Pages

Saturday, February 28, 2015

தவளைகள் அழிந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள் ?


தவளைகள் சூழற் தகவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்.

 தவளைகள் இயற்கை அழிவுக்கு உட்படுமேயானால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான தடிமனான கோடு எனச் சொல்லலாம்.

உலக அளவில் [ Chytridiomycosis** ] ஸைட்ரிடையோமைகோஸிஸ் எனும் வியாதியால் பாதிக்கப்பட்ட தவளைகளில் 200 வகைகள் சுத்தமாக அழிந்து போய் விட்டது. அதே போல 40 சதவீத   நீர் நில வாழ்வினங்கள் இதனால் பாதிக்கப்பட்டு அழிவு நிலை நோக்கி போய் கொண்டிருப்பதாக ஒரு கணக்கீடு செப்புகிறது.

மேற்கு மலைத் தொடர் காடுகளில் (பகுதிகளில்) மட்டும் சுமார் 217 வகையான  தவளை இனங்கள் உள்ளன. மேற் சொன்ன பங்கஸ் வகை நோயினால் இவைகள் பெரும் பாதிப்பு அடையவில்லை எனச்சொன்னாலும் துறைமுகப் பகுதிகளில் வாழும் நீர் நில நிலை வாழ்விகள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இந்த நோய் கண்ட தவளைகள் இரண்டு வாரங்களில் மரித்து விடும்.

2004 ன் படி IUCN அறிக்கையின் படி இந்தியாவில் 60 வகை நீர் நில வாழ்விகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன  (13 are Critically Endangered, 27 are Endangered and 20 are Vulnerable).



பொதுவாக தவளைகள் அழிவுக்கு வழி வகுப்பவை
1. சுற்றுப்புறத் தூய்மை கேடு,
2. காடுகளை அழித்தல்,
3. நீர் மாசு அதிகரித்தல்

**Chytridiomycosis is an emerging infectious disease of the amphibians caused by Batrachochytrium dendrobatidis a water borne zoospore producing fungi

report any mass death of frogs to the nearest forest department or write to zooreach@zooreach.org / keerthi@zooreach.org / herpinvert@gmail.com

Saturday, February 21, 2015

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்
கர்பிணிகள் உடலில் செல் பறிமாற்றம் பற்றி இந்த பதிவு.

இதுபற்றி இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன 1. கருவுற்ற பெண் வயிற்றில் வளரும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் (குருத்தணுக்கள்) தாய்க்கு கடத்தப்படுகின்றனவா? 2. அதன் மூலம் பழுதடைந்த செல்கள் தாயிடம் புதுபிக்கப் படுகின்றனவா?

Can a pregnant woman get stem cells from her
baby? And can they repair damage in her body?

தாய் கருவுற்று இருக்கும் போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ப்ளஸென்ட்டா (placenta) வழியாக செல்கள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன.  ஒரு ஆய்வின் படி 80 சதவீத தாய்மார்கள் செல்லுக்கு "Y " குரோமோசோம்கள் ஆண் குழந்தையிடம் இருந்து கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் அவை தாயின் இரத்த செல்களில் கலக்கின்றன.  உடம்பில் இயற்கையாக இருக்கும் இம்யூனல் சிஸ்டத்தின்படி தற்காப்பு நடவடிக்கையாக சில மணி நேரங்களில் அவை அழிக்கப் படுகின்றன.  

ஆனால் முழுமையாக அழிக்கப்படாத திசுக்கள் தாயின் உடலில் ஒரு பகுதி திசுவாக தங்கிவிடுகின்றன.

அதே போல குழந்தையின் உடம்பிலும் தாயிடம் இருந்து கடத்தப்படும் செல்கள் திசுக்களாக குழந்தையின் உடம்பில் தங்கிவிடுகின்றன.  தாயிடம் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட செல்கள் குழந்தையின் உடலில் அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் குழந்தையின் உடலில் குடிபுகுந்து விடுகிறது. அதாவது மரபணுகள் விதைக்கப்படுகின்றன.
 இந்த சுழற்சியை உற்று நோக்கினால் பரம்பரை பரம்பரையாக இந்த செல் கடத்தல் நடத்தப்படுகிறது.  எலிகளிடத்திலும் ஏன் மனிதர்களிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் தாயின் லிவர், கிட்னி, மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் குழந்தையிடம் இருந்து கடத்தப்பட்ட மரபணு செல்கள் காணப்படுகின்றன. அந்த புதிய செல்கள் தாயின் உடம்புச் செல்களை போலவே வளர்கின்றன.


இன்னொன்றை சிந்தித்துப்பார்த்தால் மனித உடலில் பல பரம்பரை செல்கள் இருக்கும் போல தெரியுதே. (humans involve cells from several generations)
இத்தகைய செல் பறிமாற்றத்தால் தாய்க்கு இம்யூனல் சிஸ்டம் பாதிப்பு ஏற்படுகிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட ஆய்வில், ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களில் 20 ல் 12 பேருக்கு செல் பறிமாற்றத்தின் காரணமாக தைராய்ட் சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபனமாகியுள்ளது. (குழந்தை பேற்றுக்கு பின் குண்டாகிப் போவதற்கு இதுதான் காரணமோ )