இந்த கேள்விக்கான பதிலை பிறகு பார்ப்போம். நம் மூளையின் செயல்பாட்டை அல்லது இயக்கத்தை பற்றி கொஞ்சம் சிந்திப்போமா ?
நம்மூளை எதிர்காலத்தைப்பற்றி அடுத்த செகண்டில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும். நாம் அயர்ந்து தூங்கும் நேரம் தவிர.
சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம் இப்பப்பாரு அவரு கூப்பிடுவாரு, சொல்லி முடிக்கும் முன் அதேபோல் போன் மணி அடிக்கும். அவர் சொன்னவரே லைனில் இருப்பார். இதற்கு அவர் சிந்தனை ஓட்டமெல்லாம் எதிராளி என்ன செய்வார் என்பது அவர் அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது அவ்வளவே.
சிறுவயதில் நீங்கள் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை நினைத்துப்பாருங்கள் எவ்வளவு தரம் விழுந்து பின் பெடல்களை, உடலை, ஹாண்டில்பாரை எப்படி பேலன்ஸ் செய்வது என்று பல தடவை பயிற்சி எடுத்துக்கொண்டீர்கள். பின்பே சைக்கிள் ஓட்டினீர்கள்.
இப்போது வளர்ந்தபின் நீங்கள் பலவற்றை யோசித்துக்கொண்டே சைக்கிளில் சென்றாலும் ஆட்டோமேடிக்காக உங்கள் உடலை சமநிலை வேலைகளை மூளை உடல் உறுப்புகளுக்கு கனகச்சிதமாக கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
எதிர்பாராது காற்று வீசினாலோ ? டயர் பஞ்சர் ஆகினாலோ தடுமாறி நாம் சமநிலையை (balance ) ஏற்படுத்த சிரமப்படுவோம்.
முதன்முறை தீடீர் தீயில் மாட்டிக்கொள்பவனுக்கு எப்படி தப்பிக்க வேண்டும் என்ற உடனடி எதிர்கால யுத்தி அவனுக்கு இல்லாமையால் தடுமாறுவான். ஆனால் ஒரு தியணைப்பு வீரருக்கு உள்ள அனுபவம் அந்த ஆபத்திலிருந்து அவரை மீட்பார்.
இதுபோல பல விஷயங்களிலும் நமக்கு முன் அனுபவம் இல்லை எனில் மூளையால் உடனடி தீர்மானத்தை எடுக்க முடிவதில்லை.
எல்லாம் படித்தவருக்கும் அனுபவசாலிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான்.
குழந்தைகள் புது அனுபவங்களை டோரெமான், டாம் அன் ஜெரி, சோட்டாபீம், நிஞ்சா ஹட்டோரி,பென்டென்,பவர் ரேஞ்சர்ஸ், இப்படி பல கார்டூன்களில் இருந்து கற்றுக்கொள்ள விழைகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.
என்ன.. முதல் கேள்வியை நீங்க மறக்கலியே ?
நம்மை நாமே கிச்சுக்கிச்சு (tickle) மூட்டிக்கொள்ளும்போது அந்த செயலை நம்மூளை ஏற்கனவே நடைபெறும் என்று யோசித்து முன்னேற்பாட்டை செய்துவிட்டது. எந்தவித எதிர்பார்பும் கிடையாது. விளைவு பூஜ்ஜியம்.
மற்றவர்கள் இதைசெய்யும் எப்போது? எங்கு? எப்படி? செய்வார்கள் என்பதை நம்மூளை முடிவுசெய்ய முடிவதில்லை. உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம். (ஹி..ஹி..தான் )
இறுதியாக, சில வார்த்தைகள் ; புத்துணர்வோடு நம் உடல் மற்றும் மன உணர்வுகளை வைத்துக்கொள்வது நம்மை இளமையாகவும், வாழ்க்கையை இனிமையாக எதிர்கொள்ளும் அனுபவத்தையும் நமக்கு அளிக்கும்; சரியா ?
கீழே உள்ள ஆங்கில வாக்கியங்களை படிக்க முயற்சிசெய்யுங்கள் (பலருக்கு இது தெரிந்திருக்கலாம் ! )
நம்மூளை எப்படி தவற்றை திருத்தி சரியாக படிக்க முயற்சி செய்கிறது ?
சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நா பழக்கம் !
மேலுல்ல ஆங்கில வாக்கியத்தை படிக்க முடிந்தாலும்; இல்லை என்றாலும் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.