நாசா, அரிசோனா பாலைவனத்தின் ஒரு பகுதியை ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்திவருகிறது. புதிய கண்டுபிடிப்பு கருவிகள் மற்றும் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி விண்வெளிக்கு அனுப்பபடும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இங்கு நிலவும் தட்பவெப்பநிலை, மணற்புயல் போன்றவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நமது கேலக்ஸியின் மையத்தில் இருக்கும் வாயு மேகக்கூட்டத்திலிருந்து ஒரு பீஸை எடுத்து அதிலிருந்து இந்த உலக மக்களுக்கு ஆளுக்கொரு கப் வைன் தயாரித்துக் கொடுக்கலாம்.[ முடியும் ஆனா முடியாது..! ] இந்த வாயுவிற்கு கேஸியல் ஆல்கஹால் என்ற நாமகரணம் சூட்டபட்டுள்ளது.
நம் உடலில் நட்சத்திரங்களின் அணு துகள்கள் கலந்திருக்கின்றன. [ இந்திய அஸ்ட்ராலஜிஸ்ட் கணிப்புகள் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டதே..]
ஒலிம்பஸ் மான்ஸ் [ Olympus Mons ] என்பது செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை இதன் உயரம் அதன் தரைக்கு மேலே 27 கிலோமீட்டர்கள் கொண்டது.
பூமியின் நேரத்துடன் ஒப்பிடும்போது நெப்டியூனின் ஒருநாள் என்பது 16 மணிநேரம் ஆனால் நெப்டியூனின் ஆண்டு என்பது 165 பூமி ஆண்டுகள் அதனால் அங்கு சராசரியாக 75000 நாட்கள் வருடத்திற்கு.
பூமியில் உங்களின் எடை 45 கிலோ கிராம் என்றால் செவ்வாய் கிரகத்தில் உங்கள் எடை 17 கி.கி ஏன்னென்றால் அங்குள்ள் ஈர்ப்பு விசை அப்படி [ அப்ப அங்க டயட் தேவையில்லை ]
நம் சூரிய குடும்பத்தின் இறுதியில் சுற்றி வரும் குட்டி கோள் சேதனா [Sedna ] இதை ஒரு கிரகமாகவும் மதிக்க முடியாது ப்ளானெடாய்ட் என்கிறார்கள். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 10,500 ஆண்டுகள் ஆகிறது. தொலைவில் இருந்தாலும் இதில் பனிகட்டிகள் இல்லை. அதன் படம் கிழே ;
சூரிய புயல் அதிக காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது இதன் காஸ்மிக் கதிர்கள் பூமியின் வாயுமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக நைட்ரஜனை கார்பன் -14 ஆக மாற்றும் இதனால் தாவரங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும், ரேடியோ அலை தொடர்புகளும் பாதிப்படையும் இதனால் மனிதனின் மூளை நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும்.
பூமியும் நிலாவும் ஒரே வேகத்தில் சுற்றுவதால் நமக்கு நிலா ஒரே முகத்தையே காட்டிக்கொண்டிருகிறது [நிலவே முகம் காட்டு... என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறதா ?] அதன் இனொரு முகம் இதோ
முன்னாடி...
பின்னாடி