இந்த பிரபஞ்சத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள், உடுமண்டலங்கள் [Galaxies] 5 சதவீதம் மட்டுமே மீதமுள்ளவற்றில் அறியப்படாத இருள்பொருட்கள் [Dark Matters] 23 %, மாபெரும் இருள் சக்தி [Dark Energy] 72 % என்பதை நினைவில் கொள்வோம்.
காஸ்மாலஜியை பொருத்தவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் பெரும்பாலும் இதுதான் இறுதியானது என உறுதியாக கூறப்படுவதில்லை அப்படி தெரிவிக்கப்படுபவைகளில் பிற்காலத்தில் முழுக்க மறுக்கப்பட்டவைகளும் உண்டு.
கண்களுக்கு தெரிந்தவைகளே மாற்றம் பெரும்போது தெரியாதவைகள் [in-visible] பற்றிய தியரிகள் உருவாக்குவது எவ்வளவு சிரமமானது அதில் விசித்திரமான ஒன்றுதான் கருந்துளை.
ஐந்து சூரிய நிறைக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் அதிக விசையுடன், அதிக வெப்பபத்துடன், அதிக பிரகாசத்துடன், அதி பயங்கர சப்தத்துடனும் தன்னைத் தானே எறித்துக் கொண்டு முடிவில் முடிவற்ற ஒரு சுருக்கத்திற்கு சென்றுவிடும் இதை சூப்பர் நோவா என்கிறோம்.
இந்த சூப்பர் நோவா பின்னாலில் நியூட்ரான் நட்சத்திரமாகவோவொ அல்லது கருந்துளையாகவோ உருமாறுகிறது
கருந்துளைகளை பற்றி புரிந்து கொள்ள நமக்கு கொஞ்சம் கற்பனா சக்தி அவசியம். அந்த தியரிகளை படிக்க நமக்கு தலைசுற்றுவதை தவிர்க்க முடியாது. எனவே அந்த தியரிகளுக்குள் விரிவான ஆராய்ச்சியில் புகுந்து சலிப்பேற்படுத்துவதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
ஒரு பொருளின் நிறை அதிகரிக்க அதிகரிக்க அதன் ஈர்ப்பு விசை அதிகரிக்கும். அப்படியானால் ஈர்ப்பு விசை என்பது ஒருநிறையை பொருத்தது சரியா ?
இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன் டென்னிஸ் பந்து அளவுள்ள காந்த பந்து, ஒரு புட்பால் அளவுள்ள காந்த பந்து இதில் அதிக ஈர்ப்பு உடையது அளவில் பெரியதே.
பூமியின் ஈர்ப்பு விசை அதன் மேல்பரப்பில் உள்ளதை விட அதன் மையம் நோக்கி செல்ல செல்ல அதிகமாக இருக்கும்.
ஒரு கல்லை நம் தலைக்கு மேலாக வானத்தில் வீசி எறிந்தால் உடனே கீழே விழும், இன்னும் அதிக வேகமாக வீசினால் [மண்டை உடஞ்சிடும்..?! ] கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும் அப்படி ஒரு கல்லை மிக வேகமாக அதாவது விநாடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால் [சும்மா கற்பனை..] அது கீழே வராது அப்படியே விண்வெளியில் போய்விடும். இதை தப்பும் வேகம் [Escape Velocity] என்கிறோம். இதையே நிலவில் 2.4 கி.மீ / விநாடி வீசினால் போதும்.
இந்த வேகமானது அந்த பொருளின் மையத்தில் மிக அதிகமாகவும் மையத்தை விட்டு விலக விலக குறைவாகவும் இருக்கும். பூமியின் மேற்பரப்பை விட மையத்தில் நிறை ஈர்ப்பு விசை மிக அதிகம் அதன் தப்பிக்கும் வேகமும் அதிகம்.
இப்போது அதிக நிறையுள்ள பொருளை மிக மிக சுருக்கி சிறிதாக்கினால் அதன் தப்பும்வேகம் அதிகமாக இருக்கும்.
தப்பிக்கும்வேகம் எப்போது ஒளியின் வேகத்தை விட அதிகமாக தேவைப்படுகிறதோ அப்போது அந்த பொருள் கருந்துளையாக மாற்றம் பெரும். அந்த இடத்தில் இருந்து டார்ச் லைட்டை அடித்தால் உடனே அதேவேகத்தில் திருப்பி விடப்படும். அதாவது உள்ளிருந்து எதுவும் விளிம்பு எல்லைக்கு வெளியே போகாது. அதே சமயத்தில் விளிம்பின் எல்லையை தொடும் பொருளை உள்ளுக்குள் மையத்தை நோக்கி ஈர்த்துவிடும்.
சூரியனின் விட்டம் 7 லட்சம் கிலோமீட்டர்கள் அதே சூரியன் 3 கி.மீ விட்டத்துக்குள் சுருக்கினால் அது கருந்துளையாக மாறிவிடும்.
சூரியனைப்போல் 10 மடங்கு அதிக நிறையுள்ள கருந்துளையின் நிறை 10ன் மடங்கில் 31 கிலோ கிராம். [10 ^ 31 கி.கி]
நமது பால்வழி [Milky way] மண்டலத்தில இருக்கும் கருந்துளையை 1930ல் கண்டறிந்தனர். கருந்துளை இருப்பதே தெரியாதே எப்படி கண்டுபிடித்தார்கள் ? நட்சத்திரங்களை ஈர்க்கும் போது பிரதிபளிக்கும் ஒளி பிம்பத்தை வைத்து கணிக்கப்பட்டிருக்கலாம். கருந்துளையி உறிஞ்சப்படும் எதுவாயினும் ஒளி உட்பட சுவாஹா தான்.
கருந்துளை ஒளியையும் உறிஞ்சக்கூடியதுன்னு 1960ல் ஆங்கிலேயர் ரோஜர் பெரோஸ் கண்டுபிடிதார்.
மிக அதிக நிறையுள்ள நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த நிலையில் கருந்துளையாக மாறும்.
அதிக தொலைவில் இருக்கும் கருந்துளை 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் நிறை சூரியனின் நிறையை விட 3 பில்லியன் மடங்கு அதிகம்.
வானியலார் கணிப்புப்படி இந்த பிரபஞ்சம் கருந்துளைகளால் நிரம்பியுள்ளது. மிகப்பெரிதாக கருதப்படும் கருந்துளை சூரியனின் நிறையை விட பல பில்லியன் மடங்குகள் பெரியது. இது அநேகமாக கேலக்ஸிகளின் மையத்தில் இருக்கலாம். [ நம்பிக்கை தான் வாழ்க்கை..]
இந்த கருந்துளைகள் உருவான போது நடந்தது என்ன ? மர்மமே.
கருந்துளைபற்றிய தியரிகளில் குறிப்பிடத்தக்கவைகள்:
நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், ஐன்ஸ்டீன் பொது சார்பியல் கொள்கை [தியரி ஆப் ரிலேட்டிவிட்டி], பிரிட்டிஸ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாகிங் அவர்களின் குவாண்டம் மெக்கானிக்ஸ் [ ஹாகின் ரேடியேஸன் பற்றியது]
இது தான் கருந்துளையின் கிராபிக்ஸ் படம் [ ஒரிஜினல் இல்லையான்னு கேட்காதீங்க ]
===========================================================
கருந்துளைகளில் இருந்து நாதம் [ஒலி - music / sound ] வெளிப்படுமா ?
300 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ள பெர்ஸியஸ் கேலக்ஸியில் கண்டறியப்பட்ட கருந்துளையில் இருந்து சப்தங்கள் 2 பில்லியன் ஆண்டுகளாக வெளிப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த ஒலி குறிப்புகள் X - Ray வடிவத்திலேயே பெறப்பட்டது அதனால் அந்த சப்தத்தை கேட்க இயலாது.