Pages

Monday, September 30, 2013

லால்பாக் போன்ஸாய் மரங்கள்.. ஒரு திடுக் தகவல்


தொடர்புடைய முதல் பகுதி : டெக்ஸ்டைல் நகரத்தில் இருந்து எலக்ட்ரானிக் நகரத்தை நோக்கி...

தென் ஆர்காட்டின் திருவாக்கரையில் (தேசிய  படிம பூங்கா) இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்ட கல்லாகிப் போன மர படிமம் உள்ளது.  இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது (Petrified coniferous tree) இதே போல கண்டெடுக்கப்பட்ட கல் மர படிமம் கிண்டி(சென்னை), கேரளா, மற்றும் ஹைதராபாதில் இருக்கும் தேசிய பூங்காக்களில் வைக்கப்பட்டிருப்பதாக நிறுவப்பட்டிருக்கும் பலகை குறிப்பு சொல்லுகிறது.

இதே போன்ற கல் மர படிமம் (wood fossil ) ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் பார்க்கலாம் (அது கொஞ்சம் சிறியது...).


The oldest tree(white silk cotton tree) at Lal bagh botanical garden, Bangalore

லால்பாக் போன்ஸாய் மரங்கள்.. ஒரு திடுக்கிடும் தகவல்

வருடம் தோறும் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் நடத்தப்படும் கண்காட்சில் போன்ஸாய் மரங்களின் அணிவகுப்பு இருக்கும். லால் பாக்கில் அதற்கென்றே ஒரு பகுதியை ஒதுக்கி வளர்த்து வருகிறார்கள்.  சட்டென பார்பதற்கு சிறு செடிகள் போல தோற்றம் தரும் கொடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்தே நாம் 35, 40 வயது மரங்கள் என்பதை கண்டு ஆச்சர்யப் பட முடியும்.

நான் கேள்விப் பட்ட தகவல் இங்குள்ள பெரும்பாலான போன்ஸாய் மரங்கள் சீனிவாசன் என்பவரால் 2002 ல் தானமாக அளிக்கப்பட்டவை.  அவரின் அப்போதைய மதிப்பு படி இவை இரண்டரை கோடி என்றும் ஆனால் அரசு இதை ஐந்தரை லட்சத்திற்கே மதிப்பிட்டதாகவும் தகவல்.  2006 வரை அவருக்கு மாதம் 15000 ரூ அளிக்கப்பட்டு வந்தது.  தம்பெற்றோர் நினைவு பெயர் பொறிக்க வேண்டும் என கேட்டு கொண்டதாகவும் நடைமுறையில் சாத்தியப்படாமல் போனதாகவும் அறிகிறேன். சீனிவாசன் அவர்களின் தந்தை சீதாராமன் முன்னால் பெங்களூரு மேயராம். அவற்றில் சில காணாமல் போய் விட்டன.    தகவல் உண்மையா இல்லையா என்பதற்கு இந்த போன்ஸாய் மரங்களே சாட்சி (அதுகள் பேசாதே வாட் டு டூ ! )







கீழே  இருப்பவை ஜப்பானில் வளர்க்கப்பட்ட போன்ஸாய்




இந்தியா மற்றும் சீனாவில் காணப்படும் வெள்ளை இலவ மரம் ஒன்று லால் பாக்கில் உள்ளது. இதற்கு 200 வருடங்கள் இருக்கும் என்கிறார்கள். (கீழே )







மைசூர் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட சாமராஜேந்திர உடையாரின் சிலை இங்கு வைக்கப்பட்டு உள்ளது. இதை 1908 ல் மைசூர் கர்சன் பூங்காவில் இருந்து இங்கு கொண்டு வந்து வைத்து உள்ளார்கள். இவர் காலத்தில் லால் பாக் (லால் = சிகப்பு) இந்த தாவரவியல் பூங்காவை சிறப்புற வடிவமைத்துள்ளார்.


ராஜாஜிநகரில் உள்ள 2011ல் கட்டி முடிக்கப்பட்ட நார்த் ஸ்டார் கட்டிடத்தின் உயரம் 420 அடிகள் ,  32 அடுக்குகளை கொண்டுள்ளது. இதில் உலக வர்த்தக மையம் (WTC =World Trade Center ) செயல் படுகிறது.  WTC - ன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. அதில் இணைந்து செயல் படும் 330 மையத்தில் இது ஒன்று.


இஸ்கான் கோவிலில் இருந்து பார்கும் போது..WTC


விதான செளதா






(இஸ்கான்) ராதாகிருஷ்ணசநதிரா கோயில், ராஜாஜி சாலை

கடைவீதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குகை கோயில் ஸ்ரீ காவி கங்காதாரேஷ்வரா,  9ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.  இதற்கு கெம்பே கவுடாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது.  சாதாரண உயரம் உள்ளவர்கள் இதனுள் சென்றாளே வெளியே வரும்போது குனிந்து தான் வெளியே வர வேண்டி இருக்கும்.  மகர சங்கராந்தி தினத்தில் (ஜனவரி) சூரியக் கதிர்கள் நந்தி மற்றும் லிங்கத்தின் மேல் விழுமாம்.




 சிவன் சிலை, பழைய ஏர்போர்ட் சாலை


முகப்பு சின்னஸ்வாமி ஸ்டேடியம்




வைட் பீல்டில்(white field) உள்ள காஸ்மோஸ் மாலில் குழந்தைகளை கவரும் விளையாட்டு ரயில்.



"குளோசப்பில்"

11 comments:

  1. mm பதிவும் படமும் செம !!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. என்னங்க காலாண்டு விடுமுறைக்கு பெங்களூர் சுற்றுப்பயணமா.. சொல்லவே இல்லை...செய்தியும் புகைப்படமும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. சுற்றுப்பயணம் என்று சொல்ல முடியாது திடீர் ன்னு ஒரு பயணம் அமைஞ்சது, மகளுடனும் அம்மாவுடனும் ...நன்றி எழில்

      Delete
  3. பெங்களூர் புல்லா அலசி எடுத்துட்டீங்க போலிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. சமையல் பக்கம் அதிகமா போறதில்ல... நன்றி ஆனந்த்.

      Delete
  4. அருமையான படங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. குளோசப் கலக்கல் பாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. அது என் செல்லம் எடுத்த படம் .

      Delete
  6. தகவல்களும் படங்களும் அருமை! ஆனால் போன்சாய் மரங்களால் என்ன பயன்?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !