Pages

Wednesday, July 18, 2012

துணுக்குகள்..


குளிர் காலங்களை விட வெயில் காலங்களிலேயே நம் தலைமுடி வேகமாக வளர்கிறது. அதனால் தான் சம்மர்ல சம்மர் கட்டிங்கிற்கு மவுசு..!


பெரியவங்கள காட்டிலும் குழந்தைகள் கண் சிமிட்டுவது குறைவு. அதுவும் குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திற்கு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சிமிட்டல்களே போடுகிறது.   இன்னொன்னு கவனிச்சிருக்கீங்களா உங்க கண்சிமிட்டல பார்த்து அப்பவே கண்ணடிக்க பழகிருதுங்க இந்த காலத்து சுட்டீஸ்.


மண்டை எழும்பு 22 எழும்புகளின் கூட்டு.


ஜப்பானியப் பெண்கள் சாராசரியாக 80 வயசு வரைக்கும் வாழ்கிறார்கள். [ கொடுத்து வைத்த கணவன்கள்..]


மூளையில் உள்ள செல்கள் திரும்ப உருவாவது இல்லை இந்த செல்கள் செத்து போனா போனது தான்  [ ... இரு..க்கும் ஆனா இருக்காது...]


வாசனை நமது நாக்கிற்கு சுவையை உணர்த்துகிறது. சளி பிடித்திருக்கும் போது டேஸ்ட் பிடிப்பதில்லை...இதுவும் ஒரு காரணம்.


போரன்சிக் (தடயவியல்) வல்லுனர்கள் ஒரு முடியை மட்டும் வைத்துக்கொண்டு அது இருந்த இடம் ஆணா, பெண்ணா, என்ன வயது உடல் நிலை எப்படி இருந்தது,  அவன் உடலில் பாய்சன் இருந்ததா இப்படி பல விசயங்கள புட்டு புட்டு வைப்பார்கள். [ முடி போனா ... அப்படி சுலபமா எடுத்துக்கமாட்டாங்க.]




வாந்தி வருவதற்கு முன் அதிக உமிழ்நீர் வாயில் சுரப்பது வயிற்றிலிருந்து வெளிவரும் அதிக ஆசிட் நம் பல்லை பாதிக்க கூடாதுன்னுதான்.


ஒன்று போலவே இருக்கும் டிவின்ஸ் பலபேருக்கு DNA ஒன்று போலவே இருக்கும் ஆனா கைரேகை வேர வேர தான்.


கவனிச்சு பாருங்க உங்க நடுவிரல் நகம் மட்டும் மத்த விரல்களின் நகத்தைவிட வேகமா வளரும்.


கோலா கரடிகளின் காலடித் தடமும் மனிதனது காலடி தடமும் அநேக சமயங்களில் ஒன்று போலவே இருக்கும்.


85 சதவீத மனிதர்களாலே தங்கள் நாக்குகளை குழல் போல மடிக்க முடியும் மீதி 15 சதவீதம் பேருக்கு ஊ..கூம்.


17 comments:

  1. தெரிஞ்சுக்க வேண்டிய துணுக்குகள் -
    தெரிய படுத்தியமைக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. பறந்து வந்து கருத்திட்ட மனசாட்சிக்கு இதயபூர்வமான நன்றி.

      Delete
  2. அற்புதமான துணுக்குகள். பல எனக்குத் தெரியதத்து

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சீனுவின் பாராட்டிற்கு நன்றி. சில நேரங்களில் நமக்கு தெரிந்த தகவல் போட வேண்டுமா சாதாரணமாக போய்விடுமே என யோசித்ததுண்டு.

      Delete
  3. பல புதிய தகவல்கள். நல்ல தொகுப்பு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. எழில் மேடம் சாதாரண தகவல் எழுதிட்டமேன்னு நெனச்சேன். நன்றி !

      Delete
  4. <<< ஒன்று போலவே இருக்கும் டிவின்ஸ் பலபேருக்கு DNA ஒன்று போலவே இருக்கும் ஆனா கைரேகை வேர வேர தான் >>>

    படைப்பின் ரகசியமே அதுதான்.!

    ReplyDelete
    Replies
    1. படைப்பின் ரகசியம், கைரேகை ரகசியம் விளங்கிகொள்ள சிரமமான விடயங்களே. நன்றி வரலாற்று சுவடுகள்.

      Delete
  5. அரிய வேண்டிய விசயம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சங்கவிக்கு எனது நன்றி!

      Delete
  6. நல்ல துணுக்குகள். பல துணுக்குகள் அறியாதவை...

    //// ஜப்பானியப் பெண்கள் சாராசரியாக 80 வயசு வரைக்கும் வாழ்கிறார்கள். [ கொடுத்து வைத்த கணவன்கள்..] //// - நல்ல ஜோக்ஸ் (ஹா... ஹா... சும்மா நகைச்சுவைக்காக)

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் :
    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  7. துணுக்கு..அருமை...

    ReplyDelete
    Replies
    1. அருமையான நண்பர் !...நன்றி!

      Delete
  8. அருமையான அரிய தகவல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  9. நம் தளம் பக்கமும் வரலாமே!thalirssb.blogspot.in.

    ReplyDelete

  10. \\மூளையில் உள்ள செல்கள் திரும்ப உருவாவது இல்லை இந்த செல்கள் செத்து போனா போனது தான் [ ... இரு..க்கும் ஆனா இருக்காது...]\\ Nijamavaa?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !