மு.கு : புரியலேனா ரெண்டு தடவை படிக்கலாம் ஏன்னு ? யாரும் கேட்கப்போறதில்ல. படிச்சதும் மறந்திடுங்க ஏன்னா ? சிந்திக்கரது கஷ்டம்.
பெண்கள் எதிர்காலம் பற்றி கவலைப் படுகிறார்கள் கணவன் அமையும் வரை.
ஆண்கள் எதிர்காலம் பற்றி கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை.
வாழ்கையில் வெற்றி பெற்றவன் அதிகம் சம்பாதிக்க மனைவி செலவழிப்பாள்.
வாழ்கையில் வெற்றி பெற்றவள் அப்படி ஒரு மனிதனை கண்டுபிடிப்பதே.
ஆணுடன் மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் காதல் அதிகம் அவனை பற்றி புரிதல் இருக்கவேண்டும்.
பெண்ணுடன் மகிழ்ச்சியாக் இருக்க அதிக காதல் அவளை பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது.
பெண்கள் ஆணை திருமணம் செய்யும் போது அவன் மாறிவிடுவான் என நினைக்கிறாள் ... அவன் மாறுவதில்லை.
ஆண்கள் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என
நினைக்கிறான் .... அவள் மாறிவிடுகிறாள்.
கல்யாணமான ஆண்கள் செஞ்ச தப்ப மறந்திடனும்... ஏன்னா ஒரே விசயத்தை ரெண்டு பேர் ஞாபகம் வெச்சுக்க தேவையில்லை.
எந்த ஆர்கியூமென்ட்லயும் மனைவி சொல்லறது தான் கடைசி வார்த்தையா இருக்கும்.
எந்த ஆர்கியூமென்ட்லயும் கணவன் சொன்னது தான் முதல் வார்த்தையா இருக்கும்.
ஆண்கள் செலவழிப்பாங்க ரெண்டு ரூவா ஒரு ரூபா மதிப்புள்ள பொருளுக்கு.
பெண்கள் செலவழிப்பாங்க ஒரு ரூவா ரெண்டு ரூபா மதிப்புள்ள பொருள் வேண்டாங்கரதுக்காக.
பி.கு : படிச்சதும் என்ன தேடாதீங்க ஏன்னா? நா பக்கத்தில இல்ல.
இன்னொரு விசயம் மேல இருக்கரத எல்லாம் நா சிந்திக்கவே இல்ல.
