இது ஒரு கற்பனையான இயந்திரம்,இதில் இரண்டு விதமான மெக்கானிசங்கள் உள்ளன
(1.)பல்சக்கரங்கள் இணைப்பு, (2) அதனுடன் நாடா (பெல்ட்) இணைப்பு
உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா என்பதே கேள்வி. இதோடு நான் இன்னொரு கேள்வியையும் இணைத்திருக்கிறேன் அது முள் இரண்டு எண்களையும் தொடாது என்பது. (இது ஏன் என்றால் இந்த மெக்கானிசம் வேலை செய்யாது போனால் முள் எந்த எண்ணையும் தொடாது இல்லையா ? )
உங்களது பதிலை மேலே உள்ள ஓட்டு பெட்டியில் போடவும்.
மொபைல் மூலமாகப் படிப்பவர்கள் view web version - ஐ கிளிக் செய்து வந்தால் உங்கள் பதிலை பதிவு செய்ய முடியும்.
இந்த கேள்வியின் பதிலை வரும் சனி (26.10.2013) அன்று வெளியிடுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்து டப்பியில் கேட்கலாம்.
Labels: அறிவியல் புதிர், மூளைக்கு வேலை