மனித குளோனிங் குழந்தை இன்னும் 50 ஆண்டு காலத்திற்குள் பிறக்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் சர் ஜான் கர்டன் (Sir John Gurdon).
உடலின் ஒவ்வொரு செல்லும் மரபு அணுக்களை கொண்டு இருக்கும் என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். அதை தொடர்ந்து (1958 ) தவளையின் குடல் செல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ வை பிரிதொரு தவளையின் கருமுட்டையில் வைத்து அந்த தவளையின் குலோனிங்கை உருவாக்கி காட்டினார். அப்போதைய கால கட்டத்தில் இது மறுக்கப்பட்ட உண்மையாக இருந்தது.
(1996 ) Prof.வில்மத் (Wilmut)டாலி எனும் செம்மறி ஆட்டை குளோனிங் செய்து காட்டினார். இதை தொடர்ந்து Prof.யமனகா (Yamanaka) மனிதனின் முதிர் செல்லை ஸ்டெம் செல்லாக “ரீ புரோக்ராம்” செய்து மருத்துவத்தில் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தினார் (2006) (adult cells can be "reprogrammed" into stem cells for use in medicine. )
ஒரு நோயாளியின் பழுதடைந்த டிஸ்யூ செல்லுக்கு மாற்றாக இன்னொருவரின் தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லினை கொண்டு உருவாக்கப்பட்ட டிஸ்யூ வை கொண்டு அந்த நோயாளிக்கு வைத்தியம் பார்க்க முடியும்.
2012 ல் யமணகாவுடன் இணைந்து இவருக்கு (Physiology or Medicine ) நோபல்
பரிசு வழங்கப்பட்டது.
இவரின் 15 ஆவது வயதில் இவருக்கு வழங்கப்பட்ட ரிப்போர்ட் கார்டை சட்டம் போட்டு வைத்திருக்கிறார் 79 வயதான சர் ஜான் கர்டன். அந்த சர்டிபிகேட்டில் அறிவியலில் இவருக்கு போதிய கவனம் இல்லை என்று குறிபிடப்பட்டிருக்கிறது (தெளிவா சொல்லனும்னா ”too stupit”). அந்த சர்டிபிகேட் உங்கள் பார்வைக்காக.
பள்ளியின் அறிவியல் ரிப்போர்ட் கார்டுடன் ஜான் கர்டன் at Gurdon Institute in Cambridge
இவரின் அனுமானம்... இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் குளோனிங் உயிரினங்கள் மற்றும் குளோனிங் மனிதன் உருவாக்கப்படலாம்.
ஆனால்...நடைமுறை படுத்துதலில் பல சிக்கல்கள் உள்ளது எதிக்ஸ், சட்டசிக்கல்கள், மனித உரிமை இப்படி.. எதிர்காலம் தான் இதற்கு விடையளிக்கும்...