Pages

Tuesday, August 14, 2012

பிரபஞ்சம் அறிவோம் : கேலக்ஸிகள் பற்றிய சில தகவல்கள்


அகண்ட விண்வெளியில் அநேக நட்சத்திரங்களின் தொகுப்பே கேலக்ஸிகள் என அழைக்கப்படுகின்றன.

அநேக நட்சத்திரங்கள் என்பதை உத்தேசமாக மில்லியன் நட்சத்திரங்களில் இருந்து டிரில்லியன் நட்சத்திரங்கள் வரை கொண்ட தொகுப்பு என கருத்தில் கொள்ளுங்கள்.

நமது கேலக்ஸியின் [உடுமண்டலம்] பெயர் ஆங்கிலத்தில் மில்கிவே தமிழில் பால்வீதி அல்லது ஆகாய கங்கை.

நம் கேலக்ஸியின் விஸ்தீரணம் சில ஆயிரங்களில் இருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம். இவற்றின் நிறை பல டிரில்லியன் சூரிய குடும்பங்களின் நிறையின் அளவு என்று கொள்ளலாம்.

நம் பக்கத்துவீட்டுக்காரரின் செல்லப் பெயர் M31  [ ஆண்டிரமெடா ] இதனுடைய விட்டம் 2 அல்லது 3 மில்லியன் ஒளியாண்டுகள். இவருக்கும் நமக்கும் உள்ள தொலைவு பல மில்லியன் ஒளியாண்டுகள் இருக்கும்.
இந்த டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யவில்லை என்றால் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகிடும். திரு.சாலமன் பாப்பையா பாணியில் சொன்னால் " நம்ம கேலக்ஸியையே இன்னும் சரியா விளங்கிக்க முடியலயா..."

கேலக்ஸியின் வடிவத்தை பொருத்து சுருக்கமா நான்கு வகையா பிரிக்கலாம்.  [இங்கு சுருக்கமா என்று சொல்லுவதன் காரணம் அந்த ஒவ்வொரு வகையிலும் பல கூறுகள் இருக்கு ]

1. சுருள்வடிவம் [ spiral Galaxies ]
2. லெண்டிகுலர் [ Lenticular Galaxies ]
3. நீள்வடிவம் [Elliptical Galaxies ]
4. ஒழுங்கற்ற வடிவம் [ Irregular Galaxies ]

இந்த ஒழுங்கற்ற வடிவத்தில் பல ஆயிரக்கணக்காண கற்பனைக்கெட்டாத உருவங்கள் உண்டு.


  • சுருள்வடிவம் பக்கத்தில் இருக்கும் கேலக்ஸியின் ஈர்ப்பால் இந்த வடிவம் பெருகிறது.
  • லெண்டிகுலர் இதுவும் சுருள்வடிவமே ஆனால் அதன் மையம் எரிபொருள்தீர்ந்து வேகமிழந்த நிலையில் இருக்கும்.
  • நீள்வடிவம் இது தன்னைத்தானே சுற்றாது ஆனால் இதிலுல்ல அண்ட சராசரங்கள் ( கோள்கள், நட்சத்திரங்கள்) சுற்றும்.
  • ஒழுங்கற்ற வடிவம் பல வடிவங்கள் கொண்டு விநோத சித்திரங்கள் போல் இருக்கும்.


இரு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதும், இணைவதும் உண்டு.


மேலே உள்ளது ஸ்பைரல் கேலக்ஸி


மேலே :   இது ஒரு நீள்வடிவ கேலக்ஸி



மேலே :   இது ஒரு  லெண்டிகுலர்  கேலக்ஸி



மேலே : எமிசன் ரிஃப்ளெக்சன் கேலக்ஸி


மேலே : ஸ்டார் ப்ர்ஸ்ட் கேலக்ஸி


மேலே : இணைந்த இரு கேலக்ஸிகள்



இதுதான் நம்ம மில்கிவே சூரியன் குறிக்கப்பட்டிருக்கு கவனிக்கவும்


==================================================================
பால்வெளியில் [மில்கிவே] 400 பில்லியன் நட்சத்திரங்களும், இந்த யுனிவர்ஸில் 125 பில்லியன் கேலக்ஸிகளும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு உண்டு.

==================================================================



17 comments:

  1. அந்த 125 பில்லியன் கேலக்ஸியில் ஏதாவது ஒன்றில் நம் சூரிய குடும்பத்தை போலவே ஒரு குடும்பம் இருந்து அங்கே உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சில நூறு ஆண்டுகளாகவே கேலக்ஸியை கண்காணித்து வருகிறார்கள் புவியின் அறிவியலார்கள் இல்லையா குமரன் சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் 1994ல் இருந்து காஸ்மிக் பற்றி ஹெஸ் வகை பெரிய டெலஸ்கோப்களின் மூலம் ஆய்வு நடந்திட்டு இருக்கு சமீபத்தில் ஜூலை கடைசிவாரத்தில் நாலு பெரிய டெலஸ்கோப்புகளை [HESS II ] நமீபியாவில் நிறுவி இருக்காங்க. இது காமா காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்யும். இந்த டெலஸ்கோப்பின் சைஸ் இரண்டு டெனிஸ் கோர்ட் அளவு கொண்டது.

      Delete
  2. அறிவியல் வியாகானம் சுத்தமா நம்மிள்கு இல்ல இப்பதா கொஞ்சம் கொஞ்சம் இந்த மாதிரி பதிவுகள் மூலம் மற்றும் வரலாறு (சுவடுகள்) மூலம் தெரிந்து கொள்கிறேன்.

    ம்... பகிர்வுக்கு நன்றி - மீண்டும் படித்தேன் பல இடங்கள் புரியல - போக போக பழகி கொள்கிறேன் ஒக்கே நண்பா

    ReplyDelete
    Replies
    1. நான் புரிந்து கொண்ட விஷயங்களையே தருகிறேன். சுருக்கமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் எழுதவே முயற்சிக்கிறேன். திறந்த மனதுடன் பின்னூட்டம் அளிக்கிறீர் நன்றி நண்பரே.

      Delete
  3. விரிவான விளக்கம்... நன்றி…

    படங்கள் சேர்த்தது சிறப்பு... வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான பின்னூட்டம் அளிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

      Delete
  4. படங்களுடன் விளக்கம் அருமை.சிறப்பான் பகிர்வு.பலருக்கு(என்னைப்போல்) அறியாத தகவல்கள்

    ReplyDelete
  5. இதுதான் நம்ம மில்கிவே சூரியன் குறிக்கப்பட்டிருக்கு கவனிக்கவும்//

    அப்போது நடுவில் பிரகாசமாக உள்ளதே அது என்ன?

    ReplyDelete
    Replies
    1. நமது கேலக்ஸியில் 400 பில்லியன் நட்சத்திரங்களில் ஒன்று தான் நமது சூரியன் இத்தனை நட்சத்திரங்களையும் தொலைநோக்கியிலாலும் பார்க்கமுடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் நம் சூரிய குடும்பத்தை போல் பல கோள்களை கொண்டிருக்கும். நமது சூரியன் மற்றும் பூமி ஓரப்பகுதியில் இருப்பதால் அதன் நடுப்பகுதி நமக்கு பிரகாசமாயும்,அடர்த்தியாகவும்,விசாலமாகவும் தெரிகிறது. நிலா இல்லாத நாட்களில் தெளிவான வானத்தில் பால்வழி வெரும் கண்களுக்கு தெரியும். நன்றி முபாரக்.

      Delete
    2. முபாரக், ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு குச்சியை கொண்டு கையால் சுற்றி சுழற்றினால் ஒரு சுழல் எற்படும் அதில் சுற்றி செல்லும் நீர் துகள்கள் போல நமது சூரியமண்டலம் மற்றும் நட்சத்திரங்கள் எல்லாம் மையத்தை சுற்றுகிறது. வேகம், வேகம், வேகம் மட்டுமே. நமது சூரியன் கேலக்ஸியின் மையத்தை நொடிக்கு 272 கி.மீ என்ற வேகத்தில் எல்லா கோள்கள் துணைக்கோள்களை இழுத்துக்கொண்டு சுற்றுகிறது ஒட்டு மொத்தமாக. ஒரு சுற்று சுற்றி முடிக்க 25 கோடி வருடங்கள் ஆகும். வாயுக்களும் தூசுகளும் இல்லாத வெறும் வெளி நமக்கு கருப்பாகத் தெரியும்.

      Delete
  6. படங்களுடன் எளிய விளக்கம்! எப்போது புவியியலில் படித்தது! இன்று உங்களால் மீண்டும் அறிந்து கொண்டேன்! நன்றி!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
  7. நீங்கள் கொடுத்த மில்கி வே படம் உண்மையானது அல்ல, ஏனெனில் இந்த வியூவில் பார்க்க பல லட்சம் ஒளியாண்டுகள் பயணித்தால் மட்டுமே முடியும் என்கிறார்களே, அப்படியா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜெயதேவ் சார் நீங்கள் குறிப்பிடும் தகவல் உண்மையே. நம் கேலக்ஸியின் வடிவம் சுருள்தான். புகைப்படம் கிடையாது.

      Delete
  8. 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பரே

    ReplyDelete
  9. Wow. Nice post. Vaalththukkal ullame. My site: http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  10. நன்றாக உள்ளது நண்பரே.... சிறுவயதில் வானவியல் பற்றி ஆர்வம் இருந்தது, இப்போது துறை மாறி விட்டதால் அதிகம் அறிந்து கொள்ள முடிவதில்லை. பகிர்வுக்கு நன்றி... எங்கே என் இறுதி விமர்சனத்தில் உங்கள் கருத்துரையைக் காணோம்? இதோ சுட்டி...
    http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

    ReplyDelete
  11. அனைத்து வகை அண்டங்களையும் அழகாய்த் தொகுத்து இருக்கீங்க..
    வாழ்த்துகள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !