உலகின் பெரிய டெலஸ்கோப் ஜுலை'2012 ன் கடைசி வாரத்தில், நமீபியாவில் நிறுவப்பட்டு செயல் பட ஆரம்பித்துள்ளது. இந்த டெலஸ்கோபின் பெயர் HESS II [ஹெஸ் II - High Energy Stereoscopic System ] இதன் டிஷ் அளவு இரண்டு டென்னிஸ் கோர்ட்டுகளின் அளவு என்றால் இதன் உருவத்தை ஊகித்துக்கொள்ளுங்கள்.
ஹெஸ் இரண்டு எனும்போதே ஹெஸ் ஒன்று இருக்கனுமே ஆமாம் இந்த வகை தொலைநோக்கிகள் 1994ல் இருந்து ஆய்வில் உள்ளது. ஹெஸ் I - 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இது நான்கு உள்ளது.
இந்த தொலைநோக்கி எதற்கு?
சக்தி வாய்ந்த காமா கதிர்களால் ஏற்படும் சூழ்நிலை தகவமைப்பை ஆய்வு செய்கிறது. இதன் அல்ட்ரா வேக புகைப்படங்கள் காமா கதிர்கள் ஊடுருவும் சக்தி மற்றும் திசையை தெரிவிக்கும்.
இந்த தகவலை பிரான்ஸ் தேசிய நியூக்ளியர் நுண்துகள் இயற்பியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
கருந்துளைகள், சூப்பர் நோவா, மற்றும் புல்சர்கள்(நியூட்ரான் ஸ்டார்) இவைகளில் இருந்து வெளிவரும் காஸ்மிக் காமா கதிர்களை ஹெஸ் ஆராயும் என்று விளக்கமளிக்கிறார்கள் வானியற்பியல் விஞ்ஞானிகள் .
====================================================================
ஐந்து சூரிய நிறைக்கு மேற்ப்பட்ட நட்சத்திரங்கள் அதிக விசையுடன், அதிக வெப்பபத்துடன், அதிக பிரகாசத்துடன், அதி பயங்கர சப்தத்துடனும் தன்னைத் தானே எறித்துக் கொண்டு முடிவில் முடிவற்ற ஒரு சுருக்கத்திற்கு சென்றுவிடும் இதை சூப்பர் நோவா என்கிறோம்.
இந்த சூப்பர் நோவா பின்னாலில் நியூட்ரான் நட்சத்திரமாகவொ அல்லது கருந்துளையாகவோ உருமாறுகிறது [ கருந்துளை பற்றி தனி பதிவே போடலாம் ? ]