கோவையின் நகரின் சுற்றுப்புரங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என கோவையின் அனைத்து முக்கியப் பகுதிகளும் மரங்கள் இல்லாமல் போய்விட்டது. சீசன் மழையும் பெய்யவா..? என யோசிக்கிறது.
வாகனங்களின் நச்சு புகையை இந்த மரங்கள் வடிகட்டி சுத்தப் படுத்தி வந்ததை மறுக்க இயலுமா...? மரங்களை வெட்ட ஆணையிட்டவர்களால்..
வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவு பெருகிவிட்ட சுழ்நிலையில் சாலைகளை நவீனப்படுத்தப் படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே... ஆனால் வெப்பத்தின் தாக்கம் மற்றும் நச்சு புகையின் அளவை குறைக்க பெரும் பங்கு வகிக்கும் மரங்களை மறந்து விடுவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்..?..!
மரங்களை வெட்ட தடுப்பவர்களுக்கு தடை போட்டு வெட்டி முடித்த நகராட்சி மரங்களை திரும்ப சாலை ஓரங்களில் நட முயற்சி செய்யுமா..? தனியார் இடங்களில் மரக்கன்று களை நட விரைந்து நடவடிக்கை எடுக்குமா ..? சந்தேகமே.
பறவைகள் மரங்களில் உள்ள பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்தி வந்தன.( சிட்டு) நூற்று கணக்கான சிறிய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பறவைகளுக்கு நாம் உணவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றின் வாழ்வாதாரமான மரங்களை வெட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.
தேவையற்ற மரங்களை வெட்டுங்கள்..ஆனால் அதே சமயம் தனியார் நிருவனங்கள், வீடுகளில் மரம் வளர்க்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
எஞ்சிய பறவைகள் மொபைல் டவர்களிலும், உயர் மின் கோபுரங்களிலும் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலையை மனிதன் ஏற்படுத்திவிட்டான்.
கோவை வருபவர்கள் ஊருக்கே ஏசி போட்ட மாதிரி இருக்கே...என்ற பேச்சு பழங்கதையாகி விட்டது.
பறவைகளின் சப்தங்களை கேட்டு வாழும் மனிதன் வாகனங்களின் இரைச்சலை மட்டுமே.. கேட்டு வாழ்பவன் அவன் மனநிலை எப்படி இருக்கும் அதனால் ஏற்படும் குடும்ப நிலை பாதிப்பு இவைகளை யோசிக்க வேண்டிய கருத்து.
பேருர் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் உங்களை வரவேற்கும் பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கல கலப்பு ஒலியை காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கலாம்...உணரலாம்.
கோவை ப்ளாக்கர் குழுமம் கோவை வலைப்பதிவர்கள் பங்கேற்ற தனது முதல் அறிமுக கூட்டத்தை 10.6.2012 அன்று நடத்தியது( கோவை காந்திபுரம் லால்குடி ஹால்)
முதல் கட்டமாக 100 மரகன்றுகளை நேசம் சார்பாகவும், கோவை வலைப்பதிவர்கள் சார்பாகவும் வழங்கப்பட்டது.

தமது சிந்தனை செயல் மூலம் கோவை பதிவர்களை ஒருங்கிணைக்கும் சங்கவி, சம்பத் மற்றும் உறுதுணையாயிருக்கும் அணைத்து பதிவர்கள், சமூக ஆர்வலர் அணைவருக்கும் இப்பாராட்டு உரித்தாகட்டும்.