Followers

Saturday, August 1, 2015

வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு


வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு
இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரும்பாத, எத்தகைய தொழில் நுட்பத்தையும் மேம்பட்ட நாகரீகத்தை நெருங்க விடாத காட்டுவாசி மக்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமானது செய்திதான்.

வங்காள விரிகுடாவில் 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார்த் தீவுக்கூட்டங்களில் ஒன்று தான் "வடக்கு செண்டினல் தீவு " [North Sentinel Island]. இது மியான்மர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் உள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டு கடற்பகுதியில் இருக்கும் இத்தீவோடு சேர்ந்த்து இன்னும் சில தீவுகளுக்கு யாரும் செல்லக்கூடாத பகுதி என்ற தடை போடப்பட்டுள்ளது.

செண்டினல் தீவு வாசிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவில் அந்நியரை அனுமதிப்பதில்லை. மீறிச் செல்பவர்களை அவர்கள் விட்டு வைப்பதும் இல்லை அதாவது அந்த தீவில் நுழைபவர்களுக்கு அது " ஒருவழி பாதை" மட்டுமே திரும்பி வர முடியாது.

அப்படியானால் இதுவரை அத்தீவில் யாரும் நுழைய முயற்சிக்கவில்லையா ? அப்படி சொல்ல முடியாது பத்திரிக்கையாளர்கள், மீனவர்கள், அரசாங்க அதிகாரிகள்,மனித இனத்தைப் பற்றி ஆராய்சிசெய்பவர்கள் (anthropologists )..இப்படி அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் பதில் சொல்ல முடியாது மரணிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்திருக்கு.


சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க காட்டுவாசிகளுக்கும் இவர்களுக்கும் பாரம்பர்ய தொடர்பு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது இவர்கள் 50 முதல் 400 பேர்கள் வரை இருக்கலாம் என்ற புள்ளி விவரம் சரியா எனத் தெரியவில்லை. 28 சதுரமைல்கள் கொண்ட இத்தீவினை முழுக்க முழுக்க காடுகள் சூழ்ந்து உள்ளது கடற் திட்டுகளும் பாசிவகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இம்மக்கள் விவசாயம் ஏது செய்வதில்லையாம் இயற்கை சார்ந்ததே (வேட்டையாடுவது மீன்பிடிப்பது, காட்டில் விளையும் பழங்கள், தாவரங்கள் இவர்கள் உணவு )

1880 ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் [British colonial administrator ] என்பவர் தலைமையில் படை பலத்துடன் இத்தீவில் நுழைந்து இருக்கிறார்கள் ஆனால்  இக் காட்டு வாசிகளை இவர்களால் பார்க்க முடிய வில்லை ஓரிரு நாட்களில் வயதான தம்பதி மற்றும் குழந்தைகளை போர்ட் ப்ளேயருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தம்பதியர் நோய் கண்டு இறந்து விட்டதால் அந்த குழந்தைகளை திரும்ப அத் தீவில் பரிசுப்பொருட்களோடு விட்டிருக்கிறார்கள்...அவர்கள் காட்டில் ஓடி ஒழிந்து விட்டனர். அதன் பிறகு யாரையும் காணாமல் போர்ட்மேன் குழு திரும்பி விட்டனராம்.
1967ல் இந்திய ஆய்வுக்குழு இத்தீவிற்கு சென்று தீவு வாசிகளை நெருங்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர்.

அடுத்து 1970ல் சென்ற குழுவினரும் விற்களால் துறத்தி அடிக்கப் பட்டனர். 1974 ல் ஒரு டாக்குமென்றி படக் குழுவினரின் டைரக்டருக்கு பரிசாக தொடையில் அம்பு புக அலறி அடித்து ஓடி வந்துவிட்டனர்.

இந்திய அரசின் ஒத்துழைப்புடன், எண்பது மற்றும் தொண்னூறுகளில் டி.என்.பண்டிட் ஆய்வு குழுவினர் இரண்டொரு தடவை சென்று சின்ன சின்ன வீட்டு உபயோகப் பொருட்களை உபகரணங்களை இத் தீவில் வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனாலும் அவர்களை அருகில் சந்திக்கவில்லையாம்.
 அதன் பிறகும் இதுவரையிலும் இத்தீவு வாசிகள் வெளியாட்களை தம் பக்கத்தில் அண்ட விடவில்லை.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் இத்தீவு வாசிகள் பலர் மாண்டிருக்களாம் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி செய்யப் போன ஹெலிக்காப்டரையும் விரட்டினார்கள்...எந்த உதவியும் உபத்திரவமும் வேண்டாம் என
உறுதிகாட்டினார்கள்..உலகில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை பார்ப்பதில் இருந்து அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும் !!
Download As PDF

Monday, June 29, 2015

அண்ட வெளியில் பூமியின் முகவரி


அண்டவெளியில் பூமியின் முகவரி சூரியகுடும்பம்(solar system), பால்வெளி(milkyway), விர்கோ திரள் (virgo cluster) , பிரபஞ்சம் (the universe) என்று சொல்லிவந்தோம். இனி
இந்த முகவரி விர்கோவில் இருந்து லேனியாக்கி (Laniakea) என்று மாற்றம் பெறுகிறது.

இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் பூமி ஒரு மீச்சிறு புள்ளி.

விண்ணியலாளர் R Brent Tully  (the University of Hawaii ) தலைமையில் உலக அஸ்ட்ரானமி குழு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக விண்ணியல் அமைவிடங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வந்தது.

இந்த ஆய்வில் சுமார் 8000 பால்வெளி மண்டலங்கள் (Galaxies) ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.

the Name Laniakea means "immeasurable heaven"

லேனியாகி எனும் மாபெரும் திரள் (super cluster) ஒரு லட்சம் பால்வெளி மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் விஸ்தீரணம் ஒளியாண்டுகளில் சொன்னால் 522 + மில்லியன் ஒளியாண்டுகள் அல்லது நமது சூரிய குடும்பத்தின் விஸ்தீரணத்தில் 260 மில்லியன் மடங்குகள் விரிவானது எனக்கொள்ளலாம்.

நம் சூரிய குடும்பத்தில் ஜூபிடர் கோளின் குறுக்கு விட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் பூமியின் விட்டம். இதன் நீளம் சுமார் 12700 கி.மீ கள்.


கடந்த நூற்றாண்டுகாலம் விண்ணியலாளர்கள் இந்த பால்வெளி மண்டலம் விர்கோ எனும் மாபெரும் திரளில் உள்ளடங்கியது என்றும் றே  இந்த திரளானது சுமார் 2000 பால்வெளி (கேலக்ஸி) மண்டலங்களை உள்ளடக்கியதாகவும் இதன் விஸ்தீரணம் 100 மில்லியன் ஒளியாண்டுகள் கொண்டது எனவும், நமது சூரியக்குடும்பத்தின் நீளத்தில் 50 மில்லியன் மடங்குகள் பெரிது எனவும் கருதிவந்தனர்.

 சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணம் செக்ஸ்டில்லியன் கிலோமீட்டர்கள்.

ஹவாய் குழுவாளர்கள் நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உள்ள ஆயிரம் பால்வெளி மண்டலங்களுக்கு இடையே யான ஈர்ப்பை, நகர்தலை ஆய்வு செய்தனர். அதன்படி சூப்பர் கிளஸ்டர் விர்க்கொ இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.  இந்த சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணத்தை கணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

சூப்பர் கிளஸ்டரின் ஈர்ப்பு மையத்தை நோக்கியே மற்ற மண்டலங்களின் இயக்கம் இருக்கும். ஒரு கேலக்ஸியானது இந்த மைய ஈர்ப்பை ஒரு சுற்று சுற்றவே பல மில்லியன் ஆண்டுகாலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கேலக்ஸியானது எந்த சூப்பர் கிளஸ்டரை மையத்தின் ஈர்ப்பு எல்லைக்குட்பட்டு இயங்கி செல்கிறது என்பதை நுண் கவனிப்பினால் கவனிக்க வேண்டி இருக்கும். ஒவ்வோர் கேலக்ஸியின் இயக்க வேகமும் மாறு படும்.

ஹப்பில் ஆப்டிகல் டெலஸ்கோப் உட்பட்ட உலகின் பல ஆப்டிகல் டெலஸ்கோப்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சுமார் 8000 கேலக்ஸிகளின் ஒளி அளவீடுகள் ஆய்வுக்குட்பட்டன. ஒளி அளவீடுகள் அதன் இயக்க திசை மட்டும் அல்ல அவற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டது. இதை ப்ளூஷிப்ட், ரெட்ஷிப்ட் என குறிக்கிறார்கள். கேலக்ஸியானது உள் இயக்கத்தில் செல்கிறதா வெளி இயக்கத்தில் செல்கிறதா என்பதை இவை முடிவு செய்யும். இவற்றைக் கொண்டு பெரிய அட்டவணை தயார் செய்தார்கள்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் கோளும் தனக்கென்று  ஈர்ப்பை கொண்டிருக்கும் அந்த ஈர்ப்பு கோள்வட்டத்திற்குள் (நீள்வட்ட)அந்த கோளின் ஆதிக்கம் இருக்கும். உ-.ம் பூமிக்கென்று அதன் துணைக்கோள் நிலா புவி ஈர்ப்பு எல்லைக்குட்பட்டது ஆனால் பூமி சூரியனின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் இருக்கிறது. அதே போல சூரியனின் ஈர்ப்பு இயக்கம் கேலக்ஸியின் கட்டுப் பாட்டிற்குள் வருகிறது.

சுழன்று செல்லும் நீரோடையில் வெவ்வேறு திசையில் தெறிக்கும் நீர் திவளைகள் எப்படி எப்படி திரும்ப அந்த சுழலில் சேர்கிறது இதுபோல் தான் கேலக்ஸிகளின் இயக்கமும் இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

சுற்றிக்கொண்டு செல்லும் நமது  சூரியக் குடும்பத்தின் வேகம் மணிக்கு சுமார் 7லட்சம் கி.மீகள்

*****


THE MILKY WAY is a barred spiral galaxy surrounded by spiral arms, where billions of stars and planets are united. They all orbit a central black hole called Sagittarius A*, with a mass four million times the Sun’s.


******
The centre of the galaxy is split by a bar. It isup to 16,000 light years long.

********
The Solar System rotates at a speed of around 700,000 KM/H
*****
Compared to the Milky Way, the Solar System is a tiny dot. Our galaxy has a diameter of 100,000 light years, or 50,000 times the Solar System’s, and it is 1,000 light years thick. Distributed between 7 spiral ams, its 200 billion stars orbit a central black hole. Around the stars, even more planets are orbiting, and maybe 10 billion are inhabitable.

*****


In the Laniakea supercluster, all galaxies, including the Milky Way, are affected by the same gravity source. The galaxies move towards a com-mon gravity region, which astronomers have named the Great Attractor.


*****
The biggest galaxy we've spotted, IC 1101 has a diameter of six million light years – over 60 times the diameter of the Milky Way. Containing around 100 trillion stars, it is located in the Abell 2029 galaxy cluster.
*****
as Laniakea contains 100,000 galaxies and stretches 522+ million light years, or 260 million times the width of our Solar System.

The light takes 170,000 years 
to travel from the Sun’s core to the surface, 
but only 8 minutes to travel from the Sun’s 
surface to Earth.
*****
the Milky Way moves through space at a speed of 2.3 MILLION KM/H
******
THE OBSERVABLE UNIVERSE contains
millions of superclusters such as Laniakea.

*****

Download As PDF

Saturday, June 27, 2015

லேடி பக்கை அடிமையாக்கும் குளவிநமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் லேடி பக்கை அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

நீண்டகாலமாக விஞ்ஞானிகளுக்கு பிடி படாத மர்மம் ஏன் இந்த லேடி பக் குகள் குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது லேடிபக்கை ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது.  பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.குளவி லேடி பக் கின் உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும்.  லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்.

=================================

Download As PDF

Thursday, May 7, 2015

சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கும் ஜப்பானியர்கள்...உணவே மருந்து எனச் சொல்கிறோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்களிலும் நஞ்சு இருக்கிறதே.

கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதை தின்றவன் ?  என்று கேட்பார்கள்.


இப்போதெல்லாம் காளான்கள் பெரும்பாளானவர்கள் விரும்பி சாப்பிடும் பண்டம் ஆகிவிட்டது. காளான்கள் உடலுக்கு நல்லது தான்.

காட்டுக்காளான்கள் எனச் சொல்லப்படுகின்ற மரணத்தொப்பி (Death Cap),
அழிக்கும் தேவதைகள் ( Destroying Angels), கொடிய வலைநிழம்பி (Deadly Webcap ) இவை எல்லாம் நச்சுக்காளான்கள்.மேற்கு ஆப்பிரிக்க, ஜமைக்காவிலே  அக்கி (அத்தி அல்ல) எனற பழம் இருக்கிறது. இது நச்சுடையது ஆனால் அதுவே நன்கு பழுத்து (சிவப்பு) வெடித்த பின்னால் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் சதைப்பகுதியை மட்டும் கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல சுவை உடையதாம்.
மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட்டால், இந்த பழத்தில் இருக்கும் நஞ்சு ஹைப்போகிளைசின் (hypoglycin)பாதிப்பால் வாந்தி பின் ஹோமா நிலைக்குப் போய் பின் இறந்து போய்விடவும் வாய்ப்பு உண்டாம். இன்னொரு
சுவையான  ( ? ! )தகவல் அக்கி ஜமைக்காவின் தேசியப் பழம்.

மனிதர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள். ஆமாம் பாம்புகளை சாப்பிடுவார்கள் தெரிந்தது தானே என்கிறீர்களா..?

பலாபழத்தில் முள் இருப்பதற்காக சாப்பிடாமல் விடுகிறோமா.. ஆனால் ஜப்பான் நாட்டில் கொடிய விசமுள்ள மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள்.  ஃபூகு  ( fugu ) எனும் மீன் கொடிய விசம் உடையது. சயனைடைக் காட்டிலும் 1200 மடங்கு விசத்தன்மை இதன் உடலில் இருக்கு.  இந்த விசம் ட்ரொடோடோக்சின் [  tetrodotoxin ]. ஒரு மீனின் விசம் 30 நபர்களை கொன்று விடும். ஃபூகு விலை அதிகமானாலும் சுவைக்காக உயிரை பணயம் வைத்து சாப்பிடுகிறார்கள்...ஜப்பானியர்.அதெப்படி விச மீனை சாப்பிட முடியும் ? அந்த மீனின் சில பல (eyes, intestines, ovaries and liver) உறுப்புகளைத் தவிர்த்து மற்ற பாகங்கள் விசம் இல்லாதவை. அந்த பாகங்களை  பக்குவமாக எடுத்து மெலிதாக வெட்டி பல தடவை தண்ணீரில் கழுவி பின் சமைக்கிறார்கள்.  இதை எல்லோராலும் சமைத்து விட முடியாது அதற்கென்று 3 வருட படிப்பை முடித்து லைசென்ஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.  அரசின் அனுமதி பெற்ற நிறுவனமே உணவை தயாரிக்க முடியும். விசமுடைய பாகங்களை எரித்து விடுகிறார்கள்.  ஃபூகு மீனில் 40 வகைகள் இருக்கிறதாம்..ஜப்பானியர்கள் வருடத்தில் 10000 டண் மீன்களை தின்று தீர்க்கிறார்கள்.சமைப்பதற்காக வெட்டி பக்குவப் படுத்தும் ஃபூகு ... விருப்பம் இருப்பவர்கள் இந்த காணொலியை பார்க்கலாம்.
Rhubarb எனப்படும் வரியாத்து கிழங்கு இதில் தண்டுப் பகுதியை சாப்பிடலாம் இலையை ஒதுக்கி விடவேண்டும்.

tuna, mackerel, bluefish , mahi-mahi இந்த மீன்களையும் ஃபூகு லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

 டியூனா எனும் மீனை கர்பினிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிற்க வேண்டுமாம். இந்த மீனில் hypoglycin ஹைபோக்ளைசின் நச்சு இருக்கிறது.  இதில் உள்ள மெர்குரி அளவு நரம்பு சம்பந்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.

Download As PDF

Wednesday, April 29, 2015

மீசைக்கார வெளவால்களும் ;அதன் மூளையும்அமெரிக்க யுனிவர்சிட்டியை [Georgetown University Medical Centre ]சேர்ந்த விஞ்ஞானிகள் வெளவால்களிடம் ஒரு ஆராய்சியை செய்து பார்த்தனர். இதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்த வகை மீசைக்கார வெளவால்கள் ( ! ) [moustached bats ]

வெளவால்கள் இரவில் வேட்டையாடும் உயிரினம்.


வெளவால்கள் பறக்கும் போது மீவொலி எழுப்பிய படியே பறக்கும் அதன் எதிரொலியை வைத்து எதிரில் இருப்பவைகளை அடையாளம் கண்டுகொண்டு அதன் மீது மோதாமல் பறக்கும். அது மட்டும் அல்ல எதிரில் உள்ளது தன் இரையா என்பதை அறிந்து கொள்ளும்.

வெளவால்களின் மூளைச் செயல்பாட்டை பற்றிய ஆய்வில் சில தகவல்களை தெரிந்து கொண்டார்கள். அதாவது மனிதனை போலவே வெளவால்கள் வலது இடது இரண்டு பக்க மூளையையும் ஒலி சமிஞ்சைகளை ஏற்படுத்த புரிந்து கொள்ள உபயோகிக்கிறது.

இதில் அதிசயம் ஒன்னும் இல்லியே டெபனிட்லி மூளைதானே இந்த செயலை செய்ய முடியும் என்கிறீர்களா ? மேலே வாசிக்க;

சப்தத்தை புரிந்து கொள்ள மனித மூளையின் செயல் பாடு.
---------------------------------------------------------------------------------------------

வேகமான சப்தங்களை வலது மூளையை விட இடது மூளையே சட்டென புரிந்து கொள்ளும். அதே சமயத்தில் குரலை வைத்து இன்னாரென புரிந்து கொள்ளும் வேலையை வலது மூளை செய்கிறது.  அதாவது ஹஸ்கி வாய்ஸை இன்னாருடையது என தெளிவு படுத்தும் வேலை வலதிற்கு.
மனிதன் மனிதனோடு ஒத்த குரங்குகளில் மேற்சொன்ன செயல்பாடு நிரூபிக்கப் பட்டு இருக்கு.

வெளவால்களில் இந்த ஒலி தொடர்பு வேலைகளை இடது மூளை பார்த்துக் கொள்கிறது. அதாவது ஒலியின் ப்ரீக்குவன்ஸி எப்படி இருந்தாலும் அதை இடது மூளைதான் முன்னின்று செய்கிறது.

எதிரொலியை (எக்கோவை  Echolocation ) கிரகிக்க வலது மூளையை பயன் படுத்துகிறது.

ஒலி எழுப்புவதும் ஒலியை உள்வாங்குதல் இந்த இரண்டையுமே வெளவால்கள் ஒரே சமையத்தில் செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
மனிதர்களில் ஆண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும்  பெண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் எப்படி வித்தியாசம் இருக்கோ அதே மாதிரித்தான் வெளவால்களும்.

மனிதர்களில் மொழியை உபயோகிப்பதில் பெண்கள் இரண்டு பக்க மூளைகளையும் பயன் படுத்துகிறார்கள்.  ஆண்கள் இதற்கு இடது பக்க மூளையை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

சரி வெளவால்களிடம் இந்த ஒலி ஆய்வினால் என்ன பயன் என்றால், மனிதர்களிடம் பேச்சு குறைபாட்டை சரி செய்வதற்கு மற்றும் பேச்சு திறன் அற்றவர்கள் பேச நினைப்பதை கம்யூட்டர் உதவியோடு எளிதில் பேசுவது எதிர்காலத்தில் இன்னும் எளிதாக்கப்படலாம்.

Labels : மனித மூளை, வெளவால்,  brains, bats
Download As PDF

Friday, March 27, 2015

படித்ததில் பிடித்தது #ப.பி
#ப.பி படித்ததில் பிடித்தது
---------------------------------------------

யூகோஸ்லவியா நாட்டு கிராமம் ஒன்றில் நாய்,பசு, கழுதை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. நாட்டின் நிலைமை மோசமாக மாறி அங்கே வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவை மூன்றும் அந்த கிராமத்தை விட்டு காட்டுக்கு ஓடின.

ஆனால் அவைகளால் தாங்கள் வாழந்த கிராமத்தை மறக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை பார்த்து வரும் படி நாயை மற்ற இரு மிருகங்களும் அனுப்பி வைத்தன.   அந்த நாய் அடுத்த நாளே ஓட்டமாக ஓடி வந்தது "கிராமத்து நிலைமை இன்னும் மோசமாக மாறி விட்டதாகவும், குரைக்க ஆரம்பிக்கும் போது ஜனங்கள் கொல்ல வந்துவிட்டதாகவும் தப்பி வந்தது தம்பிரான் புன்னியம் எனவும், தன்னால் எப்படி குரைக்காமல் இருக்க முடியும் எனவும் சொன்னது.

சிறிது காலம் கழிந்து, கிராமத்தின் நிலையை கண்டுகொள்ள பசு சென்றது. அடுத்த நாளே திரும்பி வந்து "என்னை பார்த்ததும் என்னிடம் பால் கரக்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு என்னை அடிக்கவும் செய்தார்கள். நான் இனி அங்கே போக மாட்டேன் எனச் சொன்னது.

அதே போல கழுதையும் கிராமத்துக்கு போய் வந்து சொன்னது " கிராமத்தில் தேர்தல் நடக்கப் போகிறதாம் என்னை பார்த்தும் மக்கள் பிரதி நிதிக்காக நான் போட்டியிட வேண்டுமாம் அதற்கு நான் தான் தகுதியானவனாம்...யப்பா...சாமி ஓடியே வந்துட்டன் என்றது.

இது ரஷ்ய தலைவர் க்ருஷ்ச்சேவ் சொன்ன கதை


                                                         @@@@@@@@

 கவிஞர் கண்ணதாசன் ‪#‎எனது‬ சுயசரிதை புத்தகத்தில்...

சாதாரணமாகப் பாட்டெழுத உட்கார்ந்தால், ஒரு சுகமான உலகத்தில் மிதப்பது போல் எனக்கு தோன்றும், அகக் கவலை,புறக்கவலை எதுவும் தோன்றாது.
பாகப் பிரிவினையிலும், பாசமலரிலும் சில பாட்டுகள் பிறந்த இடங்கள் வேடிக்கையானவை.

நான் சிவகங்கைச் சீமைக்காக எழுதிய பல பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். திட்டமில்லாத அந்த வேலையால், நஷ்டமடைந்த பணம் சுமார் 20000 ரூபாய். சிவகங்கை அரசு எப்படித் தோன்றியது என்பது பற்றிச் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆயிரம் அடிப்பாடல் ஒன்று எழுதி இருந்தேன். அதில் பல வகையான மெட்டுக்கள் மாறி மாறி வரும்.
மருது பாண்டியரும், ராணி வேலுநாச்சியாரும், திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியைச் சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்" என்று ஒரு பாடல். அது அந்தப் படத்தில் இல்லை. அதே மெட்டில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ"என்ற பாடலை எழுதினேன்.
அது போல் "மண்ணில் கிடந்தாலும் மடியிலிருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா ? " இது எடுக்கப் படவில்லை. பாசமலரில் மலர்ந்தும் மலராத " பாடலை அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.

பாட்டுத் தொழிலில் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த அந்த நேரத்தில், வேறு பிடிக்காமலிருந்தால் கூட என் தொல்லைகள் வளர்ந்திருந்திருக்க மாட்டா.
சிவகங்கைச் சீமையிலே எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம் தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத்தது. கவலை இல்லாத மனிதன் அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய கிளைமாக்ஸ் கட்டத்தை நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தை கொலை செய்தோம். முழு முதற்க் காரணம் சந்திரபாபு. தன் குணத்த்தாலே தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்


@@@@@@@@@

அப்போது பானுமதி நடித்த ராணி என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாளில் பாடல் எழுதுவதென்பது பிரசவ வேதனை போன்றது. தானானானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களயும் அதற்குள் திணிக்கச் சொல்லுவார்கள்.
உள்ளம் வலிக்கும், உடம்பு வலிக்கும், நினைப்பதை சொல்ல முடியாது ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக எழுதி தீர்க்க வேண்டும். நானும் சித்திரவதைப் பட்டு ஒரு பாடலை எழுதி முடித்தேன். ஒத்திகை பார்க்க பானுமதி வந்தார். பாட்டை வாங்கிப் பார்த்துவிட்டு "இது என்ன பாஷை ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
எனக்கு அவமானமாகப் போய்விட்டது.
நமக்கும் ஒரு காலம் வரும் என்று நான் பொறுமையாக இருந்தேன்


@@@@@@@@@

ஒரு மனிதனுக்குத் திறமை மட்டுமே போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும் வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன் படுவதில்லை.சிந்தனையிலேயே சுகமான சிந்தனை கடந்து போன காலங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும்

~ கவிஞர் கண்ணதாசன்
 @@@@@@@@@

 உங்களுடைய பெற்றோரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் ஒருவரால் தான் தேர்ந்தெடுக்க முடியும்

சொன்னவர் ; ஸெர்னி

( ஆனால் சுவாமி என்ன சமைக்கலாம் என்ற உரிமையை வீட்டம்மணியிடம் தந்து விட்டேனே வாட் டு டு !)

@@@@@@@@@

 கருநாடகத்துடனான ‪#‎அணைப்பிரச்சனை‬ என்பது இப்போது அல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்த பிரச்சனை.

‪#‎ராணி_மங்கம்மாள்‬ வரலாற்றை படித்தோமானால், ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு
வந்துள்ளனர்.

மைசூர் போர் என்பதை வரலாற்று ஏடுகள் இப்படி சித்தரிக்கின்றன.

முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது


@@@@@@@@@

 ஒத்தரூபாயின்மகிமை
----------------------
அதுவொரு எடை பார்க்கும் மெசின் அதுமட்டுமல்ல உயரம் இந்த நாள் இனிய நாளா என்பதையும் துக்கடா சீட்டில் சொல்லி விடும்.

சரி நம் எடையை சோதித்துப் பார்போமே என்று அருகில் சென்று மணி பர்சை துழாவினேன் ஒரு ரூபா நாணயம் ஏதும் சிக்குமா வென.

ஆஹா ...ஒன்னே ஒன்னு கண்ணே கண்னு இருந்தது. ஆனால் அது நாலணா சைசில் , இது ஏதடா வம்பா போச்சி யாரிடமாவது கேட்கலாம் ...

என் அதிர்ஷ்டம் ஒன்று உதட்டை சுழித்தார்கள், இல்லை என்று தலையாட்டினார்கள், வெரித்துப் பார்த்தார்கள். நான் என்ன கேட்டேன் இந்த காசை வைத்து விட்டு வேறு. சைஸ் காசு தானே கேட்டேன்.

பக்கத்தில் காயின் பாக்ஸ் போனில் பேச எத்தனித்தவருக்கு லைன் கிடைக்கவில்லை போல டொக்கென்று காயினை துப்பியது.
"ஏனுங்க காச மாத்திகலாமா?" தரமாட்டாராம்.
"அதையே போட்டு பாருங்க ஹி..ஹி "

ஆனது ஆகட்டும் மெசினுக்கு எதிரில் ஏறி நின்றேன்.

"காசை போடவும்"

போட்டேன். மீண்டும்

"காசை போடவும்"

" ச்சேச்சே மெசினோடு மல்லுக்கட்டுவதா? "

என் ஒத்தரூபாயை விழுங்கி விட்டு தேமேனென்றிருந்து...
@@@@@@@@@

ரோமாபுரியே அவளின் அழகில் சொக்கி போனதாக சொல்லுவார்கள். மென்மஞ்சள் உடல் நிறமும், மயக்கும் நீலவிழிகளையும் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. நூற்றுக்கணக்கான கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப் பட்டன. நித்தம் கழுதைப்பாலில் குளிப்பாளாம். அதிருக்கட்டும் இத்தகவல் எதற்கு என்றால் இப்போது கழுதைப் பால் லிட்டர் ஐந்தாயிரத்திற்கு விற்கிறார்களாம். குழந்தைகள் கழுதைப் பால் குடித்தால் நோய் நொடியில்லாமல் திட காத்திரமாக இருப்பார்களாம். ஆனால் உண்மையா ? என்றால் டுபாக்கூர் தான். குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.@@@@@@@@@Download As PDF

Thursday, March 26, 2015

கனவு பற்றி இவர்கள் !


 • கனவு கண்டு திடுமென விழிக்கிறீர்கள்...கனவு ஏதோவொன்றில் உங்களை விழிப்புறச் செய்யவே- சார்லி ஹெட்ஜ் • கனவு காண்பவர்களோடு சேர்ந்திரு ; அவர்கள் நம்பியிருப்பார்கள் முடியாததை நீ முடிப்பாய் என -  மேரி அன்னெ ரேட்மாகர்


 • சாம்பியன்களை உடற்பயிற்சிக் கலம் உருவாக்குவதில்லை., அவர்களின் உள் எண்ணத்தில் உருவாக்கப்படுகிறார்கள் அவை என்னவென்றால் ஆசை, கனவு, செயல்பாடு -முகமதலி • ஏன் ? என்ற கேள்வியோடு விசயங்களை அணுகுகிறீர்கள். ஆனால் நான் அவைகளை கனவுகளுடன் அணுகுகிறேன்  நான் முன் வைக்கும்  கேள்வி "ஏன் இல்லை? " -  ஜியார்ஜ் பெர்னார்ட்ஷா • பொறுப்பு உங்களை செயல் புரிய வைக்கிறது. செயல் உங்கள் கனவுக்கு அருகாமையில் கொண்டு சேர்க்கிறது - மார்சியா வைடர் • சிறப்பான கனவு காண்பவர்கள் எல்லாம் உயர்ந்த இடத்தை பெறுவார்கள் - அப்துல் கலாம் • கனவிற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாய் இருபதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. கனவு காணுங்கள் அந்த இடத்தை நிரப்புங்கள். - பெல்வா டேவிஸ்


 • பழைய கனவு மற்றும் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள்; புதிய முயற்சிக்கு புதிய கனவை காணுங்கள்  - சி. எஸ். லெவிஸ்


 • நான் இரவில் மட்டும் கனவு காண்பதில்லை, பகலிலும்; நான் வாழ்வதற்கு கனவு காண்கிறேன்  - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் • அவர்களின் கனவை நம்புபவர்களின் எதிர்கால வாழ்க்கையில் கனவின் அழகு ஒழிந்திருக்கிறது - ரூஷ்வெல்ட் • வெற்றியின் பின்னே தான் கனவின் சாவி ஒளிந்திருக்குமாயின், சிறிய முயற்சியும் பெரிய வெற்றியும் நீங்கள் பயணிக்கும் பாதையின் புதிய அர்த்தத்தை கொடுக்கும். - ஆப்ரா வின்ஃப்ரே • முழு வாழ்க்கையின் வெற்றியும் கனவின் பின்னே; உயர்ந்த கனவு காண்பவராக இருப்பதுவே எனது பேராவல் - ஸ்வாமி விவேகானந்தர் • கனவின் உள்ளர்த்ததை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள், 
 • உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்தது கனவும், சிறகொடிந்த பறவையால் எப்படி பறக்க முடியாதோ அப்படி மறைந்து போன கனவும் ஆகிடும் . - லாங்ஸ்டன் ஹக்ஸ் • கனவு வாழ்க்கைக்கு தேவைதான் - ஆனெய்ஸ் நின் • நம் எல்லா கனவும் உண்மையாக வேண்டுமானால், பயமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் தைரியமும் நமக்கு வேண்டும் - வால்ட் டிஸ்னி • முதலில் கனவு என்பதே இல்லை என்கிறோம்; கண்டுவிட்டால் அது நெசத்தில் நடக்காது என நினைக்கிறோம்;
 • பிறகு அதுவே தவிர்க்க முடியாததாகிப் போகிறது. -  க்ரிஸ் ரீவ் • வெற்றி என்பதே கனவின் எல்லைக்கோடாக இருக்க வேண்டும் - நெப்போலியன் ஹில் • உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை கனவாக காணுங்கள்; அந்த கனவை உண்மையாக்க பாடுபடுங்கள்  - ராஃவ் வால்டோ எமர்சன்


* * * * * * * * *

Download As PDF

Saturday, February 28, 2015

தவளைகள் அழிந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள் ?


தவளைகள் சூழற் தகவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்.

 தவளைகள் இயற்கை அழிவுக்கு உட்படுமேயானால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான தடிமனான கோடு எனச் சொல்லலாம்.

உலக அளவில் [ Chytridiomycosis** ] ஸைட்ரிடையோமைகோஸிஸ் எனும் வியாதியால் பாதிக்கப்பட்ட தவளைகளில் 200 வகைகள் சுத்தமாக அழிந்து போய் விட்டது. அதே போல 40 சதவீத   நீர் நில வாழ்வினங்கள் இதனால் பாதிக்கப்பட்டு அழிவு நிலை நோக்கி போய் கொண்டிருப்பதாக ஒரு கணக்கீடு செப்புகிறது.

மேற்கு மலைத் தொடர் காடுகளில் (பகுதிகளில்) மட்டும் சுமார் 217 வகையான  தவளை இனங்கள் உள்ளன. மேற் சொன்ன பங்கஸ் வகை நோயினால் இவைகள் பெரும் பாதிப்பு அடையவில்லை எனச்சொன்னாலும் துறைமுகப் பகுதிகளில் வாழும் நீர் நில நிலை வாழ்விகள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இந்த நோய் கண்ட தவளைகள் இரண்டு வாரங்களில் மரித்து விடும்.

2004 ன் படி IUCN அறிக்கையின் படி இந்தியாவில் 60 வகை நீர் நில வாழ்விகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன  (13 are Critically Endangered, 27 are Endangered and 20 are Vulnerable).பொதுவாக தவளைகள் அழிவுக்கு வழி வகுப்பவை
1. சுற்றுப்புறத் தூய்மை கேடு,
2. காடுகளை அழித்தல்,
3. நீர் மாசு அதிகரித்தல்

**Chytridiomycosis is an emerging infectious disease of the amphibians caused by Batrachochytrium dendrobatidis a water borne zoospore producing fungi

report any mass death of frogs to the nearest forest department or write to zooreach@zooreach.org / keerthi@zooreach.org / herpinvert@gmail.com
Download As PDF

Saturday, February 21, 2015

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்
கர்பிணிகள் உடலில் செல் பறிமாற்றம் பற்றி இந்த பதிவு.

இதுபற்றி இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன 1. கருவுற்ற பெண் வயிற்றில் வளரும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் (குருத்தணுக்கள்) தாய்க்கு கடத்தப்படுகின்றனவா? 2. அதன் மூலம் பழுதடைந்த செல்கள் தாயிடம் புதுபிக்கப் படுகின்றனவா?

Can a pregnant woman get stem cells from her
baby? And can they repair damage in her body?

தாய் கருவுற்று இருக்கும் போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ப்ளஸென்ட்டா (placenta) வழியாக செல்கள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன.  ஒரு ஆய்வின் படி 80 சதவீத தாய்மார்கள் செல்லுக்கு "Y " குரோமோசோம்கள் ஆண் குழந்தையிடம் இருந்து கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் அவை தாயின் இரத்த செல்களில் கலக்கின்றன.  உடம்பில் இயற்கையாக இருக்கும் இம்யூனல் சிஸ்டத்தின்படி தற்காப்பு நடவடிக்கையாக சில மணி நேரங்களில் அவை அழிக்கப் படுகின்றன.  

ஆனால் முழுமையாக அழிக்கப்படாத திசுக்கள் தாயின் உடலில் ஒரு பகுதி திசுவாக தங்கிவிடுகின்றன.

அதே போல குழந்தையின் உடம்பிலும் தாயிடம் இருந்து கடத்தப்படும் செல்கள் திசுக்களாக குழந்தையின் உடம்பில் தங்கிவிடுகின்றன.  தாயிடம் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட செல்கள் குழந்தையின் உடலில் அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் குழந்தையின் உடலில் குடிபுகுந்து விடுகிறது. அதாவது மரபணுகள் விதைக்கப்படுகின்றன.
 இந்த சுழற்சியை உற்று நோக்கினால் பரம்பரை பரம்பரையாக இந்த செல் கடத்தல் நடத்தப்படுகிறது.  எலிகளிடத்திலும் ஏன் மனிதர்களிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் தாயின் லிவர், கிட்னி, மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் குழந்தையிடம் இருந்து கடத்தப்பட்ட மரபணு செல்கள் காணப்படுகின்றன. அந்த புதிய செல்கள் தாயின் உடம்புச் செல்களை போலவே வளர்கின்றன.


இன்னொன்றை சிந்தித்துப்பார்த்தால் மனித உடலில் பல பரம்பரை செல்கள் இருக்கும் போல தெரியுதே. (humans involve cells from several generations)
இத்தகைய செல் பறிமாற்றத்தால் தாய்க்கு இம்யூனல் சிஸ்டம் பாதிப்பு ஏற்படுகிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட ஆய்வில், ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களில் 20 ல் 12 பேருக்கு செல் பறிமாற்றத்தின் காரணமாக தைராய்ட் சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபனமாகியுள்ளது. (குழந்தை பேற்றுக்கு பின் குண்டாகிப் போவதற்கு இதுதான் காரணமோ )

Download As PDF

Friday, January 23, 2015

வற்றிப்போன கடல் !

1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்...


சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு )
1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது
மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

image in 1989

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்.

Images 2000 and 2014 (Naza)

As of June 1, 2010, 500,000 cubic meters of gas had been extracted from the region at a depth of 3 km

Label : Aral sea, ஏரல் கடல், ஆரல் கடல்,

Download As PDF

Tuesday, January 20, 2015

எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபாயாடிக்ஸ் [antibiotics]ஆண்டிபயாடிக் மருந்துகள் சாதாரணமாக பரிந்துரைக்கப்படும் மருந்து. இது உடனடியாக நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் 50% தேவை இல்லாத ஆண்டிபயாடிக் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.

மக்கள் பொதுவாக பாக்டீரியா, வைரஸ் குறித்த வித்தியாசங்களை தெரிந்து கொள்வதும் இல்லை விருப்பப் படுவதும் இல்லை.

வேகமான நம் வாழ்க்கையில் ஏற்படும் உடல் பிரட்சணை அதாவது காய்ச்சல்
என்றாலே சிலர் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை சாப்பிடும் வழக்கத்தில் இருக்கிறோம்.

இந்த மாத்திரை நமக்கு தற்காலிகமாக நோயில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்தோ அடிக்கடி நாம் இந்த மாத்திரையை உட்க்கொள்வதால் உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ப்ராய்லர் கோழிகளுக்கு கூட நோய் எதிர்ப்பிற்காக இல்லை அவை குண்டாவதற்காக (risk of obesity) இவை குறிப்பிட்ட அளவில் தீவணத்துடன் சேர்த்து கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்., அப்படியானால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் மனிதனுக்கும் ஓபிசிடி என்று சொல்லப் படுகிற உடற்பருமன் ஏற்படும் வாய்ப்பும் உண்டே.ஆன்டிபயாடிக்குகள் நம் உடலில் உள்ள பயன் தரும் பாக்டீரியாக்களையும் கொல்கிறது.

இந்த பயன் தரும் பாக்டீரியாவனது நம் உடலின் குடல் வாலில் இருக்கிறது.
நம் உடலின் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கிறது.

சிறுவர், சிறுமியருக்கு அந்த வயதில் இருந்தே இந்த மருந்தை உட்கொள்வது கண்டிப்பாக அவர்களின் இன்சுலின் சுரப்பை பாதிப்படைய செயவதாக சொல்கிறார்கள்.   !! இது முதல் கட்ட சக்கரை நோய்.

H. pylori  பைலோரி என்று ஒருவகை பாக்டீரியா ஆஸ்துமாவில் இருந்து நம்மை பாதுகாப்பது.

தொடர்ந்து வழக்கமாக நாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட் கொள்ளும் போது நம் உடலின் இயற்கையான நோய்  எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு.

அடுத்து வரும் தகவல் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தலாம் இது பி.பிசியில் வெளியான தகவல்.  இருப்பினும் ஆன்டிபயாடிக்கை பற்றி தெரிந்து கொள்ள அந்த தகவலை கீழே தருகிறேன்.மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு

நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புறுக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.

மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது

இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.
மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும்.

எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.

சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (4) brains (1) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (1) life science (2) Life Sciences (10) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (24) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (2) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)