மேற்கு பசிபிக் பெருங்கடலின் ஆழமான ஒரு பகுதி மரியான பள்ளத்தாக்கு. இது குவாம் அருகில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் ஒரு இடம் ” சேலஞ்சர் டீப் “ கிட்டத்தட்ட 35840 அடி ஆழம் கொண்டது (ஏறக்குறைய 7 மைல்).
இதன் பிரம்மாண்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள, கடலின் அடி ஆழப்பகுதியான இதனுள் முடிந்தால்.. எவரஸ்ட் சிகரத்தை அடக்கிவிடலாம் ( கவனிக்க.. முடிந்தால்...)
பசிபிக் பீடபூமியும், பிலிப்பைன் பீடபூமியும் மோதியதால் உருவான பள்ளத்தாக்கு இது என்கிறார்கள்.
இப்படி ஒரு இடம் உள்ளது என்பது 1875 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
த்ரஸ்டி (trieste) என்ற ஆழ்கடல் செலுத்து வாகனத்தில் 1960 ல் பயணப்பட்டவர்கள் இருவர் ஜாக்குவிஸ் பிக்கார்ட் (ஸ்விஸ் கடல் வல்லுநர்), மற்றும் டான் வால்ஸ் ( U.S கடற்படை லெப்டினண்ட்).
இந்த த்ரஸ்டி கிட்டதட்ட நான்கு மணிநேர பயனத்திற்குபின் தரையை அடைந்தது. மேலே வர சுமார் இரண்டே கால் மணிநேரங்கள் எடுத்துக்கொண்டது.
இதனுள் இருவரும் சுமார் 20 நிமிடங்களே தரைப் பகுதியில் இருந்தனர்.
அதன் பின் பெயரிடப்படாத R O V (Remotely Operated Under water Vehicle) என அழைக்கப்படும் ரிமோட் ஆழ்கடல் செலுத்து வாகனங்கள் இங்கு சென்று வந்துள்ளன.
கைக்கோ (kaiko) எனப்படும் ஜப்பானின் நீர்மூழ்கி 1995 ல் சென்று வந்தது. பின் 2009 ல் அமெரிக்காவின் நீரியஸ் (Nereus) ஆழ்கடல் வாகனம். இரண்டும் பாறைகளையும் நீரையும் எடுத்து வந்தது.
2012 மார்ச் 26 ல் ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் காமெரூன் ( James Cameron ) இந்த பகுதிக்கு பயணப்பட்டவர். ( பிக்கார்ட் - வால்ஸிற்கு பிறகு மூன்றாவது நபர் அதாவது 52 வருடங்களுக்கு பிறகு... )
காமெரூன் சென்ற வாகனம் ” டீப் சீ சேலஞ்சர் “ இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும், நவீன சாதனங்களுடன் 3D கேமரா பொருதப்பட்டது.
சக்கைபோடு போட்ட டைட்டானிக் (1997) திரைப்படம் கடலின் இருந்து எடுக்கப்பட்ட போது இப்படியெல்லாம் எடுக்க முடியுமா ? என வியக்க வைத்தவர்.
இக்கடல் தரைப்பகுதியில் மூன்று மணிநேரம் 3 டி கேமராவில் சுட்டு தள்ளி இருக்கிறார்.
” டீப் சீ சேலஞ்சர் “ கடலின் நீர் அழுத்தத்தை தாங்கக்கூடிய வடிவமைப்பு. நான்கு கேமராக்கள், 8 அடி நீளம் கொண்ட ஒளிரும் LED விளக்குகள், பொருத்தப்பட்டது. ரோபாட்டிக் கைகளில் நீர் அழுத்தம், உப்பின் அளவு, வெப்பநிலை அளவிடும் சென்சார்கள் இருக்கும். தரைப்பகுதியை அடைய 2 மணிநேரம் 36 நிமிடங்களும், மேலே வர ஒருமணியும் எடுத்துக்கொள்ளும்.
=====================================================================
Download As PDF