Pages

Monday, April 28, 2014

எங்கே, ஏன், எப்படி ?


எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?

நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo  sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம்.  சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை  வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்,  ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.


இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.

*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment

புதிர் 

ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?

எப்படி  ? பதில் பதிவின் இறுதியில்.


பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?

1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.

சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது.  அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.   அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.


அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ? 



பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.

இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது.  அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது.  ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ?  இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.


விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில்  PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.  ( ??)

கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.

க்யூப் வடிவதர்பூசணி  எப்படி விளையுது ?



சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி

2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.

எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.




Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு


Monday, April 14, 2014

நினைவெல்லாம் நித்யா !!




ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தோட்டத்து பங்களா.... சேர்த்து அணைத்த இருட்டு கருக்கொண்ட நிசப்தமான இரவை மரக்கிளைகளில் படபடத்த பட்சிகளின் சிறகுகளின் சப்தத்தை விடவும், விசு விசுத்து கிளம்பி இலைகளை பட படக்க வைத்து ஏற்படுத்திய.... ஹோ.... வென்ற ஓசை சன்னல் திரைச்சீலைகளை கிச்சு கிச்சு மூட்டி உள்ளே புகுந்தது காற்று.

இலைகள் விலக்கி புகுந்த நிலவின் கீற்றொளி ஏனோ ஒரு அமானுஷ்ய காட்சியை வெளிச்சம் போட்டு காட்டியது.

பங்களாவிற்கு சற்று தொலைவில் இருந்த மரத்தின் சிறு கிளைகளின் அசைவுகள் ஏதேதோ பேசுவதைப் போல இருந்தது.

பூமிக்குள் இருந்து மேலே கிளம்பிய வேர்கள் சட சடவென வளைந்து நெளிந்து பங்களாவை நோக்கி தன் கரங்களை அசைத்து திறந்திருந்த சன்னலினுள் புகுந்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவளின் கால்களையும் கைகளையும் சுற்றி வளைத்து அப்படியே சுருட்ட

“ ஹக் ”



( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )


பட படத்த நெஞ்சைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்த அவளுக்கு குப்பென வியர்த்து கொடிட்டியது தேகம் முழுவதும்.

இது கனவுதான் என்பதை அவளுக்கு உணர்த்தினாலும்...ஏன் இப்படிப்பட்ட கனவுகள் தனக்கு வருகிறதென்பது தெரியவில்லை அவளுக்கு..
அவள் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது.

கனவில் நடக்கும் சம்பவங்களை விடவும் சில சமயங்களில்.., நிஜத்தில் நடப்பவைகள் இன்னும் புதிராக தோன்றி மறைந்தது.

ஜன்னலின் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. அந்த மரத்தை வெறித்து பார்க்கும் பொழுதெல்லாம் ஏதேதோ பேசும் குரல்கள் கேட்டது... இதை எல்லாம் அவரிடம் சொன்னாலும் ஏதும் கேட்பதே இல்லை...,

பித்து பிடித்தவள் பேசிய பேச்சுகளாகவே அவருக்கு படுகிறதா?

நான்கு வயதிலும் ஒன்னறை வயது கைக் குழந்தையையும் வைத்துக்கொண்டு தான் படும் கஷ்டங்கள் ஏன் அவருக்கு புரிவதில்லை.?
மாமனாரும் அத்தையும் துணைக்கிருப்பது அவளுக்கு ஒரு ஆறுதல்.

ஓவியாவின் போக்கும் வர வர சரியில்லை அந்த மரத்தின் பக்கம் போகாதே என்றால்,,,சொல்வதை கேட்பதே இல்லை.. பார்த்துக் கொண்டிருந்த போதே மரத்தின் மீது தன் காதுகளை வைத்து என்னவோ... பேசிக் கொண்டிருந்தாள்

“....வா...டீ...ஈ ””

என கூப்பிட்டு ரெண்டு சாத்து சாத்தினாள் ஆனால் அழுவதற்கு பதில் அவள் கண்களை மலங்க வெறித்து அவளையே பார்த்தாள்.

குழந்தையின் தள்ளுவண்டியை ஒரு நாள் மரத்திடம் தள்ளிக் கொண்டு போனாள்.

தனக்கு தெரிந்து அத்தையும் மாமாவும் அந்த மரத்தின் பக்கம் செல்வதேயில்லை...

அவர்களும் அந்த மரத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லை.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

ஒரு நாள்

“...சு...ரே...ஷ் ”

கூப்பிட்டு கொண்டே ஓடினாள். அவன்...வெளி ரோட்டை நோக்கி ஓடினான் கொஞ்ச தூரம் சென்று பார்த்தும் அவன் அவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை வெறும் இருட்டு மட்டுமே நீண்டிருந்தது.

சில சமயம் காணாமல் போன மூத்த பையன் அந்த மரத்தினடியில் நிற்பது போல் தோன்றும்

ஒரு நாள் ஓவியா ”...பொலிஸிர்கு சொல்ல...லியா...? என வார்த்தைகள் உதிர்த்தாள்.

ஏன் ? எதுக்கு ??

”அண்ணா வை கண்டுபிச்சி குடுப்பாங்கல்ல...”

”..யார் உனக்கு சொன்னா? ”

கேள்விக்கு பதிலாய்.... அந்த மரத்தை நோக்கி கை நீட்டினாள்.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )



சில தினங்கள் கழிந்து அதிசயமாக பூத்துக் குழுங்கியது அந்த மரம். ஒடிந்து விழுந்த பூங் கொத்தை முகர்ந்து பார்த்த அத்தை மூர்சையாகி விழுந்தாள். சரியாக ஒருவாரம் இருக்கும் நினைவிழந்த நிலையில் இறந்து விட்டாள்.

மாமனாரும் யாரையாவது வரச் சொல்லி அந்த மரத்தை வெட்டிப் போட வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார். சரியான ஆள் கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களின் பின்னே அந்த மரத்தையே வெறித்துப் பார்த்தபடி அதன் அருகில் போனார். நிலத்தின் அடியிலிருந்து குபு குபுவென கட்டெரும்புகள் அவர் உடல் முழுதும் ஏறியது தடுமாறி விழுந்தவர் பின் எழவே இல்லை.

அவ்வப் போது பையனின் நினைப்பாகவே இருந்தது. இரவு நேரங்களில் இரண்டு கைகளாலும் அத்தானின் நெஞ்சை குத்தி சட்டையைப் பிடித்து பையன இன்னும் தேடி கண்டுபிடிக்காம இருக்கியே த்தூ...என சிலுப்பினாள். அவன் ஏதும் பேசாமல் மெளனி யாகி விட்டான்.

சிலசமயங்களில் இருப்பு கொள்ள மாட்டேனெகிறது. என்ன எளவு ...நாய் பொளப்பு என சலித்த அவளுக்கு கண்களில் நீர் முட்டியது.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

வெட்டிப்போடப்பட்ட மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த அவனுக்கு நித்யாவின் போக்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. அவள் ..அவள் செய்த காரியத்தை நினைத்தால் .... கிர் என்ற தலையை பிடித்து கொண்டான்.

பையன் காணமல் போய்விட்ட ஏக்கம் அவளை நிரப்ப பாதித்து இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது.

அவளிடம் பேச்சு கொடுத்து பரிசோதனை செய்த டாக்டர் அதைத்தான் சொன்னார். அவனுக்கு புரியாத வார்த்தைகள் சொன்னார் அந்த பாதிப்பு கொஞ்ச காலத்திற்கு பிறகு சரியாகி விடும் என்றார்.

அவன் முடிவெடுத்து விட்டான் இனி இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. அவள் செய்த காரியம் அவளுக்கே தெரியவில்லை. எதுவோ தன்னை தாக்க வருவதாக நினைத்து பலமாக தள்ளிவிட்டு அந்த பிள்ளையின் சாவுக்கு காரணமாகி விட்டாளே. யாருக்கும் தெரியாமல் மறைத்தாலும் அவன் மனது கேட்கவில்லை....ஓ..வென பீரிட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. அவன் உடல் குலுங்கியது. கண்கள் சிவந்து போயிருந்தது. தாரை தாரையாக கண்ணீர் ஓடிய தடத்தை இரண்டு கைகளாலும் அழித்தான், கெட்ட சம்பவங்களோடு சேர்த்து.

சாமான்களை ஏற்றப் பட்ட வாகனம் வெளிச்சக்கீற்றை மறைத்து புழுதி பறக்க அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றது நிசப்தத்தை கரைத்து.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

நினைவெல்லாம் நித்யா !! கதையாக்கம் : கலாகுமரன்

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )




ஜோக்ஸ்...ஜோக்ஸ்


சலூன்கடையில் “உங்க தல முடிய ரொம்ப கட் பன்னனும் போல இருக்கே”

சீட்டின் பின்னால் வாகக சாய்ந்து கொண்டவர்
“ம்..இருக்கலாம் இந்த தடவை நல்லா கட்பன்னிடுங்க...”

“ போன தடவ மோசமா கட்செஞ்சு இருப்பீங்கலோ”

 @#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

தன் அப்பாவுடன் முதன் முதலில் பாலட் நடனம் பார்க்கப்போனான் ஒரு சிறுவன்.

“பெண்கள் கால் விரல்கள் தரையில் சுழல துள்ளி ஆடினர்”

பையன் அப்பாவிடம் கேட்டான் “ டான்சுக்கு ஏம்பா உயரமானவங்க கிடைக்க மாட்டாங்களா ?”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பல்லு புடுங்க எவ்வளவு பீஸ் டாக்டர்

ஐநூறு ரூபாய்கள்

டாக்டர் என்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்கு

நிதானமா பல் பிடுங்க கொஞ்ச நேரம் ஆகும் பரவாயில்லையா?

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

கண் ஆபரேசன் முடிஞ்சதும் கண் திறந்து பார்த்த நோயாளிக்கு எல்லாம் கொஞ்சம் மங்களா தெரிஞ்சது டாக்டரிடம் கேட்டான்.

“டாக்டர் சினிமாவுல யூஸ் பன்ற புகை மூட்டம் எக்யூப்மெட் இங்க எதுக்கு ? “

ஓ அதுவா...

திடும்னு பளிச்சுனு தெரிஞ்சா நான் ஆபரேசன் சரியா செய்யலேன்னு பலரும் ஃபீல் செய்யராங்க அதான்.”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

டாக்டர் என்னோட வலது மூட்டு வலியா இருக்கு

அது ஒன்னுமில்ல வயசாகுது இல்லியா ?

...டாக்டர் ஆனா என்னோட ரெண்டு காலுக்குமே ஒரே வயசுதான் இருக்கும்

டாக்டர் “ ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பஸ் நடத்துநர் “இந்த புள்ளக்கு 5 வயசாச்சுன்னு சொல்லுதே டிக்கட் எடுக்கனும்மா”

பெண்மணி “ எனக்கு கல்யாணமாகியே 4 வருசம்தான் ஆச்சு புள்ளக்கி எப்படிங்க 5 வயசு ஆகும்”

”அதெல்லாம் எனக்கு தெரியாது ...நான் டாக்டர் இல்லம்மா கண்டக்டர் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ      


மொத மொதலா சர்சில் நடக்கும் கலியாணத்திற்கு தன்னோட பையனோடு உடன் போனார் ஒருவர்.

பையன் : “அப்பா ஏம்பா பொண்ணு வெள்ள வெளேர்னு டிரஸ் போட்டிருக்கு

அப்பா : தேவதை வெள்ள டிரஸ் போட்டிருக்கும் இல்லியா. இன்னிக்கு வாழ்க்கையில் அந்த பொண்ணுக்கு எல்லா சந்தோசமும் வந்து சேரப் போகுது அதுக்குத் தான்.

பையன் : சரிப்பா அப்ப ஏன் மாப்ள கருப்பு கலர் கோட் போட்டு இருக்காரு.

அப்பா : “ ங்...ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாலத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்ய இருந்தவனை பார்த்தவர் ஓடி வந்து தடுத்து “ஏம்பா ஏன் எல்லாத்துக்கும் இது தீர்வு இல்லப்பா” என சமாதானம் செய்து அமைதி படுத்தினார்.

”சரி ஏன் இந்தமுடிவு எடுத்தே ?”

”சம்சாரம் பக்கத்து வீட்டு காரனோடு ஓடி போய்ட்டா”

”இன்னொரு கலியாணம் செஞ்சிட்டா போச்சு. எப்ப நடந்திச்சு ?”

“ 1 வருசம் ஆகிடுச்சு இப்ப அவன் போன் பன்னினான் அவள திரும்ப எங்கிட்டயே ஒப்படைக்கப் போறானாம் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


நீண்ட நாள் கழித்து இரண்டு பெண்கள் ஒரு காஃபி சாஃபில் சந்தித்து கொண்டார்கள்.

முதலாமவள் “ஏன் அடிக்கடி சொறிஞ்சிக்கிட்டே இருப்பியே.. இப்ப எப்படி?”

இரண்டாமவள் “அதெல்லாம் தேவையில்ல இப்ப எனக்கு கலியாணம் ஆகிடுச்சு அவரு பாத்துப்பாரு”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... எங்கம்மாக்கு இருட்ல கூட நல்லா
கண்ணு தெரியுதுடா ?

எப்படிடா சொல்ற

நேத்து கரண்ட் போனப்ப எங்கம்மா எங்கப்பாட்ட ஷேவ் செய்யலன்னு திட்டினாங்க..டா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... கூடிய சீக்கிரம் எங்க வூட்ல தம்பி பாப்பா வரும்டா...

எப்படிடா சொல்ற,,,

போன தடவ எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனப்ப தங்கச்சி பாப்பாவோட வந்தாங்க

இப்ப எங்க அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாமா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


“ஹலோ...இது பயர் ஆபீஸா”

”ஆமா சொல்லுங்க”

”என் வீட்டு முன்னாடி அழகான பூந்தோட்டம் வெச்சிருக்கேன்”

”சரிம்மா நெருப்பு எங்க புடிச்சது?”

”நீங்க வரும்போது அதுமேல வண்டிய ஓட்டிட்டு வராம பார்த்துக்கங்கன்னு சொல்ல தான் கூப்ட்டேன்”

“நா கேட்டதுக்கு பதிலே சொல்லலியே”

”நெருப்பு பக்கத்து வீட்ல புடிச்சிருக்கு”

“ ஹலோ...ஹலோ... கட்டாகிடுச்சே”


@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நண்பர்களுக்கு கடன் கொடுத்தா நட்பு முறிஞ்சிடுமாம்....நான் உனக்கு கடன் தர முடியாது.

“அதனால பரவாயில்ல நாம எப்பவும் நல்ல நண்பர்கள்னு சொல்லிகிட்டதில்லியே”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Friday, April 11, 2014

சக்கரை கலந்த இறைச்சியினால் மறதி ஏற்படுமா ?

மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள்  குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 



பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய உணவுகள்,  குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

Tks to bbc news

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'

பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?

இதற்கான பதில் இறுதியில்...

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை

தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...

" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "

"ஏன் "

" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"

" நடிப்பு தானப்பா"

" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும்.  வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.

3 வருடங்களுக்கு பிறகு.....



"என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது

"அட டே"

என்ன நொ டே டே...

அவ என்ன பார்த்து குரைக்கிறா...



(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL) 

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.  அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

விடுகதைக்கான பதில்  "காளான்"

விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.