Pages

Monday, October 15, 2012

பாடும் பறவைகள் [Song birds]









பாடும் பறவைகளை பறவைகளில் சிறப்பு தன்மை உடைய பறவைகள் எனலாம். 4500 இனங்கள் உண்டு. இந்த லிஸ்டில் காகம், நைட்டிங்கேல், அண்டங்காக்கை பொதுவானவை.




சில பாடும் பறவைகள் :
காகம், ஃபிஞ்சஸ்(Finches), லார்குகள், மோக்கிங்(mocking), நைட்டிங்கேல் (nightingales),அண்டங்காக்கை(Ravens), சிட்டுகுருவி(Robins), த்ரஸ்ஷஸ்(thrushes), தூக்கனாங்குருவி(weaver bird), வாப்ளர் (Warblers)


பாடும் பறவைகளின் சிறப்பு அவற்றின் தொண்டையில் இருக்கும் குரல்வளை (Syringers) அமைப்பு. இவைதான் இவற்றிற்கு சப்தமெழுப்ப உதவுகிறது.  வுட் த்ரஸ் என்று சொல்லப்படும் பறவையின் குரல்வளை அமைப்பு பிரமாதமானது ஒரே சமயத்தில் இரண்டு விதமான பாடல்களைப் பாடும்.( டூ இன் ஒன் !)

பறவைகளின் மூளையில் இந்த பாடல்களை கிரகிக்க ஒரு சிறப்பு பகுதி உண்டு. இது ஒரு பாடலை கற்றுக்கொள்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்கிறது.

பறவைகள் ஏன் பாட வேண்டும் ?


பெரும்பான்மையான ஆண் பறவைகள் சப்தமிட்டுப் பாடும் இது பெண் பறவைகளை ஈர்ப்பதற்குத்தான் (விசிலடிச்சான் குஞ்சுகள் ! )
நன்றாக பாடும் ஆண் பறவையே பெண் பறவைக்கு பிடிக்கும்.

பறவைக் குஞ்சுகள் பாடுவதற்கு தந்தைதாய் பறவைகளைப் பார்த்தே கற்றுக்கொள்கின்றன.

சாதாரணமாக நீங்கள் பார்க்கும் பறவைகளில் 10 க்கு 8 பாடும் பறவை.

பாடும் பறவைகளின் ஆயுள் 5 வருடங்களே. பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக முட்டையிட்டு குஞ்சு பொறித்துவிடும். பாடும் பறவைகளின் முட்டை பத்து நாட்களில் குஞ்சு எட்டிப்பார்க்கும்.
பாடாத பறவை அல்பட்ராஸ் (Albatross) குஞ்சு பொறிக்க 80 நாட்கள் ஆகிறது.




வுட் த்ரஸ் (wood thrush)  மெலடியாகப் பாடும் புல்லாங்குழல் இசைப்பதைப் போல. அதன் பாடலை கேளுங்கள்..









ஸ்டார்லிங்ஸ் விநோதமான பறவை மற்ற பறவைகளின் குரல்களை காப்பியடித்து அப்படியே பாடும் திறமை கொண்டது.

இந்த காணொலியில் பழக்கப்படுத்தப்பட்ட பறவை கேட்கும் குரல்கள் சப்தங்களை ஒலித்துக் காட்டுகிறது. நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.



14 comments:

  1. //புல்லாங்குழல் இசைப்பதைப் போல. அதன் பாடலை கேளுங்கள்..//

    கேட்டேன் கேட்டு கொண்டே இருக்கேன்....அற்புதம் ஆபாரமாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே பல முயற்சிகளுக்கு பின்னரே ஆடியோ இணைத்தேன் சிறப்பாக வேலை செய்வதில் மகிழ்ச்சி.

      Delete
  2. நல்ல தகவல்கள் படங்களும் அழகு

    ReplyDelete
  3. பறவைகள் குறித்த தகவலும், பறவைகளின் இசையும் அருமை நன்றி கலாகுமரன்

    ReplyDelete
    Replies
    1. பறவைகளை காக்கவும் இயற்கை வளம் காக்கும் உங்களின் சமூகப்பணிக்கு எமது இம்மாதிரியான பதிவுகள் ஒரு சிறு பங்களிப்பே. நன்றி தோழி.

      Delete
  4. படங்களுடன் தகவல்கள் அருமை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கடினமான மின்சார சிக்கலில் பதிவுலகத்திற்கு உங்கள் பங்களிப்பு மட்டுமே தங்கு தடையில்லாமல் தொடர்கிறது. நன்றி தனபாலன் சார்.

      Delete
  5. படங்களுடன் தகவல்கள் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள், அழகிய படங்கள், சூப்பர் வீடியோ!! ஒரு கிளி எத்தனை விதமான கேள்விகளை ஞாபகம் வைத்து சரியான பதில்களைத் தருகிறது என்று பார்க்கும்போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்!! நன்றி நண்பரே! [படங்கள் சாற்று பெரிதாக போட்டிருக்கலாம்!!]

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.
      கைபேசி வழி ப்ரெளசிங் செய்பவர்களுக்கு பெரிய படங்கள் தரவிறக்குவதில் சிரமாக இருக்கும் என்பதால் சற்று சிறிய அளவு வைத்துள்ளேன். படங்களை பெரிதாக பார்க்க கண்ரோல்,ப்ளஸ் கீயை பயன்படுத்தலாம்.

      Delete
  7. பறவைகளின் படங்கள்,பாடல்கள் நன்றி! கலாகுமரன் .

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த உங்களின் வருகை மற்றும் கருத்துக்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

      Delete
  8. பறவைகளும் நைட்டி கேக்குதா?

    #நைட்டிங்கேல்

    இந்த பறவைகளைப் பார்க்கும் போது நான் வளர்த்த குருவி ஞாபகத்துக்கு வருகிறது..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !