அபுதாபியில் (UAE) 76 அடி உயர காற்றாலை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனுடைய இறக்கைகள் வேகமாக சுழலும் போது காற்றை உள்ளிழுக்கிறது. கம்பரசர்கள் கொண்டு காற்றின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி குளிரூட்டும் எந்திரங்கள் மூலமாக மேன்மேலும் குளிரவைக்கப்படுகிறது. அதானால் நீர் துளிகள் தொடர்ந்து உருவாகிறது
இந்த நீர்த்துளிகள் குழாய் மூலமாக நீர் தொட்டியில் சேகரிக்கப்படுகின்றன. ஒரு மணிநேரத்தில் 16 காலன் தண்ணீர் சேகரமாகிறது. ஒரு நாளைக்கு 265 காலன்கள் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். இது காற்றின் வேகம் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பொருத்தது.
பாலை வனப்பகுதிகளுக்கு இக்கருவி பயனுள்ள ஒன்று.
=====================================================
உசைன்போல்ட் போல வேகமாக ஓடும் ரோபோ இயந்திரம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். இவர் நூறு மீட்டரை 28 mph வேகத்தில் கடந்தார். ரோபோ அவரை விஞ்சியது 28.3 mph.
=======================================
இங்கிலாந்தில் காணப்படும் பென் ராப்ட் (Fen Raft spider) எனும் சிலந்தி வகை பூச்சிகளை மட்டும் இன்றி சிறிய வகை மீன்களையும் பிடித்து உணவாக்கிக்கொள்கிறது. இந்த ராட்சச வகை சிலந்தியின் கால்களில் எக்கச்சக்க நுண்ணிய மயிர்கால்கள் இருப்பதால் இது நீரின் மேல் இலகுவில் நடக்கிறது. இங்கிலாந்தில் அருகிவரும் சிலந்தி இது.
========================================
குயின்ஸ்லாந்தில் காணப்படும் 200 ஆண்டு காலம் உயிர்வாழும் ஆமை.
----------------------------------
”சீன சிறுத்தை” பரிசு பெற்ற புகைப்படம்.
----------------------------------
”ருவாண்டா சிம்பன்சி” இரட்டை சிம்பன்சி குட்டிகள் பிறப்பது அரிது. .
Download As PDF