சமீபத்தில் எமது குடியிருப்பு பகுதியில் கொசுத் தொல்லைக்கு என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, சாக்கடையின் மேல் சிமெண்ட் பலகைகளை அமைக்க யோசனை சொல்லப்பட்டது. இன்னொருவர் கொசு பிடித்து உண்ணும் செடியை வளர்க்களாமா? என்றார். கொடுமைக்கார பாவிகளை இந்த மாதிரி பிடிச்சு சாப்பிடும் மரத்தில போட்டிடனும் என்றார் இன்னொருவர் ? ! இப்படி சுவரசியாமாக போய் கொண்டிருந்தது பேச்சு...
சரி விசயத்திற்கு வருவோம் பூச்சியுண்ணும் தாவரம் பற்றி (கேரளா) திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன இது புழு பூச்சிகளை எளிதில் கவர்கிறது. (அவதார் திரைப்படத்தில் இது போன்ற தாவரங்கள் காட்டப்பட்டது)
இதற்கு முன் இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்று உலக ஆய்வாளர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்க தக்கது.
பூச்சியுண்ணும் தாவரம் கோப்பை போன்ற பூக்களை கொண்டிருக்கும் அதனுள் சுவையான நீர்மம் நிறம்பிக் காணப்படும். உட்பாகம் வழுவழுப்பான மெழுகு போன்ற சுவர் அமைப்பு உடையது. சிக்கிக்கொள்ளும் எறும்பு, பூச்சி, புழுக்கள்,சிலந்திகள் இதிலிருந்து வெளியேர முடியாமல் மூழ்கிவிடும் இந்த பூவின் மேலுள்ள மூடி போன்ற அமைப்பு இதை மூடி விடுகிறது. உள்ளே சிக்கிய பூச்சிகள் அந்த நீர்மத்தில் கரைந்து ( ingested)அந்த தாவரத்திற்கு உணவாகி விடுகிறது.
போர்னியோ, சுமத்திரா தீவு மழைக்காடுகளில் சுமார் 100 வகையான இத்தகைய ( largest carnivorous plants) ஊன் உண்ணும் தாவரங்கள் காணப்படுகின்றன.
”Giant meat-eating plants / munkey cup plant ”
டிராபிகல் பிட்சர் (Tropical pitchers )எனும் தாவரம் சிறு எலிகள், பல்லிகளை உணவாக்கி கொள்கிறது. இந்த கொடி வகை தாவரம் பெரிய கோப்பை (மங்கி கப்) போன்ற பூக்களை கொண்டது மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வளர்கிறது. இதனுள் உள்ள திரவம் இவற்றை செரிக்க செய்கிறது. ஊன் உண்ணும் மனிதர்கள்,விலங்குகள் போல இவையும் அசைவம் மட்டுமே சாப்பிடுகிறது.
உலகத்திலேயே நிபந்தஸ் ரஜா (Nepenthes rajah ) என்பதுதான் பெரிய ஊன் உண்ணும் தாவரம் இதனுடைய திரவ கொள் அளவு இரண்டு லிட்டர்.
வீனஸ் பிளை டிராப் சட்டென 20 நொடிகளில் பூச்சியை பிடித்து உண்கிறது. மிக மெதுவான காணொளியில் இதை காணலாம்.
Download As PDF