Pages

Tuesday, April 12, 2016

தினமலர் செய்த கோக்குமாக்கு வேலை



கடந்த 11.04.2016 தினமலர் இதலோடு இணைப்பாக "பட்டம்" என்ற இளைஞர் மலர் வெளியானது (கோவை பதிப்பு). அதில் மனிதர்கள் அஞ்சும் பூச்சி ! என்ற தலைப்பில் படங்களோடு பொது அறிவுத் தகவல் பிரசுரமாகி இருந்தது.  இதில் இடம் பெற்ற தகவல்கள் நான் ஏற்கனவே இந்த வலைத்தளத்தில் எழுதியவை.
தகவல்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் விருப்பம்.

முகநூல் மற்றும் வாட்ஸ்சப் போன்ற சமூகதளங்களில் Copy /Past தவிர்க்க முடியாத போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களும் விதிவிலக்கு அல்ல.  ஆனால் இது போன்ற பிரபலமான மீடியா (! )அதையே
செய்யும் போது நெருடலாக இருக்கிறது.

இந்த பதிவு என் சொந்த சரக்கு என்று வாதிடவில்லை....ஆனால் அதே நேரத்தில் பல தகவல்களை திரட்டி கிரகித்து படிப்பவர்களுக்கு புரியும் படியாக கொண்டு செல்வது, ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தி சுவாரசியமான
தகவலாக கொண்டு சேர்க்கும் போது அதையும் ஒருவன் அப்படியே ஈ அடிச்சாங் காபியாக பதிவிடும் போது... போடுங்கள் தப்பில்லை ஆனால் இவரின் தகவலுக்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தை என்னை
இன்னும் எழுத தூண்டுமே !

கீழே...தினமலரில் பிரசுரமான பக்கங்கள்




இந்த லிங்க்  02.02.2016 அன்று நான் எழுதிய பதிவு.

மனிதனின் முதல் எதிரி !!

http://eniyavaikooral.blogspot.com/2016/02/blog-post.html



7 comments:

  1. சென்ற ஆண்டு ,என் ஜோக் ஒன்றையும் இப்படித்தான் திருடிப் போட்டது தினமலர் :)

    ReplyDelete
    Replies
    1. யோசிக்க வேண்டியதில்லையே...ஈஸியான வழி

      Delete
  2. தினமலர் மட்டுமல்ல பல நாளிதழ்கள் இப்படிதான் செய்கின்றன. இது பத்திரிக்கையின் பொறுப்பாசரியர்களுக்கு தெரியாமல் வந்துவிடுகிறது. இப்படி வரக் காரணம் பத்திரிக்கைகளுக்கு தகவல் சேகரிப்பவர்கள் கட்டுரை எழுதுபவர்கள் இப்போதெல்லாம் தாங்களாகவே முயற்சி செய்து எழுதுவதில்லை அதனால் அவர்கள் இணையத்தி சிறிது மேயந்து இப்படி பட்ட பதிவுகளை எழுதி தங்கள் பக்கங்களை நிரப்பி கொள்கிறார்கள். உங்களது உழைப்பால் சில செய்தியாளர்கள் உட்கார்ந்து தின்கிறார்கள்... அதனால் நீங்கள் உங்கள் உழைப்பை நன் கொடையாக கொடுத்தது போல எண்ணிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்கொடைதான்....வேற வழி

      Delete
  3. இது உங்கள் சொந்த சரக்கு தான். வெட்கப் படவேண்டாம்! பல பத்திரிக்கைகளை படித்து, ஆங்கிலத்தில் உள்ளதை தமிழ் படுத்தி எழுதியதில் உங்கள் உழைப்பு உள்ளது. எந்த கட்டுரையும் பலருடைய பழைய உழைப்பைக் கொண்டு தானே எழுதமுடியும். சக்கரம் கண்டு படிக்காவிட்டால் கார், விமானம்..ஏன் எதுவுமே இவ்வுலகில் இல்லை.

    இவர்கள் செய்தது சரியா தவறா என்று அறிந்து கொள்ள மதன், சுஜாதா இவர்கள் கேள்வி பதில்களை அப்படியே காப்பி அடித்து போட்டால் சரியா தப்பா?

    தப்பு என்றால் தினமலர் உங்களுக்கு செய்தது தப்பு. மதன் சுஜாதா இவர்கள் எல்லாம் encyclopedia- படித்து அதை தமிழாக்கம் செய்கிறார்கள். அதில் அவர்கள் உழைப்பு...அவர்கள் டச் இருக்கு; அதை காப்பி அடிப்பது தப்பு! அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் கொடுத்தாக வேண்டும்.

    மேலும், தினமலர் (ஒரு தனி மனிதன் செய்தால் மன்னிக்கலாம்) ஒரு வியாரப் பத்திரிக்கை...அவர்கள் காப்பி அடித்தது தப்பு.) அதற்கு நஷ்ட ஈடு கேக்கலாம். நீங்களும் அதே சமூகம் என்றால் கேஸ் போடுங்கள்! இல்லை என்றால், உங்களுக்கு பண விரயம் தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க...நம்பள்கி
      நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டுறலாம் தான் வேலை பழுவில் இதையும் இழுத்துப் போட விரும்பல. வாழ்க நீ எம்மான் "ன்னு வாழ்த்திட்டேன்.

      Delete
  4. கொடுமை..
    மனிதனின் யோசிப்பு திறன் திருட்டு..
    என்ன சொல்ல.. அனைத்து இடங்களிலும்
    இது கிருமியாக பரவியுள்ளது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !