Pages

Saturday, June 21, 2014

மீன் பிடிக்கும் சிலந்தி



மீன்பிடிக்கும் சிலந்திகளில் 18 வகைகள் இருக்கிறது.  அண்டார்டிகாவை தவிர மற்ற கண்டங்களில் இவைகள் வாழ்கிறது.

ஆறு, குளங்கள்,நீரோடைகள் இவற்றின் வாழ்விடங்கள். மற்ற சிலந்திகளை போல இவை இரை பிடிப்பதற்காக வலை பின்னுவது இல்லை.  முட்டைகளை பாதுகாக்க பெண் சிலந்திகள் வலைபின்னி கொள்கிறது. சிறிய மீன் குஞ்சுகள், தவளை குஞ்சுகள் இவற்றின் உணவு.  சில நீர் சிலந்திகள் நீரினுள் மூழ்கியும் மீன் பிடிக்கின்றன.





கிரேட் ராப்ட் சிலந்தி (இங்கிலாந்து), ஆறு புள்ளி மீன் பிடி சிலந்தி(US)
[Great Raft Spiders,Dolomedes triton ]

இவை கரை ஓரப் பகுதிகளில் தண்ணீரின் மேல் மிதந்தபடி இருக்கும் இவை முன்காலை மட்டும் நீரினுள் விட்டபடி நின்று கொள்ளும் அதிர்வு கிடைத்த உடனே சட்டென இரையை கவ்வி கொள்கிறது. சில வகை இலை அல்லது பாறைகளில் தொத்திக் கொண்டு முன்காலை மட்டும் நீரில் விட்டு மீன் பிடிக்கின்றன.

துள்ளும் மீனின் மேல்  கடித்து விசத்தை (நியுரொடாக்ஸின்) செலுத்துகிறது  (lethal neurotoxins), மயங்கி பின் இறக்கும் மீனின் உடல் பகுதிகளில் அதன் சுரப்பு ரசாயனங்களை பாய்ச்சி செரிமானப் படுத்தி உறிஞ்சி உண்கிறது.

பெரிய சிலந்தி என்று எடுத்துக்கொண்டால் 7 கிராம் எடைகொண்ட சிலந்தி 30 கிராம் மீன் குஞ்சை பிடித்து தின்று விடுகிறது.

தொடர்புடைய பதிவு :


Thursday, June 19, 2014

பழைய கற்கால டயட்டும் குகை மனிதர்களும்



உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை உடற்பயிற்சி, நடைபயிற்சி முக்கியமாக உணவு கட்டுப்பாடு (டயட்).  முதல் இரண்டை கடைபிடித்தாலும் மூன்றாவதை கட்டுப்படுத்த தான் பலரும் படாத பாடு படுகிறார்கள்.   (ஒரு சாண் வயிற்றிற்கு தானே இந்த பொழப்பு ! அதிலென்ன வஞ்சனை !!).
 
சரி இந்த டயட் அந்த கால குகை மனிதர்களிடம் இருந்திருக்குமா? என்று யோசித்தால் அப்ப அந்த குகை மனிதர்கள் உணவு பழக்கம் இப்போதிருக்கும் உணவு பழக்கம் போல் இருந்ததா ? என்றால் இல்லை (அப்ப ஏது பீட்சா ,பர்கர்,கேக்குகள்... !!)


பாலியோலித்திக் டயட்

பாலியோலித்திக் மனிதர்களின் உணவு என்றால் வேட்டையாடப்படும் விலங்குகள், பழங்கள், கொட்டைகள், அதாவது அம்மனிதர்கள் (2.5 million and 10,000 years ago ) டயட்டை கடைப்பிடித்து இருக்கிறார்களோ இல்லையோ அதுவே அவர்களின் உணவு பழக்கமாக இருந்து இருக்கிறது.
 மனிதனின் வளர்ச்சி கட்டம் அதன் பிறகே உணவு பழக்கங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

மனிதனின் மரபியல் கூறுகளும் மாற்றமடைய துவங்குகின்றன.  விவசாயம் செய்யத்துவங்கிய மனிதனின் உணவு பழக்கங்களும் மாறின.  தானியங்கள்,பால் அவனுடைய உணவில் இடம் பிடிக்கிறது.  அதுவரைக்கும் கூட பிரச்சனை இல்லை.  தானியங்களை மாவாக்கி பயன் படுத்த தொடங்கியதில் இருந்து அவன் செரிமான  அமைப்பு முற்றிலும் மாற்றம் பெறுகிறது.

அப்படியாயின் குகை மனிதன் உணவுப் பழங்கங்களை பொறுத்த மட்டில் உணவு கட்டுப்பாட்டில்(டயட்டில்) இருந்து இருக்கிறான்.
அடுத்து உடலுக்கு தேவையான சத்துக்களை பொருத்த அளவில் சரிவிகித உணவு முறை அவன் உணவுப் பழக்கத்தில் இருந்ததா ?
நவீன உணவுப் பழக்கத்தினால் அவன் உடல் உபாதைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டான்.

பரவலான நோய்நொடிகளான சக்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், புற்றுநோய் இவைகள் நம் உணவுகட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவையா ? என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.
ஒன்றை நன்றாக கவனித்தோமானால் இளவயதிலேயே பால் பால் பொருட்டகளின்பால் நம் உடல் சுரப்பிகள் செரிவூட்டப் பட்டு விடுகின்றன.  சிலர் மட்டும் விதி விலக்காக பால் ஆடைகள் ஒத்துகொள்ளாது. தயிர் மோர் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த ஒவ்வாமை ஏன் என்று சிந்தித்தோமானால் அது குகை மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

இன்னொருபுரம் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளும், பதப்படுத்தப்பட்ட பழரசங்களும், பதப்படுத்தப்பட்ட நான் வெஜ், ஜங்க் உணவு வகைகளும் உயர்தரமென்று எண்ணுவோர் அதிகமாகி வருகின்றனர்.
எனினும், கற்கால மனிதர்கள் போல் அல்லாமல் நமது மரபியல் கூறுகள், அமைவுகள் மாற்றப்பட்டு விட்டன என்பது மறுக்க இயலா உண்மைகள்.  நிச்சயமாக உணவு பழக்கத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது.



Tuesday, June 17, 2014

சர்தார்ஜி ஜோக்ஸ்(Part III)






பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார்.

"ஏன் பஞ்சரா ? "

"போர்டைப்பாருங்க ஜி"

போர்டில் "பார்க்கிங் டுவீலர் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.

வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது "ஆர்  யூ ரிலாக்ஸிங் ?" என்று கேட்டார்

அதற்கு அவர் " நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்

திரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.

அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.

அவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே "யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்"

"பொடேர் "என்று அவரை அடித்த சர்தாஜி "உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


மைசூர் அரண்மனையில்

"ஜீ இதில உட்காரக்கூடாது திப்பு சுல்தானோட நாற்காலி"

"ஒயே...கவலப்படாத அவரு வந்தவுடனெ ஏந்திருச்சுருவேன்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


மாசமாயிருக்கும் தன் மனைவிக்கு சர்தார்  SMS அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து ரிபோர்ட் வந்தது

பல்லே...பல்லே என்று குதிக்க ஆரம்பித்தார் கேட்டதற்கு

மெசேஜ் செய்தியை காட்டினார் .  SMS ரிபோர்ட் "Delivered"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ரயில் வருவதற்காக காத்திருந்த சர்தார்....ஓடிப்போய் ஓரமாக நின்றுகொண்டார்.

ஏன் ? என்றால் ஸ்பீக்கர் சொன்னத கேட்கலியா

"காடி ப்ளேட்பார்ம் பர் ஆ ரஹி ஹை"  கத்தினார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

 " எழுதினதை காட்டு "

சர்தார் :   "நீங்க அழிச்சப்பவே நானும் அழிச்சுட்டேன் மிஸ்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாருக்கு கல்யாணம் மார்ச் 2 ம் தேதி கல்யாணம் முடிவாகி இருந்தது.

இந்தி, தமிழ்,  தெரியாதவர்களிடம் ( ! ! ?) இன்விடேசன் கொடுத்து விட்டு இப்படி சொன்னார்

"மேரேஜ் ஆன் மார்ச்  செகண்ட், ப்ளீஸ் கம் ஆன் ஃபர்ஸ்ட் நைட்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்  "நெப்போலியன் டிக்ஸ்னெரியில்  "முடியாது "
 "பயம்" என்ற வார்த்தைகள் இல்லை"

சர்தார் "இப்ப யோசிச்சு என்ன செய்ய வாங்கும்போதே பார்த்து வாங்கனும்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

இரவில் சர்தாரின் அறையின் வெளியே குரல் கேட்டது...

"புரிஞ்சிக்கோ என்ன தொந்தரவு செய்யாத.. நேத்து ராத்திரியே நல்லா தூங்க
முடியல..என் வாழ்க்கையோட விளையாடாத "

காலையில்...

ஜி...யாரோட பேசிட்டு இருந்தீங்க

பேசிட்டா பொளம்பிட்டு இருந்தேன் கொசு தொல்ல தாங்கல..

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ஸ்கூல் டேஸ்..

ஆங்கில வாத்தியார் சர்தாரிடம் இந்த வாக்கியத்தை   கொடுத்து past tence ல்
எழுத சொன்னார்   "I make a mistake"

என்ன எழுதி இருப்பார்....

இப்படித்தான்..

"I was made by a mistake"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தார் பல சமயங்களில் போனில் மணிக்கணக்காக பேசுவார்...

ஒரு நாள் அதே போல போன் பேசிவிட்டு வைத்து விட்டார்

அவர் மனைவி "என்ன சீக்கிரம் முடிச்சிட்டீங்க 25 நிமிட் தானே ஆச்சு"

சர்தார் "அது ராங்க் கால் ஸ்வீட்டி" சொல்லிவிட்டு வெளியே நடந்தார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாரிடம் ஒருவர் " நீங்க எங்க பிறந்தீங்க ? "

"பஞ்சாப்"

எந்த பகுதி ?

பகுதியா எல்லாம் இல்ல பாய்... எல்லாம் முழுசா தான்

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

விவாகரத்துக்காக சர்தாரும் அவருடைய மனைவியும் கோர்ட்டில் ;

உங்களுக்கு  3 குழந்தைகள் இருக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுமானால் எப்படி பிரிப்பது ?"

குசு ..குசுவென்று மனைவியிடம் பேசிவிட்டு சொன்னார்

"அடுத்த வருசம் பிரிச்சிறோம் மேம் சாப் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

டாக்டர் படித்து விட்டு முதல் முறையாக ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தார்.

டார்ச் அடித்து கண்கள், காதுகள்,, நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு


"லோவா இருக்கே"

டாக்டர் நீங்க ப்ரஸர் பார்க்கவேயில்லையே


"டார்ச் பேட்டரி லோவா...இருக்கே "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

"ஒருவாரமா யாருக்கு பேசினாலும்....கர்ர்ர்ர்ர்... இந்த பொன்னு ரொம்ப
தொல்ல குடுக்குதுபா..."

பக்கத்தில் இருந்தவர் போனை வாங்கி கேட்டார்

 "ப்ளீஸ் ரீ சார்ஜ் யுவர் கார்ட் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

தொடர்புடைய பதிவுகள் :





Saturday, June 14, 2014

டிசைனர் குழந்தைகள் !!



"டிசைனர் குழந்தை " (Designer Baby) இந்த பதம் விஞ்ஞானிகளால் சொல்லபடவில்லை மாறாக பத்திரிக்கையாளர்களால் சொல்லப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தம் உடலைப் பற்றிய குறை இருக்கிறது...உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன், நம்ம கண்னு மட்டும் ஏன் ப்ளூவா இல்ல, இப்படி சொல்லிட்டே போலாம்.  அதெல்லாம் நாம நிர்ணயிக்க முடியாதப்பா... என்பதே பெரும்பாலவர்களின் பதிலாக இருக்கும்.

40 வயசுக்கு மேல இல்ல இல்ல பிறந்த குழந்தையே சக்கர வியாதியோட பிறக்குதே, டாக்டரின்  முதல் கேள்வியே  உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்பதாக இருக்கும் இது ஒரு வியாதியே இல்லை என்றாலும் நம் உடம்பில் குறைபாடு ஏற்பட உணவு பழக்கம் தவிர்த்து
பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்கிறது. இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதன் படி குழந்தை உருவாக்களில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
நமக்கு பிடிச்ச காரை எப்படி தேரிந்தெடுக்கிறோமே அதுமாதிரி , எதிர்காலத்தில் நம் குழந்தை இப்படி பர்ஸ்னாலிட்டியாக,  இன்னின்ன பரம்பரை நோய் தாக்காத, நம்மமாதிரி ! (ஙே) அறிவு ஜீவியா பிறக்கனும் என்பதை தீர்மானிக்கலாமாம்.



அது படி வெளிப்படையாக தெரியாத தகவல்கள் (Genome kid) மரபியல் நிர்ணயக் குழந்தைகள் ஏற்கனவே பிறந்தாச்சு என்பதுதான்.
ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் 2003 ல் முழுமையாகியது. அதன்படி எந்த எந்த கூறு இன்னின்ன செயல்களை நிர்ணயம் செய்கிறது என்பதை வரையறுத்து இருக்காங்க. மேலும்  இத்தோட முடிஞ்சது என்று இல்லாமல் அந்த ஆய்வு தொடர்கிறது.  2010 ல் இந்த் ஜீன் மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஊமையாகவோ, குள்ளர்களாகவோ, காதுகேட்காது, இருப்பவனின் குழந்தை பரம்பரை பரம்பரையாக அப்படியே பிறக்கனுமா என்ற அவர்களின் மனவருத்தம் போராட்ட அளவில் ஏற்பட இங்கிலாந்து அரசு இதற்கென சட்ட திருத்தங்களை செய்தது. (முழு விவரம் தெரியல)

 ஆங்கிலத்தில் InVitro Fertilisation (IVF) என்று சொல்றாங்க டெஸ்ட் டியூப் பேபி கேள்வி படுறோம் அந்த ப்ராசஸ்ல மரபணுவை திருத்தங்கள் செய்து விதைக்கிறார்கள். Pre-implantation Genetic Diagnosis (PGD) என்று இன்னொரு டெக்னாலஜியும் இருக்கு (selected embryos are implanted back into the mother's womb.)

இதில ஆபத்து என்னென்னா எல்லோரும் ஆண் குழந்தையே வேணும்னா என்ன செய்யறது.

டிசைனர் பேபி என்றால் என்ன  விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கு படித்து கொள்ளுங்கள்.

What is a designer baby?

Advanced reproductive technologies allow parents and doctors to screen embryos for genetic disorders and select healthy embryos.

In-vitro fertilisation or IVF

The fear is that in the future we may be able to use genetic technologies to modify embryos and choose desirable or cosmetic characteristics. Designer babies is a term used by journalists to describe this frightening scenario. It is not a term used by scientists.

Advanced reproductive techniques involve using InVitro Fertilisation or IVF to fertilise eggs with sperm in 'test-tubes' outside the mother's body in a laboratory. These techniques allow doctors and parents to reduce the chance that a child will be born with a genetic disorder. At the moment it is only legally possible to carry out two types of advanced reproductive technologies on humans. The first involves choosing the type of sperm that will fertilise an egg: this is used to determine the sex and the genes of the baby. The second technique screens embryos for a genetic disease: only selected embryos are implanted back into the mother's womb. This is called Pre-implantation Genetic Diagnosis (PGD).

Recently scientists have made rapid advances in our knowledge of the human genome and in our ability to modify and change genes. In the future we may be able to "cure" geneticy diseases in embryos by replacing faulty sections of DNA with healthy DNA. This is called germ line therapy and is carried out on an egg, sperm or a tiny fertilised embryo. Such therapy has successfully been done on animal embryos but at present it is illegal to do this in humans.

However, it is legal to modify the faulty genes in the cells of a grown child or an adult to cure diseases like cystic fibrosis - this is called body cell gene therapy.

Thursday, June 12, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

ஆச்சர்யம் ஆனால் உண்மை - நம் உடல் குறித்த தகவல்கள்.

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?

பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.


நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின்  சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.



காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம்.   அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.


சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு  வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.


ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.


ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.
10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்...(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )

சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க...ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா,  சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது
இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.

நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.

தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம்.  (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)

வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின்  கை தானா  அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.

நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.

நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!)   நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம்
ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான்  மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.

மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )

உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)

நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை  இழுத்து விடுவது இல்லை.  அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.

இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை  ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண்  சலிவா உற்பத்தியாகுதாம்.


பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர  206 ஆக
குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே
மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.


* * * * * * * * * * * * * * *

Tuesday, June 10, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - மூளை குறித்த தகவல்கள்.



  • நமது உடலின் எடையில் 2% மட்டுமே மூளையின் எடை. ஆனால் அது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிசனில் 20 % கிரகிக்கிறது.



  • மனிதனின் 18 வயசு வரைக்கும் மூளை வளர்ச்சி தொடரும் அதுக்கப்புரம் ?ஒவ்வொரு நாளும் மூளை செல்கள் இழப்பு நிகழும்.



  • நம் உடலின் மூளை நரம்பு செல்லின் தூண்டுணர்வின் வேகம் மணிக்கு 170 மைல்கள் எனக் கணக்கிட்டு இருக்காங்க.



  • ஒரு 10 வாட் பல்பு எரிவதற்கு தேவைப் படும் மின்சாரம் மூளைக்கு தேவை ,ஆச்சர்யம் ஆனால் உண்மை.(அதுக்காக கரண்ட்பெட்டில கைய வைச்சுராதீங்க ! )



  • என்சைளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களில் உள்ள தகவல்கள் அளவில் 5 மடங்கு நம் மூளை தகவல்களை சேமிச்சு வெச்சு இருக்கு, இந்த தகவல் உறுதியா தெரியல ஆனா விஞ்ஞானிக நம்பராங்க... (குத்து மதிப்பா இருக்கும் போல )



  • விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பது , நாம விழித்து இருக்கு போது செயல் படுவதை விட துங்கும் போது ஆதீத ஆற்றலில் செயல்பாடு எப்படி என்பதுதான்.



  • கை கால இடுப்பு வலி இதெல்லாம் அந்த அந்த பகுதியில் ஏற்படும் வலிதான் இல்லையா ஆனால் தலைவலி என்று சொல்வது  மூளையை சுற்றி இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்களில் திசுக்களில் ஏற்படும் வலிதானே தவிர மூளை வலியை உணர்வது இல்லை.  இன்னும் தெளிவா சொல்லனும்னா மூளையை தொட்டால் அதை உணர முடியாது.



  • இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும்  ரத்தக் குழல் தமனிகளை  (aorta) ஒன்று சேர்த்தால் ( diameter of a garden hose) அந்த விட்ட அளவு  வீட்டு தோட்ட திற்கு பயன்படுத்தும் குழாய் அளவு இருக்கும் 



  • பொதுவாச் சொல்றது மூளையை நாம 10% தான் பயன் படுத்துறோம்னிட்டு அப்ப  90% சும்மா இருக்குமா என்றால் இல்லை , எல்லா செல்லுமே வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கும்.



  • தூக்கம் மூளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் 11 நாட்கள் ஒருவன் தூங்காம இருந்தால் அவன் இறந்து விடுவான்.


* $ * $ * $ *  $ * $ * $ *

Sunday, June 8, 2014

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !
கிரேக்க வானியல் விஞ்ஞானியும், கணிதமேதையுமான அரிஸ்ட்டார்கஸ் (கி.மு 310 - 230 ) சாமோஸில் வாழ்ந்தவர்.

சூரிய மண்டலத்தில் சூரியன் தான் மையம் என்பதை 265 B.C ல் தெரிவித்தார். அதுமட்டுமல்ல இரவுக்கும் பகலுக்குமான கால வேறுபாடு சூரியன் தன்னைத்தானே சுற்றுவதும் சாய் கோணம் என்பதையும் விளக்கினார்.

முதன் முதலில் தியரிட்டிக்கலாக அண்டவெளி என்பது எப்படி இருக்கும் என்பதையும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவையும் சொன்னவர்.

அவர் வகுத்தளித்த தொலைவு தற்கால கணக்கீட்டிற்கு பெரிதும் ஒத்து வருகிறது.
நிலவுக்கும் பூமிக்கு இடையே உள்ள தொலைவைப் போல 19 மடங்குகள் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் இருக்கும் என குறிப்பிட்டார்.

ஆனால் உண்மையில் அது 390 மடங்கு தொலைவில் இருக்கு !!
ஆனால் தொலைவை நிர்ணயிக்க அவர் வகுத்த முறையில் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். (பார்க்க படம்)




சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.
அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது இல்லையா..?

அரைவட்ட நிலவின் ஒளியை வைத்து பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள கோணம் 87 டிகிரி என தீர்மானித்தார்    (Aristarchos).

ஒரு முக்கோணத்தின் கோணங்களின் கூட்டு தொகை 180 டிகிரி என்பதால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள கோணம் 3 டிகிரி.

சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.

அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது.


அரைவட்ட நிலவை வைத்து அவர் நிர்ணயம் செய்த கோணம் 87 டிகிரிகள், இன்றைய கணக்கீட்டின் படி அது 89.85 பாகைகள்.

ஆனால் தசம கோணத்திருத்தம் ஏற்புடையதே.  அக் கால கட்டத்தில் இருந்த கருவிகளின் துணையுடன் அவரின் கணிப்பு எப்படி என்பதே ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிலவு சூரியனை சுற்றுகிறது அதே சமயத்தில் பூமியும் சூரியனை சுற்றிக்கொண்ட்டே இருக்கு ஆனால் சமமான வட்டம் இல்லையே எந்த கால அமைவில் இந்த கணக்கீட்டை (சீசன்) எடுத்தார் என்பதையும் கருத்தில் கொள்ளும் போது வானியல் விஞ்ஞானிகள் வியப்படைகிறார்கள்.

wow...What a brilliant ancient Astronomers !!

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு
3,84,400 கிலோ மீட்டர்கள்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு :
149,600,000 கிலோ மீட்டர்கள்.

Monday, June 2, 2014

படுக்கைஅறை விளக்கு வெளிச்சத்தினால் உடல் எடை அதிகரிக்குமா ?



படுக்கை அறையில் சில பேருக்கு இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் தான் தூக்கம் வரும், பலருக்கு சிறிதளவு வெளிச்சம் கொடுக்கும் விளக்காவது எரிய வேண்டும்.  சிற்சிலருக்கு மட்டும் வெளிச்சமே தேவை இல்லை. நிம்மதியான உறக்கத்திற்கு அறையின் விளக்கு வெளிச்சம் அதிகமாக இருப்பது பாதிப்பு என்று சொல்கிறார்கள்.  அது தூக்கத்திற்கு இடைஞ்சல் மட்டும் என்று இல்லாமல் "ஓபிசிடி" எனப்படும் உடல் பருமனை அதிகரிப்பது குறிப்பாக பெண்களுக்கு என்பது கண்டிப்பாக ஆய்வுக்கு உட்பட வேண்டிய விசயம் தானே.

அதுபற்றிய ஆய்வினை சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொண்டார்கள், 16 வயதிற்கு மேற்பட்ட பலதரப்பட்ட வயதில் உள்ள 1 லட்சம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டாது.  அவர்களின் உணவு பழக்க வழக்கம், உடல் எடை, இடுப்பு அளவு அதிகரிப்பு, படுக்கை விளக்கு எரிவது குறித்த கேள்விகள் தொடுக்கப்பட்டன, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வந்தார்கள் ?

ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்றால் படுக்கை அறை வெளிச்சமாக இருப்பதோ, அல்லது இருட்டாக இருப்பதோ பெண்களின் உடல் எடை அல்லது ஓபிசிடி (obesity) பாதிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே அது.

ஆனால் பொதுவில் மனிதர்களுக்கு உறக்கத்திற்கு வெளிச்சத்தினால் பாதிப்பு உண்டு. அதாவது "நம் உடல் கடிகாரம் " பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப் படுகிறது.

உடல் கடிகாரம் ( Body Clock )என்பது எல்லோருக்கும் இயற்கை கொடுத்து இருக்கும் வரம். குறிப்பிட்ட நேரத்தில் விளிப்பு ஏற்படும்.  ஒரு நாள் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது மாதிரியே அவர்கள் எழுந்திருப்பார்கள்.  இது சின்ன வயசில் இருந்தே சிலருக்கு அமைந்து இருக்கும்.  அவர்களுக்கு அலாரத்தின் தேவையே இருப்பதில்லை. நம் உடலில் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோன் இந்த இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதுவுமே நமது பழக்க வழக்கம் தான் தீர்மானிக்கிறது.

                                                               * * * * * * *
 தொடர்புடைய பதிவுகள் :

தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்? 

தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும்

தூங்கா நகரங்களின்...தூங்கா மனிதர்கள்