வரலாம்.

 க்ராபைன் கடினத்தன்மை காரணமாக இதை கட்டிடங்களுக்கு பயன் படுத்துகிறார்கள்.

It's easy to make graphene in the lab, but hard to make perfect graphene on a large scale.

பார்முலா 1 கார்களுக்கு கடினமாகவும் அதே சமயத்தில் எடை குறைவானதாக இருக்கும் படியான கார்பன் ஃபைபர் (Carbon fibre) பயன் படுத்தப் படுகிறது.

Download As PDF

Wednesday, March 20, 2013

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஆபத்து தவிர்க்க முடியாததா?


**கோடையின் காந்தளில்
வெறுமையாய் வரிசைகட்டி
தவமிருக்கும்
காற்று நிறம்பிய குடங்கள்... “

**உப்புக்காற்று உறத்து
சொல்கிறது...
உனக்கான
வேள்வித்தீயை
நீயே மூட்டிகொண்டாய்.. ! ”



ஏன் இந்த மாதிரி தலைப்பை வைத்து பீதியை கிளப்புறீங்க ? இது தான் பலரின் கேள்வி.  நீங்கள் சிறுவயதில் அனுபவித்த பலவித சந்தோசங்களை உங்கள் வாரிசுகளுக்கு கொடுக்கிறீர்களா ? ஏன் இல்லாமல் ? சந்தோசம் என்பது நாம் எப்படி கொடுப்பது அவர்களாகவே உணரவேண்டிய ஒன்று என்றும் சொல்லலாம்.

சிறு வயதில்  பளிங்கு போன்ற நொய்யல் நதியில் நான் விளையாடியிருக்கிறேன்.  நண்பர்களுடன் துண்டு விரித்து மீன் பிடித்திருக்கிறேன்.  நாவல் பழத்தை நதியில் கழுவி சுவைத்திருக்கிறேன். மணல் வீடு கட்டி விளையாடி இருக்கிறேன்.  ஏன் ரொட்டி துண்டைக்கூட கோவைகுற்றாலத்து நீரில் நனைத்து சாப்பிட்டு இருக்கிறேன்.  நம் குழந்தைகளுக்கு இந்த வாய்புகளை சந்தோசங்களை நாம் கொடுத்திருக்கிறோமா என்றால் ? ...மவுனமே இதன் பதில்.

" நீரின்றி அமையாது உலகு " திருவள்ளுவரின் தீர்க்கமான எதிர்காலம் குறித்த வாக்கு இது.
"22 மார்ச் 2013”


தண்ணீரின் அருமை எப்போது தெரிகிறது என்றால் அது இல்லாமல் கஷ்டப்படும் போது தான். குடிப்பதற்கு உபயோகப்படும் தண்ணீர் என்பது 3 சதவிகிதம் மட்டுமே மீதியெல்லாம் உவர்ப்பு நிலையில் உள்ள கடலாக இருக்கிறது.

இங்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.

தண்ணீர் இல்லாமல் வாழ்வு சுவைக்குமா ? [ குளிர் பானம்,வேறு பழச்சாறு எதை குடித்தாலும் அது ஒரு கோப்பை தண்ணீர் குடிப்பதற்கு ஈடு என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?

இயற்கை நமக்களித்த அற்புத பரிசு இது இல்லை ?

தண்ணீர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் இதை மறுக்க முடியுமா ?

இந்த தண்ணீருக்கு இணையான ஒன்றை உங்களால் காட்ட முடியுமா ? [மழைன்னு சொல்லாதீங்க..]

எவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கும் ஏதுமற்ற ஏழைக்கும் இது ஒரு பெரிய சொத்து இது பொய்யா ?

உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.

ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு.

அதிகமான நிலத்தடி நீரை உருஞ்சுவதால் பல தேசங்களில் நிலத்தடி நீர் வரண்டு விட்டது.

எண்ணை வளம் தீர்ந்து போவதற்கு முன் தண்ணீர் வளம் காணாமல் போகும் என்று ஒரு கணிப்பு உண்டு.

தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.

உலகத்தோடு சில ஒப்பீடுகள் : மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%,  கால்நடை வளர்ப்பு 18%,  நீர் ஆதாரத்தில் 4% உள்ளது.

தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது.


[தலைப்பிற்கு வருகிறேன்..]

தமிழ் நாட்டை பொருத்தவரை 72 மில்லியன் மக்கள் தொகையில் தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக இருக்கிறது.  அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது.  நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது.தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, வீணான விரயம், உலக வெப்பமயமாதல்.

இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலையாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் கேள்வி : இதற்காக நான் என்ன செய்யமுடியும் ?

தண்ணீருக்கான சேமிப்பை உத்திரவாதத்தை நீங்கள் தரவேண்டும். நிலமையை ஓரளவு சமாளிக்க முடியும்.

உங்கள் பிள்ளைகளுக்கு தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை கற்றுக் கொடுங்கள்.  குளிப்பதற்கு 2- 3 பக்கெட்டுகள் தண்ணீர் செலவழிப்பதை ஒன்றாக குறையுங்கள். பெரிய ப்ளஸவுட் தொட்டிகளில் சிறியதை பயன்படுத்தலாம். நம் வீட்டு குழாய்களில் லீக்கேஜ் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தினமும் துவைப்பதை வாரம் இரண்டு முறையாக்கலாம்.  சாப்பிடும் தட்டுகளுக்கு பதில் இலைகளை உபயோகிக்கலாம்.  தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம்.  வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது.  மழை வரும் போது கார்களை திறந்த வெளியில் நிறுத்தலாம்.  வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம். ஹோட்டல்களில் போதுமான தண்ணீரை கேட்டு வாங்கி குடியுங்கள்.  உணவை வீணாக்காமல் இருப்பது.

தண்ணீரை வீணாக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் சபதமெடுப்போம் கடைபிடிப்போம்.


[ இந்த கட்டுரைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர் Er.S. சிவலிங்கம்,  நீர் மேலாண்மை இயக்ககம் (water resources Organisation) அவருக்கு எனது இதயப்பூர்வமான நன்றி ]

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)