Pages

Thursday, July 26, 2012

வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]



அவர் பதிவுலக பிரபலம் என்பதை விடவும், சிறந்த பேச்சாளர். ரொம்ப தூரமல்ல காரமடையில் இருந்து வட கோவை வரைக்குமான ரயில் பயணத்தில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போ அவர பத்தி எனக்கு சுத்தமா தெரியாது.

அதுக்கப்புரம் அவரின்  பேச்சு மேடைகளுக்கு அடிக்கடி போனேன்.  அவரின் பேச்சு மெய் மறந்து கேட்கச் செய்யும். கணீரென்ற குரலில் சரளமான பேச்சு எதுகை மோனையுடன் நாட்டு நடப்புகளுடன் சமூக அக்கரை தொனிக்க பேசுவார்.

முக்கியமா பெண்களின் முன்னேற்றம், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், நவீன நாகரீகத்தில் அவங்களோட சமூக பங்கு. தடையர தாக்கு இப்பிடி. அவருக்குன்னு பேஸ் புக்ல பெண்கள் கூட்டமே இருக்கு. அவருக்கு பத்தாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட பதிவர் வட்டத்திற்கு அவரை பேச அழைக்கலாம் என்று ஒரு தினம் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் சர்பரைசா இருக்கட்டுமேன்னு போன் செய்யவில்லை.

கூச்சத்துடன் நான் அடித்த அழைப்பு மணிக்கு, முதலில் குரைப்பு சத்தத்துடன் வரவேற்றது அவங்க வீட்டு நாய்.

வளையல் கை, ஜன்னல் திறந்து " யாருங்க ?"
நான்..சுருக்கமாக சொன்னேன்.
" உள்ள வாங்க..."   கதவு திறக்க தயக்கத்துடன் நுழைந்தேன்.

"அவரு வெளியூர் போயிருக்கார்..ஒரு நிமிசம்.."  சோபாவை காட்டிவிட்டு சமையலறையினுள் நுழைந்து விட்டாள்.

ஓழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட வார சஞ்சிகைகள்..முன்பிருந்த டீபாயின் மேல் அன்றைய செய்திதாள்கள் காற்றில் பட படத்தன. .

காபி கோப்பையுடன் வந்தாள். "அவரு இல்லாதப்ப வெளி ஆளுங்கள எப்பவும் உள்ள கூப்பிட மாட்டேன்.. அவருக்கு பிடிக்காது.  நீங்க என்னோட பெங்களூர் பிரதர் மாதிரியே இருக்கீங்க..." சிரித்தாள்.

மனதில் பட்ட சந்தேகங்களை உடனே கேட்டு விடுவது எனது வழக்கம்.

கேட்டேன்... " உங்க படம் ஏதும் செல்ப்ல இல்ல.. எல்லாம் அவரோட படங்களும் கோப்பைகளுமா இருக்கு..."

"ஒரு நிமிசம்..."

உள்ளறைக்கு சென்றவள் கைகளில் அவர், அவள், மகள் சிரிக்கும் புகைப்படத்துடன் வந்தாள்... "இது ஏற்காடு போயிருந்தப்ப எடுத்தது.....  அவரோட கூட்டங்களுக்கு நாங்க போறதில்ல.அவரும் கூப்பிட மாட்டார்."

அவரு, முன்னாடி வைக்க வேண்டாம் இதெல்லாம் பர்சனலுனு செல்லிட்டார்.

"நீங்க இப்படி.. கேட்டதும் எனக்கு தாங்கல... "

சட்டென அவள் விழிகளின் ஓரத்தில் லேசாக துளிர்த்த கண்ணீரை கவனிக்க தவற வில்லை.

நாக்கில் காஃபி கசந்தது. காலி கோப்பையை வைத்தேன்.

சரி வரேங்க...கேட் வரை வந்தார்.

சூரீரென்ற வெயில் முகத்தில் அடிக்க. சில அடிகள் நடந்திருப்பேன்.
 "நீங்க வந்த விசயத்த சொல்லவா ..? "

தலை அசைத்து...புன்னகைத்தேன்.  "வேண்டாம் போன்ல பேசிக்கரேன் "

கீரீச்சிடும் கேட்டை என் எண்ணங்களோடு சேர்த்து சார்த்தி விட்டு நடந்தேன்.

*******************************************************************************

Wednesday, July 18, 2012

துணுக்குகள்..


குளிர் காலங்களை விட வெயில் காலங்களிலேயே நம் தலைமுடி வேகமாக வளர்கிறது. அதனால் தான் சம்மர்ல சம்மர் கட்டிங்கிற்கு மவுசு..!


பெரியவங்கள காட்டிலும் குழந்தைகள் கண் சிமிட்டுவது குறைவு. அதுவும் குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திற்கு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சிமிட்டல்களே போடுகிறது.   இன்னொன்னு கவனிச்சிருக்கீங்களா உங்க கண்சிமிட்டல பார்த்து அப்பவே கண்ணடிக்க பழகிருதுங்க இந்த காலத்து சுட்டீஸ்.


மண்டை எழும்பு 22 எழும்புகளின் கூட்டு.


ஜப்பானியப் பெண்கள் சாராசரியாக 80 வயசு வரைக்கும் வாழ்கிறார்கள். [ கொடுத்து வைத்த கணவன்கள்..]


மூளையில் உள்ள செல்கள் திரும்ப உருவாவது இல்லை இந்த செல்கள் செத்து போனா போனது தான்  [ ... இரு..க்கும் ஆனா இருக்காது...]


வாசனை நமது நாக்கிற்கு சுவையை உணர்த்துகிறது. சளி பிடித்திருக்கும் போது டேஸ்ட் பிடிப்பதில்லை...இதுவும் ஒரு காரணம்.


போரன்சிக் (தடயவியல்) வல்லுனர்கள் ஒரு முடியை மட்டும் வைத்துக்கொண்டு அது இருந்த இடம் ஆணா, பெண்ணா, என்ன வயது உடல் நிலை எப்படி இருந்தது,  அவன் உடலில் பாய்சன் இருந்ததா இப்படி பல விசயங்கள புட்டு புட்டு வைப்பார்கள். [ முடி போனா ... அப்படி சுலபமா எடுத்துக்கமாட்டாங்க.]




வாந்தி வருவதற்கு முன் அதிக உமிழ்நீர் வாயில் சுரப்பது வயிற்றிலிருந்து வெளிவரும் அதிக ஆசிட் நம் பல்லை பாதிக்க கூடாதுன்னுதான்.


ஒன்று போலவே இருக்கும் டிவின்ஸ் பலபேருக்கு DNA ஒன்று போலவே இருக்கும் ஆனா கைரேகை வேர வேர தான்.


கவனிச்சு பாருங்க உங்க நடுவிரல் நகம் மட்டும் மத்த விரல்களின் நகத்தைவிட வேகமா வளரும்.


கோலா கரடிகளின் காலடித் தடமும் மனிதனது காலடி தடமும் அநேக சமயங்களில் ஒன்று போலவே இருக்கும்.


85 சதவீத மனிதர்களாலே தங்கள் நாக்குகளை குழல் போல மடிக்க முடியும் மீதி 15 சதவீதம் பேருக்கு ஊ..கூம்.


Saturday, July 14, 2012

புதிய ஆய்வுகள் - நீர் சிலந்தி, ரோபோ கோளம்


அபூர்வ நீர் குமிழ் சிலந்தி [ Aqua Bell Spider ]

சிலந்திகளில் பல வகைகளை நாம் கேள்விபட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம்.  தொன்னை மர சிலந்தி மற்ற வகையை காட்டிலும் பெரிதாக அதிக ரோமங்களுடன் இருக்கும். விச சிலந்திகளும் உண்டு.

புது வகை சிலந்திகள் பற்றி ஜெர்மன் மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆராய்சி மேற்கொண்டனர்.

அதில் நீரில் வாழும் ஒரு வகை சிலந்தி அபூர்வமானது. இதை நீர் மணி குமிழ் சிலந்தி என்று குறிப்பிடுகின்றனர்.

சிலந்தி வாழ்வதற்கு ஆக்ஸிஜன் அவசியம், அப்படி இருக்கும் போது இந்த சிலந்தி எப்படி நீரினுள் இருக்கும் ?.

அது நீர் குமிழ் [பப்பிள்] போன்ற கூட்டை நீர் மேல் மட்டத்தில் உருவாக்கி அதனுள் இருந்து கொண்டு நீருக்கு கீழே சென்று வாழ்கிறது.  முதற்கட்ட ஆய்வில் 20 அல்லது 40 நிமிடங்கள் நீரினுள் இருக்கும் என அனுமானித்தார்கள். ஆனால் இந்த நீர் குமிழானது மீனுக்கு எப்படி செவுள் உபயோகித்து ஆக்ஸிஜன் பெறுகிறதோ அதே போன்று செயல்படுவதாகவும் 24 மணி நேரங்களுக்கு அது நீருக்கு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் இறுதி கட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


பறக்கும் ரோபோகோளம் [ Flying Robotic Sphere ]


ஜப்பானிய பாதுகாப்பு மைய எஞ்சினியர் (ப்யூமியூகி ) ஒருவர் புதுவடிவ ரோபோ கோளத்தை கண்டுபிடித்துள்ளார்.

 இதன் பயன்பாடு சுரங்கம் மற்றும் இயற்கை சீரழிவினால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொள்பவர்களை காப்பற்ற உதவும் உழங்கு வான ஊர்தி போல பறக்கும் தானியங்கி ரோபோ கோளம்.  

கூண்டு போன்ற இதனுள் அதி நவீன கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.  ரிமோட்டால் இதை இயக்கலாம். இது மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது எதன் மீதாவது மோதினாலும் சுதாரித்து பறக்கக்கூடியது.


Thursday, July 12, 2012

அபூர்வ பறவை ககபு [KaKapo ]




ககபு [KaKapo ] எனும் பறவையின் வாழ்விடம் நியூசிலாந்து.
ககபு வால்  பறக்க இயலாது. இதன் அதிக எடை.  மற்றும் தகவமைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் இவை பறக்கும் தன்மையை இழந்தன.   இவை கிளி இனம்.  ஆந்தையை போன்ற அலகுகள் கொண்டது. இதன் வழுவான கால்களால் அடர்ந்த காட்டில் நடந்தே இறை தேடுகிறது,  இரவில் மட்டுமே. கால்களை கொண்டே உயரமான மரங்களிலும்  இவை ஏறுகின்றன. 

 200 வருடங்களுக்கு முன் பரவலாக இருந்த இவை மனிதர்களாலும், மற்ற விலங்குகளாலும் அழிக்கப்பட்டுவிட்டன.  எஞ்சிய 50 பறவைகளை 1995 ல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிக எடைகொண்ட பெண் பறவை இடும் முட்டையில் இருந்து ஆண் குஞ்சுகளே பொறிக்கும். மேலும் வருடத்திற்கு ஒரிரு முட்டைகளை மட்டுமே இடும்.

இவற்றின் இனப்பெருக்கத்திற்காக இவைகளை ஆஸ்கர், கோட்பீஸ்  போன்ற சிறு தீவுகளில் காட்டில் விடப்பட்டன.  இவற்றில் ரோடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டன.  பறவை ஆர்வளர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவில் இவற்றை கண்காணித்தனர். இவற்றின் குஞ்சுகளுக்கு எலெக்ட்ரிக் போர்வை, போதுமான ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டன இவை அனைத்தும் இரை தேட சென்ற தாய் பறவை திரும்புவதற்குள்ளாக.

18 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது ஆதாவது மூன்று மடங்கு.

பறவை ஆர்வலர்கள் செய்த சேவை பாராட்டத்தக்கது.

Tuesday, July 10, 2012

துணுக்குகள்...


என்சிலடஸ் [Enceladus] என்பது சனி கோளினுடைய ஒரு நிலா (துணைக்கோள்) இதில் ஐஸ் எரிமலை உண்டு எரிமலை குளம்பு [லாவா] தண்ணீராக தெறிக்கிறது

ஒரு நாளில் பூமி 2.4 மிலியன் கிலோமீட்டர் பயணிக்கிறது,  சூரியனை சுற்றி.

யுனிவர்ஸின் அளவு மிகப்பெரியது கற்பனைக்காக ஒரு பெட்டியாக [பெட்டியின் நீளம் 32 கி.மீ.]  கற்பனை செய்யுங்கள் அனைத்தும் அதனுள் இருக்கும் ஒரு சிறு மண்துகள்கள்.

ஜீபிடரில் 1நாள் என்பது பூமியின் 10 மணி நேரத்திற்கு சமம்.


விண்வெளியில் இருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னலுக்கு "WoW" என்று பெயர் 1977 ல் விவரிக்க முடியாத சிக்னல் ஆதாரம் கிடைத்தது. அதன் பிறகு இதுவரை இல்லை.


தென் ஆப்பிரிக்காவின் [Quiver Tree] குய்வா மரம் தனது கிளைகளை இலை உதிர்ப்பது போல உதிர்த்துக் கொள்கிறது [ புத்திசாலியான மரம் ]


பொலீவியாவில் ஒரு மூலிகை தாவரம் உள்ளது இது பூ பூக்க 80 முதல் 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.



உலகத்தில் அதிக விஷமுள்ள தாவரம் [ Castor Bean ] கேஸ்டர் பீன் 70 மைக்ரோ கிராம் ஒரு மனிதனை கொள்ளக் கூடியது.  இது ராட்டில் [பாலைவன ] பாம்பைவிட 12000 மடங்கு அதிக விஷம் உள்ளது.


ரெட்வுட் மரம் வெளிப்புரத்தில் எரிவதில்லை. அதன் உள்பகுதி மட்டுமே எரியும் தன்மை கொண்டது.


வீனஸ் ப்ளைடிராப் என அழைக்கப்படும் பூச்சியுண்ணும் தாவரம் அரை மணியில் ஈ யை (அ) பூச்சியை கொல்கிறது  அதை 7 நாட்களில் ஜீரணம் செய்து ஸ்வாகா பன்னுகிறது.

சில பைன் மர வேர்கள் 48 கி.மீ நீண்டு செல்லக்கூடியது.

இசையை கேட்டு சில தாவரங்கள் விரைவில் வளர்கிறது இதற்கு ஆராய்சியாளர்கள் சிறந்த உதாரணமாக  ' Bat out of Hell "  என்ற இசையை குறிப்பிடுகிறார்கள் பாடிய பாடகர் மெட்லாஃப் [ Meatloaf ]


Wednesday, July 4, 2012

[Nazca Lines] அழியாத கோட்டுருவங்களும்...அழிந்துபோன நாஸ்க்கா இனமும்...


[மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது. இயற்கை வளங்களை சுயநலத்திற்காக சுரண்டுவது. ஆறுகளை குப்பை மேடாக்குவது. 
நம் நிலமும் இதுபோல நீரில்லாத பாலைகளாக மாறாமல் காக்கப்படவேண்டும்.   இக் கட்டுரை...ஒரு சிறு சிந்தனை துளி ] 









" நாஸ்க்கா " பெரு நிலப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி இனத்தவர்கள்.  
"பெரு"  தென் அமெரிக்காவின் மேற்கு கரையோர நாடு.  
இவர்களை இகா வம்சா வழியினர் எனவும் சொல்கிறார்கள். 

நாஸ்கா எனும் நதி பெருவில் கொச கொச வென்று மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதிக்கூட்டம் என்று சொல்லலாம்.  இந்த நதிகள் மற்ற நதிகளில் இருந்து வித்தியாசமானது தீடீரென்று நிலத்தினுள் சென்றுவிடும் இன்னோர் இடத்தில் நிலத்தில் இருந்து வெளியில் புறப்பட்டு செல்லும் விநோதம் மிக்கது.  கற்பனை செய்து பாருங்கள் நிரந்தரமான நதியல்ல பல இடங்களில் புற்றீசல் போல புறப்பட்டு மறையும்.   இந்த பெரும் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இனமே நாஸ்க்கா என அழைக்கப்படுகிறது.  


இவர்களின் காலம் 100 AD லிருந்து 750 AD அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இனம் என சொல்லலாம்.


ஒரு நாகரீகம் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து ஓரளவிற்கு மதிப்பிட்டுவிடலாம்.






இவர்கள் உருவாக்கிய செராமிக் கைவினைப்பொருட்கள் மிக அழகானது மட்டுமல்ல தொழிற்சிறப்பு வாய்ந்ததாகவும், துணி வகைகள் தரமிக்கதாகவும் அகழ்வாராய்சியினர் மதிப்பிடுகின்றனர்.




"ப்யூகியோஸ் " என்ற நிலத்தடி நீர் ஊற்றுக்களை அமைத்திருந்தனர்.  நம்மூர் கிணறு போல ஆனால் சுழற்படியில் கீழே இறங்கி செல்லவேண்டும். இது இன்றும் செயல் பாட்டில் இருக்கிறது.  


"ப்ரோசோபிஸ் பாலிடா "  எனும் ஒருவகை மரங்கள் தான் பஞ்சு உற்பத்திக்கும் நிலத்தின் உறுதி தன்மைக்கும் காரணாமாயிருந்தது.  ஒரு கட்டத்தில் இந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன.  இதனால் தீடீர் வெள்ளப் பெருக்கினால் இந்த இனத்தின் ஒரு பகுதியினர் அழிந்து போயிருக்கலாம்.


மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சீரழிப்பதன் விளைவு என்னாகும் ?  ... ஆம், ஒரு கால கட்டத்தில் அற்புதமான நிலப்பகுதி அற்பமான நிலப்பகுதியாக மாறியது.  


அது ஒரு வறண்ட பூமியாக சொற்பமான தண்ணீருடன் ஏறக்குறைய பாலைவனப் பூமியாக போய்விட்டது. ஆனாலும் எஞ்சிய இந்த இனம் தொடர்ந்து பல இடர்பாடுகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  


இவர்களின் தீவிர இயற்கை கடவுள் வழிபாடும் இந்த இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாக சொல்கின்றனர்.  


அது என்ன தீவிர வழிபாடு ?...நரபலி தான்.   
குவியல் குவியலாக தலை வெட்டப்பட்ட மண்டை ஓடுகள் அகழ்வாராய்சியினருக்கு கிடைத்தன.   அதிலும் சில மண்டை ஓடுகள் நடு நெற்றியில் துளையிடப்பட்டு கிடந்தன. [ நெற்றிப் பொட்டுக்கு பதில் ஓட்டை என கற்பனை செய்து கொள்ளுங்கள் ] எதற்கு ?  லாவகமாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம் அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளலாம். 


இவை ஒரு பரிசுப்பொருள் போல பாதுகாக்கப்பட்டிருந்தன.   பெரும்பாலான மண்டை ஓடுகளின் நடுப்பகுதிகள் இல்லை.  அவைகள் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய செறாமிக் கிண்ணங்களாக கிடைத்திருக்கின்றன [ பார்க்க படம் ]



நாஸ்க்கா கோடுகள்...


இன்றும் உயர் பாலைவனப்பகுதியாக இருக்கும் இந்த பகுதியில் நாஸ்க்கா இன மக்கள் உருவாக்கிவிட்டுப் போன பல உருவங்கள், வரைப்படங்கள் போன்ற கோடுகள் என 1500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இரைந்து கிடக்கின்றன. 










தரையில் இருந்து இவைகளைப் பார்த்தால் உருவங்கள் புலப்படுவதில்லை. ஒவ்வொரு படமும் 200 முதல் 500 அடி நீள அகலங்களில் விஸ்தாரமாக இருக்கின்றன. 


ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டுப்படங்கள், திமிங்கிலம், மீன், சுருள் வட்டங்கள், சிட்டுக் குருவி,கருடன், கடற்பாசி, சிலந்தி, குரங்கு, மரம், பூ, உடும்பு, ஓணான், கொக்கு, கைகள்,ஏலியன்ஸ் இப்படி இதன் உருவங்கள் நீள்கின்றன.


படங்கள் தவிரவும், விமான ஓடு பாதை போல பட்ட பட்டையான கோடுகளும் கிழக்கு மேற்க்காக, தென் வடலாகவும் வரையப்பட்டுள்ளன.










இவையெல்லாம் எப்படி வரையப்பட்டன ?  
எதற்கு வரையப்பட்டன ? 
இத்துணை காலம் எப்படி அழியாமல் இருந்தன ? 
எப்போது அறியப்பட்டது ? 
இப்படி பல கேள்விகள் பார்க்கும் அணைவருக்கும் மனதில் தோன்றும்.


தரையில் ஒரு சிறிய படம் சுலபமாக வரைந்துவிடலாம் ஆனால் அதையே சங்கர் சார் திரைப்படத்தில் வருவது போல பிரம்மாண்டமாக வரைய வேண்டுமானால்...சரி வரைந்த படத்தை சரிபார்ப்பது ? இதன் முழு பரிமாணத்தையும் வானத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாம் எப்படி சாத்தியம் ?...ஆச்சர்யமாக இருக்கிறது.


இப்பகுதியின் நிலப்பரப்பு பழுப்பு சரளைக் கற்களால் நிரம்பியது...இக்கற்களை விலக்கினால் அதன் கீழ் பகுதியில் வெள்ளை நிற மணற்பகுதி.


கையில் ஒரு சிறிய ஸ்கெட்ஸ் வைத்துக்கொண்டு ஆங்காங்கே ஆப்பு வடிவ கற்களை நட்டு அவற்றிடையே கயிற்றைக்கட்டி வைத்து அல்லது கோடு போட்டுக்கொண்டு சரளைக்கற்கள் மண்களை சுவர் போல கரையாக கட்டி நடுவில் வண்டிப் பாதை போல உருவாக்கி இயற்கையான வெள்ளை திட்டு வரும் வரை சமன்படுத்தி இருக்கிறார்கள்.  இறுதியில் ஸ்கெட்சின் உருவம் பிரம்மாண்டமாக.


சுருள் வட்ட வடிவங்களும் துள்ளியமாக சரிவிகித ஆரங்களில் உள்ளன.


வானத்திலிருந்து பார்பதற்கு பழுப்பு கேன்வாசில் வரைந்த வெள்ளை ஓவியங்கள் போல இருக்கின்றன.


நாஸ்க்கா படங்கள் 1920 ல் பெருவில் விமான போக்குவரத்து துவங்கும் பொழுதே வெளி உலகிற்கு தெரிய வந்தன. அதற்கு முன் இல்லையா என்றால் ஆய்வு இருந்திருக்கிறது ஆனால் தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவில்லை.


இந்த உருவங்கள் கோடுகள் குறித்து பலவித கருத்துகள் ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றன, அவைகள் ;


வேற்றுகிரக வாசிகள் தரையிறங்க அமைக்கப்பட்ட ஓடு பாதைகள்.  இதற்கு ஏலியன்ஸ் உருவம் மற்றும் குறுக்கும் நெடுக்குமான பாதைகள் புரியாத சின்ன உருவங்களை காட்டுகிறார்கள்.


பாதைகளாக தெரிவன பாசனக்கால் வாய்களாக இருந்திருக்கும்.


வானியல் குறியீடுகள் இவை என்கின்றனர் ஒருசாரர்.


கடவுள் உருவ வழிபாட்டு பகுதிகள். இயற்கை இவர்கள் கடவுள் எனவே அவற்றின் உருவங்கள்.


இந்த இனத்தின் பல பிரிவுகள் இருந்திருக்கலாம் ஒவ்வொரு பிரிவிற்கும்
ஒவ்வொரு உருவங்கள் அதன் மையம் அவர்கள் கூடி வழிபாடு சடங்குகள் அமைவிடங்களாக இருந்திருக்கலாம்.  பூசை, தலை வாங்கும் சடங்குகள்  பலியிடமும் அதுதான் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள். இதற்கு சான்றாக ஆங்காங்கே இருக்கும் மேடைத்திட்டுகள் மண்டைஓட்டு குவியல்கள் என்கிறார்கள்.


ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு உருவ அடையாளம் அதனால் பல உருவங்கள்.


இவ்வளவு காலத்திற்கும் இவை எப்படி அழியாமல் இருந்தன?.  மழையற்ற பலைவனமான பகுதி என்பதால் இப்பகுதி குளிராலும் வெயிலாலும் கெட்டிப்பட்டிருக்கலாம். தடங்கள் மறையவில்லை.


நாஸ்க்கா இன மக்கள் இவ்வுலகத்திற்கு விட்டு சென்ற தடயங்கள் சொல்லும் பொதுவான கருத்து இதுவா ?


மரங்கள் இயற்கை அழிவே ஒரு இனம் அழிந்து போனதற்க்கான சாட்சி நாங்கள்... என்பதா?