இது ஒரு கற்பனையான இயந்திரம்,இதில் இரண்டு விதமான மெக்கானிசங்கள் உள்ளன
(1.)பல்சக்கரங்கள் இணைப்பு, (2) அதனுடன் நாடா (பெல்ட்) இணைப்பு
உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா என்பதே கேள்வி. இதோடு நான் இன்னொரு கேள்வியையும் இணைத்திருக்கிறேன் அது முள் இரண்டு எண்களையும் தொடாது என்பது. (இது ஏன் என்றால் இந்த மெக்கானிசம் வேலை செய்யாது போனால் முள் எந்த எண்ணையும் தொடாது இல்லையா ? )
உங்களது பதிலை மேலே உள்ள ஓட்டு பெட்டியில் போடவும்.
மொபைல் மூலமாகப் படிப்பவர்கள் view web version - ஐ கிளிக் செய்து வந்தால் உங்கள் பதிலை பதிவு செய்ய முடியும்.
இந்த கேள்வியின் பதிலை வரும் சனி (26.10.2013) அன்று வெளியிடுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்து டப்பியில் கேட்கலாம்.
Labels: அறிவியல் புதிர், மூளைக்கு வேலை
ஒண்ணு.. (இங்கி பிங்கி ல டாங்கி அங்கதான் வந்து நின்னது.. ;-) )
ReplyDeleteஇங்கி பிங்கி ...அதுக்குத்தான நாங்க மூனு விரல்ல ஒன்ன தொடச்சொல்றோம். ஹி.ஹி.
Deleteநான் சொன்னதுதான் கரெக்டாம்.. 100% காட்டுது பாருங்க..
ReplyDeleteஅது 100 ல ஒன்னு. அடுத்த அடுத்த ஓட்டுலதான் தெளிவாகும்.
Deleteசுற்றும் திசையைப் பொறுத்து...!
ReplyDeleteஆமாம். இடம் வலம் என்று மாற்றி சுற்றுமே.
Deleteஒரு பத்து நாள் டைம் கொடுப்பா..யோசிக்கனும் இல்ல
ReplyDeleteநிறையப்பேர் கண்காட்சியில் வைத்திருக்கும் பொருளை பார்வையிடுவது போல் பார்த்திட்டு போராங்க.. சரியோ தப்போ எதாவது ஒரு பதிலை யோசிச்சு கிளிக் செய்யலாம். முதல் இரண்டு நாள் போடலாம் ன்னு தான் இருந்தேன். பின்னாடி அஞ்சுநாள் போட்டிருக்கேன். பத்துநாள்னா சுத்தமா மறந்திடுவாங்க. ஆனா சுலபமான ஒரு க்ளு இருக்கு...
Deleteஅதன் கூட வே சுத்திப் பாத்து 2 இன்னு ஒட்டு போட்டிருக்கேன்.
ReplyDeleteநன்றிங்க முரளி
Deleteமூளைக்கு வேலை தரும் புதிர்! ஒன்னைத்தான் தொடும்னு மனசு சொன்னாலும் ரெண்டுக்கு போட்டாச்சு வோட்டு!
ReplyDeleteநன்றி நண்பரே இது ஒரு புது முயற்சியாதான் போட்டிருக்கேன் ஆதரவு இருந்தால் இது போன்று தொடரலாம் என்றிருக்கிறேன்.
Deleteஒன்று தான்.. ஆனாலும் 13 பல் சக்கரம் சுழலுமா என்ற சந்தேகமும் இருக்கிறது ஒருவேளை அது சுழலவில்லை என்றால் ஒன்றையும் காட்டாது, சுழன்றால் ஒன்றைக் காட்டும், அருமையான புதிர்...
ReplyDeleteநன்றி சீனு ஒரு சின்ன க்ளு தருகிறேன் தொடர்ச்சியாக இணைக்கப்பட்ட சக்கரங்கள் எண்ணிக்கை ஒற்றைப் படியா, இரட்டைப்படையா என்பதை கணக்கிட்டால் முள் எந்த திசையில் திரும்பும் என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால் இந்த படத்தில் பெல்டும் இணைஞ்சிருக்கு அந்த பெல்டில் டிவிஸ்டும் இருக்கே ?
Deleteநேராக உள்ள பெல்ட் முதல் சக்கரத்தின் அதே திசையில் சுற்ற வைக்கும். ட்விஸ்ட் உள்ள பெல்ட் எதிர் திசையில் சுற்ற வைக்கும்... இப்போதைக்கு சரியான விடையான ஒன்றுக்கு மெஜாரிட்டி இல்லாத போதும், சீனுவும் நம்ம அணியில் சேர்ந்ததால் அணி பலம் பெறுகிறது..
Deleteஇரண்டைத் தொடும். சரிதானே
ReplyDeleteபதிலை இப்ப சொல்ல முடியாது சனி கிழமை வரை பொருத்திருக்க வேண்டும். நன்றி.
Deleteமூளைக்கு வேலையா...இருங்க அப்புறம் வாரேன்...
ReplyDeleteஅட நில்லுபா ஒத்தையா ரெட்டையா போட்டாவது ஒரு பதிலை டிக் செஞ்சிட்டு போகவும். யாரு எதுக்கு ஓட்டு போட்டாங்கன்னு இதில பார்க்க முடியாது அது இல்லாம இதில எந்த டிராக்கிங்கும் இணைக்கப்படலா சரியோ தப்போ தைரியமா ஒரு பதிலை டிக் செய்து ஒட்டு போடலாம்.
Deleteவணக்கம்!..
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்கள் தளம் கண்டேன்.
வாழ்த்துக்கள்!
மிக அருமை! நல்ல பதிவும் பகிர்வும் இங்கும்...
தொடர்கின்றேன்....
நல் வாழ்த்துக்கள்!
தங்கள் வரவு நல் வரவாகுக நன்றி இளமதி.
ReplyDelete