Pages

Monday, July 2, 2018

தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?

தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?

அறிவியல் ஆய்வாளர்கள் ,விஞ்ஞானிகள்   சிலர் விநோதமான ஆராய்சிகளை செய்து பார்பார்கள். மூளை இயக்கம்  சம்பந்தமானவை கொஞ்சம் ஆழமானவைகள். 

சமீபத்தில் பெங்களுரு டாக்டர்கள் வங்க தேசி ஒருவருக்கு( Taskin Ali A 31 )மூளை நரம்பு சிகிச்சை செய்தார்கள். நோயாளி அப்போது சுய நினைவுடன் கிதார் இசைக்க வேண்டி இருந்தது. மண்டை ஓட்டை திறந்து வைத்து அசைவற்று போயிருந்த விரல் இயக்கத்தை சரி செய்தார்கள்.  நவீன டெக்னாலஜியில் இது சாத்தியமாகி இருக்கிறது.

இப்படிப் பட்ட மனித முளை சிகிச்சை களுக்கு உயிரினங்களை முதற்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள்.. தெரிந்ததுதான்.

குளிர் ரத்த பிராணியான முதலை இசை கேட்டால் அதன் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன? இந்த கேள்வியை முன்வைத்து ஓர் ஆய்வை செய்தார்கள். எங்கு? ஜெர்மனில் போஃகும் யுனிவர்சிட்டியில் [Biopsychology at Ruhr-Universität Bochum (RUB)] டாக்டர் ஃபெளிக்ஸ் தலைமையில்.

பங்சனல்  MRI ஸ்கானிங் தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி பல கட்டங்களில் வித விதமான சங்கீத (இசை )கோர்வைகளை அவை கேட்டால் அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தார்கள்.

முதலைகளுக்கு 200 மிலியன் ஆண்டு கால வாழ்வியல் வரலாறு (?!) கொண்டவை. இவைகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமான மூதாதைகள்,முன்னோடிகள் . டினோஸர்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பியல்பு இவைகளுக்கு உண்டு.



சங்கீதங்களை கேட்கும் விலங்குகள், பறவைகள் அவற்றிடையே ஏற்படும் மாற்றங்கள் பத்தி ஏற்கனவே ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக கோபத்தில் இருக்கும் முதலை கருணை ததும்பும் இசையை கேட்டால் சாந்தமாகியும், குத்து இசைக்கு குதூகலமாக்கவும், சோக சங்கீதத்திற்கு சோகமாகவும் தம்மை வெளிப்படுத்தின.

மேலும் இது முதல் கட்ட ஆய்வு என்றும் மேலும் பல கட்ட சோதனைகளை செய்யவேண்டுமாம். உலகின் வெவ்வேறு இடங்களில் வாழும் முதலைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

தேனீக்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியுமா?


தேனீக்களை ஆய்வுக்கு உட்படுத்துவது அவற்றின் நடவடிக்கைகளை பதிவு செய்வதெல்லாம் சவாலான விடயங்கள்.  எண்கள் எண்ணிக்கை அவைகளுக்கு தெரியுமா? எப்படி ஆய்வு செய்வது?

பெரிய கூண்டுகளுக்குள் தொடர்சியான பயிற்சிகளுக்கு அவைகளை உட் படுத்துகிறார்கள்.  எண்களை கண்டு கொள்ளும் பயிற்சியில் சரியாக செய்தால் பாராட்டாக தேன் கொடுப்பார்கள். இப்படியான பல கட்ட சோதனைகளில் பூஜ்ஜியம் (Zero) அவைகளால் இனங்கான முடியுமா? இரண்டு என்றால் 2 பொருட்கள், 5 என்றால் ஐந்து என்ற எண்ணிக்கைகளை அவைகள் கண்டு கொண்டன.  2ஐ விட 5 பெரிதா என்பதையும் அவைகள் அடையாளம் காட்டின. அப்படியாயின் ஐந்தை விட ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியம் சிறியது மற்ற எண்களை விட ஒன்றுமே இல்லாத அது சிறியது என்பதை சுட்டி காட்டின.  ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?



இன்னொன்று அதை விட ஆச்சர்யமான தகவல் மனித குழந்தை எண்களை கற்றுக் கொள்வதை விட (கால கணக்கு) தக்குணூண்டு மூளை கொண்ட இவைகள் சீக்கிரமே கற்று தம் திறமையை நிரூபித்தன.  



#### #### #####

Saturday, March 17, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)

பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்

சென்ற பதிவில் #KR  ஒரு கருத்தை முன் வைத்தார் குயில், முட்டையை அடைகாக்காமல் காகத்தின் கூட்டில் போட்டு விடுவது தெரியாத முட்டாளா காக்கை இருக்கே ? என்று மனிதர்களை, அவர்களின் செயல்களையும் கூட ஞாபக வைத்து  அடையாளம் கண்டு கொள்கின்றன, அப்படியாயின் இந்த முட்டை மாறுபாட்டை அவைகளால் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதே என்ற கேள்வி எழுகிறது.   அடை காத்து பிறந்த பின் குயில் குஞ்சானது அதனோடு இருக்கும் காக்கைகளை போலவே சப்தமிட்டு நடிக்கிறதா? தெரியவில்லை.   தாய் குயில் ஒரு கட்டத்தில் அதை தன்னோடு கூட்டி சென்று விடுகிறது என நினைக்கிறேன்.

காக்கைகளின் புத்திசாலி தனத்தை அது கட்டும் கூட்டில் பயன்படுத்தும் பொருட்களை( டூல் ) பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

மனிதர்களில் உணவு பழகக்கம் அசைவம் / சைவம் ( ?! ) போல காக்கைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு.


நியூசிலாந்தின் கியா (கிளி) பறவைகளிடம் ஒரு ஆராய்சி செய்தார்கள் முடிவில் இவைகள் கிப்பன், ஆந்த்ரபோட் குரங்குகளை காட்டிலும் புத்தி சாலியானவை என்று நிரூபமானது.  நியூசிலாந்து வாசிகள் ஒரு காலத்தில் இவைகளை சுட்டு தள்ளினார்கள் காரணம் என்ன வென்றால் இவைகள் ஆட்டுகளை (ஷீப்) கொன்று விடுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவைகள் "சைவ" பட்ஷிணிகள்.


பறவைகள் ஞாபக சக்தி ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வலசை பறவைகள் நாடு விட்டு நாடு கடல் கடந்தும் வருவதை பார்க்கிறோம் எதற்காக வருகின்றன என்பதில் முக்கிய காரணம் இனப் பெருக்கத்திற்காக என்று சொல்லலாம்.  அப்படி கண்டம்  விட்டு கண்டம் வந்த பறவைகள் இங்கே குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பின் தம் தாய் நாட்டிற்கு திரும்பி விடுகின்றன.  இப்படி வலசை வரும் பறவைகள் வருடா வருடம் எப்படி ஒரே பகுதி களுக்கு திரும்ப வருகின்றன "கூகிள்  மேப்" போல அவைகள் இடங்களை பாதைகளை தக்குனூண்டு மூளையில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன.   குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அவற்றின் வருகை தொடர் கதையாகிறது.  தாய் பறவையில் இருந்து குஞ்சுகளுக்கு என ஞாபகங்கள் கடத்தப் படுகின்றன.

மனிதன் என்ன செய்கிறான் அவைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அழித்து விடுகிறான் தாம் பிறந்து வளர்ந்த இடத்தை காண ஆவலுடன் வந்த பறவை காணாமல் போன வரண்ட குளங்களை கண்டு ஜெர்க்காகிப் பின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.  ஒரு கட்டத்தில் அவைகள் திரும்ப வராமல் கூட போகலாம்.

மனித குழந்தை கற்றுக் கொள்ளும் காலத்தை விட பறவை குஞ்சுகள் அவற்றின் தாய் பறவையிடம் வெகு சீக்கிரமாக வாழக் கற்றுக் கொள்கின்றன.  அந்த வகையில் மனித குழந்தை முட்டாள் தான்.


இரண்டு குயில்கள் சப்த மிட்டு கொண்டிருந்தன நீண்ட நேரமாக என்னவென்று போய்ப் பார்த்தால் தாய் பறவை குஞ்சிற்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தது.  கிளி,மைனா, சிட்டுகள் மற்ற பாடும் பறவைகளும் இப்படியாக   சங்கீதத்தை தம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகின்றன.

பறவைகள்,விலங்குகள் சப்தமிடாத பகுதியில் மனிதனை வாழச் சொன்னால் அந்த கூட்டம் ஜோம்பீஸ் ஆக மாறிப் போய்விடும்.


சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன் பறவைகள் முட்டைகளை நிலையாக ஒரே மாதிரி வைத்து அடை காப்பதில்லை முட்டைகளை திருப்பி திருப்பி வைத்து அடை காப்பதாக இவற்றை எப்படி கற்றுக் கொண்டன சந்ததிகளுக்கு கடத்துகின்றன? அவற்றின் ஜீன் களில் எழுதப் பட்டிருக்கலாம்.

பறவைகள் பலவிதம் - பகுதி 5

பறவைகளின் முட்டை ஏன் ஒரே மாதிரி இல்லை?

பெரும்பாழும் "வெள்ளை லகான் கோழிகள்" செயற்கை கருவூட்டல் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன  இவற்றின் முட்டைகள் (ஓவல்) நீள் வட்ட வடிவில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கின்றன.  மனிதன் உண்பதற்காகவே வளர்க்கப் படும் பறவை இது.   இதே போலவே மற்ற பறவைகளின் முட்டை இருக்குமா? என்றால் இல்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான முட்டைகளை இடுகின்றன.

இங்கு இன்னொன்றை சொல்லி விடுகிறேன் ஆரம்ப காலங்களில் செயற்கை கருவூட்டல் செய்வது முட்டைகளை சாப்பிடுவதற்காக அல்ல. சண்டை கோழிகளை உருவாக்குவதற்காக மட்டுமே இருந்தது.

சின்ன பறவை சிறியது பெரிய பறவை பெரியதாக முட்டை இடும். அதிலென்ன என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு நிறம் அவைகள் உண்ணும் உணவை பொருத்து அவற்றிற்கு நிறங்கள் அமைந்திருக்கலாம். அது அதனது ஜீனை பொறுத்தது என்று எளிதில் சொல்லி விடலாம்.
மலை சிகரங்களின் பொந்துகளில்  வசிக்கும் பறவைகளின் முட்டை எளிதில் உருண்டு போகாதபடி சமச்சீர் எடையோடு இருக்கின்றன.
வேட்டை திறன் பெற்ற  கழுகுகள் , பெரிய ஆந்தைகள் (Brown hawk-owls) முட்டைகள் உருண்டை வடிவம்.



நீண்ட தொலைவு பறக்கும் பறவைகளின் முட்டைகள் வடி வத்திற்கும் பறக்காத (கிவி, ஆஸ்ட் ரிச்) பறைகளின் முட்டைகளும் பெருமளவு வித்தியாசப் படுகின்றன.  அதே போல குஞ்சு பொரிக்கும் காலமும் வித்தியாசப் படுகின்றன.


குயில் தன் முட்டையை காக்கை கூட்டில் வைத்து தந்திரமாக அடை காத்து விடுகிறது.

பறவைகள் முட்டையை ஒரே போக்கில் வைத்து அடை காப்பது இல்லை ஒரு நாளில் 2 - 3 முறைகள் முட்டைகளை உருட்டி அடை காக்கின்றன.
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.

பறவைகள் பலவிதம் - பகுதி 4

உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.

இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.

காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை.  முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின்  சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன்.  இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.

கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.

ஒரு வரலாறும்  உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.

சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று  அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார்.  அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.

பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால்  உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன.  பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை  அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும்.  அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.


இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது.  இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை.  சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை. 

Monday, February 5, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 3 (சலீம் அலி)

சலீம் அலி (1896-1987)

இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)



கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

Sunday, February 4, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 2

#பறவைகள் #பலவிதம் Part 2
##############

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.

Tuesday, January 30, 2018

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.