Pages

Thursday, April 27, 2017

ஒளி உமிழ் காளான்கள் !



நீங்கள் "அவதார் " திரைப்படத்தில் மனதை வசீகரிக்கும் ஒரு காட்சி யை பார்த்திருக்கலாம் "ஒளி உமிழ் தாவரங்கள்,  பூக்கள் , பூச்சிகள் என வர்ண ஜாலம் மிக்க காட்சி அது.

இருட்டில் மின் மினி பூச்சிகள் ஒளிரும் அழகே தனி தான்.   அதைப் போலவே காளான்களும் ஒளியை உமிழ் கின்றன.  இந்த வகை காளான்களை ஆங்கிலத்தில் Neonothopanus gardneri (நியோனொதொபெனஸ் ) என்ற தாவர வகைப் பாட்டியலில் குறிப்பிடப் படுகின்றன.  எளிதாக இவற்றை  "பயோலூமினன்ட்ஸ் " (உயிரியஒளிஉமிழிகள் ) என்று சொல்லலாம்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஜியார்ஜ் கார்டனர்  என்பவர் பிரேசில் நாட்டில் ஒரு மாலை பொழுதில் இவைகளை மின் மினிப் பூச்சிகள் பெரிதாக இருக்கு என பார்த்த போது அவைகள் காளான்கள் எனக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனார்.  பகலில் இவை பார்பதற்கு மரக் காளான்களை போல இருக்கும்.



சமீபத்தில் இவைகள் ஏன் பச்சை ஒளியை உமிழ்கின்றன என்பதற்கான காரணத்தை கண்டறிந்தார்கள். காலான்கள் ஸ்பேர்ம் என்று சொல்லக் கூடிய நுண் விதைகள் மூலமாக பரவக் கூடியவை.  இரவில் அந்துப் பூச்சி போல மற்ற பூச்சி இனங்களை இவைகள் கவர்கின்றன. அவற்றின் முலமாக்க நுண் விதைகளை பரவச் செய்கின்றன.

இந்த பச்சையஒளிஉமிழிகள் சுமார் 70 வகைகள் இருக்கின்றனவாம்.
சரி எப்படி இவைகள் ஒளியை உமிழ்கின்றன? (oxyluciferins)(ஆக்ஸிலுஸிஃபர்ன்ஸ் எனும் ஒருவகை என்சைம் இதற்கு காரணம். காற்றில் (ஆக்ஸிஜனோடு) வேதி வினைபுரிந்து ஒளிர் நிறங்களை வெளிப் படுத்துகின்றன. லேசான ஒளியில் இவைகள் ஒளிர் கின்றன. (பார்க்க படம்)



சில வகைகள் : Panellus stipticus, Panellus pusillus,Armillaria mellea,Armillaria gallica,Mycena chlorophos,Mycena luxaeterna

(thanks to Science Advances )

6 comments:

  1. வியப்பாக இருக்கின்றது

    ReplyDelete
  2. பார்க்கவே அழகா இருக்கு. நம்மூர்ல இப்பிடி இருக்கா?!

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவை பொருத்தவரை ஒளிரும் பாசிகள்...
      மகாராஸ்ட்ரா மற்றும் மேற்கு மலைத் தொடர் காடுகள் (கேரளா, கோவா) இங்கெல்லாம் இருப்பதாக தெரிகிறது. ஒளிரும் காளான்கள் குறிப்பாக தென்னை யில் வளரும் மரக்காளான் கேரளத்து காடுகளில் இருப்பதாக தகவல். ஆனால் பரவலாக இல்லை.
      பதிவில் உள்ள படங்கள் எல்லாம் ப்ரேஸிலில் இதற்காகவென்றே பராமரிக்கப்படும் காட்டு பகுதிகளில் எடுக்கப்பட்டவை.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வாவ் !! எவ்ளோ அழகு..குஜராத்தில் இருக்குன்னு கேள்விப்பட்டேன் முந்தி ஒரு வீடியோ கூட பார்த்திருக்கேன் ..நேரில் பார்க்க ஆசை

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !