( இப்பதிவு எழுதும் பொழுது என் மனதில் கனமான ஏதோ ஒன்று அழுந்துகிறது...இந்த உலகம் பல விசித்திரங்களை உள்ளடக்கியது. ஒருநாள் வாழும் ஈசலும் இருக்கிறது, பலவருடம் ஜீவித்திருக்கும் ஆமையும் இருக்கிறது. குறைகளை நிறைகளாக்கி, தடை கற்களை படிகற்களாக மாற்றும் வல்லமையும் மனோ தைரியமும் பெற்றவன் மனிதன். )
கனடாவில், கிரிஷ்டா ஹோகன் மற்றும் டாட்டியனா [Krista Hogan - Tatiana ] தலை ஒட்டிப் பிறந்த (Conjoined Brain) இரட்டை பெண்குழந்தைகள்.
இன்றைக்கு மருத்துவ உலகம் உற்று நோக்கும் அதிசய குழந்தைகள், எதிர்காலத்தில் நரம்பியல் மற்றும் மூளை வல்லுனர்களின் பல கேள்விகளுக்கு பதில் தரப்போகும் அபூர்வக் இரட்டையர் இவர்கள்.
ஒரு குழந்தை எதை பார்க்கிறாளோ அதை பார்க்காமலே இன்னொரு குழந்தையால் அந்த குழந்தை பார்த்ததை உணர முடிகிறது.
அதாவது, கிரிஷ்டாவால் பார்க்கப்படும் கரடி பொம்மை டாட்டியானவால் உணரப்படுகிறது ஆனால் டாட்டியானாவின் கண்கள் வேறு திசையில் ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
“கிரிஷ்டா கார்டூன் பார்த்தால் டாட்டியானாவால் ரசித்து சிரிக்க முடிகிறது, அவள் பார்வை வேறு எங்கோ இருந்தாலும்”
ஒரு குழந்தை கரடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டால் இன்னொரு குழந்தையும் குதூகளிக்கிறது.
இது போன்று தலை ஒட்டி பிறப்பவர்களுக்கு மூளை தனி தனியாகவும் ஒரே மண்டை ஓட்டில் தனி தனி யான மூளைகளும், சிக்கலான ரத்த நாளங்கள் இருக்கும் ஆனால் இவர்கள் விசயத்தில் அப்படி இல்லை.
வான்ஹூவரில் (கனடா) உள்ள பி.சி குழந்தைகள் மருத்துவ மனையின் நரம்பியல் மருத்துவர் டக்ளஸ் ஹோஹ்ரென் (Douglas cochrane) இக் குழந்தை களைப் பிறப்பிலிருந்து கவனித்து வருகிறார். இரண்டு வயதில் சில எக்ஸ்பிரிமெண்டுகளை மேற்கொண்டார் அனைத்து நடவடிக்கை குறிப்புகளை ரகசியமாக வைத்திருக்கிறார். அதில் ஒரு சோதனையானது தலையில் எலக்ரோடுகள் பொருத்தப்பட்டு ஒருகுழந்தைக்கு தெரியாமல் மற்றதன் கண்முனே ஃப்ளாஷ் (flash) ஒளிரச் செய்யும் போது அது அதன் மைய மூளையால் உணரப்பட்டு மற்ற குழந்தையின் உணர்வுகள் தூண்டப்பட்டு உடல் அதிர்வுற்றது.
இரத்த மாதிரி ஒரு குழந்தையின் உடலில் எடுக்கும்போது இரண்டு குழந்தைகளும் அழுகின்றன.
ஒரு குழந்தை பார்பது எப்படி இன்னொரு குழந்தையால் உணரப்படுகிறது.
இதற்கு டாக்டர் அளித்த விளக்கம்.
வால்நட் அளவில் மூளையின் உள் மையப் பகுதியில் உள்ள ஒரு சிறு உறுப்பு தாலமஸ் (thalamus).
கிரிஷ்டா மற்றும் டாட்டியனாவிற்கு இருவேறு தாலமஸ் ஆனால் ஒரே ஒரு மைய மூளை உள்ளதால் கிரிஷ்டாவால் பார்த்து அறியப்படும் பொருள் மைய மூளையில் பதியப்படுகிறது(Visual). இந்த தகவல் உடனுக்குடன் டாட்டியாவிற்கு மைய மூளை மற்றும் தாலமஸ் ஆல் கிரிஷ்டா பார்த்த பொருளின் உருவம் தெரிந்துவிடுகிறது.
இப்படி இருவரின் தொடு உணர்வு(உணர்ச்சிகள்), ஒலி-ஒளி குறிப்புகள், வாசனைகள் இப்படி எல்லாமே இருவரினாலும் மாறி மாறி உணர முடிகிறது.
இருவருக்கும் உள்ள குணாதிசயங்கள் வெவ்வேறானவை.
மருத்துவ உலகம் முழுமையான தகவல் இப்போது பெற சாத்தியமில்லை இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டும். இப்போது இக்குழந்தைகளின் வயது ஆறு.
இவர்களின் மூளையின் சிந்திக்கும் செயல் திறன் (I Q ), கடந்த கால ஞாபகங்கள், உள்ளுணர்வு, முடிவெடுக்கும் திறன் இப்படி பல கேள்விகளுக்கு
வருங்காலத்தில் முளையின் செயல்பாடு குறித்த ஒரு புது அத்தியாயத்தை மருத்துவ உலகிற்கு அளிக்கப்போகிறார்கள்.
2.5 மில்லியன் பேர்களில் இரு குழந்தைகள் தலை ஒட்டி பிறக்கின்றன.
அப்படி பிறந்த குழந்தைகளில் நான்கு செட்களில் ஒரு குழந்தை மட்டுமே உயிரோடு இருக்க வாய்ப்பு உள்ளது.
இன்னும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்...
தொடர்புடைய பதிவு
உடலோடு ஒட்டி பிறந்த இரட்டைகள் [Conjoined twins]
தெரியாத பல விடயங்கள் அறிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி காப்பிக்காரரே !
Deleteபடித்து வியந்தேன்! நெகிழ்ந்தேன்! அருமையான தகவல்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்!
Deleteஉங்களின் முதலிரண்டு வரிகளே வாழ்வின் அடிப்படை. பகிர்ந்துள்ள செய்தி வருத்தத்தை அளித்தது. அறிவியல் வளர்கிறது என்றாலும் அவர்களின் வாழ்வியல் ....
ReplyDeleteதம் குறைகளை எண்ணி மயங்குவோருக்கான நம்பிக்கை வரிகள் அவை. வாழ்க்கையில் நமக்கு நேரும் துன்பங்களை எண்ணித் துயரப்படும் போது நம்மை விடவும் துன்பப்படுபவர்களை எண்ணி துணிவு கொள்ள வேண்டும். விதி என்று சொல்ல முடியாது. நன்றி எழில் !
Deleteஇது போன்ற குறைகள் கொண்ட கருக்கள் ..இப்போது ஸ்கேன் மூலம் முன்னரே கண்டறியப்பட்டு ...கருச்சிதைவு செய்யப்பட்டு விடுகின்றன !
ReplyDeleteகனடாவில் இது எவ்வாறு கண்டறியப்படவில்லை என்பது ..வருத்தமான விஷயம்!
எவ்வளவு தான் அறிவியல் வளர்ந்தாலும் சில நிகழ்வுகளை எதிர் பாராமல் நம்மையும் மீறி நிகழ்ந்து விடுகிறது என்ன செய்வது. நன்றி கோவை கமல் சார்.
Deleteஇவங்க படும் பாடு..... பரிதாபம்..........
ReplyDeleteஉண்மை தான். நாளடைவில் சற்று பழகிவிடும். இருப்பினும் வாழ்நாள் முழுதும் பல சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நன்றி ஜெயதேவ் சார்.
Delete