அகண்ட விண்வெளியில் அநேக நட்சத்திரங்களின் தொகுப்பே கேலக்ஸிகள் என அழைக்கப்படுகின்றன.
அநேக நட்சத்திரங்கள் என்பதை உத்தேசமாக மில்லியன் நட்சத்திரங்களில் இருந்து டிரில்லியன் நட்சத்திரங்கள் வரை கொண்ட தொகுப்பு என கருத்தில் கொள்ளுங்கள்.
நமது கேலக்ஸியின் [உடுமண்டலம்] பெயர் ஆங்கிலத்தில் மில்கிவே தமிழில் பால்வீதி அல்லது ஆகாய கங்கை.
நம் கேலக்ஸியின் விஸ்தீரணம் சில ஆயிரங்களில் இருந்து சில லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம். இவற்றின் நிறை பல டிரில்லியன் சூரிய குடும்பங்களின் நிறையின் அளவு என்று கொள்ளலாம்.
நம் பக்கத்துவீட்டுக்காரரின் செல்லப் பெயர் M31 [ ஆண்டிரமெடா ] இதனுடைய விட்டம் 2 அல்லது 3 மில்லியன் ஒளியாண்டுகள். இவருக்கும் நமக்கும் உள்ள தொலைவு பல மில்லியன் ஒளியாண்டுகள் இருக்கும்.
இந்த டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யவில்லை என்றால் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகிடும். திரு.சாலமன் பாப்பையா பாணியில் சொன்னால் " நம்ம கேலக்ஸியையே இன்னும் சரியா விளங்கிக்க முடியலயா..."
கேலக்ஸியின் வடிவத்தை பொருத்து சுருக்கமா நான்கு வகையா பிரிக்கலாம். [இங்கு சுருக்கமா என்று சொல்லுவதன் காரணம் அந்த ஒவ்வொரு வகையிலும் பல கூறுகள் இருக்கு ]
1. சுருள்வடிவம் [ spiral Galaxies ]
2. லெண்டிகுலர் [ Lenticular Galaxies ]
3. நீள்வடிவம் [Elliptical Galaxies ]
4. ஒழுங்கற்ற வடிவம் [ Irregular Galaxies ]
இந்த ஒழுங்கற்ற வடிவத்தில் பல ஆயிரக்கணக்காண கற்பனைக்கெட்டாத உருவங்கள் உண்டு.
- சுருள்வடிவம் பக்கத்தில் இருக்கும் கேலக்ஸியின் ஈர்ப்பால் இந்த வடிவம் பெருகிறது.
- லெண்டிகுலர் இதுவும் சுருள்வடிவமே ஆனால் அதன் மையம் எரிபொருள்தீர்ந்து வேகமிழந்த நிலையில் இருக்கும்.
- நீள்வடிவம் இது தன்னைத்தானே சுற்றாது ஆனால் இதிலுல்ல அண்ட சராசரங்கள் ( கோள்கள், நட்சத்திரங்கள்) சுற்றும்.
- ஒழுங்கற்ற வடிவம் பல வடிவங்கள் கொண்டு விநோத சித்திரங்கள் போல் இருக்கும்.
இரு கேலக்ஸிக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதும், இணைவதும் உண்டு.
மேலே உள்ளது ஸ்பைரல் கேலக்ஸி
மேலே : இது ஒரு நீள்வடிவ கேலக்ஸி
மேலே : இது ஒரு
லெண்டிகுலர் கேலக்ஸி
மேலே : எமிசன் ரிஃப்ளெக்சன் கேலக்ஸி
மேலே : ஸ்டார் ப்ர்ஸ்ட் கேலக்ஸி
இதுதான் நம்ம மில்கிவே சூரியன் குறிக்கப்பட்டிருக்கு கவனிக்கவும்
==================================================================
பால்வெளியில் [மில்கிவே] 400 பில்லியன் நட்சத்திரங்களும், இந்த யுனிவர்ஸில் 125 பில்லியன் கேலக்ஸிகளும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு உண்டு.
==================================================================