Pages

Tuesday, June 10, 2014

ஆச்சர்யம் ஆனால் உண்மை - மூளை குறித்த தகவல்கள்.



  • நமது உடலின் எடையில் 2% மட்டுமே மூளையின் எடை. ஆனால் அது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிசனில் 20 % கிரகிக்கிறது.



  • மனிதனின் 18 வயசு வரைக்கும் மூளை வளர்ச்சி தொடரும் அதுக்கப்புரம் ?ஒவ்வொரு நாளும் மூளை செல்கள் இழப்பு நிகழும்.



  • நம் உடலின் மூளை நரம்பு செல்லின் தூண்டுணர்வின் வேகம் மணிக்கு 170 மைல்கள் எனக் கணக்கிட்டு இருக்காங்க.



  • ஒரு 10 வாட் பல்பு எரிவதற்கு தேவைப் படும் மின்சாரம் மூளைக்கு தேவை ,ஆச்சர்யம் ஆனால் உண்மை.(அதுக்காக கரண்ட்பெட்டில கைய வைச்சுராதீங்க ! )



  • என்சைளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களில் உள்ள தகவல்கள் அளவில் 5 மடங்கு நம் மூளை தகவல்களை சேமிச்சு வெச்சு இருக்கு, இந்த தகவல் உறுதியா தெரியல ஆனா விஞ்ஞானிக நம்பராங்க... (குத்து மதிப்பா இருக்கும் போல )



  • விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பது , நாம விழித்து இருக்கு போது செயல் படுவதை விட துங்கும் போது ஆதீத ஆற்றலில் செயல்பாடு எப்படி என்பதுதான்.



  • கை கால இடுப்பு வலி இதெல்லாம் அந்த அந்த பகுதியில் ஏற்படும் வலிதான் இல்லையா ஆனால் தலைவலி என்று சொல்வது  மூளையை சுற்றி இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்களில் திசுக்களில் ஏற்படும் வலிதானே தவிர மூளை வலியை உணர்வது இல்லை.  இன்னும் தெளிவா சொல்லனும்னா மூளையை தொட்டால் அதை உணர முடியாது.



  • இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும்  ரத்தக் குழல் தமனிகளை  (aorta) ஒன்று சேர்த்தால் ( diameter of a garden hose) அந்த விட்ட அளவு  வீட்டு தோட்ட திற்கு பயன்படுத்தும் குழாய் அளவு இருக்கும் 



  • பொதுவாச் சொல்றது மூளையை நாம 10% தான் பயன் படுத்துறோம்னிட்டு அப்ப  90% சும்மா இருக்குமா என்றால் இல்லை , எல்லா செல்லுமே வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கும்.



  • தூக்கம் மூளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் 11 நாட்கள் ஒருவன் தூங்காம இருந்தால் அவன் இறந்து விடுவான்.


* $ * $ * $ *  $ * $ * $ *

7 comments:

  1. இந்த மாதிரி பதிவுலாம் போடுறதுக்கு மூளை வேணும்ங்குறது இதன் மூலம் உருதியாகுது! நீங்க அதிர்ஷ்டசாலி சகோ! எனக்குலாம் இல்ல போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொன்னா எப்படி ? பட்டறிவு இல்ல எல்லாம் படிச்ச அறிவுதான் ஹி..ஹி

      Delete
  2. எவ்வளவு நல்லவர் பாருங்க இந்த மூளை மற்ற பகுதிகளின் வலி உணர்ந்து அதற்க்கு தீர்வளிக்கிறது... ஆனால் தன் வலி உணர்வதில்லை... ஹூம்..மூளை பற்றிய தகவல் அதை மூளை இருக்கறவங்க தான் படிக்கணும் நீ ஏன் படிக்கறேன்னு என் மூளை சொல்லுதுங்க..

    ReplyDelete
    Replies

    1. பார்தீங்களா...உங்க மூளை உங்களை எந்த அளவு ஆளுமை படுத்துது

      Delete
  3. //மூளையைத் தொட்டால் அதை உணர முடியாது///
    அறியாத செய்தி நண்பரே நன்றி

    ReplyDelete
  4. பல அறியாத தகவல்! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. mulai patri theriyatha thakavalkal sir nandri

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !