திமிங்கிலங்கள் [whales ] ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள். இது உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு. இவற்றில் 80 ரகங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அல்லது மோபி டிக் Sperm whale -Moby dick
மிகப் பெரிய மூளையும், அதிக பற்களையும் கொண்டது. இது 20.5 மீட்டர் நீளம் வளரக் கூடியது. மூன்று கிலோ மீட்டர்களுக்கு ஒரு டைவ். கடலின் அதிக ஆழத்தில் வசிக்கும் விலங்கு(7000 அடி). அதிக சப்தம் எழுப்பும். I U C N ( International Union for Conservation of Nature )ஆல் ஆபத்தான மிருகம் என வகை படுத்தப்பட்டுள்ளது.
Pilot whale பைலட் திமிங்கிலம் / [killer whale]
இதன் நடவடிக்கை சட்டென பார்ப்பதற்கு டால்பின் போல தோற்றம் தரும்.
டால்பின் இனத்தோடு சம்பந்தப்பட்டது. கப்பல்களை தொடர்ந்து நட்பு முறையில் பழக்ககூடியது. 15நிமிட அதி வேக நீச்சலில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஸ்கிவிட் களை தின்பதற்கு பாயும். அதே வேகத்தில் மூச்செடுக்க கடல் மட்டத்திற்கு மேல் வரும்.
வயதான பெண் திமிங்கிலங்களுக்கு இதுதான் வழிகாட்டி.
பறங்கி தலை திமிங்கிலங்கள் [melon headed whale]
இவற்றிற்கும் பைலட் திமிங்கிலங்களுக்கும் தொடர்பு உண்டு. கடலில் பரவலானது. அவ்வளவு சுலபமாக பார்க்ககூடியது அல்ல ஏனெனில் கடலின் ஆழத்தில் வசிக்ககூடியது. அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும் இதை பறங்கி தலை திமிங்கலம் என்கின்றனர். குடும்பமாக வசிக்ககூடியது. இதன் கூட்டத்தின் எண்ணிக்கை ஏறக்குறைய 100.
Bow head whale -Baleen
படகுதலை திமிங்கிலம். 200 ஆண்டு காலம் உயிர் வாழக்கூடியது நீண்ட பெரிய வாயை கொண்டது. 136 டன் எடை கொண்டது. நீலத்திமிங்கிலத்திற்கு அடுத்தபடியாக பேசப்படுவது. ஆர்டிக் கடற்பகுதியில் வசிப்பவை. உணவுகளை பற்களில் வடிகட்டி விழுங்கும் இந்த பற்கள் அமைப்பை ஆங்கிலத்தில் பேலென் என்கிறார்கள்.
Fin whale -Baleen
மீன் துடுப்பு திமிங்கிலம் 27 மீ நீளம் வளரக்கூடியது போலார் கடற்பகுதி மற்றும் பெரும்பாலான கடல் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது அருகிவரும் கடல் விலங்கு. 85 - 95 வருடங்கள் உயிர் வாழும். இதில் சிலவகை 140 ஆண்டுகள் வாழும்.
திமிங்கிலங்களுக்கும் மீன் இனத்திற்கும் சம்பந்தம் கிடையாது. மீன்கள் குளிர் ரத்தப் பிராணிகள் இவை வெப்பரத்தப் பிராணிகள். மீன்களுக்கு செதில்கள் உண்டு. இவற்றிற்கு கிடையாது. இவற்றிற்கு நுறையீரல் உண்டு. குட்டி போட்டு பாலூட்டுபவை.
ஒலியை கிரகிக்கும்(எக்கோ லோகேசன்) சிறப்பான உணர் உறுப்புகள் உண்டு இவற்றை கொண்டு கடலின் ஆழம் திசை இவற்றை கணிக்கிறது. புத்திசாலிகள். வடதுருவப்பகுதியில் வசிப்பவை குளிர் காலங்களில் நிலநடுக்கோட்டு பிரதேசங்களுக்கு இடம் பெயர்கின்றன. இதன் உடலமைப்பு கடும் குளிரையும் தாங்கக் கூடியது.
தூக்கத்தில் பாதி மூளை விழித்திருக்கும். இது ஆட்டோமேடிக்காக கடலின் மேல் தளத்திற்கு மூச்செடுக்க வந்து செல்ல உணர்ந்தும்.
நீலத்திமிங்கிலம் 30 மீட்டர் நீளம்(சரசரியாக 100 அடி) உடைய உலகின் பெரிய விலங்கு இதன் எடை 30 யானைகளின் எடைக்கு சமம்.
நீலத்திமிங்கிலத்தின் இதயம் 600 கிலோகிராம் இருக்கும் இதன் இதயம் நிமிடத்திற்கு பத்து தடவை மட்டுமே துடிக்கும் என்பது ஆச்சர்யமானது.
பிறக்கும் போதே குட்டி நீலத்திமிங்கிலம் 3 டன் எடையுடன் 9 மீட்டர் நீளம் இருக்குமாம். தினமும் 200 லிட்டர் தாய்பால் குடித்து நாளொன்றுக்கு 90 கிலோ சதை போடும். நீலதிமிங்கிலதிற்கு ஒரு நாள் இயக்கத்திற்கு, 1.5 மில்லியன் கலோரி சக்தி தேவைப்படுகிறது (மனிதர்களுக்கு 2500 கலோரி ! )
ஆண் ஹம்பேக் திமிங்கிலங்கள் பாடக்கூடியது. நீண்ட நேரம் சப்தமிட்டு பாடும். இதன் ஃபிரிகுவன்சி 20 முதல் 9000 ஹெட்ஸ் கொண்டது. அதாவது பியானோவின் மீச்சிறு நாதம் போலவும் வெளிப்படுத்தும்.
190 decibels சப்தம் பல ஆயிரம் மைல்களுக்கு கேட்கும். ஒன்றுகொன்று ஒலி சமிங்சைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன.
இனப்பெருக்கத்திற்காக (மைக்ரேசன்) 20,000 முதல் 30,000 கடல் மைல்கள் பயணிக்கும். நீலத்திமிங்கிலங்கள் உலகையே வலம் வந்து விடுகின்றன.
உலக திமிங்கில பாதுகாப்பு அமைப்பு 1986 முதல் திமிங்கிலங்களை கொல்வது தடைசெய்தது. ஆனாலும் தொடர்ந்து இவை வேட்டையாடப்படுகின்றன. அண்டார்டிக் பகுதியில் 1963 சர்வேயின் படி 2,50,000 இருந்தன இன்று சில ஆயிரம் மட்டுமே உள்ளன. 17 - 18 ஆம் நூற்றாண்டுகளில் இதன் கொழுப்பு எண்ணையில் விளக்கு எரித்தார்கள்.
உணவுக்காகவும் கொழுப்பு எண்ணெய், எழும்புகளுக்காகவும் வேட்டையாடப் படுகிறது. இவற்றின் அடுத்த எதிரி மனிதனால் கொட்டப்படும் அணு கழிவுகள், கடல் மாசு(எண்ணை கழிவுகள்), சுற்று சூழல் பாதிப்புகள் இவை இவற்றின் அழிவுக்கு காரணம்.
சில கடற்கரைக்கு ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வதன் காரணம் தெரிய வில்லை.
மேலும் சில வகைகள் : fin whale, sei whale, humpback whale, Bryde’s whale, and minke whale.
கில்லர் திமிங்கில முத்தம்
திமிங்கிலம் குறித்து சில கேள்விகள் :
ப்ளப்பர் [blubber] என்பது என்ன ?
திமிங்கிலத்தின் உடலின் மேல் தோல் மற்றும் உடலின் சதைப்பகுதிக்கும் இடைப்பட்ட கொளுப்பு பகுதியே ஆங்கிலத்தில் ப்ளப்பர் என்கிறார்கள். இதன் உடலை வெப்பமாக வைத்துக் கொள்ளவும் நீரில் மிதக்கவும் உதவுகிறது.
திமிங்கிலங்கள் குடும்பமாக வசிக்குமா ?
பொரும்பான்மையான இனங்கள் குடும்பமாகவே வசிக்கின்றன. கூட்டங்கூட்டமாக வசிக்கும் இவற்றை ஆங்கிலத்தில் போட்ஸ் [pods] என்று சொல்கிறார்கள். இனப்பெருக்கத்திற்காக இடம் விட்டு இடம் பெயர்கின்றன [மைக்ரேசன்]
மீனின் வாலிற்கும் திமிங்கில துடுப்பிற்கும் (Flukes) வித்தியாசம் உண்டா ?
வடிவத்தைப்பார்த்தால் ஒன்று போலவே தோன்றும். மீன் முன்னே நீந்தி செல்ல வால் பகுதியை இடது வலதாக அசைக்கும். திமிங்கிலங்கள் மேலும் கீழுமாக அசைக்கும்.
(Blow holes) ஊது துளைகள் எதற்கு ?
திமிங்கிலத்தின் தலைபகுதியில் உள்ள ஊது துளைகள் திமிங்கிலங்கள் சுவாசிக்கும் உறுப்பு. நீர் மட்டத்தின் மேல் பகுதிக்கு வரும் திமிங்கிலன்கள் காற்றை ஊதி உறிஞ்சும் போது நீருற்று கிளம்பும். இதை அடையாலம் கண்டே வேட்டை ஆடுகிறார்கள்.