ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வருவது போல அழிந்து போன உயிரினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா ? அதாவது உருவாக்க முடியுமா ? என்ற தீவிர ஆய்வு தற்போது வெற்றியடைந்து உள்ளது.
ஆஸ்திரேலிய நுண்ணியல் உயிரியல் அறிவியலாளர்கள் 1979 ஆம் ஆண்டோடு சுத்தமாக அழிந்து போன ஒரு தவளை இனத்தை தற்போது குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கியுள்ளார்கள்.
படத்தில் காணப்படும் அருவருப்பான தோற்றம் கொண்ட இந்த தவளை கருவை விழுங்கி பின் வயிற்றில் அடைகாத்து வாயில் பிரசவிக்கும் ஒரு ஜீவன் (Gastric brooding frog அறிவியல் பெயர் -Rheobatrachus silus) இதன் வாழ்விடம் ஆஸ்திரேலியா.
விஞ்ஞானிகள் இறந்த கடைசி தவளைகள் சிலவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதன் உயிரின திசுக்கள் செயல்பாட்டுடன் இருந்தன.
நியூசவுத் வேல்ஸ் பல்கலைகழகத்தை (சிட்னி) சேர்ந்த பேராசிரியர் மைக் ஆர்ச்சர் குழு இந்த தவளை குடும்பத்தை சேர்ந்த (great barred frog) பிரிதொரு தவளையின் கருமுட்டையில் உள்ள நியூகிளி (nuclei) யை நீக்கி விட்டு மேற்படி தவளையின் நியூகிளியை மாற்றி வைத்து குளோனிங் முறைப்படி அழிந்து போன தவளை இனத்தை மீட்டு எடுத்துள்ளனர்.
ரஷ்ய மற்றும் தென்கொரிய விஞ்ஞானிகளின் பார்வை, திரண்ட முடியுடைய பனிகண்ட யானையின் (woolly mammooth ) மேல் விழுந்து உள்ளது. இதே டெக்னாலஜியை பயன்படுத்தி இவற்றை உயிர்பிக்கமுடியுமா ? சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள் (எவ்வளவோ செஞ்சுட்டோம் இத செய்யமாட்டமா? )
Download As PDF

விஞ்ஞானிகள் இப்போது கோரஸாக சொல்லுவது "அழிவுநிலை விலங்குகளின் ஜீன்களை சேகரிக்கும் ஜீன் -வங்கியை உலக அளவில் விரிவு படுத்த வேண்டும்"