Pages

Wednesday, January 30, 2013

கோவை வலைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா


கோவை வலைப்பதிவர்களின் முத்தான மூன்று புத்தகங்கள்

நவீன கவிதை படைப்புகள்
கோவை மு சரளா எழுதிய ”மெளனத்தின் இரைச்சல்”
அகிலா எழுதிய “ சின்ன சின்ன சிதறல்கள் “

உரைநடை கோர்வையில் எழுதப்பட்ட பயண அனுபவங்கள் கட்டுரைகள் பல வரலாற்று நிகழ்வுகளை பேசும்

ஜீவானந்தம் எழுதிய ”கோவை நேரம் - கோயில் இயற்கை ஒரு பார்வை”

இம்மூன்று புத்தகங்களும் கோவை வலைப்பதிவு நண்பர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது சிறப்பு.

புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் ஃபிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இதற்காண அழைப்பிதழ்




வலைத்தள, Face book, Twitter நண்பர்கள் அனைவரும் இதை நேரில் கொடுத்த அழைப்பிதழாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

இம் மகிழ்ச்சியான தருணத்தில் நம் நண்பர்களை பாராட்டும் விதமாக ஒன்று கூடுவோம் வாருங்கள் தோழர்களே !!

Monday, January 21, 2013

விண்வெளி தகவல்கள் - செவ்வாய்க்கு செல்ல 1000 பேருக்கு ஒன்வே டிக்கட் !


வெப்ப வாயு பாலம் எங்கே உள்ளது?

வெப்ப வாயு பாலம் (bridge of hot gas) இது ஏபெல் 399, ஏபெல் 401 [ Abell 399 (lower
centre) and Abell 401 (top left)] என்ற இரு கேலக்ஸி தொகுப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது.   இதன் நீளம் ஏறக்குறைய 10 மில்லியன் ஒளி ஆண்டுகள். பூமியில் இருந்து ஒரு பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ப்ளாங் விண்வெளி வானிலை ஆய்வுக்கூடம் (Planck space observatory ) மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது.



காஸ்மிக் பிசாசு 

பூமியில் இருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், பால்வெளியின் வட திசையில் (Cepheus )செபையஸ் தொகுப்பில் தோன்றும் ஒளி வெள்ளம் காஸ்மிக் பிசாசு [ cosmic ghost ]என அழைக்கப்படுகிறது.


நிலவிலிருந்து விண்வெளி ஓடத்திற்கு செல்லும் கதிர்

இது ஒது அதிசய நிகழ்வு புகைப்படமாக கருதப்படுகிறது.  2001 அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட போது முழு பெளர்ணமி தினத்தில் சூரியனின் கதிர்கள் நிலவின் மேல் விழ நிலாவின் நிழலானது நேரடியாக விண்கலத்தை குறிவைப்பது போல தோற்றம் அளித்தது.


புதன் கோளில் தண்ணீரா ?

புதன் கோளில் தண்ணீர் இருப்பதற்காண ஆதாரம் ”நாசா”வால் வெளியிடப்பட்டது.  இந்த புகைப்படம் மெசேஞ்சர் ஸ்பேஸ்கிராப்டால் எடுக்கப்பட்டது.  புதனின் வட கோளார்த்ததில் தண்ணீர் ஐஸ் கட்டி வடிவில் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. வால்நட்சத்திரத்தின் ஐஸ் கட்டிகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புதன் மீது மோதியதால் பாறைகளுக்கிடையில் வேதியியல் மாற்றத்தினால் உறைபனி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும்.  படத்தில் மஞ்சள் வண்ணத்தில் இருப்பவை உறைபனி எச்சங்கள்.


நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டரால் (Neutron Spectrometer ) இதை உறுதி செய்ய முடிகிறது என்கிறார் விஞ்ஞானி டேவிட் லாரன்ஸ்.

செவ்வாய்க்கு செல்ல 1000 பேருக்கு ஒன்வே டிக்கட் !

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜெரார்ட் ஹாப்ட்
[Gerard ‘t Hooft ] மற்றும் இவரது குழுவினர் [Dutch entrepreneur
Bas Lansdorp ] திட்ட வரைவு தயாரித்து உள்ளனர்.  இத் திட்டத்தின் படி வரும் 2023 ல் முதலில் நான்கு பேர் செவ்வாயில் தரையிரங்க போகிறார்கள்.   செவ்வாயிற்கு செல்ல 1000 பேர் ஒன்வே டிக்கெட் டச்சு மார்ஸ் ஆர்கணைசேசன் மூலமாக முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




நீங்க தயாரா ?

இது பால்வெளிக்கு வெகுஅருகாமையில் இருக்கும் பெரிய கேலக்ஸி ஆன்ரோமிடா கேலக்ஸி இதில் 600 நட்சத்திர தொகுப்பு (star cluster) கண்டறியப்பட்டுள்ளதாகவும் இன்னும் 1900 வெயிடிங் லிஸ்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஒரு தொகுப்பிலேயே எக்கச்ச்ச்சக்க நட்சத்திரங்கள் இருக்கு)


 2010 முதல் ஹப்பில் தொலை நோக்கி மூலமாக 3 பில்லியன் இமேஜ்கள் சேகரிச்சு இருக்காங்க. இவற்றை ஆராய்ச்சி செய்ய www.andromedaproject.org  என்ற தளத்தில் இது குறித்து ஆர்வமுடைய சேவை மனப்பான்மையுள்ளவர்களை தேடுகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

பிரபஞ்சம் அறிவோம் : கேலக்ஸிகள் பற்றிய சில தகவல்கள்

பிரபஞ்சம் அறிவோம் : நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்

செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்


Sunday, January 13, 2013

ஆழ் கடலினுள் பயணம் செய்த டைரக்டர் ஜேம்ஸ்காமெரூன் !

மேற்கு பசிபிக் பெருங்கடலின் ஆழமான ஒரு பகுதி மரியான பள்ளத்தாக்கு. இது குவாம் அருகில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் ஒரு இடம்  ” சேலஞ்சர் டீப் “ கிட்டத்தட்ட 35840 அடி ஆழம் கொண்டது (ஏறக்குறைய 7 மைல்). 

இதன் பிரம்மாண்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள,  கடலின் அடி ஆழப்பகுதியான இதனுள் முடிந்தால்.. எவரஸ்ட் சிகரத்தை அடக்கிவிடலாம் ( கவனிக்க.. முடிந்தால்...) 


பசிபிக் பீடபூமியும், பிலிப்பைன் பீடபூமியும் மோதியதால் உருவான பள்ளத்தாக்கு இது என்கிறார்கள்.

இப்படி ஒரு இடம் உள்ளது என்பது 1875 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

த்ரஸ்டி (trieste) என்ற ஆழ்கடல் செலுத்து வாகனத்தில் 1960 ல் பயணப்பட்டவர்கள் இருவர்  ஜாக்குவிஸ் பிக்கார்ட் (ஸ்விஸ் கடல் வல்லுநர்), மற்றும் டான் வால்ஸ் (  U.S கடற்படை லெப்டினண்ட்).

இந்த த்ரஸ்டி கிட்டதட்ட நான்கு மணிநேர பயனத்திற்குபின் தரையை அடைந்தது. மேலே வர சுமார் இரண்டே கால் மணிநேரங்கள் எடுத்துக்கொண்டது.
இதனுள் இருவரும் சுமார் 20 நிமிடங்களே தரைப் பகுதியில் இருந்தனர்.
 
அதன் பின் பெயரிடப்படாத R O V (Remotely Operated Under water Vehicle) என அழைக்கப்படும் ரிமோட் ஆழ்கடல் செலுத்து வாகனங்கள் இங்கு சென்று வந்துள்ளன.

கைக்கோ (kaiko) எனப்படும் ஜப்பானின் நீர்மூழ்கி 1995 ல் சென்று வந்தது. பின் 2009 ல் அமெரிக்காவின் நீரியஸ் (Nereus) ஆழ்கடல் வாகனம்.  இரண்டும் பாறைகளையும் நீரையும் எடுத்து வந்தது.

2012 மார்ச் 26 ல் ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் காமெரூன் ( James Cameron ) இந்த பகுதிக்கு பயணப்பட்டவர். ( பிக்கார்ட் - வால்ஸிற்கு பிறகு மூன்றாவது நபர் அதாவது 52 வருடங்களுக்கு பிறகு...  )

காமெரூன் சென்ற வாகனம் ” டீப் சீ சேலஞ்சர் “ இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும், நவீன சாதனங்களுடன் 3D கேமரா பொருதப்பட்டது.

சக்கைபோடு போட்ட டைட்டானிக் (1997) திரைப்படம் கடலின் இருந்து எடுக்கப்பட்ட போது இப்படியெல்லாம் எடுக்க முடியுமா ? என வியக்க வைத்தவர்.

இக்கடல் தரைப்பகுதியில் மூன்று மணிநேரம் 3 டி கேமராவில் சுட்டு தள்ளி இருக்கிறார்.

” டீப் சீ சேலஞ்சர் “  கடலின் நீர் அழுத்தத்தை தாங்கக்கூடிய வடிவமைப்பு. நான்கு கேமராக்கள், 8 அடி நீளம் கொண்ட ஒளிரும் LED விளக்குகள், பொருத்தப்பட்டது. ரோபாட்டிக் கைகளில் நீர் அழுத்தம், உப்பின் அளவு, வெப்பநிலை அளவிடும் சென்சார்கள் இருக்கும்.  தரைப்பகுதியை அடைய 2 மணிநேரம் 36 நிமிடங்களும், மேலே வர ஒருமணியும் எடுத்துக்கொள்ளும்.

=====================================================================

இனியவை என்றும் பொங்க !

பொங்கள் தின நல்வாழ்த்துக்கள்.

 

Friday, January 11, 2013

நெருப்பு சிலம்பம் சுழற்றும் சாதனைச் சிறுவன்


சத்தியமங்களத்தின் ஒரு கிராமம் T.N. பாளையத்தில் உதித்த ஒரு இளம் புயல் தொல்காப்பியன்.  தமிழரின் தொன்மையான கலை சிலம்பம் அவனுக்கு கைவந்த கலையாயிருக்கிறது இச்சிறு வயதில்.

புரட்சிததலைவர் (எம்.ஜி.ஆர்) சிலம்பம் சுழற்றி அடித்து எதிரிகளை துவம்சம் செய்த திரைப்படங்களை இன்றும் மறக்க இயலாது.  சிலம்பக்கலைக்கு அவர் பேராதரவு அளித்தார்.

இன்று சிலம்பத்தில் பலவித சாகசங்கள் புரிகிறான் சிறுவன் தொல்காப்பியன். தனிதிறமை -சிலம்பம், நெருப்பு பந்து, நட்சத்திர நெருப்புக்கோளம், நெருப்பு சங்கிலி, நீர் தராசு, பொய்கால் குதிரை சிலம்பம்,ஸ்கேட்டிங்கில் சிலம்பம், சுருள்வீச்சு, சுழல் நெருப்பு இப்படி பல சாகசங்கள்.

தொல்காப்பியனை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது,  சமீபத்தில் கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் (வர்ணஜாலம் ஓவியப்போட்டி நிகழ்ச்சி) கூடியிருந்த அத்துணைபேர் உள்ளங்களிலும் புகுந்து கொண்டான் சிறுவன் தொல்காப்பியன்.

விர்...விர். எனும் சப்தத்துடன் தனக்கே உரித்தான தனி அழகுடன் சிலம்பம் சுழற்றுகிறான் எட்டு வயது சிறுவன் தொல்காப்பியன்.  இதிலென்ன சிறப்பு ? என்று கேட்கும் பார்வையாளர்களை அடுத்தடுத்த சாகசங்கள் அவர்களின் திறந்த வாயை மூட மறக்கிறார்கள்.

முதலில் சிலம்பம் சுழற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல.  வில் வித்தைக்கு எப்படி பல நுணுக்கங்களும் கவனமும் அவசியமோ அப்படி இதற்கும் பல அவதானிப்புகள் தேவைப்படுகிறது.

சிலம்பம் சுழற்றிய படியே தரையில் கரணம் போடுகிறான். சிலம்பத்தின் இரு முனைகளிலும் தீப்பந்ததை கட்டிக்கொண்டு சுற்றி சுழல்கிறான்.







தனித்திறமை என்று சொல்லக்கூடிய சிலம்பச் சுழற்றல்,
இரண்டு கைகளிலும் இரு சிலம்பங்கள் சுழற்றுதல்,
இரு சிலம்பங்களிலும் தீப் பந்தங்களை கட்டிக்கொண்டு சுழற்றுதல்.
நட்சத்திர வடிவில் கட்டிய கம்புகளின் முனைகளில் தீப்பந்தங்களை கட்டி சுழற்றுதல்,

இரண்டு நீண்ட சங்கிலியின் முழுக்க தீ சுவாலை பற்றி எரிய அதை சுழன்று சுழற்றுதல்,  அதோடு ஒரு கையை தரையில் ஊன்றி அதை சுழற்றுதல்,
தலைகீழாக கரணமடித்த படியே சுழற்றுதல்

நெஞ்சில் இருகக்கட்டிய பெல்டின் முனையில் கட்டப்பட்ட இரும்பு உருண்டையை உடல் வளைத்து சுழற்றுகிறான்.  அதே போல் அந்த முனையில் நெருப்பு பந்தை கட்டி சுழற்றுகிறான். அதோடு கரணம் அடிக்கிறான்.

ஒரு சங்கிலியின் இரு முனைகளில் தராசு போல இரு தட்டுகள் பிணைத்திருக்க அதில் இரு டம்ளர்களில் தண்ணீர் நிரைத்து ஒரு சொட்டு கீழே விழாமல் சுழற்றுதல்,

அதேபோல் முட்டைகளை வைத்து சுழற்றி காட்டுகிறான்.

எல்லாவற்றிற்கும் மேலே பொய்கால் குதிரை ஆட்டம் போல கால்களில் கட்டையை கட்டிகொண்டு மேலே சொன்னவைகள் அத்துணையும் செய்து காட்டுகிறான் அனாயசமாக.

இன்னும் புது அட்வென்ஞ்சர் என்று சொல்ல கூடிய வகையில்
தமிழ் கலையோடு மேல் நாட்டு கலையையும் இணைத்து ஸ்கேட்டிங்கில் பம்பரமாக சுழன்று மேலே சொன்ன அத்துணை சாகசங்களையும் செய்கிறான் என்பது எளிதில் யாரும் செய்யாத சாகசங்களே !

பெரியவர்களே சுழற்ற பயப்படும் நீண்ட தகடுகள் இணைந்த சுருள் வீச்சு வியப்பான ஒன்று.

சிறுவனின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் அவனது தந்தை திரு.வைரவேல்.  ஊர் திருவிழாவில் சிலம்ப விளையாட்டை பார்த்த சிறுவன்  தானும் அதுபோல் செய்து காட்டுவேன் என சொன்னான்.

பயிற்சியாளர் திரு. S.K. பொன்னுசாமி அவர்களிடம் சேர்த்து விட்டார். அவரிடம்
மூன்று வயதில் இருந்து தமிழர்களின் வீர விளையாட்டை கற்று அசத்தி வருகிறான் தொல்காப்பியன். தமிழகத்தின் பல பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி,கல்லூரிகளின் அழைப்பின் பேரில் சாகசங்களை நிகழ்த்திவருகிறான்.

சிலம்பம் மட்டுமல்ல கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் இவைகளை தனித்தனி ஆசிரியர்களிடம் கற்றுவருகிறான். கராத்தேவில் சில கட்டங்களை முடித்தால் ப்ளாக் பெல்ட் பெற்றுவிடுவான்.

”நீச்சல் மட்டும் கோவைக்கோ அல்லது ஈரோட்டிற்கோ சென்றுதான் கற்றுக் கொள்ள முடிகிறது சத்தியமங்களத்தில் அந்த வசதி இல்லை” என்கிறார் திரு. வைரவேல்.

தொல்காப்பியனின் குடும்பத்தில் யாருக்கும் இந்த கலை தெரியாது. ”இளங்கன்று பயமறியாது” என்பது போல பெரியவர்கள் செய்யத்தயங்கும் பல சாகசங்களை இச் சிறுவயதில் செய்கிறான்

எல்லா குழந்தைகளைப் போல் சுட்டிதனம் செய்கிறான், தொலைக்காட்சியில் கார்டூன் அதிகம் பார்க்கிறான்,  நண்பர்களுடன் விளையாட்டு, படிப்பிலும் ஆர்வமுடையவனாய் இருக்கிறான் என்பது அவன் தாய் லட்சுமி ப்ரியா தரும் ஸ்டேட்மெண்ட்.

இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் என்பதை பெற்றோர்கள் கண்டுகொள்ள வேண்டும் அதுமட்டுமல்ல அக்குழந்தையின் தனி திறமையை வெளிக்கொண்டுவரும் முழு பொறுப்பு மிக்கவர்கள் பெற்றோர்களே !.

பொதுப்பிரிவில் மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளான். அடுத்து மாநில அளவில் செல்ல தயாராகி வருகிறான்.

மாநில பள்ளி அளவிலான விளையாட்டுகளில் தகுதிபெற ஆறாம் வகுப்பில் இருந்தே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

இவனது நான்காவது வயதில் செய்த சாதனையை இப்போது செய்ய இயலாது அதாவது ஸ்கேட்டிங் கால்களில் கட்டிகொண்டு காரின் அடியில் புகுந்து வெளிவந்தது மறக்க முடியாதது என நினைவு கூறுகிறார் வைரவேல். இதை அப்போது முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக செய்து காட்டினான்.

பஞ்சாப் குஜராத் மாநிலங்களில் ஆர்வமாக இந்த சிலம்ப விளையாட்டில் கலந்து கொள்கிறார்கள்.  தமிழக அரசு இதுபோன்ற தனிதிறன் குழந்தைகளுக்கு உதவி அளித்தால் இன்னும் பிரகாசமாக ஜொலித்து இம்மண்ணிற்கு  பெயரும் புகழும் பெற்றுத்தருவார்கள்.

சிலம்பத்தில் உலக அளவிலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம் கோவைத் தமிழன் தொல்காப்பியனை.

சிலம்பம் சில வரலாற்று தகவல்கள் :

சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு, பண்பாட்டு சின்னம், தொன்மையான தற்காப்பு கலை.


திருக்குறள்,கலிங்கத்துப்பரணி,பெரிய புராணம் இவற்றில் சிலம்ப விளையாட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. தவிரவும் ஓலைச்சுவடிகள் பல உண்டு.

சிலம்பம் ”சிலம்பல்” என்ற சொல்லில் இருந்து பிறந்தது சிலம்பல் என்றால் ”ஒலித்தல்” என்று பொருள்.

"பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூல் கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இதில்   சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற பல பிரிவுகளையும் வகைகளையும் கொண்டது.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளதாக அறிகிறோம்.

இதில் வளரி என்ற ஆயுதம் ஒரு முனையில் பிறைவடிவிலான கூரான கருவி இது போர் ஆயுதமாக தமிழ் அரசர்களும் பயன் படுத்தினர். தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி 300 அடி தொலைவில் இருக்கும் விலங்கையோ மனிதனையோ வீழ்த்தமுடியும். தமிழக அரசர்கள் பெரும்பாலானவர்களுக்கு சிலம்பம் தெரிந்திருந்தது. சின்னமருது - வளரி, ஊமைத்துரை - சுருள் பட்டா, கட்டபொம்மன் - நெடுங்கம்பு வீசுவதில் வல்லவர்கள்.

பல்லவ இளவரசர் (புத்திவர்மன்) போதிதர்மன் மூலமாக குங்பூவும் அதிலிருந்து கராத்தே’ வும் பிறந்தது. கராத்தேவில் ’கடா ’எனும் பிரிவு சிலம்பத்தில் (கதம்ப வரிசை) இருந்து எடுக்கப்பட்டது.

Tuesday, January 8, 2013

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் பொழுது !


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு (International Space station- I S S ) நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான் !)

அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும்.
தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம்.  ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

காலை 6.00 மணி - நாளின் துவக்கம்

பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். ( அதாவது ISS ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும் எழுந்து கொள்ள வேண்டும்.

காலை 7.00 மணி - உடல் நலம் பேனல் (Hygiene), காலை உணவு

பல் துலக்குதல் - பேஸ்டால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம் தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை..) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

காலை 7.30 மணி கான்பெரன்ஸ்

ஐ.எஸ்.எஸ் ல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக்காண கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

காலை 8.00 பயிற்சி நேரம்

எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள் இது கால் சதைப்பாகங்களுக்கு மற்றும் உடலின் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள்.

காலை 10.30 வேலைதுவக்கம்.

ஒவ்வொருவருக்கும் அன்றைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அட்டவணை வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் வழக்கமாக அவர்கள் தொடரும் ஆய்வகப் பணியாக இருக்கும். அல்லது ஐ.எஸ்.எஸ் வெளியே அமைக்கப்பட்ட இணைப்பு தளத்தில் இருந்து சோதனை செய்ய வேண்டி இருக்கலாம்.

மதியம் 1.00 உணவு இடைவேளை

இந்த மதிய உணவு அவர்களின் விருப்ப உணவாக பூமியில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட மூன்றில் ஒன்றாக இருக்கும்.  விருப்ப உணவு ஏற்கணவே தாயார் செய்யப்பட்டு பேக்கிங்கில் இருக்கும். சிலவற்றை உடனடியாக சாப்பிடும் வகையிலும் சிலவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓவனில் சூடாக்க வேண்டி இருக்கும்.

மதியம் 2.00 மணி வேலை துவக்கம்

ஐ.எஸ்.எஸ் ல் உள்ள கிப்போ சோதனைக்கூடத்தில் விண்வெளி மருந்து, உயிரியல், புவி சூழ்நிலை ஆய்வு, பொருள் உருவாக்கம், புரோட்டீன் படிம உருவாக்க பெட்டியில் சில சோதனைகள்...இப்படி,

மாலை 5.00 மணிக்கு உடற் பயிற்சி

இரண்டு ட்ரெட்மில்கள், இரண்டு நிலையான சைக்கிள், ஒரு எடை தூக்கி பயிற்சி செய்யும் சாதனம் இவைதான் நிரந்திர பயிற்சி சாதனங்கள்.
எந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் அவர்கள் தரையோடு இருக்கும் ஸ்ட்ராப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

மாலை 6.00 மணி க்கு வேலை

விண்வெளி நிலையத்திற்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சோதனைக்கூடம் கொலம்பஸ் இது ” மைக்ரோ கிரேவிட்டி சயன்ஸ் க்ளோவ் பாக்ஸ்” என அழைக்கப்படுகிறது. இங்கு சில சோதனைகளை செய்கிறார்கள்.

இரவு 7.30 மணி இரவு உணவு

விண்வெளி வீரர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை தேவையான அளவிற்கு வழங்கப்படுகிறது.   ஒருவாரம் அல்லது ஒருமாதம் தங்குவதாக இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் உணவுகள் வினியோகிக்கப்படுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் டயட் என்று சொல்லப்படுகிற நிலையை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

இரவு 8.30 மணி கான்ஃபரன்ஸ் (கலந்துரையாடல்)

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு அன்றைக்கு மேற்கொள்ளப் பட்ட பணி விவரங்கள், அடுத்த நாள் மேற்கொள்ளப்போகும் பணி இவற்றை விவாதிக்க வேண்டியிருக்கும். விண்வெளி நடை பயிலல் (ஸ்பேஸ் வாக்) மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு கான்ஃபரன்ஸ் முறையில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

இரவு 9.30 மணி ஓய்வு நேரம் துவக்கம்

பணி ஓய்வு நேரம் இப்போது எடையற்ற நிலையில் சில விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். புத்தகம் படித்தல், டிவிடி பார்த்தல், இசை கேட்டல், லேப்டாப்பின் மூலம் தங்கள் குடும்பத்தினரோடு பேசி நேரத்தைக் கழிக்கலாம். ஒலி ஒளிகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

இரவு 10.00 மணி : தூக்கம்

கேஷுவல் டிரஸில் தங்களுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் தூங்குவதற்கான குழாய் படுக்கையில் உறங்கலாம்.  கண்கள் மற்றும் காதுகளை மறைக்கும் பிரத்தியோக முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள்.  இந்த பை போன்ற படுக்கை மிதந்து சென்றுவிடாமல் இருக்க பெல்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

ISS- Toilet

அறிவியல் உலகிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல கஷ்டங்களுக்கு தம்மை பழக்கி கொண்டு, சுக துக்கங்களை மறந்து அவர்கள் ஆற்றும் பணிகளுக்கு நம் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்.

ISS daily Life  காணொளி



Friday, January 4, 2013

உடலோடு ஒட்டி பிறந்த இரட்டைகள் [Conjoined twins]


தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் !  என்ற பதிவின் தொடர்ச்சி இப்பதிவு.

இரட்டை கரு உருவாக்கம் எப்படி நிகழ்கிறது ?

முட்டை விந்து செல்லுடன் இணைந்து எம்பிரையோ (Embryo) எனும் கரு உருவாகிறது. கருவானது சில சமயங்களில் உருவான 15 தினங்களுக்குள்ளாக இரண்டாக பகுப்படையும் பட்சத்தில் பிரிந்த சரிசமமான இக்கருக்கள் (இது ஏன் என்பது விளங்கவில்லை)சிசுவை உருவாக்குகிறது.  பகுப்பு ஆரம்பித்து 12 தினங்கள் ஆன சமயத்தில் தனிதனியாக வளரும் போது இக்கருவானது ஒரே மாதிரியான சிசுக்களாக மாற்றம் பெறுகிறது.

உடலோடு ஒட்டி பிறக்க காரணம் என்ன ? என்பதை விஞ்ஞானிகளால் அறுதியிட்டு கூற முடியவில்லை.  இருப்பினும் இரண்டு தியரிகளை சொல்கிறார்கள்.

Fission theory ஃபிஸன் தியரி -  கரு கூடி வளர்தல் 

பகுப்பு ஆரம்பித்து 12 தினங்களில் ஏதோ காரணத்தால் முழுமை அடையாமல்
போகலாம் அப்படிப்பட்ட சமயத்தில் இவ்விணைக்கருக்கள் சரியாக பிரியாமல் அந்த நிலையிலேயே வளர்ச்சி அடையும் போது சிசுக்கள் ஒட்டி பிறக்கின்றன. என்பது

Fusion theory ஃபியூஜன் தியரி -  கரு வளர்ந்து கூடுதல்

பிரிந்து வளரும் சரிசமக் கருக்கள் இறுதி கட்ட நிலைக்கு முன் நிலையில் ஏதோ காரணத்தால் இணைந்து வளர்ச்சி அடைதல்.



உடலின் பின்புறத்தில் ஒட்டி பிறந்த பெண் இரட்டையர்


உடல் பகுதியில் ஒட்டி பிறந்து சர்கஸில் வேடிக்கை காட்டி வாழ்கை நடத்திய ஒட்டிப்பிறந்த இரட்டையர்.

பெரும்பாலான ஒட்டி பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களில் இறப்பெய்துகின்றன.

2011 ல் சூடானில் பிறந்த தலை ஒட்டி பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் (ரிடாக் மற்றும் ரிட்டல்கோபுரா ) பதினோரு மாதங்களுக்கு பின் நான்கு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிக்கப்பட்டன.  இவ்விரு குழந்தைகளுக்கும் சிறப்பு தலை கவசங்கள் பொருத்தப் பட்டு உள்ளன.


இது நவீன அறுவை மருத்துவத்தின் சாதனையாக கருதப்படுகிறது.


பல வரலாற்று கல்வெட்டு, காசுகள், படிமங்கள், களிமண் அச்சுகள்,பாண்டங்கள்,சிம்மாசனம்... இப்படி பல தரப்பட்ட பதிவுகளில் இருந்து தகவல்களை பார்க்கையில் அனேக ஒட்டி பிறந்த இரட்டை உயிரினங்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்துள்ளன என்ற முடிவிற்கு வரமுடிகிறது.





அகநானூறு புறநானூற்று பாடல்களில் இருந்து இரட்டை தலை பறவைகள், பஞ்ச தந்திரக்கதைகளில் இரட்டை தலை யாழி (யானை போன்ற உயிரினம்) போன்ற விசித்திர உயிரினங்கள் இருந்ததாக அறிகிறோம்.

மாயன் சிற்பம்

இதுபோல இரட்டை பறவை, கழுகு இவற்றை பல நாடுகள் சின்னமாக கொண்டுள்ளன.

இரட்டை கழுகு சின்னம் அல்பானிய தேசியக் கொடி 

துருக்கி ரஷ்ய இலங்கையிலும் இரட்டை பறவை சிற்பங்கள் உள்ளன.

Sculpture in Keladi Temple, Karnataka

கேரளாவில் காலடி கோயில் சிற்பத்தில் ஒட்டிய இரட்டை பறவை காணப்படுகிறது.


Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC

அதே போன்ற தோற்றத்தில் துருக்கியில் கிமு 14 நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு இன்னும் ஆச்சர்யத்தை தருகிறது.

சில படங்களை இங்கு பகிர்கிறேன் அவற்றின் உண்மை தன்மை உங்கள் பரிசோதனைக்கு விட்டு விடுகிறேன்.