இந்த பதிவு கொம்பிற்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள் என்ற பதிவின் தொடர்ச்சி. இந்தியாவைத் தவிர பிற பகுதிகளில் காண்டாக்களின் நிலைமை குறித்து இப்பதிவில் காண்போம்.
தென்னாப்பிரிக்காவில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு கொல்லப்படுகின்றன. 2008ல் ஆண்டுக்கு கொல்லப்படும் எண்ணிக்கை 83 ஆக இருந்தது 2012 ல் இது 583 ஆக அதிகரித்து விட்டது.
அப்பொழுது இவைகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்களும் தற்போது பயன் படுத்தும் வித விதமான ஆயுதங்களுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.
டெக்னாலஜி வளர வளர உயிரினங்களின் வாழ்வு நாசமாக்கப்படுகின்றன.
ஆசிய வகை மருந்துகளில் வலிநிவாரணியாகவும் காண்டாவின் கொம்புகள் பயன் படுத்தப்படுகின்றன. அதிலும் சைனா மற்றும் வியட்நாமில் இதன் கொம்புகளை கொண்டு செய்யப்படும் மருந்து புற்றுநோயை குணப்படுத்துவதாக சொல்வது உச்ச கட்டம்.
சமீபமாக காண்டாவின் கண்களும் மருத்துவ குணம் மிக்கது என்கிறார்கள் (முடியல...)
வாத ரோகம், ஆர்திடிஸ் இவைகளுக்கு காண்டா கொம்புகள் அருமருந்து என்று சொல்வதற்கு அறிவியல் பூர்வமான எந்த உத்தரவாதமும் இல்லை.
பல கோடிக்கு கொம்பின் பொடிகள் விற்பனை நடக்கிறது. ”சின்ன கல்லு பெத்த லாபம் என்பது போல்” தங்கம் அடுத்து காண்டா கொம்பு அடுத்து ஹெராயின் உலக மார்கெட்டில் பிரபலம். (உ.தா : தங்கம் 24,700 டாலர்/lb, 30,000 டாலர்/lb,
ஹெராயின் 90ம்000 டாலர்/lb இன்றைய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 54.38 lb=Pound)
உண்மையில் நமது நகத்தில்,தலை முடியில் எப்படி கெரடின் எனும் மூலப்பொருள் உள்ளதோ அதே போன்றே காண்டா கொம்புகளும் அழுத்தப்பட்ட முடி போன்றது தான். அதனால் இது நமது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்வது சுத்த பொய் என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
சைனா கலாச்சார மருத்துவர்கள் சொல்வது பழங்கால மருத்துவங்கள் பொய்யாகாது. இக் கொம்பில் உள்ள மருத்துவ குணம்
சார்ஸ், எய்ட்ஸ் இவற்றையும் சரியாக்கும் அருமருந்து என்கிறார்கள்.
சைனா அரசு சொல்வது கள்ள மார்கெட்டை ஒழிக்க வேண்டுமானால் காண்டாமிருகங்களை இனப் பெருக்கம் செய்து வளர்க்க வேண்டும் என்று சொல்கிறது. (கவனிக்க ஒரு காண்டாமிருகம் 15 வயதிற்கு பிறகே இனப்பெருக்க தகுதியை பெறுகிறது )
மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது காண்டாவின் கொம்பு மட்டுமல்ல. இன்னும் சைனாவின் பூர்வீக மருத்துவ நம்பிக்கைகள் என்ன சொல்கிறது?
(இவை சில உதாரணங்கள்...)
- ஆர்தடிஸ் மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்க்கு புலியின் எலும்புகள்.
- ஒற்றைத் தலைவலி, கல்லீரல் பிரச்சனை,பல்வலிக்கு அருமருந்து கருங்கரடியின் பித்த நீர்.
- அடிவயிற்று வலி, ரத்த ஓட்ட குறைபாடு, தோல் நோய்க்கு கஸ்தூரி மானின் கஸ்தூரி.
- கிட்னி மற்றும் ரத்த ஓட்ட் குறைபாட்டிற்கு - கடல் குதிரை மருந்து (ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டன் கடல் குதிரைகள் இதற்காக கொல்லப்படுகின்றன)
- ஆண்மை குறைவிற்கு நன்கு காயவைக்கப்பட்ட வல்லூரின் மூளை.
- ஆசியாவில் பிரபலமான மருந்து புலியின் எலும்பும், கடல் குதிரையை பயன் படுத்தி செய்யப்படும் மருந்து தான்.
உலக அளவில் காண்டாமிருகங்களின் மொத்த எண்ணிக்கை கூட்டி கழித்து பார்த்தால் 23,000 மட்டுமே. இவற்றில் ஐந்து வகைகள் உள்ளன. தற்போதைய எண்ணிக்கை நிலவரம் கீழே. இதில் சில கூடிய சீக்கிரம் அழிந்து போய்விடும் அபாய கட்டத்தில் உள்ளன.
இந்திய காண்டாமிருகம்
தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டா
(இந்த இனத்தை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது)
இந்தோனேசியா,மற்றும் மலேசியாவில் காணப்படும்
சுமத்ரா காண்டாமிருக வகை (அழிவின் விளிம்பு நிலை விலங்கு)
இதுவும் இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் இருக்கும்
ஜாவா காண்டாக்கள் (விரைவில் இவ்வுலகைவிட்டு மறைந்து போக இருக்கின்ற வகை)
தென் ஆப்பிரிக்கா மற்றும் டெமாக்ரடிக் ரிபப்ளிக் காங்கோ நாட்டில் காணப்படும் வெள்ளை காண்டாக்கள். இதில் முக்கியமாக காங்கோவில் ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டது. தென் ஆப்பிரிக்கா தீவிர பாதுகாப்பில் உள்ளதால் இந்த எண்ணிக்கை குறையவில்லை.
படத்தில் கொம்பு போய் உயிர் பிழைத்து தன் இணையோடு சேர்ந்திருக்கும் காண்டாக்கள்
காண்டாமிருகங்களை பாதுகாக்க பயன் படுத்தப்படும் நவீன தொழில் நுட்பங்கள்:
GPS டிரான்ஸ்மீட்டர் - அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க
கொம்புகளில் மைக்ரோசிப் பொருத்துதல்
டாக்சிபிகேசன் - கொம்புகளுக்கு நிறமாற்றம் செய்யும் கெமிக்கலை பயன்படுத்துதல். இதனால் அவைகளுக்கு பாதிப்பு இல்லை. கொம்பை மட்டும் திருடும் கும்பல் இதை அறிந்து கோபத்தில் அவற்றை கொல்கின்றனர்.
DNA மூலக்கூறு லைப்ரரி (இந்த டேட்டாவை வைத்து அடையாளம் மட்டுமே காண முடியும்.)
கண்காணிப்பு உள்ள இடங்களுக்கு இவைகளை குடியமர்த்துதல்.
வட கென்யாவில் வெள்ளை காண்டாக்கள் நான்கு மட்டுமே உள்ளன இவற்றிக்கு 24 மணிநேரப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. (காலக் கொடுமை) படத்தில் இருப்பது அந்த காட்சி.
(நன்றி : நேஷனல் ஜியாகிரபி)
மிகவும் அரிய தகவல் பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவயிற்றைக் கலக்குது............
ReplyDeleteகொம்பிழந்து பரிதாப மாக நிற்கும் காண்டா உண்மையில் நம் மனதை சலனப்படுத்துகிறது. நன்றி ஜெயதேவ் சார்.
Deleteதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி !
ReplyDeleteஇது போலவே நடந்துகொண்டிருந்தால் பல உயிரினங்கள் ஒரு காலத்தில் இல்லாமலே போகுமே!
ReplyDeleteஆமாம் உண்மைதான். 4 காண்டாக்களை துப்பாக்கி பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் பாருங்கள். திரும்ப அந்த குறிப்பிட்ட இனத்தை/வகையை எப்படி உருவாக்குவது? கடினம் தான். நன்றி குட்டன் சார்.
Deleteமனிதன் என்னத்தைதான் விட்டுவைப்பனோ தெரியவில்லை.
ReplyDelete